தகிடுதத்தோம்

சத்தியத்தை காப்பாற்றுவது போல் வேறெந்த கஷ்டமான விஷயமும் இருக்க முடியாது. மாதம் மினிமம் நான்கு பதிவுகள் எழுதுவது, புதிய சாப்ட்வேர் படிப்பது, உடல் எடையை 77கிலோவிலிருந்து 74 ஆக குறைப்பது வரை பலமுறை எனக்கு நானே சத்தியம் செய்திருக்கிறேன். கவனிக்க 'பலமுறை'.......

அப்படி செய்த ஒரு சத்தியத்திலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டேன். "உசுரே போனாலும் யார்கிட்டவும் சொல்லமாட்டேன் மாப்பி" என்று என் ஆருயிருர் தோழன் இராஜேந்திரனிடம் 9 வருடங்களுக்கு முன்பு சத்தியம் செய்து கொடுத்திருந்தேன். கடந்த மாதம் அந்த சத்தியத்திற்கு மதிப்பில்லாமல் போனது அவனுடன் தொலைபேசும் போது தெரிந்தது.

என் வீடு அப்போது மூன்றாவது மாடியில் இருந்தது. நான் பால்கனியில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்."சத்தியமா செத்துருவயாடா?" அங்கு வைத்து அவனிடம் அதை கேட்டிருக்ககூடாது தான். சட்டென்று பால்கனியிலிருந்து கீழே குதிக்க தயாராவான் என்று எனக்கெப்படி தெரியும்!. கையை பிடித்து அழைத்து மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்றேன் (இன்னும் உசரமாவா?!) "ஏன்டா லூசு மாதிரி நடந்துக்கிற?" என்பதையே விதம் விதமாக திட்டினேன்.

ராஜேந்திரன் அவன் முடிவில் தயாராக இருந்தான். கூடப்படிக்கும் பெண்ணை காதலிக்கிறான். நான் மெக்கானிக்கல் அவன் கம்யூட்டர் டெக்னாலஜி. எனக்கும் அந்த பெண் தோழி தான். அவளிடம் அரசல் புரசலாக காதலை தெரியப்படுத்தியும் அவள் கண்டுக்கொள்ளவில்லை. முடிவாக என்னிடம் வந்திருக்கிறான். காதல் ஒரு ஆளை எப்படி மாற்றிவிடுகிறது? அவன் அப்பெண்ணின் மீது பைத்தியமாகவே ஆகிவிட்டான். தற்கொலைக்கும் ரெடி.

"நீ நிறைய ப்ரண்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்ணியிருக்கல்ல. எனக்கும் நீ தான்டா உதவி செய்யனும்" என்றான்.  நானா? கொஞ்சம் கஷ்டமான விசயம் தான்.

முன்னதாக இன்னொரு நண்பனுக்காக ஒரே பஸ்ஸில் வரும் பெண்ணிடம் அவன் காதலை சொல்ல தூது போயிருக்கிறேன். "வித்யா யூ நோ, நான் தம்மடிப்பேன், பாக்கு போடுவேன், தண்ணிகூட அடிப்பேன்." பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தேன். (இதுவரை சிகரெட் பிடித்ததில்லை என்பது வேறு விசயம்) ஆனா விஜி இருக்கானே ரொம்ப நல்ல பையன். அதிர்ந்து கூட பேச மாட்டான். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்ல. எனக்கு தங்கை இருந்து அதை மட்டும் அவன் காதலிச்சிருந்தான்னா (கொலையே பண்ணியிருப்பேன்) கண்டிப்பா நானே அவங்க கல்யாணத்தை நடத்தி வைப்பேன். அவ்ளோ நல்லவன் விஜி" கடைசி வரை சிகரெட்டை பத்த வைக்கவில்லை.  "நான் விஜிகிட்டவே சொல்லிக்கிறேன்" என்று ஓடிவிட்டாள்.

மறுநாள் விஜியிடம் அவனை காதலிக்கவில்லை எனவும், முடிந்தால் என்னோடு உள்ள ப்ரண்ட்ஸிப்பை கட் செய்யும்படியும் அவனுக்கு அறிவுரை செய்து விட்டு போயிருக்கிறாள் அந்த சதிகாரி.

இதெல்லாம் ஞாபகம் வந்து இந்த முறை சொதப்பகூடாது என்று ப்ளான் செய்தேன். "மாப்ள ஒரு ரெண்டு நாள் காலேஜ்க்கு லீவு போடு. அப்புறம் உன் தம்பியை என்கிட்ட பேச சொல்லு. உனக்கு நாளைக்கு மிச்சம் சொல்றேன்." என்று அனுப்பி வைத்தேன். (எதையும் ப்ப்ப்ளான் பண்ணி தான் செய்யனும்).

இரண்டு நாள் அவன் வரவில்லை என்றதும் அவனது தோழியர் கூட்டம் என்னிடம் கேட்க ஆரம்பித்தனர்.(பயபுள்ளைக்கு க்ளாஸ்ல ஆம்பள பசங்களே ப்ரண்ட்ஸ் இல்ல போல). மிகவும் சோகமாக மௌனத்தை மட்டும் பதிலாக தந்து விட்டுக்கொண்டிருந்தேன். அது அவர்களுக்கு இன்னும் குழப்பத்தை கொடுத்தது.

மூன்றாம் நாள் அவன் தம்பியிடம் சொல்லி காலேஜ்க்கு 10 மணியளவில் வரச்சொன்னேன். தோழியர் கூட்டம் காண்டீனில் டீ அடித்துக்கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணும் இருந்தாள். "உங்க எல்லார் கிட்டவும் முக்கியமா ஒரு விசயம் பேசனும்" என்றேன். அவன் தம்பியிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றேன். "இவன் தான் ராஜேந்திரன் தம்பி" அறிமுகம் செய்த போதே தோழியருக்குள் கலக்கம். ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு? ஏன் வரல காலேஜ்க்கு" என நச்சரிக்க தொடங்கினார்கள்.

இந்த தீடீர் தாக்குதலில் நிலைகுலைந்த தம்பி "சூரி அண்ணா..."என இழுக்க. "நானே சொல்றேன்... நானே சொல்றேன்" என அவன் டயலாக்கையும் நானே சொன்னேன் " உங்களுக்கும் அவனுக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?" என்றேன். குறிப்பிட்ட பெண்ணை தவிர அனைவரும் "இல்லையே" என்றனர். அவளுக்கு மட்டும் ஏதோ புரிந்தது போல் இருந்தாள்.

"தட் இடியட் ட்ரையிடு டூ கமிட் சூஸைட்..." என கதறி கதறி அழுதேன்(கௌரவம் சிவாஜி?). அவன் தம்பியும் அழுதான். "வாட்.. சூசைடா?'  என அனைவரும் அதிர்ச்சியாக, சம்பந்தப்பட்ட பெண் அழும் நிலைக்கே சென்றுவிட்டாள். "எப்படி? ஏன்?" தோழியர். "தூக்கு"  "தெரியல" தம்பி (மணிரத்னம்?) 

"கடைசி நேரத்துல அவங்கம்மா பார்த்து தடுத்துட்டாங்க"  நான்.

தோழியர் கூட்டம் கவலையால் துவண்டது.  "நாளைக்கு அவன் வருவான். அவன்கிட்ட ஒன்னும் கேட்காதீங்க. அவன் மனசு நோகாமாக நடந்துக்கங்க" நானும் அவன் தம்பியும் கிளம்பினோம். இந்த சிம்பதி வேலைக்காகும் என இதுவரை பார்த்த தமிழ்படங்கள் உறுதி செய்தன.

கிட்டதட்ட போட்ட ஸ்க்ரிப்ட் ஒழுங்காக நடித்து முடித்தோம். ராஜேந்திரன் தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தான். "டேய் மாப்ள கவலைப்படாத. அன்னைக்கு நான் தடுக்கலன்னா பால்கனியில இருந்து குதிச்சிருப்பல்ல? அப்படி குதிச்சு பொழச்சதா நினைச்சுக்க. ஏன் பொய் சொன்னதா நினைக்கிற" எனக்கான நியாயங்கள் அவனுக்கும் பொருந்திப்போனதில் ஆச்சர்யம் இல்லை.

அடுத்த நாள் அந்த தோழியர் கூட்டத்தில் அவன் ஒரு கண்ணனாகவே மாறிப்போனான். அவனை தனியாக விடாமல் அவன் கூடவே அவனது தோழிகள் இருந்தனர். காலேஜ் முடிந்ததும் என்னிடம் விட்டுவிட்டு சென்றனர். (தனியா வீட்டுக்கு போகவிடக்கூடாதாம். நான் கொண்டு போய் விடனுமாம்) ஆனால் அது அவனுக்கு தேவையில்ல. அவள் ஒருத்தியின் மாற்றம் மட்டும் அவனுக்கு தேவைப்பட்டது.  அதுவும் நடந்தது.அவளுகும் அவனை பிடித்தே இருந்தது. ஆனாலும் "எங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்க. அதான் பயமாயிருக்கு" என்று சொல்லியே சம்மதத்தை சொல்லியிருக்கிறாள்.

காதல் தொடங்கி மூன்றுமாதங்களில் கல்லூரி முடிந்தது, ஹாஸ்டலில் தங்கி படித்தவள் ஊருக்கு சென்றாள். சென்றவள் என்ன பிரச்சனையோ தொடர்புகள் அறுந்தன. இவன் இங்கு பைத்தியமாக ஆகாத குறை. சில மாதங்கள் கழித்து ஊருக்கே சென்று தேடினான். அவள்  வீட்டிற்கு சென்று கதவையும் தட்டி இருக்கிறான்.

அவளின் அம்மா. "கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமாமா?" என்றிருக்கிறான். "இருப்பா" என்று உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்திருக்கிறார்கள்.

தண்ணீரை அருந்தி விட்டு  அவள் பெயரை சொல்லி "எப்படிம்மா இருக்கா?" என்றிருக்கிறான்.

"அவ ப்ரண்டாப்பா நீ? அவளுக்கு போன மாசம் தான் கல்யாணம் ஆச்சு" என்றிருக்கிறார்கள். உச்சி வெயிலில் மயக்கம் வராத குறையாக அப்படியே நின்றிருக்கிறான். துணுக்குற்ற அவள் அம்மா ஏதோ புரிந்து மிக மெதுவாக "தயவு செய்து போயிடுப்பா. உன்னை கெஞ்சிக்கேட்டுக்கிறேன்" என்றிருக்கிறார்கள்.  எல்லாம் ஒரு மாதிரி புரிந்தவனாய் ஊருக்கு வந்திருக்கிறான்.

அவனுக்கு இதிலிருந்து மீள சில வருடங்கள் ஆயின. இப்போது கல்யாணம் ஆகிவிட்டது. கல்யாணம் முடிந்து அடுத்த நாள் போன் செய்தேன். "மாப்ள எல்லாம் கனவு மாதிரி இருக்குடா. அவளை பத்தி மனைவிகிட்ட எல்லாம் சொல்லிட்டேன். நாம  அதுக்காக பண்ணின நாடகத்தை கூட சொல்லிட்டேன்" 

"அடப்பாவி அப்ப சத்தியம் பண்ணி யார்கிட்டவும் சொல்ல வேணாம்னு முடிவு பண்ணினோமேடா. ஏன் சொன்ன?"

"எனக்காக பொறந்தவ இவதான்டா. இவகிட்ட மறைச்சு என்னாகப்போகுது. அவளும் அதையெல்லாம் ஜாலியா எடுத்துகிட்டா." என்றான்.

நிகழ்வுகள் உருவாகும் போது தான் வலிக்கிறது. அவை ஞாபகங்களாக புதையும் போது ஒரு வித சுகத்தையே தருகிறது போலும்.

டேய் மாப்ள நல்லாயிருப்படா :)

17 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

good

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்...

வாழ்த்துக்கள்..

rajatheking said...

/**"தட் இடியட் ட்ரையிடு டூ கமிட் சூஸைட்..." என கதறி கதறி அழுதேன்**// துக்கதுல கூட English அ

rajatheking said...

vote podaju

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கௌரவம் சிவாஜியா.. அய்ய அவ்ளோ கொடுமையாவா..? :)

சே படம் பாத்து இந்த நண்பர்கள் செய்கிற அட்டூழியம் எத்தனை வாழ்க்கையில் வெளையாண்டிருக்காங்கப்பா..

அமிர்தவர்ஷினி அம்மா said...

தட் இடியட் ட்ரையிடு டூ கமிட் சூஸைட்... // பயங்கரமா இங்கிலீஷ்ல லாம் பேசி ப்ப்ளான் பண்ணியிருக்கீங்க போல :)

ஆமா, ஒரு கேள்வி பாஸ்

ப்ளான்லாம் மத்தவங்களுக்கு அப்ப அவுட் ஆனாலும் அப்புறம் ஒர்க் அவுட் ஆகியிருக்கு, உங்களுக்கு எப்போ ஒர்க் அவுட் ஆகும்?

நான் ஏதாச்சும் ப்ளான் பண்ணட்டுமா ;)

கோபிநாத் said...

\\நிகழ்வுகள் உருவாகும் போது தான் வலிக்கிறது. அவை ஞாபகங்களாக புதையும் போது ஒரு வித சுகத்தையே தருகிறது போலும்\\

லாலாலா லாலாலா......ஏ பிலிம் பை சூரி ;))

\\தட் இடியட் ட்ரையிடு டூ கமிட் சூஸைட்..."\\

ஏலேய் உண்மையை சொல்லு இதை அப்படியே வா சொன்னா!! ? ;))

எல் கே said...

ஆதவா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் நான் இங்க கேக்கவா இல்லை பஸ்ல கேக்கவா. நீயே சொல்லிடு

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

எலே தேவுடு,
இதுபோல ப்ளாக்ல இனிமேல் எழுதுய்யா.பஸ்ல போய் குந்திக்கினு?

Anonymous said...

சாரே எனக்கு ஒரு லவ்லெட்டர் எயிதிக்குடு சாரே

ஹுஸைனம்மா said...

ம்.. வழக்கமான புதுமாப்பிளை ஜோர்ல பொண்டாட்டிகிட்ட பெர்ரீய அரிச்சந்திரனாட்டம் பழைய காதல், தற்கொலை டிராமான்னு எல்லாத்தையும் உங்க நண்பர் உளறிக்கொட்டி வைச்சிருக்கார். வரப்போற ஒவ்வொரு சண்டைக்கும் வலுவான ஆயுதத்தை அவரே அவர் மனைவிக்குக் கொடுத்திருக்கார். நடக்கட்டும்.. நடக்கட்டும்.. இதுல டிராமாவுக்கு கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, புரொடக்‌ஷன் எல்லாமே நீங்கதான். அதனால் இனி வரும் நாட்களில் மெதுவாக நண்பர் உங்களைத் தவிர்க்கும்போது “நான் என்ன செய்தேன்?” என்று குழம்ப வேண்டாம். ஏனெனில் உங்களையும் கழட்டி விடும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பார். ஒருவேளை அப்படியில்லையென்றால், அவர் வீட்டுக்குப் போனால் டமாலென்று வைக்கப்படும் ஆறிப்போன காஃபி, உளுத்துப் போன வடை நிச்சயம்!!

எது எப்படியோ, சண்டைகளில் அவர் தலை உருட்டப்படுவதைவிட அவர் நண்பரான நீங்கள் வறுபடப் போவதே அதிக என்பது உறுதி!!

ஆனா, இதைப் படிச்சப்பொறவும் எல்லா புதுமாப்பிளைகளும் இதையேதான் திருப்பிச் செய்வாங்க பாருங்க!!

ஸ்வர்ணரேக்கா said...

//பலமுறை எனக்கு நானே சத்தியம் செய்திருக்கிறேன்//

ஹா.. ஹா.. முடியலை..

//என்னோடு உள்ள ப்ரண்ட்ஸிப்பை கட் செய்யும்படியும் அவனுக்கு அறிவுரை செய்து விட்டு போயிருக்கிறாள் அந்த சதிகாரி.//

-- சரியான யோசனை தான்..

☀நான் ஆதவன்☀ said...

@சதீஷ்

நன்றிங்க :)
-------------------------------------
@சௌந்தர்

:) ஓக்கே. நன்றிங்க
-------------------------------------
@ராஜா

அட ஆமாங்க :)
-----------------------------------
@முத்தக்கா

யார் வாழ்க்கையிலும் விளையாடலக்கா. அந்த பொண்ணு தான் இவன் வாழ்க்கையில விளையாடியிருக்கா :)
-----------------------------------
@அமித்து அம்மா

//
நான் ஏதாச்சும் ப்ளான் பண்ணட்டுமா ;)//

தெய்வமே..... தெய்ய்ய்ய்ய்ய்வமே :)
-----------------------------------
@கோபி
//
லாலாலா லாலாலா......ஏ பிலிம் பை சூரி ;))//
எப்பூடி :)
//ஏலேய் உண்மையை சொல்லு இதை அப்படியே வா சொன்னா!! ? ;))//

தல பொண்ணுங்கள பார்த்தா அப்பெல்லாம் தப்பு தப்பா இருந்தாலும் ஒரே பீட்டரா வரும் :)
-----------------------------------@கார்த்திகேயன்

ஓக்கே தேவுடு :)
-----------------------------------
@ஹூஸைனம்மா

அவ்வ்வ் இதுக்கே மூச்சு முட்டுதே.. இதோட ரியாக்ஷனை இப்படி புட்டு புட்டு வைக்கிறீகளே.. எனிவே நாங்க செஞ்ச தப்பை ஒத்துகிட்டதே பெரிய விசயம்ல :)
-----------------------------------
@எல் கே

நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ நீங்க எதுவும் சொல்ல வேணாம் :)
-----------------------------------@ஸ்வர்ணரேக்கா

அவ்வ் சரியான யோசனையா அது? :) நன்றி ஸ்வர்ணரேக்கா

Anonymous said...

நல்லா கொசுவத்தி சுத்துனீங்க..

//"தட் இடியட் ட்ரையிடு டூ கமிட் சூஸைட்..." என கதறி கதறி அழுதேன்//


தொர இங்கிலீசெல்லாம் பேசுது..

சமுத்ரா said...

:)

Thuvarakan said...

நிகழ்வுகள் உருவாகும் போது தான் வலிக்கிறது. அவை ஞாபகங்களாக புதையும் போது ஒரு வித சுகத்தையே தருகிறது


top class wording........

பிரியமுடன் பிரபு said...

:)

Related Posts with Thumbnails