வாட் ஹேப்பன் ஆதவன்? (பஞ்சாமிர்தம்)

ஒரு மாசம் விடுமுறையும் கொடுத்திட்டு கூட பிரச்சனையும் கொடுத்து அனுப்பிச்சு கம்பெனி. பாஸ்போர்ட் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்ததை சரியா கவனிக்காம அப்படியே ஏர்போர்ட்டுக்கு போனா நேரா இமிகிரேசன் ஆபிஸ்ல உட்கார வச்சுட்டாங்க. மூனு பேரு முக்காமணி நேரமா முன்னூறு கேள்விய மூச்சு முட்டுறவரைக்கும் கேட்டுட்டு முட்டிக்கு முட்டி தட்டாம அடுத்த தடவை பாஸ்போர்ட்டை மாத்திட்டு வரனும்னு முறைச்சுட்டு அனுப்பினாங்க. முணுமுணுப்போட ஊருக்கு போய் சேர்ந்தேன். முகத்தை உம்முன்னு வச்சுகிட்டு சென்னையில இறங்கினா டேமேஜ் ஆன பாஸ்போர்ட்டை சென்னையில கண்டுக்கவே இல்ல! (என்ன தான் இருந்தாலும் நம்ம நாடு நம்ம நாடு தான்).

ஊருக்கு போன ஒரு வாரம் பதிவர் கலையரசன் கண்ணாலம், தூக்கம் சாப்பாடுன்னு எந்த கவலையும் இல்லாம குழந்தை மாதிரி சந்தோசமா தான் இருந்தேன். பாஸ்போர்ட் ஞாபகமே வரல. பொறுமையா அடுத்த வாரம் போய் பார்த்தா.... நம்ம நாடு போல மோசமான நாடே இல்லைன்னு ஸ்டேட்மெண்ட் விடலாம் போல. பாஸ்போர்ட் அலுவலகத்துல தெளிவான ஒரு பதில் இல்ல. இன்னைக்கு போனா நாளைக்கு வா’ன்றாங்க. நாளைக்கு போனாலும் அதே பதில் தான். இத்தனைக்கும் எல்லா டாக்குமெண்டும் தெளிவா இருக்கு. ஆன்லைன்ல ரிஜிஸ்டர் பண்ணி கம்பெனியில இருந்து “ஆதவன் குறிப்பிட்ட தேதியில இல்லாங்காட்டி துபாயோட பொருளாதாரமே முடங்கிடும்”ன்னு கடுதாசி வேற வைச்சிருந்தேன். ஆனா அங்கிருக்க ப்யூன் கூட யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். பெரிய பெரிய கம்பெனியில பெரிய லெவல்ல இருக்குற ஆளுங்க எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைக்காக ப்யூன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்குறதைப் பார்க்க சிரிப்பாவும், வருத்தமாவும் இருந்துச்சு. DPO கையை கால பிடிச்சு இருக்குறது இரண்டு வாரம் தான் அதுக்குள்ள பாஸ்போர்ட் கிடைக்கனும்னு கெஞ்சி கூத்தாடி ஒரு வழியா புதுசை வாங்கிட்டேன்.

எல்லாம் முடிஞ்சு பாஸ்போர்ட் கைக்கு வந்த உடனே ஆபிஸ்ல இருந்து போன் வருது. “வாட் ஹேப்பன் ஆதவன்? பாஸ்போர்ட் கிடைச்சுதுதா?”

“கையிலிருந்த பாஸ்போர்ட்டை பார்த்துக்கொண்டே சிறிது நொடிகளில் “இல்ல சார் இன்னும் 10 நாள் ஆகுமாம்”ன்னேன்.
---------------------------------------------------------------------------------------------------------------
பதிவர்கள் நிறைய பேரை சந்திக்கனும்னு நினைச்சு மேற்படி டென்சன்ல எதுவுமே நடக்கல. அதையும் மீறி ஒருசில பதிவர்களை சந்திக்க முடிஞ்சது சந்தோஷமே. அதுவும் புது மாப்பிள்ளைங்க கலையரசன், மாப்பி அதி பிரதாபன் ரெண்டு பேரையும் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்.

நிறைய பதிவர்கள் போன் பண்ணி “வாட் ஹேப்பன் ஆதவன்? ஊருக்கு வந்து பார்க்காம போறீங்களே?”ன்னு கேட்டிருந்தாங்க. சந்திக்க முடியாம போனதில் வருத்தமே.
---------------------------------------------------------------------------------------------------------------
சென்னைய பார்க்கவே மிரட்சியா இருக்கு. வெயிலும், வாகனம் வெளியிடும் புகையும் முதல் இரண்டு வாரம் கஷ்டமா இருந்துச்சு. (அப்புறம் பழகிடுச்சு!) பத்து அடிக்கு ஒரு ஒயின் ஷாப்பும் சாப்பாட்டு கடையையும் சென்னையில பார்க்க முடியுது. மஞ்ச மஞ்சேள்னு எங்கு பார்த்தாலும் ஷேர் ஆட்டோக்கள். நானும் நண்பனும் வெளிய போயிட்டு ஷேர் ஆட்டோல வீட்டுக்கு போய்கிட்டு இருந்தோம். பாரீஸ் கார்னர்ல போலீஸ் ஸ்டேசன் பக்கத்துல, இரண்டு பைக்ல வந்துகிட்டு இருந்தவங்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியல பைக்கை ஓரமா நிறுத்திட்டு கட்டி புடிச்சு உருண்டு சண்டை போட்டு கிறாங்க. பக்கத்துலயே இன்னும் ரெண்டு பேரும் சண்டை போட்டுகிறாங்க(ரெண்டு பைக்கலயும் டபுள்ஸ் வந்தவங்க போல!).

அதைப் பார்த்துகிட்டே போய் வீட்டு பக்கத்துல நானும் என் ப்ரண்டும் இறங்கும் போது ஓரமா பைக்ல வந்தவன் என் மேல மோதி நிறுத்திட்டான். “!@*&^%* எங்கடா இருங்குற”ன்னு கோவத்துல கத்தினான். நண்பன் உணர்ச்சி வசப்பட்டு எகிற அவனை அடக்கி “சாரி சார். தப்பு என்மேல தான்”ன்னு அவனை கூட்டிட்டு வந்தேன். மௌனமா நடந்துகிட்டு வந்தவன் ரொம்ப நேரம் கழிச்சு “வாட் ஹேப்பன்டா”ன்னான். ஒன்னும் சொல்ல முடியல.
--------------------------------------------------------------------------------------------------------------
ராவணன் படத்துக்கு ஆறு டிக்கெட் சங்கத்துல ஸ்பெஷல் ஷோவா காலை 8 மணிக்கு ஆன்லைன்ல புக் பண்ணினோம். கடைசி நிமிசத்துல ஒருத்தன் வரலைன்னுட்டான். காலையில வேற யாரை பிடிக்கிறதுன்னு தெரியாம தியேட்டர்ல பார்த்துக்கலாம்னு வந்துட்டோம்.

டிக்கெட் கவுண்டர்லயே ரொம்ப நேரம் நின்னுகிட்டு யாராவது ஒரு ஆள் வருவாங்களான்னு நின்னுகிட்டு இருந்தேன். கொஞசம் தூரம்த்துல நண்பர்கள் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப கவுண்டர் ஒரு பெண் ஒரே ஒரு டிக்கெட் வேணும்னு கேட்க, ஆஹா நமக்கு ஒரு பெண்ணோட படம் பார்க்கிற வாய்ப்பான்னு ஓடி போய் “உங்களுக்கு டிக்கெட் வேணுமா?”ன்னு பீட்டர் விட்டேன். அந்த பொண்ணு திரும்பிச்சு......

அவங்க பக்கத்துல பத்து வயசு பையன். ஆஹா பின்னாடி இருந்து பார்த்து ஏமாந்துட்டோமேன்னு அழகு தமிழ்ல “என்கிட்ட டிக்கெட் இருக்கு 75 ரூவா கொடுங்கன்னேன்” இதையெல்லாம் தூரமா இருந்து பார்த்த பசங்க “டேய்ய்ய்ய்ய் ஆதவன் டிக்கெட்டை ஒரு பொண்ணுக்கு கொடுத்திருக்காண்டா....”னு ரொம்ப எதிர்பார்ப்பு எகிறி ”அந்த பொண்ணு பக்கத்துல நான் தான் உட்காருவேன், இல்ல நான் தான்”ன்னு பயங்கர சண்டை.

சண்டை போட்டு சீட்டை பிடிக்கிறதை விட இம்பரஸ் பண்ணி சீட்டை பிடிக்கலாம்னு வினோத்ன்ற நண்பன் நேர எங்ககிட்ட வந்தான். “வாட் ஹேப்பன் ஆதவா?”னு அவன் கேட்டதும் அந்த பெண்மணி திரும்பினாங்க. கூடவே பத்து வயசு பையன்.  டமால்ல்ல்ல்ல்... “இல்லடா டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுக்குறேன்”னேன். பயங்கர டென்சன்ல அவன் “டேய் அறிவு கெட்டவனே ஆன்லைனுக்கு 10 ரூவா யார் தருவா? அதையும் வாங்குடா”ன்னு கோவத்துல கத்த. அந்த பெண்மணி கொஞ்சம் மிரட்சியில 10 ரூவா கொடுத்துட்டு “அங்கிள் கூட சமத்தா படம் பார்க்கனும். நானும் டாடியும் பின்னாடி மூனு ரோ தள்ளி தான் இருப்போம். படம் முடிஞ்சதும் வந்து பார்க்கிறோம்”ன்னு லக்கேஜை தள்ளிட்டு போயிட்டாங்க. “ஙே!”
---------------------------------------------------------------------------------------------------------------
”தம்பிக்கு ‘லா’ படிக்கனும்னு ஆசை இருந்துச்சா?”

“இல்லைங்களே!”

“பெரிய ப்ரொபஸரா ஆகனும்னு?”

”இல்லைங்களே!’

”அஷ்டத்துமல ராகுவும் எட்டாவது இடத்துல கேதுவும் இருக்குறதால நீங்க லா படிச்சிருந்தாலோ இல்ல ப்ரொபஸரா போயிருந்தாலோ இந்நேரம் எங்கயோ போயிருப்பீங்க தம்பி”

“அப்படியா?” வாய் பிளக்கிறேன்

”அப்படியே தம்பிக்கு கல்யாணம் எப்ப பண்ணலாம்னு பார்த்து சொல்லுங்களேன்” இது அம்மா

“அதுக்கென்னம்மா அவசரம். இப்ப சுக்ரன் இருக்குற நிலைமையில தம்பிக்கு படிக்கிறதுல ஆர்வம் அதிகம். தம்பி என்னென்ன படிக்க ஆசைப்படுதோ அதை படிக்கட்டும். இன்னும் நாலைஞ்சு வருசத்துல சுக்ரன் இடம் மாறுகிறான். அப்ப பார்த்துகிட்டா போச்சு”

“நாலஞ்சு வருசமா?..........................................” கண்ணை கட்டியது.

அதுக்கப்புறம் அம்மா “ஏலே தம்பி வாட் ஹேப்பனு?”ன்னு கேட்டது எல்லாம் லோ வாய்ஸ்ல தான் கேட்டுச்சு.
Related Posts with Thumbnails