சேட்டன்ஸ் கார்னர்

"சேட்டா"

"என்ன தம்பி?"

"சாப்பிட போலாமா?"

"டைம் என்ன ஆச்சு?" (அடப்பாவி டைம் என்னாவா? இதெல்லாம் ரொம்ப ஓவர்!)

"9.05 ஆச்சு. மெஸ் மூடிற போறாங்க"

"சரி தம்பி போகலாம்" என்ற சேட்டனை லேப்டாப்லிருந்து தலையை தூக்கி எதிர் கட்டிலில் படுத்திருந்த சேட்டனை பார்த்தேன். சேட்டனும் தலையை தூக்கி "போவாம்" என்றபடி எழுந்தார். உரையாடல் நடந்தது சாட்டிங்கில். லேப்டாப் வாங்கினதும் போதும் இப்பெல்லாம் சேட்டன் தொல்லை தாங்க முடியல.

"தம்பி எனக்கி தமிழ் படிக்கனும்"

"படிச்சுட்டா போச்சு. என்ன திடீர்னு?"

"தம்பி ஸ்டேடசு எனக்கி மனசிலாயில்ல.. தம்பி buzz எனக்கி மனசிலாயில்ல.. தம்பி பேஸ்புக்ல இடுனது(என்னது முட்டையா?) எனக்கி மனசிலாயில்ல.. ஞான் அதுகொண்டு (வீறுகொண்டு?!)  தமிழ் படிக்கான் போகுன்னு. தம்பி எனக்கி தமிழ் படிப்பிக்கி (அட பக்கிப்பயலே)"

என்னது தமிழ் கத்துக்கொடுக்கனுமா? ஆதவா பஸ்ஸை ஷெட்டுல விடுடா. பேஸ்புக்கை கொளுத்துடா. "குப்பைத்தொட்டி"யில  இருக்குற சேட்டன் பதிவு எல்லாம் அழிச்சுருடா ஆதவா (எல்லா பதிவையும் அழிக்க வேண்டியிருக்குமோ!)

போன மாசம் அரபாப்பின் தம்பி கம்பெனிக்கு வந்திருந்தார். "hai. what your நாம்?"ன்னு  ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து அனைவரிடமும் வலியக்க சென்று அறிமுகப்படுத்திக்கொண்டார். "சூர்யா" என்றேன்.

"சிரியா?" என்றார்

"(யோவ் மம்டி) சூர்யா சூர்யா" என்றேன்.

"சுறா?" (அட எடுபட்ட பயலே!)

"நோ நோ நோ சூர்யா சூர்யா" வேகமாக மறுத்தேன்.

"சுர்ரா.. சுர்ரா" இதுக்கு மேல என்னால முடியாதுன்ற ரீதியில அதையே முடிவு பண்ணிட்டு வேகமாக கைகுலுக்கினான்.தலையெழுத்துன்னு நானும் (பல்லைகடிச்சுட்டு)சிரிச்சுட்டே கை குலுக்கினேன்.

பக்கத்துல மற்றுமொரு புதிய சேட்டன். சிரித்துக்கொண்டே "ப்ரேம்" என்றார்

அரபி "what? what? what?" புரியாமல் திருப்பி கேட்டான்.

"ப்ரேம் ப்ரேம்....ப்ப்ப்ப்ப் ரேம்ம்ம்ம்ம்" கொஞ்சம் ராகத்தோடு வந்தது. சங்கீதம் தெரியும் போல.

அரபி ம்ஹூம் என்ற படி புரியல என்று தலையாட்டினான். (அடப்பாவி எனக்கு மட்டும் சுறா'ன்னு சொல்லி கேவலப்படுத்துன.... இவனுக்கு அட்லீஸ் "ப்ரேம்"ஐ 'ப்ரா"ன்னு சொல்லியாது கேவலப்படுத்தலாம்ல)

அப்போது சேட்டன்  அதி புத்திசாலித்தனமான காரியம் செய்தார் . நேராக துபாய் மன்னர் போட்டோபை காட்டி இது என்ன? என்றார்.

அரபி "கிங்... துஃபை கிங்" என்றான்

"நோ நோ இது இது என்ன பெயர்?" என்றான்

அரபி "ஃபோட்டோ?"

"யெஸ் அதே தான். பட் இதுக்கு பேர் என்ன?" என்றான்

அரபி பயங்கர சந்தோசத்துடன் "ஃபோட்டோ 'ப்ரேம்'" என்றான்

"yes . this is wat my name " என்றார் சேட்டன் (திஸ் பீஸ்? க்ரேஸி பக்கர்ஸ்)

"funny name" என்றபடி அரபி கிளம்பினான். சேட்டான் "எப்பூடி" என்ற ரீதியில் என்னை லுக் விட்டார்.

இந்த வாரம் திடீரென்று அலுவலகம் வந்த அந்த அரபி "ஹாய் சுறா" "ஹாய் ஃபோட்டோ ப்ரேம்" என்று சொல்லிக்கொண்டே வேகமாக மேனேஜர் ரூமுக்கு சென்றுவிட்டான்.

சேட்டனிடம் "என் பேர் எவ்வளவோ பரவாயில்ல" சிரித்தேன். (எப்பூடி?)

"தம்பி என்ட மாலையை(chain) காணோம்." குளிச்சுட்டு வந்த சேட்டன் மூனு சவரன் மாலையை எங்கோ தொலைத்து விட்டார். கட்டிலின் அடியில், ப்ளாங்கெட்டை உதறி, பாத்ரூம வரை பார்த்துவிட்டு கடைசியாக டாய்லெட் ஓட்டையை ஏக்கத்துத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தார்.

காலையில் எழும் போது தூக்க கலக்கத்தில் கவனிக்க வில்லை போலும். கடைசியாக என்னிடம் சொன்னார். நாம தான் *சூர்யா*வாச்சே :)

"கடைசியா மாலையை எப்ப பார்த்தீங்க?'

"இந்நள(நேத்து) நைட்டு"

"ஜன்னலை திறந்திருந்ததா?"

"என்ன தம்பி புதுசா கேட்குற? நம்ம ஜன்னல் எப்ப திறந்திருக்கு? அதுவும் ரெண்டாவது மாடியில இருக்கோம். யாரு வந்து ஜன்னல் வழியா எடுப்பா?"

"அவ்வ்வ் ஆர்டர் மாத்தி எல்லாம் கேட்க முடியாது சேட்டா.. அப்புறம் மறந்திடும்"

"சரி சரி கேளு"சேட்டன்

"நீங்க நைட்டு போட்ட அந்த முண்டா பனியனை எப்படி கழட்டுவீங்க? இப்படி மேல நோக்கியா?" செய்து காண்பிக்கிறேன்.

"தம்பிக்கு எந்த வட்டானோ? அப்படி கழட்டாம வேற எப்படி கழட்டுவாங்க? வேற வழி கிழிச்சு தான் போடனும் பனியனை"

"அப்ப அந்த பனியனை செக் பண்ணுங்க. தூக்க கலக்கத்துல செயின் வந்தது தெரியாம போயிருக்கும்"

பழைய துணி கூடையில் பனியனை எடுத்து செக் செய்தார். செயின் இருந்தது. சந்தோசமாகி நன்றி சொன்னார். சிரித்துக்கொண்டே சென்றேன். முறுக்கு மீசை இருந்தால் தடவி விட்டுக்கொண்டு சிங்கம்ல கர்ஜித்திருக்கலாம். ம்ம்ம்ம்

19 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

ஆஹா ராஜா கவனமா இருந்துக்கோலே! சேட்டனுக்கும் அனுஷ்கா மாதிரி உம்ம மேல ஒரு ப்ரியம் வந்துடப்போவுது அவ்வ்வ்வ்வ்வ்வ்:)

//யோவ் மம்டி)//

பாஸ் இப்படிச்சொல்லப்பிடாது அது யோவ் மம்டின்னா அதுல ஒரு மரியாதை தொனி இருக்கு டேய்ய் மம்டி சொல்லிப்பாருங்க டெரரா இருக்கும் எங்க வாத்தியாரு இப்படித்தான் சொல்லுவாரு :)

வித்யா said...

ஆக பஸ்ல அடிச்சது பத்தாதுங்கறீங்க. ரைட்டு:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழிக்கபோறேன்னு சொல்லிட்டுபோஸ்டா..

இருந்தாலும் சூர்யா சூர்யாவையே காப்பி அடிச்சி சிங்கமாகிட்டீங்க..:)

கோபிநாத் said...

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புலிப்பரம்பரையிலிருந்து சிங்கத்துக்கு மாறிட்டீங்களா..சார் ?

Gayathri said...

Photoframe: super nalla irukku unga mr photoframe epdi ipdilaam??

sirichi sirichu punnapochu vayarellam..super

இந்திரா said...
This comment has been removed by the author.
இந்திரா said...

சிங்கம் பட காட்சியை ட்ரை பண்ணி ஏதாவது தொப்பி வாங்குவீங்கனு எதிர்பார்த்தேன்.
ச்சே.. அந்த செயின் கெடச்சுடுச்சே..

அது சரி.. சேட்டனுக்கே தெரியாம எப்டி சார் அந்த செயின அவரோட அழுக்கு பனியன்ல வச்சீங்க?

sakthi said...

ஆதவா ஜி ::))

நாஞ்சில் பிரதாப்™ said...

//'ப்ரா"ன்னு சொல்லியாது கேவலப்படுத்தலாம்ல)//

பெண்களை கேவலப்படுத்தும் ஆணாதிக்கவாதி ஆதவன் ஒழிக....

சேட்டனுக்கு தமிழ்கத்துக்கொடுத்து தமிழ்பிளாக்கையெல்லாம் அவர் பண்றமுதல் கொலை நீயாத்தான்... கேர்ஃபுல்...

Arun said...

// தம்பி பேஸ்புக்ல இடுனது(என்னது முட்டையா?) //
sema landhu

எஸ்.கே said...

அருமை!

pappu said...

என்னைச் சுற்றீயும் காலேஜுகுள்ளே சேட்டன்மார் தான். அறியானோ?


இப்பலாம், மனசார சோக்கு அடிக்க முடியுறதில்ல. அதில ஒருத்தன் ஃப்ரண்டா போயிட்டான்:(

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

அவ்வ்வ்வ் நல்ல வேளை நீங்க "பஸ்"ல இப்ப இல்ல பாஸ். இருந்திருந்தா என் நிலவரம் தெரிஞ்சிருக்கும் :)
------------------------------------
@வித்யா

அடிச்சா அடங்கி போக நான் எலி இல்ல.. புலி.. புலி.. புலி.. (ஆதவா இதுக்கும் சேர்த்து அடி விழும் பாரு)
-----------------------------------
@முத்தக்கா

ஹி ஹி ஹி நோ நோ காப்பி கிட்டதட்ட ரெண்டு சூர்யாவும் ஒன்னு தானேக்கா :)
-----------------------------------@கோபிநாத்

ரைட்டு :))
-----------------------------------
@காயத்ரி

ஹி ஹி நன்றி காயத்ரி
-----------------------------------
@இந்திரா

சேட்டனுக்காக கஷ்டப்பட்டு செயினை கண்டு பிடிச்சு கொடுத்தா என் மேலயே திருட்டு பழியா.. கிர்ர்ர் :)
-----------------------------------
@சக்தி

சக்தி ஜி நன்றி :) எனக்கெதுக்கு ஜி?ஆதவா போதும் :)
----------------------------------
@பிரதாப்பு

அவர் மட்டும் தமிழ் கத்துகிட்டா முதல்ல படிக்க கொடுக்குற லின்ங் உன் சைட் தாம்ல.. அப்புறம் ஜென்மத்துக்கும் தமிழ் ப்ளாக் சைடே வரமாட்டாருல்ல் :)
-----------------------------------
@அருண்

நன்றி அருண் :)
------------------------------------
@எஸ்.கே

நன்றிங்க எஸ். கே :)
-----------------------------------
@பப்பு

இதுக்கெல்லாம் அசரலாமா பப்பு.. இது தான் கலாய்க்க நல்ல டைம். சும்மா போட்டு கும்மியெடு :)

Chitra said...

:-))

அப்பாவி தங்கமணி said...

//என்னது தமிழ் கத்துக்கொடுக்கனுமா? //
அடடா ... யாரா பாத்து என்ன கேள்வி இது? ஐயோ பாவம் தமிழ்... பொழச்சு போகட்டும் விட்டுடுங்க...

//"சுறா?" (அட எடுபட்ட பயலே!)//
ஓஹோ... அவிகளா நீங்க? சொல்லவே இல்ல?

//"yes . this is wat my name " என்றார் சேட்டன் (திஸ் பீஸ்? க்ரேஸி பக்கர்ஸ்)//
சேட்டன் சூப்பர் சூப்பர் சூப்பர்... சாப்பாடு சாப்பாடு தான் அவியல் அவியல் தான்... ஹா ஹா...ஒகே ஒகே நோ டென்ஷன்...

//"நீங்க நைட்டு போட்ட அந்த முண்டா பனியனை எப்படி கழட்டுவீங்க? இப்படி மேல நோக்கியா?" செய்து காண்பிக்கிறேன்//
நீங்க அவிகனு இல்ல நெனச்சேன்.. இவிகளா? இல்ல டபுள் ஆக்ட்ஆ? ஒண்ணுமே புரியல உலகத்துல...

//பழைய துணி கூடையில் பனியனை எடுத்து செக் செய்தார். செயின் இருந்தது. சந்தோசமாகி நன்றி சொன்னார்//
காப்பி டீ... காப்பி டீ... ஹா ஹா

கிரி said...

ஹி ஹி ஹி சேட்டன் காமெடி செம காமெடி போங்க!... உங்களுக்கு சேட்டனை பற்றி எழுதுவது என்றாலே குஷி தான் போல :-)

//"குப்பைத்தொட்டி"யில இருக்குற சேட்டன் பதிவு எல்லாம் அழிச்சுருடா ஆதவா (எல்லா பதிவையும் அழிக்க வேண்டியிருக்குமோ!)//

ஹா ஹா ஹா சூப்பரு!

சாமக்கோடங்கி said...

//
"நீங்க நைட்டு போட்ட அந்த முண்டா பனியனை எப்படி கழட்டுவீங்க? இப்படி மேல நோக்கியா?" செய்து காண்பிக்கிறேன்.

"தம்பிக்கு எந்த வட்டானோ? அப்படி கழட்டாம வேற எப்படி கழட்டுவாங்க? வேற வழி கிழிச்சு தான் போடனும் பனியனை" //

செம காமெடி..

சூப்பரப்பு...

அஹமது இர்ஷாத் said...

Athava 'Bus'la irukku vedi..

Related Posts with Thumbnails