சேட்டன் அப்டேட்ஸ் - பஞ்சாமிர்தம்

"சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது" ஏதோ ஒரு டிவியில் சிநேகா பாடிக்கொண்டிருந்தார். சேட்டன் கையில் சொடுக்கு போட்டுகொண்டே "தம்பி இ பெண்ண அறியோ?" என்றார். "என்னது தெரியுமாவா? இந்த கேள்விய மட்டும் வேற எவனா கேட்டிருந்தா நடக்குறதே வேற" என்றேன்.(வேறு எவன் கேட்டிருந்தாலும் என் பதில் இதுதான் என்பது வேறு விசயம்).

"ஏன் தம்பி?"

"சேட்டா இது தமிழ் நடிகை. சார்ஜால தான் பிறந்ததும் படிச்சதும். தெரியுமா?" என்றேன். சேட்டன் டென்சனாகி விட்டார். "தம்பி அவ மலையாளியானு. அவளு ஜனிச்சது படிச்சது எல்லாம் இவடயாக்கும்"

அறையில் ரெட்டி எங்கள் இருவருக்கிடையே உள்ள உரையாடல் புரிந்தாலும் என்ன பேசுகிறோம் என புரியாமல் முழித்திருந்தான்.

அவ்வ்வ் அல்ரெடி இதே மாதிரி ப்ரியாமணி, நாடோடிகள் அனன்யான்னு  தமிழ் பிகர்ஸ்னு நினைச்சுட்டு இருந்த என் நினைப்புல மண்ணள்ளி போட்டாங்க. இனி பாக்கி இருக்குறது த்ரிஷாவும் சிநேகாவும் தான். த்ரிஷா அல்ரெடி பாலக்காடுன்னு சொல்லி வேறொரு விவாதம் பெண்டிங்ல இருக்கு. இப்ப சிநேகாவுமா? இப்படி ஒவ்வொருத்தரையா இழந்துட்டு தமிழன் கடைசியில அநாதையா தான் நிக்கனுமா? உள்ளூர சிநேகா மலையாளியாக இருக்க கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கொண்டேன்.

"சேட்டா சிநேகா சுத்தமான தமிழச்சியாக்கும். அவ பேசுற தமிழ் கேட்டா அப்படி இருக்கும் தெரியுமா? எங்கயாவது மலையாளம் பேசி கேட்டிருக்கீங்களா?" நானும் கொஞ்சம் டென்சனாகி கேட்டேன். சேட்டன் முல்லை பெரியாரை விட்டு கொடுத்தாலும் கொடுப்பார் நடிகையை விட்டு கொடுக்க மாட்டார் போல. செம ரகளை யாகிடுச்சு. கடைசியா ஆண்டவர்கிட்டவே கேட்கலாம்னு கூகுளில் தேடினோம்.

பவ்வ் ஆகிட்டோம். சிநேகா தெலுங்காம் (நன்றி விக்கி). ஙே'ன்னு திரும்பி ரெட்டிய பார்த்தோம். ரெட்டி கேவலமா ஒரு லுக் விட்டுட்டு அவன் வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டான்.
--------------------------------------------------------------------------------------------------------------
என் பையனை சேர்க்க 1 லட்சம் கொடுத்தேன். எம் எல் ஏவை பிடிச்சேன். அங்க பணத்தை கொடுத்தேன் இங்க பணத்தை கொடுத்தேன் என பல புலம்பல்களை படிக்க சிரிப்பாக இருக்கிறது (ஹி ஹி பேச்சுலர்) ஏன் இவ்வளவு பணம் கொடுத்து அந்த பள்ளியில் சேர்க்க வேண்டும்? அதுவும் ஒரு பள்ளியில் காலை 6 மணியிலருந்து  8 மணிவரை பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களும் 8 மணியிலருந்து  4 மணிவரை பதினொன்றாம் வகுப்பு பாடங்களும் பின்பு மாலை 4கிலிருந்து 6 மணி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் என்று அடுத்த வருட பாடத்தை முன்கூட்டியே நடத்துகிறார்களாம். என்ன கொடுமை இது?

ஏன் யாருக்கும் மாநகராட்சி பள்ளியே நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது? அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? தற்காலத்தில் அங்கு மட்டுமே முழுக்க முழுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து மூளையில் அனைத்தையும் திணிக்காமல் பாடங்கள் நடத்தபடுகிறது. குழந்தைத்தனத்துடன் குழந்தைகளை அங்கே தான் அதிகமாக பார்க்கமுடிகிறது. ஒரே ஒரு பின்னடைவு மட்டுமே. ஆங்கில அறிவு! அது அவசியமா இல்லையா என்ற மிகப்பெரிய சர்ச்சைக்குள் போகாமல் அவற்றை ஸ்போகன் இங்கிலீஷ் மூலமா கூட சரி பண்ணிடலாமே. யோசிங்க பெற்றோர்களே யோசிங்க...
----------------------------------------------------------------------------------------------------------------
நான் மகான் அல்ல பார்த்தேன். திரைக்கதை நேர்த்தி இருந்தா எதையும் ரசிக்க முடியுது. வன்முறைய கூட!. மாணவர்களை முக்கியமா அரசு கலைக்கல்லூரி மாணவர்களை அவ்வாறு காண்பித்து இயக்குனர் எதுக்காக தன்னை திருப்திபடுத்திகிட்டாருன்னு தெரியல. கொஞ்சம் வன்முறைய குறைச்சிருக்கலாம்.

காஜல் அகர்வாலுக்காகவே படத்துக்கு போனேன். இரண்டாம் பாதியில சரியா காண்பிக்கவே இல்லை :( ரொம்ப ஏமாத்தமா போச்சு. (இதுக்கு மேல இந்த படத்தை பத்தி பேசினா பஸ்ல கும்மின மாதிரி இங்க கும்ம வாய்ப்பிருக்கிறனால எஸ்கேப்ப்ப்ப்ப்)
-----------------------------------------------------------------------------------------------------------------
பதிவர்கள் கலந்து கொண்ட நீயா நானா பார்த்தேன். டெக்னாலிஜினால இரவு முழுக்க சாட்டிங்ல இருந்துட்டு தூக்கம் கெட்டு, படிப்பு கெட்டு தன்னை சார்ந்தவங்களையும் கெடுத்துகிறாங்கன்னு நிறைய பேர் சொன்னாங்க. எனக்கும் ஆமாம்னு தான் தோணுச்சு.  இதைப் பத்தி இன்னொரு பதிவரோட ரொம்ப காரசாரமா  இரவு ஒரு மணி வரை சாட்டிங்ல வாதாடி அவரையும் இது உண்மைன்னு ஒத்துக்க வச்சேன்.

அங்கு வந்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மிக அழகா இணையத்தை ஒரு வரைமுறைக்கு கொண்டு வருவதை பத்தி எடுத்துரைத்தார். அவருக்கு போட்டியா வந்திருந்த சாம்சங் "மாணிக்கராஜ்" "வாலப்பல தோளை கீழ ஏன் போடுறாங்கன்ற ஆதங்கத்தை கூட நெட்ல,ப்ளாக்ல பதியலாம்" "தமிள் Resources இன்னும் அதிகமா வரும்காலங்கல்ல வரும்"னு அவரும் அலகா பேசினார்.

கலந்து கொண்ட பதிவர்கள அனைவருக்கும் வாழ்த்துகள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
தெரியாமல் காலை மிதித்த சேட்டன் 'ஸாரி" என்றார். "பரவாயில்லை" என கூறினேன். "அப்ப இன்னொரு தடவை மிதிச்சுக்கிறேன்" என்று இன்னொரு தடவை மிதித்து விட்டு, ஆள்காட்டி விரலை கொக்கி போல் மேலும் கீழும் வளைத்து ஒழுங்கு காட்டியபடி சென்றார் சேட்டன்.

அடுத்த நாள் அவர் காலை மிதித்து நான் "ஸாரி" என்றேன் "!@(*$&^@( (#*$&$^" என்றார் சேட்டன். "ஸேம் டூ யூ" என்றபடி நகர்ந்தேன். 

காலை எழுந்தவுடன் "பல்லு விளக்கியே தீரனுமா" என்றார் சேட்டன். சிங்கமெல்லாம் பல்லா விளக்குது என்றேன். வெக்கப்பட்டு சிரித்தபடி சாப்பிட கேண்டீனுக்குள் ஓடினார் சேட்டன். 

இப்பெல்லாம் அடிக்கடி இரவு கனவுல நீ வந்து தொல்லை கொடுக்குற என்றார் சேட்டன். இனி எனக்காக வாங்கி வச்ச சரக்கை அடிச்சுட்டு தூங்காத சேட்டா என்றேன். தெரிஞ்சுடுச்சா என கன்னத்தை கிள்ளியபடி ஓடினார் சேட்டன். 
ஆளாளுக்கு நிறைய அப்டேட்ஸ் போடுறாங்கப்பா. இனி நானும் 'சேட்டன் அப்டேட்ஸ்' போடலாம்னு இருக்கேன். சாம்பிள்ஸ் ஓக்கேவா?

30 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஹுஸைனம்மா said...

//பல புலம்பல்களை படிக்க சிரிப்பாக இருக்கிறது (ஹி ஹி பேச்சுலர்)//

இத ரெக்கார்ட் பண்ணி வச்சுகிட்டேன். நாளைக்கு (அதாவது பலப்பல வருஷங்களுக்குப் பின்னால்) உங்க புள்ளைய எப்படி படிக்க வைக்கப் போறீங்கன்னு பாத்து, இதே ப்ளாக்ல (இருக்குமா) கேப்பேன்ல??

புதிய மனிதா said...

போடுங்கள் ..நல்லாத்தா இருக்கு ..

அஷீதா said...

அடுத்த நாள் அவர் காலை மிதித்து நான் "ஸாரி" என்றேன் "!@(*$&^@( (#*$&$^" என்றார் சேட்டன். "ஸேம் டூ யூ" என்றபடி நகர்ந்தேன். //


ஹா ஹா ஹா..

அஷீதா said...

இனி நானும் 'சேட்டன் அப்டேட்ஸ்' போடலாம்னு இருக்கேன். சாம்பிள்ஸ் ஓக்கேவா?//

எல்லாம் ஒழுங்கா தானே போய்க்கிட்டு இருந்துச்சு இப்போ எதுக்கு இந்த வன்முறை எல்லாம். அப்புறம் நாங்க எங்க அப்டேட்ஸ் குடுக்க ஆரம்பிச்சா உங்களால தாங்க முடியாது :))))

Anonymous said...

ஏமண்டி , ஸ்னேகா ரெட்டிகாரு தெலிலேதா

Anonymous said...

பட்சே சேட்டன் அப்டேட்ஸ் நன்னாயிட்டுண்டு கேட்டோ

பின்னோக்கி said...

என்னது ?? சினேகா தெலுங்கா ?. மறத்தமிழச்சின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஏன் இப்படி பண்றீங்க ? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த சாம்சன் ஆரம்பிச்சிருக்க தளத்துல என்ன எழுதுவீங்கன்னு கேட்டதும்.. ஒரு பையன் சொன்னது (அல்ரெடி எதவேணா எழுத எல்லா தளங்களும் இருக்கும் போது) இவங்க காலையில் பாத்த ஜோடியில் பெண் எங்களதான் பாத்துச்சுன்னு எழுதுவாராம்.. குடும்பத்துல/ஜோடியில் குழப்பம் செய்யறதுல அந்த பையனுக்கு அப்படி என்ன கிடைக்கப்போது இத்தனைக்கு அவரு சொல்றாரு இணையத்துல இருக்கவங்களுக்கு எதிரான குரூப்பாம்.. அய்யா எல்லார் கைக்கும் இணையம் போச்சோ .. குட்டிச்சுவர் தான்னு திகில ஏற்படுத்திட்டாங்க எதிரணியினர் எல்லாம

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் மகான் அல்ல வுக்கு உங்க எண்ணத்தை அப்படியே எழுத வேண்டியது தானே . ரசிக்கலைன்னு சொல்லிட்டு
ரசிக்கமுடியுது ந்னு இருக்கே...
அட்லீஸ்ட் சோக ஸ்மைலியாவது
போட்டிருக்கலாமில்ல

கானா பிரபா said...

இதைப் பத்தி இன்னொரு பதிவரோட ரொம்ப காரசாரமா இரவு ஒரு மணி வரை சாட்டிங்ல வாதாடி அவரையும் இது உண்மைன்னு ஒத்துக்க வச்சேன். //

அவ்வ்வ்

ஆயில்யன் said...

//ஆளாளுக்கு நிறைய அப்டேட்ஸ் போடுறாங்கப்பா. இனி நானும் 'சேட்டன் அப்டேட்ஸ்//

அடப்பாவி

எந்த மாதிரியான இடத்தில இருந்திக்கிட்டு இப்படியான ஃபீல்!
வானம் போகுது #ஹய்யோஹய்யோ

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

எலே தேவுடு ரொம்ப அருமை
சிரிப்புக்கு கேரண்டியான பதிவுலே.
பொக்கிஷ கருத்தும் ஓட்டுக்களும் போட்டுட்டேன்

நாஞ்சில் பிரதாப் said...

எலே மக்கா நம்ம மனோரமா பச்சத்தமிழச்சி தாம்லே...

சினேகான்னா யாரு, சிரிக்கும்போது வாய் மணிபர்ஸ் அளவுக்கு திறக்குமே அந்தப்பொண்ணா...அடங்கொன்னியா


//ஏன் யாருக்கும் மாநகராட்சி பள்ளியே நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது? //

எப்படி வரும்...மழை பெஞ்சா புள்ளை வகுப்புலே நனையுது... விளையாண்டா ஏதாச்சும் மதிலு உடைஞ்சு வுழுது, கக்கூஸல் நாறிப்போய் கிடக்கு... அபப்றம் எப்படி ஞாபகம் வரும்...

*இயற்கை ராஜி* said...

அவ பேசுற தமிழ் கேட்டா அப்படி இருக்கும் தெரியுமா?//


எப்டி இருக்கும்ன்னு சொல்ல முடியாதுங்களா..அவ்ளோ கொடுமையா இருக்குமா

*இயற்கை ராஜி* said...

ஏன் யாருக்கும் மாநகராட்சி பள்ளியே நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது //

அங்க படிச்ச சில பேரப் பத்தி தெரிஞ்சு நம்ம குழந்தயும் அந்த மாதிரி ஆயிடக்கூடாதுன்னுதான்

*இயற்கை ராஜி* said...

ரொம்ப ஏமாத்தமா போச்சு.//


இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் உங்களோட படத்தின் விமர்சனம்ன்னு எடுத்துக்கலாமா

*இயற்கை ராஜி* said...

சாட்டிங்ல இருந்துட்டு தூக்கம் கெட்டு,//இரவு ஒரு மணி வரை சாட்டிங்ல வாதாடி //


தூக்கம் கெடுத்துட்டு ஒரு மணி வரை உங்களோட வாதாடி அது வேஸ்ட்ன்னு அவருக்கு அப்புறம்தான் புரிஞ்சு இருக்கு.. பாவம்

*இயற்கை ராஜி* said...

ரொம்ப அலும்பு பண்ணி சேட்டன் ஒரு நாள் குரல் வளைல மிதிக்கப்போறார்.. பீ கேர்புல்:-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

எலே தேவுடு
4ஓட்டுதான்லே வன்ந்துருக்கு,எதுக்கு பட்டை,அதை எடுத்துடு.உனக்கு இனி பட்டை வச்சி ஓட்டு போட்டு தான் படிக்கனுமா?நானும் எடுத்துட்டேன்.

கோபிநாத் said...

\\தெரிஞ்சுடுச்சா என கன்னத்தை கிள்ளியபடி ஓடினார் சேட்டன்.\\

அடேய் என்னடா நடுக்குது அங்க...!;))

அப்புறம் சேட்டன் அப்டேட்ஸ் சூப்பரு..ஆனா இந்த தலைப்புல ஒரு உள்குத்து இருக்கு...அதுவும் சூப்பரு ;))

Chitra said...

சேட்டன் முதல் பள்ளிக்கூடம் வரை - கதம்ப சோறு..... அசத்தல்!

சேட்டைக்காரன் said...

என்னது? சினேகா தெலுங்கா?

என்னது? த்ரிஷா பாலக்காடா?

என்னது? ஆதவன் இடுகைக்குப் பேரு ’சேட்டனின் அப்டேட்ஸா?’

அப்படீன்னா சூப்பர் ஹிட் தான்! :-)

☀நான் ஆதவன்☀ said...

@ஹூஸைனம்மா

ஹி ஹி பார்க்கலாம். நோட் பண்ணிக்கிறேன் ஹூஸைனம்மா.அப்ப பாத்ரூம்ல போய் குழாயை தொறந்துவிட்டு அழது புலம்பினாலும் புலம்புவேன் வெளிய சொல்ல மாட்டேன்ல :)
-------------------------------------
@புதிய மனிதா
நன்றிங்க புதிய மனிதா
-----------------------------------
@அஷீதா
நன்றிங்க அஷீதா. உங்க அப்டேட்டை நீங்களே போடுறதா? அவ்வ்வ்வ்வ்
-----------------------------------
@சின்ன அம்மணி
சுக்ரியா அம்மணி :)
-----------------------------------
@பின்னோக்கி

ஆமாங்க எனக்கும் அதிர்ச்சி தான். ஆனா மலையாளியா இல்லாம போன வரைக்கும் சந்தோஷம் :)
-----------------------------------
@முத்தக்கா

ஆமாக்கா அந்தாளு அப்படி சொன்னது செம கடி. ஆனா கோபிநாத் "உங்களையும் இணையும் ஈர்த்திருக்கு"ன்னு கேட்டு மடக்கிட்டாரு.

எதையும் ரசிக்க வைக்கிற ஒரு மேஜிக் நிறைய இயக்குனர்கள்கிட்ட இருக்கு. எனக்கு அந்த வன்முறை காட்சிகள் சுத்தமா பிடிக்கலக்கா. ஆனா நிறைய பேருக்கு பிடிச்சிருந்ததால அப்படி சொன்னேன். படத்தோட முதல் பாதி ஓக்கே தான்க்கா.
------------------------------------
@கானா பிரபா

க்ரெக்ட்டா நோட் பண்ணனது நீங்க ஒருத்தர் தான் பாஸ் :))
-----------------------------------
@ஆயில்யன்

பாஸ் வானம் போகுதா மானம் போகுதா? :))))))))))))
------------------------------------
@கார்த்திகேயன்

நன்றி தேவுடு. இப்பெல்லாம் தமிலிஷ்ல ஓட்டு விழமாட்டேங்குது தேவுடு. நானும் அவ்வளவா கண்டுக்கிறதில்ல :)

☀நான் ஆதவன்☀ said...

@பிரதாப்பு

ஏலேய் அங்க படிச்ச நானும் இன்னும் சில என் நண்பர்களும் ஓரளவு நல்ல நிலைமையில தான் இருக்கோம். நான் சொன்னது பணம் இருக்குறவன் எங்க வேணா படிக்க வைக்கட்டும். பணம் இல்லாதவன் ஏன் அங்கேயே ஓடனும்னு தான் :)
--------------------------------------
@ராஜீ

குரு :))))))))))) ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் கும்மி அடிச்சு சிஷ்யனை கவுரவிச்சிட்டீங்க போங்க :)
---------------------------------------
@கோபிநாத்

அவ்வ்வ்வ் என்னய்யா உள்குத்து கண்டீர் :)) கோர்த்து விடுறதுக்கின்னே வந்திடுவீகளே :)
-------------------------------------
@சித்ரா

நன்றி சித்ரா :)
-------------------------------------
@சேட்டை

வா நண்பா :) ரொம்ப நன்றி :)

கோமதி அரசு said...

அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய செய்திகள் போலும்.


நல்ல நகைச்சுவை.

சிட்டுக்குருவி said...

சேட்டன் அப்டேட்ஸ் நல்லாத்தான் இருக்கு

தொடருங்க

☀நான் ஆதவன்☀ said...

@கோமதிம்மா

நன்றிம்மா :)
------------------------------------
@சிட்டுகுருவி

நன்றி வாணி :)

azeem basha said...

marhaba,

welcome to my anti chettans club, if you need any information come to me i will help you.

கவிதா | Kavitha said...

பஞ்சாமிர்தம் தான் இனிமே சேட்டன் அப்டேட்ஸ் ஆ??

சேட்டனோட சண்டை எல்லாம் போடாதீங்க.. .. அவங்க மாதிரியே நைஸ் பேசி வின் பண்ணுங்க.. :))

ம்ம் அப்டேட்ஸ் நல்லா இருக்கு.. நான் மகான் அல்ல பத்தி நிறைய பேசிட்டோம்.... :)

Rajkumar said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

Related Posts with Thumbnails