நான் இன்னும் பதிவர் தான்பா - பஞ்சாமிர்தம்

ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதாம இருக்கும் போதும் ஏதாவது ரசிகர்களும், (முக்கியமாக) ரசிகைகளும், எங்க உங்க போஸ்ட்?  இன்னும் ஏன் எழுதல? உங்க எழுத்தை படிக்காம பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்கு! அப்படின்னு ஒரு கடுதாசியாவது வரும்னு பார்க்கிறேன்...ம்ஹூம். சரி இப்படி எதுவும் நடக்கலைனாலும் பரவாயில்ல, கொஞ்ச நாள் எழுதாம விட்டா நீங்களும் பதிவரா?னும், எங்கயாவது கமெண்ட் போட்டா நீங்க புது பதிவரா?ன்னு கேட்க ஆரம்பிச்சுடுறாங்க :(  நடுவுல சங்கம் வேற ஆரம்பிக்கிறதா பேச்சு வந்திருக்கு. ஆக்டிவா இல்லைன்னா பின்னால சங்கம் ஆரம்பிச்சாலும் சேர்க்க மாட்டாங்க. அதுனால........

ss

கால் ஆட்டிகிட்டே தூங்கறத போல இனிமே இந்த மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாத பதிவா ஒன்னுரெண்டாவது போடனும். இல்லைன்னா நீ பதிவரா?ன்னு ஒட்டுமொத்த பதிவுலகமும் கேட்க ஆரம்பிச்சிரும்.
-------------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல் சுறா படத்தை முதல் நாளாக பார்த்தாயிற்று. சார்ஜா திரையரங்கத்தில் உள்ள ஒரு வசதி தமிழ்நாட்டு திரையரங்களை போலவே விசில் சத்தமும், ’டைமிங் கமெண்ட்’ சரளமாக வரும். திரையரங்கு உரிமையாளர்கள் எதுவும் கண்டுகொள்ளவதில்லை. அவ்வாறு மட்டும் இல்லையென்றால் “வேட்டைகாரன், வில்லு, அசல், ஆதவன், கந்தசாமி, விண்ணை தாண்டி வருவாயா” இப்போது சுறா என தொடந்து மொக்கைபடங்களை இரண்டரை மணி நேரம் பார்க்க முடியாது. அதுவும் இந்த தடவை சுறாவிற்கு வந்த டைமிங் கமெண்ட்களை கேட்டு சிரித்து சிரித்து வயிறு வலித்தது. நல்ல டைம் பாஸ்.

”என் மக்களுக்கு வீடு கட்டி தரனும்”னு விஜய் சொல்லும் போதே அது தான் க்ளைமாக்ஸாக இருக்கும்னு தெரியாதவன் தமிழனாக இருக்கவே முடியாது. சரியாக அந்த நேரத்தில் “இப்பவே தியேட்டர்ல இருக்குறவங்க எல்லாரும் காசு கொடுத்து அந்த வீடை கட்டி கொடுக்குறோம் படத்தை இதோட முடிச்சிரு” என்று எவனோ கத்த, தியேட்டரில் சிரிப்பலை அடங்க நேரமானது. அதுவும் கலெக்டர் “எரிமலை மாதிரி உட்கார்ந்து இருக்கான் பாரு”ன்னு பேசும் இடத்தில் தியேட்டரே சிரித்து சிரித்து அடுத்தடுத்த டயலாக் சுத்தமாக கேட்கவே இல்லை. 

அவ்வளவு நேரம் பொறுமையாக பார்த்ததற்கு கடைசி பாட்டு “பஞ்சாமிர்தம்”

விஜயோட அடுத்த படம் மலையாளம் படத்தோட ரீமேக்ன்னு கேள்விபட்டேன். தீலீபன் நடிச்சு வெளிவந்த ’பாடிகாட்’ படம் ‘காவல்காரன்’னா வெளிவர போகுதுன்னு விஜய் ரசிகர்கள் சொல்லிக்கிறாங்க. கண்டிப்பா இந்த ஹிட் ஆக சான்ஸ் இருக்கு (அதே நயன் தாராவை மட்டும் கதாநாயகியா இல்லாம இருந்தா கண்டிப்பா ஹிட் தான்). அந்த படம் ரொம்ப சூப்பர்னெல்லாம் இல்ல. ஆனால் விஜய்கு கண்டிப்பா பொருந்தி போகிற வேடம்.
--------------------------------------------------------------------------------------------------------------

முப்பரிமாணம் படம் என்றாலே கண்முன்னே வரும் ஆசை காட்டும் பொருட்கள், பயமுறுத்தும் காட்சிகள் என இருந்த எனக்கு அவதார் புதிய பரிணாமத்தை காட்டியது. காட்சியமைப்பில் துல்லியங்களும் தனித்து தெரியும் சில நுண்ணிய விசயங்களும் ஆச்சர்யப்படுத்தின. அதே அளவிற்கு ஆச்சர்யத்தை அளித்தது ‘Clash of the Titans". 


எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் எதையும் எதிர்பார்க்காமல் சாதாரணமாக சென்ற எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவதாரில் நடித்த அதே கதாநாயகன் தான்.  இரண்டும் ஒரே நாயகனையும், முப்பரிமாண படமாகவும் இருந்தாலும் காட்சியமைப்பில் வெவ்வேறு தளங்களில் இருப்பதால் சிறு அளவில் கூட அவதார் ஞாபகம் வரவில்லை என்பதே ஆறுதலாக இருந்தது.


இனி 3Dயில் அடுத்தடுத்து கார்டூன் படங்களான "sherk" "Toy story 3" என வரிசைகட்டி படங்கள் வருகிறது. மீ த வெயிட்டிங் :)


இதுமட்டுமில்லாமல் ஏற்கனவே வந்த கார்டூன் படங்களை 3Dயிலும் வெளியிட்டு வருகிறார்கள். இதைப் பற்றி விரிவாக யாரேனும் பதிவிடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------

கடந்த மாதம் மம்மூட்டி நடித்த ‘மிருகயா (Mrigaya (1989)” என்ற மலையாள படத்தை ஏசியாநெட்டில் பார்க்க நேர்ந்தது. ஐ.வி சசி இயக்கிய படம்.

முதல் பாதி முழுவதும் மம்மூட்டியின் அட்டகாசம் தான். சிரித்து சிரித்து வயிறு வலி தான் வந்தது. இப்படி பட்ட கேரக்டரில் தயக்கமே இல்லாம எப்படி நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது.

ஊருக்குள் வந்த புலியை சுட்டு வீழ்த்த மம்முட்டி வரவழைக்கபடுகிறார். வந்தவர் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் வம்புக்கு இழுப்பது, குளிக்கும் போது மறைந்திருந்து காண்பது, எதிர்த்து பேசுபவரை அடிப்பது என ஏகத்துக்கும் ரகளை செய்கிறார்.  புலியை மட்டும் பிடிக்க காணோம். அந்த காலத்து சத்தியராஜ் கேரக்டர் தான் ஞாபகம் வந்தது. ஊர்மக்கள் புலியே பரவாயில்லை இவனை ஊரை விட்டு துறத்த வேண்டும் என முடிவு செய்கிறது.  எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஊரை விட்டு நகல மறுக்கிறான். இடையில் கொஞ்சம் காதல், கொலை என விரிந்து படம் முடிகிறது. 

இந்த படம் வந்த போதே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் தான் மம்முட்டி இருந்திருக்க வேண்டும். இருந்தும் இது போல் கேரக்டரில் நடித்த தைரியம் ஆச்சர்யமானது. பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நழுவ விடமால் பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------


ரொம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கேன்னு samsung மொபைல்ல  Samsung S5620 Onix மாடல் வாங்கினேன். அதுவும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனா gtalk மட்டும் வரவே இல்ல. தெரிஞ்சவங்க கிட்ட கேட்ட வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரியல. உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன். அப்படியே அதுல தமிழ் ஃபாண்ட் எப்படி சேர்க்கிறதுன்னும் சொன்னா புண்ணியமா போகும்.---------------------------------------------------------------------------------------------------------------

41 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

//இடத்தில் தியேட்டரே சிரித்து சிரித்து அடுத்தடுத்த டயலாக் சுத்தமாக கேட்கவே இல்லை//

விஜய் படத்துக்கு கூட்டம்னு ரசிகர்கள் சொல்லிக்கறாங்களே. அதெல்லாம் இப்படி கலாய்க்க வந்த கூட்டம்னு இப்பதான் தெரியுது. :)

அந்தக்காலாட்ற படம் :)

☀நான் ஆதவன்☀ said...

வாங்க சின்ன அம்மணி. நாங்க மொக்கை படத்துக்கு முத நாளே போறது அதுக்கு தான் :))

நெல்லுக்கு போற தண்ணி புல்லுக்கும் வரும்னு பார்த்தா சுறா விமர்சனத்துக்கு போற கூட்டம் இங்கிட்டு வரவே மாட்டேங்குது! ம்ஹூம்.... ஞாயித்து கிழமை பதிவு மட்டும் போட கூடாது.

ஆயில்யன் said...

நீங்களும் பதிவரா?

பதிவு படிக்கறவங்களை அவமானப்படுத்தற மாதிரி காலை காமிச்சிக்கிட்டு இருக்கீங்க !

நான் கோச்சுக்கிட்டு போறேன் !

pappu said...

காமெடி பாத்து ரொம்ப நாளாச்சு என தலா ஒரு விஜய், கமல், ரஜின், அஜித் ரசிகர்களுடன் போறேன். கமெண்ட்ஸ் கெளப்புவானுங்க!

ஆயில்யன் said...

//ஞாயித்து கிழமை பதிவு மட்டும் போட கூடாது.//


நீர் புது பதிவரேதான்ய்ய்யா
இன்னிக்கு ஞாயித்துகிழமை எல்லாரும் வீட்ல பிசியா ஒர்க் செஞ்சுக்கிட்டிருப்பாங்க நாளைக்குத்தான் ஆபிஸ்ல வந்து ரெஸ்ட் எடுப்பாங்க இது கூட தெர்ல ஹய்யோ ஹய்யோ !

Anonymous said...

சஞ்சய் ஒரு பதிவு போட்டிருக்கார் எப்படி பதிவு எழுதரதுன்னு வேன ரெஃபர் பண்ணுங்க :))

☀நான் ஆதவன்☀ said...

@மயில்

நீங்க பதிவரா?

நீங்க புது பதிவரா?

சஞ்செய் பதிவரா?

சஞ்செய் புது பதிவரா? :))

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

பாஸ் இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா.. அடுத்த தடவை கை ஆட்டுற மாதிரி வேணா பண்ணிடலாம். ஓக்கேவா?

@பப்பு

செமையா என்சாய் பண்ணலாம் :))

அஷீதா said...

எங்க உங்க போஸ்ட்? இன்னும் ஏன் எழுதல? உங்க எழுத்தை படிக்காம பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்கு! //

என்ன அடுத்த போஸ்ட் போடறீங்களா? எப்போ போடறீங்க? உங்க எழுத்தை படிச்சா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குமே ! நான் எஸ்கேப்பு :)))

கோபிநாத் said...

அடேய் நீ சுறா பார்த்துட்ட, Clash of the Titans,மிருகயா பார்த்துட்ட, புது செல் வாங்கிட்ட இதை சொல்றதுக்கு ஒரு போஸ்டா ! ! ம்ம்ம் உன் விளம்பரம் தொல்லை எங்க போயி முடிய போகுதோ! ;)

\\முப்பரிமாணம்\\ \\இனி 3Dயில் \\

இது உனக்கே ரொம்ப ஓவராக தெரியல!!

கோபிநாத் said...

\\விஜயோட அடுத்த படம் மலையாளம் படத்தோட ரீமேக்ன்னு கேள்விபட்டேன். தீலீபன் நடிச்சு வெளிவந்த ’பாடிகாட்’ படம் ‘காவல்காரன்’னா வெளிவர போகுதுன்னு விஜய் ரசிகர்கள் சொல்லிக்கிறாங்க. கண்டிப்பா இந்த ஹிட் ஆக சான்ஸ் இருக்கு (அதே நயன் தாராவை மட்டும் கதாநாயகியா இல்லாம இருந்தா கண்டிப்பா ஹிட் தான்). அந்த படம் ரொம்ப சூப்பர்னெல்லாம் இல்ல. ஆனால் விஜய்கு கண்டிப்பா பொருந்தி போகிற வேடம்.\\

நயனை விட படத்தோட முடிவை விஜ்யகாக மாத்துரேன்னு வேற மாதிரி கொடுமை செய்யமால் இருந்தால் நல்லாயிருக்கும் ;)

அபுஅஃப்ஸர் said...

//இந்த தடவை சுறாவிற்கு வந்த டைமிங் கமெண்ட்களை கேட்டு சிரித்து சிரித்து வயிறு வலித்தது. நல்ல டைம் பாஸ்//
படத்தில் வரும் காமெடியை தவிர இது அதிக எஃபெக்டா இருக்கும்

சேட்டைக்காரன் said...

எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க! இவரு பதிவரு தான், பதிவரு தான், பதிவரே தான்! சந்தேகமேயில்லை!

கலகலப்ரியா said...

மம்முட்டி படத் தகவலுக்கு நன்றி.. மொத்தமும் நல்லாகீது சாரே...

||நான் இன்னும் பதிவர் தான்பா||

இன்னுமா? அப்டின்னா முன்னாடி பதிவரா இருந்தீங்களா... என்ன சொல்றீங்க ஒன்னியும் புரிலபா..

☀நான் ஆதவன்☀ said...

@அஷீதா

வாங்க அஷீதா. உங்கள மாதிரி கொலவெறி ரசிகைகள் இருக்குற வரை நான் தொடந்து எழுதிட்டே இருப்பேன். நீங்க பைத்தியமாகிற வரை :)
------------------------------------
@கோபிநாத்

ஹி ஹி எல்லாம் ஒரு விளம்பரம் தான் தல :)
-----------------------------------
@அபுஅப்ஸர்

வாங்க அபு அப்ஸர். அதே அதே :)
-----------------------------------@சேட்டைகாரன்

நீங்களாவது ஒத்துகிட்டீங்களே சேட்டை. ரொம்ப நன்றி :)
-----------------------------------
@கலகலப்ரியா

வாங்க ப்ரியா. என்னது புரியலயா? நான் ஒரு மூத்த பதிவர்னு யாரும் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. அட்லீஸ் பதிவர்னாவது ஒத்துக்கங்களேன்னேன் :)

ஈரோடு கதிர் said...

வணக்கம் ஆதவன்

கலகலப்ரியா said...

//@கலகலப்ரியா

வாங்க ப்ரியா. என்னது புரியலயா? நான் ஒரு மூத்த பதிவர்னு யாரும் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. அட்லீஸ் பதிவர்னாவது ஒத்துக்கங்களேன்னேன் //

தோடா.. அதாம்பா கேட்டேன்... நீங்க இம்பூட்டு நாள் பதிவரா இருந்தீங்களான்னு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

super .. animation idea .. :)

ippadithan pathivu pottu solra nilamaikku nanum ahittu iruken.. :(

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நீங்க யாரு..? புது பதிவரா..? வெல்கம்..!

Chitra said...

Welcome back! அடிக்கடி இப்படி எழுதி கலக்குங்க....

☀நான் ஆதவன்☀ said...

@கதிர்

வாங்க கதிர் வணக்கம் :) ஆனாலும் குசும்பு ஜாஸ்தி தான் போங்க :)
-------------------------------------
@கலகலப்ரியா

யூ டூ ப்ரியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
-------------------------------------
@முத்தக்கா

வாங்கக்கா. உங்களுக்கு வேணும்னா கொலுசு, மெட்டி எல்லாம் போட்ட கால் ஒன்னு வரைஞ்சு தரேன். நீங்களும் பதிவர்னு ஒரு பதிவு போட்டுடுங்க :)
------------------------------------
@உண்மை தமிழன்

அவ்வ்வ் அண்ணே வராதவக வந்துட்டு என்ன கேள்வி இது? :)
-----------------------------------
@சித்ரா

நன்றிங்க சித்ரா :)

தாரணி பிரியா said...

புது பதிவரா இருந்தாலும் நல்லா எழுதறீங்க பாஸ்.

நான் புத்தம் புது பதிவர்தான். சரியா

சந்தனமுல்லை said...

இடுகை ஏன் பாஸ்..கல்ர்ஃபுல்லாவே இல்லை...ஒரே இன்ஃபோ-வா கருத்துக்குத்தாவே இருக்கே...ஏன் பாஸ்...உடம்பு கிடம்பு?? :-))

சந்தனமுல்லை said...

/கால் ஆட்டிகிட்டே தூங்கறத போல இனிமே இந்த மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாத பதிவா ஒன்னுரெண்டாவது போடனும்./

அவ்வ்வ்....அதுக்காக இப்டியா...மக்கள்ஸும் ஒன்னும் வெளிலே காட்டிக்காம நல்லவங்க மாதிரியே நடிக்கறாங்கப்பா! :-))

சந்தனமுல்லை said...

பாஸ்...குழந்தை மனசுன்னு நாங்க ஒப்புக்கறோம்..பைதிவே../அடுத்தடுத்து கார்டூன் படங்களான "sherk" "Toy story 3" என வரிசைகட்டி படங்கள் வருகிறது. மீ த வெயிட்டிங் :)/ யாருக்காக இந்த பில்டப்பு...ப்லாக் அட்ரசை யாருக்காவது கொடுத்திருக்கீங்களா...பாஸ்..;-)))

சந்தனமுல்லை said...

/தாரணி பிரியா said...

புது பதிவரா இருந்தாலும் நல்லா எழுதறீங்க பாஸ்.

நான் புத்தம் புது பதிவர்தான். சரியா/

ஆகா...:-)))

அதிஷா said...

நல்லா ஆட்றீங்களே!.. கால

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நீங்க பீத்த சாரி மூத்த பதிவர் தான்
நான் ஒத்துக்கிறேன்....

ஹுஸைனம்மா said...

ஆனாலும், இப்படி சானியா மிர்ஸா, குஷ்பு போல கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி காலை ஆட்டி அவமரியாதை செய்றதை வன்மையாக் கண்டிக்கிறேன்!!

ஹுஸைனம்மா said...

வேட்டைக்காரன் வந்தப்போ இப்படித்தான் ஒரு பதிவு எழுதுனீங்க ஞாபகம் இருக்கா? இந்த முறை அவ்வளவு டேமேஜ் இல்ல போல!!

மின்னுது மின்னல் said...

http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html

கோமதி அரசு said...

தூங்கும் போது கால் கட்டை விரலை
ஆட்ட வேண்டும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

கால் ஆட்டுவது நன்றாக உள்ளது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பல தகவல்களை பற்றி மிகவும் அழகாக தொடுத்து எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி .
தொடர்ந்து எழுதுங்கள் .

ஆ! இதழ்கள் said...

ஆதவன்..

nimbuzzனு ஒரு சாப்ட்வேர் இருக்கு ஜிடாக், யாகூக்கு, ட்ரை பண்ணுங்க.

tamil browse panna itha paarunga http://bit.ly/cDLOmq

கிறுக்கல் கிறுக்கன் said...

”ஆதி” பாதில போக,
“அழகிய தமிழ் மகன்” அழுகிய தமிழ் மகனாக,
“குருவி” பறந்தே போக,

“வில்லு” ஒடிந்து போக,
“வேட்டைக்காரன்” வெட்டுண்டு விழ,
“சுறா” சுண்டக்காயாக,
அடுத்த படம் என்ன ஆக போகுதோ

வால்பையன் said...

மொபைல் அழகா இருக்கு!

நாஸியா said...

ஆக மொத்தத்துல நாங்க வீராசாமி தியேட்டர்ல போயி பார்த்ததுக்கும் சுறா படத்த பாக்குறதுக்கும் வித்தியாசம் இல்லன்னு சொல்லிட்டீங்க ரொம்ப சந்தோசம்..

Samsung Onix

மெட்ராஸ்ல முன்ன குப்பை அள்ளுன கம்பெனி பேரு மாதிரி இருக்கே

செல்வராஜ் (R.Selvaraj) said...

இடுகைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. தமிழ்மணம் விருதுகள் குறித்து வந்த மின்னஞ்சலைப் பார்த்தீர்களா?

Sukumar Swaminathan said...

தல.. உங்க கிட்ட இருந்து நிறைய காத்திருக்கேன்.. நீங்க இந்த பதிவு உலகத்துக்கு தேவை.. அடிக்கடி பதிவு போடுங்க ப்ளீஸ்...

Sukumar Swaminathan said...

காத்திருக்கேன் என்பது கத்துகிட்டிருக்கேன் என திருத்தி வாசிக்கப்பட வேண்டும்...

துளசி கோபால் said...

'ஆடும் காலை' கவனித்தேன்!

உயிர் இருக்கு:-)

Related Posts with Thumbnails