தி கிங் (சல்மான்)கான்

ஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும்?  100? 200? 500? ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக்கும் 33 வயது இளைஞர் சல்மான் கான். நேரில் அல்ல.  கணினி மூலமாக. இவரைப் பற்றி இணையத்தில் புழங்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். khan academy என்ற பெயரில் ஒரு சிறிய கல்வி கூடமே இணையத்தில் இலவசமாக நடத்துகிறார். இவரது முயற்சியால் மாதம் 10 லட்சம் மாணாக்கர்கள் பயன் பெறுவதாக கூறப்படுகிறது. (10 லட்சத்தில் ஒருவன் ஹி ஹி)


1+1=2 என்பதில் இருந்து தொடங்கி laplace transform வரை, மிக எளிமையாக படிக்கும் மாணவனின் மனநிலைக்கு வந்து சொல்லி கொடுக்கும் விதம் மாணவனை பாடத்தோடு ஒன்றச்செய்கிறது. வியாபாரமாகி போன கல்விச்சூழலில் இலவசமாக மாணவர்களுக்கு இவர் செய்து வரும் தொண்டு விலைமதிக்க முடியாதது. அதற்கான அவர் உழைப்பு ஆச்சர்யப்படவைக்கிறது.

இதுவரை 1400 காணொளிகள் பாடங்களாக இவர் கொடுத்திருக்கிறார்.
இவரின் எளிமையான பாடங்களை  youtube வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து பயன்பெறுகிறார்கள்.

அனைத்து ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களுக்கு தெளிவாக புரியவைக்கமுடியவதில்லை. ஆதலால் கல்லூரியில் பாடத்தை கவனித்த பின் அதை இங்கே காணொளி மூலமாக காணும் போது இன்னும் தெளிவாவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். 10 நிமிட காணொளியில் சிறிய சிறிய சந்தேகங்கள் கூட நாம் கேட்காமலயே தெளிவாக்கி விடுகிறார்

தன் 33 வயதிற்குள் B.S in mathematics, B.S in electrical engineering, B.S in computer science, M.S. in electrical engineering, M.S in  computer science மற்றும் MBA வரை படித்திருக்கும் இவர் நான்கு வருடங்களுக்கு முன் தன் உறவினரின் குழந்தை கணக்கு பாடம் மிகவும் கடினமாக இருப்பதாக கூற, அக்குழந்தைக்கு கணக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தவர் தான்...... அதன் மூலம் கிடைத்த ஆதரவுகள் மற்றும் கடிதங்கள் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. வெறும் கணக்கு பாடத்திற்கு மட்டும் மாதம் கட்டணங்களை உருவும் ஆசிரியர்களுக்கிடையே இவர் இலவசமாக கற்றுக்கொடுக்க தொட்டிருக்கும் பாடங்களை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. Algebra, biology, physics, history, chemistry, linear algebra, trigonometry, arithmetic, pre calculus, statistics, geometry, probability, calculus, brain teasers, current economics, banking and money, finance, physics, differential equation இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எலக்ட்ரானிக் கரும்பலகை மூலம் இவர் நம் தோள்களுக்கு பின்னே பாடத்தை நடத்துவது ஒன்றும் இணைய உலகிற்கு புதிதானது அல்லவே. ஆனால் மாணவரை தன் பக்கம் ஈர்த்து பாடத்தின் மீது கவனம் கொண்டு வர இவர் செய்யும் எளிமையான வழிமுறைகளை கண்டு பல பல்கலை கழகங்களே மூக்கின் மேல் விரலை வைக்கின்றன.  பல பல்கலை கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களுக்காக இவரை உரையாற்ற அழைத்துள்ளனர்.

யூடியூப் தளம் கொடுத்துள்ள வெறும் 10 நிமிடங்களில் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு எளிமையாக கற்றுக்கொடுப்பது சவாலாக இருப்பதாக கூறும் இவர், வகுப்பறையில் மாணவர்களை திசைதிருப்பாமல் பாடம் எடுப்பதை போலவே இதுவும் கடினம் என்கிறார். ஆசிரியர் பணியை மிகவும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். மேலும் ஆப்ரிக்க கண்டங்களில் இணைய வசதி கூட இல்லாத கிராமங்களுக்கு கல்வியறிவு அளிக்க சென்ற குழுக்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளார்.



இந்தியா,ஆப்பிரிக்கா,அமெரிக்கா,வளைகுடா,இங்கிலாந்து என உலகம் முழுவதும் விரிந்துள்ள இவருடைய மாணவர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக பேட்டிகளும், பின்னூட்டங்களும் கொடுத்துள்ளனர். வகுப்பறையில் கேள்வி கேட்க கூச்சப்படும் பல மாணவர்கள் இவரது தளத்திற்கு உடனடியாக சென்று தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்கின்றனர். மைக்ரோசாஃட் இவருக்கு Microsoft education award (tech) கொடுத்துள்ளது. இவர் ஒரு இந்திய வம்சாவளியாக இருப்பது கொஞ்சம் நமக்கு பெருமையளிக்க கூடியதாகவும் உள்ளது.

இது இவரின் தளம்

CNN-ல் சல்மான் கான்


அவரது தளத்தை தெரிந்த மாணாக்கர்களுக்கு தெரிவியுங்கள். பயனடையட்டும்.

27 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நல்ல மணியான அறிமுகம் தான்யா தேவுடு,எனக்கும் கணக்கு வராது,ஆனா நான் நல்லா கணக்கு பண்னுவேன்.ஹஹஹஹ

ஆயில்யன் said...

எஸ் பாஸ் சென்ற வாரம் எங்கோ இந்த செய்தியினை கொஞ்சமாக பார்த்த ஞாபகம் நிச்சயம் ஆச்சர்யமாகவே இருந்தது எத்தனையோ பணிகளுக்கிடையில் இப்படி ஒரு விசயம் சூப்பரூ! :)


நிறைய தகவல்கள் தந்திருக்கீங்க பாஸ் முடிஞ்சா எனக்கு வரவே வராதுன்னு நினைச்ச கணக்கெல்லாம் இப்ப டிரை பண்ணி பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன் ! - டெரர் முடிவுதான்னு ஃபீல் பண்றீங்களா? :)

goma said...

அவர் தளம் சென்று பேசிக் அல்ஜிப்ரா,ட்ரிக்னாமெட்ரி கற்றுக் கொண்டு வந்து பின்னூட்டம் இடுகிறேன்.
கணித தளம் காட்டியதற்கு தாங்ஸ்

வினோத்கெளதம் said...

நன்றிங்கனா..நானும் கணக்கு பண்ணிட்டு வரேன்..

☀நான் ஆதவன்☀ said...

@கார்த்திகேயன்

நன்றி தேவுடு
-------------------------------------
@ஆயில்ஸ்

பாருங்க பாஸ். உபயோகமா இருக்கும் :)
-------------------------------------
@கோமா

:)))) நன்றிங்க
------------------------------------
@வினோத்

ரைட்டுங்கண்ணா :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல அறிமுகம் , நன்றி

நான் கூட பொண்ண கணக்குக்கு ட்யூசன் போட்டுட்டேன்..

கவிதா | Kavitha said...

நல்ல தேவையான தகவல், நன்றி ஆதவன்.

சல்மான்கான் னு தலைப்பை பார்த்ததும் முதல்ல ஹிந்தி நடிகர் பற்றியதுன்னு நினைச்சேன்... :)

கும்க்கி said...

ரொம்ப நன்றிங்க ஆதவரே.,

ஹூம்...கொஞ்ச காலம் லேட்டா பொறந்திருந்தா நமக்கும் பயன்பட்டிருக்கும்....டூ லேட்.

கண்ணா.. said...

அட்டகாசமான பகிர்வு... தல...

நானும் அங்க போயி கணக்கு பண்ணிட்டு வார்ரேன்.....

//khan academy என்ற பெயரில் ஒரு சிறிய கல்வி கூடமே இணையத்தில் இலவசமாக நடத்துகிறார்//

கிரேட்......

சிட்டுக்குருவி said...

நல்ல தகவல்

:))

ச.செந்தில்வேலன் said...

அருமையான பதிவு!!

நல்ல அறிமுகம். நன்றி.

Chitra said...

Thats super! Good news too!

VELU.G said...

பயனுள்ள அறிமுகம் நன்றி

வித்யா said...

பகிர்விற்கு நன்றி.

சந்தோஷ் = Santhosh said...

நல்ல பகிர்வுடா மாப்பி.. முடிந்த வரையில் இந்த செய்தியை பரப்புவோம்..

சுல்தான் said...

மிக நல்ல தகவல்கள். நன்றி. சல்மான் கான் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

சின்ன அம்மிணி said...

அருமையான அறிமுகம். எனக்குக்கூட கணக்கெல்லாம் மறந்து போச்சு

நாஞ்சில் பிரதாப் said...

இன்னிக்குத்தாய்யா... உருப்படியா ஒரு பதிவைப்போட்டிருக்கு.... செஞ்சிடுவோம்...

இவ்ளோ கத்துக்கொடுக்கறாரே... இவர் தலைல ஒரு மூளை இருக்கா ரெண்டு மூளை, இருக்கா??? அதுசரி உன்கிட்டபோய் கேட்டேம்பாரு... உங்ககிட்டதான் ஒண்ணுகூட இல்லயே...

R.Gopi said...

ஏதேதோ ஃபார்வர்ட் மெயில்ல வருது... எதை எதையோ அங்க படிச்சேன்... இங்க படிச்சேன்னு ப்ளாக்ல எழுதி கொல்ற இந்த நேரத்தில் அருமையான ஒரு விஷயத்தை பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்....

தொடர்ந்து இது போன்ற நல்ல விஷயங்களை பகிருங்கள்...

நேரம் கிடைச்சா, இங்கேயும் வந்து பாருங்க.....

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

கோபிநாத் said...

நல்ல பகிர்வு டா ஆதவா ;-))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நான் படிக்கும் போது தெரிஞ்சிருந்தா,
MA231ல நாலு அட்டெம்ப்ட் வச்சுருக்க மாட்டேன்.
ஆனா இது வரைக்கும் லேப்லாஸ், போரியர் ட்ரான்ஸ்ஃபார்ம் எதுக்கு படிச்சேன்னு தெரியல!!!!

ஹுஸைனம்மா said...

Good info. Thanks for sharing.

Hope your experience with his lessons made you to share this with all!! :-))

Indhira said...

அசத்தலான பதிவு..
அருமையான தகவல்கள்..
வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

@முத்தக்கா & கவிதாக்கா

நன்றிக்கா :)
------------------------------------
@கும்க்கி

தல இதை உங்களுக்கு தெரிஞ்ச இணையம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு சொல்லுங்க :)
------------------------------------
நன்றி கண்ணா

நன்றி வாணி

நன்றி செந்தில்

நன்றி சித்ரா

நன்றி வேலு

நன்றி வித்யா

ரைட்டு சந்தோஷ் மாப்பி :)

நன்றி சுல்தான் பாய் :)

எளிமையா கத்துக்கலாம் அம்மணி :)

டாய்ய்ய்ய்ய் நேர்ல மாட்டு மவன நீ காலிடா பிரதாப்பு :)

நன்றி R.கோபி :)

நன்றி தல

பாலா அதெல்லாம் எப்பவாவது உபயோகப்படும். நாம தேர்ந்தெடுக்குற ஃபீல்டை பொருத்து உபயோகப்படும்ல :)

@ஹூஸைனம்மா - நன்றி & கககபோ(ங்க) :))

நன்றி இந்திரா

pinkyrose said...

ரொம்ப ரொம்ப நன்றி சார்!

குப்பை தொட்டின்னு பேரு வச்சுட்டு இப்படி ஒரு பயனுள்ள பதிவு எங்கயோ இடிக்குது...

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு ஆதவன்.

நல்ல கல்வி பணி செய்யும் சல்மானுக்கு வாழ்த்துக்கள்.

kanavu said...

பயனுள்ள தகவல். மிக்க நன்றி

Related Posts with Thumbnails