குஜாரிஷ்

படம் பார்த்தேன்னா விமர்சனம் எழுதியே ஆகனுமா? என்ற கட்டாயத்துக்காக இல்லாமல், விழுந்த கல்லால் எழுந்து அடங்கும் நீர் அலைகளை போல் அடங்கி விடாமல், பாதித்த படத்தை நான் சகஜமாகும் முன் ஏதேனும் வகையில் பதியச்செய்வதற்காக விமர்சனம் என்ற பெயரில் இந்த பதிவு. (ஸ்ஸ்ஸ்ப்ப்பா)

ஹ்ரித்திக் எனும் கடவுள் கதாநாயகன். ஆம் -கிரேக்க- கடவுள். அப்படியொரு தேஜஸ் அந்த முகத்தில். படம் முழுக்க அவரின் முகமே திரையில் அதிகமாக காண்பிக்கப்படுகிறது.  நடிப்பதை தானே திரைமுழுக்க காண்பிக்கமுடியும்? கொள்ளை அழகு இந்த கடவுள். கை கால் விபத்தினால் செயல் இழந்து போக முகம் மட்டுமே படம் முழுதும் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறது. தலை சிறந்த  மேஜிக் நிபுணரான நாயகன் வாழ்வையே புரட்டிப்போடுகிறது அந்த விபத்து. 14 வருட வனவாசமாய் உடல் முழுதும் உணர்வில்லாமல் பலவித உடல் வலியோடு வாழ்ந்து, வெறுத்து தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நீதிமன்றத்தில் தன் தோழியின் மூலமாக உதவி கோருகிறார். அது நிறைவேறியதா என்பதே கதை.

ஒரு நாவலை/சிறுகதையை அப்படியே திரையில் வாசிப்பது போன்ற உணர்வு தான் படம் பார்க்கும் பொழுது ஏற்படுகிறது. ஒரு புத்தகத்தை தொடந்து படிக்கும் போது இடையே சிற்சில பக்கங்களில் ஏற்படும் அலுப்பை போல் சில காட்சிகள் ஏற்படுத்துகின்றன. வாசிப்பின் சுவை அறியாதவர்களுக்கு படம் முழுக்க அலுப்பை தரலாம்.

மூக்கின் நுனியில் அமரும் ஈ, சொட்டு சொட்டாக இரவு முழுதும் வடியும் மழை நீர் என சில காட்சிகள் வருகிறது. எரிச்சலூட்டும் விசயங்களை கதாநாயகன் எப்படி சுவராஸியமாக மாற்றுகிறான் என்பதை காட்டுவதாக அமைகிறது. அவனே கருணைக் கொலைக்காக மன்றாடுவது நமக்கு அவனது வலியை உணரச்செய்கிறது. கேலி பேச்சுக்களும், சிரிப்புமாக கதாநாயகன் பாத்திரம். அதுவும் உணர்ச்சியற்ற கால்களை ஐஸ்வர்யா ராய் அமுக்கி விடும் போது கொடுக்கும் உணர்ச்சி சப்தங்கள் சிரிப்பின் உச்சம். இது போன்ற காட்சிகள் ரசிகனுக்கு கதாநாயகன் மேல் கழிவிரக்கம் கொள்ளாமல் காக்கின்றன.

ஐஸ்வர்யாராய். (முதல் முறையாக?) வயதுக்கேற்ற கதாபாத்திரம். அவ்வுடையில் ஹ்ருத்திக்கிற்கு பணிவிடை செய்யும் போது “கோபால்ல்ல்ல்ல் என்னை மன்னிச்சிடுங்க கோபால்ல்ல்ல்”(முக்கியமாக தலையில் கர்சீப்பை கட்டிக்கொள்கிறபோது) என வலிய ஒரு எண்ணம் தமிழ் ரசிகர்கள் மனதில் தோன்றவில்லை என்றால் அவன் கன்னடத்து பைங்கிளியின் போஸ்டரை கூட பாத்திருக்கவில்லை என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். கம்பீரமான,அலட்சியமான,காதலான என பல முகபாவனைகளை மிக அருமையாக வெளிப்படுத்துகிறார். இடையிலும் கடைசியிலும் கொஞ்சம் அழவும் வைக்கிறார்.


கோபால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

அத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மேஜிக் நிபுணர் என்பதை தவிர படத்தில் சுவாரஸியமான ஒரு விஷயத்தை தேடினாலும் பிடிக்க முடியாது.  முதல் பாதி அந்த ஒரு சுவாரஸியமான விசயத்தை வைத்தே ஒரு எதிர்பார்ப்போடு போகிறது. மேஜிக் காட்சிகள் அதிகம் இல்லை. இருக்கும் காட்சிகளும் கதைக்கு பெரிய வலு சேர்ப்பதாக இல்லை. பின்பாதி எந்த முடிவை நோக்கி இனி படம் பயணிக்கும் என்பதை தெரிந்த பின்பு சற்றே தொய்வு பிறப்பது இயல்பு. ஆனால் ஹ்ருத்திக்கின் நடிப்பை/முகத்தை கவனித்து வருபவர்களுக்கு அக்கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு வந்து கதையோடு பயணிக்கலாம்.

மொத்தம் 10(தோராயமாக) கதாபாத்திரங்கள், ஒரு வீடு, நீளமான காட்சிகள் என மிக சுருக்கமாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். இடை இடையே பாடல்கள் வருகின்றன. ஐஸ்வர்யாராயின் அட்டகாசமான நடனமும் வருகிறது. அனைத்தும் கதையின் போக்கிலேயே அமைந்து விடுவதால் எங்கே எந்த பாடல் வந்தது என படம் முடிந்ததும் ரசிகனை யோசிக்க வைத்திருப்பது சிறப்பு. படத்தின் 60 சதவிகிதத்திற்கும் மேலே ஆங்கிலத்தில் தான் வசனம். மிச்சமிருக்கும் வசனங்களும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவை தான். ஆனால் அனைத்தும் மிக அழுத்தமான வசனங்கள். ஆதலால் சப்டைட்டிலின் அவசியம் தேவையிருக்காது.

”ப்ளாக்” படத்தின் மூலம் ஒரு வாரத்திற்கும் மேலாக உறக்கத்தை பறித்து, “சாவரியா” மொத்தமாக சாவடித்த இயக்குனரிடமிருந்து இந்த படம் ஒரு சற்றே பெரிய ஆறுதல். மொத்த படமும் ஹ்ருத்திக்கை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார். அதை ஹ்ருத்திக்கும் நிறைவேற்றியும் இருப்பது மிகப்பெரிய ஆறுதல்.

இது மிக மேலாட்டமான விமர்சனமே. ஆழ்ந்து எழுத வேண்டுமானால் இனி ஒரு முறை பார்க்க வேண்டும். இந்த படம் பார்ப்பதற்கே ஒரு அலுவலக நண்பனை உடன் அழைத்துச்சென்றேன். ஆரம்பம் முதல் கடைசி வரை கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். படம் முடிந்ததும் “படம் நல்லாயிருக்குல்ல” என்ற என்னை முறைத்து வேறு பார்த்தான். எனக்கு பிடித்திருந்தது. இன்னொரு முறை பார்க்க வேண்டும். ஆனால் இனி பார்ப்பதாக இருந்தால் டிவிடியில் மட்டுமே :)

குஜாரிஷ் - Guzaarish (கடைசியில இப்படி ஏதாவது போட்டா தான் விமர்சனம்னு ஒத்துக்கிறாங்களே..அதான் ஹி ஹி)

22 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சிட்டுக்குருவி said...

படம் ரொம்ப நல்லாயிருக்காம்

உங்க விமர்சனமும் நல்லாருக்கு ஆதவன்

நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபால்ல்... :))

சொட்டரமழை .. மூக்கில் உக்காரும் ஈ யா அப்ப இது ஆர்ட் படமா..?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரி விமர்சனம் நல்லா இருக்கு.. சோனி சேனலில் வரும்போது பாத்துடரேன்..:)

சந்தனமுல்லை said...

:-) நந்தலாலாதான் பாஸ் இப்போ ஃபேஷன்..ஆமா, நீங்க ஏன் மல்லுலேருந்து மும்பைக்கு மாறிட்டீங்க?


/குஜாரிஷ் - Guzaarish (கடைசியில இப்படி ஏதாவது போட்டா தான் விமர்சனம்னு ஒத்துக்கிறாங்களே..அதான் ஹி ஹி)/

rotfl

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அட்டகாசமான விமர்சனம்யா தேவுடு
அதுவும் அந்த கோபால் என்ன மன்னிச்சிடுங்க பிரமாதம்

ஹுஸைனம்மா said...

//விழுந்த கல்லால் எழுந்து அடங்கும் நீர் அலைகளை போல் அடங்கி விடாமல்//

ம்ம்.. கல்லெடுத்து உங்க மேல எறிஞ்சா, இரத்தம் வர்றதும் அடங்காது தெரியும்ல??

:-)))

பதிவுலகில எங்கப் பாத்தாலும் குஸாரிஷ், நந்தலாலா... அவ்வ்வ்... என்னை மாதிரி டிவிடி-ஒன்லி பார்ட்டிகளுக்கு இதக் கண்டாலே கடுப்பாவுது...

ஐஸ் - க்கோப்ப்பால் (பல்பொடி) ஒப்பு நல்லாருக்கு. அந்த ஒத்த ரோஜாவோட அசப்புல சரோஜா தேவியேதான்!!

//குஜாரிஷ் - Guzaarish //

இது எதுக்கு, டமில் தெரியாதவங்களுக்கா?

இந்திரா said...

விமர்சனம் என்று வந்தபிறகு இன்னும் ஆழ்ந்து விமர்சித்திருக்கலாமே..


//மொத்த படமும் ஹ்ருத்திக்கை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார். அதை ஹ்ருத்திக்கும் நிறைவேற்றியும் இருப்பது மிகப்பெரிய ஆறுதல். //

ஹ்ருத்திக் ரோஷனின் மிகப் பெரிய ரசிகை என்ற முறையில் இந்தப் பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.
(இன்னும் அவருடைய புகைப்படத்தை, பதிவில் ஒன்றிரண்டு சேர்த்திருக்கலாம். ம்ம்ம்)

கண்டிப்பாக படத்தைப் பார்க்கிறேன்.
பதிவிற்கு நன்றி.

Prasanna Rajan said...

நல்ல விமர்சனம் நண்பா. ஓட்டு போட்டாச்சு...

பெஸ்கி / Beschi said...

பார்த்துக்கொண்டே இருந்த ஒரு தலைக் காதலியின் சிரிப்புகளையெல்லாம் சேகரித்து கூட்டிக் கழித்துக் கூடல்தான் என்று தணிக்கை செய்து குளிர் மாலை நேரம் கோயில் அருகே நெருங்கும்போது சாணி மிதித்து ஒற்றைக் காலில் நொண்டியபோது ஏற்பட்ட தயக்கம் போன்ற அந்த முதல் பாராவின் அனுபவத்தைப் பதியச் செய்வதற்காகவே இது.

கலைப்படம் இப்படியெல்லாம் தேடிப்போயிப் பாக்குறது அவ்வளவு நல்லதுக்கில்ல.

Gayathri said...

mm nallathan irukum pola irukku padam, unga vimarsanam padaththa vida nall irukku..

nenga sollikudutha padiye soliten sekrama harrypotter movie ticket anupivainga bro

கோபிநாத் said...

:))

ஆயில்யன் said...

//கோபிநாத் said...

:))//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

// சந்தனமுல்லை said...

:-) நந்தலாலாதான் பாஸ் இப்போ ஃபேஷன்..ஆமா, நீங்க ஏன் மல்லுலேருந்து மும்பைக்கு மாறிட்டீங்க?///

ஆச்சி கம்முன்னு இருங்க பயபுள்ள அப்படிக்கா போவட்டும்! போட்டிக்கு ஆளை அனுப்பாதீங்க நான் பாவம் & பெரிசு பாவம்

Raji said...

nalla irukku vimarsanam..
pathivu podarathukunne padam pakareengala:-))

வினோத் கெளதம் said...

>)()******

எஸ்.கே said...

நல்லாயிருக்கு விமர்சனம்!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது . மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . புகைப்படங்களும் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி

Vidhoosh said...

:) சூப்பர்... :))))

காமிராக் கோணங்கள் நாமும் அந்த ரூமுக்குள்ளேயே இருக்கிறது போல ஒரு feel-கொடுக்கிறது இல்லை. :)

☀நான் ஆதவன்☀ said...

@சிட்டுகுருவி

நன்றி வாணி :)
-------------------------------------
@முத்தக்கா

:)) ஆர்ட் படம் மாதிரியே ஒரு கமெர்ஷியல் படம்க்கா
-------------------------------------
@சந்தனமுல்லை

பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நான் மல்லு விட்டுட்டேன்னு யார் சொன்னது? நான் அங்கேயும் பார்க்கிறேன் இங்கேயும் பார்க்கிறேன். பாருங்க ஆயில்ஸ் அதுக்குள்ள எம்புட்டு சந்தோசப்படுறாருன்னு. அவரை இப்படி சந்தோசப்படவிடலாமா :)
-----------------------------------
@கார்த்திகேய்ன்

நன்றி தேவுடு :)
-----------------------------------
@ஹூஸைனம்மா
//ம்ம்.. கல்லெடுத்து உங்க மேல எறிஞ்சா, இரத்தம் வர்றதும் அடங்காது தெரியும்ல?? //
அவ்வ்வ்வ்வ்வ் எளக்கியவாதித்தனமா எழுதினா பொறுக்காதே :))

//இது எதுக்கு, டமில் தெரியாதவங்களுக்கா?//

ஹிஹி அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கேனே :)
-----------------------------------
@இந்திரா

கொஞ்சம் சுத்தி வளைச்சு எழுதின முதல் பாராவுக்கே ஆளாளுக்கு தெறிச்சு ஓடுறாங்க. இதுல இன்னும் ஆழமா எழுதியிருந்தா 18 கமெண்ட் கூட வந்திருக்காதே :)

அடடே உங்களுக்கு ஹ்ருத்திக்னா அவ்ளோஒ பிடிக்குமா? :)
----------------------------------
@@பிரசன்ன ராஜன்

நன்றி நண்பா :)
----------------------------------
@பெஸ்கி

:))) ரைட்டு விடு
----------------------------------
@ஜி3

ஹிஹி ஹாரிபாட்டர் அடுத்த பார்டுக்கு நான் தான் ஸ்பான்ஸர் சகோ.

☀நான் ஆதவன்☀ said...

@கோபி

ரைட்டு :)
------------------------------------
@ஆயில்ஸ்

அவ்வ்வ் ஸ்மைலிக்கு ரிப்பீட்டா? முடியல பாஸ் :)
-------------------------------------
@ராஜீ

ஹிஹி படம் பார்த்தனால தான் பதிவே :)
-----------------------------------
@வினோத்

ஏலேய்ய்ய் என்ன மொழி இது?
-----------------------------------
@எஸ்.கே

நன்றி எஸ்.கே
------------------------------------
@சங்கர்

நன்றி சங்கர் :)
-----------------------------------
@விதூஷ்

ம்ம் ஆமா விதூஷ். நீங்க விரிவா விமர்சனம் எழுதலாமே?

கோமதி அரசு said...

படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

புதிய பறவையில் கன்னடத்து பைங்கிளி கோபால் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்வதை மறக்க முடியுமா?

ரோகிணிசிவா said...

oru kavithai mathiri irunthuchu padam , Ish n dance, the way she snatches te cigrate from him , the way she responds wen she is addressed as his wife -a symphony i d tell

Related Posts with Thumbnails