ஒன்னாப்பு படிக்கிறதுல இருந்து பத்தாவது படிக்கிற வரைக்கும் ஆங்கிலம்னாலே ‘ஆ’ன்னு வாயப்பிளக்குற விசயமாவே இருந்துச்சு (எவன் டா அது இப்பவும் அப்படி தானேன்றது? ராஸ்கல் பிச்சு புடுவேன் பிச்சு). ஐஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் போது தான் அந்த சம்பவம் நடந்துச்சு. ஒரு கேள்விக்கு விடை தெரியாம முழிக்காத அட்லீஸ் தெரிஞ்ச கேள்வி பதிலாவது எழுதிட்டு வான்னு அக்கா அட்வைஸ் பண்ணினாங்க.
அக்கா சொன்ன மாதிரி ஒரு கேள்விக்கும் விடை தெரியில. அக்கா சொல்லிகொடுத்ததும் மறந்து போச்சு. அப்புறம் “what is your name?" "how old are you?" "what is your father?"ன்னு தெரிஞ்ச கேள்வி பதிலை எழுதி வச்சுட்டு வந்தேன். அப்பவே அக்கா சொல்லிட்டாங்க இங்கிலாந்து சரஸ்வதியே உன் நாக்குல எழுதினாலும் உனக்கு இங்கிலீஷ் வராதுடா தம்பின்னு. பத்தாவது வரைக்கும் அது தொடந்துச்சு.
அதுக்கேத்த மாதிரி என் வீட்ல யாரும் என்னைய படின்னு வற்புறுத்தியதே இல்ல. அம்மா எப்பவும் “படிக்கிற புள்ளை எங்கிருந்தாலும் படிக்கும், நான் சொல்லி தான் படிக்க போகுதா?”ன்னு எப்பவும் படின்னு சொல்லியதில்லை. பன்னிரண்டாவது எக்ஸாம் டைம்ல கூட சீரியல் ஓடிச்சு வீட்ல. அப்பா “ நீ படிக்க விருப்பமில்லைன்னு சொன்னா ஏதாவது மெக்கானிக்கல் ஷாப்ல சேர்த்திடலாம். தொழிலாவது கத்துகிடுவ”னு சொல்லிட்டாரு. ஸ்கூல்ல சுத்தம்.......... மாணவர்கள் வந்திருகாங்களா இல்லையான்னும் பார்க்கிறது கிடையாது. எப்ப வேணா போகலாம் எப்ப வேணா வரலாம். ஒரு சில வாத்தியார் வருவாங்க. மாநகராட்சி பள்ளிகூடம் அப்ப கொஞ்சம் மோசமான நிலைமையில இருந்துச்சு.
பத்தாவது வரைக்கும் எப்ப படிச்சேன்னு எனக்கு ஞாபகமே இல்லை. மதியம் 1 மணி வரை பள்ளிகூடம். அப்புறம் மூனு மணியில இருந்து எட்டு மணி வரை ஒரு இடத்துல வேலை. ஏதோ அப்பப்ப படிச்சாலும் இந்த இங்கிலீஷ் பாடம் மட்டும் சுத்தமா மண்டையில ஏறல. அப்ப தான் அப்பா ஒரு ஐடியா சொன்னாரு.
”சப்பளங்கால் போட்டு தியானம் பண்ற மாதிரி உட்கார்ந்து கிட்டு இந்த விளக்கை கொஞ்ச நேரம் பாரு. அப்புறம் கண்ணை மூடு. ஆனா உன் மனசுக்குள்ள அந்த விளக்கு எரியிறது தெரியனும். அப்படி எரியிறது கொஞ்சம் நேரத்துல அணைஞ்சுட்டா திரும்பவும் கண்ணை திறந்திட்டு உத்துப்பாரு. கொஞ்சநாள்ல மனசு ஒருநிலைப்படும். படிச்சது மனசுல நிக்கும்”. முதல்ல சிம்ரன், ரம்பா அணைஞ்சு எரிஞ்சு வந்தாலும் அப்புறம் ஆச்சர்யம்!. இது வொர்கவுட் ஆச்சு. கொஞ்சமே படிச்சாலும் மனசுல பச்சக்குன்னு ஒட்டிகிச்சு.
ஆரம்பத்திலேயே படிக்காம கடைசி நேரம் எக்ஸாம் டைம்ல நாம பண்ற அலப்பறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல... வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்கப்ப தான் நாமும் சத்தம் போட்டு ”if u put a rice on the terrace thousand crow will come....♫ if u put a rice...♫ if u putttt a rice...♫ if u puttu ♫” ன்னு ராகத்தோட இழுத்து இழுத்து பாடிகிட்டே படிக்கும் போது (ராஸ்கல்ஸ்ஸ்ஸ் இதுக்கெல்லாம அர்த்தம் கேட்பீங்க? ஓட்டுல சோத்தப்போட்டா ஆயிரம் காக்கான்னு சொன்னேன்) “பரவாயில்லையே பையன் படிக்கிறான் போலயே! நல்லா படிப்பா தம்பி.... இப்பெல்லாம் படிப்பு தான் எல்லாம்.....”ன்னு ஏதேதோ உளறிட்டு பெரிசானா கலெக்டர் வேலை வாங்கி தரேன்னு அம்மாகிட்ட உறுதிமொழி செஞ்சுட்டு போவாங்க.
நாலு மணிக்கு எழுப்பலைன்னா அப்புறம் உனக்கு நான் பிள்ளையும் இல்ல நீ அம்மாவும் இல்லன்னு பத்து மணிக்கு தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாம வீராப்பா சொல்லிட்டு படுப்போம். மத்தவீட்ல எப்படின்னு தெரியாது. எங்கம்மா க்ரெக்டா நாலுமணிக்கு கையில ஒரு டம்ளரோட வந்து “சுளீர்”னு தண்ணிய என் முகத்துல தெளிச்சுட்டு....... “எழுந்திருச்சு படிடா தம்பி”னு சொல்லிட்டு அவங்க தூங்க ஆரம்பிச்சுடுவாங்க.
ஆரம்பத்துல உட்கார்ந்து படிச்சாலும், கொஞ்சம் கொஞ்சமா தூக்கம் வர ஆரம்பிச்சு, பணக்கார சினிமா ஹீரோயின் கட்டில்ல குப்பறபடுத்துகிட்டு கால ஆட்டிகிட்டு கன்னுத்துல கையை வச்சுகிட்டு ஹீரோவை நினைக்குமே? அந்த பொஸிஷனுக்கு வந்திடுவேன். அப்புறம் கன்னத்துல இருக்குற கை தரைக்கு வந்திடும். ஆடிகிட்டு இருந்த காலும் தரைக்கு வந்திடும். அப்புறம் குப்பறபடுத்து நல்லா தூங்குவேன். அப்பவே குறட்டை விடுவேன் போல சரியா அம்மா பத்து நிமிசத்துல அதே டம்ளர்ல இருக்குற தண்ணியோட முகத்துல தெளிச்சு “தூங்காம படிடா தம்பி”ன்னு சொல்லிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுடுவாங்க. (ஒரு நாள் தூங்காம படிச்சுகிட்டு இருந்தப்ப அம்மா ஒவ்வொரு 15 நிமிசத்துக்கும் முழிச்சு டம்ளரை கையெலெடுத்து தண்ணியை என் மேல தெளிக்க ரெடியாகுறாங்கன்றது அப்ப தான் தெரிஞ்சது!)
என்ன தான் படிக்காம பரிட்சைக்கு போனாலும் காப்பி அடிக்க மட்டும் மனசே வரல. மத்த பாடத்தையெல்லாம் அழகா எழுதிட்டு ஆங்கிலத்துல திக்கி திணறி எக்ஸாம் முடிச்சேன்.
பரிட்சையெல்லாம் முடிஞ்சி அடிக்கடி தூங்கிட்டு எழுந்திருக்கும் போது, தீடீர்னு பத்திரிக்கையாளர்கள் எல்லாம் வந்து “நீங்க ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்ததுக்கு யார் காரணம்?”ன்னு கேட்குற மாதிரியெல்லாம் அடிக்கடி நினைச்சுப் பார்க்கிறப்ப தான் அம்மா அன்னைக்கு ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க. “ஏன்டா தம்பி அக்கா நோட்டெல்லாம் எடைக்கு போடுறேன். நீ பாஸாவையா? பெயிலாவையா? உன் நோட்டை போடட்டுமா வேணாமா?”ன்னு.
பரிட்சையெல்லாம் முடிஞ்சி அடிக்கடி தூங்கிட்டு எழுந்திருக்கும் போது, தீடீர்னு பத்திரிக்கையாளர்கள் எல்லாம் வந்து “நீங்க ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்ததுக்கு யார் காரணம்?”ன்னு கேட்குற மாதிரியெல்லாம் அடிக்கடி நினைச்சுப் பார்க்கிறப்ப தான் அம்மா அன்னைக்கு ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க. “ஏன்டா தம்பி அக்கா நோட்டெல்லாம் எடைக்கு போடுறேன். நீ பாஸாவையா? பெயிலாவையா? உன் நோட்டை போடட்டுமா வேணாமா?”ன்னு.
எப்படியோ பத்தாப்புல பள்ளிகூடத்துல முதல் ஐஞ்சு இடத்துல வந்து பதினொன்னாம் வகுப்பு வேற பள்ளிகூடத்துல இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்துவிட்டாங்க. ஒரே வாரம் தான் போயிருப்பேன். புத்தகத்தை எல்லாம் பார்த்துட்டு பயந்து போகவே மாட்டேன் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். அம்மாவும் அப்பாவும் அப்பவும் நிதானம் இழக்காம சொன்னார் “உன்னால படிக்க முடியலைன்னாலும் சும்மா போ. பீஸ் கட்டியாச்சு. உன்னையாரும் படிக்க சொல்லல. கட்டின பீசுக்காக ஒரு வருசம் சும்மா போயிட்டு வாயேன்”.(cool dad!)
நல்ல ஐடியாவே இருக்கேன்னு போக ஆரம்பிச்சேன்.ஆனா போன பொறவு தான் தெரிஞ்சது நான் தான் வெளிப்படையா அழுதிருக்கேன். பல பயலுவ பாத்ரூம்ல குழாயை திறந்துவிட்டுகிட்டு அழுதிட்டு இருக்கானுவன்னு. அதுவும் கணக்கு வாத்தியார்கிட்டயும் தமிழ் வாத்தியாகர்கிட்டயும் பசங்க அடிவாங்குறதை நினைச்சா செம காமெடியா இருக்கும். தமிழ் வாத்தியார் மனப்பாடச்செய்யுள் ஒவ்வொரு வரியையும் படிச்சு திரும்ப சொல்லச்சொல்லி அடிப்பாரு. பயபுள்ளைங்களுக்கு தமிழ் செய்யுளே படிக்க வரல!
நல்ல ஐடியாவே இருக்கேன்னு போக ஆரம்பிச்சேன்.ஆனா போன பொறவு தான் தெரிஞ்சது நான் தான் வெளிப்படையா அழுதிருக்கேன். பல பயலுவ பாத்ரூம்ல குழாயை திறந்துவிட்டுகிட்டு அழுதிட்டு இருக்கானுவன்னு. அதுவும் கணக்கு வாத்தியார்கிட்டயும் தமிழ் வாத்தியாகர்கிட்டயும் பசங்க அடிவாங்குறதை நினைச்சா செம காமெடியா இருக்கும். தமிழ் வாத்தியார் மனப்பாடச்செய்யுள் ஒவ்வொரு வரியையும் படிச்சு திரும்ப சொல்லச்சொல்லி அடிப்பாரு. பயபுள்ளைங்களுக்கு தமிழ் செய்யுளே படிக்க வரல!
ஒரு கட்டத்துல தான் அந்த ஆச்சர்யம் நடந்துச்சு..... தேர்வு அறையில நான் எழுதுற பேப்பர நாலு பசங்களாவது வாங்கி எழுத ஆரம்பிச்சாங்க. அடப்பாவிகளா என் பேப்பரையே பார்த்து எழுதுறதுக்கு நாலு பேரா? கண்ல தண்ணியே வந்திடுச்சு. அம்மாகிட்ட கூட பெருமையா சொன்னேன். அம்மாகூட ’ஆத்துல போற தண்ணிய அய்யா குடி அம்மா குடி’ மாதிரி போனா போகுது கொடுடா தம்பின்னாங்க.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்கும் மத்த பசங்களுக்கு பேப்பர் கொடுத்து ஹெல்ப்(?) பண்றதை பழக்கமா வச்சிருந்தேன். படம் நல்லா வரைவேன்றதால சில பேருக்கு தேர்வு அறையில அவங்க பேப்பரை வாங்கி படம் கூட வரைஞ்சு கொடுத்திருக்கேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்கும் மத்த பசங்களுக்கு பேப்பர் கொடுத்து ஹெல்ப்(?) பண்றதை பழக்கமா வச்சிருந்தேன். படம் நல்லா வரைவேன்றதால சில பேருக்கு தேர்வு அறையில அவங்க பேப்பரை வாங்கி படம் கூட வரைஞ்சு கொடுத்திருக்கேன்.
அதே மாதிரி எக்ஸாம்.... அதே விளக்கு, ராகத்தோட மனப்பாடம், காலையில நாலு மணிக்கு தண்ணிதெளிச்சு எழுப்பி விடுற அம்மா.......... ஒரு வழியா பன்னிரெண்டாம் வகுப்பும் முடிஞ்சது. இந்த தடவையும் காப்பி அடிக்க மனசு வரல. மனசு வரலைன்றதை விட அதற்குண்டான வாய்ப்பை கொடுக்கல.
ரிசல்ட் வருவதற்கு முன்தினம் இரவு அம்மாகிட்ட “மேல இன்ஜியரிங் படிக்கனும்மா. கோயமுத்தூர்க பிஎஸ்ஜி’ன்னு ஒரு காலேஜ். டூர் போனப்ப பார்த்தேன். அங்க படிக்கனும்மா. அப்புறம் அண்ணா யுனிவர்சிட்டியில எம்.ஈ படிக்கனும்மா.... ”ன்னு இன்னும் நிறைய சொல்லிகொண்டே இருந்த ஞாபகம். இடைமறித்து அம்மா ஒரு கேள்வி கேட்டது இப்பவும் ஞாபகம் இருக்கிறது.
”அப்ப உண்மையாலும் பாசாகிடுவயாடா தம்பி?”.
என்னது காலேஜ்ல எப்படி படிச்சயா?
அட போங்க பாஸ் போங்க... காலேஜ்லயாவது படிக்கிறதாவது... மரத்துல ஏறுமா நாய் நின்னுகிட்டு வேடிக்கை பார்க்குமா பேய் (பழமொழிக்கெல்லாம் அர்த்தம் கேட்டு பின்னூட்டம் போடுபவர்கள் அக்கௌவுண்ட் நம்பருக்கு 1000 ரூவா அனுப்பி வைக்கவும்)
என்னது காலேஜ்ல எப்படி படிச்சயா?
அட போங்க பாஸ் போங்க... காலேஜ்லயாவது படிக்கிறதாவது... மரத்துல ஏறுமா நாய் நின்னுகிட்டு வேடிக்கை பார்க்குமா பேய் (பழமொழிக்கெல்லாம் அர்த்தம் கேட்டு பின்னூட்டம் போடுபவர்கள் அக்கௌவுண்ட் நம்பருக்கு 1000 ரூவா அனுப்பி வைக்கவும்)
-------------------------------------------------------------------------------------------------------------
தனிப்பட்ட ஆணி இருந்து பதிவே போட முடியாம இருக்குறப்ப இப்படி ஒரு அருமையான தேர்வு பற்றிய தொடர் பதிவு வாய்ப்பைக் கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி.
இதைத்தொடர நான் அழைப்பது
53 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:
படிப்பு & எச்சாம் பத்திதானே பாஸ் ரைட்டு :)
//அதுக்கேத்த மாதிரி என் வீட்ல யாரும் என்னைய படின்னு வற்புறுத்தியதே இல்ல///
உங்க வீட்ல பொறந்திருக்கலாம் பாஸ் நானும் :(
//சப்பளங்கால் போட்டு தியானம் பண்ற மாதிரி உட்கார்ந்து கிட்டு இந்த விளக்கை கொஞ்ச நேரம் பாரு. அப்புறம் கண்ணை மூடு. ஆனா உன் மனசுக்குள்ள அந்த விளக்கு எரியிறது தெரியனும்.///
ம்ஹுக்கும் எங்கே அப்படி உக்கார்ந்தா ஊருல பார்த்த ஃபிகருங்க இப்ப எங்க எப்படி இருக்கும்ன்னு ரோலிங்க் பாஸ்!
அம்மா ஒரு கேள்வி கேட்டது இப்பவும் ஞாபகம் இருக்கிறது.”அப்ப உண்மையாலும் பாசாகிடுவயாடா தம்பி?”. //
ஹ ஹ ஹ நல்ல நகைச்சுவை. உங்கள விட உங்க அம்மாக்கு sense of humor அதிகம் பாஸ் :))
சூப்பர்.
//. கோயமுத்தூர்க பிஎஸ்ஜி’ன்னு ஒரு காலேஜ். டூர் போனப்ப பார்த்தேன்///
நாங்க எண்ட்ரன்ஸ் எக்சாம்ங்கற பேர்ல ஒரு டூர் போட்டு போயி பார்த்து வந்தோம் பாஸ் அந்த காலேஜை ஹய்யோ ஹய்யோ :))
//பணக்கார சினிமா ஹீரோயின் கட்டில்ல குப்பறபடுத்துகிட்டு கால ஆட்டிகிட்டு கன்னுத்துல கையை வச்சுகிட்டு ஹீரோவை நினைக்குமே?//
எடுத்துக்காட்டி பொருள் விளக்குகன்னு சந்தனமுல்லை சொன்னாங்களா :)
விட்டுகொடுப்பது மட்டும் நட்பல்ல
எக்ஸாம்ல பிட்டு கொடுப்பது நட்பு தான்
நல்லாருக்கு பதிவு
கலக்கல் ஆதவன்.
அந்த நடிகை மாதிரி தூங்கற விளக்கம் அட்டகாசம் ;))
ஆமா.. பழமொழியை எல்லாம் எங்க பிடிக்கறீங்க..
எப்படியோ பத்தாப்புல பள்ளிகூடத்துல முதல் ஐஞ்சு இடத்துல வந்து பதினொன்னாம் வகுப்பு //
இப்படி எல்லாம் நீங்க புரடா விட்டா நாங்க நம்பிடுவோமா...ஏன் இந்த விளம்பரம் நாங்க யாராச்சும் கேட்டோமா...நீங்க எல்லாம் பாஸ் ஆனதே பெரிய விஷயம் இதுல "முதல் அஞ்சு இடமா". stop this nonsense அப்புறம் கோவத்துல நானும் தான் ஸ்கூல் firstunnu உண்மைய சொல்ல வச்சுடாதீங்க.
அப்போ உங்களுக்கு நெசாமாவே இங்கிலிபீஸ் தெரியாத பாஸ்..டோன்ட் வொர்ரி பாஸ்..விவேகானந்தர் தொலை நிலை பள்ளியில படிங்க...ஹ ஹ ஹ...நானும் அங்க தான் படிச்சேன்...(u see now i talk englipish very good englipish with நோ நோ mistakes).
கூல் டாட் அண்ட் கூல் அம்மா..தண்ணிய ஊத்தி உங்களையும் கூலா ஆக்கிருக்காங்க.. நல்ல பேரண்ட்ஸ்
அப்போ....உண்மையான படிப்பு இப்பத்தான் ஆரம்பிச்சுருக்கா?
:-))))))))))
உங்களை விட உங்க பெற்றோர்களை தான் ரொம்ப பிடிச்சிருக்கு..
Ok ok..
//
//. கோயமுத்தூர்க பிஎஸ்ஜி’ன்னு ஒரு காலேஜ். டூர் போனப்ப பார்த்தேன்///
நாங்க எண்ட்ரன்ஸ் எக்சாம்ங்கற பேர்ல ஒரு டூர் போட்டு போயி பார்த்து வந்தோம் பாஸ் அந்த காலேஜை ஹய்யோ ஹய்யோ :)) //
அதே காலேஜ்ல தான் 4 வருஷம் படிச்சேன்னு நினைக்கிறப்போ ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா, .....................................சரி விடுங்க பாஸ்.
அருமையான அனுபவக் கட்டுரை!
எப்போவும் போல செம கூல் போஸ்ட்! சிரிச்சுகிட்டே இருக்கேன்!! உங்க ஸ்கூல் பத்தி இன்னும் சொல்லியிருக்கலாம் பாஸ்!
பைதிவே, உங்க அம்மா செம ஜால் போலயே! :)
ஓபனிங்கே செமயா இருக்கு...பாஸ்! நான் கூட ஒரு பறவை உயரத்துலே பறக்கற படத்தை ஒட்டு வச்சிருந்தேன்..அதுலே "they can..because they think they can" னோ எனன்வோ எழுதியிருக்கும்..பாதிநேரம் அந்த போஸ்டரைத்தான் பார்த்துக்கிட்டு இருப்பேன் பாஸ்! :))
/அப்பவே அக்கா சொல்லிட்டாங்க இங்கிலாந்து சரஸ்வதியே உன் நாக்குல எழுதினாலும் உனக்கு இங்கிலீஷ் வராதுடா தம்பின்னு. /
பாஸ்..அக்கா ஒரு அதிசய அக்காவா இருப்பாங்க போலிருக்கே பாஸ்! அவங்களை பத்தி ஒரு போஸ்ட் ப்லீஸ்! :-)
/வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்கப்ப தான் நாமும் சத்தம் போட்டு ”if u put a rice on the terrace thousand crow will come....♫ if u put a rice...♫ if u putttt a rice...♫ if u puttu ♫/
எனக்கு பசங்க படம் ஞாபகத்துக்கு வருதே பாஸ்! :)))
/எப்படியோ பத்தாப்புல பள்ளிகூடத்துல முதல் ஐஞ்சு இடத்துல வந்து பதினொன்னாம் வகுப்பு வேற பள்ளிகூடத்துல இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்துவிட்டாங்க. /
வாழ்த்துகள் பாஸ்! :-))
/அம்மாகிட்ட “மேல இன்ஜியரிங் படிக்கனும்மா. கோயமுத்தூர்க பிஎஸ்ஜி’ன்னு ஒரு காலேஜ்./
சென்னையிலேயும் சென்னையை சுத்தியும் அத்தனை காலேஜ் இருக்கப்போ ஏன் கோவை...அதுவும் அந்த காலேஜ்? இதை ஆயில்ஸ்தான் கேக்க சொன்னார்! :))))
அருமையான அனுபவக் கட்டுரை!
உங்க பெற்றோர்களை ரொம்ப பிடிச்சிருக்கு.
இங்கயும் சேம் பிளட் தான்,படிக்கற காலத்துல படிக்காம எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டுக்கிட்டு இருக்கோம்யா.நல்லா படிங்க தம்பி
// ஒன்னாப்பு படிக்கிறதுல இருந்து பத்தாவது படிக்கிற வரைக்கும் ஆங்கிலம்னாலே ‘ஆ’ன்னு வாயப்பிளக்குற விசயமாவே இருந்துச்சு //
வாவ்.. அப்படியே சிலிர்திடுச்சு தல... பதிவோட டைட்டில் அர்த்தம் இப்போ நல்லா புரியுது.. SAME BLOOD...
சேம்ம்ம்ம்... பிளட்....
சும்மாச் சொல்லக்கூடாது! உங்கம்மாவைப் பத்தி இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாமோன்னு தோணிச்சு! சரியான பகிர்வு! அங்கங்கே இயல்பா நகைச்சுவையோட சரளமாக பக்கத்துலே உட்கார்ந்து கேட்டா மாதிரி இருக்கு?
நானும் வரணுமா? சரி, வந்திட்டாப் போச்சு! :-)
சூப்பரப்பு
Juper
ஆதவன்,உங்கள் அறிவு விளக்கை தூண்டி விட்ட உங்கள் அப்பாவிற்கு நன்றி.
தண்ணீர்விட்டு வளர்த்த அம்மாவிற்கு நன்றி.
இயல்பாய் வருகிறது உங்களுக்கு நகைசுவை.
வாழ்க வளமுடன்.
படுவா ராஸ்கோல் இனிமே பார்க்கும் பொழுது பக்கத்தில் வந்த மொவனே நடக்கிறதே வேற!
படிக்கிற பயலா நீ!:(((
பேட் பாய்!
@ஆயில்யன்
பாஸ் நிச்சயம் படிக்கிறதுக்கு என் வீடு ரொம்பவே ஏத்தது தான். கட்டாயம் எதுவும் இல்லாமலே படிச்சேன். :)
கோயமுத்தூர் காலேஜ் என் கனவு பாஸ் :( கடைசி வரை படிக்க முடியாமலே போச்சு.
-----------------------------------
@அஷீதா
மீ டோட்டல் டேமேஜ்..... யூ நோ... ஐ நோ இங்கிலீஷ்.. ஐ கேன் டாக் இங்கிலீஷ்... ஆமா. :)
-----------------------------------
@சின்ன அம்மணி
ஹி ஹி எல்லாம் எல்லாருக்கும் புரியட்டுமேன்னு தான் அம்மணி :))
-----------------------------------
@சிட்டுகுருவி
ஐ! கவுஜ கவுஜ! :) ஒழுங்கா தொடர் பதிவு போடுற வழிய பாருங்க ஆமா :)
-----------------------------------
@செந்தில்வேலன்
அட வாங்க செந்தில் :) எல்லாம் நம்ம வீட்ல ஊர்ல பாட்டிங்க சொல்ற டயலாக் தான் :) அதை அப்பப்ப எடுத்து வுடுறது தான் :)
-----------------------------------
@முத்தக்கா
தாங்ஸ்க்கா. நீங்க தொடங்கிவச்ச அம்மா வாழ்த்து எல்லாரும் தொடர்ராங்க போங்க :)
-----------------------------------
@துளசி டீச்சர்
வாங்க டீச்சர். ஆமா...உண்மையான படிப்பு இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு. டீச்சரே நீங்க தானே! :))
-----------------------------------
@அமுதா
வாங்க அமுதா. ரொம்ப நன்றிங்க
-----------------------------------
@வினோத்
ரைட்டு மச்சி :)
-----------------------------------
@குமார்
அட பாஸ்! அங்க தான் படிச்சீங்களா? நம்ம கனவு பாஸ் அந்த காலேஜ் :(
-----------------------------------
@வால் பையன்
வாங்க தல. பாராட்டுக்கு நன்றி தல
-----------------------------------
@சந்தனமுல்லை
பாஸ் தனியொரு ஆளாவே இப்படி கும்முறீங்களே.... கூட நாலைஞ்சு பேர் சேர்ந்தா மீ த டோட்டல் டேமேஜ் :)
-----------------------------------
@ஜெஸ்வந்தி
வாங்க ஜெஸ்வந்தி. ரொம்ப நன்றிங்க :)
-----------------------------------
@கார்த்திகேயன்
ஹி ஹி நன்றி தேவுடு. இதோ படிச்சுட்டே இருக்கேன் :))
@சுகுமார்
வாங்க தல. உங்க கமெண்ட்ஸ் & கார்டூனுக்கு தீவிர ரசிகன் நான். யூ டூ ஹேவ் சேம் ப்ளட்? என் இனமய்யா நீர் :))
-----------------------------------
க.பாலாசி
யூ டூ பாலாசி???? :)))))))
-----------------------------------
@சேட்டை
வாங்க சேட்டை. உங்க பதிவை ரொம்ப ஆவலோட எதிர்பார்க்கிறேன் ஆமா :)
-----------------------------------
@கதிர்
நன்றி கதிர் :)
-----------------------------------
@முகிலன்
வாங்க தினேஷ். நன்றி :)
-----------------------------------
@கோமதி அம்மா
வாங்கம்மா. உங்க கமெண்ட் படிச்சப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததும்மா. உங்க ஆசிர்வாசம் எப்பவும் வேணும்
-----------------------------------
@குசும்பன்
குரு கோவிச்சுக்காதீங்க... அப்ப கெட்ட பயலா இருந்தேன். இப்ப தான் உங்க கூட சேர்ந்துட்டேன்ல இனி பாருங்க எவ்ளோ நல்ல பையனா ஆகிடுறேன்னு :)
ஆதவன் எப்போதும் உண்டு அம்மாவின் ஆசிர்வாதம்.
வாழ்க வளமுடன்!
//அக்கா சொல்லிட்டாங்க இங்கிலாந்து சரஸ்வதியே உன் நாக்குல எழுதினாலும் உனக்கு இங்கிலீஷ் வராதுடா தம்பின்னு//
/ஒரு நாள் தூங்காம படிச்சுகிட்டு இருந்தப்ப அம்மா ஒவ்வொரு 15 நிமிசத்துக்கும் முழிச்சு டம்ளரை கையெலெடுத்து தண்ணியை என் மேல தெளிக்க ரெடியாகுறாங்கன்றது அப்ப தான் தெரிஞ்சது!//
//அப்பாவும் சொன்னார் “உன்னால படிக்க முடியலைன்னாலும் சும்மா போ. பீஸ் கட்டியாச்சு. உன்னையாரும் படிக்க சொல்லல. கட்டின பீசுக்காக ஒரு வருசம் சும்மா போயிட்டு வாயேன்”.(cool dad!)//
உங்க அருமைபெருமையச் சொல்ல வேற யாரும் வேண்டாம் போல!!
அந்த “குப்புறப் படுத்து, காலை ஆட்டி, கன்னத்துல கைய வச்சு...” கலக்கல்... செம டைமிங்...
;))) நல்லாயிருக்கு டா ஆதவா அப்படியே என்னோட பள்ளி நினைவுகளை என் கண் முன்னாடி பார்த்த மாதிரி இருக்கு ;))
சூப்பருங்க..55 வருடத்தை குறைச்சு போட்டீங்க.
அருமையான அனுபவக் கட்டுரை!!!
நீ ப்ளஸ் டூ பாஸா?
நன்றி ஆதவா, எப்படியோ எழுத வச்சுருவ போல இருக்கு...
அடங்கொன்னியா, எம்ஜிஆர் ஸ்டைலில் சொல்லனும்னா...
உங்கிட்ட பைப்பும் இருக்கு பம்பும் இருக்குங்க ஆது!!
Good One..
அண்ணே!!
வழக்கம்போல என்னைய தொடர் பதிவுக்குக் கூப்புடுவீங்கன்னு பாத்தா இப்படி சாச்சுப்பூட்டீங்களே!!!
(இவனக்கூப்புட்டா தொடர் முடிஞ்சுரும்னுதானே)
உங்க ப்ளாகோட ஜாதகம்
அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு உங்க ப்ளாகோட ஜாதகம்ங்கற இந்த பதிவோட நான் கனவு காணும் ஒரு ஜோதிட நிகழ்ச்சி பற்றிய பதிவையும் , பகவத்கீதை ஒரு உட்டாலக்கட்டி தொடர்பதிவோட 7 ஆம் அத்யாயத்தையும் கூட போட்டிருக்கேன் அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா
மனுஷ ஜாதகத்தை கணிக்க அனேக வெப்சைட்ஸ் இருக்கிறாப்ல நம்ம சைட்/ப்ளாகோட ஜாதகத்தை கணிச்சு சொல்லவும் அனேக வெப்சைட்ஸ் இருக்குங்கண்ணா. அதுல சில சைட்ஸோட யு ஆர் எல்
http://www.websiteoutlook.com
http://www.websiteaccountant.com
http://www.alexa.com
http://www.trafficestimate.com
இன்னம் மஸ்தா கீதுங்கண்ணா. கூகுல்ல போயி value of a site, site ranking இப்படி மாத்தி மாத்தி அடிச்சு தேடுங்கண்ணா
இந்த சைட்ஸ்ல லாகின் பண்ணி உங்க சைட்/ப்ளாக் பேரை டைப்படிச்சாலே போதும் உங்க ப்ளாகோட ஜாதகத்தை சொல்லிருதுங்க. எத்தனை பேர் பார்த்தாங்க, எத்தனை சைட்ஸ் உங்க சைட்டை லிங்க் பண்ணுது மாதிரி சமாசாரங்களையெல்லாம் அள்ளி வீசுங்கண்ணா.
நேத்து கூகுல்ல சர்ஃப் பண்ணிக்கிட்டிருந்தப்ப ட்ராஃபிக் எஸ்டிமேட் டாட்காம்னு ஒரு வெப்சைட் மாட்டிக்கிச்சு. சரி நம்ம ப்ளாகோட ஜாதகம்தான் என்னனு தட்டினேன். அந்த சைட் கொடுத்த டேட்டாவின் படி நம்ம கவிதை07 க்கு கடந்த 30 நாட்கள்ள 85ஆயிரத்து 700 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு. ( ஹிட் கவுண்டர்ஸுக்கும் இதுக்கும் ஏன் இவ்ள வித்யாசம்? யார்னா விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லாருக்கும்.
(சில நாள் நான் நாலணா ரிப்போர்ட்டரா வேலை பார்த்த தினத்தந்திக்கு 18லட்சத்து 52 ஆயிரத்து 500 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு.ரெண்டுத்துக்கும் வித்யாசம் ஜஸ்ட் 17லட்சத்து 66 ஆயிரத்து 800 தான். என்னைக்கோ ஒரு நாள் பீட் பண்ணிருவமில்லை. சொம்மா காமெடிண்ணே )
வழக்கமா நாம ப்ளாக்ல வைக்கிற ஹிட் கவுண்டர் கணக்குப்படி பார்த்தா கூட ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை நெருங்கி கிட்டிருக்கோம், இதுலயும் நல்ல வளர்ச்சி தான் தலைவா!.
கடந்த மே மாசத்துல இருந்து 10மாசத்துல ஒரு லட்சம் அடிச்சோம். இந்த ரெண்டரை மாசத்துலயே 50 ஆயிரத்தை நோக்கி இரைக்க இரைக்க ஓடிக்கிட்டிருக்கோம்.
சனம் கண்டுக்கறதில்லை. கமெண்ட் போடறதில்லைனு ஒரு கூட்டம் கூவுது.ஆனால் பாருங்க நம்ம மெயில் பாக்ஸ் எப்பவும் ஹவுஸ் ஃபுல்லாவே கீது. விஷயம் என்னடான்னா நான் பதிவுகள்ள சொல்ற சமாசாரங்களை பகிரங்கமா ஒத்துக்கற தகிரியம் அவிகளுக்கு இல்லியே தவிர கு.ப தனிப்பட்ட மெயில்லயாவது தங்கள் கருத்தை தெரிவிக்கிற நியாய உணர்ச்சி இருக்கு. அவிக எனக்கே எனக்குனு எழுதற மெயில்ஸ் பகிரங்கப்படுத்தக்கூடாதுங்கற பொறுப்புணர்ச்சி எனக்கு இருக்கு.
இந்த சந்தோசகரமான சிச்சுவேசன்ல நம்ம வலைப்பூவோட பேரை கொஞ்சமா அனலைஸ் பண்ணி பார்ப்போம்.
"கவி"ங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் ஒன்னு கவிஞர் அடுத்தது குரங்கு.
( நமக்கு ஆஞ்சனேயருக்கு சூ.........ப்பர் கெமிஸ்டரிண்ணே) "தை"பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு ? தை பிறந்தா வழி பிறக்கும். சரி "க" வுக்கு "கா" விட்டுட்டு பார்த்தா "விதை" மூட நம்பிக்கைக்கு டாட்டா சொல்லி அக்மார்க் இறை நம்பிக்கைக்கு மட்டும் பிர்லா (டாட்டாவுக்கு எதிர்பதம் பிர்லா இல்லிங்களா அப்போ ஹலோனு வச்சிக்குவம்) சொல்லற புது நடைமுறைக்கு விதை போட்டிருக்கோம்.
இன்னும் என்னென்ன பண்ணலாம்னு ஆர்னா ஐடியா கொடுத்தா இன்னும் தூளா இருக்குமுங்கண்ணா !
ரொம்ப ரசிச்சு சிரிச்சு படிச்சேன் பாஸ். வழக்கம் போல உங்க பெஸ்ட் போஸ்டுல இதுவும் ஒண்ணு :)
அப்புறம் இந்த தடவை ஊருக்கு வரும்போது கோயமுத்தூர் வாங்க. பி.எஸ்.ஜியில சீட்டு வாங்கிடலாம்.
சின்ன்ன்ங் இந்த ரைன்ன்ன்
அயம் சொய்ங்ங்ங் இந்த ரைன்னன்ன்ன்ன் ...
நல்லாயிருக்கு நண்பரே..
போட்டு தாக்கிடீங்களே :) ... நல்லா இருந்தது.....
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
.”அப்ப உண்மையாலும் பாசாகிடுவயாடா தம்பி?”.
இதான் ரொம்ப பிடிச்சிருந்தது....:)
கலக்கல் தலைவா. உங்க அம்மா கேட்ட கேள்வி சூப்பர்.
நாம் எல்லாம் பாஸ் ஆகலைனா வேற யாரு தலைவா பாஸ் ஆகுறது ?
hey very interesting. onething u r gud in tamizh. teek hei na ?
keep it up dosth
http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி
புத்தம் புதிய தமிழ் திரட்டி
www.periyarl.com - பகலவன் திரட்டி
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
Post a Comment