விஷக்கிருமிகள்

லை வலியை இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை ’அது’க்கு. சிலிர்த்துக் கொண்டது தலையை. முன்மண்டையை பக்கத்தில் இருந்த கடினமான பொருளில் தலையைத் தேய்த்து கொண்டே இருந்தது. மூர்க்கமான ஒலியை எழுப்பி அச்சூழலை விநோதமாக ஆக்க முயன்றது. தன் கை அல்லது கால் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்டது. அங்கிருந்த மற்றவைகளுக்கு ஏதோ அசம்பாவிதம் அதுக்கு நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. என்னவென்று புரியவில்லை.

ராம் தன்னிலையை மறந்தவராக பிரமிப்பாக அதையே பார்த்துக்கொண்டிருந்தார். நாசாவிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த பிரபஞ்சத்தில் பூமியிலிருந்து வெகு தொலைவில் மனிதன் வாழ வேறு எதுவும் சாத்தியமுள்ள கிரகம் இருக்கிறதா என ஆராய அனுப்பபட்ட  செயற்கைகோளை கண்காணிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் ராம்.

கிரிஸ்டோபர் பிரமிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக “இப்போது என்ன செய்வது?” என்று ஆங்கிலத்தில் வினவினான்.

”அது என்னவாக இருக்கும்?” ராம்

“தெரியவில்லை...பார்க்கும் போது ஒரு முனை மிகக்கூர்மையா இருக்கு. எவ்வளவு நீளம் இருக்கிறதென்று தெரியவில்லை” கிரிஸ்டோபர்

“வேகம்?” ராம்

”ஒரு மணி நேரத்திற்கு 1688 கிலோமீட்டர் வேகம். இடையிடையே வேகம் மாறுபடுகிறது” கிரிஸ்

“வரும் பாதை பூமியின் நேர்கோடு தானா?” ராம்

“இப்போது வரை ஆம். ஆனால் இடையில் மாறலாம்.”

“அது பூமியைத்தாக்க எவ்வளவு நாள் எடுக்கும்?” ராம்

“சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம்” கிரிஸ்

“தாக்கும் போது பூமியின் எல்லா பகுதியும் சேதமடையுமா?”

“அதன் மொத்த நீளம், அகலம் இதுவரை கிடைக்கவில்லை. அதைப்பொருத்தே முடிவு செய்யமுடியும்” கிரிஸ்

"நமது விண்கலத்திற்கு ஏதும் ஆபத்து இருக்குமா?”

“இப்போது எதுவும் இல்லை. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் தொலைதொடர்பு துண்டிக்கலாம். அதனோடு வருகின்ற சிறு சிறு கற்கள் அதன் மீது மோத வாய்ப்புண்டு” க்ரிஸ்

மறுபடியும் கவலையோடு அந்த புகைப்படத்தை பார்க்க தொடங்கினார் ராமானுஜம்.

 ”ஏதாவது கவிதை சொல்லுங்களேன்” முத்தமிட எத்தனித்தவனை அழகாக தவிர்த்து திசை திருப்பினாள். உடன்வாயை திறந்தவனின் உதடுகளை கைகளால் தொட்டு மூடி “உடனே என் பெயரை சொல்லுவீங்களே?” நகைத்தாள்.

விரல்களை உதடுகளிலிருந்து மாற்றி வலக்கையில் பத்து விரல்களாக்கினான். இரவும் துணை புரிந்தது. ”பிடிச்சதை தானே சொல்ல முடியும்?” என்றான்

“என்னைய ரொம்ப பிடிக்குமா?” புருவங்களை உயர்த்தினாள்.

“உன்னை எவ்வளவு
பிடிக்கும்
என்று கேட்டால்
சொல்ல தெரியாது..
ஆனால் மறுகேள்வி
இல்லாதவாறு
கட்டிப் பிடிக்க
தெரியும்”

என்றவன் ஆயுத்தமானான்.  வெட்கத்தில் சிரித்தபடி ஓடினாள், மறைந்திருந்து எதிரே வந்த நால்வர் கன்னத்தில் அறையும் வரை. இருவர் அவனைப் பிடித்து இழுத்துச்செல்ல, மற்ற இருவரில் ஒருவன் “அடியே ஈனச்சாதியிள பொறந்த சிறுக்கி... உனக்கு எங்க ஜாதியில பையன் கேட்குதா. இதுக்கு தேவிடியா பொழப்பு பொழைக்கலாம்டி...” கொண்டு வந்த ஆயுதத்தை எடுத்தான்.

து மயக்கமடைந்திருந்தது. சுயநினைவு வந்தபொழுது 
தன்னை விட வயதில் மூத்தது அருகில் இருப்பது தெரிந்தது. ஆறுதலாகவும் இருந்தது. மயக்கத்திலிருந்து இன்னும் விடுபட முடியாமல் மறுபடி கண்ணயர்ந்தது.

வெட்ட வேண்டும்...குறைந்தது, அதிகபட்சம் என்றெல்லாம் இல்லை. பார்க்கும் எல்லோரையும் வெட்ட வேண்டும். அந்த மதத்தை காண்போரையெல்லாம் வெட்ட வேண்டும். ஏன் அதே போல் அடையாளம் உள்ளவர்களை கூட விட்டு வைக்க கூடாது. நான் தனியாக இல்லை. என்னுடன் என்னைப் போலவே  இழப்புகளை சந்தித்தவர்களும் உண்டு. அதை விட அதிகமாய் ஏற்கனவே இவர்கள் மீது வெறுப்பிலுள்ளவர்களும் உண்டு. உடலெங்கும் வீழ்த்திய உடல்களின் குருதி வழிய கத்தியோடு திரிகிறேன்.


எனக்கொன்றும் ஆகாது. ஆனாலும் கவலைபட ஒன்றும் இல்லை. ஒரே நேரத்தில் மனைவியையும், ஒரே குழந்தையும் பறிகொடுத்த பிறகு வாழ என்ன இருக்கிறது.  மனதில் தீ இன்னும் அணையவில்லை. அதே தீயுடன் நான்கு வயது சிறுமியை குடிசையில் வைத்து தீ வைத்திருக்கிறேன். அவள் அந்த வலியை உணர்ந்திருப்பாளா?  இந்நேரம் கருகி இருப்பாள். போகட்டும்.... என் மகனின் பிஞ்சு உடல் மட்டும் வெடிகுண்டை தாங்கும் சக்தியுள்ளதா என்ன?

என்னுடன் வந்தவன் அச்சிறுமியின் தாயை வெறித்தனமாக புணர்ந்தே கொன்றான். ம்ம்...மகளுக்கும் சேர்த்து அவள் வலியை உணர்ந்திருப்பாள். ஆம் புணர்ந்தே கொல்லுதல் தான் மிகச்சிறந்த பழிவாங்கல். அதோ ஒருத்தி ஓடுகிறாள்....வேறு எவனும் வரும் முன் நான் முந்த வேண்டும். தலை மயிறை பிடித்து இழுத்து கீழே தள்ளினேன்.கர்பிணி........ இருந்தால் என்ன?


னைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் அந்த அறையில் குழுமியிருந்தனர். விசயம் அரசல் புரசலாக மீடியாவிற்கும் தெரிந்து கசியத்தொடங்கியிருந்தன.

“இதுவரை நமக்கு வந்த தகவல்படி  ஒரு மிகப்பெரிய கல் சூரிய குடும்பத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அதன் நேர்கோடு பூமியை நோக்கியே இருக்கிறது. அதன் நீளம் நம்மால் கணக்கிட முடியாதபடி மிக நீளமாக இருக்கிறது. அது வரும் வேகம், வடிவமைப்பு இதை பார்க்கும் போது, பூமியின் மீது மோதினால் கண்டிப்பாக ஒரு உயிர் கூட மிஞ்சாது.” ராம் ஒரு சில விஞ்ஞான மொழிகளினூடே அனைவருக்கும் புரியும்படியான ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்தார்.

 இதை தடுக்க வழி? நடுவில் அமர்ந்திருந்த அதிபர் கேட்க விடையில்லாமல் விஞ்ஞானிகள் மௌனத்தையே பதிலாக அளித்தனர். சிறிது நேரம் மௌனமாக இருந்த அதிபர் “சிறிது ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்டுபிடித்த சிவப்புச்சூரிய குடும்பத்தில் வாழ முடியும் அல்லவா? சாத்திய கூறுகள் எந்த அளவில் இருக்கின்றன?”

“60% சதவ்கிதம் சாத்தியகூறுகள் இதுவரை உள்ளன. அங்கு சென்று சில ஆண்டுகள் எடுத்தால் இன்னும் சாத்தியப்படலாம். ஆனால் அங்கு அனைத்து மக்களும் குடியேற இப்போது கால அவகாசம் இல்லையே? விண்கலமும் நம்மிடையே குறைவு தான்” தலைமை விஞ்ஞானி எடுத்துரைத்தார்.


“இருக்கும் விண்கலத்தை பயன்படுத்துங்கள், மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் தேவைப்படும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் மட்டும் போகுமளவிற்கு தயார் செய்தால் போதும். மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை. பல ஆண்டுகளுக்கு தேவையான உணவு வகைகள், மற்றும்.....” அடுக்கி கொண்டே அதிபர் சொல்ல அனைவரும் வாயடைத்து நின்றனர்.

போகும் போது ராம்மை ஓரக்கண்ணால் பார்த்தபடி “அமெரிக்கர்கள் மட்டும் விண்கலத்தில் இருந்தால் போதும். முக்கியமாக வெள்ளையர்கள்” என்று தலைமை விஞ்ஞானியிடம் கிசுகிசுத்தபடி சென்றுகொண்டிருந்தார்.

து மயக்கம் தெளியும் போது வயதில் மூத்தது உணர்வுகளால் ஆன பாஷையில் அதன் பிரச்சனையை விளக்கிக்கொண்டிருந்தது. அதன் தலையின் ஒரு பகுதி கிருமிகளால்  பாதிப்படைந்துள்ளது. மோசமான அந்த கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அது மேலும் பரவாமல் இருக்க அந்த பகுதியை எடுக்க வேண்டும்” என்று கூற, அது கவலையோடு ஒத்துக்கொண்டது.

கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்க அதன் தலையை பிரித்து கூரான கத்திமுனையை செலுத்தியது மற்றது...

48 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Madurai Saravanan said...

super. viru viruppaka kathai selkirathu. vaalththkkal.

Chitra said...

சுவாரசியமான கதை. :-)

இய‌ற்கை said...

mm.. appuram?

kathai nalla irukku

சந்தனமுல்லை said...

பாஸ்...சூப்பர்!! (இல்லன்னா புரியலைன்னு நினைச்சுடுவாங்களே!அவ்வ்வ்) :-)))

ஆயில்யன் said...

அய்யய்யோ இந்த அநியாயத்தை தட்டி கேட்க இந்த உலகத்துல நாதியே இல்லியாஆஆஅ?

அதி பிரதாபன் said...

அடங்கொய்யால...
இந்த பயபுள்ள மண்டைக்குள்ள இப்படி ஒரு சிந்தனையா?

நல்லா பிண்ணிருக்கைய்யா, முடிச்ச.

நாஞ்சில் பிரதாப் said...

யோவ்...நீ நல்லாத்தானே இருந்த...

ஏதாச்சும் புத்தகம் வெளியிடற ஐடியா இருந்துச்சுன்னா இப்பவே சொல்லிரு... நான் ஊரைவிட்டு ஓடிடறேன்... இப்படி படுத்தாத.!!

சென்ஷீகிட்ட சேராதேன்னு சொன்னா கேட்கறீயா??? புரியறமாதிரி எழுதித்தொலைங்கய்யா...

சென்ஷி said...

நல்ல முயற்சி ஆதவன்..

சில குறைகளா படிக்கும்போது கண்டுபிடிக்க முடியறது என்னன்னா உடனே கதைக்குள்ள ஒன்றிப்போகும்போது உடன் வர்ற குழப்பமான தொடர்புக் கண்ணிகள்தான்.. விஷக்கிருமிகள்ங்கற தொகுப்புல விஷயங்களை நீ ஏத்தியிருக்கறது நல்லா இருக்குது.

இன்னொரு சந்தேகம்.. ஆபரேசன் செய்யற ஆளை குறிப்பிடும்போது நீ ‘அது” அது’ன்னே சொல்றியே.. அப்ப ”அது” மனுசன் இல்லையா..

நல்ல முயற்சி.. மீண்டும் புதிதாய் தொடரவும்.

சென்ஷி said...

//சென்ஷீகிட்ட சேராதேன்னு சொன்னா கேட்கறீயா??? புரியறமாதிரி எழுதித்தொலைங்கய்யா...//

எலேய் பிரதாப்பு.. என் கூட சேர்ந்தாச்சும் இப்படி எழுத ஆரம்பிச்சதுக்கு சந்தோசப்படு. உன்கூட சேர்ந்தாக்கா இவன் பொறந்த நாளை விசாரிக்கப் போறாங்க.. :)

Jeeves said...

எல்லாரும் ஓடுங்க... அது நம்மளை நோக்கித்தான் வருது.


**
கதை பற்றி,

கதாநாயகனின் பஞ்ச் டயலாக் சூப்பர், கதாநாயகியுடன் போடும் குத்தாட்டம் சற்றே விரசம்.

வில்லன் தேவையில்லாமல் அடிக்கடி உறுமுவது எரிச்சல். அம்மா தங்கை என்று செண்டிமெண்ட் இல்லாமல் இருப்பது இது நகைச்சுவைக் கதையோ என்று எண்ண வைத்தாலும், கதாநாயகன் சென்டிமெண்ட்களிள் புகுந்து விளையாடுகிறார்

மொத்தத்தில் குப்பைத் தொட்டியை இன்னும் சுத்தப் படுத்தி இருக்கலாம்.

ஆயில்யன் said...

//Jeeves said...///


ஆமாம் இவுரு அப்படி என்ன சொல்லியிருக்காரு? :)

அதி பிரதாபன் said...

//Jeeves said...
அம்மா தங்கை என்று செண்டிமெண்ட் இல்லாமல் இருப்பது இது நகைச்சுவைக் கதையோ என்று எண்ண வைத்தாலும், கதாநாயகன் சென்டிமெண்ட்களிள் புகுந்து விளையாடுகிறார்//

அம்மா தங்கை செண்டிமெண்டை காமெடியில் கலந்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மேலும் உலகத்தையே காப்பாற்றும் கதாநாயகனை விட்டுவிட்டு அமெரிக்கர்கள் மட்டும் கிளம்பும் முடிவு எடுக்கும்போது, கதாநாயகன் கண் மட்டுமல்ல, போஸ்டர் ஒட்டும் பையன் கூட கண் கலங்கியது என்னைக் கண்கலங்கச்செய்தது. அந்த நேரம் கதாநாயகன் தனது அம்மாவையும், தங்கயையும் மற்றும் தங்கை வளர்க்கும் பூனையையும் நினைத்துதான் கண்கலங்கினார் எனபதை முதலிலேயே சிலைடில் பார்த்தபின்பும், அம்மா செண்டிமெண்ட் இல்லை என்று கூறுவது சரியில்லை.

ஜீவ்ஸ் இன்னொரு முறை கதையோடு ஒன்றிப் பார்த்தால் அவருடைய குறைகள் நிறைகளாகத் தெரியலாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சென்ஷி said...
நல்ல முயற்சி ஆதவன்..

சில குறைகளா படிக்கும்போது கண்டுபிடிக்க முடியறது என்னன்னா உடனே கதைக்குள்ள ஒன்றிப்போகும்போது உடன் வர்ற குழப்பமான தொடர்புக் கண்ணிகள்தான்.. விஷக்கிருமிகள்ங்கற தொகுப்புல விஷயங்களை நீ ஏத்தியிருக்கறது நல்லா இருக்குது.

இன்னொரு சந்தேகம்.. ஆபரேசன் செய்யற ஆளை குறிப்பிடும்போது நீ ‘அது” அது’ன்னே சொல்றியே.. அப்ப ”அது” மனுசன் இல்லையா..

நல்ல முயற்சி.. மீண்டும் புதிதாய் தொடரவும்.


வழிமொழிகிறேன் ஆதவன்.

மீண்டும் இந்தக்கதையையே முயற்சி செய்யுங்கள். இதன் மேம்படுத்தப்பட்ட இன்னொரு பக்கம் எப்படியிருக்கும் என்பதை அறிய ஆவல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைப்போடே வைத்து கதையை படித்தால் பிடிபடும் வாய்ப்பு அதிகம் :)))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
அய்யய்யோ இந்த அநியாயத்தை தட்டி கேட்க இந்த உலகத்துல நாதியே இல்லியாஆஆஅ? //

பாஸ், இதுவே அநியாயம்னா, அப்ப அநியாயத்தை என்னன்னு சொல்லுவீஙக ;)))))))

BULLET மணி said...

kadhaila non linearity
intha kadhaila try pannrikkalam.
kadhapaathirangalai thodarpu padithirukkalam.

romba nalla irukku :)))

ஹுஸைனம்மா said...

பிரமாதம் ஆதவன், உங்கள் எழுத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இருக்கிறது கதை!!

வாழ்த்துக்கள்!!

ஹுஸைனம்மா said...

உண்மையில கதயப் படிச்சுட்டு நான் “ஙே”தான்.

இருந்தாலும் பாராட்டாம இருக்கக்கூடாதுல்ல, அதான், முந்தின பின்னூ.

கொடுமை!! :-)

☀நான் ஆதவன்☀ said...

@மதுரை சரவணன்

நன்றி சரவணன் (புரிஞ்சிடுச்சா?)
------------------------------------
@சித்ரா

நன்றி சித்ரா. அப்பாடா... உங்களுக்கும் புரிஞ்சிடுச்சா... சந்தோஷம் தான் :)
------------------------------------
@இயற்கை

கதை புரியலைன்னு சொல்லியிருந்தாலும் பரவாயில்ல... “ம்” கொட்டிக்கிட்டு கடைசியில அப்புறம்னு கேட்டது தான் மனசு தாங்கல..அவ்வ்வ்வ்வ்
----------------------------------
@சந்த்னமுல்லை

ம்ம்ம்ம் நீங்க தொடங்கி வச்சது...உங்களுக்கு பின்னால பாருங்க ஒரு கூட்டமே இதை தான் ஃபாலோ பண்ணுது!
----------------------------------
@ஆயில்யன்

பாஸ் இந்த ஆதவன் பொதைச்சாலும் பொங்கி வருவான்....எரிச்சாலும் எழுந்து வருவான்....
----------------------------------
@அதி பிரதாபன்

உனக்காவது புரிஞ்சு பாராட்டினயே மாப்பி. ரொம்ப சந்தோஷம் :)
(ங்கொய்யால கீழ ஜீவ்ஸோட சேர்ந்து கலாய்க்கவே செய்ற? இருடி இரு உனக்கு இருக்கு)
----------------------------------
@நாஞ்சில் பிரதாப்பு

அப்படியே அந்த பக்கம் ஓடிப்போயிடு...இந்தார வந்த மவனே செத்த நீயீ.
----------------------------------
@சென்ஷி

தெளிவான விமர்சனத்திற்கு நன்றி தல. அனைத்து விஷயத்தையும் இணைத்ததில் கோளாறாகிவிட்டது என்று நினைக்கிறேன். அடுத்த தடவை கொஞ்சம் நல்லா யோசிச்சு எழுதுறேன். பதிவில் வரும் கவிதைக்கு நன்றி தல :)

கோபிநாத் said...

நல்லாயிருக்குடா ஆதவா...;))

\\இன்னொரு சந்தேகம்.. ஆபரேசன் செய்யற ஆளை குறிப்பிடும்போது நீ ‘அது” அது’ன்னே சொல்றியே.. அப்ப ”அது” மனுசன் இல்லையா.. \\\

டேய் நீயே ஒரு அதுவாக தானே இப்போ இதுவாக இருக்கே...கேள்வியை கேட்குறான் பாரு...போட அது ;))

☀நான் ஆதவன்☀ said...

@ஜீவ்ஸ்

அண்ணே இலக்கியவாதிகளுக்கு இங்க இடமில்லைண்ணே :)
------------------------------------
@அமித்து அம்மா

நன்றி பாஸ். அடுத்த தடவை கொஞ்சம் நல்லாவே யோசிச்சு எழுதுறேன்
------------------------------------
@புல்லட் மணி

ரொம்ப நன்றி மணி.
-----------------------------------
@ஹூஸைனம்மா

கிர்ர்ர்ர்ர்ர்ர்....... கொடுமை தான்! :(

☀நான் ஆதவன்☀ said...

@கோபிநாத்

நன்றி தல. அதுகூட மீட்டிங் போட்டு விலாவரியா அதைப்பற்றி பேசலாம் :)

கோபிநாத் said...

\\பதிவில் வரும் கவிதைக்கு நன்றி தல :)
\\

அப்போவே கிளி சொல்லுச்சி...;)))

கோபிநாத் said...

டேய் உன் பதிவில் கும்முவோமா!!?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புரியுது நல்லா புரியுது.. அடுத்த கதை எப்ப? :)

சைவகொத்துப்பரோட்டா said...

சுவராசியம் ஆக இருக்கிறது, ஆனால் அது மட்டும் புரியவில்லை.

பேநா மூடி said...

இது தொடர் கதையா ???

அதி பிரதாபன் said...

//பேநா மூடி said...
இது தொடர் கதையா ???//
நல்லவேளை, இது கதையான்னு கேக்கல...

கும்க்கி said...

உம்ம அட்ரெஸ் அனுப்பி வைக்கவும்..

அதி பிரதாபன் said...

//கும்க்கி said...
உம்ம அட்ரெஸ் அனுப்பி வைக்கவும்..//

ஆதவா,
அண்ணன் உனக்கு கிப்ட்டு அனுப்பி வைக்கப்போறாரு...

Anonymous said...

ஏதோ புரிஞ்சமாதிரி இருந்தது. சென்ஷியோட பின்னூட்டம் பாத்ததும் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு புரிஞ்சது.

சிட்டுக்குருவி said...

விசக்கிருமி பரவினதோட விளைவா இந்த கதை

☀நான் ஆதவன்☀ said...

@முத்தக்கா

நன்றிக்கா :)
------------------------------------
@சைவ கொத்து பரோட்டா

நன்றிங்க. விளக்கம் இதற்கடுத்த பின்னூட்டத்தில்
------------------------------------
@பேநா மூடி

அவ்வ்வ்வ்வ்... முடியல
-----------------------------------
@அதி பிரதாபன்

ங்கொய்யால உன் அட்டகாசம் தாங்க முடியல
-----------------------------------
@கும்க்கி

பாராட்டுறதுக்கா? ஆட்டோ விடுறதுக்கா கும்க்கி? :) (பாராட்டுக்கு நன்றி கும்க்கி)
-----------------------------------
@சின்ன அம்மணி

அடுத்த பின்னூட்டத்தில் சின்னதா விளக்கம் கொடுக்கிறேன்
-----------------------------------
@சிட்டுகுருவி

கிட்டதட்ட அப்படி தான் :)

☀நான் ஆதவன்☀ said...

எனக்கு மட்டும் புரிஞ்ச கதையை உங்களுக்கு புரியிறமாதிரி கொடுக்க முடியாததற்கு என் வருத்தங்கள். இனி அடுத்த படைப்பை கொஞ்சம் நேரம் எடுத்து இன்னும் தரமாக தர முயல்கிறேன். கதைக்கான விளக்கம்...

மனிதனுக்குள்ள கிருமி இருக்குற மாதிரி மனிதனும் எதுக்குள்ளவாவது கிருமியா இருக்கலாம்னு ஒரு ஐடியா தோணுச்சு. அதன் விளைவா வந்தது தான் இந்த கதை. ’அது’ என்று நான் குறிப்பிட்டதனுள்ளே தான் மனித கிருமி இருக்கிறது. எப்படி மனிதனுள் கெட்ட கிருமிகளினால் நோய் வருகிறதோ அதேபோல் ‘அது’க்குள்ள எப்படி மனித இனம் கெட்ட கிருமியா(ஜாதி.மதம்,இனத்தால..இத்யாதி) மாறிட்டாங்கன்னு சொன்னேன்..பட்
எல்லாத்தையும் இணைப்பு சரியா இல்லாததால பிரச்சனையாகிடுச்சு

கோபிநாத் said...

\\நான் ஆதவன்☀ said...
எனக்கு மட்டும் புரிஞ்ச கதையை உங்களுக்கு புரியிறமாதிரி கொடுக்க முடியாததற்கு என் வருத்தங்கள். இனி அடுத்த படைப்பை கொஞ்சம் நேரம் எடுத்து இன்னும் தரமாக தர முயல்கிறேன். கதைக்கான விளக்கம்...

மனிதனுக்குள்ள கிருமி இருக்குற மாதிரி மனிதனும் எதுக்குள்ளவாவது கிருமியா இருக்கலாம்னு ஒரு ஐடியா தோணுச்சு. அதன் விளைவா வந்தது தான் இந்த கதை. ’அது’ என்று நான் குறிப்பிட்டதனுள்ளே தான் மனித கிருமி இருக்கிறது. எப்படி மனிதனுள் கெட்ட கிருமிகளினால் நோய் வருகிறதோ அதேபோல் ‘அது’க்குள்ள எப்படி மனித இனம் கெட்ட கிருமியா(ஜாதி.மதம்,இனத்தால..இத்யாதி) மாறிட்டாங்கன்னு சொன்னேன்..பட்
எல்லாத்தையும் இணைப்பு சரியா இல்லாததால பிரச்சனையாகிடுச்சு
\\

டேய் இதெல்லாம் ஓவரு டா...ஏன்டா இந்த வீண் விளம்பரம் உனக்கு..ஆமா அடுத்து என்ன புக்கு போட போறியா..!?

எல்லாம் இந்த சென்ஷியால வந்தது ;))

ஹுஸைனம்மா said...

/மனிதனும் எதுக்குள்ளவாவது கிருமியா இருக்கலாம்னு ஒரு ஐடியா//

அப்படின்னா, அந்த “அது”க்குள்ளே இத்தனை மனிதர்களும் இருக்கிறார்களா?

அப்ப, ராம் பார்க்கிறாரே, அந்த சூரியக்குடும்பம், எரிகல், விண்கலம், சிவப்புச் சூரியக்குடும்பம், எல்லாமே ”அது” உள்ளேயே இருக்கின்றனவா? அப்ப “அது” உலகத்தைவிடப் பெரிசா?

அப்படின்னா.... சரி, போதும், இதுக்குப் பதில் வந்ததுக்கப்புறம் அடுத்த செட் கேள்விகளை அனுப்புபிறேன்!!

;-)))

சென்ஷி said...

//எனக்கு மட்டும் புரிஞ்ச கதையை உங்களுக்கு புரியிறமாதிரி கொடுக்க முடியாததற்கு என் வருத்தங்கள். //

தானே உக்கார்ந்த தானைத் தலைவன் வாழ்க..

சென்ஷி said...

//எல்லாம் இந்த சென்ஷியால வந்தது ;))//

இன்னாங்கடா எல்லோரும் ஆன்னா ஊன்னா சென்ஷி சென்ஷின்னு கூவுறீங்க.. ஆதவன் எம்புட்டு பெரியாளுன்னு உங்களுக்கு ஒரு நா தெரியாமலா போயிடும்.

நீ கண்ணத்தொடச்சிக்கோ ஆதவா..

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//எனக்கு மட்டும் புரிஞ்ச கதையை உங்களுக்கு புரியிறமாதிரி கொடுக்க முடியாததற்கு என் வருத்தங்கள். //

தானே உக்கார்ந்த தானைத் தலைவன் வாழ்க..
\\

வெளங்கிடும்...;)

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
//எல்லாம் இந்த சென்ஷியால வந்தது ;))//

இன்னாங்கடா எல்லோரும் ஆன்னா ஊன்னா சென்ஷி சென்ஷின்னு கூவுறீங்க.. ஆதவன் எம்புட்டு பெரியாளுன்னு உங்களுக்கு ஒரு நா தெரியாமலா போயிடும்.

நீ கண்ணத்தொடச்சிக்கோ ஆதவா..
\\

ம்ம்ம்...நல்லா தெரிஞ்ச்சி மச்சி ஆதவனை பத்தி ரெண்டு நாளைக்கு முன்னாடி ;)))

வந்தவுங்க எல்லாம் அப்படியே ஓடு ஒடு அது வருதுன்னு ஓடிட்டாங்களாம் ;))

கோபிநாத் said...

மாப்பி சென்ஷி....நம்ம ஆதவன் கதை எழுதினா மட்டும் ஏன்டாஇப்படி எல்லாம் கேள்வி கேட்குறா நீ !???

SanjaiGandhi™ said...

அட்ரா.. அட்ரா.. சும்மா கலந்துக் கட்டி அடிச்சிருக்கிங்க பாஸ்..

கவிதை காதலன் said...

இரண்டு விதமான தளங்கள்.. அட்டகாசமான கதை.. கலக்கிட்டீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

சென்ஷி said...
//எனக்கு மட்டும் புரிஞ்ச கதையை உங்களுக்கு புரியிறமாதிரி கொடுக்க முடியாததற்கு என் வருத்தங்கள். //

தானே உக்கார்ந்த தானைத் தலைவன் வாழ்க..

haaaaaaaaahaaaaaaaaaaaaaaaaaaaaa

sirippai adakka mudiyala boss :))))))))))))

appadiyee vittu irukkalaam aadhavan boss, edhukku vilakamellaam koduthu ;))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான முயற்சி தல.. அப்பாடா.. இதுதான் கதையா இருக்குமோன்னு நான் நினச்சத பின்னூட்டத்துல படிச்சப்போ கொஞ்சம் சந்தோஷமா இருக்கு..

வினோத்கெளதம் said...

டேய் எங்கிருந்துடா யோசிக்கிறிங்க..'அது' 'அது'ன்னு படிச்சப்ப எல்லாம் நான் வேற எதுவோன்னு நினைச்சேன்..நல்லவேளை..:)

//மீண்டும் இந்தக்கதையையே முயற்சி செய்யுங்கள். இதன் மேம்படுத்தப்பட்ட இன்னொரு பக்கம் எப்படியிருக்கும் என்பதை அறிய ஆவல்.//

இது வேறயா...;)

G3 said...

சந்தனமுல்லை said...

பாஸ்...சூப்பர்!! (இல்லன்னா புரியலைன்னு நினைச்சுடுவாங்களே!அவ்வ்வ்) :-)))//

Repeatae :)))

Mudhal muraiya unga blog pakkam varren.. ippadi aniyaayathukku terrorra irukkae boss :((

Thava said...

kalakitinga aathavan

Related Posts with Thumbnails