சொப்ன சுந்தரன்

வாவ்! என்ன அழகா இருக்கு. நல்லா கொழுக் மொழுக்னு ஒரே சீராக ஓடுகிறது. எட்டு கால் பூச்சிக்கு இருக்கும் காலை விட இதுக்கு அதிகமாக கால் இருக்குமோ? சந்தேகத்தில் அதை குப்பற கிடத்தி எத்தனை கால் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக பிடித்து குப்பற போட முயற்சித்தேன். கை விரலில் ஒட்டிக் கொண்டு வர வரவே இல்லை. அலர்ஜி வேறு. கடிக்குமோ என்ற பயம் வேறு. பதட்டத்தில் கையை கொஞ்சம் உதற வேறு எங்கோ போய் விழுந்து மறைந்து போனது.

கையில் லைட்டரோடு பிரபு வந்தார். “யோவ் எங்கய்யா அந்த மூட்டைப்பூச்சி?” என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். “யோவ் மம்டி அதை பிடிச்சு வச்சிரு போய் லைட்டர் எடுத்து வந்து பொசுக்கிறலாம்னு சொன்னா அதுக்குள்ள அதை மிஸ் பண்ணிட்டயேய்யா. உனக்கெல்லாம் கல்யாணம் பண்ணி என்னய்யா பண்ண போற மம்டி”

“பிரபு இதுக்கும் கல்யாணத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? சரி கேட்கனும்னு நினைச்சேன். இந்த ரூம்ல மூட்டைப்பூச்சி ரொம்ப அதிகமோ?”

“ஏன் அதிகமா இருந்தா என்ன பண்ணுவ? உன் ரூமுக்கு எடுத்துட்டு போவப்போறயா? பேசாம படுய்யா மம்டி. நாளைக்கு முக்கியமான வேலையா தானே இங்க வந்த? பேசாம படு” தலைகானியை ஒரு நோட்டம் விட்டு ப்ளாங்கெட்டை நன்றாக உதறி படுக்க தயாரானார்.

“இல்ல பிரபு உங்களுக்கு பழகியிருக்கலாம். மூட்டைபூச்சின்னா எனக்கு கொஞ்சம் அலர்ஜி...”

“இல்ல எனக்கு ரொம்ப நெருங்கின சொந்தம் பாரு, பேசாம படுய்யா”

“காலையில சீக்கிரம் எழுந்து வேற போகனும். இண்டெர்வியூ இருக்கு.”

“நாங்கெல்லாம் காலையில எழுந்து என்ன பிச்சையா எடுக்க போறோம். அட ராமா.......... பேசாம படுய்யா”

“அதான் பிரபு சரியா தூங்கலைன்னா காலையில முகம் கொஞ்சம் டல்லா இருக்கும். அதான் சொன்னேன்”

“இப்ப படுக்க போறயா இல்ல வெளிய போறயா? பாலாஜி சொன்னான்றதுக்காக தான் இந்த ரூம்ல உன்னை இன்னைக்கு தங்க வச்சேன். நீ என்னடான்னா நொய் நொய்யின்னு கேள்வி கேட்டு தூங்க விடமாட்டேங்கிற. மணி அல்ரெடி 12 ஆகப்போகுதுடா ஆதவா. பேசாம படு. நெக் பனியன் போட்டவங்களையெல்லாம் மூட்டை பூச்சி கடிக்காது. நிம்மதியா தூங்கு” அவ்வளவு தான். மெலிதான குறட்டையில் செட்டிலாகி விட்டார்.

என் கண்களும் சொக்கி கொண்டு எங்கோ இழுத்து சென்று, கடைசியில் இண்டெர்வியூ பயம் காட்சிகளாக விரிந்தது.

தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில்கள் தெரிந்தும் பதட்டமடைகிறேன். உடல் முழுவது மூட்டைப் பூச்சி ஊர்கிறது. ’சுருக்’ என்று கடிக்கிறது. நகைக்கிறது. வேகமாக ஊர்ந்து கழுத்தின் மேல் ஏறி, கன்னத்தை தாண்டி கண்களின் முன்னே அட்டாகாசமாக சிரித்து தன் கொடுக்கை கொண்டு கொட்ட வருகிறது........ வேகமாக கண்களை மூடி பின்பு மெதுவாக திறந்தால் ஆளுயிற மூட்டை பூச்சி ஆனால் அந்த முகம் மட்டும் மனித முகம். அதுவும் பரிச்சயப்பட்ட முகம். அது சிரித்து கொண்டே ராட்சஷ் கொடுக்கை கொத்த என்னருகில் வர  “அம்மாஆஆஆஆஆஆஆஆஆ” என கத்திய கத்தில் பிரபுவும் கத்த ஆரம்பித்தான். இருவரும் கத்திக்கொண்டிருக்கும் போதே அடுத்த ரூமிலிருந்த பாலாஜியும், கார்த்தியும் ஓடி வர அவர்களும் “என்னாச்சு”ன்னு கத்த... க்ளைமாக்ஸ்.

“அட பிரபுவா அது? அவ்ளோ பெரிய மூட்டைப் பூச்சியா? தலை மட்டும் பிரபுவா? மச்சி நினைச்சு பார்க்கவே செம காமெடியா இல்ல? ஹா ஹா ஹா” கார்த்தியும், பாலாஜியும் சிரித்துக்கொண்டே சென்றனர்.  போகும் போது “ஆதவா குட் நைட், டேய் மூட்டை பூச்சி  குட் நைட்” என்றவாறு சென்றனர். ம்ம்ம். உங்கள் யூகம் சரி தான். அன்றிலிருந்து மூட்டைப்பூச்சி பிரபு ஆகிவிட்டர்.

ப்போதும் கனவுகள் வருவதில்லை. எப்போது வருகிறது என்றும் தெரியவில்லை.  வராமல் இருப்பதுமில்ல (அடி தான் வாங்க போற) சிரித்து சிரித்து வயிறு வலியில் தூக்கத்திலிருந்து எழுந்த சம்பவங்களும் உண்டு. எதற்கென, யாருக்காகவென தெரியாமல் வழிந்த கண்ணீர் தடத்தை காலையில் அழித்ததும் உண்டு. வீறுகொண்டு எழுந்து பீரோவில் மோதியதும் உண்டு. ஜப்பானிய அமானுஷப்படங்களை கண்டு வீரிட்டு அலறி அனைவரையும் எழுப்பியதுமுண்டு. வருடங்களாக தொடர்ந்து வரும் கனவுகள் உண்டு.

பல்லுடைந்து பொக்கை வாயோடும்  “இது கனவு தான்.. இது கனவு தான் நம்பாதே. உன் பல் உடையவில்லை” என உறக்கத்தில் எனக்கு நானே ஆறுதல் சொன்னதும் உண்டு. ஆனா மத்தவன் கனவுல வந்ததுக்காக திட்டு வாங்கினது மட்டும் நடக்கல... இப்ப அதுவும் நடந்திருச்சு. 

சென்ற மாதம் நண்பனிடமிருந்து போன்!. மிஸ்டு காலே இருந்தாலும் ஒரு ரிங் மேல கொடுக்க மாட்டான்.  போனே செய்தது ஆச்சர்யம் எனக்கு. எடுத்ததும் “@($*&$&#)*$($)$” அர்ச்சனை செய்தான். "நிறுத்துடா. என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க.ஆளாளுக்கு கும்முறீங்க. எதுக்கு திட்டுறன்னு சொல்லிட்டு திட்டு" என்றேன்

"ரெண்டு நாள் முன்ன என் கனவுல நீ வந்த"

"அடச்சீ. அதுக்கேன் திட்டுற? நல்ல விசயம் தானே"

"@($*&$&#)*$($)$"

 "ரைட்டு என்ன கனவுன்னு மட்டும் சொல்லு"

"நீயும் நானும் அடர்ந்த காட்டுக்கு போறோம்..."

"சூப்பர். கூட பிகர் எதுவும் இல்லையா?"

"@($*&$&#)*$($)" வார்த்தை மாறாம அப்படியே திட்டுறானே!

"சரி சரி சொல்லு. உனக்கு பில்லு ஏறபோகுது" டைவர்ட் செய்தேன்

"நல்ல அடர்ந்த காடு. வழி வேற தவறிட்டோம். நல்ல பசி ரெண்டு பேருக்கும். ஏதாவது சாப்பிட கிடைக்குமான்னு தேடிகிட்டே போறோம். தீடீர்னு புலி ஒன்னு பயங்கர பசியில எதிர்தாப்புல நிக்குது"

"அய்யய்யோ. அப்புறம் என்ன ஆச்சு?"

"அது நம்மள துரத்த வர...நாம ஓட...அது துரத்தன்னு ரொம்ப தூரம் ஓடுறோம். அப்ப அங்க குடிசை இருக்கு. நீ அந்த குடிசைக்குள்ள போலாம்ன்ற. நான் வேணாம் வேற வழியில போகலாம்ன்றேன். ஆனா நீ கேட்காம  குடிசைக்குள்ள போற. நானும் வேற வழியில்லாம செத்தாலும் பிழைச்சாலும் நம்ம ரெண்டு பேருக்கும் ஒன்னாவே நடக்கட்டும்னு உன் பின்னாலயே ஓடுறேன்."

"என் செல்லம். நீயல்லவா நண்பன். கண்டிப்பா ரெண்டு பேரும் பிழைச்சிருப்பமே?"

"வெண்ணை வெட்டி மேல கேளு. குடிசைக்குள்ள ஒன்னுமே இல்ல. புலி வேற துரத்திகிட்டு குடிசை நோக்கி வருது. இனி வாசல் வழியா கூட ஓட முடியாத படி அது வாசலை நோக்கி வர ஆரம்பிச்சிருச்சு. குடிசையில வேற வழி வேற இல்ல."

"அடக்கடவுளே. அப்புறம் என்னாச்சு?"

"ம்க்கும். மேல மூங்கிள் கம்பு குடிசைக்கு சப்போர்டா குறுக்கால போய் கிட்டு இருந்துச்சு. நீ அதை பார்த்த. பார்த்துட்டு எகிறி அதை பிடிச்சு தொங்கிட்ட. அப்புறம் காலையும் அதுல தூக்கி மாட்டிகிட்டு காட்டுவாசிங்க கையும் காலையும் கட்டிட்டு கொண்டு போவாங்களே? அந்த பொஸிஷனுக்கு வந்துட்ட. நானும் அதே மாதிரி நானும் பண்ணிட்டேன்"

"ஹா ஹா பார்த்தயா அந்த சமயத்துல எப்படி புத்திசாலி தனமா நடந்திருக்கேன்னு"

"வாய்ல கத்தி விட்டு சுழட்டிருவேன். கேளு ஒழுங்கா. கீழ இருந்த புலி எகிறி குதிச்சு நகத்தால நம்ம டிக்கியை தாக்க வந்துச்சு. நீ புலி எகிறிம் போது டக்குன்னு டிக்கியை தூக்கி எம்பிகிட்டே இருந்த. நானும் அதே மாதிரி பண்ணினேன்."

"அடடா நல்லா தான் தப்பிச்சிருக்கேன். இதுக்கேன் என்னை திட்டுற"

"எழவெடுத்தவனே. கட்டில்ல மல்லாக்க படுத்துகிட்டு இருந்த நான் கனவுல பண்றதை  போல துக்கத்துல பயந்து எம்பி எம்பி குதிச்சிருக்கேன். கூட வேற பயத்துல சத்தம் வேற போட்டிருக்கேன். எங்கப்பா வேற கீழ படுத்துகிட்டு இருந்தாரு. முதல்ல பார்த்துட்டு அதிர்ச்சியாகி அப்புறம் என்னை அதட்டி எழுப்பி தறுதலை எங்க இது உருப்பட போகுதுன்னு திட்டிகிட்டே படுத்துட்டார்"

"ஙே!"

15 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சிட்டுக்குருவி said...

"எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு இப்ப தான் வீட்ல தோணியிருக்கு போல. அம்மா சொந்தகாரங்க எல்லார்கிட்டவும் ஜாதகத்தை அனுப்பிட்டாங்க. அப்பாவும் எனக்கு பொண்ணு தேடுறார்//

வாழ்த்துகள் ஆதவன்

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ் முதல் கமெண்டே லந்தா? எனக்கெதுக்கும்மா வாழ்த்து?!

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. சரியான கனவுதான்.. அப்புறம் அந்த நண்பன்னு சொன்னது உங்களைத்தான.. :-))

Gayathri said...

ayyo moottai poochiya?? kadavule athu oru peria kodumai..thookam kettu athu pinnala odi pudichu thookipottu...enna kodumai bro ithu

கோபிநாத் said...

எனக்கு ஏதோ ஒரு மிள்பதிவை படிக்கிற மாதிரியே இருக்கு ;)

இந்திரா said...

எனக்கும் அடிக்கடி பல் உடையுற மாதிரி கனவு வருது.. வேற எதுவும் ஸ்வாரஸ்யமான கனவு வந்ததா நினைவில்ல.

Raji said...

யோவ் மம்டி//

per nalla irukke:-))

Chitra said...

ஹா,ஹா,ஹா,..... நல்லா போகுதே...

விஜி said...

சூரி மாமா, நான் கூட சொப்ன சுந்தரன்ன்னு தலைப்பை பார்த்து எதோ சேட்டனை பத்தி எழுதிறையோன்னு ஆவலா வந்தேன், ஏமாத்திபுட்டையே

விஜி said...

மம்டி,, இந்த பேருதான் பொருத்தமா இருக்குது ஆதவ்ஸ்..

குப்பற கிடத்தி எத்தனை கால் இருக்கிறது // புலிப்பால் குடிச்சதிலிருந்தே ஒரு மார்க்கமாத்தான் இருக்கே

☀நான் ஆதவன்☀ said...

@பாபு

நன்றிங்க :)
------------------------------------
@காயத்ரி

:)) கொடுமை தான். சில இடங்கள்ல இன்னும் இருக்கே.
------------------------------------
@கோபிநாத்

ரைட்டு. நான் என்னைக்கு மீள்பதிவு போட்டேன்?
-----------------------------------
@இந்திரா
உங்களுக்குமா? :)
-----------------------------------
@ராஜீ

அடிங்.... :))
-----------------------------------
@சித்ரா

வாங்க சித்ரா. நன்றி :)
-----------------------------------
@விஜி

மாதாஜி யாரும் கவனிக்கலன்னு நினைச்சேன். ஆனா இப்படி ஞாபகம் வச்சி கூப்பிடுறீங்களே? :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

உன் பதிவு சிரிப்பை வரவழைக்கும் உத்தியை கொண்டிருக்கிறது தேவுடு.நீ பஸ்ஸில் எழுதுவதை இங்கும் பகிரேன்.

கோமதி அரசு said...

சொப்ன சுந்தரன் தலைப்பு அருமை.
நீங்கள் மட்டும் தான் கனவில் வாழ்கிறீர்கள் என்றால் உங்கள் நண்பரும் அப்படியா?

கனவு காணுங்கள்,கனவு காணுங்கள்.

எங்களுக்கு வாய் விட்டு சிரிக்க நல்ல பதிவு கிடைக்கிறது.

ஸ்வர்ணரேக்கா said...

//வீறுகொண்டு எழுந்து பீரோவில் மோதியதும் உண்டு.//

வாய்விட்டு சிரிக்க முடிந்த்து...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மம்டி பெயர் விளக்கம் ப்ளீஸ் :)))))

Related Posts with Thumbnails