இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும்....

இரண்டு கன்னங்களையும் காற்றால் அடைத்து “உஃ(f)ப்ப்" என்று வைத்துப் பார்த்தேன். ஓரளவு பரவாயில்லை. நாக்கால் ஒரு பக்க கன்னத்தில் கீழே சுருத்தி கொண்டே வந்து ஒரு இடத்தில் நிறுத்தினேன்.... இது கூட ஓரளவு பரவாயில்லை. இரண்டு புருவங்களை நன்றாக சுருக்கி கண்களை கூர்மையாக்கினேன். ம்ஹீம்ம் சரியில்லை. நெற்றியில் வேறு கோடுகள் வருகிறது. மேல் உதடை கொஞ்சம் காற்றால் நிரப்பி தாடையை கீழே வைத்துப் பார்த்தேன், அய்யோ சகிக்கல. முதலில் செய்தது போல கன்னங்களில் காற்றை நிரப்பி கொண்டே எவ்வளவு நேரம் தான் வெளியே செல்வது? . வாய் வலிக்குமே!

குழம்பித்தான் போனேன். தலையை கொஞ்சம் சாய்த்து வைத்துப் பார்த்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை. சாய்த்து வைத்துக் கொண்டே ஒரு கண்ணை மூடினாற் போல் லைட்டாக திறந்து பார்த்தேன். இது பரவாயில்லை தான். ஆனால் கொஞ்சம் இருட்டாக இருக்கிறதே! எங்காவது முட்டி மோதி கீழே விழுந்து விட்டால்?

பின்பு என்ன கோளாறாக இருக்கும்? சட்டென்று ஞாபகம் வந்தது. ரொம்பச்சரி தலைமுடியே தான். கண்டிப்பாக அதுவே தான்.பரபரவென்று தலையை கலைத்தேன். இது கொஞ்சம் பரவாயில்லை. கையில் பார்த்தால் எக்கசக்க முடி! அய்யோ முடி என்ன இப்படி கொட்டுது. ச்சே வேண்டாம் முடியை முன்பு   போலவே செய்துவிடலாம். சீப்பை எடுத்து வாரினேன். தண்ணீர் நன்றாக விட்டு தூக்கி வாரிய போது தான் கவனித்தேன். நெற்றிக்கு கீழே ஒரு வடு.

முடிவே செய்து விட்டேன் இது தான் காரணமென்று. ஆனால் எப்பொழுது இந்த வடு வந்ததென்று சரியாக ஞாபகம் இல்லை. ஆறேழு வயசில் அடி பட்டு இருக்கலாம். பத்து பதினைந்து வயதில் இதனை காண்பித்து வந்து அம்மாவிடம் கவலையுடன் கூறியது ஞாபகம் வந்தது.  “அதுகெடக்குது...உனெக்கன்ன ராசா. அழகா இருக்க” டக்கென்று பத்து விரல்களில் ஐஸ் மழை போல சட சடவென்று சத்தம் வர திருஷ்டி கழிப்பாள். ப்ச் பழைய ஞாபகம்!.

சரி இதுதான் காரணமென்றால் ஏன் இத்தனை நாள் தெரியவில்லை? வாரிய தலைமுடியை இறக்கி நெற்றி வரை விட்டேன். அட இப்போது வடு தெரியவில்லை. வாயை கொஞ்சமாக ஒரு பக்கம் இழுத்து சிரித்தவாறு வைத்து இப்பொழுது கண்ணாடியை பார்த்தேன். இதுவும் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் எப்போதும் ஒரு பக்கம் சிரித்தவாறு வைத்திருந்தால் கோணவாயனாகி விடுவேனே? வேண்டாம் வேறெதாவது முயற்சிக்கலாம்.

வேறு என்ன தான் செய்வது. எப்படி பார்த்தாலும் முகம் அழகாக இல்லையே? அவள் திட்டியது போல் தான் இருக்கிறேன். இப்பொதெல்லாம் யாராவது என்னைப்பற்றி சொன்னால் உடனே அதனைப் பற்றிய கவலைகளில் மூழ்கி விடுகிறேன்.

பிடிமானம் சரியில்லாமல் கண்ணாடி ஆடியது. ஒருவேளை கண்ணாடியில் ஏதாவது கோளாறு இருக்குமா? ச்சே இது எனக்கான ஆறுதலை ஆழ் மனது எனக்கே தெரியாமல் கிளப்பி விடுகிறது.

மற்றவர்களின் ஐடியா கேட்பதை நிறுத்த வேண்டும். இதுவரை வாங்கிய குழாய் க்ரீம்களை ஒன்றாக சேர்த்திருந்தால் இந்தியா-ஈரான் குழாய் மூலமாக எண்ணெய் கொண்டு வரும் திட்டத்தையே செயல்படுத்தியிருக்கலாம். ரூம் சேட்டன் அறிவுரைப்படி லாலேட்டன் தொட்டு காவ்யா மாதவன் வரை விளம்பரங்களில் வந்த அழகு சாதனங்களை எல்லாம் பயன்படுத்தியாயிற்று. இதாவது பரவாயில்லை.... காலையில் கக்கா ஒழுங்காக, சீராக போனால் அன்றைய தினம் முகம் அழகாக இருக்கும் என்று ஒரு முறை சேட்டன் கூறியதை அப்பாவியாய் நான் ”ஆனோ சேட்டா?” என்று கேட்டதை இப்போது நினைத்தாலும் சேட்டனை மூக்கு மேல் குத்த வேண்டும் போல் உள்ளது. 

சின்ன வயது போட்டாக்களிலெல்லாம் அழகான தான் தெரிகிறேன். இப்போது மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது? ஒருவேளை மனபிராந்தியா? அதுவும் தனியாக இருக்கும் பொழுது தான் இதுபோல் தோன்றுகிறது. ஆம் தனியாக... இப்போது இந்த தனிமையை கலைப்போம். இப்போது எங்கே செல்வது? தாமஸ் ரூமுக்கு செல்லலாமா? வேண்டாம் போன முறை கண்ணாடியை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏதோ நினைத்தவன் தீடீரென்று “இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும் நீ செரிக்க புத்திஜீவியானு”ன்னான். இவன்கிட்ட கேட்டேனா நான்? இது தான் ஏத்துற மாதிரி ஏத்தி இறக்கிவிடுறது. அவனையும் மூக்குலயே குத்த வேண்டும்.

கண்ணாடி ஆடிக்கொண்டே இருந்தது.

ஒரு வேளை நிறம் காரணமாக இருக்கலாமா? ச்சேச்சே அப்படியெல்லாம் இருக்கவாய்பில்லை.

மெசேஜ் வந்திருந்தது. சென்னையிலிருந்து தோழி. “டேய் வீட்ல ஒரே பிரச்சனை. யார்கிட்ட சொல்றதுன்னே தெரியல. ரமெஷை நான் லவ் பண்றது தெரிஞ்சு போச்சு. நீ பக்கத்துல இருந்தேன்னா ரொம்ப தைரியமா இருக்கும். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் வாடா. இப்போ ப்ரீயா இருந்தா கால் பண்ணு..” படார் என்று சப்தம். திரும்பினேன்.

கண்ணாடி கீழே விழுந்து உடைந்திருந்தது. உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக.

49 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நாஞ்சில் பிரதாப் said...

நல்லாருக்குய்யா... கடைசில கொன்னுட்ட...

ஆனா புனைவு மாதிரி தெரியல மச்சி... எனக்கென்னவோ உன்கதைமாதிரித்தான் தெரியுது...
அழகா இருக்கனும்னு அழகுக்ரீம்லாம் தேவையில்ல மசசி... தினமும் காலை குளி...அவ்ளோதோன்...

ஆயில்யன் said...

//நெற்றியில் வேறு கோடுகள் வருகிறது. மேல் உதடை கொஞ்சம் காற்றால் நிரப்பி தாடையை கீழே வைத்துப் பார்த்தேன், அய்யோ சகிக்கல.///

நான் அதை வேற போட்டோ எடுத்து தொலைச்சு கேமராவுக்கு வலிச்சுருக்குமோ?

மன்னித்து கொள் என் இனிய நிக்கான் டி60யே :(

ஆயில்யன் said...

//அழகுக்ரீம்லாம் தேவையில்ல மசசி... தினமும் காலை குளி...அவ்ளோதோன்...///


அனுபவம் பேசுது !

செஞ்சுத்தான் பாரேன் மக்கா!

ஆயில்யன் said...

//அம்மாவிடம் கவலையுடன் கூறியது ஞாபகம் வந்தது. “அதுகெடக்குது...உனெக்கன்ன ராசா. அழகா இருக்க” ///


எல்லா அம்மாக்களுக்குமே இது ஒரு கை வந்த கலை போல!

பொய் என்னாமா வருது :(

ஆயில்யன் said...

//எப்போதும் ஒரு பக்கம் சிரித்தவாறு வைத்திருந்தால் கோணவாயனாகி விடுவேனே? ///


என்ன பாஸ்? இங்க போயி கொஸ்டீன் மார்க்கெல்லாம் வரப்பிடாது!

Madurai Saravanan said...

கடைசி வரியில கண்ணாடி போல் காதல் உடைந்தது ...எனக்கும் வலிக்கிறது. பாவம் நீங்கள். அற்புதமான விவரிப்பு .வாழ்த்துக்கள்.

நாஞ்சில் பிரதாப் said...

//செஞ்சுத்தான் பாரேன் மக்கா!//

ஆயில்ஸ் அப்ப ஆதவன் தினமும் குளிக்கிறதில்லைன்னு முடிவே பண்ணிட்டிங்களா???
நாராயணா நாராயணா...

KVR said...

இவ்ளோ வேலை பண்ணதுக்கு ஒழுங்கா அந்தப் பொண்ணுக்கிட்டேயே நேரடியா மேட்டரை ஒடைச்சிருக்கலாம்ல்ல. தேவையில்லாம ஒரு கண்ணாடி போச்சு. சரி சரி, அடுத்தத் தடவையாவது கண்ணாடி ஒடையறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க

- அனுபவஸ்தன்

சின்ன அம்மிணி said...

//சின்ன வயது போட்டாக்களிலெல்லாம் அழகான தான் தெரிகிறேன். //

ஏதோ ஒண்ணு கூட குட்டியா இருக்கும்போது அழகா இருக்குமாம் :)

ஹுஸைனம்மா said...

//லேபிள்: ங்கொப்புரான சத்தியமா இது புனைவு தான்//

பதிவு: எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல!!

சென்ஷி said...

//"இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும்...."//

அழகுடா மச்சி :))

ரொம்ப நல்லா இருக்கு ஆதவன். உன்னோட எழுத்துப்பரிமாணம் கூடிக்கிட்டு வர்றதைப் பார்க்க சந்தோசமா இருக்குது.

வாழ்த்துக்கள்டா..

சென்ஷி said...

@ மதுரை சரவணன், கேவிஆர்..

பதிவுல எங்கயும் காதல் குறிப்புகள் வந்ததா எனக்குத் தெரியலை. இவரோட (அழகு) மனப்பான்மையை சோதிச்சுட்டு இருக்கும்போது, காத்துல ஆடுன கண்ணாடி கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு. ஆனா தோள் தர்ற நட்புக்கு துணையா இருக்கோம்ங்கற நம்பிக்கை நம்மளை எப்பவும் அழகா காட்டும்ங்கற விசயத்தை அழகா எழுதியிருக்கார்ன்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன்.. :)

Chitra said...

உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக.

......... புனைவு பதிவுலும், உங்கள் எழுத்து நடை தெரிகிறது - அழகாக.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

சின்ன வயது போட்டாக்களிலெல்லாம் அழகான தான் தெரிகிறேன். இப்போது மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது?

///////

அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அக அழகை உணர உதவிய தோழி (புனைவில்)
பாராட்டப்படவேண்டியவர்..

:)

கண்ணா.. said...

பின்நவீனத்துவ புனைவில் கலக்கிட்டே ஆதவா...

பின்ன கேவிஆரும், சென்ஷி கமெண்டை பாருங்க..

நானும் முதலில் கேவிஆர் நினைத்ததைதான் நினைத்தேன். பின் சென்ஷி ’புளி’ போட்டு விளக்கிய பிறகுதான் எனக்கும் புரிந்தது (?!)

:)))

அபுஅஃப்ஸர் said...

:):):)))))))

Good Narration

pappu said...

அடடே..ஆச்சரியக் குறி... குப்பதொட்டிக்கு தான் வந்திருக்கோமா? இல்ல காசு கொடுத்து எழுதிருப்பாங்களோ? ஐயா, பெரிய எழுத்தாளராகிட்டு இருக்கீங்களே!

ரிஷபன் said...

ஆஹா.. அழகிய பதிவு..

☀நான் ஆதவன்☀ said...

@பிரதாப்பு

உன் அழகுக்கு காரணம் டெய்லி குளிக்குறதா பிரதாப்பு? நம்பவே முடியல பிரதாப்பு!
-------------------------------------
@ஆயில்ஸ்

//மன்னித்து கொள் என் இனிய நிக்கான் டி60யே :(//

ஏழேழு ஜென்மத்துக்கு புண்ணியம் கிடைக்கும் பாஸ் :)

//செஞ்சுத்தான் பாரேன் மக்கா!//

ரைட்டு பாஸ். இனி முயற்சி பண்றேன் :)
----------------------------------
@மதுரை சரணவன்

கருத்துக்கு நன்றி சரவணன். ஆனா கதையோட கரு அதில்ல. சென்ஷி சொன்னது தான் சரி :)
-----------------------------------
@கேவிஆர்

அப்படி இல்ல கேவிஆர். சென்ஷி கொடுத்த விளக்கத்த படிங்க :) (ஆமா அனுபவஸ்தன்னு போட்டிருக்கீங்க, வீட்ல தெரியுமா?)
-----------------------------------
@ சின்ன அம்மணி

யூ டூ சின்ன அம்மணி :(
-----------------------------------
@ ஹூஸைனம்மா

அவ்வ்வ் இனி எப்படி சொன்னாதான் நம்புவீங்க? கற்பூரம் அடிச்சு சத்தியம் தான் பண்ணனும் போல :)
-----------------------------------
@ சென்ஷி

நன்றி தல :)

எப்பவும் என் கதைக்கு நானே விளக்க பின்னூட்டம் கொடுத்து ரொம்ப போரடிச்சு போச்சு. மிகச்சரியா அழகா விளக்கம் கொடுத்ததற்கு நன்றி தல :)

☀நான் ஆதவன்☀ said...

@சித்ரா

நன்றி சித்ரா :)
-----------------------------------
@உலவு.காம்

நன்றி உலவு :)
-----------------------------------
@ முத்தக்கா

நன்றிக்கா :) கிட்டதட்ட உங்க பின்னூட்டமும் அடுத்தடுத்து படிக்கிறவங்களுக்கு உபயோகப்படும்
-----------------------------------
@கண்ணா

:))))) நன்றி கண்ணா.
-----------------------------------
@அபு அப்ஸர்

நன்றி அப்ஸர் :)
----------------------------------
@ பப்பு

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னைய கூட புத்தகம் போட வச்சுருவீங்க போலயே..அவ்வ்வ்வ்வ்வ்
----------------------------------
@ரிஷபன்

நன்றி ரிஷபன் :)

பா.ராஜாராம் said...

:-))

அற்புதம் ஆதவன்!!

கோமதி அரசு said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்,ஆதவன்.

தாமஸ் சொன்ன மாதிரி நீங்கள் அறிவு ஜீவிதான்.

மாதேவி said...

"உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக."
இது ரொம்பப்பிடித்தது.

இய‌ற்கை said...

//@ சென்ஷி

நன்றி தல :)

எப்பவும் என் கதைக்கு நானே விளக்க பின்னூட்டம் கொடுத்து ரொம்ப போரடிச்சு போச்சு. மிகச்சரியா அழகா விளக்கம் கொடுத்ததற்கு நன்றி தல :)//


என்ன பண்றது?... எப்போவுமே அப்நார்மலா யோசிச்சா , நார்மலா இருக்கறவங்களுக்கு விளக்கம் தேவைதான்?

இய‌ற்கை said...

இவ்ளோ நல்லா கதை எழுதறீங்களே.. குட்..குட்..

KVR said...

//அப்படி இல்ல கேவிஆர். சென்ஷி கொடுத்த விளக்கத்த படிங்க :)//

நீங்க அவ்ளோ நல்லவருன்னு தெரியாமப் போய்டுச்சு ஆதவன் :-)

// (ஆமா அனுபவஸ்தன்னு போட்டிருக்கீங்க, வீட்ல தெரியுமா?)//

அந்தக் கொடுமைய ஏன் கேக்குறிங்க. காதலிச்சப் பொண்ணையே கல்யாணம் செய்துகொண்ட அபாக்கியவாதி நானு ;-)

வினோத்கெளதம் said...

கதை சூப்பரு..சென்ஷி போட்ட கம்மென்ட் அவன் நேர்ல நின்னு பேசுற மாதிரியே இருந்துச்சு..:)
சொன்னமாதிரி எழுத்துநடை தாறுமாறு..

ஆனா ஒரு விஷயம் யோசிச்சியா..பொண்ணுங்க(சில) அவங்களுக்கு மனசு கஷ்டமா இருந்தா தான் பசங்களுக்கு போன் பண்ணுவாங்க..ஏன்னா அந்த சமயத்தில் நம்ம மாதிரி 'இளிச்சவாயர்கள்' அவங்களுக்கு ஒரு ஃபில்ட்டர் மாதிரி..ஆனா பசங்க சாதாரணமா போன் பண்ணி விசாரிப்பாங்க..இதுக்கெல்லாம் 'ஃபீல்' பண்ணாத இது ஒரு ராஜதந்திரம் பெண்களை(சில) பொறுத்தவரை..:)

கோபிநாத் said...

\\வினோத்கெளதம் said...
கதை சூப்பரு..சென்ஷி போட்ட கம்மென்ட் அவன் நேர்ல நின்னு பேசுற மாதிரியே இருந்துச்சு..:)
சொன்னமாதிரி எழுத்துநடை தாறுமாறு..

ஆனா ஒரு விஷயம் யோசிச்சியா..பொண்ணுங்க(சில) அவங்களுக்கு மனசு கஷ்டமா இருந்தா தான் பசங்களுக்கு போன் பண்ணுவாங்க..ஏன்னா அந்த சமயத்தில் நம்ம மாதிரி 'இளிச்சவாயர்கள்' அவங்களுக்கு ஒரு ஃபில்ட்டர் மாதிரி..ஆனா பசங்க சாதாரணமா போன் பண்ணி விசாரிப்பாங்க..இதுக்கெல்லாம் 'ஃபீல்' பண்ணாத இது ஒரு ராஜதந்திரம் பெண்களை(சில) பொறுத்தவரை..:)\\

மச்சி...சூப்பருடா ;))

புனைவு...புனைவுன்னு ஒன்னு ஓவராக போகுது எங்க சிக்க போகுதோ!!!...ஆண்டவா ;)

Anonymous said...

என்ன பாஸ் காமெடியா முடிப்பீங்கன்னு பார்த்தா இப்பிடி சேரன் மாதிரி ஆக்கிபுட்டீங்களே!

வெங்கடேஷ்

கலகலப்ரியா said...

superb...! இப்டியும் எழுத வருமா உங்களுக்கு.. =))

☀நான் ஆதவன்☀ said...

@ராஜாராம்

மிக்க நன்றி ராஜாராம் :)
------------------------------------
@கோமதி அரசு

நன்றிம்மா. தாமஸ் சொன்னபடி அறிவாளியா இருக்குறதால பிரச்சனை இல்ல..... பக்ஷே சவுந்தர்யம் குறைவானோன்னு இச்சிரி சம்ஷயன் உண்டு :)
-----------------------------------
நன்றி மாதேவி :)
-----------------------------------
@இயற்கை

அவ்வ்வ்வ் நேரிடையா பைத்தியம்னே சொல்லியிருக்கலாம்ல

//இவ்ளோ நல்லா கதை எழுதறீங்களே.. குட்..குட்..//

நன்றி குரு :))
-----------------------------------
@கேவிஆர்

//அந்தக் கொடுமைய ஏன் கேக்குறிங்க. காதலிச்சப் பொண்ணையே கல்யாணம் செய்துகொண்ட அபாக்கியவாதி நானு ;-)//

:)))) இருங்க அவங்களுக்கு இந்த லின்ங் தரேன்.

உங்களமாதிரியே எல்லாருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காதுல்ல :)
----------------------------------
@வினோத்

அடப்பாவி ஒரு புனைவு எழுதினா அதுக்குள்ள பொண்ணுங்கள பத்தி ரிசர்ச் பண்ணி ஒரு டிகிரியே வாங்கிடுவ போல :) சொம்பு நொம்ப அடிவாங்கியிருக்கு போல :)
----------------------------------
@கோபிநாத்

ஹி ஹி எல்லாம் ஒரு புத்தகம் போட்டா சரியாகிடும்னு நினைக்கிறேன் தல :)
----------------------------------
@வெங்கடேஷ்

காமெடியா எழுதலாம்னு தான் முதல்ல ஆரம்பிச்சேன். முடிக்கும் போது எனக்கே தெரியாம இப்படி முடிச்சுட்டேன் வெங்கடேஷ். டோண்ட் ஒர்ரி மொக்கைகள் தொடரும் :)
-----------------------------------
@கலகலப்ரியா

நன்றி ப்ரியா... கபி கபி ஹைஸா ஹோத்தா ஹை :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒருவேளை கண்ணாடியில் ஏதாவது கோளாறு இருக்குமா? //

ஏன் பாஸ் இப்படி அண்டப்புளுகு ஆகாசபுளுகெல்லாம் புளுகறீங்க,

பிடிமானம் சரியில்லாமல் கண்ணாடி ஆடியது.//

வயசானா கை நடுங்கத்தான் செய்யும், அந்த நடுக்கத்துல கண்ணாடி ஆடியிருக்கும். ;)))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண்ணாடி கீழே விழுந்து உடைந்திருந்தது. உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக. //

ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ், அழகாக காட்ட ஒரு கண்ணாடி உடைபடனும் போல.

இப்ப ரூம்ம்பு ஃபுல்லா ஒடைஞ்ச கண்ணாடிதானா பாஸ் :)

KVR said...

//:)))) இருங்க அவங்களுக்கு இந்த லின்ங் தரேன். //

ஒண்ணும் பெருசா ரகளையெல்லாம் நடக்காது. அவங்களும் “காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்ட அபாக்கியவதி நானு”ன்னு சொல்லிடுவாங்க. இதிலெல்லாம் நாங்க Made for each otherங்கோ ;-)

கைப்புள்ள said...

காமெடி மாதிரி ஆரம்பிச்சு கடைசில செண்டிமெண்டா முடிச்சிட்டீங்களே முயல் சார். சாரி ஒரு செரிய ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் உண்டாயி.

சவுந்தர்யம் கூடிய முயல். சரியானோ?

:)

சேட்டைக்காரன் said...

ரொம்ப கஷ்டமான முடிவு! :-((

☀நான் ஆதவன்☀ said...

@அமித்து அம்மா

பாஸ் கொஞ்ச நஞ்சம் இல்ல டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்க என்னை :)
-------------------------------------
@கேவிஆர்

நினைச்சேன்... நீங்க ரெண்டு பேரும் Made for each other தான் இருப்பீங்கன்னு :)
------------------------------------
@கைப்புள்ள

வாங்கண்ணே. ரொம்ப நன்றிண்ணே நீங்களாவது நான் அழகான முயல்னு ஒத்துக்கிட்டீங்களே :)
------------------------------------
@சேட்டைகாரன்

சேட்டை முடிவை தப்பா புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன். சென்ஷி பின்னூட்டத்தை படிங்க :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தேவுடு
எல்லா நல்லா தான்யா இருக்கு.ஆனா தொடர் புலம்பலா இருக்கே.
உனக்கு என்னய்யா ராசாக்கண்ணு.
நோ ஃபீலிங்ஸ் இனிமே சொல்லிப்புட்டேன்.
நான் ஊருக்கு போறப்ப உன் வீட்டுக்கு போய் சொல்றேன்.:)

Jaleela said...

கண்ணாடி கீழே விழுந்து உடைந்திருந்தது. உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக///இப்படி சொல்லி உங்களை தேத்தி கொண்டீர்களாக்கும்

நல்ல பகிர்வு.

மங்குனி அமைச்சர் said...

//கண்ணாடி கீழே விழுந்து உடைந்திருந்தது//

நல்ல வேலை கண்ணாடி உடைந்தது , இல்லனா ..................?

கார்த்திக்(மாயூரத்தான்)... said...

மிகவும் அருமை...

ஜெகநாதன் said...

வெகு அருமை ஆது!!
இந்தியா-ஈரான் எண்ணெய் கடத்தல் ​யோசனை பிரம்ம்மாதம்...!
இப்பத்தான் புரியுது ஏன் ஆயில்யன் கமண்டுகளா அள்ளித் ​தெளிச்சிருக்காருன்னு :)))

கோமதி அரசு said...

உங்கள் சவுந்திரியத்திற்கு என்ன குறைச்சல் ஆதவன்?

உங்கள் அம்மா சொன்னது தான் நிஜம்.

க.பாலாசி said...

அபூர்வ சகோதரர்கள் படம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

Vani said...

நல்லாத்தான்யா யோசிக்கிறீங்க

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

என்ன தேவுடு ஒண்ணுமே எழுதல?
ஒருவாரமா

SanjaiGandhi™ said...

ஆமா.. புனைவு தான்.. கடைசி வரியை சொன்னேன்.. :))

Vani said...

:)))))))))

Related Posts with Thumbnails