விஜயகாந்திற்கு சமர்ப்பணம்

வருசத்தோட முதல் பதிவே இப்படி மனசு நெகிழ்ந்து போடுவேன்னு நினைக்கல. "எப்படா இந்த வருசத்தோட புது பதிவு போடுவ?"ன்னு இதுவரைக்கும் கேட்ட அந்த ஒருத்தருக்கும்(வேற யாரு என் மனசாட்சி தான்), கேட்க நினைச்சு ஆனா மறந்து போன மிச்சம் 30000 பேருக்கும் நன்றிகள்.

கேப்டன் விஜயகாந்த் மட்டும் இல்லைன்னா இந்த வருசம் இனிமையா தொடங்கியிருக்குமான்னு தெரியல. இதுக்காகவே இந்த வருசம் தமிழக ஆச்சி கட்டில்ல கேப்டன் படுக்கனும். (ஆச்சி வேணா ஒரு அஞ்சு வருசத்துக்கு வேற கட்டில்ல படுத்துக்கட்டும்). ரொம்ப ஓவரா இருக்கோ? சரி அப்ப அட்லீஸ்ட் சேப்பாக்கம் தொகுதியிலாவது ஜெயிக்கனும்.

கேப்டனை பத்தி தெரியாதவங்க இந்த தமிழகத்துல யாருமே இருக்க முடியாது.  அப்படி தெரியாத கொஞ்ச நஞ்ச பேரும் கேப்டனோட  புகழை உயர்த்தி அண்ணன் லக்கிலுக் எழுதிய "கேப்டன்" புத்தகத்தை படிச்சதன் மூலமா தெரிஞ்சிருப்பாங்க. அப்படியும் தெரியாத ஒருசிலரும் என்னோட "கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார்" பதிவு மூலமா தெரிஞ்சிருப்பாங்க. இப்படி பதிவுலகத்துல பரவிய அவரது புகழ், அவருக்கு கூடிய ரசிகர்கள் கூட்டம், என்னோட பதிவுக்கு ஓட்டுகள் போட்டு தமிழ்மண விருது இறுதிசுற்று வரைக்கும் அனுப்பியிருந்தாங்க.நிச்சயமா என்னை தேர்ந்தெடுத்த நடுவர்களும் விஜயகாந்த ரசிகர்களா தான் இருக்க முடியும். நகைச்சுவை/கார்டூன் பிரிவு முதல் இடத்துக்காக அந்த பதிவை தேர்ந்தெடுத்த  தமிழ்மணத்திற்கும் & நடுவர்களும் என் நன்றிகள்.  இது மேலும் எனக்கு கேப்டன் பெருமைகளை பரப்பும் பதிவுகள் இடுற உத்வேகத்தை கொடுக்குது...கை அரிக்குது...  கால் உதறருது.. இப்பவே அதற்கான ஆரம்ப பணியை தொடங்கனும்னு தோணுது.
அப்பாட ஒரு படத்தை ரெடி பண்ணிட்டேன். ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியாச்சு

இதே மாதிரி கேப்டனோட புகழ்பாடும் பதிவுகள் பல இட எம்மை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெய் கேப்டன்
ஜெய் ஜெய் கேப்டன்.

20 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த ஒருத்தருக்கும்//

இதை நான் ஒவ்வொருத்தருக்கும்ன்னு படிச்சிட்டேன் :)

ஹுஸைனம்மா said...

//பதிவுலகத்துல பரவிய அவரது புகழ், அவருக்கு கூடிய ரசிகர்கள் கூட்டம், என்னோட பதிவுக்கு ஓட்டுகள் போட்டு //

தம்பி, ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு ட்ரீட் தர முடியாதுன்னுகூடச் சொல்லியிருக்கலாம் நீயி. ஆனா, இப்படிச் சொல்லிட்டியே? மெயிலனுப்பி, அம்மா.. தாயே ரேஞ்சுக்குக் கேட்டதுனால மனமிரங்கி ஒரு ஓட்டு போட்டதுக்கு எங்களுக்கு இப்படியொரு பட்டம் தேவையா? :-(((((((

நல்ல சுவராத் தேடிப் போயி முட்டிக்கிறேன். :-)))))))

Thekkikattan|தெகா said...

அப்போ இந்த விருது, விசயகோந்திற்கு போகுதா :)

வாழ்த்துக்கள், நண்பா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தம்பி, ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு ட்ரீட் தர முடியாதுன்னுகூடச் சொல்லியிருக்கலாம் நீயி. ஆனா, இப்படிச் சொல்லிட்டியே?//

இதுல இப்படி ஒரு விசயம் இருக்கா ஹுசைனம்மா.. நான் கவனிக்காம விட்டுட்டனே..

பட் விருதகிரி பார்த்ததுல இருந்து நான் விஜயகாந்த் ரசிகையாகிட்டேன் :) என்ன ஒரு டைரக்சன்ஙக..வெளிநாட்டுக்காரன போன் ல மிரட்டுவார் பாருங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

கூடிய சீக்கிரம் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுடுவீங்க போல இப்ப நீங்க இருக்குற ஊர்ல..

அய்யோ பாவம் சேட்டன்ஸ்!!!

வாழ்த்துக்கள் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அலாங்க் வித் கேப்டன் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் said...

நல்லா வருவிங்க தம்பி..

Chitra said...

Congratulations!!! :-)

நாஞ்சில் பிரதாப் said...

நல்லாருடே.....

கோபிநாத் said...

நல்லாயிருடா ;)

தோழி பிரஷா said...

Congratulations!

அபி அப்பா said...

கலக்கு மொவனே கலக்கு! முதல் பதிவே கேப்டனின் ஆசியோடு தானா? நடத்து. வாத்துக்கள் வாழ்துக்கள்!

இளைய பல்லவன் said...

Grrrrreat!

அஷீதா said...

congratulations!!!! and all the best for your future posts :)

வித்யா said...

வாழ்த்துகள் ஆதவன்.

Samudra said...

வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

விருதுக்கு வாழ்த்துகள்..

கானா பிரபா said...

எங்க புரட்சிக் களைஞரை நீர் கலாய்க்கிறீரா அங்க்க்க்க்

விஜி said...

நல்ல சுவராத் தேடிப் போயி முட்டிக்கிறேன். :))))))))))))

நானும்

கவிதை காதலன் said...

ஏன் இந்த கொலைவெறி தோழா?

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல :)

Related Posts with Thumbnails