தாயகம் மறக்க வைத்த தாய்லாந்து

கோவா? அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து நின்ன இடம் "தாய்லாந்து". (ஹி ஹி எல்லாம் ஒரே குட்டையாச்சே). இதில் இதைத் தேர்ந்தெடுக்க மிக முக்கிய காரணம் விசாவை அங்கு சென்று பெறலாம்.(on arrival visa)

ஒவ்வொரு ஈத் திருநாள் விடுமுறைக்கும் அமீரகத்திற்குள்ளாகவோ, வளைகுடாவிற்குள்ளாகவோ சுற்றி அலுத்து விட்டதால் இந்த தடவை தாய்லாந்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தோம். "தாய்லாந்தா? கலக்குற மச்சி.........." என ஆரம்பிக்கும் முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாய்லாந்து கோவில்களை காண ஆர்வமிகுதியால் மட்டுமே இந்த பயணம். (அப்படின்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க?)

அமீரகத்தில் தாய்லாந்து செல்லவும் சுற்றலாவை மிக அருமையாக ஒருங்கிணைக்கவும் எந்த டிரவால்ஸ் சிறந்தது என ஆராய்ந்து, பணம் அதிகம் போகாமல் மிக அருமையாக ஒருங்கிணைத்த பெருமை நண்பர்களையே சேரும். நான் வெறும் "டேபிளை இங்க நகர்த்து, அந்த சொம்பை ஓரமா வை, காலிங் பெல் அடிக்குது பாரு" என்ற லெவலுக்கான வேலைகள் மட்டுமே செய்தேன். கூடுதலாக துளசி டீச்சர், கானா பிரபா, பினாத்தலார் என ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் ஆலோசனையைப் பெற்று நண்பர்களிடம் தெரிவித்ததோடு சரி.

கதார் ஏர்வேஸில் துபாய்-கதார்-பேங்காங்க் என பயணம் முடிவானது. பயணம் இனிதே தொடங்கியது. கிட்டதட்ட ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு கண்கள் கசக்கிய ஒரு அழகிய காலைப் பொழுதில் விமானத்திலிருந்து தாய்லாந்தை காண முடிந்தது.

வளைந்தோடும் ஆறுகளிடையே பேங்காங்க் நகரம். சிறிது நேரத்தில் பச்சை பசேல் வயல்வெளி. கலந்து கட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தாய்லாந்து. பல நிமிட சுற்றலுக்குப் பிறகு “சுவர்ணபூமி” விமான நிலையத்திற்கு வந்தது விமானம். துபாய் விமானநிலையத்திற்க்கு சற்றும் குறைவில்லாத விமான நிலையம். “அந்நியன்” படத்தில் “கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடல் இங்கும் எடுக்கப்பட்டிக்கிறதாம். நல்லது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விசா எடுப்பதற்காக வழிகாட்டி பலகையின் உதவியோடு சென்றோம். 10 நிமிசத்தில் விசா ரெடி!

சற்று நேரம் விமான நிலையத்தை நோட்டம் விட்டவாறு பொறுமையாக வெளியேறினோம். எங்கள் பெயர் தாங்கிய பலகையை தாங்கியவாறு ஒரு அழகிய தாய் பெண்மணி முகமெங்கும் சிரித்த முகத்தோடு காத்திருந்தார். இந்த சிரிப்பை பிறக்கும் போதே தாய்பாலுடன் தாய் புகட்டி விடுவாறா எனத் தெரியவில்லை. என் ஐந்து நாள் பயணத்தில் தாய்லாந்து மக்களிடையே சிரிப்பை எந்த சூழ்நிலையிலும் காண முடிந்தது! கலைநயமும் நவீனமும் கலந்த விமானநிலையம். அப்பெண்மணி எங்களை அழைத்து முன்பே போட்டிருந்த அட்டவணைப்படி “பட்டாயா” நகரத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்திருந்தார்.

வண்டி பட்டாயா நோக்கி புறப்பட்டது. இரண்டு மணி நேர பயணம். வேடிக்கையும், உறக்கமும், கேலியும், உற்சாகமும் என இரண்டு மணி நேர பயணம் இரண்டு நிமிடமானது. பட்டாயா நகரமும் வந்தது.

ஹோட்டலில் செக் இன் வேலையை முடித்தோம். அவர்களது நொறுங்கிய ஆங்கிலம் பாடாய் படுத்தியது. இருந்தாலும் அதுவும் இல்லையென்றால் தூர்தஷன் ஒன்றரை மணி செய்திகள் நிலைக்கு ஆளாகியிருப்போம்.
14வது மாடி. அதுவும் கடற்கரையை பார்க்கிற மாதிரியான அறை. என்னதான் அமீரகத்தில் சுதந்திரமாக இருந்தாலும் இங்கு வந்ததிலிருந்து ஒரு சுதந்திர உணர்வு. 5 நாட்கள் அலுவல்,நெட்,போன் என எந்த தொல்லையும் இல்லாமல் நான் நானாக இருக்க வேண்டிய நாட்கள்.


முதல் பிரச்சனை இப்போது தான் ஆரம்பமானது. நல்ல பசியில் இருந்தோம். ஹோட்டலில் லஞ்ச்(பேக்கேஜில்) கிடையாது. சரி காலாற நடந்து ஏதாவது ஒரு இந்தியன் ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என எண்ணினோம். ஹோட்டல் ரிசப்ஷனில் கேட்டு “அலிபாபா” என்ற இந்தியன் ரெஸ்டாரெண்ட் அட்ரஸை வாங்கினோம். வெளியில் வந்தது தான் தாமதம் டாக்ஸி காரர்கள் சுற்றிக் கொண்டார்கள். “அலிபாபா” போகனும் என செய்கையிலும் மொழியிலும் எடுத்துரைக்க “100 பாத்” என்றார் டாக்ஸி டிரைவர். எல்லாவற்றிக்கும் பேரம் பேசு என அறிந்தவர்கள் சொன்னதின் பேரில் பேரம் பேச... எதுவும் எடுபட வில்லை. ஐந்து விரலை மடக்கி மடக்கி அவன் ஏதோ சொல்ல. குத்தத்தான் வருகிறானோ என பயந்தால் மொத்தம் ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கிறதாம் அந்த ஹோட்டல். சரி இருக்கிற பசியில் பேரம் வேலைக்கு ஆகாது என டாக்ஸியில் அமர்ந்தோம்.

ஏறி இரண்டு அடி கூட நகர்ந்திருக்காது கண்ணெதிரே “மகாராஜா” இந்தியன் ஹோட்டல், சிறிது தூரத்தில் “சவுத் இந்தியன்” ஹோட்டல், இன்னும் சிறிது தூரத்தில் பாம்பே ஹோட்டல்... பவ்வ்வ் ஆகிட்டோம். சரி “அலிபாபா”விற்கே செல்லலாம் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே அலிபாபா வந்து விட்டது. அரை கிலோ மீட்டர் கூட கிடையாது. அடப்பாவிகளா இப்பவே ஏமாந்துட்டோமா? இனி என்னென்ன நடக்க போகுதோ என இறங்கினோம்.

 ஹோட்டலின் முன் ”நண்பேன்டா” :)
ஆனால் முதலும் கடைசியமாக ஏமாந்தது அது. அதன் பின் நடந்ததெல்லாம் ருசிகரம். அலிபாபா முன்பு இறக்கிவிட்டாலும்,வெளியில் இருந்த மெனு கார்டை பார்த்துவிட்டு பிடிக்காமல் அதற்கு அடுத்திருந்த மற்றொரு ஹோட்டலில் நுழைந்தோம். இங்கே பல ஹோட்டலில் இருக்கும் நல்ல பழக்கம் ஹோட்டலின் வெளியேவே மெனு கார்டை வைத்திருக்கிறார்கள். அதைப்படித்து பிடித்திருந்தால் உள்ளே செல்லலாம்.

அனைவரும் உள்ளே செல்ல ஆயத்தமான போது ஒரு தாய்லாந்து காரன் மட்டும் பின்னால் இருந்து நச்சரித்துக்கொண்டிருந்தான். அனைவரையும் போகச்சொல்லி விட்டு நான் அவனிடம் “என்னேடாஆஆஆ” என கேட்க அவன் கொடுத்த விளக்கத்தில் பதிலேதும் கொடுக்காமல் அங்கிருந்து நழுவினேன். பசங்க “யார்டா மச்சி அது?” என கேட்க “தாய்மாமாடா மச்சி” என்றேன்.

”அடப்பாவி உனக்கு இங்க தாய்மாமாவா? அதுவும் சப்ப மூக்கா இருக்கேடா மச்சி? உண்மைய சொல்லு யார் அவன்?”  நச்சரித்தனர்

”அடப்பாவிகளா அந்தாளு இந்த தாய்லாந்தோட “மாமா”டா அதான் சுருக்கி தாய்மாமான்னேன்.

அப்போது ஆரம்பித்த தாய்மாமா தொல்லைகள் பட்டாயா நகரம் வெளியேறும் வரை விடவில்லை :)

அன்று இரவு அட்டவணைப்படி “காப்ரே” நடனம் பார்பதாக இருந்தது. காப்ரேவா?????? என ஜொள்ளு விட்டபடி இரவு 8 மணி வரை காத்திருந்தோம்.....

(தொடரும்..)
படங்கள் அனைத்தும் எங்களால் எடுக்கப்பட்டவையே.

47 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கோபிநாத் said...

டேய் நீ இந்த படத்தை இன்னும் முடிக்கவேல்லியா....இதுல தொடரும் வேறயா...நல்லாயிருடா சாமீ ;))

Chitra said...

கலக்கல் படங்களும் இடுகையும்..... seekkiram thodarungal.

கார்த்திகைப் பாண்டியன் said...

படாதபாடு பட்டாக்கூட பாலிஷா பயணக்கட்டுரை எழுதுற பாண்டிய வள்ளல் யாருன்னு தெரியுமா?

இன்னும் உங்க கிட்டயிருந்து நிறைய எதிர்பாக்கிறோம் ஆதவன்..:-)))

புன்னகை தேசம். said...

எங்க ஊர்க்கு வந்தீங்களா?

சிறப்பா எழுதுங்க... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

hotel நல்லா இருக்கு அங்க இருந்து வ்யூவும் அருமை..

ஹோட்டல் ஒவ்வொன்னையும் பாத்துக்கிட்டே தாண்டிப்போனப்ப ஆன பவ் முகங்களை நினைச்சா :)))

Anonymous said...

//அமீரகத்தில் சுதந்திரமாக இருந்தாலும் இங்கு வந்ததிலிருந்து ஒரு சுதந்திர உணர்வு.//
என்னா பில்டப்பு

மாயவரத்தான்.... said...

தாய்லாந்துக்கு வந்திட்டு அட்டெண்டன்ஸ் கொடுக்காம எஸ்கேப் ஆனதுல அடுத்த ஆளா?

கானாபிரபா, பினாத்தலாரைச் சொல்லணும்!

Anonymous said...

//ஹோட்டல் ரிசப்ஷனில் கேட்டு “அலிபாபா” என்ற இந்தியன் ரெஸ்டாரெண்ட் அட்ரஸை வாங்கினோம்//

ரிசப்ஷன்லயே சிடி மேப் குடுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே

துளசி கோபால் said...

அவர் அஞ்சு மீட்டர்ன்னு சொன்னதை எதுக்கு நீங்களாவே கிலோ சேர்த்து நினைச்சுக்கிட்டீங்க??????

ஆயில்யன் said...

//தாய்லாந்துக்கு வந்திட்டு அட்டெண்டன்ஸ் கொடுக்காம எஸ்கேப் ஆனதுல அடுத்த ஆளா?///

நான் அப்பவே சொன்னேன் பாஸ் எங்க அண்ணன் அங்கே இருக்காரு யூ டோண்ட் ஒர்ரின்னு பட்ஷே எனக்கென்னமோ பினாத்தல் & கானா பிரபாவை நீங்க கவனிச்ச கவனிப்புல பயபுள்ள அலர்ட் ஆகிடுச்சோன்னு டவுட்டு :))))

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

//அமீரகத்தில் சுதந்திரமாக இருந்தாலும் இங்கு வந்ததிலிருந்து ஒரு சுதந்திர உணர்வு.//
என்னா பில்டப்பு//

ஆமாம் அம்மிணி பயபுள்ள லைட்டாத்தான் பில்ட்-அப் கொடுத்திருக்கு!

கை கால் சங்கிலிகள் சிதறுண்ட எல்லா பக்கமிருந்தும் சிறகுள் முளைத்து பயணித்ததுபோல - அப்படின்னு இன்னும் கூட கொஞ்சம் டெரரா போயிருக்கலாம்!

ஆயில்யன் said...

//நான் அவனிடம் “என்னேடாஆஆஆ” என கேட்க அவன் கொடுத்த விளக்கத்தில் பதிலேதும் கொடுக்காமல்//

அது எப்பிடி அவன் உங்களை பார்த்து மட்டும் கேட்டான்!

நீங்க எவ்ளோ பெரிய வித்வான் உங்களை பார்த்து அவனுக்கு எப்படி கேக்க மனசு வந்துச்சு பாஸ் ? :))

சேட்டைக்காரன் said...

கலக்குறீங்க தல! ப்ளீஜ் கன்டின்யூ! :-)

நாஞ்சில் பிரதாப் said...

//கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடல் இங்கும் எடுக்கப்பட்டிக்கிறதாம்.//

எலே...அப்படின்னு எவனோ ஏமாத்திருக்கான்....அந்தப்பாட்டு மலேசியாவுல எடுத்தது மச்சி...

நாஞ்சில் பிரதாப் said...

//ஒரு தாய்லாந்து காரன் மட்டும் பின்னால் இருந்து நச்சரித்துக்கொண்டிருந்தான். //

புரிஞ்சுப்போச்சுய்யா:) அதான் அப்பவே சொன்னனேன் தாய்லாந்து ஒரு "மாதிரியான" நாடுன்னு...
நீ நல்லபுள்ளைன்னு எனக்குத்தெரியும்டே...:))

வித்யா said...

இங்கேயுமா??

பஸ்ல வாங்கினது பத்தாதா? பீ கேர்புல். நான் உங்களைத்தான் சொல்றேன்:)))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்... தொடரை நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க.

தொடருங்கள்..

பின்னோக்கி said...

தயவு செய்து காபெரே நடனத்தில் எடுக்கப்பட்ட போட்டாவை போட்டுவிடாதீர்கள்.

என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்ற அரசியல்வாதியின் கோரிக்கை போன்றது மேலே உள்ள என் கோரிக்கை.

வினோத் கெளதம் said...

//தாய்லாந்து கோவில்களை காண ஆர்வமிகுதியால் மட்டுமே இந்த பயணம்.//

கோவில்களை பார்கிறதுக்கு போனியா இல்லை ''எதயாச்சும்'' கோவில் கட்டி கும்பிட போனியா..''இயற்கை அழகை'' சொன்னேன்ப்பா..

வினோத் கெளதம் said...

ஆமா உனக்கு மட்டும் எப்படி உங்க ஆபீஸ்ல அடிக்கடி லீவ் கிடைக்குது..

ஹுஸைனம்மா said...

//தாயகம் மறக்க வைத்த தாய்லாந்து//

அந்தளவு ஆகிப்போச்சா???!!!

Vani said...

அழகான படங்களுடன் பயணக்கட்டுரை அருமை

தொடருங்கள்...

கண்ணா.. said...

ஏற்கனவே தாய்லாந்தில் குட்டியோட இருக்கற போட்டோவை ஏற்கனவே போட்டாச்சுல்ல..... இன்னும் நிறைய குட்டிங்க போட்டோ இருக்கு போல...சரி சரி ஒவ்வொண்ணா வெளிவிடு நாங்களும் வெயிட்டுறோம் :)

கண்ணா.. said...

இந்த தொடர்ல பூனைக்குட்டியை எப்பிடி புலிக்குட்டியா கிராபிக்ஸ் பண்ணீங்க எங்க பண்ணீங்கற டிடெயில்ஸ்ம் வரும் அல்லவா.....

அல்லது நீயும் அபூர்வ சகோதரர்களில் கமல் டெக்னிக்கை வெளியே சொல்லாத மாதிரி சொல்ல போறதே இல்லையா?

கைப்புள்ள said...

//http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI-9JjIKi6I/AAAAAAAABOI/QYJZy-TXPCg/s1600/2219095_n.jpg//

இந்த படத்துல இருக்கற மூனு பேருல யாரு ஆட்டுக்குட்டி...சே...ஞானக்குழந்தை ஆதுக்குட்டி? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.

கைப்புள்ள said...

//தாய்லாந்து கோவில்களை காண ஆர்வமிகுதியால் மட்டுமே இந்த பயணம். (அப்படின்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க?)
//

அதான் படங்களைப் பாத்தாலே தெரியுதே பக்தி பழம்னு :)

கைப்புள்ள said...

//”அடப்பாவிகளா அந்தாளு இந்த தாய்லாந்தோட “மாமா”டா அதான் சுருக்கி தாய்மாமான்னேன்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...

//தாய்லாந்தோட “மாமா”டா அதான் சுருக்கி தாய்மாமான்னேன்./

நல்ல விளக்கமப்பா??? :) :)

Gayathri said...

ரொம்ப என்ஜாய் பன்னிருகீங்க போல..
அதும் அந்த டாக்ஸி டிரைவர் ஹி ஹி ஹி

வால்பையன் said...

சர்வீஸெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா!?

☀நான் ஆதவன்☀ said...

@கோபி

திருவொற்றியூர்ல இருந்து திருவான்மையூர் போனாலே பதிவு போடுற உலகத்துல இதுக்கெல்லாம் சும்மா இருக்க முடியுமா தல :)
-------------------------------------
@சித்ரா

நன்றிங்க :)
----------------------------------
@கா.பா

நண்பா பப்ளிக் பப்ளிக் :)
அடுத்தடுத்து போட்டுறேன்
-----------------------------------
@புன்னகை தேசம்

ஆமாங்க. அருமையான ஊர்ல தான் இருக்கீங்க நீங்க. கொடுத்து வச்சவங்க :)
------------------------------------
@முத்தக்கா

இது பட்டாயாவுல தங்கின ஹோட்டல்க்கா. பேங்காங்க்ல வேற ஹோட்டல்ல தங்கினோம்
-------------------------------------
@சின்ன அம்மணி

:)) வாங்க. ரிசப்ஷன்ல தான் அலிபாபவை பத்தி சொல்லி மேப் கொடுத்தான். கொடுத்தவன் இங்கிருந்து டாக்ஸி பிடிச்சு தான் போக முடியும். நடக்க முடியாதுன்னான். ஆனா நடக்குற தூரம் தான் இருந்துச்சு :)
-------------------------------------
@மாயவரத்தான்

வாங்க மாயவரத்தான். ஆயில்ஸ் உங்களை பத்தி சொன்னாரு. ப்ரோகிராம் எல்லாம் போட்டு முடிச்சுட்டோம். சரி அங்க வந்து உங்களுக்கு மெயில் பண்ண நினைச்சேன். ஊரை சுத்துறதுல அதை மறந்துட்டேன் :)
--------------------------------------
@துளசி டீச்சர்

டீச்சர் அவன் அஞ்சு கிலோமீட்டர் தான் சொன்னான். பயபுள்ள ஏமாத்திடுச்சு :)
------------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் நீங்க சொன்னபடி மாயவரத்தானை தொடர்பு கொண்டிருந்தா இன்னும் சிறப்பா நடந்திருக்கும் தான். பட் இனி மறக்க மாட்டேன் :)
--------------------------------------
@சேட்டைகாரன்

நன்றி சேட்டை :)

☀நான் ஆதவன்☀ said...

@பிரதாப்பு

ஏலேய் அந்த பாட்டு இங்கேயும் மலேஷியாவுலம்னு ரெண்டு இடத்துல எடுத்ததாம் :) அப்புறம் நான் நல்ல பையன்னு உனக்கும் நீ நல்ல பையன்னு எனக்கும் தெரியுமே :)
-------------------------------------
@வித்யா

ஹி ஹி பல கோடி ரசிகர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க :))) பட் இங்க நோ நோ டேமேஜ் ஆமா :)
------------------------------------
@செந்தில்வேலன்

நன்றி செந்தில்வேலன். நிச்சயம் தொடர்கிறேன்
------------------------------------
@பின்னோக்கி

ஹி ஹி கண்டிப்பாக போடப்படமாட்டாதுங்க (ஒரு தமிழக அரசியல் வாதியின் வாக்குறுதியா இதை எடுத்துக்கங்க) :))
------------------------------------
@வினோத்

நீ இங்க வாலே எல்லாம் டீடெயிலா பேசுவோம் :)
-------------------------------------
@ஹூஸைனம்மா

அவ்வ்வ்வ்வ் இந்த ஒரு கேள்வியில பொதிஞ்சிருக்க அர்த்தங்களை பார்க்கும் போது...அவ்வ் ஹூஸைனம்மா மீ பாவம் :)
------------------------------------
@வாணி

நன்றி வாணி :)
------------------------------------
@கண்ணா

தல சஸ்பென்ஸை உடைக்காததீங்க..அதெல்லாம் தொடர்ந்து வரும் பதிவுல விளக்கமா என் வீர தீர செயல்கள் வரும் படிங்க :)
------------------------------------
@கைப்புள்ள

அண்ணே கன்னங்கரேல்னு இருக்குறது தான் நானு :) இதுல டவுட் வரலாமா :)
--------------------------------------
@அப்துல் மாலிக்

நன்றிங்க :)
------------------------------------
@காயத்ரி

நன்றி காயத்ரி
-----------------------------------
@வால்பையன்

அவ்வ்வ்வ்வ் தல ஒய் திஸ் கொலவெறி... நோ கமென்ட்ஸ் :)

ஜெஸிலா said...

இன்னும் தொடரலையா?

மாதேவி said...

அழகிய படங்களுடன் தாய்லாந்து.

அபி அப்பா said...

\\அது எப்பிடி அவன் உங்களை பார்த்து மட்டும் கேட்டான்!

நீங்க எவ்ளோ பெரிய வித்வான் உங்களை பார்த்து அவனுக்கு எப்படி கேக்க மனசு வந்துச்சு பாஸ் ? :))\\

நான் கேட்க இருந்த போட இருந்த பின்னூட்டம் இது என்பதை இங்கே ஜொள்லிக்கிறேன்.

Anonymous said...

ஓ தாய்லாந்தா?

இப்படிக்கு
நான் ஆதவன்.

தாரணி பிரியா said...

பயணக்கட்டுரை எழுதற பாண்டி வள்ளல் :)

கலக்கல் கலந்தசாமி said...

கலக்கல் பயனம்முன்னு சொல்லுங்க
தொடரை படிக்க அவா -சீக்கரம் போடுங்க


உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி

siva said...

:)))

siva said...

என்னா பில்டப்பு--hahaha

roja said...

:)))))

R.Gopi said...

ஸோ........

இனிமே தான் மெயின் ”மேட்டர்ஸ்”லாம் வர இருக்கு....

சீக்கிரம்பா........

R.Gopi said...

//நாஞ்சில் பிரதாப் said...
//கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடல் இங்கும் எடுக்கப்பட்டிக்கிறதாம்.//

எலே...அப்படின்னு எவனோ ஏமாத்திருக்கான்....அந்தப்பாட்டு மலேசியாவுல எடுத்தது மச்சி..//

********

பிரதாப்.... மலேஷியா ஏர்போர்ட் உள்ளே எடுக்கப்பட்ட ஒரே பாடல் காட்சி என்று படித்ததாக நினைவு...

gunalakshmi said...

neeng oor suthina vidhamum adha padam pudichirukka vidhamum nalladhan irukku. ippadiye oc trippa continue pannunga ALL THE BEST

gunalakshmi said...

neeng oor suthina vidhamum adha padam pudichirukka vidhamum nalladhan irukku. ippadiye oc trippa continue pannunga ALL THE BEST

கோமதி அரசு said...

//தாய்மாமாடா//


நல்ல நகைசுவை.

Part Time Jobs said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Related Posts with Thumbnails