முதிர் கண்ணன்கள்

காலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா? ஜிமெயில் கணக்கின் பாஸ்வேர்டை கூட சில சமயம் மறந்து போய் மேட்ரிமோனியல் சைட்டின் பாஸ்வேர்டை ஞாபகம் வைத்திருப்பவரா? ஜாதியாவது மண்ணாங்கட்டியாவது என தீடீர் தீடீர் என்று புலம்புவரா? பேச்சு வாக்கில் கொட்டாவி விடும் அம்மாவிடம் “பாரு பேசும் போதே இருமுற... உனக்கு வேற உடம்பு சரியில்ல. உன்னை யாரு வீட்டு வேலை செய்ய சொன்னா. இதுக்கு தான் காலாகாலத்துல மருமக வரனும்”னு அடிக்கடி சொல்பவரா? (என்னென்னு சொல்லித்தொலடா)

கண்ணை மூடி கொண்டும் இல்லை ஒன்னரை கண்ணோடும் சொல்லலாம் அவர் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் முதிர்கண்ணன் என்று. ”இல்லைங்க நான் இங்க சும்மா ஒரு வருச காண்ட்ராக்ட்ல வந்தேன். இன்னும் மூனு மாசத்துல இந்தியா வந்திடுவேன். சென்னையில இருக்குற கம்பெனியில சேர்ந்திடுவேன்”னு கூசாம பொய் சொன்னாலும் “நீங்க இந்தியா வந்த பிறகே கால் பண்ணுங்க”ன்னு மனசாட்சியே இல்லாம போனை வச்சிடுறாங்க பெண்ணை பெத்தவங்க.

வெளிநாடு அதுவும் துபாய் மாப்பிள்ளைன்னா பின்னங்கால் முன்னங்கால் முட்டியை தொடுற அளவுக்கு ஓட்டமா ஓடுறாங்க பொண்ணு வீட்டுகாரங்க. கொஞ்ச நாள் முன்ன நண்பனுக்கு சென்னையிலிருந்து போன் செய்த ஒரு பெண்ணின் தாயார் எல்லாம் விசாரிச்சுட்டு, நீங்க இந்தியா வந்தா தான் பொண்ணு கொடுப்பேன்னு சொல்ல இவன் போன்லயே சூடாகி ”வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு வீட்டோட மாப்பிள்ளையா வரேன். காலம்புல்லா வச்சு சோறு போடுறீங்களான்”னு கேட்க அந்தம்மா டென்சனாகி போனை வச்சிருச்சு.

போட்டோ செஷனெல்லாம் முடிஞ்சு அப்பா அம்மாவுக்கு போட்டோவை அனுப்பின பின்னால போடுற கண்டிஷன் கொஞ்சம் டெரரா தான் இருக்கும். மாஸ்டர் டிகிரியோட பொண்ணு அழகா நச்சுன்னு இருக்கனும்னு மூனு வருசத்துக்கு முன்னால தேட தொடங்கினவங்க, மாஸ்டர் டிகிரி பேச்சுலராகி அழகு சுமாராகி, அப்புறம் நம்ம ஜாதியில ஏதோ பொண்ணு கிடைச்சா போதும்ன்ற நிலைமைக்கு மாறி இப்ப ஜாதியாவது  மண்ணாங்கட்டியாவதுன்னு பெரியாரிஸ்டா(நன்றி சாரு) மாறிட்டானுங்க.

பெரியாரிஸ்டா எல்லா நேரத்திலேயும் இருந்தா பரவாயில்ல நம்ம சாரு மாதிரி சில நாள் அப்படி இருந்துட்டு பொண்ணு கிடைக்காத காரணத்தை சாமிகிட்ட கேட்க ஆரம்பிச்சிருவாங்க.  ”டேய் மூனு வருசத்துக்கு முன்னால மேட்ரிமோனியல்ல இருந்த பொண்ணுங்க ப்ரொபலை எல்லாம் பார்த்து கிண்டல் பண்ணினோமே, அதோட பாவம் தான் இப்ப பொண்ணு கிடைக்க மாட்டேங்குதோ?”  ன்னு நெத்தியில விபூதியை பூசிக்கிட்டு கேட்கும் போது தான் அவனவன் எவ்வளவு மன உளைச்சல் இருக்கான்னு தெரியுது. ஊருக்கு போகும் போது காளஸ்தியும், திருப்பதியில ஒரு கோவிலும், கும்பகோணத்துல சில பல கோவிலும்னு பல டூர் இருக்கும். இப்ப புதுசா ரம்பாவுக்கு காஞ்சி காமாட்சினால தான் கண்ணாலம் ஆச்சுன்னு எங்கேயோ படிச்சதால அதுவும் லிஸ்ட்ல சேர்ந்திருச்சு.

சரி மேட்ரிமோனியல், கல்யாணமாலையில இருக்குற பொண்ணுங்களாவது கொஞ்சம் இரக்க சுவாபம் இருக்கும்னு பார்த்தா படிச்சது பிஏ ஆனா வேலை பார்க்கிறது சாப்ட்வேர் கம்பெனியில, நாங்க அணுகுண்டு குடும்பம்(Nuclear family யாம்) , வர்ரவன் குடும்பமும் அணுகுண்டா இருக்கனும், மாப்பிள்ளை மாஸ்டர் டிகிரியோட சாப்ட்வேர் கம்பெனியில் இருத்தல் உச்சிதம், சிகரெட்டை தொட்டிருக்கவே கூடாது, பாட்டிலை பார்த்தக்கவே கூடாதுன்னு பல கண்டிசன் போட்டிருக்க, பயலும் கட்டிகிட்டா உன்னைய தான் கட்டிப்பேன்னு ஒரு மெசேஜ் விட, பொண்ணு ஜாதகம் மட்டும் கேட்டு ரிப்ளே அனுப்பினா போதும் “என் காதல் சொல்ல நேரமில்லை, உன் காதல் சொல்லத்தேவையில்லை”ன்னு காதலியா இவனே முடிவு பண்ணிடுவான். அது கடைசியில நீ துபாயை விட்டு வந்தா தான் என் கழுத்துல மூணு முடிச்சு போடனும்னு வந்து நிக்கும்.

முன்னெச்சரிக்கையா சண்டை போட்டு ஆபிஸ்ல வாங்கி வச்ச பேமிலி ஸ்டேடசு விசாவும், கல்யாணம் பண்ணினா தான் கிடைக்கும் இன்னும் சில பல சலுகைகளையும் வெட்டியா வெறிச்சு பார்த்துகிட்டே இருக்கும் போதே வருசம் ஓடிப்போகும்.

கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும். துபாய்கு வந்த புதுசுல நித்தியானந்தா மாதிரி துள்ளி குதிச்சு எழுந்திருச்ச பையலுக எல்லாம் இப்ப எழுந்திருக்காம உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலையும் பார்க்குறதுக்கு இந்த தொப்பை முக்கிய காரணம்.


கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குலுங்கி குலுங்கி அழ வேண்டியதா போச்சு :( எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது.

பத்தாவது வரைக்கும் படிச்ச வொர்க் ஷாப்ல வேலை செய்யிற மலையாளிங்க எல்லாம் ஊர்ல இருந்து  பிஎஸ்சி நர்சிங்கோ, டீச்சர் டிரைனிங்கோ, அட்லீஸ் டிகிரி ஹோல்டர்ல அழகான பொண்ணுங்க கிடைச்சு கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தமிழ்நாட்டோட நிலைமையை நினைச்சு நொந்துக்க வேண்டியது தான்.

அதுவும் இப்ப நேர்முகத்தேர்வு ரேஞ்சுக்கு தான் எல்லாம் நடக்குது. நண்பரின் தந்தையை ஒரு பெண்ணோட தகப்பனார் அழைத்து பேசியிருக்கிறார். ”பையனுக்கு டேக் ஹோம் சம்பளம் எவ்வளவு? என்னென்ன லோன் வாங்கியிருக்கான்? எப்ப முடியும்? இப்ப இருக்குற வீடு சொந்த வீடா? நாங்க வரதட்சனையா கொடுக்குற பணத்தை என்ன பண்ணுவீங்க?”ன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்க பையனோட அப்பா “ஆணியே புடுங்க வேணாம்”ன்னு கிளம்ப்பி வந்துட்டார். இன்னொருத்தனுக்கு கிட்டதட்ட அமெரிக்காவுல வேலை கிடைட்டிருச்சு. அதாவது பொண்ணு அமெரிக்கா இன்னும் கொஞ்ச நாள்ல போயிடுமாம். அப்பா அம்மாவும் போயிடுவாங்களாம். பொண்ணோட அண்ணன் அங்க தான் இருக்கானாம். இப்ப நீ வேலை பார்க்கிற ஃபீல்டுல அங்க நல்ல வேலை கிடைக்கும். அதுனால உன்னைய செலக்ட் பண்ணியிருக்கோம்னு சொல்ல.... பையன் சன் மியூஸிக்ல லைவ் டெலிசாய்ஸ்ல வேலை பார்த்து வயித்தை கழுவுனாலும் கழுவேனே தவிர உன் பொண்ணுக்கு புருசனா வேலை பார்க்க மாட்டேன் சொல்லிட்டான். ம்ம்ம் அது நடந்து ரெண்டு வருசம் ஆச்சு. இப்ப ஃபீல் பண்றான் ஒழுங்கா அந்த பொண்ணையே கண்ணாலம் கட்டியிருக்கலாம்னு.

இதுல சானியாவும், சோயப்பும் கல்யாணம் ஆகி துபாய் வந்து குடியேறப்போவதாக செய்தியை படிச்சதும் பல நண்பர்கள் கறுப்பு கொடியை சட்டையில் குத்திக்கொண்டு விமானநிலையத்திற்கு போகப்போவதாக முடிவு பண்ணிட்டாங்க. புதுசா எந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலையும் நடக்காமல் கட்டி முடித்த கட்டடத்தையே இடிச்சுட்டு இருக்குறவங்களை தொறத்திட்டு இருக்குற இந்த நேரத்துல கறுப்புக்கொடிய காண்பிக்க போறதா சொன்னதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

பாக்கிஸ்தான்ல இருந்து ஒரு பையனுக்கு நம்ம சானிய கல்யாணம் பண்ணி வச்சு இன்னொரு நம்ம நாட்டு பையனுக்கு கிடைக்க இருந்த வாழ்க்கையில மண்ணள்ளி போட்டவன சும்மா விடலாமா?

இப்படி புலம்ப எக்கசக்க கதைகள் வளைகுடால இருக்குது. இதெல்லாம் கண்டுக்க ஆள் தான் இல்ல.


ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை இன்னும் திறக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க நண்பர்களோட அனுபவம் தான். நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல. நம்பாதவங்க என்னோட ப்ரொபைலை போய் பார்த்துக்கங்க :)

79 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கண்ணா.. said...

அடங்கொன்னியா....!!!


நீ ருமுல பொலம்புனதையெல்லாம் சேர்த்து ஓரு பதிவாவே போட்டுட்டியே.. பெரிய்ய்ய ஆளுதாம்டே ...நீயி

ஆயில்யன் said...

//பத்தாவது வரைக்கும் படிச்ச வொர்க் ஷாப்ல வேலை செய்யிற மலையாளிங்க எல்லாம் ஊர்ல இருந்து பிஎஸ்சி நர்சிங்கோ, டீச்சர் டிரைனிங்கோ, அட்லீஸ் டிகிரி ஹோல்டர்ல அழகான பொண்ணுங்க கிடைச்சு கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தமிழ்நாட்டோட நிலைமையை நினைச்சு நொந்துக்க வேண்டியது தான்.//

ரியலிட்டி !

ஆமாம் பாஸ் ஆமாம் :)

கண்ணா.. said...

//ள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குழுங்கி குழுங்கி அழ வேண்டியதா போச்சு :( எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது. //


அருமை ... இதை ரொம்ப ரசிச்சேன்..

கண்ணா.. said...

//துபாய்கு வந்த புதுசுல நித்தியானந்தா மாதிரி துள்ளி குதிச்சு எழுந்திருச்ச பையலுக எல்லாம் இப்ப எழுந்திருக்காம உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலையும் பார்க்குறதுக்கு இந்த தொப்பை முக்கிய காரணம்.//

:)))))))))))))))))))))))))

இதுக்கு ரஞ்சிதாவோட யோகா சீடி வாங்கி பார்த்து பிராக்டீஸ் பண்ணா சரியாயிருமா பாஸு

பின்னோக்கி said...

நீங்க சொல்றது சரிதான். முதிர்கன்னியின் சோகம் மாதிரி முதிர்கண்ணனின் சோகமும் வருத்தத்திற்கு உரியது.

இப்பவே என் பையனுக்கு பொண்ணு கிடைக்குமான்னு புலம்ப வெச்சுட்டீங்க :)

ஆயில்யன் said...

//ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல. //

எலேய்ய்ய்ய்ய் இப்படியே சொல்லிக்கிட்டி திரியாதலேய்ய்ய் !

கண்ணா.. said...

//எலேய்ய்ய்ய்ய் இப்படியே சொல்லிக்கிட்டி திரியாதலேய்ய்ய் //

ஆமாப்பா...இது நொம்ப் இம்பார்ட்டண்ட்...

:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நச்...

.:: மை ஃபிரண்ட் ::. said...

பொண்ணுங்க வீட்டுலதான் இப்படி பொலம்புவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. இப்போ பசங்க வ்ட்டுலேயுமா? :-)

Vidhoosh(விதூஷ்) said...

பாவம்பா நீங்க. அந்த நித்ய கல்யாண பெருமாள் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டும்.

கோபிநாத் said...

அடப்பாவி இன்னும் உன்னை கூட்டாளியாக வச்சிக்கிட்டு இருக்கானுங்க பாரு அவனுங்களை சொல்லானும்.

\\ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை இன்னும் திறக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க நண்பர்களோட அனுபவம் தான். நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல. நம்பாதவங்க என்னோட ப்ரொபைலை போய் பார்த்துக்கங்க \\

உலகம் அப்படியே நம்பிடும்டா...;))

கோபிநாத் said...

முதல் பத்தியில பார்ப்பவரா?பார்ப்பவரா?ன்னு போடறதுக்கு பதிலாக பார்பவன் அப்படின்னு போட்டு படிங்க மக்களே!!! ;))

ச.செந்தில்வேலன் said...

http://senthilinpakkangal.blogspot.com/2009/03/blog-post.html

idhaiyum padiyunga...

Super post.. :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ்

ஒரு இனத்தோட புலம்பலையும், கதறலையும் இப்படி லைவ் எஃபெக்ட்டா கொண்டு வந்திருக்கீங்களே பாஸ்

:))))))))

நம்பறேன் பாஸ், இதுல உங்களோட எக்ஸ்பீரியன்ஸ் ஒன்னு கூட இல்ல, இதோ இதைத் தவிர..

கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ், இது கண்ணாடி இதிகாசம் பார்ட் 2 வா? ;)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//பத்தாவது வரைக்கும் படிச்ச வொர்க் ஷாப்ல வேலை செய்யிற மலையாளிங்க எல்லாம் ஊர்ல இருந்து பிஎஸ்சி நர்சிங்கோ, டீச்சர் டிரைனிங்கோ, அட்லீஸ் டிகிரி ஹோல்டர்ல அழகான பொண்ணுங்க கிடைச்சு கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தமிழ்நாட்டோட நிலைமையை நினைச்சு நொந்துக்க வேண்டியது தான்.//

ரியலிட்டி !

ஆமாம் பாஸ் ஆமாம் :)

ஹைய்யோ பாவமே :-)))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ்

இப்ப முதிர்கண்ணன்கள்னு போஸ்ட் போடுவீங்க,

கல்யாணம் ஆனப்பிறகு //தங்கமணி // போஸ்ட் போடுவீங்களா பாஸ் ;)

அஷீதா said...

//கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குழுங்கி குழுங்கி அழ வேண்டியதா போச்சு :( எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது. //

இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு. என்னதான் நகைச்சுவையா சொல்லி இருந்தாலும், இந்த முதிர்கண்ணன்கள் நெனச்சா கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு :(

//என்னோட ஃபைலை இன்னும் திறக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க நண்பர்களோட அனுபவம் தான்//

தவளை தன் வாயால கெடுமாம்..சொல்லுவாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நானும் குழுங்கி குழுங்கி அழ வேண்டியதா போச்சு :( //

இது என்ன பாஸ், குலுங்கி குலுங்கியோட அடுத்த கட்ட அழுகையா பாஸ்?

Anonymous said...

//ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை இன்னும் திறக்கவே இல்லை.//

ஓகே , நாங்களும் நம்பறமாதிரி நம்பறோம்.

ஆமா இது காமெடி பதிவா, சீரியஸ் பதிவா ? ரெண்டுக்கும் நடுவுல இருக்கு !!!!

கண்ணா.. said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

நானும் குழுங்கி குழுங்கி அழ வேண்டியதா போச்சு :( //

இது என்ன பாஸ், குலுங்கி குலுங்கியோட அடுத்த கட்ட அழுகையா பாஸ்?//

என்னங்க இது.. அவனோட ஃபிலீங் புரியாம ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்துகிட்டு இருக்கீங்களே....

ஓரு ஆம்பளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்குதான் தெரியும்.


நீ ஒண்ணும் கவலைப்படாத.. சூர்யா... உனக்கேத்த ஜோதிகா கண்டிப்பா கிடைப்பா.. :))

கண்ணா.. said...

கெட்டவங்களுக்கு ஆண்டவன் சீக்கிரம் கொடுப்பாரு.. ஆனா கைவிட்டுருவாரு...

நல்லவங்களுக்கு ஆண்டவன் லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்டா கொடுப்பாரு...

சென்ஷி said...

//கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது.//

:)))

குசும்பன் said...

உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:))))//மலையாளிங்க எல்லாம் ஊர்ல இருந்து பிஎஸ்சி நர்சிங்கோ, டீச்சர் டிரைனிங்கோ, அட்லீஸ் டிகிரி ஹோல்டர்ல அழகான பொண்ணுங்க கிடைச்சு //

மலையாளி பொண்ணுங்க எல்லாமே அழகுதான்!

உனக்கு ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்க....

நல்லா மூச்சை உள்ளே ஆழமா இழுந்து கொஞ்சம் வேகமா வாயால் ஹம்ம்ம்ம்ம்ம் என்று ஒரு சத்தத்தோட விட்டுக்கிட்டு போய்கிட்டே இரு! அதுதான் நம்மால் முடியும்:)))

குசும்பன் said...

//இது என்ன பாஸ், குலுங்கி குலுங்கியோட அடுத்த கட்ட அழுகையா பாஸ்?
//

குரங்கு மார்க்-"லுங்கியோட" அழுவதை தான் அப்படி சொல்கிறாருங்கோ!!

குசும்பன் said...
This comment has been removed by the author.
அகல்விளக்கு said...

இந்தியாவுலயே தேசப்பற்று மிக்க பொண்ணு சானியா மிர்சாதான் பாஸ்...

அவங்களப்போய் இப்படிச் சொல்லிட்டீங்களே...

நானும் சானியாவும் ஸ்கூலுல படிக்கும்போது ஒரு உறுதிமொழி சொல்வோம்.
India is My Country.
All Indians are my Brothers and Sisters

நான் இத மீறினாலும் சானியா இன்னும் கடைபிடிக்கிறாங்களேன்னு சந்தோஷமா இருக்கு...

நாஞ்சில் பிரதாப் said...

எலே... வீட்டுல பொலம்ப வேண்டியதை இங்க வந்து பொலம்பிட்டு இருக்க... அது போதாம என்னோட வயிற்றெரிச்சலை வேற கொட்டிக்கிற.....நல்லாருப்பியா நீயி???

அன்புடன் அருணா said...

அய்யோ..நிலமை இவ்வ்ளோ மோசமாவா இருக்கு!!!

ஆ! இதழ்கள் said...

நானும் குழுங்கி குழுங்கி அழ வேண்டியதா போச்சு //

அது குழுவா சேர்ந்து அழுவது அது தான் குழுங்கி குழுங்கி, ஆனா ஒன்னு, நாங்க அழுகும்போது இலக்கணம் வரையறையெல்லாம் பாக்கிறதில்ல சில பேரு அதுலயும் பாக்குறாங்க.. இதெல்லாம் நாயமா? ஏன் ஆதவன்?

இது முழுக்க முழுக்க நண்பர்களோட அனுபவம் தான். நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல.//

இத்த ஏன் போட்டீங்க? இப்புடி தாங்க என்னத்தயாவது சொல்லி மாட்டிகிறது, எனக்கு படிக்குறப்ப, இவர்தான் மாப்பிள்ள ஆனா இவர் போட்ருக்க சட்டை என்னுதுல்லன்றது தான் ஞாபகத்துக்கு வருது.

விளையாட்டுக்கு சொல்லல, க்ளாஸ் இந்த பதிவு. சூப்பர்.

ஹுஸைனம்மா said...

//ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது.//

தலைவர் நீங்களா? போராட்டத்தின் முதல்கட்டம்தான் இந்தப் பதிவா?

அபுஅஃப்ஸர் said...

இது மாதிரிதான் 8 வருஷம் முன்னாடி அமெரிக்கா மாப்பிளையானாலும் சரி, சாஃப்ட்வேர் மாப்பிள்ளையானாலும் சரி பொண்ணு கிடைப்பது அரிதாக இருந்தது. இப்போ கன்ஷ்ட்ரக்ஷன் இஞ்ஜினியருக்கும் இந்த நிலமை??? ஆஆஅவ்வ்வ்வ்வ்

இந்த பொலம்பல் கம்மியான்யோவ்.. இன்னும் இருக்கு எழுதலாம்...

ஜீவன்பென்னி said...

//கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும்.//

சிரிப்ப அடக்க முடியல. செம கலக்கல் பதிவு.

Chitra said...

கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும்.


........... ha,ha,ha,ha,ha.... அனுதாபம் எப்படி கிடைக்கும்? சிரிப்பு தாங்க முடியல.

KarthigaVasudevan said...

:)))

எவ்ளோ பெரிய சோகம்...இவ்ளோ காமெடியா சொல்லிட்டிங்க.

தமிழ் பிரியன் said...

தம்பீ.........

இதெல்லாம் ஒரு கானல் நீர் போன்ற மாயை.. கல்யாணம் ஆனதும் தான் தெரியும்.. அடப்பாவிகளா? நிம்மதியா இருந்தவனை இப்படிப் போட்டு கவுத்துட்டீங்களேண்னு.. ;-)))

முகிலன் said...

பின்னோக்கி சொன்னதையே சொல்லிக்கிறேன்..

என் பையனுக்கு பொண்ணு கிடைக்குமா??

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை தேவுடு,கலக்கிட்ட

pappu said...

துபாய்னா மபொண்ணு கிடைக்காதா? கேள்வி பட்டதில்லயே? எகொசஇ?

Vidhoosh(விதூஷ்) said...

என்னாம்மா அமித்தம்மா... ஆளைக் காணோமேன்னு அங்கெல்லாம் தேடிக்கிட்டு இருக்கோம்... இங்கதானா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாஸ்

ஒரு இனத்தோட புலம்பலையும், கதறலையும் இப்படி லைவ் எஃபெக்ட்டா கொண்டு வந்திருக்கீங்களே பாஸ் //
ரிப்பீட்டேய்..

என்ன ஒரு கொடுமைப்பா . காமெடியா இருந்தாலும் இது ட்ராஜடிப்பா ட்ராஜடி.. :(

ஆனா இதுக்கு கள்ளிப்பால் கொலைகள் தான் காரணம்ன்னு பழசை எல்லாம் நினைச்சுப்பார்க்கும் அந்த நல்ல மனசுக்கு நல்ல மனைவி அமையட்டும்.. வாழ்த்த்றேன்..

வினோத்கெளதம் said...

அப்ப பொண்ணு கிடைக்கிறது நீ சொல்லுற மாதிரி கஷ்டம் தான்ப்போல..
ஒரே குழப்பமாவே இருக்கு..

மங்களூர் சிவா said...

ச்சும்மா பதிவெழுதறத விட்டுட்டு, ட்ரை பண்ணுங்க பாஸ் நிச்சயம் நல்லதே நடக்கும்.

மங்களூர் சிவா said...

என்ன குசும்பா நான் சரியாதானே சொல்றேன்

தாராபுரத்தான் said...

ஆண்பிள்ளைகளுக்கு ......பால் கொடுக்க வேண்டிய காலம் வந்துக்கிட்டு இருக்குங்கோ.

கண்ணகி said...

கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குலுங்கி குலுங்கி அழ வேண்டியதா போச்சு :( எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது.


அனுபவி ராஜா அனுபவி....

கார்த்திக் said...

தல சொம்பு ரொம்ப ஒடிங்கிருக்கும் போல :-))

சேட்டைக்காரன் said...

எவ்வளவு தான் நகைச்சுவையை மேலே தாளித்திருந்தாலும், சில வரிகளுக்கு நடுவே பெருமூச்சுக்களின் உஷ்ணம் தகிப்பதை உணர முடிந்தது. நெஞ்சைத் தொட்டது.

☀நான் ஆதவன்☀ said...

@கண்ணா

அவ்வ் தலைவரே இது எல்லாம் என் பொலம்பல் இல்ல :)
//இதுக்கு ரஞ்சிதாவோட யோகா சீடி வாங்கி பார்த்து பிராக்டீஸ் பண்ணா சரியாயிருமா பாஸு//

நல்ல ஐடியா தான். சமாதி நிலைக்கு போக வேண்டியது தான் இனி :)

ஹி ஹி ஜோதிகா மாதிரி ஒருத்தி கிடைச்சா உமக்கு ட்ரீட் கண்டிப்பா உண்டு தல :)
-----------------------------------
@ஆயில்ஸ்

நன்னி பாஸ் :)

//எலேய்ய்ய்ய்ய் இப்படியே சொல்லிக்கிட்டி திரியாதலேய்ய்ய் //

அவ்வ்வ் ஓக்கே பாஸ் :)
-----------------------------------
@பின்னோக்கி

நீங்க புத்திசாலி. இப்பவே பொண்ணு பேமிலிகிட்ட அக்ரிமெண்ட் போட்டு வச்சுக்கங்க :)
-----------------------------------
@மை ப்ரெண்ட்

வாங்க மை ப்ரெண்ட் :) இப்ப பொண்ணுங்க வீட்ல இந்த பிரச்சனையே இல்ல. எல்லா பிரச்சனையும் பசங்க வீட்ல தான் :)
-----------------------------------
@விதூஷ்

வாங்க வித்யா பாஸ். அதென்ன புது கடவுளா இருக்கு? கோவில் எங்க இருக்குன்னு சொல்லுங்க. பசங்ககிட்ட உடனே சொல்லிடுறேன் :)
-----------------------------------
@கோபிநாத்

யூ டூ தல? :)
-----------------------------------
@செந்தில்வேலன்

செந்தில் அந்த பதிவை படிச்சேன் :) நீங்க ஊர்ல இருக்குற பசங்களுக்காக அதை எழுதியிருந்தாலும் இந்த பதிவோட நல்லா ஒத்து போகுது :)
-----------------------------------
@அமித்து அம்மா

பாஸ் மீ டோட்டல் டேமேஜ். குழுங்கி குழுங்கி அழறதுன்னா குழுவா அழறதுன்னு சொல்ல வந்தேன் பாஸ் :) (நன்றி ஆனந்த்)

தங்கமணி போஸ்டே கூட போடலாம் பாஸ். இதுக்கு அது எவ்ளவோ மேல் :)
-----------------------------------
@அஷீதா

வாங்க அஷீதா. நீங்களும் நம்பலையா? நான் தவளை இல்லைங்கோஓஓஓஓ :)
-----------------------------------
@ சின்ன அம்மணி

ஹி ஹி சீரியஸான விஷயத்தை கொஞ்சம் காமெடியா சொல்ல வந்து இப்ப ரெண்டுங்கெட்டானா ஆகிருச்சு :)
-----------------------------------
@ சென்ஷி

நன்றி தல
-----------------------------------
@குசுமபன்

//உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:))))//

கல்யாணம் ஆகிருச்சுன்னு ஆணவத்துல ஆடாதீங்க குசும்பரே :) உமக்கு லவ் மேரஜ். இல்லைன்னா முதிர்கண்ணன் லிஸ்ட்ல நீர் தான் முதல்ல :))
-----------------------------------
@அகல் விளக்கு

//India is My Country.
All Indians are my Brothers and Sisters //

அவ்வ்வ்வ் :))))))))))))))
-----------------------------------
@ பிரதாப்

ஹி ஹி தெரியும்டா உன்னை இந்த போஸ்ட் ரொம்ம்ம்ம்ப பாதிக்கும்ன்னு.. சரி சரி ஊருக்கு போய் ஒழுங்கா கல்யாணத்தை முடிச்சுட்டு வந்திடு. லீவை வேஸ்ட் பண்ணாத :)
-----------------------------------
@அன்புடன் அருணா

ம்ம் ஆமாங்க அருணா.
-----------------------------------
@ஆனந்த்

வாங்க ஆனந்த். குழுங்கி’க்கு விளக்கம் சூப்பர் :) ரொம்ப நாள் ஆச்சே நீங்க இங்க வந்து. தொடர்ந்து எழுதவும் செய்யுங்க :)

☀நான் ஆதவன்☀ said...

@ஹீஸைனம்மா

அவ்வ்வ்வ் நீங்க ஒருத்தர் போதும் என்னைய இதுல கோர்த்து விட :) நமக்கின்னும் பைலை ஓபன் செய்யல.. பார்க்கலாம் என்ன நடக்கதுன்னு :)
------------------------------------
@அபு அப்ஸர்

அதானே நிறைய இருக்கு. ஒரே பதிவுல சொல்ல முடியல. நீங்களும் போடுங்க தலைவரே
-----------------------------------
@ஜீவன் பென்னி

வாங்க வாங்க ஜீவன்:) நன்றிங்க :)
-----------------------------------
@சித்ரா

அவ்வ்வ்வ்வ் உங்களுக்கு சிரிப்பா தான் இருக்கா :)
-----------------------------------
@கார்த்திகா வாசுதேவன்

வாங்க கார்த்திகா. என்ன பண்றது சில விஷயங்களை காமெடியாகவாவது புலம்ப முடியுதே :)
-----------------------------------
@தமிழ்ப்ரியன்

அவ்வ்வ் அண்ணே கண்டிபப நீங்க சொன்னதை என் நண்பர்கள் கிட்ட சொல்லிடுறேன். அப்படியே நானும் மைண்ட்ல வச்சுக்கிறேன் :)என்ன இருந்தாலும் இக்கரைக்கு அக்கரை பச்சை :)
-----------------------------------
@முகிலன்

குட். இப்பவே தேட ஆரம்பிங்க தினேஷ் :)
-----------------------------------
@கார்த்திகேயன்

வாங்க தேவுடு. நன்றி :)
-----------------------------------
@பப்பு

வா பப்பு. கொஞ்ச வருசமா இப்படி தான் இருக்கு துபாய்ல!
-----------------------------------
@முத்தக்கா

வாங்கக்கா உங்க வாழ்த்து என் நண்பர்களுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகட்டும்க்கா :)
-----------------------------------
@வினோத்

உனக்கென்னய்யா கவலை. சீக்கிரம் ஊருக்கு போய் நாள் குறிச்சுரு :)
-----------------------------------
@மங்களூர் சிவா

வாங்க ம.சி. எல்லாரும் இந்த பதிவு எனக்குன்னே நினைச்சா நான் என்ன பண்றது :) பசங்க ட்ரை பண்ணிட்டு தான் இருக்காங்க :)
-----------------------------------
@தாராபுரத்தான்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏன்யா இந்த கொலவெறி! :) அப்புறம் அடுத்த தலைமுறை பெண்கள் பாதிக்க படுறதுக்கா? இனி யாருக்கும் கள்ளி பால் கொடுக்காமலே இருப்போம்
----------------------------------
@கண்ணகி

இதென்ன சாபம் மாதிரி இருக்கே! யாரோ பண்ணின தப்புக்கு ஒட்டு மொத்த ஆண்களும் வருத்த படுற மாதிரி ஆகிருச்சே! எனிவே இனி நடக்காது பார்த்துக்கலாம். :)
-----------------------------------
@கார்த்திக்

தல நம்ம சொம்பு இன்னும் வெளிய எடுக்கவே இல்ல. எடுத்தா தானே அடிவாங்குறதுக்கு :)
-----------------------------------
@சேட்டை

வாங்க சேட்டை. சில உண்மைகள் அப்படி தான் இருக்கும்

kalil said...

தல துபாய் ல மட்டும் இல்ல இந்திய ல வேலை செய்தாலும் பொண்ணு கிடைக்க மாட்டேங்குது ... நானும் என் friend யும் 2 வருஷமா பொண்ணு தேடறோம் இன்னும் கிடச்ச பாடில்ல .... (இத்தனைக்கும் வரதட்சனை கு எதிர் பார்க்காதவங்க நாங்க )எல்லா பொண்ணுகளும் ,பொண்ண பெத்தவங்களும்நாங்க சாப்ட்வேர்
கம்பெனி ல வேலை செய்தா தான் பொண்ணு கொடுப்பாங்களாம் ... இது எல்லாம் பார்க்கும் போது சாப்ட்வேர் பீல்ட் இன்னொரு தடவ down ஆகாதனு இருக்கு ...

அருமையா இருக்கு உங்க பதிவு ...... தொடருங்கள் .. வாழ்த்துக்கள்

நன்றியுடன்
கலீல்

ஆயில்யன் said...

//எவ்வளவு தான் நகைச்சுவையை மேலே தாளித்திருந்தாலும், சில வரிகளுக்கு நடுவே பெருமூச்சுக்களின் உஷ்ணம் தகிப்பதை உணர முடிந்தது. நெஞ்சைத் தொட்டது//

கமெண்ட் நச்!

Siva said...

கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு செஞ்சாச்சு.அப்புறம் என்ன ஆயிரம் பொய் சொல்லியாவது அந்த ஆயிரம் காலத்து பயிர் நடவு சோலிய ஆரம்பிக்க வேண்டியதுதானே.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அறுமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி....
ஆதவன்...............

தாரணி பிரியா said...

சூப்பர் பதிவு. வளைக்குடா நாடுகள்ல இருக்கிற எல்லாருக்கும் சீக்கிரம் பொண்ணு கிடைக்கட்டும்.

பருப்பு said...

அய்யா குப்பை தொட்டி அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

ஜெகநாதன் said...

//”டேய் மூனு வருசத்துக்கு முன்னால மேட்ரிமோனியல்ல இருந்த பொண்ணுங்க ப்ரொபலை எல்லாம் பார்த்து கிண்டல் பண்ணினோமே, அதோட பாவம் தான் இப்ப பொண்ணு கிடைக்க மாட்டேங்குதோ?” //
பெண்பாவம் தம்பி..!!
அட்டகாசம் ஆது!!!

ஜெகநாதன் said...

//சன் மியூஸிக்ல லைவ் டெலிசாய்ஸ்ல வேலை பார்த்து வயித்தை கழுவுனாலும் கழுவேனே தவிர உன் பொண்ணுக்கு புருசனா வேலை பார்க்க மாட்டேன் சொல்லிட்டான்.//

பொண்ணு டீலா நோ டீலா-வில் ​பொட்டித் தூக்கினாலும் தூக்குவோம் வருவோம், ஆனா உனக்கு பொஞ்சாதியா மட்டும் வரமாட்டேன்னு கிளம்பிடப் போவுது!

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_2532.html

இப்பத்தான் இதைப்பத்தி பதிவு போட்டேன். கோபி உங்க லிங்க் கொடுக்க வந்தேன்.

ம்ம்ம்

புதுகைத் தென்றல் said...

unga post link en postil koduthiruken

மதார் said...

//சாப்ட்வேர் கம்பெனியில் இருத்தல் உச்சிதம், சிகரெட்டை தொட்டிருக்கவே கூடாது, பாட்டிலை பார்த்தக்கவே கூடாதுன்னு பல கண்டிசன் போட்டிருக்க//

இவ்வளவு கண்டிசனா ????????? இதுக்கு நான் பரவாயில்ல போல . பாவம் பார்த்து கொஞ்சம்தான் கண்டிசன் போட்ருக்கேன் .

//கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும்.//
இந்த முடி பிரச்னைதான் பெருசா இருக்கு , இதனாலேயே என் பிரெண்ட் அண்ணாக்கு அவளுக்கு முன்னமே வரும் மே மாதம் கல்யாணம் . நான் கூட என் பிரெண்ட் அ கிண்டல் பண்ணிருக்கேன் . hair planting add பார்த்து . பாவம் பீல் பன்னிருப்பானோ ? சாரி கேக்கணும் .

//கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குழுங்கி குழுங்கி அழ வேண்டியதா போச்சு :( எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது. //

முன்வினை பின்சுடும் . இனியாவது சமூகம் திருந்தணுமே. ஆனாலும் பொண்ணுங்கள கேலி பேசுற வாய் மட்டும் நிக்காது .

மதார் said...

தன்னை விட குறைந்த படிப்பு படிச்ச பையன பொண்ணு வேண்டாம்னு சொல்ல ஒரு காரணம்தான் பெருசு . என்னதான் விட்டுக்குடுத்து வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு சமயம் நீ என்ன விட அதிகம் படிச்ச திமிர்ல பேசுறேன்னு பையன் சொன்னா எப்படி இருக்கும் . இது கண்டிப்பா நடக்க கூடியது . இந்த காரணத்துக்காகவே நானும் வேண்டாம்னு மறுத்தேன் . இதுல பொண்ணுங்கள தப்பு சொல்ல முடியாது .

bala said...

ஆதவன்,

கள்ளிப்பால் மேட்டரு பட்டாசு!
இதே தொனில சங்கத்து சார்பா சமீபத்துல தான் என்னோட கண்ணீர கோத்துவுட்டேன்!

http://3.ly/9mSL

Urupadathavan said...

/*ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல. */

Nambittom...
http://urupadathavan.blogspot.com/

Anonymous said...

>> ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும்.

கலக்கல் பாஸ்! இன்னும் சிரிச்சு மாளால

-
வெங்கடேஷ்

Vinoth குமார் said...

அடேய் மாக்கன்... உன் மனசுல இவளாவு போலபல்ல .. இரு உங்க வீட்ல சொல்றன்... இதுக்குதான் கல காலத்துல கல்யாணம் பண்ணுடா நு சொல்றாங்க.. // கள்ளி பால் matter சூப்பர்// ஆழ்த்த சிந்தன :)

கோமதி அரசு said...

முதிர் கண்ணன்கள் புலப்பலை கேட்கும் போது, சர்வர் சுந்தரத்தில் நாகேஷ், அவர் தாயாக வரும் லட்சுமியும் பேசும் உரையாடல் நினவுக்கு வருகிறது.”எப்பட கல்யாணம் செய்துக்க போறே:(தாய்)
மகன் இப்ப வேண்டாம் கொஞ்ச நாள் ஆகட்டும்
பிறகு மகன் ஆசைபடும் போது ,தாய் இப்ப வேண்டாம் என்பதும்,
ஒரே சிரிப்பும் பாவமாயும் இருக்கும்.

கள்ளிப் பாலை கொடுத்து பெண் குழந்தைகளை கொன்ற காரணம் தான், இப்போது திருமணத்திற்கு பெண் கிடைக்க வில்லை என்பதும் உண்மை.

சமூக அவலத்தை தடுக்க வழி செய்து இருக்கிறீர்கள் நன்றி.

முதிர் கண்ணன்களுக்கு விரவைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்.

பதி said...

கலக்கலா வந்திருக்கு குமுறல் எல்லாம் !!!

வளைகுடா லிஸ்ட்ல, எல்லா நாட்டையும் சேர்த்துடுங்க. அமெரிக்கா, ஐரோப்பால இருக்குற நண்பர்களும் இதே கதையைத் தான் வண்டி வண்டியா பொலம்பித் தள்ளுறாங்க.

:)

காதல் கவி said...

முதிர் கண்ணங்களைப்பத்தி எழுதி
நெஞ்சைத் தொட்டுட்டீங்க....பாஸ்...

க.பாலாசி said...

என்னங்க தலைவரே... வயத்துல புளிய கரைக்குறீங்க.... இப்பதாங்க மேட்ரிமோனியில லாகின் பண்ணியிருக்கேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்.............

VAAL PAIYYAN said...

visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

அபி அப்பா said...

\\Blogger தாரணி பிரியா said...

சூப்பர் பதிவு. வளைக்குடா நாடுகள்ல இருக்கிற எல்லாருக்கும் சீக்கிரம் பொண்ணு கிடைக்கட்டும்.\\

நன்றி தங்கச்சி! இப்படித்தான் எக்கு தப்பா சாமிகிட்ட வேண்டிக்கனும். இருந்தாலும் நன்றி:-)))

அபி அப்பா said...

மத்தபடி போஸ்ட் பத்தி சொல்லனும்ன்னா சூப்பரோ சூப்பர்!!! சரி தொப்பையை குறைக்க வழி செய்ய கூடாதா? புலம்பிகிட்டே இருந்தா குறையுமா என்ன?

அருள்மொழி said...

வேடிக்கையா சொல்லியிருந்தாலும் நாட்டு நடப்பு விளக்கம் பிரமாதம்!
உண்மை நிலை இப்படி தான் என்றாலும் , வரதட்சணை வாங்க மாட்டேன்,நகை எல்லாம் கொஞ்சம் போட்டாலும் போதும் என்று, இன்னமும் வாயை திறக்க மாட்டேங்கறேங்களே நண்பா!

Raj said...

நொந்தவன் சொல்றேன் கேளுங்க

நான் இன்னும் பிளாகை சரியாய் படிக்கலீங்க ஏதோ கல்யாண விருந்து மாதிரி இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் தின்னுட்டு கமெண்டை எழுதுறேன்.
வர வர பெண்ணை பெத்தவனோட லொள்ளு தாங்க முடியலீங்க. எனக்கு 33 ஆவுது இப்பதான் அப்ளிகேஷன் ப்ராசஸ் ஆவுது இவ்ளோநாள் தொடாத பயோடேட்டாவை இப்பதான் அப்டேட் பண்ணி அனுப்பிருக்கேன். மொதோ போட்டோ சரி இல்லையாம் திரும்பவும் ஆர்மிக்காரன் மாதிரி நிக்கசொல்லி ஒரு போட்டோ கேட்டாங்க. இன்னும் ரிடர்ன் டெஸ்ட் இருக்கு (மின்னஞ்சல்) நேர்முக தேர்வு இருக்கு (யாராவது என்னோட ஆபீசுக்கு வருவாங்க) அப்புறம்
வாய்மொழி தேர்வு இருக்கு (என்ன கேட்பாங்கன்னு தெரியல). மெடிக்கல் டெஸ்ட் இருக்கு. ஆனா பொண்ண பத்தி எனக்கு 3 விஷயம் மட்டும் தெரியும்.
1 அது ஒரு பொண்ணுங்க
2 பேரு
3 மெட்ராசுல இருக்காங்களாம். (மெட்ராஸ் என்னமோ அமரிகவுல இருக்குற மாதிரி)
ஆம்பளைன்ன ஆயிரம் கேள்வி கேட்பாங்க ஆனா பொன்னை பத்தி சொல்ல மாட்டாங்க.
அவங்களுக்கு சமைக்க தெரியுமான்னு எனக்கு தெரியல. நான் எதோ சுமாரா சமைப்பேங்க துணி துவைக்க தெரியும் (இது ரெண்டு மட்டும் தான் சவுதில வந்து கத்துக்கிட்டது). வேற எங்கயாவது அப்ப்ளிகேஷன் போடலாம்னு பார்த்தா என்னைவிட குவாலிபிகேஷன் உள்ள ஆளு நெறைய பேரு இருக்காங்க. காம்படிஷன் ஜாஸ்திங்க. இப்படி அரேஞ்சிடு மேரேஜுக்காக வெயிட் பண்ணாம பேசாம ஏதாவது ஒரு பிகர பாத்து லவ் பண்ணலாம்ன்னு தோணுது.

Raj said...

நொந்தவன் சொல்றேன் கேளுங்க

நான் இன்னும் பிளாகை சரியாய் படிக்கலீங்க ஏதோ கல்யாண விருந்து மாதிரி இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் தின்னுட்டு கமெண்டை எழுதுறேன்.
வர வர பெண்ணை பெத்தவனோட லொள்ளு தாங்க முடியலீங்க. எனக்கு 33 ஆவுது இப்பதான் அப்ளிகேஷன் ப்ராசஸ் ஆவுது இவ்ளோநாள் தொடாத பயோடேட்டாவை இப்பதான் அப்டேட் பண்ணி அனுப்பிருக்கேன். மொதோ போட்டோ சரி இல்லையாம் திரும்பவும் ஆர்மிக்காரன் மாதிரி நிக்கசொல்லி ஒரு போட்டோ கேட்டாங்க. இன்னும் ரிடர்ன் டெஸ்ட் இருக்கு (மின்னஞ்சல்) நேர்முக தேர்வு இருக்கு (யாராவது என்னோட ஆபீசுக்கு வருவாங்க) அப்புறம்
வாய்மொழி தேர்வு இருக்கு (என்ன கேட்பாங்கன்னு தெரியல). மெடிக்கல் டெஸ்ட் இருக்கு. ஆனா பொண்ண பத்தி எனக்கு 3 விஷயம் மட்டும் தெரியும்.
1 அது ஒரு பொண்ணுங்க
2 பேரு
3 மெட்ராசுல இருக்காங்களாம். (மெட்ராஸ் என்னமோ அமரிகவுல இருக்குற மாதிரி)
ஆம்பளைன்ன ஆயிரம் கேள்வி கேட்பாங்க ஆனா பொன்னை பத்தி சொல்ல மாட்டாங்க.
அவங்களுக்கு சமைக்க தெரியுமான்னு எனக்கு தெரியல. நான் எதோ சுமாரா சமைப்பேங்க துணி துவைக்க தெரியும் (இது ரெண்டு மட்டும் தான் சவுதில வந்து கத்துக்கிட்டது). வேற எங்கயாவது அப்ப்ளிகேஷன் போடலாம்னு பார்த்தா என்னைவிட குவாலிபிகேஷன் உள்ள ஆளு நெறைய பேரு இருக்காங்க. காம்படிஷன் ஜாஸ்திங்க. இப்படி அரேஞ்சிடு மேரேஜுக்காக வெயிட் பண்ணாம பேசாம ஏதாவது ஒரு பிகர பாத்து லவ் பண்ணலாம்ன்னு தோணுது.

sakthi said...

கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குலுங்கி குலுங்கி அழ வேண்டியதா போச்சு :

அழாதேப்பா கண்ணை தொடைச்சிக்கோ

சோழன் said...

ஹே யு ஒய் ப்ளட் ? சேம் ப்ளட்
ஹையோ ஹையோ !!!!

எஸ் சக்திவேல் said...

>கூசாம பொய் சொன்னாலும் “நீங்க இந்தியா வந்த பிறகே கால் பண்ணுங்க”ன்னு மனசாட்சியே இல்லாம போனை வச்சிடுறாங்க பெண்ணை பெத்தவங்க.
ஹா ஹா, அதுதான் துபாயைவிட்டு 2000இலேயே ஓடிவிட்டேன்.

Related Posts with Thumbnails