கஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது

ஒரு நாள் கம்பெனியில இருக்குறப்ப தீடீர்னு வயத்த கலக்குது. அவசரமா பாத்ரூமுக்கு ஓடுறீங்க. துணியை கழட்டி உட்கார்ந்த பின்னால குழாய திறந்தா தண்ணி வரல! அய்யய்யோ உடனே இருட்டின கண்ணோட துணியை மறுபடியும் மாட்டி பாத்ருமுக்கு வெளிய இருக்குற ட்ரம்ல போய் ஒரு சின்ன பக்கெட்ல தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை! கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்டே இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா? கிட்டதட்ட இந்தமாதிரி ஒரு இக்கட்டான தண்ணீர் பஞ்சத்தின் நிலைமைய (கருமம் கருமம்!) நோக்கி தான் இந்த உலகம் போய்கிட்டுருக்கு.  (இது உங்களுக்கு நேர்ந்ததா?ன்னு கிண்டலாகவும் அனுதாபத்துடனும்  பின்னூட்டமும், தனி மடல்களும் இடும் வாசகர்களுக்கு மூக்கு மேல ஒரு குத்து குத்தப்படும்)

நமக்கு இயற்கை கொடுத்திருக்கிற முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்லலாம். அப்போது இனி நீரை வீணாக்க மாட்டேன்னு உறுதியும் எடுத்துகலாம். டெய்லி குளிக்கிற பழக்கம் இருந்தா இந்தம்மா மாதிரி கூட வேண்டிக்கலாம்

(தயவு செய்து படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்க வேண்டாம்)

சொன்னா கேட்டா தானே! பொண்ணு படத்தைப் பார்த்தா போதுமே? இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கிற மாதிரி டீசெண்டான சைட்டுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அதை பெரிசாக்கி பார்க்க ஆசைப்படலாமா? 'குளிக்கும் போது கும்பிடும் போட்டோ’னு கூகுளாண்டவர்கிட்ட தேடினப்ப கிடைச்சது தான் இது.  அது சின்னதா இருந்தா நான் என்ன பண்ணமுடியும். (யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது? பிச்சு புடுவேன் பிச்சு).  

இப்ப பதிவின் நோக்கத்துக்கு சம்பந்தமே இல்லாம அநாவசியமா நேரத்தை வீணடிக்கிற போல, மேல இருக்குற பத்தி மாதிரி தான் நமக்கே தெரியாம நீரை வீணடிக்கிறோம். நம்ம பிரச்சனையே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறது தான். நிலாவுல தண்ணி இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? (சரக்கு கிடைக்குமா?) முதல்ல சென்னையில இருக்குற முட்டு சந்து வரைக்கும் தண்ணி கிடைக்குதா? விவசாயிக்கு ஒழுங்கா தண்ணி கிடைக்குதா? இருக்குற தண்ணீரை எப்படி சேமிக்கலாம்னு உருப்படியா நம்ம அரசாங்கம் யோசிக்காது. நாம தான் யோசிக்கனும்.

 தண்ணீரை எப்போது வியாபாரமா ஆச்சோ அப்பவே அதற்கான பிரச்சனையும் ஆரம்பமாகிடுச்சு (தண்ணீர் பாக்கெட்லருந்து முல்லை பெரியாறு வரை). முடிஞ்ச வரை அந்த வியாபாரத்தை ஊக்குவிப்பதை தவிர்ப்போம். எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம். காசு கொடுத்து வாங்கிறதை தவிர்க்கலாம். தண்ணீரை சேமிக்க கத்துக்கனும். எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்? உடனே சரக்கடிக்கும் போது தண்ணி கலக்க மாட்டேன், குளிக்க மாட்டேன், கழுவ மாட்டேன்னு வீராப்பா சொல்லக்கூடாது. அப்புறம் வருசா வருசம் ’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ அப்படின்னு நாட்கள் வந்து அதைப் பத்தி விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும் போடச்சொல்லுவாங்க. நிலைமை மோசமாகிடும்.

தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் தீமைகள்: 

1. ஹீரோயின் குளிக்கிற சீன் பட்ஜெட் அதிகமாகி ஷங்கர் படத்துல மட்டும் வரும் :(

2. மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது.

3. மழையில்லாம வெள்ளைகாரனும் அடிக்கிற வெயிலுக்கு கருப்பாகிடுவான். அதுனால நான் நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்.

4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்.

5. ராமு: ஏன்பா சோமு உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு

சோமு: வந்தவங்க மூனு குடம் நல்ல தண்ணீர் வரதட்சனையா கேட்குறாங்கப்பா... அதுக்கு நான் எங்க போவேன்? (அழுகிறார் சோமு)

(”ராமு - சோமு”  பப்பு திருப்தியா?) 

6. கேரளாவுக்கு ரயில் மூலமாக தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் குடம் கடத்தல்.

தண்ணீர் பஞ்சத்துல இருக்குற நன்மைகள்: 

1.‘தண்ணியில கண்டம்’னு ஜோசியத்துல இருக்குற விசயத்துல இருந்து தப்பிக்கலாம்.

2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது? மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது!

3. தலைக்கு குளிக்காம எல்லாருக்கும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். (ஹி ஹி ஹி... )

நிறைய இருக்குங்க, இப்ப தண்ணி தாகம் எடுக்குது.. இருங்க தண்ணி குடிச்சுட்டு வந்து மீதியை சொல்றேன்.

தொடர் பதிவுக்கு அழைத்த முத்தக்காவிற்கு நன்றிகள். மேலும் ஆர்வம் கொண்ட நண்பர்கள் இதை அழைப்பாக ஏற்று தொடர்பதிவாக இடலாம்.

60 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...
This comment has been removed by the author.
சென்ஷி said...

ரொம்ப யோசிச்சிருக்கீங்கய்யா.... நல்லா இருங்க!

☀நான் ஆதவன்☀ said...

// சென்ஷி said...

ரொம்ப யோசிச்சிருக்கீங்கய்யா.... நல்லா இருங்க!//


ரைட்டு தல.... இனி அடுத்த பதிவு சுமாராவாவது இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன் :)

நாமக்கல் சிபி said...

நல்லா சொல்லிருக்கீறய்யா!

இய‌ற்கை said...

ம்ம்ம்... சிரிப்பான‌ சீரியஸ் போஸ்டா இது:-)

க.பாலாசி said...

//முத்தக்காவிற்கு நன்றிகள்//

ம்ம்ம்... அந்தக்கா உங்கள தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க.... :-)

சூப்பர்ப்....

ஆயில்யன் said...

// தண்ணீரை எப்போது வியாபாரமா ஆச்சோ அப்பவே அதற்கான பிரச்சனையும் ஆரம்பமாகிடுச்சு//

இந்த தம்பி நல்ல நல்ல பாயிண்ட் எல்லாம் சொல்லுது ! நோட் பண்ணிக்கிடற மாதிரி குட் போஸ்ட்டு!

கஷ்ட காலம் - டைட்டில் நல்லா இருக்குது!

ஆயில்யன் said...

//மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது///

எலேய்ய்ய்ய்ய்ய்ய் சாபம் வுடாதேலேய்ய்!

அதை நம்பித்தான் பாவம் ஜனங்க காத்து கெடக்கே! :(((

ஆயில்யன் said...

//நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்///


ம்ஹுக்கும் நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !

சீக்கிரம் ஆயிடலாம்ன்னு தலைக்கு மேல ஏசி ஃபிக்ஸுனேன்
ஆச்சு வருசம் !
போச்சு வயசு !

கலர் மட்டும் அப்படியேஏஏஏஏஏஏஏஏ இருக்கு :(

Chitra said...

அப்புறம் வருசா வருசம் ’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ அப்படின்னு நாட்கள் வந்து அதைப் பத்தி விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும் போடச்சொல்லுவாங்க. நிலைமை மோசமாகிடும்.


........ இது நல்ல மிரட்டல்!

தண்ணீர் கஷ்டத்தினால் வரும் தீமைகள் இவ்வளவு இருக்கா? அதை மக்களுக்கு புரிய வைக்கத்தான் கரெக்டா உங்களை தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க.

goma said...

இனிமேல் பாட்டு கூட

சொட்டு தண்ணி டோய்
ஹோய் ஹோய் சொட்டு தண்ணி டோய்...
அவ்வளவே

சைவகொத்துப்பரோட்டா said...

அருவியா கொட்டிடீங்க தண்ணீர் சேமிப்பை பற்றி.

தாரணி பிரியா said...

உங்க ப்ளாக் ஒப்பன் செஞ்சா கஷ்டகாலம் பொறக்குதுன்னு வருது :)

சீரியஸ் விஷயத்தை கூட சிரியஸா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நல்ல காமெடி கலக்கல்..

நாஞ்சில் பிரதாப் said...

தண்ணிப்பஞ்சத்தைப்பத்தி தினமும் குளிக்கிறவனும், வாய்கழுவுறவனும்தான்டே கவலைப்படனும்...நீ எதுக்குடே கவலைப்படுத.... கவலைப்படாத அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே...:))

சந்தனமுல்லை said...

செம ஜாலியா சொல்லியிருக்கீங்க பாஸ்..நன்மை தீமையெல்லாம் - ஏசி மேலே உட்கார்ந்து யோசிப்பீங்களோ?!! :-))

ஜெய்லானி said...

பாத்ரூமுல அதிக நேரம் தூங்கினா ,இப்படி கெட்ட கெட்ட கனவாதான் வரும் மாப்பு!!!!!!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆபிஸ் ல வேலை செய்யச் சொல்லி சொல்ராங்க ஒரே பிசின்னு சொன்னப்ப நம்பல இந்த பதிவைப் படிச்சிட்டு இப்ப நம்பறேன்..

அலுவலகத்துல ஒரே வேலை கஷ்டம் ந்னு சொன்னீங்க ஆனா தண்ணி கஷ்டம்ம்னு சொல்லவே இல்லையே...

(நான் ஹெல்மெட் போட்டிருக்கேன்)

கண்மணி/kanmani said...

நல்லாத்தான் பீதிய கெளப்புறீங்க...
இனி தண்ணி இல்லா காடுன்னு இராமநாதபுரத்தோடு லிஸ்டுல நிறைய சேர்ந்துடும்..

அக்கினிச் சித்தன் said...

//இப்ப பதிவின் நோக்கத்துக்கு சம்பந்தமே இல்லாம அநாவசியமா நேரத்தை வீணடிக்கிற போல,// நச்சுன்னு சொல்லியிருக்கீங்க தல :))

ஜெகதீஸ்வரன்.இரா said...

வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா ங்கொய்யால.....!

சூப்பராக்கீது....

அஷீதா said...

நீங்க டெய்லி குளிக்கறது இல்லன்னு இத விட டிசெண்டா சொல்ல முடியாது பாஸ்.......

கார்த்திகைப் பாண்டியன் said...

செம.. நல்ல விஷயத்த அழகா சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கீங்க தல..

நீச்சல்காரன் said...

நல்லாயிருக்கு சகா

முகிலன் said...

//2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது? மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது! //

இது தீமை மாதிரியில்லா இருக்கு? அப்புறம் எப்பிடி பதிவு தேத்துறது?

Anonymous said...

//யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது? பிச்சு புடுவேன் பிச்சு). //

இது தண்ணீர் விழிப்புணர்வு பதிவா இல்லை கூகுள் எப்படியெல்லாம் தேடறதுன்னு சொல்ற பதிவா :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

செம கலக்கல் தேவுடு.
உன் ஏரியாவில் தண்ணி பஞ்சமா?

அன்புடன் அருணா said...

அடக் கஷ்டகாலமே!!
/தினமும் இயற்கைக்கு நன்றி சொல்லலாம்/
யாரு இயற்கை ராஜிக்கா!????:)

ச.செந்தில்வேலன் said...

//சீரியஸ் விஷயத்தை கூட சிரியஸா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்
//

Repeat.. :)

கோபிநாத் said...

டேய் ஒரு நல்ல பக்கெட் கூட இல்லாத கம்பெனியில ஏண்டா இருக்குற...;))

மேல மொக்கையாக இருந்தாலும் கடைசியில நல்லா சொல்லியிருக்கிங்க மிஸ்டர்.................;)

சேட்டைக்காரன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! எவ்வளவு நகைச்சுவையாக இருந்தாலும், எடுத்துக் கொண்ட கருத்து சுருக்கென்று ஊசி போல குத்துகிற விஷயம். அற்புதம்!!

(நேத்து ஆணி காரணமாக, பின்னூட்டம் போட முடியாட்டாலும், ஆஜர் சொல்லிட்டு வாக்குப்பதிவு முடிச்சிட்டுப் போயிட்டேன். :-)) )

ஹுஸைனம்மா said...

//இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து//

எங்களையும் தாக்குற மாதிரி இருக்கு?? ;-))

//’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ .. விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும்//

அய்யய்யோ... மறுபடியுமா...

கண்ணா.. said...

//கோபிநாத் said...
டேய் ஒரு நல்ல பக்கெட் கூட இல்லாத கம்பெனியில ஏண்டா இருக்குற...;))

மேல மொக்கையாக இருந்தாலும் கடைசியில நல்லா சொல்லியிருக்கிங்க மிஸ்டர்.................;)//

ஹா...ஹா... ரிப்பீட்டேய்ய்...

ஷாகுல் said...

உங்க கைகாச போட்டாவுது அந்த ஓட்ட் பக்கெட்ட மாத்திருங்க. இல்லனா அடுத்த தடவையும் கஸ்டமாயிடும்.

//இனி அடுத்த பதிவு சுமாராவாவது இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன்//

ஹலோ! இதுவும் சுமாராதான் இருக்கு அடுத்த பதிவுலாம் வேண்டாம்.:)))))))

மங்களூர் சிவா said...

நான் நெசமாவே அந்த போட்டோவ க்ளிக் பண்ணினேன் பெருசா பாக்கிறதுக்கு

அப்புறம் வாய்ல வந்துச்சுபாரு ஒரு கெட்ட வார்த்த
:(

மங்களூர் சிவா said...

தண்ணீரை வீணாக்க வேண்டாம் மெசேஜ் ரிசிவ்ட்.

☀நான் ஆதவன்☀ said...

@சிபி

நன்றி தள
------------------------------------
@ இயற்கை

நன்றிங்க. உங்களுக்கு நன்றியெல்லாம் சொல்லியிருக்கேனே பதிவுல :)
------------------------------------
@பாலாசி

நன்றி பாலாசி. முத்தக்கா வருத்தப்பட்டுருப்பாங்கன்றீங்க?
-----------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் ஏஸி ஐடியா உங்களுக்கும் வொர்க் அவுட் ஆகலையா? அவ்வ்வ்
-----------------------------------
@சித்ரா

ஆமா இல்லையா பின்ன :) ஆனா இனி கூப்பிடுவாங்களான்னு தான் தெரியாது
-----------------------------------
@கோமா

அட நல்ல விளம்பரம்ங்க... :))
-----------------------------------
@சைவ கொத்து பரோட்டா

நன்றி பரோட்டா :)
-----------------------------------
@தாரணி ப்ரியா

வாங்க பாஸ். சிரிச்சீங்களா? அப்ப ரொம்ப நன்றி பாஸ்
-----------------------------------
@ரிஷபன்

நன்றி ரிஷபன்
-----------------------------------
@நாஞ்சில் பிரதாப்பு

ஏலேய் உனக்கென்ன கவலை. தண்ணியை தீர்த்தம் மாதிரி தலையில தெளிச்சுட்டு குளிச்சுட்டேன் குளிச்சுட்டேன் ஊரல்லாம் சொல்றவன் தானே நீயீ?
-----------------------------------
@ சந்தனமுல்லை

ஏசி மேல உட்கார்ந்தும் பிரயோசனம் இல்லையே பாஸ் :(
-----------------------------------
@ஜெய்லானி

அவ்வ்வ்வ்வ்வ் தூக்கம் எல்லாம் ஆபிஸ்ல மட்டும் தானுங்க. பாத்ரூம்ல இல்லைங்க :)
-----------------------------------
@முத்தக்கா

இப்பவாவது நம்புனீங்களேக்கா.. நான் ஆபிஸ்ல பிசின்னு :)
ஹெல்மெட் :))
-----------------------------------
@கண்மணி

இனி உலகமே ராமநாதபுரமா மாறினாலும் மாறிடும்ங்க :(

☀நான் ஆதவன்☀ said...

@ அக்கனிச்சித்தன்

அவ்வ்வ் அண்ணாச்சி பொட்டுன்னு உண்மைய காப்பி பண்ணி ரெண்டு மாங்கா அடிச்சுட்டீகளே :)
-------------------------------------
@ஜெகதீஸ்வரன்

நன்றி ஜெகதீஸ்வரன் :)
-------------------------------------
@அஷீதா

வாங்க அஷீதா. நானெல்லாம் டெய்லி ரெண்டு வேளை குளிக்கிறதைப்பத்தி பதிவே போட்டிருக்கேன். படிச்சு பாருங்க :)
-----------------------------------
@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா :)
-----------------------------------
@நீச்சல்காரன்

வாங்க வாங்க நீச்சல்காரன். வருகைக்கு நன்றி :)
-----------------------------------
@முகிலன்

ஆஹா..... கரெக்ட்டு கொஞ்சம் மாறி போச்சே தினேஷ் :)
-----------------------------------
@ சின்ன அம்மணி

ஹி ஹி டூ இன் ஒன் அம்மணி :)
-----------------------------------
@கார்த்திகேயன்

வாங்க தேவுடு. இங்க ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் பொதுவா தானே சொன்னேன் :)
-----------------------------------
@அருணா

வாங்க அருணா. இதை வேற கமெண்ட்ல சொல்லிட்டீங்க... அவங்க இனி சொல்லி சொல்லி காட்டப்போறாங்க :)
-----------------------------------
@செந்தில் வேலன்

நன்றி செந்தில். ஊர்ல இருந்து வந்தாச்சா?
-----------------------------------
@கோபிநாத்

அவ்வ் கூடிய சீக்கிரம் ரிஸைன் பண்ணிடுறேன் தல. டோண்ட் ஒர்ரி :)
-----------------------------------
@சேட்டைக்காரன்

வாங்க சேட்டை. இதை விட உங்க தண்ணீர் பதிவு சூப்பரா இருந்துச்சே :)
-----------------------------------
@ஹூஸைனம்மா

வாங்க ஹூஸைனம்மா. உசாரா இருந்துக்கங்க. இனி அந்த மாதிரி தொடர்பதிவும் வரலாம் :)
-----------------------------------
@கண்ணா

அவ்வ்வ் அவரே ரீப்பீட்டு கேசு. அவரையே ரிப்பீட்டு செய்றீங்களே தல :)
-----------------------------------
@ஷாகுல்

//உங்க கைகாச போட்டாவுது அந்த ஓட்ட் பக்கெட்ட மாத்திருங்க. இல்லனா அடுத்த தடவையும் கஸ்டமாயிடும்.//

பட்டுன்னு சிரிச்சுட்டேன் ஷாகுல் :) அப்படி பட்ட நிலைமை இன்னும் வரல... வந்தா நேரா பேப்பரோட தான் போவேன் :) சுமாராவாவது இருக்கே இந்த பதிவு :)
-----------------------------------
@மங்களூர் சிவா

வாங்க மா.சி. முன்னாடி நிறைய பேர் பலியாகியிருந்தாலும் நீங்க தான் முத ஆளா ஒத்துகிட்டு இருக்கீங்க :) ரொம்ப நன்றி

அபுஅஃப்ஸர் said...

நல்ல கருத்துதான்...

செய்யனுமே

கலகலப்ரியா said...

rommmba nallaarukku... am serious :-|

கானா பிரபா said...

அப்புறம் இன்னும் முக்கியமான மேட்டர்ஸ் விட்டுட்டியே பரிமளம்

1. தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவேன்னு சவால், சவுடால் எல்லாம் விட முடியாது

2. பாரதிராஜா படங்களில் (இனிமேல் அவர் படம் எடுக்கிறதா வச்சுக்கிட்டா) குளிக்கிற சீன் எல்லாம் வராது. அவர் படமெல்லாம் பட்ஜெட் படமாச்சே

3. //முத்தக்காவிற்கு நன்றிகள்// இப்படியான தப்பெல்லாம் இனிமே அவுக பண்ண மாட்டாங்க

கருமம் கருமம், கழுவுறதுக்கு தான் ஒண்ணும் இல்லைன்னா துடைக்கக் கூட ஒரு கடுதாசி கூடவா இல்லை?

கோமதி அரசு said...

தண்ணீரை வரதட்சிணையாக கேட்கும் காலம் வரும் என்று பயமுறுத்தி உள்ளீர்கள்.

தண்ணீரை வீணடித்தால் கஷ்டகாலம் தான்.

சிரிக்க சிந்திக்க வைத்துள்ளீர்கள்.

கண்ணகி said...

ரொம்ப நொந்து போய்ட்டம்...

வினோத்கெளதம் said...

இல்லை இப்பவே தான் நீ ’சில’ விஷயங்கள்ல தண்ணி சிக்கனத்தை கடைப்பிடிக்கிறியே..அப்புறம் என்ன கவலை..

ஆனா ரொம்பவே யோசிக்கிறப்பு..உடம்புக்கு நல்லதில்லை அவ்வளவு தான் சொல்லுவேன்..:))

prabhadamu said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிர தகவல். நன்றி நண்பரே.


உங்கள் பணியை சிறப்பாக தொடருங்கள். வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க தொடர்பதிவு ஒரு டெர்ரர் பதிவா இருக்கும்னு எதிர்பார்த்தேனே பாஸ்.

எனிவே, அந்த போட்டோவுக்காக உங்களை மன்னிச்சுவிடலாம்.
:))))))

4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்

!!!!!!!!! good one

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்!! குட் ப்ளாக்ஸில் இந்தப் பதிவும்!!

Vels said...

பெருசா தெரியல.

என்னை ஏமாத்திட்டீங்க.

ஜெகநாதன் said...
This comment has been removed by the author.
ஜெகநாதன் said...

அன்பு ஆது..
சிரித்​தேன்.. ரசித்​தேன்..!
உங்களுக்கு மட்டும் ஒன்று:
தண்ணீர் பஞ்சம், உலக தண்ணீர் தினம் என்ப​தெல்லாம் ​மே​லை நாடுகளின் ​பெரு வியாபார முன்னேற்பாடுகள்.
​பெட்​ரோலுக்கு இ​ணையாக தண்ணீ​ரை முன்னி​லைப் படுத்த (இதன் மூலம் அரபு நாடுகளின் ஆதிக்கத்​தை மட்டுப்படுத்த) ​மே​லை நாடுகள் பின்னும் H2O சதிவ​லை.

சிட்டுக்குருவி said...

:)))))

நல்லா இருக்கு

Anonymous said...

தலைப்பை பாத்து பயந்துட்டேன்
படிச்சதுக்கப்புறம் அதுல இருக்குற உண்மை தெளிவா புரியுது..
அதெல்லாம் இருக்கட்டும்.. தண்ணி பஞ்சத்துக்கு வேற உதாரணமே கிடைக்கலையா உங்களுக்கு?
குளியல் தினம் கழுவல் தினம் நல்ல கற்பனை.. அப்புறம் அந்த நன்மை தீமை பட்டியல் ரொம்ம்ம்ப ஓவர்..
சிந்தனையை தூண்டும் பதிவு.
வாழ்த்துக்கள்.

My days(Gops) said...

//தயவு செய்து படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்க வேண்டாம்//

நானும் ஒருவன் :)


அப்போ கண்டிப்பா இனிமேல்/ female போலிஸை எல்லாம் உன்னை தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவேன்'ற டயலாக் வரவே வராது :)

பட்டாபட்டி.. said...

//தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை! கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்டே இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா?
//

இதுக்கு என்ன பண்ணனும்.?.
முக்கியமான மேட்டருக்கு பதில் சொல்லுங்க சார்..

பின்னோக்கி said...

கடும் கண்டனங்கள். ராமு என்ற பெயரை உபயோகித்ததற்காக :). வேலைக்காரன் முதல் எல்லாருக்கும் ராமு...

வால்பையன் said...

இந்த கோணத்தில் இதுவரை யாரும் தண்ணீரின் தேவையை அணுகவில்லை!

:)

அப்பாவி தங்கமணி said...

ஆஹா...இத இப்படி கூட சொல்லலாமா

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அபி அப்பா said...

இவரு பெரிய ரோசாவசந்து மூக்கில குத்துவாராமில்ல மூக்கிலே........:-))

நல்லா இருந்துச்சு பதிவு!

Anonymous said...

பதிவு படிச்சு ரொம்ப நேரம் சிரிச்சிட்டு இருந்தேன் .எப்பிடி பா இப்படி எல்லாம் எழுதறிங்க உட்காந்து யோசிப்பாங்களோ ...கலக்கறிங்க ...

Related Posts with Thumbnails