ஆதவன் - சுஜாதா - பஞ்சாமிர்தம்

"உங்களுக்கே தெரியும் நான் எவ்வளவு நல்லவன்னு......"

"சரி சரி சிரிக்காதீங்க.... உங்களுக்கே தெரியும் இந்த குப்பைத்தொட்டி எவ்ளோ டீசென்டான சைட்டுன்னு"
சிரிக்கும் எலிகள்
அவ்வ்வ்வ்வ் சரி சரி விடுங்க. ஆனா உங்களுக்கே தெரியும் நான் எவ்.... வேணாம் விடுங்க இதை சொன்னாலும் சிரிப்பீங்க. நான் நேரா விஷயத்துக்கு வரேன். தாய்லாந்து போய் வந்து தொடர் பதிவு ஆரம்பிச்சேன். நல்லா தான் தொடங்கினேன். முன்ன மாதிரி கூட்டம் வர்ரதில்லன்னு கொஞ்சம் கவர்ச்சியா தலைப்பு வைப்போம்னு "கிளு கிளு கேப்ரே"ன்னு வச்சேன். வச்சாலும் வச்சேன் கூகுள்ல எதை எதையோ தேடி இங்க வந்த இங்கிலீஷ் அனானிங்க "இது வேணுமா? இங்க வந்து தரையிறக்கு... அது வேணுமா? அப்ப  அங்க போ.. இதே தான் வேணும்னா டைரக்டா கால் பண்ணு"ன்னு ஆங்கிலத்துல எக்கசக்க பின்னூட்டம் வந்துச்சு. எல்லாத்தையும் ஸ்பேம்ல போட்டுட்டு அந்த தலைப்பையே "அல்கஸார் ஷோ - தாய்லாந்து"ன்னு மாத்திட்டேன். அப்புறம் பின்னூட்டம் வர்ரதும் நின்னுடுச்சு. கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்.

ஆனா டேய் "சொப்ன சுந்திரன்" பதிவுக்குமாடா அனுப்பிவீங்க?" ஆவ்வ்வ்வ்வ். அதுவும் என்னை பார்த்து எப்படிடா அந்த கேள்வி கேட்ட? ......சரி விடுங்க
----------------------------------------------------------------------------------------------------------------
ஆனாலும் மனசு கேட்கல.... அதெப்படிடா என்னை பார்த்து அந்த கேள்வி கேட்கலாம்? அவ்வ்வ்வ்வ்
----------------------------------------------------------------------------------------------------------------
 தாய்லாந்து பயண அனுபவங்களை எழுதி சோம்பேறித்தனத்தாலும் வேறு சில காரணத்தினாலும் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிப்போயிற்று. திரும்பவும் எழுத சோம்பேறித்தனமாக இருந்தாலும் பயண அனுபவங்களை பதிந்து வைப்பது அவசியமென்று தோன்றுகிறது. நேற்று மதியம் என்ன சாப்பிட்டோம் என்பதே மறந்து போகக்கூடிய சூழ்நிலையில் நண்பர்களுடனான ஒரு இனிய அனுபவத்தை எளிதில் மறக்கயியலாத வகையில் வலைப்பதிவில் பதியச்செய்வது நல்லது என நினைக்கிறேன். இம்மாதம் அனைத்தும் பதிவுகளாக வரும். உங்களுக்காக அல்ல எனக்காக. ஆகவே பொறுத்த்தருள்க :)
----------------------------------------------------------------------------------------------------------------
வேலை அதிகம் இல்லை. போரடித்தது. வழக்கம் போல யாரிடமாவது ஒரண்டை இழுக்கலாம் என  அக்கௌன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் போனேன். அக்கௌன்டன்டும் மலையாளி தான். ஆனால் எப்போதும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார். "எஸ் தம்பி" என்றார். "இல்ல சும்மா தான் வந்தேன்" என்றேன்.

"உங்க ஊர் கொச்சில்ல? என் ப்ரண்ட் கொச்சி ஏர்போர்ட்ல கார்கோ க்ளியர்ன்ஸ்ல வேலை பார்த்தான்" வந்த வேலையை ஆரம்பித்தேன்.

"இஸ் இட்?"

"ம்ம் கொச்சி ஏர்போர்ட் பக்கத்துலயே கெஸ்ட் அவுஸ் கொடுத்திருந்தாங்க. பக்கத்துல சாப்பாட்டுக்கு கடைன்னு ஒன்னும் இருக்காதாம். அதுனால பெரும்பாலும் ஏர்போர்ட்ல இருக்குற கடையிலயே சாப்பிட்டு வந்திடுவான்"

"ஓ"

"ஒருநாள் வேலைக்கு லீவு போட்டிருக்கான். அப்ப சாப்பிடுறதுக்காக ரொம்ப தூரம் நடந்து போய் ஒரு கடையில போய் உட்காந்து சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கான். ஆனா கடைக்காரன் சாப்பாடு இல்லன்னு சொல்லிட்டான்"

"ஒய்?"

"ம்ம் அதான் தெரியல. ஆனா சாப்பாடெல்லாம் இருக்குதாம் அவன் அங்க இருக்குற சாப்பாடை காமிச்சு அதான் இருக்குதே கொடுய்யான்னு சொல்லியிருக்கான். ஆனா அதுக்கு அவங்க "அதெல்லாம் உனக்கு தரமுடியாது. வெளிய போ"ன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம் பேக்கரியில ப்ரட் வாங்கி சாப்பிட்டு வந்தானாம்" என்றேன்

"ஸோ சேட்" என்றான் வருத்தத்துடன். சிறுது நேரம் பொறுத்து "ஸாரி" என்றான் (ஹப்பாட வந்த வேலை முடிந்தது!) நான் பரவாயில்ல அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க'ன்னேன்.

சிறிது நிமிடம் கழித்து "நான் கூட சென்னை வந்திருக்கேன் தெரியுமா?" என்றான். "அட அப்படியா?" என்றேன்.

ஒரு தடவை மாதா வேளாங்கண்ணி கோவில் போறதுக்காக சென்னை வந்து அங்கிருந்து  சொந்தகாரங்க கூட போனோம். நுங்கம்பாக்கத்துல தான் தங்கிருந்தோம்" என்றான்

"ஓ" என்றேன்

"அப்ப நுங்கப்பாக்கத்துல ஒரு ஹோட்டலுக்கு போனோம். தோசை  ஆர்டர் பண்ணினோம்." (ஆஹா இவனுக்கும் வேலை இல்லையா? தெரியாம வந்து சிக்கிட்டோமே) 

"ம்ம் அப்புறம்"

"தோசை வந்துச்சு. பட் சாம்பார் கொடுத்தான் பாதி சாப்பிடும் போது தான் கவனிச்சேன்.  சாம்பார்ல குட்டியா ஒரு கரப்பான் பூச்சி" என்றான் வருத்தத்துடன்.

"ஓ அப்புறம் என்னாச்சு?"

"அவன்கிட்ட கம்ப்ளென்ட் பண்ணினேன். அவர் ஒன்னும் சொல்லாம வேற சாம்பார் கொடுத்தான். என் ரிலேசன் கோவமா ஏதோ சொன்னார். அதுக்கு முடிஞ்சா சாப்பிடு இல்ல வேற ஹோட்டல் போன்னு சொல்லிட்டான்"  (ஆஹா... அப்பவே எஸ்ஸாகி இருக்கனும்)

சிரித்துக்கொண்டே அப்புறம் அடிக்காத செல்போனை எடுத்துக்கொண்டு "அடுப்புல பால் வச்சுருக்கேன். இறக்கிட்டு வந்திடுறேன்" என்ற ரேஞ்சில் இடத்தை காலிசெய்தேன்.

அட போப்பா...எங்களுக்கே எங்கூர்ல மரியாதை இல்ல..... பக்கித்தனமா கம்ப்ளென்ட் பண்ணிகிட்டு..
---------------------------------------------------------------------------------------------------------------
ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" என்ற (சற்றே பெரிய)சிறுகதை  தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். பாதி கடல் கடந்தாயிற்று. வழக்கம் போல் ஆதவன் கலக்கியிருக்கிறார். அதுவும் முதல் சிறுகதையில் இரண்டே கேரக்டர்கள். ஒரு ஆண்,  ஒரு பெண். யதேச்சையாக அறிமுகமாகி அன்றே பிரியும் கதாபாத்திரங்கள். முடிவில்லா கதை. பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சுவாரஸியமாக. கிட்டதட்ட இந்த கதையை தான் ஆங்கிலத்தில் "before sunrise" "before sunset" படமாக என எடுத்திருக்கிறார்கள் :) யதேச்சையாக நடந்த இந்த விசயம்  உல்டாவாக நடந்திருந்தால் நம் பதிவர்கள் இது அப்பட்டமான காப்பி, இயக்குனர் டைட்டில் கார்டில் நன்றி என போட்டிருக்க வேண்டும், குறியீடுகள் கூட ஒத்துப்போகின்றன என கலாட்டா செய்திருப்பார்கள்.

ஆதவன் நெடுநாட்கள் இருந்திருந்தால்  சுஜாதா இடம் அவருக்கு கிடைத்திருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. ஆதவனோடு சுஜாதாவை பொருத்திப்பார்ப்பதே அசட்டுத்தனமாக இருக்கிறதோ?! ஆதவன் புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ சுஜாதா ஞாபகம் வந்துவிடுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த வார கார்டூன்:-

---------------------------------------------------------------------------------------------------------------

27 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நாஞ்சில் பிரதாப்™ said...

சேட்டனை வம்புக்கு இழுக்காம இருக்க முடியாதாடே... புல்லே...:))

கார்ட்டுன் கலக்கல்டே... உண்மைத்தமிழனை விட்ருய்யா...அவரைப்போட்டே ஆளுக்காளு ஓட்டறீங்க...:))

கோபிநாத் said...

நல்லாயிருக்குடே பஞ்சாமிர்தம் ;)

ஹுஸைனம்மா said...

//வழக்கம் போல் ஆதவன் கலக்கியிருக்கிறார்//

ஆதவன்மேல் ஆதவனுக்குள்ள ஆர்வத்தில் ஆச்சரியமில்லை!! (நோட் ப்ளீஸ்: ஆ..ஆ..)

அந்த ஆதவன் போலவே இந்த ஆதவனும் புகழ்பெற வாழ்த்துகள்!!

(இந்த ஒரு வரிக்காகத்தானே (அந்த) ஆதவன் புகழைத் தொடர்ந்து பாடிகிட்டிருக்கீங்க? ;-)))) )

துளசி கோபால் said...

இருத்தலின் அடையாளத்துக்காக என்னென்ன செய்யவேண்டி இருக்கு பாருங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்திரா said...

//துளசி கோபால் said...

இருத்தலின் அடையாளத்துக்காக என்னென்ன செய்யவேண்டி இருக்கு பாருங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//


ரிப்பீட்டு....
அவ்வ்வ்வ்வ

கானா பிரபா said...

நீர் பெரிய ஆளு தான் ஒத்துக்கிறேன் ;)

Gayathri said...

உங்க பயண தொடர கண்டிப்பா தொடருங்க , அதென்ன எப்போவும் செடன்மார்களுக்கும் அப்படி ஒரு அன்பு ?

உங்க கார்ட்டூன் சூப்பர்

கைப்புள்ள said...

//அட போப்பா...எங்களுக்கே எங்கூர்ல மரியாதை இல்ல..... பக்கித்தனமா கம்ப்ளென்ட் பண்ணிகிட்டு..
//

அட போப்பா...உங்களுக்கு உங்க ஊர்லயும் மரியாதை இல்லை...கேரளாலயும் மரியாதை இல்லை...அதான் சாப்பாடு வச்சிக்கிட்டே இல்லேங்கிறான் :(

கைப்புள்ள said...

//அந்த ஆதவன் போலவே இந்த ஆதவனும் புகழ்பெற வாழ்த்துகள்!!

(இந்த ஒரு வரிக்காகத்தானே (அந்த) ஆதவன் புகழைத் தொடர்ந்து பாடிகிட்டிருக்கீங்க? ;-)))) )
//

ட்ரிப்பிள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

sakthi said...

ஆதவா நல்ல எழுத்து நடை நீங்க ஒரு நல்ல இலக்கியவாதின்னு தெரியுதுங்கோ::))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் , ஹுசைனம்மா , துளசி எல்லார் கமெண்ட்டையும் வழிமொழியறேன்..
கார்டூன் நல்லா இருக்கு ..:)

ஆயில்யன் said...

//தோசை வந்துச்சு. பட் சாம்பார் கொடுத்தான் பாதி சாப்பிடும் போது தான் கவனிச்சேன். சாம்பார்ல குட்டியா ஒரு கரப்பான் பூச்சி" என்றான் வருத்தத்துடன்.//

சேட்டன்கிட்ட வாயைக்கொடுத்து டோட்டல் தமிழ்நாட்டையும் டேமேஜ் செய்யவைச்ச உம்மை என்ன செய்வது?

Anonymous said...

>> "சொப்ன சுந்திரன்" பதிவுக்குமாடா அனுப்பிவீங்க?" ஆவ்வ்வ்வ்வ். அதுவும் என்னை பார்த்து எப்படிடா அந்த கேள்வி கேட்ட? ......சரி விடுங்க

எப்பிடி ஆதவா? இவ்வளவு பச்சை மண்ணா இருக்கீங்க!

வெங்கடேஷ்

*இயற்கை ராஜி* said...

ரொம்ப படிக்கறீங்க ஆதவன்.. எலக்கியவியாதி ஆயிட்டீங்களோ

விஜி said...

உண்மைத்தமிழன் சித்தப்பூ கார்டூன் சூப்பரு :))

cheena (சீனா) said...

உண்மையிலேயே கார்ட்ட்டூனை ரசிசேன்

சங்கர் said...

//சோம்பேறித்தனத்தாலும் வேறு சில காரணத்தினாலும் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிப்போயிற்று//

அது என்னன்னு எனக்கு தெரியுமே :))

வித்யா said...

உனக்கு கேவிஆர் கொடுத்த பட்டம் சரியாத்தான் இருக்கு.

இலக்கிய சூறாவளி ஆதவன் வால்க:)

☀நான் ஆதவன்☀ said...

@பிரதாப்பு

சேட்டனை கலாய்பது இப்ப புதுசா சேந்திருக்கிற நமது பிறப்புரிமை மாப்ள :)
-------------------------------------
@கோபிநாத்

நன்றி தல :)
-------------------------------------
@ஹூஸைனம்மா

அவ்வ்வ் இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கப்படாது :)
------------------------------------
@துளசி டீச்சர்

:)))) ஆமா டீச்சர்
---------------------------------------
@இந்திரா

:) ரைட்டு
-------------------------------------
@கானாபிரபா
கொலவெறி பாஸ் இது :)
-------------------------------------
@காயத்ரி
நன்றி சகோ :)
-------------------------------------
@கைப்புள்ள

அண்ணே இப்ப வளைகுடாலயும் மரியாதை இல்ல :)
-------------------------------------
@சக்தி

ஏன்ன்ன்ன்ன்ன்ன் இந்த கொலவெறிங்க? :)
-------------------------------------
@முத்தக்கா

நன்றிக்கா :)
--------------------------------------
@ஆயில்ஸ்

ஒரு பாராட்டு விழாவே எடுக்கலாம் பாஸ் :)
--------------------------------------
@வெங்கடேஷ்

உங்களுக்காவது தெரிஞ்சுதே :)

☀நான் ஆதவன்☀ said...

@இயற்கை ராஜி

குரு அந்த வியாதி எல்லாம் என்னை அன்டவிடுவேணா? நெவர் :)
-------------------------------------
@விஜி

நன்றி மாதாஜி :)
-------------------------------------
@சீனா

நன்றி சீனா ஐயா :)
-------------------------------------
@சங்கர்

ரைட்டு... கம்முன்னு கிட :)
-------------------------------------
@வித்யா

ஒரு இலக்கியசுனாமிகிட்ட இருந்து இப்படி பாராட்டை பெற "என்னத்தவம் செய்தனை....." :)

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

கோமதி அரசு said...

அந்த ஆதவன் போல் இந்த ஆதவனும் புகழ் பெற் வாழ்த்துக்கள்!

இனியாவது பயண தொடருக்கு தலைப்பு வைக்கும் போது கவனித்து வைக்கவும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏன் பாஸ் சும்மாயிருந்த சேட்டனை ஊதிக்கெடுத்தீங்க :)))

நீங்க குறிப்பிட்ட அந்த சிறுகதை எனக்கு படிக்க படிக்க விளங்கவேயில்லை.

குறியீடுகள் தொல்ல தாங்க முடியலடா சாமி ;)

ஜீவன்பென்னி said...

வாழ்த்துக்கள்....... ஏதாச்சும் கமெண்ட் பண்ணனுமில்ல அதான்.

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா...நல்லா மாட்டினீங்களா கேரளாகாரர்கிட்ட...

இந்திரா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.

vinu said...

just now i read your "sammiyea saranam" short story; really beaty yar

Related Posts with Thumbnails