”என்ன சூரி படிக்கலையா?” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமும், களையான முகமும் கொண்ட ஈஸ்வரி. அந்த அழகான பற்வரிசை தெரிய எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். தோழமைக்கு ஆண் பெண் பேதமில்லை என்று கற்றுத்தந்தவள். எட்டாவது படிக்கும் போது நடந்த பேச்சு போட்டியில் அறிமுகமானாள் என்று நினைக்கிறேன். முதல் பரிசு பெற்ற என்னை “எனக்கு தெரியும் நீ தான் வின் பண்ணுவன்னு. வாழ்த்துகள்” என்று கைக்குலுக்கியது ஞாபகங்களில் வந்த முதல் கீறல்.
கரும்பலகையில் அழகாக எழுதுவது ஒரு கலை. அச்சிறுவயதில் மிக நேர்த்தியாக எழுதுவதில் ஆசிரியர்களையே மிஞ்சுபவள். அனைத்து ஆசியர்களுக்கும் கரும்பலகைகளில் எழுத இவளையே அழைப்பார்கள். சீராக வளைந்தோடும் நதியைப் போல், கைவளையோசை கிலுகிலுக்க எழுதிகொண்டே இருப்பாள். எழுதும் போதும் நடுவே சிரிப்பாள். எதற்காக சிரிக்கிறாள் என்று அவளுக்கே தெரியாது. பின்கேட்டாலும் சிரிப்பாள்.
எங்கள் தெருவில் டியூசன் படிக்க வருவாள். எந்நேரமும் தெருவில் விளையாடி கொண்டிருக்கும் என்னைப் பார்த்து “என்ன சூரி படிக்கலையா?” என்று தினமும் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். சிலநாள் அவள் வந்தால் ஒளிந்துகொள்ளக்கூட தொடங்கினேன். ஒரு நாள் என் கையைப் பிடித்து என் வீட்டிற்கு சென்று ”உட்காரு, இன்னைக்கு சேர்ந்தே படிக்கலாம்” என்று கட்டளையிட்டாள். அவள் படித்தாள்...என்னால் முடியாமல் “உனக்கு படிக்கனும்னா படி என்னை ஆள விடு” என்று கையை உதறி ஓடினேன். என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ நினைத்தவாறு என் வீட்டிலேயே அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அவள் போகும் வரை நான் செல்லவில்லை. அன்றிலிருந்து அவள் என் வீட்டிற்கு வரவில்லை.
ஒன்பதாவது படிக்கும் போது ஒருநாள் கரும்பலகையில் எழுத சொல்லிவிட்டு ஆசிரியர் வெளியேற, வகுப்பு மாணவன் ராஜா ஈஸ்வரியின் தாய் எவ்வாறு மீன் விற்கிறாள் என செய்து காண்பிக்க, வகுப்பறை கொஞ்சம் கலகலத்தது. அவள் கண்கலங்கி “அது அவங்க தொழில், அதுக்கேன் என்னைய கிண்டல் பண்ற” என்றபோது தான் முதன்முதலாக கண்டேன் அவள் கண்கலங்கி நின்றதை. அதன்பிறகு கிண்டல் செய்த ராஜாவுடன் அடிக்கடி அவளை வெளியே காணமுடிந்தது.
பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திற்காக ஒரே டியூசனில் நானும் அவளும் சேர்ந்திருந்தோம். இன்னும் கொஞ்சம் அழகாகியிருந்தாள். தீடீர் பருவ மாற்றம் அனைவருக்கும் இடையே மெலிதான ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. தினமும் அவள் பின்னே பையன்கள் சுற்றுவதும் வாடிக்கையானது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்தபடியே செல்வாள்.
அதிகம் படிக்கச் சொல்லி வற்புறுத்தாமல் முழு சுதந்திரம் கொடுத்த அரசாங்க பள்ளிகூடம் அது. பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். கிட்டதட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிச்சயமாகி இருந்தாள். இப்போதெல்லாம் என்னை காணும் போது குறிப்பிட்ட ஏதாவது பாடத்தின் ஒரு பகுதியைக் கேட்டு “படிச்சுட்டயா சூரி?” நான் இன்னும் படிக்கவே இல்லை” என்று கூறுவதை வழக்கமாக கொண்டாள். என்னைத் தவிர வேறு யாரிடமும் இது போல் கேட்டுருக்கிறாளா என்று, அவள் ஞாபகம் வரும் போது அருகில் இருக்கும் நண்பர்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். வேறு யாரையும் இதே போல் தொடர்ந்து கேட்டதில்லை என்று மட்டும் தெரிந்தது. நண்பர்களும் என்னை கிண்டல் செய்ய “படிக்கலையாடா”வையே உபயோகிக்கத் தொடங்கினர்.
பரிட்சையும் முடிந்தது. மொத்த பள்ளியில் தேர்ச்சி பெற்றோர் மிகக்குறைவு. அவள் 75 சதவிகிதத்திற்கு மேல் எடுத்ததாக ஞாபகம். அதிகம் கவலைப்படவில்லை. அதற்கு பிறகு அவளை பார்க்கவில்லை. எங்கே சென்றாள் எனவும் தெரியவில்லை. நண்பர்கள் மூலமாக அவள் வேறு எங்கோ பதினொன்னாம் வகுப்பு படிப்பதாக மட்டும் கேட்டேன். அவளை அதோடு நினைத்துப்பார்த்திருக்கிறேனா என்று கூட ஞாபகம் இல்லை.
”ஏய்..ஏய்ய்ய்ய் சூரி” குரல் கேட்டு திரும்பியவன் சத்தியமாக அது ஈஸ்வரி என்று அடையாளமே தெரியவில்லை. அவள் எப்படி என்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை. அதே ஒல்லியான தேகம், அதே பல்வரிசை, ஆனால் வசீகரம் இழந்த சிரிப்பு. விடுமுறைக்கு ஊருக்கு சென்றவன் இவளைப் இப்படி சந்திப்பேன் என நினைக்கவில்லை. “எப்படி இருக்க?” என்று கேட்டவள் இடைவெளியே விடாமல் “என்ன படிச்சிருக்க?” என்றாள். நல்லாயிருக்கேன் என்று சொல்லத்தோணாமல் டிப்ளமோ படித்ததை மட்டும் சொன்னேன். “மேல படிக்கல?” என்று கேட்டு இடது புறம் திரும்பி ஓடியவள் ஆறு வயசு சிறுவனை தர தர வென்று இழுத்து வந்தாள். “எங்கன்னா சொல் பேச்சு கேட்குதா பாரு... ஆமா நீ மேல படிக்கலயா என்ன?” அவன் தலையை இழுத்து வ்யிறோடு அணைத்தவாறு கேட்டாள். ”ம்ம்ம் கரஸ்ல பண்றேன்” தலையாட்டினேன்.
சிரித்தாள். பழைய சிரிப்பிற்கும் இப்பொழுதிற்கும் ஏழு கடல், மலை தொலைவு தூரம் இருந்தது. “எனக்கு பத்தாவது முடிச்சு ஒரு வருஷத்திலேயே கல்யாணம் ஆகிடுச்சு. என் பையன் தான் இது. இவனும் எப்பவும் வெளிய வெளாட்டுதான். படிக்கவே மாட்டேங்கிறான். ஆனா எப்படியும் பெரிய படிப்பு படிச்சிருவானு நம்பிக்கை இருக்கு. ஆம்பள புள்ள பாரு” இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். எதுவும் என் காதில் விழவில்லை...”........அங்க தான் மீன் கடை வச்சிருக்கேன்” முடித்தாள். சிரித்தேன். பின்பு விடைபெற்றாள்.
நினைவுகளில் மூழ்கி மறைந்து போன யாரையாவது சந்தித்து மங்கிய நினைவுகளை துடைக்கும் போது கீறல் விழத்தான் செய்கிறது. எவரது நினைவுகளை புதைக்கவும் முடியுவில்லை. தனிமை எதையும் மீட்டெடுக்கும் வலிமையுள்ளதாக இருக்கின்றது. முடிவில் வலியை மட்டுமே தருகிறது.
37 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:
புனைவுன்னு போட்டு ஒரு கேள்விக்குறி எதுக்கு?
நிஜம்னே போட்டா குறைஞ்சா போயிடுவீங்க.
அருமை
வாரத்தின் முதல் நாள்
கடமை!
படிச்சுட்டு அப்ப்ப்ப்பாலிக்கா வாரேன்!
///தனிமை எதையும் மீட்டெடுக்கும் வலிமையுள்ளதாக இருக்கின்றது. முடிவில் வலியை மட்டுமே தருகிறது. ///
நூறு சதவீத உண்மை.
நினைவுகளில் மூழ்கி மறைந்து போன யாரையாவது சந்தித்து மங்கிய நினைவுகளை துடைக்கும் போது கீறல் விழத்தான் செய்கிறது. //
அருமை ஆதவன்..
அழகா சொல்லி இருக்கீங்க..
///தனிமை எதையும் மீட்டெடுக்கும் வலிமையுள்ளதாக இருக்கின்றது. முடிவில் வலியை மட்டுமே தருகிறது. ///
yes :)
இறுதி வரிகளில் மின்னல் தெறிக்குது ஆதவா...
நல்லா எழுதியிருக்கே..
படித்து முடிக்கும்போது இனம்புரியாத ஓர் சோக உணர்வு ஏற்படுகிறது.
//”ஏய்..ஏய்ய்ய்ய் சூரி” குரல் கேட்டு திரும்பியவன் சத்தியமாக அது ஈஸ்வரி என்று அடையாளமே தெரியவில்லை. அவள் எப்படி என்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை. அதே ஒல்லியான தேகம், அதே பல்வரிசை, ஆனால் வசீகரம் இழந்த சிரிப்பு.//
தல எனக்கும் இதே மாறி ஓரு ப்ளாஷ்பேக் இருக்கு....
ஆனா அவள் இன்னும் அழகாக, அதிக வசீகரத்துடன், இன்னும் ஆழமான நட்புடனும்......
எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி யாராச்சும் ஒரிருவர் நினைவில் நின்னுடுறாங்க.
சிரித்தாள். பழைய சிரிப்பிற்கும் இப்பொழுதிற்கும் ஏழு கடல், மலை தொலைவு தூரம் இருந்தது. //
அழகான அவதானிப்பு.
கடைசி வரிகள் கொஞ்சம் கலங்கடிச்சுடுச்சு பாஸ்.
புனைவு? ;)
ம்ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்.
அதெப்படி சொல்லிவச்ச மாதிரி எல்லா பசங்களுக்கும் இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு? ஆம்பளைங்க எல்லாருமே மிஸ் இண்டர்பிரட்டேஷன் செய்றதுல ஒண்ணுதான் போல!!
இதே கதை ஈஸ்வரியின் வெர்ஷன் கேட்க ஆசை.
நல்லாயிருக்கு...
Suuuuuuuuuuuuuuuperapppppuuuuuuuuuu..... nijama nalla irukku.....
மனசு வலிக்குது பாஸ். - நானும் ஈஸ்வரி -ன்னு ஆரம்பிக்கற பாட்டு பத்திதான் ஏதோ போஸ்ட், கலாய்க்கலாம்னு நினைச்சு வந்தேன்! இன்னும் எத்தனையோ ஈஸ்வரிகள்....குணசுந்தரிகள்....:-(
sila nerangalil
sila peru mansa urukiduvanga..
athila neenga ethilina entha kadium ondru..
evlo valigal..rumba nalla eruku sir.etho kadhioda onripona oru unnarvu...
ennudan paditha 8tholikalum en ninivuku vandanar..avangalam epo enga erukanu keta thiriathu..
Valtha Vayathu ellai..erunthalum valthukal.
Nandri Valga valamudan.
(v.v.s Group.)
athanga varuthapadtha valibar sangam..
ஈஸ்வரிகள் மாதிரியே ஈஸ்வரன்களையும் பார்த்திருக்கேன். நல்லா எழுதி இருக்கிங்க. அவங்க கேட்டதற்காகவாவது நீங்க நல்லா படிச்சிருக்கலாம் பாஸ்.
தொடக்கத்திலே அவசரமா எழுதுனிங்களா? பல்வரிசை பற்வரிசை ஆகி இருக்கு. ஆசிரியர்கள் ஆசியர்கள் ஆகிட்டாங்க. சரி செய்யுங்க.
நல்ல எழுத்து நடை பாஸ்...கலக்குங்க!
நினைவுகளில் மூழ்கி மறைந்து போன யாரையாவது சந்தித்து மங்கிய நினைவுகளை துடைக்கும் போது கீறல் விழத்தான் செய்கிறது. எவரது நினைவுகளை புதைக்கவும் முடியுவில்லை. தனிமை எதையும் மீட்டெடுக்கும் வலிமையுள்ளதாக இருக்கின்றது. முடிவில் வலியை மட்டுமே தருகிறது.
மனம் வலிக்கும் வரிகள்...
சிரித்தாள். பழைய சிரிப்பிற்கும் இப்பொழுதிற்கும் ஏழு கடல், மலை தொலைவு தூரம் இருந்தது
சொல்லாமல் சொல்கிறது..
அருமை
அழகா சொல்லி இருக்கீங்க..பூங்கொத்து!
இது புனைவோ அல்லது பழைய நினைவோ, எதார்த்தமாக சுவாரசியமாக சொல்லியிருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.
அருமையான பதிவு சூரி.. :)
நினைவுகளில் மூழ்கி மறைந்து போன யாரையாவது சந்தித்து மங்கிய நினைவுகளை துடைக்கும் போது கீறல் விழத்தான் செய்கிறது. எவரது நினைவுகளை புதைக்கவும் முடியுவில்லை. தனிமை எதையும் மீட்டெடுக்கும் வலிமையுள்ளதாக இருக்கின்றது. முடிவில் வலியை மட்டுமே தருகிறது.
.............சில வார்த்தைகளில், நேர்த்தியாய் சொல்லி இருக்கீங்க.
நீங்க இம்மாம் பெரிய எழுத்தாளார்னு தெரியாம உங்கள கலாய்ச்சிட்டேன்.. மன்னிச்சிக்கோங்க பாஸ் :((
கதை? அருமை :)
இந்த குவாட்டரு ஆயில்ஸுக்கு :D
@சின்ன அம்மணி
புனைவா எழுதுறதே ஒரு கலையாச்சே. எனக்கெல்லாம் எளிதில் கை கூடுற விசயமா அது :) அதான் அந்த கேள்விகுறி :)
ரொம்ப நன்றிங்க.
------------------------------------
@ஆயில்ஸ்
பாஸ் படிக்காமலே போயிட்டீங்களா? கிர்ர்ர்ர் இருங்க இதே பதிவை மெயிலா அனுப்பி டார்ச்சர் பண்றேன்.
------------------------------------
@ ஜெய்லானி
நன்றிங்க
-----------------------------------
@ முத்தக்கா
நன்றிக்கா :)
-----------------------------------
@ ராஜலெட்சுமி
நன்றி நன்றி :)
-----------------------------------
@சென்ஷி
நன்றி தல
-----------------------------------
@ சைவகொத்து பரோட்டா
ம்ம்ம்ம் நன்றிங்க :)
@கண்ணா
தல உங்க பதிவுக்கு வெயிட்டிங் :) பட் இது காதல் கதையல்ல... தோழி தான் :)
------------------------------------
@அமித்து அம்மா
ரொம்ப நன்றி பாஸ் :) (புனைவுல்ல கேள்விகுறி இருக்கே பாஸ் பார்க்கலையா?)
------------------------------------
@ஹூஸைனம்மா
ஹுஸைனம்மா அவ வெறும் தோழி தான் எனக்கு :) அடுத்த தடவைப் பார்த்தா அவ சைடு கதையையும் பதியிறேன் :)
------------------------------------
நன்றி பாஸ்கரன் :)
------------------------------------
நன்றி இவன்கோபி :)
------------------------------------
@ சந்தனமுல்லை
நன்றி பாஸ்.. குணசுந்தரி? ரைமிங்கா சொன்னாலும் வித்தியாசமா இருக்கு பாஸ் :)
------------------------------------
@காம்ப்ளான் சூர்யா
வாழ்த்துகளுக்கு நன்றி சூர்யா :)(என் பேரும் அதான்) அல்ரெடி இங்க ஒரு வருத்தபடாத வாலிபர் சங்கம் இருக்கே? தெரியாதா?
------------------------------------
@கேவிஆர்
நன்றி கேவிஆர். இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருக்கலாம் தான் :)எழுத்து பிழைகளை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி. திருத்திவிட்டேன் :)
------------------------------------
@கண்ணகி
கருத்துக்கு நன்றிங்க
-----------------------------------
@ரிஷபன்
நன்றி ரிஷபன்
@இயற்கை
நன்றி ராஜி
------------------------------------
@அன்புடன் அருணா
பூங்கொத்துக்கு நன்றி அருணா :)
------------------------------------
@சேட்டைகாரன்
பாராட்டுக்கு மிக்க நன்றி சேட்டை :)
------------------------------------
@முகிலன்
நன்றி தினேஷ் :)
------------------------------------
@சித்ரா
நன்றி சித்ரா. தொடர்ந்து வாங்க
------------------------------------
@ஜி3
அவ்வ்வ்வ் பாஸ் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திராதீங்க. என்னோட பழைய பதிவெல்லாம் படிச்சு பாருங்க. நான் எழுத்தாளன் இல்ல...இல்ல.... ல்ல.... ல... நம்புங்க :)
//@கண்ணா
தல உங்க பதிவுக்கு வெயிட்டிங் :) பட் இது காதல் கதையல்ல... தோழி தான் :)//
பதிவு போட்டு 12மணி நேரம் 10 நிமிடம் 20 மணிச்துளிகள் ஆச்சு....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//பதிவு போட்டு 12மணி நேரம் 10 நிமிடம் 20 மணிச்துளிகள் ஆச்சு....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
அட நான் சொன்னது உங்களுக்கும் ஒரு ப்ளாஷ் பேக் இருக்குன்னீங்களே? அதை :)
//ப்ளாஷ் பேக் இருக்குன்னீங்களே? அதை :)//
எனக்கும் மிகச்சிறந்த தோழிதான்.. ஆனால் பதிவு எழுதும் அளவிற்கு யோசிக்கலை.. டிரை பண்ணலாம்..
ஆமா நீங்க தொடர்பதிவ எழுத சொல்லி மிரட்டுனீங்கன்னு வினோத் சொல்லுறானே என்ன மேட்டர்..?
அருமை ஆதவா!
ம்ம் நிச்சயம்!
சில நேரங்களில் இதுபோன்ற சந்திப்புக்களை, மனதில் வெகுவாக ஏற்படுத்தக்கூடிய ஆழமான காயங்களை தவிர்த்து வந்திருக்கின்றேன்! ஆனாலும் //தனிமை எதையும் மீட்டெடுக்கும்//
:-))))))))))))))))))))))))))
இதுவும் ஒருவிதமாக கடமை கதையாடா...அதை நீயும் செய்துவிட்டாய் உன் தனிதன்மையில்...;)))
இது கதையா ? இல்லை நிஜமா? நல்ல பதிவு.
நினைவில் நிற்பவைகள் நிஜங்களுக்குள் ஊலாவுகின்றன.
அருமை...
Anna,
Very nice anna, you write so sweet..
then why you give a name to your blog like "குப்பைத்தொட்டி" ???
www.tamildaily.com
thx
Kanna
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
Post a Comment