ஆதவன் சிறுகதைகள்

”ஆதவன்” இந்த பெயர் மீது இயல்பாகவே இளம் வயதுதொட்டு ஒரு ஈர்ப்பு இருந்தது. இருக்கிறது. ஏன் என்ற காரணம் இல்லாமல், கேட்க தோன்றாமல் சில விஷயங்கள், நபர்கள் பிடிக்கும். அப்படி பிடித்தது தான் இந்த பெயர். வலைப்பூ ஆரம்பிக்கும் போது ’சூர்யா’ என்ற பெயரில் சில பதிவர்களை கண்ட பிறகு, புனைப்பெயரை தேர்ந்தெடுக்க குழப்பமே இல்லாமல் வந்த பெயர் இது. (பின்பு ஆதவன் என்ற பெயரில் ஒரு பதிவரை கண்ட பிறகு இனியொரு பெயரை தேடாமல் “நான் ஆதவன்” ஆனேன்.)

ஆரம்பத்தில் இணையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவரது சிறுகதைகளை படித்து ஈர்க்கப்பட்டு முதலில் வாங்கிய புத்தகம் "என் பெயர் இராமசேஷன்".

 ஒருவரின் உணர்ச்சிகளை,கூடவே வாழ்ந்தாலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில்,உணர்ச்சிகளுக்கு துளியும் மாற்றமில்லாத எழுத்து வடிவம் தர முடியுமென்றால் அது இவரால்தான் முடியும்.

அதாவது என் போன்ற மிடில் க்ளாஸ் மேனின் பாசத்திற்கு உங்களால் எழுத்து வடிவம் தர முடியுமா? எத்தகைய எழுத்து வடிவம்? என் மனகுமுறலுக்கு? என் நிறைவேதாத ஆசைகளுக்கு? என் பொருமலுக்கு? நான் தினம் அணியும் முகமூடிக்கு? இவ்வளவு ஏன்..... செக்ஸ் ஆசைகளுக்காக நான் அணியும் முகமூடித்தனத்திற்கு? இது அனைத்தையும் ஒரு சேர முகம் சுளிக்காமல் உங்களால அளிக்க முடியுமா? ஆனால் இவை அனைத்தையும் வீட்டின் வரையேற்பைரையில் படித்துகொண்டிருக்கும் போது மற்றொருவர் அருகில் அமர்ந்திருந்தாலும் எவ்வித தடங்கலும் இல்லாமல், சிறிதும் பிசிறில்லாமல் நமக்களிக்கிறார்  ஆதவன்.


ஒரு பித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டேன் அவர் “என் பெயர் இராமசேஷன்” படித்தபிறகு.  பாலைவனத்திலுள்ளே அவர் எழுத்தை தேடத்தொடங்கிய போது கிடைத்தது வெறும் கானல் நீரே. இணையத்திலும் இவர் எழுத்துக்கள் அதிகமாக கிடைக்கவில்லை. அதியசமாய் கிடைத்தது அவர் எழுதிய அனைத்து சிறுகதைகளும் ஒரு சேர.... உயிர்மெய் பதிப்பகம் மூலமாக. பல்வேறு இலக்கிய பத்திரிக்கைகளிலும், பல்வேறு காலங்களிலும் அவர் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் (60 சிறுகதைகள்) மிகவும் சிரமப்பட்டு தொகுத்திருக்கிறார் ஆர் வெங்கடேஷ்.என் உள்ளக்குமுறலை, என் பகுத்தறிவினை, என் காதலை, என் காமத்தை என அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்தளித்தது இந்த சிறுகதை தொகுப்பு.
பதினென்ம காலம் வரை எனக்கும் என் அப்பாவிற்குமான ஒரு நிலை மிக ஆச்சர்யமானது. என் அப்பாவை மிக பிடிக்கும் எனக்கு. என் அனுமானத்தின் படி அப்போது என்னையும் என் அப்பாவுக்கும் மிக பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இருவரும் முகம் நோக்கி பேசிக்கொண்ட வார்த்தைகளை ஒரு பக்கத்தில் எழுதி விடலாம். மரியாதையா பயமா என தெரியாத  என் மனநிலையும், கூச்சமா இல்லை அகம்பாவமா என தெரியாத அவர் மனநிலையும் என இவ்விரு மனோநிலையையும் ஒரு சேர எழுதுவது முடியாத காரியம். அவ்விரு மனநிலையும் படம் பிடிக்க ஒரு விசேஷ ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆதவனுக்கு இருந்திருக்கிறது. இந்த சிறுகதைகளை படிக்கும் போது அவ்வயதில் என் நிலையையும் என் அப்பாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

பெரும்பாலும் ஆதவன் கதைகள் பிராமண பிரிவை சேர்ந்திருந்தாலும் படிக்கும் போது அதை மறந்து நம்மை கதை மாந்தரோடு ஒன்றச் செய்து அனைத்து வேறுபாடுகளையும் மறக்க செய்கிறது ஆதவன் எழுத்துக்கள். இதை விட சிறப்பாய் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின், அல்லது நடுத்தர குடும்பத்து முதியவரின் எண்ண ஓட்டங்களை நம்முள் ஓடச்செய்து  அவரை எண்ணங்களை நியாயப்படுத்தியும், அதே சமயம் மற்றொரு கதாபாத்திரம் கொண்டு அநியாயப்படுத்தியும் நம்மை ஒரு வித தராசின் மனநிலைக்கு கொண்டு வரச்செய்திருப்பது ஆசிரியரின் வெற்றி.

ஒவ்வொரு கதைகளின் நாயகனையும் வாசகனை/என்னை வெவ்வேறு தருணங்களில் உணர வைத்திருக்கும் இல்லையேல் அந்த கதாபாத்திரங்களை கண்டிருப்போம். பெரும்பாலும் ஆரம்பிக்கும் கதைகளுக்கு முடிவும் இல்லை தொடக்கமும் இல்லை. மனித வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் பயணிப்பதை வாசகன் உணர முடிவதால் தொடக்கத்தையும் முடிவையும் பற்றி கவலைகளில்லா ஒரு உன்னத நிலையில் வாசகன் இருக்க முடியும். காற்றுக்கும் எனக்கும் இடையே உள்ள இடைவெளி போல் ஆகிவிட்டது ஒவ்வொரு கதைகளும். வாத்திய கருவிகளின் கம்பிகளை யாருமில்லா/எதுவுமில்லா அறையில்  மீட்டெடுக்கும் போது ஏற்படும் நுண்ணிய அதிர்வுகள் போல் மனதோரம் ஒவ்வொரு கதைகளின் அதிர்ச்சியற்ற அதிர்வுகளையும் உணர முடிகிறது.


பெரும்பாலும் இவரது சிறுகதைகளை படிக்க இரவுகளே என்னையும் அறியாமல் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உறங்குவதே உன்னத நிலை ஆகிப்போன இயந்திர வாழ்வில் இக்கதைகளைப் படிப்பதால் தானாக அவிழும் எனது முகமூடிகள் சந்தோஷத்துடன் கூடிய உறக்கத்தை அளித்தன. கனவுகளற்ற ஒரு ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் செய்திருக்கிறேன்.

 பெரும்பாலான கதைகள் என்பதை விட அனைத்து கதைகளும் வாழும் இடம் டெல்லியாகவே இருக்கின்றன.  உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட இந்த கதைக்களுக்காக பெரிதாக மெனக்கெடாமல் தன்னிடமிருந்தும் சுற்றத்திடமிருந்தும் எடுத்தாண்டிருக்கிறார் போலும். அப்பர் பெர்த்’லிருந்து தொடங்குகிறது சிறுகதைகள். வழக்கம் போல மிடில் க்ளாஸ் கதாநாயகன். ’எப்படியாவது’ முன்னேறி உயர்தர வாழ்க்கையை வாழத்துடிக்கும் நாயகன். அவன் எண்ண ஓட்டங்களை நம் முன் விரிய வைக்கிறார். நமக்குள் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் அதே கதாநாயகன் தான் அவன். படிக்கும் நம்மை கொண்டே அவரின் வார்த்தை ஜாலங்களை கொண்டு கதை நாயகனின் எண்ணங்களுக்கு நியாயம் கற்பிக்க வைக்கிறார். மெலிதான புன்னைகையோடு படித்து முடித்தேன்.
”இல்லாதது” - இருக்கிற அறுபது கதைகளில் மிகச்சிறிய கதை இதுவாக தான் இருக்க முடியும். மிக எளிமையாக கொண்டு சென்று சிறு அதிர்ச்சியோடு முடிக்கிறார். முடிவில் சிரிப்பை அடக்கவும் முடிய வில்லை. 

 எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக “சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்...” கதை இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞன் இளைஞியிடையே ஏற்படும் ஈர்ப்பு,  அவளை தன் பக்கம் ஈர்க்க அவனும் அவனை தன் பக்கம் ஈர்க்க அவளும் செய்யும் நிகழ்வுகளை சுவாரஸியமாக சொல்கிறார். இருவரும் தானாக ஏற்படுத்திய நிகழ்வுகள் இருவருக்கும் இடையே “ஈகோ க்ளாஷாக”  மாறுகிறது. இருவரில் ஜெயிப்பவர் யார் என நம்மை கதையில் ஆழ்த்தி கடைசியில் தன் நிலையை உணர்ந்து இருவரும்  தோற்றுப் போய் நம்மை நிம்மதி பெரு மூச்சு விட வைக்கிறார். இந்த கதை எழுதும் போது 80களின் தொடக்க மாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதும் இக்கால என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் பொருந்துப்போவது ஆச்சர்யம்.

இக்கதை மட்டுமல்ல கருப்பு அம்பா கதை, ’இண்டர்வியூ, புதுமைப்பித்தனின் துரோகம், நிழல்கள் என அனைத்து கதைகளும் மிக நேர்த்தியாக பதிந்திருக்கிறார். முப்பது வருடங்கள் கழித்து படித்த எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து பார்க்கும் போது அப்போது இக்கதைகள் என்னவிதமான அதிர்வுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கும் என யோசிக்க வைக்கிறது.
எண்ணூறு பக்கங்கள் கொண்ட அறுபது கதைகளையும் படிக்க நேரம் மிக அதிகமாக எடுத்தாலும், ஒரே முழு மூச்சில் கதைகளை படிக்க முடியவில்லை. ஒவ்வொரு கதைகளுக்கும் சிறிது நேரம் இடைவெளி விட்டு, லயித்தே செல்லத்தோன்றுகிறது. ஒரு தலைமுறையையே பாதித்த எழுத்து என கூறப்படுகிறது. தலைமுறை தாண்டிய பாதிப்புகளை கூட ஏற்படுத்துகிறது இப்புத்தகம். மிக இளவயதில் மறைந்து போன இவரது இழப்பு தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பல்வேறு சிரமங்கள் எடுத்து அவரது அனைத்து சிறுகதைகளையும் தொகுத்த ஆர் வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

17 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சிட்டுக்குருவி said...

விமர்சனம் நல்லாருக்கு ஆதவன்
:)

வித்யா said...

சிறப்பான பகிர்வு ஆதவன்.

இந்தப் புத்தகக்கண்காட்சிக்கு லிஸ்ட் ரெடி:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையா இருக்கு ஆதவன்..

டில்லிக்காரவங்க பல பேரு டில்லியில் இருந்தப்ப நிறய எழுதி இருக்காங்க.. அம்பை கதைகளில் கூட டில்லிதான் சுத்தி சுத்தி வந்தது.. :) இன்னும் நிறைய பேர்... வழக்க்ம்போல என்னால் கதை இலக்கிய ம் இலக்கியவாதிகள் பத்தி எல்லாம் புள்ளிவிவரம் தரத்தெரியாது..

நாஞ்சில் பிரதாப் said...

//புனைப்பெயரை தேர்ந்தெடுக்க குழப்பமே இல்லாமல் வந்த பெயர் இது. (பின்பு ஆதவன் என்ற பெயரில் ஒரு பதிவரை கண்ட பிறகு இனியொரு பெயரை தேடாமல் “நான் ஆதவன்” ஆனேன்.) //

ஆமா இவரு பெரிய ரங்கராஜன்... சுஜாதான்னு புனைப்பெயர் வச்சக்கதையை சொல்லிகினுகிறாரு.... நாட்டுக்கு ரொம்ப அவசியம்...:))

நாஞ்சில் பிரதாப் said...

//அவளை தன் பக்கம் ஈர்க்க அவனும் அவளை தன் பக்கம் ஈர்க்க அவளும்//

இதில் எழுத்துப்பிழையும், இலக்கணப்பிழையும் இருக்குடே...

முழுசா படிச்சுட்டேல்ல அப்ப அடுத்த வாட்டி வரும்போது ரெடியா வச்சுக்க...அண்ணனுக்கும் படிக்கனும்....

விஜி said...

ஒரு ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஆட்டையை போட்டு நானே வச்சுக்கிட்டேன் :)

விஜி said...

ஆதவா உனக்குஎதுக்கு புனை பெயரு? ஒன்லி புலிப்பேருதான்

Chitra said...

எண்ணூறு பக்கங்கள் கொண்ட அறுபது கதைகளையும் படிக்க நேரம் மிக அதிகமாக எடுத்தாலும், ஒரே முழு மூச்சில் கதைகளை படிக்க முடியவில்லை. ஒவ்வொரு கதைகளுக்கும் சிறிது நேரம் இடைவெளி விட்டு, லயித்தே செல்லத்தோன்றுகிறது.

.....அருமையான விமர்சன வரிகள். பகிர்வுக்கு நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

@சிட்டுக்குருவி

நன்றி வாணி :)
------------------------------------
@வித்யா

:) நன்றி வித்யா
------------------------------------
@முத்தக்கா

பிற்காலத்துல நீங்களும் பெரிய இலக்கிய வாதியா வரூவீங்க போலயேக்கா :)
------------------------------------
@நாஞ்சில் பிரதாப்

ஏலே சவுத்து மூதி இவரு பெரிய "நாஞ்சில் நாடன்" பேருக்கு முன்ன ஊர் பேரை சேர்த்துகிட்டு என்னைய சொல்ல வந்துட்டாரு... போலே வெண்ணை வெட்டி :))))

//ரெடியா வச்சுக்க...அண்ணனுக்கும் படிக்கனும்....//

நானே ஆட்டைய போட்டது தான். ஆத்து தண்ணிய யார் குடிச்சா என்ன. வா வா :))
-----------------------------------
@விஜி

மாதாஜீஈஈஈஈஈஈஈஈ மீ பாவம் இதோட விட்டுருங்க :)
-----------------------------------
@சித்ரா

நன்றிங்க சித்ரா :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

எலே தேவுடு
ஒரு வழியா ஒருவருஷத்துல படிச்சிட்ட
அப்போ புக்கை கொண்டுவந்துகொடு வீட்ல,நாங்களும் படிப்போம்ல?

ஹுஸைனம்மா said...

அப்போ இது நீங்க எழுதுன புத்தகம் இல்லியா? :-((

ஆனாலும் உங்க புனைபெயருக்குக் கொடுத்த பில்ட்-அப்ப்பு இருக்கே... :-)))

ஹுஸைனம்மா said...

அப்போ இது நீங்க எழுதுன புத்தகம் இல்லியா? :-((

ஆனாலும் உங்க புனைபெயருக்குக் கொடுத்த பில்ட்-அப்ப்பு இருக்கே... :-)))

Anonymous said...

இதுவே ”நான் ஆதவன்” ஆனதற்குக் காரணம் ஆஆஆஆஆஆஆகும்ம்ம்ம்ம்ம்.. அப்டினு ஒரு லைன் சேத்திருக்கலாம்ல..

கோபிநாத் said...

\\என் அப்பாவிற்குமான ஒரு நிலை மிக ஆச்சர்யமானது. என் அப்பாவை மிக பிடிக்கும் எனக்கு. என் அனுமானத்தின் படி அப்போது என்னையும் என் அப்பாவுக்கும் மிக பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இருவரும் முகம் நோக்கி பேசிக்கொண்ட வார்த்தைகளை ஒரு பக்கத்தில் எழுதி விடலாம். மரியாதையா பயமா என தெரியாத என் மனநிலையும், கூச்சமா இல்லை அகம்பாவமா என தெரியாத அவர் மனநிலையும் என இவ்விரு மனோநிலையையும் ஒரு சேர எழுதுவது முடியாத காரியம். அவ்விரு மனநிலையும் படம் பிடிக்க ஒரு விசேஷ ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆதவனுக்கு இருந்திருக்கிறது. \\\

இந்த விஷயத்துக்கே படிக்கனும் ;))

நன்றாக வந்திருக்கு உங்கள் பார்வை ;)

ஊர்சுற்றி said...

என் பெயர் ராமசேஷன் படிச்சிட்டு, இரண்டு நாட்களுக்குப் பித்துப் பிடித்து அலைந்தேன்! அவரது சிறுகதைகளைப் படித்தது கிடையாது. உங்களது இந்தப் பதிவு, புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது. :)

ஒ.நூருல் அமீன் said...

ஆதவனுகே எங்கள் வாக்கு.

மொக்கை போடலாம் வாங்க said...

சூப்பரு

Related Posts with Thumbnails