புனைவு எழுதுவது எப்படி?

”என்னை எப்படித் தெரியும்?” என்ற முதல் கேள்விக்கு ”அடுத்த ஜென்மத்துல உனக்கு ரொம்ப நெருக்கமானவளா இருக்கப் போறேன். அதற்காக இந்த ஜென்மத்துல சும்மா உன்கிட்ட இண்ட்ரோ பண்ணிக்கலாம்னு வந்தேன்” உடன் ஸ்மைலியோடு அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. உரையாடல் பெட்டியில் அந்த பொம்மை என்னை கேலியோடு சிரிப்பது போல் இருந்தது. தொடர்ந்து :))))))))))))))) வந்துகொண்டே இருந்தது. அப்’ புறம் சிரிக்கிறாள் போல. கலகலவென்று சிரிக்கிறாளோ? இல்லை இந்த 12.30 இந்திய மணிக்கு யாரேனும் எழக்கூடும் என உணர்வில் வாயைப் பொத்தி சிரிக்கக்கூடும். நானும் சிரித்தேன். அது பெண் தான் எனவும் அவள் இந்தியாவில் தான் இருக்கிறாள் எனவும் வெறும் முதல் கேள்வியில் எப்படி என்னால் உறுதியாக நினைக்கமுடிந்தது? சிரிக்கிறேன். பதிலுக்கு நானும் :))))))))))))))))) இடுகிறேன். சேட்டன் சிரிப்பின் ஒலியினால் கணைப்புடன் புரண்டு படுக்கிறார்.

”நீ ஏன் சிரிக்கிற?” என்று அழகுத்தமிழில் வார்த்தை பெட்டியில் விழுந்தது. ”நீ எப்படி சிரிப்பன்னு நினைச்சுப் பார்த்தேன்”

“அதுக்கேன் நீ சிரிக்கிற? நீ என்ன லூசா?”

”கூடிய சீக்கிரம் ஆகிடுவேன்”. அப்படித்தான் இருந்தது. மூன்று முறை மடல் அனுப்பியிருந்தாள். உடன் பிறந்த சோம்பேறித்தனம் எந்த மடலையும் பார்க்க விட வில்லை. வெக்கையும் வேலையும் உடம்பை இரண்டாக கிழிந்திருந்தது.  நண்பர்களுடன் மனம் விட்டு உரையாடி நாட்கள் பல ஆகின்றன. மனம் முழுவதும் வெப்பமாக இருப்பதாகவே தோன்றியது. பியர் பாட்டிலுடன் நேற்று தான் அனைத்து மடல்களையும் படிக்க தொடங்கினேன். அவளா? அவனா? எனத்தெரியாத ஒரு பொதுவான மடல். முதல் மடலில் பொதுவாக நன்றாக எழுதுவதாகவும்  ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை எனவும் கேட்டிருந்தாள்/ன். இரண்டாவது மடலில் ”பிசியா?” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தியிருந்தாள்/ன். மூன்றாவது மடலில் “ஐயா ரிப்ளே அனுப்ப மாட்டீகளோ?”ன்றருந்தது. வழக்கம் போல் பதில் எதுவும் அனுப்பாமல் இருந்தேன்.

நேற்று இரவு நான்காவது மடலும் வந்தது. ”டேய் பிசாசே மெயில் அனுப்பினா ரிப்ளே பண்ண மாட்டயா? ஒழுங்கா ரிப்ளே பண்ணு. அப்படியே சாட் ரிக்வெஸ்டும் அக்ஸெப்ட் பண்ணிக்கோ. இல்லைன்னா மூக்கு மேல குத்துவேன் :)”. அனைவரும் விலகி இருப்பதாக நினைத்து இருந்ததில் இவளின் நெருக்கமான மடல் என் வெப்பத்தை குறைத்தது. உடனே அவளின் உரையாடல் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவளும் ஆன்லைனில் இருந்தாள். யார் முதலில் அழைப்பது என்ற இருவருக்குமான போட்டியில் நானே தோற்றேன். சில நொடிகள் அமைத்திக்கு பிறகு  ”என்னை எப்படித் தெரியும்?” என்றேன். பின் நடந்தது தான் முதல் பத்தி.

டுத்தநாள் அலுவலக ரிசப்ஷனிஸ்ட் புருவங்களையும், இடையே க்ளைண்ட் மீட்டிங்கில் வந்த பெண் சிவில் இன்ஜினியர் வழு வழுப்பான கன்னங்களையும்,  மதிய உணவு இடைவேளையில் தொலைக்காட்சியில் கண்ட சிநேகாவின் கண்களையும் ஹலோ எப் எம் தொகுப்பாளினி குரலையும் இடையிடையே கண்ட அரபுப்பெண்களின் அங்கங்களும் என கூட்டாக சேர்த்து அந்த சிநேகிதிக்கு உருவம் கொடுத்திருந்தேன்.  இப்போது எப்படி சிரித்திருப்பாள் என யோசித்துப்பார்த்தேன். மிக அழகாக இருந்தாள்.

இன்று மாலை   பச்சை நிறத்தில் உரையாடியில் வந்தேன். வந்ததும் “ம்” என்ன வார்த்தை அவளிடம் இருந்து உடனே வந்தது.

என்ன ‘ம்’?

“ஹாய்”

“ஹாய்”

”நீ எப்படி புனைவு எழுதுற? என்றாள்.

”நான் என்னைக்கு புனைவு எழுதினேன்? எனக்கு மொக்கையை தவிர ஒன்னுமே தெரியாதே!”

“இல்ல ஒன்னுரெண்டு பார்த்தேன். நல்லாயிருந்தது. எப்படி அதெல்லாம் எழுதுற?”

 எனக்குள் இருந்த கதநாயகன் உச்சத்தில் ஏறினான். “புனைவுகளும் குழந்தைகள் மாதிரி தான். ஆனா தானா பிறக்கும்” கதாநாயகன் உளறினான்.

“புனைவுகள் பிறக்குமா? எப்படி?”

“உன்னை சுத்தி இருக்குறதை இப்ப வரைய சொன்னா வரைவையா?” கதநாயகனுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை. தன்னிடம் மாட்டிக்கொண்ட நாயகியை கவர ஏதேதோ உளறினான்.

“ம்ம் வரைவேனே..... ஆனா அச்சு அசலா எனக்கு வரைய தெரியாதே...இப்ப வரைஞ்சா அலங்கோலமா இருக்குமே!” கொஞ்சினாள்.


 ”ம்ம் அது தான் புனைவு”

“அட.. அப்படியா?!” ஆச்சர்யப்பட்டாள். கதாநாயகனுக்கு ஒரு அணையை கட்டிமுடித்த பெருமிதம் வந்தது.

“எனக்கு அது அப்படின்னு ஏதாவது இப்ப எழுதி காண்பியேன்”

“கண்டிப்பா நாளை எழுதிட்டு அனுப்புறேன்” கதாநாயகன்

நெடுநேர ‘ம்’ அமைதிக்கு பிறகு. ”உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றாள்.

கேள்வியின் தோரணை பல படிமங்களை கொண்டிருப்பதால் கதாநாயகனை விரட்டினேன். அவன் இதற்கு மேல் இருந்தால் என் வாழ்க்கையையே நாடகமாக்க வாய்ப்புண்டு.

சிரிப்பான் ஒன்றை பதிலளித்தேன்.

”என் கூட பேசனுமா?” என்றாள்.


அவளின் கற்பனை குரலான ஹலோ எப்.எம் தொகுப்பாளினியின் குரல் மிகவும் பிடிந்திருந்தது. அதை மாற்ற மனமில்லாம்ல் சிரிப்பானையே இதற்கும் பதிலளித்தேன். என்ன நினைத்திருப்பாள் என தெரியவில்லை. ஜிமெயிலின் வாய்ஸ் சேட்டில் திடீரென அழைத்துவிட்டாள்.

எடுத்தேன்.

முதல் இரண்டு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. அவளும். பின்பு சிரித்தாள். என்னவொரு சிரிப்பு! நாளை முதல் அந்த ஹலோ எப் எம் கேட்பதில்லை என முடிவெடுத்தேன். நிற்க போகிற மழை போல் மெது மெதுவாக அமைதியானாள். இன்னும் சிரிப்பு வருகிறது போல. அடக்கி கொண்டே பேசுகிறாள். “எப்படிடா செல்லம் இருக்க?”

சிரித்தேன். ”அடுத்த ஜென்மம் என்றாயே? அதை பொய்யாக்கிவிடு. இப்பவே உன்னை பார்க்கனும்.” என்றேன்

சிரித்தாள் ”ம்ம்ம்ம்... ஆசை தோசை”

“ஏன் முடியாதா?”

“ச்சீ போ. நான் கட் பண்ண போறேன்”

”ஏஏஎய்ய்ய் உன் பேர் சொல்லாம போற?”

”ம்ம்ம்ம்ம் ராட்சஷி “ என சிரித்து உரையாடலை அணைத்தது தேவதை.

ன்று  எனக்கு புனைவு எழுத தெரியாது என இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளட்டும் அந்த ராட்சஷி.

55 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கோபிநாத் said...

நீ என்ன லூசா டா!?

அடேய் ஆதவா நமக்கு எது வருதோ அதை மட்டும் செய்வோம் என்ன...புரியுதா!! ;-)

Altruist said...

kadhaya ipdi paadhilaye niruthina epdi?

கோபிநாத் said...

தயவு செய்து என்னை மாதிரி யாரும் பின்னூட்டம் போடாதிங்க....புனைவை புகழ்ந்து பின்னூட்டம் போடுங்க...;)) பீலிஸ் ;)

கோபிநாத் said...

என்னோட 2வது பின்னூட்டம் ஆதவன் வேண்டுக்கோளுக்கு இணங்க போட்டது ;))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தேவுடு அசத்தல்யா!!!!!!!!!!!!நீ இங்க வா பேசுவோம்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

யோவ் வெறுங்கையோட வந்துடாதே!!

VIKNESHWARAN said...

இத புனைவா கற்பனை பண்ணிகிட்டு ஒரு கமெண்ட் போடுறேன்....

நாமழும் தான் எழுதுறோம்.... இது வரைக்கும் ஒரு ரிக்குவேஸ்ட் வந்ததில்லை.... ஸ்டம்மர்க் பர்னிங்...

கார்த்திகைப் பாண்டியன் said...

வித்தியாசம் தல..:-)))

வால்பையன் said...

இதெல்லாம் நடக்காதுன்னு உங்களுக்கு யார் சொன்னா!?

ஒருநாள் நிச்சயம் அப்படி ஒரு மெயில் வரும்! ஆனா உங்களுக்கு தான் வயசாயிருக்கும்!

:)

Chitra said...

ஜூப்பரு....

pappu said...

என்ன சொல்ல? வயசுக் கோளாறு

விந்தைமனிதன் said...

ஓய்! மனுஷன் நொந்துபோயிருக்கிற டைம்ல வவுத்தெரிச்சல கிளப்புறீர்!

ஆனாலும் நல்லாத்தாம்யா இருக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட ம்.. தெரியாதுன்னு சொல்லித் தெரியும்ன்னு சொல்றீங்களா..?

தெரியும்ன்னு சொல்லி தெரியாதுன்னு சொல்றீங்களா ?

ஆனா நல்லாவே வந்திருக்கு

வினோத்கெளதம் said...

அப்பயே நினைச்சேன் இதையெல்லாம் ஒரு நாள் எழுதுவன்னு..அப்புறம் ரசித்தேன்..

Anonymous said...

//கோபிநாத் said...

தயவு செய்து என்னை மாதிரி யாரும் பின்னூட்டம் போடாதிங்க....புனைவை புகழ்ந்து பின்னூட்டம் போடுங்க...;)) பீலிஸ் ;)

என்னோட 2வது பின்னூட்டம் ஆதவன் வேண்டுக்கோளுக்கு இணங்க போட்டது ;)) //

:-)))))

அஷீதா said...

அடுத்தநாள் அலுவலக ரிசப்ஷனிஸ்ட் புருவங்களையும், இடையே க்ளைண்ட் மீட்டிங்கில் வந்த பெண் சிவில் இன்ஜினியர் வழு வழுப்பான கன்னங்களையும், மதிய உணவு இடைவேளையில் தொலைக்காட்சியில் கண்ட சிநேகாவின் கண்களையும் ஹலோ எப் எம் தொகுப்பாளினி குரலையும் இடையிடையே கண்ட அரபுப்பெண்களின் அங்கங்களும் என கூட்டாக சேர்த்து அந்த சிநேகிதிக்கு உருவம் கொடுத்திருந்தேன். //

:)))))))) ஆசை படலாம் பேராசை படலாமா ஆதவன்.
எனிவேஸ் ரொம்ப நல்லா வந்திருக்கு உங்க புனைவு.
வாழ்துக்கள்! அடுத்த புனைவுக்கு வெயிட்டிங் :)

கண்ணா.. said...

ஆதவா....

//இன்று எனக்கு புனைவு எழுத தெரியாது என இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளட்டும் அந்த ராட்சஷி.//

ராட்சஷனா இருந்து தொலைக்க போறான்... பாத்து சூதானமா இருந்துகோப்பு.......

பைதவே... பாண்டிச்சேரி புனைவு எப்போ வெளிவரும்?????

வித்யா said...

இப்ப என்ன?
உங்களுக்கு எழுதத் தெரியுமா தெரியாதா:))

அப்படியே கவிதை எழுதுவது எப்படின்னு ஒரு போஸ்ட் ரெடி பண்ணுங்க.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)

ஆயில்யன் said...

நீ என்ன லூசா டா!?


கோபி கோபிதான்ய்யா எப்படி இனம் இனத்தோட சேருமே போங்க :))))))))

ஆயில்யன் said...

//நீ ஏன் சிரிக்கிற?//


ஹல்லோ பதிவு அப்படி எழுதிட்டு ஏன் எதுக்குன்னுல்லாம் கேக்கப்பிடாது பிச்சுடுவே பிச்!

ஆயில்யன் said...

//“ம்” ///


ஆஹா இது அவர்ல்ல ? தம்பி எதுக்கும் லோக்கல்லயே விசாரி எனக்கு தெரிஞ்சு இந்த வார்த்தையே அதிகம் யூசு பண்றது அவர்தான்! :)

ஆயில்யன் said...

//அட ம்.. தெரியாதுன்னு சொல்லித் தெரியும்ன்னு சொல்றீங்களா..?

தெரியும்ன்னு சொல்லி தெரியாதுன்னு சொல்றீங்களா ? //

அக்கா என்னமோ சொல்றாங்க ஒரு வேளை புனைவு டைப்பு கமெண்டோ?

ஆயில்யன் said...

//நீ என்ன லூசா?”

”கூடிய சீக்கிரம் ஆகிடுவேன்///


இது எதிர்பார்ப்பா? அல்லது ஆதங்கத்தின் வெளிப்பாடா?

ஆயில்யன் said...

//பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)//

இந்த தம்பி என்னமோ சொல்லவருது அந்த பீலிங்க்ஸ் உமக்கு புரியுதா மிஸ்டர் குப்பைத்தொட்டி?

ஆயில்யன் said...

// எனக்குள் இருந்த கதநாயகன் உச்சத்தில் ஏறினான்


aa..laa..lallaa…. lalala..laa..la..laa
lalla…lalla..laa.. lalla..lalla..laa..
lalla ..lalla…lalla..lalla…lalla..la..laala..laa..

[லிரிக்ஸ் அடுத்த கமெண்ட்ல அதுவரைக்கும் ஹம்மிங்கல இருங்க]

ஆயில்யன் said...

நான் ஆதவன் உதயமாகிறான்

ஊரார்களின் இதயமாகிறான்

நினைத்ததை யார் எழுதுபவன் சொல்..

அவனது பளாக் படித்தவன் நான்

வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்..

ஆயில்யன் said...

கமெண்ட் பாக்ஸை மூடாமல்
மாடரேஷன் போடாமல்
ப்ளாக்கு ஒண்ணு வந்தா
கண்ணு பாக்கும் கும்மி அடிக்கும்

ஆயில்யன் said...

//இப்பவே உன்னை பார்க்கனும்.” என்றேன்//

அரபிக்காரன் அர்ஜெண்ட் எக்ஸிட் கொடுக்கமாட்டான் டோய்ய்ய்ய்ய் ரிசைன் செஞ்சுட்டுதான் போகவேண்டியிருக்கும்!

ஆயில்யன் said...

//இன்று எனக்கு புனைவு எழுத தெரியாது என இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளட்டும் அந்த ராட்சஷி.//

அப்பவே பார்த்து பார்த்து சொன்னேன் அந்த ஆளு கூட சேராதன்னு கேட்டாத்தானே எப்படியே தொல்ஞ்சு போங்க !

தமிழ் பிரியன் said...

புனைவு அழகா இருக்கின்றது.

தமிழ் பிரியன் said...

நான் மெய்யாலுமே உனக்கு(எல்லாம்) ஒரு பிகரு மாட்டிடுச்சோன்னு நினைச்சேன்.. ஹிஹிஹி

தமிழ் பிரியன் said...

நல்லவேளை கவிதை ஏதும் எழுதலை.. இல்லைன்னா பொசுக்குன்னு போய் இருக்கும்ல/..;-))

Anonymous said...

//தமிழ் பிரியன் said...

நான் மெய்யாலுமே உனக்கு(எல்லாம்) ஒரு பிகரு மாட்டிடுச்சோன்னு நினைச்சேன்.. ஹிஹிஹி//

இங்க பாருங்க பொறாமைய

☀நான் ஆதவன்☀ said...

@கோபிநாத்

தல இந்த மாதிரி டிசைன் டிசைனா அசிங்கபடுத்தினாலும் அசர மாட்டோம்ல... இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா :))) இனியும் புனைவுகள் வரலாம் :)
-------------------------------------
@Altruist

இன்னைக்கு ராட்சஷி வருவா.. இனிமேலும் வருவா..அப்பப்ப அப்டேட் பண்றேன் :)
------------------------------------
@கார்த்திகேயன்

ஓக்கே தேவுடு :)
------------------------------------
@விக்கி

ஹி ஹி வரும்....ஆனா வராது விக்கி :)
------------------------------------
@கார்த்திகைப்பாண்டியன்

நண்பா இது வேணா புனைவா இருக்கலாம்... கொஞ்ச நாளாகவே இருக்குற உங்க மாறுதலுக்கு காரணம் மட்டும் புனைவா இருக்க கூடாது ஆமா :))
-------------------------------------
@வால்பையன்

தல :))) உங்க ஆசி படியே நடக்கட்டும்
------------------------------------
@சித்ரா

டாங்ஸ் சித்ரா :)
------------------------------------
@பப்பு

உனக்கு மதுரைக்கு வந்து வச்சுக்கிறேண்டி :) ஆளையே காணோம்..பதிவும் காணோம்.. எங்க போயிட்ட?
------------------------------------
@விந்தை மனிதன்

நன்றிங்க ஐயா :)
------------------------------------
@முத்தக்கா

புனைவுப்பின்னூட்டம் :))) சான்ஸே இல்லக்கா :)
------------------------------------
@வினோத்கௌதம்

மச்சி :) நீ இந்த மாசம் ஒரு நாள் வா.. பேசி தீர்த்துக்கலாம்
------------------------------------
@வடகரை வேலன்

ஆவ்வ்வ்வ்வ் யூ டூ டேமேஜிங் மீ :) நன்றி அண்ணாச்சி
------------------------------------
@அஷிதா

நன்றி அஷிதா :)
------------------------------------
@கண்ணா

யோவ் இப்ப தான் ஆடி போய் ஆவணி வந்தா சுபமுகூர்த்த யோகம் இருக்குன்னு அம்மா சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க... இதுல பாண்டிச்சேரி புனைவுன்னு புரளிய கிளப்பாத தல :)
------------------------------------
@வித்யா

அவ்வ்வ்வ் கவிதையாஆஆஆஆஆஆ :) ராட்சஷி கதி அதோ கதி தான்
------------------------------------
@பாலா

:-) வாங்க பாலா
------------------------------------
@ஆயில்ஸ் & தமிழ்ப்ரியன்

ஜெலஸ் பீப்பிள்ஸ். வாட் டூ do? :-) ஆனா கும்மின்னா என்னென்னு மறந்து போய்கிட்டு இருக்குற நேரத்துல உங்க கும்மி ஆறுதலா இருக்கு பாஸ் :)
------------------------------------
@சின்ன அம்மணி

:))) அதே தான் ஜெலஸ் பீப்பிள்ஸ்

கலகலப்ரியா said...

=)).. super appu..

nvnkmr said...

apa ithellam unmai illaya

nan than emanthutena???

Gayathri said...

கதையா நிஜமா ஒண்ணுமே புரியலையே தலைவரே...உண்மைன்ன வாழ்த்துக்கள் கற்பனைனானுளும் வாழ்த்துக்கள்..ஹா ஹா

siva said...

நீ என்ன லூசா டா!?atha eppadi avar vayala chola cholrenga..

athaney..athu eppadi neenga apdpi chollam..
mr.gobinath.

அடேய் ஆதவா நமக்கு எது வருதோ அதை மட்டும் செய்வோம் --enna varum???என்ன...புரியுதா!! ;-)onum purialey..boss.

siva said...

ஒருநாள் நிச்சயம் அப்படி ஒரு மெயில் வரும்! ஆனா உங்களுக்கு தான் வயசாயிருக்கும்!-

-apo உங்களுக்கு???????

புனைவை புகழ்ந்து பின்னூட்டம் போடுங்க...;)) பீலிஸ் ;)--no gobi no cry..dont cryma..

eru rasa varen..

siva said...

// எனக்குள் இருந்த கதநாயகன் உச்சத்தில் ஏறினான்--hilo unga vachu comedy kemeday panaliey...hio hio hio..enna ethu chinapulathanama erukku..

அடுத்த கமெண்ட்ல அதுவரைக்கும் ---nangalum choluvamula..
அடுத்த கமெண்ட்ல ----

siva said...

sorry boss

enaku schoolku neram aitu..

appram vanthu kumukiren.sorry
coments podren..

varta
tata bye bye

உஜிலாதேவி said...

முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன்

http://ujiladevi.blogspot.com/

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆதவன்
//ஆனா கும்மின்னா என்னென்னு மறந்து போய்கிட்டு இருக்குற நேரத்துல உங்க கும்மி ஆறுதலா இருக்கு பாஸ் :) //
என்ன தல இப்படி பீல் பண்ணிடிங்க... நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல...

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னை எப்படித் தெரியும்?” //

சென்னை மவுண்ட் ரோட்ல நின்னு போற வர figure எல்லாம் பாத்து சிரிக்கற அப்போ பாத்து இருப்பாங்களோ?

//அந்த பொம்மை என்னை கேலியோடு சிரிப்பது போல் இருந்தது//

பொம்மையும?? பாவம் பாஸ் நீங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

//அனைவரும் விலகி இருப்பதாக நினைத்து இருந்ததில் இவளின் நெருக்கமான மடல் என் வெப்பத்தை குறைத்தது//

பாவம் அந்த புள்ளைக்கு என்ன கஷ்டமோ... இங்க வந்து மாட்டுது...

TERROR-PANDIYAN(VAS) said...

//யார் முதலில் அழைப்பது என்ற இருவருக்குமான போட்டியில் நானே தோற்றேன்.//

இந்த விஷயத்துல என்னைக்கு நம்ப பசங்க ஜெய்ச்சி இருக்காங்க... இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னவொரு சிரிப்பு! நாளை முதல் அந்த ஹலோ எப் எம் கேட்பதில்லை என முடிவெடுத்தேன். நிற்க போகிற மழை போல் மெது மெதுவாக அமைதியானாள். இன்னும் சிரிப்பு வருகிறது போல. அடக்கி கொண்டே பேசுகிறாள். “எப்படிடா செல்லம் இருக்க?”//

நோ கமெண்ட்ஸ்.... ஒன்லி ஸ்டமக் பர்னிங்....

TERROR-PANDIYAN(VAS) said...

//”ம்ம்ம்ம்ம் ராட்சஷி “ என சிரித்து உரையாடலை அணைத்தது தேவதை.//

என் அப்பு!! ஆரம்புத்துல ஒரு சேட்டன் புரண்டு படுத்தாரு சொன்னிங்களே... இப்போ அவரு என்ன நிலைமைல இருக்காரு??

TERROR-PANDIYAN(VAS) said...

மிக அழகாக எழுதி இருக்கிறிர்கள். உங்கள் ராட்சஸி சிக்கிரம் உங்களை தொடர்பு கொள்ள வாழ்த்துகள். அடுத்த புனைவுக்கு காத்து இருக்கிறேன்.

(ரொம்ப கும்மிடமோ... ப்ளாக் ஓனர் வரதுக்கு முன்னாடி கடை கட்டிடுவோம்..)

அன்புடன் அருணா said...

புனைவேதானா!!???

கோமதி அரசு said...

ஆதவன், புனைவு நல்லா வருது உங்களுக்கு. தொடர்ந்து புனைவு எழுதலாம்.

வாழ்த்துக்கள்.

சிட்டுக்குருவி said...

நல்லா இருக்கு

:))

Anonymous said...

புனைவு மாதிரி தெரியலையே.. ஏதோ சொந்த அனுபவம் மாதிரி இருக்கு..
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

Free Traffic said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

Related Posts with Thumbnails