வாட் ஹேப்பன் ஆதவன்? (பஞ்சாமிர்தம்)

ஒரு மாசம் விடுமுறையும் கொடுத்திட்டு கூட பிரச்சனையும் கொடுத்து அனுப்பிச்சு கம்பெனி. பாஸ்போர்ட் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்ததை சரியா கவனிக்காம அப்படியே ஏர்போர்ட்டுக்கு போனா நேரா இமிகிரேசன் ஆபிஸ்ல உட்கார வச்சுட்டாங்க. மூனு பேரு முக்காமணி நேரமா முன்னூறு கேள்விய மூச்சு முட்டுறவரைக்கும் கேட்டுட்டு முட்டிக்கு முட்டி தட்டாம அடுத்த தடவை பாஸ்போர்ட்டை மாத்திட்டு வரனும்னு முறைச்சுட்டு அனுப்பினாங்க. முணுமுணுப்போட ஊருக்கு போய் சேர்ந்தேன். முகத்தை உம்முன்னு வச்சுகிட்டு சென்னையில இறங்கினா டேமேஜ் ஆன பாஸ்போர்ட்டை சென்னையில கண்டுக்கவே இல்ல! (என்ன தான் இருந்தாலும் நம்ம நாடு நம்ம நாடு தான்).

ஊருக்கு போன ஒரு வாரம் பதிவர் கலையரசன் கண்ணாலம், தூக்கம் சாப்பாடுன்னு எந்த கவலையும் இல்லாம குழந்தை மாதிரி சந்தோசமா தான் இருந்தேன். பாஸ்போர்ட் ஞாபகமே வரல. பொறுமையா அடுத்த வாரம் போய் பார்த்தா.... நம்ம நாடு போல மோசமான நாடே இல்லைன்னு ஸ்டேட்மெண்ட் விடலாம் போல. பாஸ்போர்ட் அலுவலகத்துல தெளிவான ஒரு பதில் இல்ல. இன்னைக்கு போனா நாளைக்கு வா’ன்றாங்க. நாளைக்கு போனாலும் அதே பதில் தான். இத்தனைக்கும் எல்லா டாக்குமெண்டும் தெளிவா இருக்கு. ஆன்லைன்ல ரிஜிஸ்டர் பண்ணி கம்பெனியில இருந்து “ஆதவன் குறிப்பிட்ட தேதியில இல்லாங்காட்டி துபாயோட பொருளாதாரமே முடங்கிடும்”ன்னு கடுதாசி வேற வைச்சிருந்தேன். ஆனா அங்கிருக்க ப்யூன் கூட யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். பெரிய பெரிய கம்பெனியில பெரிய லெவல்ல இருக்குற ஆளுங்க எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைக்காக ப்யூன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்குறதைப் பார்க்க சிரிப்பாவும், வருத்தமாவும் இருந்துச்சு. DPO கையை கால பிடிச்சு இருக்குறது இரண்டு வாரம் தான் அதுக்குள்ள பாஸ்போர்ட் கிடைக்கனும்னு கெஞ்சி கூத்தாடி ஒரு வழியா புதுசை வாங்கிட்டேன்.

எல்லாம் முடிஞ்சு பாஸ்போர்ட் கைக்கு வந்த உடனே ஆபிஸ்ல இருந்து போன் வருது. “வாட் ஹேப்பன் ஆதவன்? பாஸ்போர்ட் கிடைச்சுதுதா?”

“கையிலிருந்த பாஸ்போர்ட்டை பார்த்துக்கொண்டே சிறிது நொடிகளில் “இல்ல சார் இன்னும் 10 நாள் ஆகுமாம்”ன்னேன்.
---------------------------------------------------------------------------------------------------------------
பதிவர்கள் நிறைய பேரை சந்திக்கனும்னு நினைச்சு மேற்படி டென்சன்ல எதுவுமே நடக்கல. அதையும் மீறி ஒருசில பதிவர்களை சந்திக்க முடிஞ்சது சந்தோஷமே. அதுவும் புது மாப்பிள்ளைங்க கலையரசன், மாப்பி அதி பிரதாபன் ரெண்டு பேரையும் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்.

நிறைய பதிவர்கள் போன் பண்ணி “வாட் ஹேப்பன் ஆதவன்? ஊருக்கு வந்து பார்க்காம போறீங்களே?”ன்னு கேட்டிருந்தாங்க. சந்திக்க முடியாம போனதில் வருத்தமே.
---------------------------------------------------------------------------------------------------------------
சென்னைய பார்க்கவே மிரட்சியா இருக்கு. வெயிலும், வாகனம் வெளியிடும் புகையும் முதல் இரண்டு வாரம் கஷ்டமா இருந்துச்சு. (அப்புறம் பழகிடுச்சு!) பத்து அடிக்கு ஒரு ஒயின் ஷாப்பும் சாப்பாட்டு கடையையும் சென்னையில பார்க்க முடியுது. மஞ்ச மஞ்சேள்னு எங்கு பார்த்தாலும் ஷேர் ஆட்டோக்கள். நானும் நண்பனும் வெளிய போயிட்டு ஷேர் ஆட்டோல வீட்டுக்கு போய்கிட்டு இருந்தோம். பாரீஸ் கார்னர்ல போலீஸ் ஸ்டேசன் பக்கத்துல, இரண்டு பைக்ல வந்துகிட்டு இருந்தவங்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியல பைக்கை ஓரமா நிறுத்திட்டு கட்டி புடிச்சு உருண்டு சண்டை போட்டு கிறாங்க. பக்கத்துலயே இன்னும் ரெண்டு பேரும் சண்டை போட்டுகிறாங்க(ரெண்டு பைக்கலயும் டபுள்ஸ் வந்தவங்க போல!).

அதைப் பார்த்துகிட்டே போய் வீட்டு பக்கத்துல நானும் என் ப்ரண்டும் இறங்கும் போது ஓரமா பைக்ல வந்தவன் என் மேல மோதி நிறுத்திட்டான். “!@*&^%* எங்கடா இருங்குற”ன்னு கோவத்துல கத்தினான். நண்பன் உணர்ச்சி வசப்பட்டு எகிற அவனை அடக்கி “சாரி சார். தப்பு என்மேல தான்”ன்னு அவனை கூட்டிட்டு வந்தேன். மௌனமா நடந்துகிட்டு வந்தவன் ரொம்ப நேரம் கழிச்சு “வாட் ஹேப்பன்டா”ன்னான். ஒன்னும் சொல்ல முடியல.
--------------------------------------------------------------------------------------------------------------
ராவணன் படத்துக்கு ஆறு டிக்கெட் சங்கத்துல ஸ்பெஷல் ஷோவா காலை 8 மணிக்கு ஆன்லைன்ல புக் பண்ணினோம். கடைசி நிமிசத்துல ஒருத்தன் வரலைன்னுட்டான். காலையில வேற யாரை பிடிக்கிறதுன்னு தெரியாம தியேட்டர்ல பார்த்துக்கலாம்னு வந்துட்டோம்.

டிக்கெட் கவுண்டர்லயே ரொம்ப நேரம் நின்னுகிட்டு யாராவது ஒரு ஆள் வருவாங்களான்னு நின்னுகிட்டு இருந்தேன். கொஞசம் தூரம்த்துல நண்பர்கள் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப கவுண்டர் ஒரு பெண் ஒரே ஒரு டிக்கெட் வேணும்னு கேட்க, ஆஹா நமக்கு ஒரு பெண்ணோட படம் பார்க்கிற வாய்ப்பான்னு ஓடி போய் “உங்களுக்கு டிக்கெட் வேணுமா?”ன்னு பீட்டர் விட்டேன். அந்த பொண்ணு திரும்பிச்சு......

அவங்க பக்கத்துல பத்து வயசு பையன். ஆஹா பின்னாடி இருந்து பார்த்து ஏமாந்துட்டோமேன்னு அழகு தமிழ்ல “என்கிட்ட டிக்கெட் இருக்கு 75 ரூவா கொடுங்கன்னேன்” இதையெல்லாம் தூரமா இருந்து பார்த்த பசங்க “டேய்ய்ய்ய்ய் ஆதவன் டிக்கெட்டை ஒரு பொண்ணுக்கு கொடுத்திருக்காண்டா....”னு ரொம்ப எதிர்பார்ப்பு எகிறி ”அந்த பொண்ணு பக்கத்துல நான் தான் உட்காருவேன், இல்ல நான் தான்”ன்னு பயங்கர சண்டை.

சண்டை போட்டு சீட்டை பிடிக்கிறதை விட இம்பரஸ் பண்ணி சீட்டை பிடிக்கலாம்னு வினோத்ன்ற நண்பன் நேர எங்ககிட்ட வந்தான். “வாட் ஹேப்பன் ஆதவா?”னு அவன் கேட்டதும் அந்த பெண்மணி திரும்பினாங்க. கூடவே பத்து வயசு பையன்.  டமால்ல்ல்ல்ல்... “இல்லடா டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுக்குறேன்”னேன். பயங்கர டென்சன்ல அவன் “டேய் அறிவு கெட்டவனே ஆன்லைனுக்கு 10 ரூவா யார் தருவா? அதையும் வாங்குடா”ன்னு கோவத்துல கத்த. அந்த பெண்மணி கொஞ்சம் மிரட்சியில 10 ரூவா கொடுத்துட்டு “அங்கிள் கூட சமத்தா படம் பார்க்கனும். நானும் டாடியும் பின்னாடி மூனு ரோ தள்ளி தான் இருப்போம். படம் முடிஞ்சதும் வந்து பார்க்கிறோம்”ன்னு லக்கேஜை தள்ளிட்டு போயிட்டாங்க. “ஙே!”
---------------------------------------------------------------------------------------------------------------
”தம்பிக்கு ‘லா’ படிக்கனும்னு ஆசை இருந்துச்சா?”

“இல்லைங்களே!”

“பெரிய ப்ரொபஸரா ஆகனும்னு?”

”இல்லைங்களே!’

”அஷ்டத்துமல ராகுவும் எட்டாவது இடத்துல கேதுவும் இருக்குறதால நீங்க லா படிச்சிருந்தாலோ இல்ல ப்ரொபஸரா போயிருந்தாலோ இந்நேரம் எங்கயோ போயிருப்பீங்க தம்பி”

“அப்படியா?” வாய் பிளக்கிறேன்

”அப்படியே தம்பிக்கு கல்யாணம் எப்ப பண்ணலாம்னு பார்த்து சொல்லுங்களேன்” இது அம்மா

“அதுக்கென்னம்மா அவசரம். இப்ப சுக்ரன் இருக்குற நிலைமையில தம்பிக்கு படிக்கிறதுல ஆர்வம் அதிகம். தம்பி என்னென்ன படிக்க ஆசைப்படுதோ அதை படிக்கட்டும். இன்னும் நாலைஞ்சு வருசத்துல சுக்ரன் இடம் மாறுகிறான். அப்ப பார்த்துகிட்டா போச்சு”

“நாலஞ்சு வருசமா?..........................................” கண்ணை கட்டியது.

அதுக்கப்புறம் அம்மா “ஏலே தம்பி வாட் ஹேப்பனு?”ன்னு கேட்டது எல்லாம் லோ வாய்ஸ்ல தான் கேட்டுச்சு.

42 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஹுஸைனம்மா said...

அம்மா சொன்னதப் படிச்சுட்டு நான்சிரிச்ச சிரிப்புல, என்னையவும் பக்கத்திலிருந்தவரு கேட்டாரு ”வாட் ஹேப்பண்ட்?”னு!!

ஆயில்யன் said...

//இப்ப சுக்ரன் இருக்குற நிலைமையில ///

அட! 7ஜி ரெயின்போ காலனிக்கு அப்புறம் அந்த பையனை பார்க்கவே முடியலயே இப்ப எங்கே இருக்காப்புல? ரொம்ப மார்கெட் டவுனா?

ஆயில்யன் said...

அதெல்ல்லாம் சரி போன விசயம் வாட் ஹேப்பன்?

கண்ணா.. said...

வெல்கம் பேக்.....

அப்போ இந்த லீவுலயும் கல்யாணம் ஆகலையா வாட் ஹேப்பன்??????

என்னாது...பொண்ணு இனிதான் பாக்கணுமா.... அல்ரெடி செட் பண்ணி வச்சு வீட்டுல சமாதான படலத்தை ஆரம்பிச்சுருக்கற வேண்டாம்.

அன்புடன் அருணா said...

“ஏலே தம்பி வாட் ஹேப்பனு?”
கலக்கல்ஸ்!!

நாஞ்சில் பிரதாப் said...

எலே வா...மக்கா... எப்படி இருக்கே...
பாஸ்போட்டை பத்திரமா வைக்கவேணாமாடே... அதுக்க இருக்கற மதிப்பு கூட மனுசனக்கு கிடையாதுடே...

என்னது இன்னும் நாலஞ்சு வருசமா....... ஹஹஹஹ...சந்தோசமா இருக்கு...நான் இருக்கேன் மாம்சு கம்பெனிக்குக்கு கவலைப்படாதே....

Mohan said...

அப்ப ஊருக்குப் போனதிலே நத்திங் ஹேப்பன்ட்! விவரித்த விதம் மிகவும் நன்றாக இருந்தது!

அஷீதா said...

எப்படியோ உஙகளோட இந்த சென்னை ட்ரிப் பஞ்சாமிர்தம் மாதிரி பல அனுபவங்களோட இருந்துச்சு போல.

எனிவேஸ் வெல்கம் பேக்!

வால்பையன் said...

அடுத்த முறை வந்துட்டு பார்க்காம போனா நடக்குறதே வேற!

கோபிநாத் said...

அடேய் போன உடனே ஆரம்பிச்சிட்டியா....நல்லது...;)

இந்த ஜோசிக்காரன்களே இப்படி தான்டா ஆதவா...விடு..விடு ! ! !

கோபிநாத் said...

என்டா ரோடு சண்டை போட்டது எல்லாம் எழுதுறியே....நீ சென்னையில பண்ண லீலைகளை எல்லாம் யாரு சொல்லுவா...இருடி ராசா...இரு...வைக்கிறேன் ஆப்பு ;))

goma said...
This comment has been removed by the author.
Chitra said...

Jai Ho!

பாவம்ங்க.... நீங்க.....

goma said...

“கையிலிருந்த பாஸ்போர்ட்டை பார்த்துக்கொண்டே சிறிது நொடிகளில் “இல்ல சார் இன்னும் 10 நாள் ஆகுமாம்”ன்னேன்.

சுவையான
பஞ்சாமிருதத்தில், மேலே வாசித்த வாக்கியம் ஒரு சிறு கல், பல்லைப் பதம் பார்த்தது.

செய்யலாமா ,சொல்லலாமா இப்படி ?

30.6.10

கீதப்ப்ரியன் said...

தேவுடு!!!!!!!!!!!!!!!!!!!!!
ராசா வந்தியா?
ஊர்ல எல்லாரும் சுகம்தன்னே?
ரெம்ப நன்றி குரியர் சரிவீஸுக்கு,மறக்கமுடியாதது.
====
இனி பாஸ்ப்போர்டை கக்கத்தில் வைக்காதே!!!:)

செம ஐடியா பண்ணி லீவை எக்ஸ்டெண்ட் பண்ண,ப்ரில்லியண்ட்,நானாருந்தா 15நாள் சொல்லிருப்பேன்.ஆமா அந்த பாஸ்போர்ட் எதனால் டேமேஜ் ஆச்சின்னு சொல்ல்வேல்ல்லியே?
நல்ல வேளை மேப்படியானுங்க சார்ஜா ஜெயில்ல வெய்க்காம உட்டானுங்களே!!!

கூகிளில் லாகின் ப்ராப்ளெம் இருக்கு
அதான் அனானியா போட்டிருக்கேன்.
ஓட்டெல்லாம் அப்போவே போட்டேன்.

நல்லா சாப்பிட்டு உடம்பை ஏத்தினியா?
வீட்ல பாக்காட்டி என்னையா?
இங்க ஷார்ஜால இல்லாத பொண்ணா?:)

ஈரோடு கதிர் said...

|| தம்பிக்கு ‘லா’ படிக்கனும்னு ||

நல்லவேள எந்த ”லா”கிட்டேயும் மாட்டலை

Sukumar Swaminathan said...

என்னா தல... இவ்ளோ தூரம் வந்துட்டு... பார்க்காம போயிருக்கீங்க..

வினோத்கெளதம் said...

என்னமோ போ ஆதவா..இன்னும் நாலஞ்சு வருஷமா....!!!

Anonymous said...

அப்பாடா, கொடுத்த காசுக்கு எங்க அந்த ஜோசியகாரர் மாத்தி சொல்லிடுவாரான்னு டென்சனா இருந்தேன். பரவாயில்லை... கரீட்டாத்தான் சொல்லிருக்கார்...:)))

அதி பிரதாபன் said...

4 வருசமா? அவ்வ்வ்வ்வ்....

Anonymous said...

எனக்கு உங்க sence of humar ரொம்ப பிடிச்சிருக்கு. அதுவும் அந்த cinema theatre joke ரொம்பவே நல்லா இருந்தது. சீக்கரமே உங்களுக்கு கல்யாணம் நடக்க என்னோட வாழ்த்துக்கள்.

நன்றி!

நட்புடன் நந்தா

Anonymous said...

நாலு வருசமெல்லாம் ஒரு மேட்டரா.. என்ன நாலு நாலு நாலுன்னு போகாம பார்த்துக்கனும் :))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இதுக்குதான் ஊருக்கு போகும்போது "சரக்கு" வாங்கிட்டு போகணும்!!!
"வாட் ஹேப்பன் ஆதவன்?" யாராவது கேட்டா ஹேங்ஓவர்ன்னு சொல்லி சமாளிச்சுருக்கலாம்!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

/// மயில் said...

அப்பாடா, கொடுத்த காசுக்கு எங்க அந்த ஜோசியகாரர் மாத்தி சொல்லிடுவாரான்னு டென்சனா இருந்தேன். பரவாயில்லை... கரீட்டாத்தான் சொல்லிருக்கார்...:))) ; நாலு வருசமெல்லாம் ஒரு மேட்டரா.. என்ன நாலு நாலு நாலுன்னு போகாம பார்த்துக்கனும் :)) ///

கொலவெறில இருக்காங்க பாஸ் உங்க மேல!!!

kanavu said...

sirippu adakka mudyala

அகமது சுபைர் said...

கல்யாணத்துக்கு தானே 4 வருசம் வெயிட் பண்ணனும்??? :-)

குசும்பன் said...

ஆக இந்த முறையும் ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி வீட்டில் சொல்லவில்லை! இன்னும் எவ்வளோ நாள் தான் அலைபாயுதே மாதிரி இருப்ப ஆதவா?

தாரணி பிரியா said...

நாலு வருசம் ஒரு பெரிய மேட்டரா புள்ள ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கும் போது வீட்டுல சொல்லிங்க ஆதவன். வீட்டலயும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க :)

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நான் தான் தெரியாம பின்னூட்டம் போட்டனா???

போய் பிள்ளகுட்டிய படிக்க வையுங்க!!!

மின்னுது மின்னல் said...

::))

Gayathri said...

அப்பாடா வந்துட்டீங்களா?
உங்க வலைபதிவுகள் ரொம்ப நகைச்சுவையா அருமயா இருக்கு.உங்க வலைபதிவுத்தான் நான் முதல் முதல்ல படிச்ச தமிழ் வலைபதிவு..அதே சூட்டேட நானும் ஒன்னும் ஆரம்பிச்சுட்டேன்! படிச்சுபாத்து உங்க கருத்துக்களை மறக்காம எழுதுங்க..
http://funaroundus.blogspot.com

☀நான் ஆதவன்☀ said...

@ஹூஸைனம்மா

:)))) சிரிச்சுகிட்டே விடுமுறைய கொண்டாட்டு வாங்க
-------------------------------------
@ஆயில்ஸ்

நத்திங் ஹேப்பண்ட் பாஸ் :))
-------------------------------------
@கண்ணா

தல புரளிய கிளப்பிவிட்டு பார்க்க ஆரம்பிக்கிறவங்களையும் நிறுத்திடுவீங்க போலயே :)
-----------------------------------
@அருணா

நன்றிங்க
-----------------------------------
@பிரதாப்பு

நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாரும் பொம்மை :(
-----------------------------------
@மோகன்

நன்றி மோகன் :)
-----------------------------------
@அஷீதா

நன்றி அஷீதா
-----------------------------------
@வால்பையன்

அடுத்தமுறை கண்டிப்பா ஈரோடு ட்ரிப் இருக்கு தல. மீட் பண்ணிடுவோம்
-----------------------------------
@ கோபிநாத்

தல பப்ளிக்! பப்ளிக்.. கூல்டவுன் கூல்டவுன்
-----------------------------------
@சித்ரா

:) இதுவும் கடந்து போகும்ங்க :))
-----------------------------------
@கோமா

பெருசா எல்லாம் ஏமாத்தலீங்க. சந்தோஷமா போக வேண்டிய லீவு டென்சனா போனனால அந்த லீவு அதிகமா எடுத்துகிட்டேன். அதுவுமில்லாம பாஸ்போர் டேமேஜ் ஆனதுக்கு முக்கிய காரணமே கம்பெனி தான். அதுனால தவறு பெருசா தெரியலங்க :)
-----------------------------------
@கார்த்திகேயன்

தேவுடு நீ எங்கயோ போயிட்ட போ :)
-----------------------------------
@கதிர்

அதே அதே கதிர் :))
-----------------------------------
@சுகுமார் சுவாமிநாதன்

டோண்ட் ஒர்ரி தல....நெக்ஸ்ட் கண்டிப்பா மீட் பண்றோம் :)

☀நான் ஆதவன்☀ said...

@வினோத்

ரொம்ப சந்தோஷப்படாத மவனே.. அடுத்த வருஷமே ஸ்வீட் கொடுத்தாலும் கொடுக்கலாம் :)
-------------------------------------
@மயில்

இது வெளிநாட்டு சதின்ல நினைச்சே? அப்ப நீங்க தான் அந்த பாகிஸ்த்தான் காரரா? :)
-----------------------------------
@அதிபிரதாபன்

மாம்ஸ் வேண்டிக்கோ :)
-----------------------------------
@பாலா

ஆமா பாலா...இது மர்டர் வெறி தான் :)
-----------------------------------
நன்றி கனவு
-----------------------------------
@ நந்தா

நன்றி நந்தா :)
-----------------------------------
@சுபைர்

டாய்ய்ய்ய்ய் நல்ல புள்ளைய கெடுக்காத ஆமா
-----------------------------------
@குசும்பன்

அட! நல்ல பையனைப் பத்தி தப்பு தப்பா புரளிய கிளப்பி விடுறதுக்குன்னே ஒரு கும்பல் இருக்குதுப்பா.
-----------------------------------
@தாரணிப்ரியா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
-----------------------------------
@ஜெய்லானி

விருதுக்கு ரொம்ப நன்றிங்க ஜெய்லானி
-----------------------------------
@மின்னல்ல்ல்ல்ல்ல்

:)))
-----------------------------------
@காயத்ரி

மிக்க சந்தோஷம் காயத்ரி. இனி அடிக்கடி உங்க கடைக்கு வருகிறேன் :)

Anonymous said...

//குசும்பன் said...

ஆக இந்த முறையும் ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி வீட்டில் சொல்லவில்லை! இன்னும் எவ்வளோ நாள் தான் அலைபாயுதே மாதிரி இருப்ப ஆதவா?//

:)

அப்ப அடுத்த விடுமுறைல ரங்க்ஸ் ஆக வாழ்த்துக்கள்

Anonymous said...

லேட்டா வந்தாலும் கலக்கிட்டீங்க..
எங்க போயிட்டீங்க?? வாட் ஹேப்பண்ட்?

goma said...

என் பதிவிற்கு நீங்கள் அனுப்பிய பின்னூட்டம் ஏதோ காரணத்தால் பின்னூட்ட பெட்டிக்குள் நுழைய வில்லை[சம் டெக் ப்ரொப்ளம்]

காத்திருக்கிறேன்.6 பின்னூட்டங்கள் க்யூவில் காத்திருக்கின்றன

வருகைக்கு நன்றி

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.

Gayathri said...

வாட் ஹேப்பன் ஆதவன்? திரும்ப எங்க பொனேள்..உங்க அடுத்த பதிவிர்க்காக காத்துக்கிட்டு இருக்கேன்.

Gayathri said...

புது பதிவு எழுதிருக்கேன் படிச்சுட்டு உங்க கருத்துக்களை எழுதிட்டு அப்படியே பக்கத்துல நடக்கற வாக்கெடுப்புபில் வோட் போடுங்க ப்ளீஸ்..நன்றி

pinkyrose said...

விழுந்து விழுந்து சிரிச்சு பல்லு சுளுக்கிடுச்சுங்க...

Anonymous said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..

பெற்றுக்கொள்ளவும்.

Related Posts with Thumbnails