நமக்கு இயற்கை கொடுத்திருக்கிற முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்லலாம். அப்போது இனி நீரை வீணாக்க மாட்டேன்னு உறுதியும் எடுத்துகலாம். டெய்லி குளிக்கிற பழக்கம் இருந்தா இந்தம்மா மாதிரி கூட வேண்டிக்கலாம்
(தயவு செய்து படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்க வேண்டாம்)
சொன்னா கேட்டா தானே! பொண்ணு படத்தைப் பார்த்தா போதுமே? இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கிற மாதிரி டீசெண்டான சைட்டுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அதை பெரிசாக்கி பார்க்க ஆசைப்படலாமா? 'குளிக்கும் போது கும்பிடும் போட்டோ’னு கூகுளாண்டவர்கிட்ட தேடினப்ப கிடைச்சது தான் இது. அது சின்னதா இருந்தா நான் என்ன பண்ணமுடியும். (யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது? பிச்சு புடுவேன் பிச்சு).
தண்ணீரை எப்போது வியாபாரமா ஆச்சோ அப்பவே அதற்கான பிரச்சனையும் ஆரம்பமாகிடுச்சு (தண்ணீர் பாக்கெட்லருந்து முல்லை பெரியாறு வரை). முடிஞ்ச வரை அந்த வியாபாரத்தை ஊக்குவிப்பதை தவிர்ப்போம். எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம். காசு கொடுத்து வாங்கிறதை தவிர்க்கலாம். தண்ணீரை சேமிக்க கத்துக்கனும். எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்? உடனே சரக்கடிக்கும் போது தண்ணி கலக்க மாட்டேன், குளிக்க மாட்டேன், கழுவ மாட்டேன்னு வீராப்பா சொல்லக்கூடாது. அப்புறம் வருசா வருசம் ’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ அப்படின்னு நாட்கள் வந்து அதைப் பத்தி விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும் போடச்சொல்லுவாங்க. நிலைமை மோசமாகிடும்.
தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் தீமைகள்:
1. ஹீரோயின் குளிக்கிற சீன் பட்ஜெட் அதிகமாகி ஷங்கர் படத்துல மட்டும் வரும் :(
2. மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது.
3. மழையில்லாம வெள்ளைகாரனும் அடிக்கிற வெயிலுக்கு கருப்பாகிடுவான். அதுனால
4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்.
5. ராமு: ஏன்பா சோமு உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு
சோமு: வந்தவங்க மூனு குடம் நல்ல தண்ணீர் வரதட்சனையா கேட்குறாங்கப்பா... அதுக்கு நான் எங்க போவேன்? (அழுகிறார் சோமு)
(”ராமு - சோமு” பப்பு திருப்தியா?)
6. கேரளாவுக்கு ரயில் மூலமாக தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் குடம் கடத்தல்.
தண்ணீர் பஞ்சத்துல இருக்குற நன்மைகள்:
1.‘தண்ணியில கண்டம்’னு ஜோசியத்துல இருக்குற விசயத்துல இருந்து தப்பிக்கலாம்.
2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது? மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது!
3. தலைக்கு குளிக்காம எல்லாருக்கும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். (ஹி ஹி ஹி... )
நிறைய இருக்குங்க, இப்ப தண்ணி தாகம் எடுக்குது.. இருங்க தண்ணி குடிச்சுட்டு வந்து மீதியை சொல்றேன்.
தொடர் பதிவுக்கு அழைத்த முத்தக்காவிற்கு நன்றிகள். மேலும் ஆர்வம் கொண்ட நண்பர்கள் இதை அழைப்பாக ஏற்று தொடர்பதிவாக இடலாம்.