தாய்லாந்து ஸ்பெஷல்

கோரல் ஐலேண்ட்:

ஹோட்டலுக்கு எதிராகவே கடல் இருக்குறதால மறுநாள் காலையில பொடி நடையா நடந்து போனோம். அங்க எங்களுக்கான அதிவேக விசைப்படகு காத்துக்கொண்டிருந்தது. அந்த தீவிற்கான கைடாக ஒரு பெண் வந்திருந்தார். கிளம்பும் முன் அனைவரும் படம் எடுத்துக்கொள்ளலாம் என கரையின் அருகே நின்றோம். புகைப்படமும் எடுத்தோம்.

கரையில் யாரோ ஒருவர் “ஸ்மைல் ப்ளீஸ்” என கூறி வளைத்து வளைத்து எங்களை படம் பிடித்தார். யாருடா இவர் நம்மள எதுக்கு படம் பிடிக்கிறார் என நண்பனை பார்த்தேன். “தாய்லாந்து”ல எல்லாருமே நல்லவங்கடா என்றான் நண்பன். ஆமோதித்து நன்றியுடன் அவருக்கை கை கொடுத்துவிட்டு கிளம்பினோம். 

கடற்கரைக்கு நடுவே ஒரு பெரிய மேடை போல் அமைத்து ஸ்பீட் போட் மூலம் பாராசூட்டில் செல்ல பல மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நம்ம பெண் கைடுக்கு "தேவைப்பட்ட" ஒரு மேடையில் எங்களது போட் நிறுத்தப்பட்டது. 500 பாத் செலவில் பாராசூட் மூலம் கடலின் மேல் பறக்க தயாரானோம்.  

கடலின் மேலே சுமார் இரண்டு நிமிடங்கள் பறக்கும் இந்த பாராசூட் அட்டகாசமான அனுபவம். மிகவும் குறைந்த விலையில் இது போன்று கிடைக்கும் வாய்ப்புகளை தவற விட கூடாது என்று நண்பர்கள் அனைவரும் ஆர்வம் காட்டினர். அங்கு செல்பவர்கள் இதை தவறாமல் அனுபவித்து வரவும். 


 (ஹி ஹி நானே தான்.)

பின்பு அங்கிருந்து கோரல் ஐலேண்டை நோக்கி எங்கள் பயணம் புறப்பட்டது. சுமார் 20 நிமிட பயணத்தில் கோரல் ஐலேண்டை அடைந்தோம். ஐந்து பேரும் இறங்கிவுடன் ஒரு லுக் விட்டோம். ஹி ஹி நினைத்ததிற்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது அந்தத்தீவு.

(குப்பைத்தொட்டி ரொம்ப டீசெண்டாக்கும். ஸோ ஒன்லி கார்டூன்)


சொர்க்கத்தை வெட்டி எடுத்ததை போல் உள்ளது அந்தத்தீவு. சுற்றிலும் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலையில்லா மனிதர்கள். அவர்களோடு கலக்க தயாரானோம். முதலில் கேட்பாராற்று கிடந்த “வாழைப்பழ படகை” தேர்ந்தெடுத்து போனோம். முன்னால் அதி வேகப்படகு இழுத்துச்செல்ல பின்னால் வாழைப்பழ படகு செல்லும். கடலுக்கு நடுவே சென்று முன்னால் போன படகு வேகமாக திரும்ப பிடிமானம் இல்லாமல் அனைவரும் கடலில் விழுந்தோம். ”வாழ்க்கை ரவிக்கை(life jacket)” போட்டிருந்ததால் தப்பித்தோம். இதே போல ஒரு அரை மணி நேரம். மிகவும் ஜாலியான விளையாட்டு இது. நாங்கள் செய்த கலாட்டாவைப் பார்த்து தொடந்து பல ஐரோப்பிய குடும்பங்கள் அதில் பயணம் செய்தன :) இதையும் தவற விட வேண்டாம். 
 (வாழைப்பழ படகு)

பின்பு நீஈஈஈண்ட நேர ஆனந்தக்குளியல் :) பாதுகாப்பான கடற்கரை. பயப்பட தேவையில்லை. நீச்சல் தெரியாத நாங்கள் எந்த வித பயமும் இல்லாமல் குளித்தோம். 
 (ஆனந்த குளியல்)

கரையிலிருந்து கைடு  மதிய உணவு உண்ண அழைக்க ஆரம்பித்தார். நல்ல பசியில் சென்றோம். ஐந்து பேரில் இரண்டு பேர் மட்டும் அசைவம். ”ஸ்பெஷல் sea food” உங்களுக்காக மதிய உணவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கைடு கூறினான். நல்ல பசியில் சென்று உட்கார்ந்தால் வாழ்க்கையே வெறுத்து போச்சு. எதுவும் நம்ம டேஸ்டுக்கு ஒத்து வரல.வெறும் சோறை மட்டும் தின்றோம். காலையில் தங்கியிருந்த ஹோட்டலில் வயிறு முட்ட தின்றது சற்றே ஆறுதல் :)

பக்கத்து டேபிள்ல இருந்த சைவத்தை பார்த்தால் எங்களை விட பாவமா இருந்துச்சு :) வெறும் சோறையும் மிளகாய் தண்ணீரையும் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். உணவு முறை மட்டுமே அங்கே பெரிய குறை.
(மீன்,சிக்கன்,ப்ரைடு ரைஸ்,இறால், ஷெல் etc..)

(Special sea foodஆம்ம்ம்ம்)

ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினோம். கரைககு வந்ததும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தவன் எடுத்த போட்டோவையெல்லாம் ஒரு ப்ளேட்ல ப்ரேமா போட்டு நம்மகிட்ட கொடுத்து 100 பாத் தாங்கன்னான். அடப்பாவி! திரும்பி நண்பனை பார்த்தேன். அவனும் என்னைய பார்க்க கடைசியில ஒரே ஒரு க்ரூப் போட்டோ மட்டும் 100 பாத் கொடுத்து வாங்கினோம் :)
(ஹி ஹி இதுக்கும் கார்டூன் போதும்)

அன்று மாலை உலகிலயே மிகப்பெரிய நகைக்கடையான "ஜெம்ஸ் ஜூவல்லரி" க்கு சென்றோம். வைரம்,பவளம்,முத்து தங்கம்,வெள்ளி, யானை தந்தம் என அனைத்தினால் செய்யப்பட்ட நகைகள் கிடைக்கும். அதுவுமில்லாமல்  உள்ளே நுழைந்ததும் ஒரு குகைக்குள் ரயில் மூலம் சிறு பயணம் ஏற்பாடு செய்கிறார்கள். அந்த குகையில் பல்வேறு கனிமங்களை எவ்வாறு வெட்டி எடுத்து நகைகளாக ஆக்கப்ப்டுகிறது என விளக்கம் கொடுக்கிறார்கள். தாய்லாந்தின் வரலாற்றில் அணிகலண்களின் பெருமையும் காண்பிக்கப்படுகிறது. மிக அருமையான பயணம் அது. பல கோடி செலவில் செயற்கையாக செய்யப்பட்ட குகை அது. அதில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. :(பின்பு அவர்கள் வைரங்களை கொண்டு நகைகள் செய்யும் சிறிய தொழிற்சாலையும் காண்பிக்கப்படுகிறது. நேரடியாக அதை கண்ட போது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அங்கிருந்து சிரித்த முகத்துடன் உலகின் மிகப்பெரிய நகைக்கடைக்குள் பணிப்பெண் அழைத்துச்சென்றாள். வாங்குகிறோமோ இல்லையோ நமக்கு சிரித்த முகத்துடன் அனைத்து நகைகளைப் பற்றிய விளக்கம் கொடுக்கிறார்கள். வித்தியாசமான அனுபவம் அது. நண்பர்கள் சில வைர கற்களை வாங்கினார்கள். நாம எதுவும் வாங்கலைன்னா எப்படி? அதான் அடுத்த நாட்டாமை ஆகலாம்னு யானை தந்தத்துல செய்த இந்த டாலர் வாங்கிட்டேன் :) 
இனி பதிவுலகத்துக்கே நாட்டாமை நான் தான்டா.. ஏலே பசுபதி எட்றா வண்டிய

அன்று இரவே பேங்காங் நோக்கி பயணப்பட்டோம். காலையில் 8.30 க்கு கைடு வருவதாக போன் வந்தது. நேரம் தவறாமைக்கு ஜப்பானுக்கு அடுத்த படி இவர்கள் தான் போல. மிகச்சரியாக 8.30 மணிக்கு ஹோட்டல் லாபியில் வெயிட் செய்திருந்தார் கைடு.

ஆக்ஷ்னுடன் விளக்கும் கைடு, ஆர்வத்துடன் கேட்கும் நாங்கள்(வேற வழி!)

ங்கொய்யால கைடு என்னமோ நல்ல மனுசன் தான்.. ங்கொய்யால ஆனா..........

அவரை பத்தி அடுத்த பகுதியில சொல்றேன் :)

42 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்

[ராசா ஏமாத்திட்டீயேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா]

மின்னுது மின்னல் said...

:)

ஆயில்யன் said...

//பொடி நடையா நடந்து போனோம்.///


பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்னு பாடிக்கிட்டே யாரும் வர்லியா பாஸ்?

சிட்டுக்குருவி said...

நல்லா எழுதியிருக்கீங்க ஆதவன்

பயணக்கட்டுரை அருமை

ஆயில்யன் said...

//குப்பைத்தொட்டி ரொம்ப டீசெண்டாக்கும். ஸோ ஒன்லி கார்டூன்)///

இப்பிடியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ மெயிண்டெயின் பண்ணுங்க!!!

ஆயில்யன் said...

சொல்ல மறந்துட்டேன்.

//சிட்டுக்குருவி said...

நல்லா எழுதியிருக்கீங்க ஆதவன்//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)

நட்புடன் ஜமால் said...

உலகிலேயே மிகப்பெரிய நகைக்கடை


இந்த ப்லாகை ப்லாக் செய்யனும் ...

:)

சந்தனமுல்லை said...

very interesting!

ஆயில்யன் said...

சொல்ல மறந்துட்டேன்.

// நட்புடன் ஜமால் said...

இந்த ப்லாகை ப்லாக் செய்யனும் ...

:)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கிளியனூர் இஸ்மத் said...

ஆதவா.........உங்கள் சுற்றுலா உங்க வயசுமாதிரியே இளமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்..!

நாஞ்சில் பிரதாப் said...

செல்லாது செல்லாது...கார்ட்டூன் படம் போட்டாமா நாங்க படிக்க மாட்டோம் ஒரிஜீனல் போட்டோவைப் போடும்வரை பிரியாணி தின்னும் போராட்டம் நடத்துவோம்....

நாஞ்சில் பிரதாப் said...

// ”வாழ்க்கை ரவிக்கை(life jacket)” போட்டிருந்ததால் தப்பித்தோம்//

ங்கொய்யால...நீ என்ன தமிழ் பண்டிடா.... அப்படியே மொழிபெயர்த்து போடுற....

ரோகிணிசிவா said...

அது பூனை நகம் இல்லிய ,
அச்சோ , நான் தீபாவளி சீர் மாப்பிள்ளைக்குன்னு நினச்சனே

கண்ணா.. said...

//ஹோட்டலுக்கு எதிராகவே கடல் இருக்குறதால மறுநாள் காலையில பொடி நடையா நடந்து போனோம்//

ஏன் பொடி நடையா நடந்தே....பொடி மாஸ் நடையா நடந்து போனா கடலுக்கு போகாம கக்கூஸுக்கு போய்ருவியாக்கும்???

கண்ணா.. said...

//அங்க எங்களுக்கான அதிவேக விசைப்படகு காத்துக்கொண்டிருந்தது.//

காத்துட்டு இருந்த்தா??!! ஏன் நீங்கெல்லாம் போகலைன்னா... சூஸைட் பண்ணிக்குமாக்கும்....

கண்ணா.. said...

//ஹி ஹி நானே தான்//

ம்ஹும்...நம்பவே மாட்டோம்... இதுவும் இருட்டாவே இருக்கு....அந்த தாய்லாந்து பூனை வந்து சொன்னாத்தான் நம்புவோம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க்கை ரவிக்கையா.. ,:)

Gayathri said...

azhagaana pagirvu.think u had a gr8 time

வித்யா said...

பறக்கும்போது அப்படியே அந்தக் கயிற அறுத்துவுட்ருக்கனும்..

தியாவின் பேனா said...

நல்லா எழுதியிருக்கீங்க

அப்துல்மாலிக் said...

Great & fun trip

துளசி கோபால் said...

வாழ்க்கை ரவிக்கை!!!!!

தமிழ்ப்படுத்தறீங்க:-))))

நகைக்கடைன்னு சொன்னாலே எனக்கு அலர்ஜியாக் கிடக்கு:-)

டீஸண்ட்டான குப்பைத்தொட்டிக்கு ஒரு சபாஷ்!

R.Gopi said...

// ”வாழ்க்கை ரவிக்கை(life jacket)” போட்டிருந்ததால் தப்பித்தோம்//


***********

செம்மொழியாம் தமிழ் மொழி...

தலைவன் கேட்டா, அந்த நிமிஷமே.. (வேற என்ன அதே தான்... பூம்....பூம்..... ஊதியாச்சுலே....)

R.Gopi said...

என்னவே....

அது என்ன புலிப்பல்லா!!?? வேற என்னவோ சொல்லி ஏமாத்திறீயளா நீரு!!

மாதேவி said...

ஆகா...பாரசூட். :)

R.Gopi said...

//வித்யா said...
பறக்கும்போது அப்படியே அந்தக் கயிற அறுத்துவுட்ருக்கனும்.//

********

வாழ்க்கையில எதையுமே பெருசா ஆசைப்படுங்கன்னு ஜக்கி சொல்லியிருக்காராம்.... உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க....

கானா பிரபா said...

அட பாஸ்

இது எப்போ, இருங்க முதல் பதிவுகளில் இருந்து படிச்சுட்டு வர்ரேன்

விஜி said...

ரொம்ப லாங் ஷாட்ல எடுத்த போட்டா போட்டு நீதான்னு சொன்னா நாங்க நம்பனுமா?

விஜி said...

பஸ்ல வீடியோவே போட்டுட்டு நல்ல பையன்னு சீன் போட இங்க கார்ட்டூன் போடறையா? என்ன வில்லத்தனம்

விஜி said...

ஆமா கைடு லேடின்னே, இங்க வேற போட்டா போட்டிருக்கே, என்னமோ போ :)

விஜி said...

ஹிஹி அடுத்த நாட்டாமை.. குட் நெக்ஸ்ட் பஞ்சாயத்து உன் தலைமையில தான் :))

மணிஜீ...... said...

நான் 300 பாட்தான் கொடுத்தேன்..ஏமாந்துட்டீங்க

கோபிநாத் said...

:))

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

வாங்க பாஸ் :) நல்லா பாருங்க நீச்சல் உடையில அழகிகள் இருக்குற படம் இருக்கு பாருங்க.
------------------------------------
@மின்னல்
நன்றி மின்னல் :)
------------------------------------
@வாணி

நன்றி வாணி :)
-----------------------------------
@ஜமால்

அண்ணே அண்ணியோட அநத நகைக்கடைக்கு போயிறாதீங்க. பர்ஸ் கண்டிப்பா காலியாகிடும் :)
-----------------------------------
@சந்தனமுல்லை

வாங்க பாஸ். ரொம்ப நன்றி :)
-----------------------------------
@இஸ்மத்

நன்றி இஸ்மத் பாய் :)
-----------------------------------
@பிரதாப்பு

ஏலேய் வேணும்னா தனியா மெயில் அனுப்புறேன். பார்த்து வயித்தெறிச்சல் பட்டுக்கோ :)))
-----------------------------------
@ரோகிணி

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புலி எபிசோடு இனி தான் வரும். டோண்ட் ஒர்ரி :)
-----------------------------------
@கண்ணா

யோவ் அது புலியா பூனையான்னு அடுத்தடுத்த பாகங்களை பாரு :))
-----------------------------------
@முத்தக்கா

ஹிஹிஹி :)
-----------------------------------
@காயத்ரி

ம்ம்ம்ம்ம்ம் நன்றி சகோ :)
-----------------------------------
@வித்யா

நான் தான் வாழ்க்கை ரவிக்கை(life jacket) போட்டிருந்தேனே பவ் பவ் பவ் :)))
-----------------------------------
@தியாவின் பேனா

நன்றிங்க
-----------------------------------
@அப்துல் மாலிக்

நன்றி மாலிக் :)
-----------------------------------
@துளசி டீச்சர்

ஹி ஹி ரொம்ப்ப்ப்ப்ப படுத்திட்டேனா டீச்சர்? உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமோ? :))
-----------------------------------
@ஆர்.கோபி

ஹிஹி தலைவர் எனக்கு பாராட்டு விழாவே எடுத்திருவார் கோபி :) நன்றி
-----------------------------------
@மாதேவி

:))) நன்றிங்க மாதேவி
-----------------------------------
@கானாபிரபா

அவ்வ்வ் பாஸ் போனீங்க ஆளையே காணோம்? தாய்லாந்து மறுபடி போயிட்டீங்களா? :)
------------------------------------
@விஜி

மாதாஜி நீங்க இருக்குறது ஞாபகம் இல்லாம நாட்டாமை ஆகலாம்னு ஆசைப்பட்டுட்டேன். மன்னித்தருள்க :)
பை த வே மீ எப்பவும் நல்ல பையன் தான் :))
-------------------------------------
@மணிஜீ

ஆமா மணிஜீ. அங்க கரைக்கு வந்ததும் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அது 300 பாட் தான்னு. என்ன பண்றது கொடுத்துட்டோமே. கொஞ்சம் அசந்தா நல்லா ஏமாத்திடுறாங்க :(
--------------------------------------
@கோபி

நன்றி தல

siva said...

பயணக்கட்டுரை அருமை
நல்லா எழுதியிருக்கீங்க ஆதவன்

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்..nanum cholren
repeatu...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நாங்களும் ஒன்றாக சுற்றியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது உங்களின் பதிவும் , புகைப்படங்களும் அருமை . பகிர்வுக்கு நன்றி

கோமதி அரசு said...

பயணக்கட்டுரை அருமை ஆதவன்.

வித்யா said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_05.html

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

ஜிஜி said...

பயணக்கட்டுரை அருமையா இருக்குங்க.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அவர்களோடு கலக்க தயாரானோம்.
கலந்தியா?:))

சூப்பர் பயணக்கட்டுரை,இப்புடியா?டபுள் மீனிங்ல எழுதுவ?சரி எந்திரன் விம்ரசனம் போட்டு நீயும் ஒரு ஆத்து ஆத்த வேண்டியதுதானே?

Malan said...

டீசென்ட்டா கலக்குற சுறா !

Related Posts with Thumbnails