அல்கஸார் ஷோ - தாய்லாந்து

"உண்மையாலும் அது காப்ரேவா?"

"ஆமாம்" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு.


மனதுக்குள் கொண்டாட்டம் தான். "தாய் பெண்கள் மட்டும் நடனமாடுவார்களா? இல்லை வேற்று நாட்டு அழகிக்கூட்டமும் உண்டா?" நண்பன் சோழப்பேரரசு ரேஞ்சுல கேட்க.

நமுட்டு சிரிப்பு சிரித்த அந்த கைடு "ஆடுவது பெண்கள் அல்ல" என்றான்.

அடப்பாவி "அவனா நீயி?" என்ற கேள்வியுடன் ஒருத்தொருக்கொருத்தர் முகத்தை பார்த்துக்கொண்டோம். "ஆடுவது திருநங்கைகள்" என்றான். "அட!" என அனைவரும் ஆச்சர்யமானோம். நண்பனொருவன் “அண்ணே உலகமும் உருண்டை தான் லட்டும் உருண்டை தான். ஆனா லட்டை மட்டும் தான் சாப்பிட முடியும் உலகத்தை சாப்பிட முடியாது. அது மாதிரி நாம இதையெல்லாம் ரசிக்க முடியுமா?” என்று தூய ஆங்கிலத்தில் சொன்னான். கைடுக்கு ஒன்னும் புரியாமல் முழிக்க “ஆத்து மீனு கடலுக்கு போனா செத்திடும் கடல் மீனு குளத்துக்கு போனா செத்துடும்”னு தொடங்க அவனை வாயை அடைத்து அழைத்துக்கொண்டு உள்ளே போனோம். “ஙே”வை விட மோசமாய் அந்த டூரிஸ்ட் கைடு பார்த்துக்கொண்டே இருந்தான்.

அந்த ஷோவின் பெயர் "அல் கஸார்(alcazar)" சிறுது நேரத்தில் அங்கு கூடிய அழகிய திருநங்கைகள் கூட்டம் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த வண்ணம் இருந்தது.

ஆம் ஆச்சர்யங்களின் தொகுப்பு தான் இந்த “அல்கஸார் ஷோ”. முழுக்க முழுக்க திருநங்கைகள் கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி காண்போரின் கண்களை கட்டிப்போட்டு விடும். ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் நடத்தும் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு பாடல்களுக்கும் இடைவெளி இல்லாம மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு மூச்சாக நடத்தப்படுகிறது. ஒன்பது அழகிய நங்கைகள். பல்வேறு நடன குழுவினருடன் ஆரம்பிக்க படுகிறது அந்த நிகழ்ச்சி. ஒன்பது திருநங்கைகளும் ஒவ்வொரு ரத்தினங்களாக சித்திரிக்கபடுகிறதாம். கண்ணை கவரும் ஒரு பிரம்மாண்ட அரங்கம். அந்த நங்கைகளுடன் அந்த அரங்கமே ஒளிர்கிறது. பிரம்மாண்டம் என வெறும் வார்த்தைகளால் அடைத்து விட முடியாத ஒரு பிரம்மாண்டம் அது. ஒவ்வொரு ரத்தினங்களும் கடவுள்களாக/அரசர்களாக காண்பிக்கபடுவதாக தெரிகிறது. பின்பு வேறொரு சக்திகளால் சூறையாடப்படுவதாக காட்சிகள் வருகின்றன.

பின்பு அதே நவரத்தின அழகிகளின் தனித்தனியான நடனங்களோடு ஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளத்தோடு தொடர்கிறது நடனங்கள். இந்தோநேஷியா,தாய்லாந்து, சீனா, இந்தியா, ஜப்பான் என இது வரை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இன்னும் சில நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்ணியமான கலாச்சார நடங்கள் அரங்கேறின. நிற்க....

ஒவ்வொரு பாடல்களுக்கும் எந்த ஒரு இடைவெளிகளும் இல்லை. பார்வையாளர்களுக்கு சிறிதும் அலுப்பு தோன்றாத வண்ணம் மிக வேகமாக அரங்கேற்றப்பட்டது. வெளியரங்கத்தில் நடனமாடும் நேரம் திரைமறைவில் உள் அரங்கத்தின் கட்டமைப்பு மாற்றப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அரங்கமும் பிரம்மிப்பூட்டுகிறது. அனைத்தும் பிரம்மாண்டம். வண்ணமயம். கண்கள் இமைக்க மறந்த காட்சிகள் அவை. இதில் அரை நிர்வாண பாடல்களும் இடம்பெறுகிறது. சிறுதும் கூச்சமில்லாமல் குழந்தைகளுடன் கண்டு ரசிக்கும் பாடல்களாக இருக்கிறது.ஆடல்களில் உடல் அசைவில் நேர்த்தியும் ஒழுங்கும், ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் உள்ள தொடர்பும் மற்றும் நேரமும் என அந்த நங்கைகள் கடைப்பிடித்திருப்பவையை காணும் போது நம்மூர் “கெமிஸ்ட்ரி”யாவது மண்ணாங்கட்டியாவது என எண்ணத்தோன்றுகிறது. 10/15 நிமிடங்களில் ஒப்பனைகளை மாற்றி அடுத்த ஆட்டத்திற்கு புத்தணர்ச்சியோடு தயாராகி விடுகிறாள் ரத்தின திருநங்கை. கொடுத்த 600 பாத் பணத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒரு திருப்தியான நடனங்களை காண முடிகிறது.

ஒரு முழு திரைப்படத்தை கண்ட திருப்தியோடு மக்கள் வெளியேறுகின்றனர். வெளியே அத்திருநங்கைகளுடன் பணம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். பண்ம் கொடுத்து நிறைய பலர் எடுத்துக்கொண்டனர்.


காப்ரே பற்றிய ஒரு தவறாத எண்ணம் அனைவருக்கும் முடிவுக்கு வந்திருந்தது. திருநங்கைகளுக்கான மரியாதை வியப்பளித்தது அனைவருக்கும்.

“நாளைக்கு எங்க போறோம்?”என்றேன் கைடுடன்

“கோரல் ஐலேண்ட். காலையில ரெடியாகிடுங்க” என்றான் நமுட்டு சிரிப்புடன் கண்ணை சிமிட்டியபடி. அச்சிரிப்பிற்கான அர்த்தம் மறுநாள் புரிந்தது :) கோரல் ஐலேண்ட் காத்திருந்தது எங்களுக்காக...

தொடரும்..

(கடைசி போட்டோவை தவிர அனைத்தும் எங்களால் எடுக்கப்பட்டதே)

26 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Gayathri said...

புகைப்படங்களும் , வர்ணனையும் அருமை..நல்ல ஜாலி ட்ரிப் தான் போல...குட்

கோபிநாத் said...

\\என்று தூய ஆங்கிலத்தில் சொன்னான். கைடுக்கு ஒன்னும் புரியாமல் முழிக்க “\\

அடேய் ஆதவா நாம பேசுற தூய ஆங்கிலம் நாமக்கே புரியாது....இதுல எப்படி கைடுக்கு புரியும்..;))

ஆமா படங்கள் போடுவதில் மிகவும் கவனமாக இருக்கிறாய் போல் உள்ளது ;)

☀நான் ஆதவன்☀ said...

@காயத்ரி

ஆமாங்க காயத்ரி. உண்மையிலயே நல்ல ட்ரிப் :)
-------------------------------------
@கோபிநாத்

தல நான் தான் கோக்குமாக்கா பேசுவேன். பசங்க எல்லாம் நல்லாதான் பேசுவாங்க. :)

நாமெல்லாம் எழுதுற எழுத்துக்கு படத்தை போட்டு தான் ஈக்வல் பண்ண முடியும் ஆமா :))

Anonymous said...

//ஒன்பது திருநங்கைகளும் ஒவ்வொரு ரத்தினங்களாக சித்திரிக்கபடுகிறதாம்//

நவரத்தினங்கள்.

நாஞ்சில் பிரதாப் said...

//அடேய் ஆதவா நாம பேசுற தூய ஆங்கிலம் நாமக்கே புரியாது....இதுல எப்படி கைடுக்கு புரியும்..;))//

அதானே...... அவன்கிட்ட தப்பா பேசுனாலும் அவனுக்கு தெரியப்போறது கிடையாது...
இது தூய ஆங்கிலம் வேற பேசிருக்காய்ங்க...கொடுமைடா சாமி.

அடுத்த ஐலேண்ட் போட்டோவாவது கண்ணுக்கு குளிச்சியா போடுய்யா...:))

கவிதா | Kavitha said...

நல்ல பகிர்வு... ஆட்டத்தை மிகவும் ரசித்து எழுதி இருக்கீங்க.. வீடியோ எடுக்கலையா? எடுத்து இருந்தால் போடவும்..

வித்யா said...

படங்கள் நன்றாக இருக்கிறது..

☀நான் ஆதவன்☀ said...

@சின்ன அம்மணி

அதே அதே :)
------------------------------------
@பிரதாப்பு

தீவு நாங்கெல்லாம் சேர்ந்து எடுத்த அரை நிர்வாணப்படம் இருக்கு. போடுறேன் இரு :)
------------------------------------
@கவிதாக்கா

வீடியோ இருக்குக்கா. ஒன்னே ஒன்னு எடுத்தோம். போடப்பார்க்கிறேன்
-----------------------------------
@வித்யா

நன்றி வித்யா :)
-----------------------------------

சும்மாவே அவனவன் வாய்க்குள்ள கத்திய வச்சு சுழட்டி வாங்கடான்னு கூப்பிட்டாலும் நம்ம கடைக்கு ஆள் வராது. இதுல ஆர்வகோளாறுல ஞாயித்துக்கிழமை பதிவை போட்டுட்டு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கேன் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படங்கள் நல்லா வந்திருக்கு..
ஓவர் தத்துவமா இருக்கே ப்ரண்டோடது .. :)

siva said...

:)

அப்துல்மாலிக் said...

good post, keep on continue

Anonymous said...

பயம் விட்டுப்போச்சு :)))

ஹுஸைனம்மா said...

//சும்மாவே அவனவன் வாய்க்குள்ள கத்திய வச்சு சுழட்டி வாங்கடான்னு கூப்பிட்டாலும் நம்ம கடைக்கு ஆள் வராது. இதுல ஆர்வகோளாறுல ஞாயித்துக்கிழமை பதிவை போட்டுட்டு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கேன்//

அல்லோ, என்னாதிது புலம்பல்? நாயித்துக் கெழமையானாலும் 12 பதில் கெடச்சிருக்கே, சந்தோசப்படாம... பி.ப.வான நீங்களே இப்படிச் சொன்னா, நாங்கல்லாம்..? (அந்த தெய்வத்துக்கே... எஃபெக்டில் படிக்கவும்!!)

சேட்டைக்காரன் said...

படங்களும், இடுகையும் நீங்கள் சொல்லியிருக்கிற விதமும் மிக அருமை! தூள் கிளப்பிட்டீங்க!

venkat said...

அருமை

கலக்கல் கலந்தசாமி said...

மிகவும் நேர்த்தியான வர்ணனை..படங்கள் பிரமாதம்..
சீக்ரம் அடுத்த பார்ட் போடுங்க பா

வாழ்த்துக்கள்

R.Gopi said...

ஹலோ...

ஹல்லல்லோ....

போனோமா, ஊர சுத்தி பாத்தோமா, பதிவு போட்டோமான்னு இல்லாம, என்னா தத்துவம்...... தத்துவம்னு கடலை உருண்டை, உலக உருண்டைன்னு ஸ்மால் ஃபெலோஸ் மாதிரி பேசிட்டு....

அந்த மீன் தத்துவத்துல சொல்லாம விட்டது :

அது ஆத்து மீனோ, கடல் மீனோ, மவனே புடிச்சு, வறுத்து, சுட சுட உள்ளார தள்ளுலே....

Anonymous said...

இப்படியும் ஒரு கேப்ரேவா??
புதியதான தகவல்.

கண்ணா.. said...

//கோரல் ஐலேண்ட் காத்திருந்தது எங்களுக்காக//

ங்கொய்யால.... நீயும் எப்படா இலக்கியவாதி மாதிரி பேச ஆரம்பிச்சே....

☀நான் ஆதவன்☀ said...

@முத்தக்கா

ஹி ஹி நம்ம ப்ரண்டுகளாச்சேக்கா :)
-------------------------------------
நன்றி சிவா :)
-------------------------------------
நன்றி அப்துல்மாலிக். மெயில் அனுப்புறேன் பாருங்க.
-------------------------------------
@அனானி

இப்படி எல்லாம் டிசைன் டிசைனா வந்து பயமுறுத்தப்படாது ஆமா :))
-----------------------------------
@ஹூஸைனம்மா

நான் பிரபலமா? ம்க்கும்... அமீரக பதிவரை விட்டு கொடுக்க மாட்டீங்கன்றது சரியா தான் இருக்கு ஹூஸைனம்மா :)
-----------------------------------
நன்றி சேட்டை :)
-----------------------------------
நன்றி வெங்கட்
-----------------------------------
நன்றி கந்தசாமி :)
-----------------------------------
நன்றி கோபி :))
-----------------------------------
ஆமாங்க இந்திரா. வாய்ப்பு கிடைச்சால் பாருங்க :)
-----------------------------------
@கண்ணா

ஹி ஹி நாலைஞ்சு புக் போட்டா ஒத்துக்கிறயா?

கோமதி அரசு said...

திருநங்கைகளின் நடனப் படம் நல்லா இருக்கு.


திருநங்கைகளை ரத்தினமாய் மதிப்பது பாராட்டப் பட வேண்டிய நல்ல விஷயம்.

sweatha said...

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

தியாவின் பேனா said...

படங்கள் ,வர்ணனை சூப்பர்

ஆனந்தி.. said...

//“ஙே”வை விட மோசமாய் அந்த டூரிஸ்ட் கைடு பார்த்துக்கொண்டே இருந்தான்.//
பாஸ்..நீங்க கட்டாயம் ராஜேந்திர குமார் நாவல் படிப்பிங்க..கரெக்டா..??
நல்லா இருந்தது உங்களோட எழுத்து நடை...

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


5 important blogs for bloggers

http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

add subscribe via email gadget

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

துளசி கோபால் said...

படங்களும் பதிவும் அட்டகாசம்!!!!

நல்லாத் தேறிட்டீர்:-))))

Related Posts with Thumbnails