ஙே!

வள் போனை வைத்துவிட்டாள். ஆனாலும் அப்படியே ஒருநிமிசம் போனை வைத்துகொண்டு “ம்ம்...ம்ம்” முணங்கி கொண்டே யோசிக்கிறேன். அப்பா என்னையே பார்த்துக்கொண்டு நிற்கிறார். ஆஹா போனை கீழ வச்சா இன்னைக்கு கச்சேரி இருக்குதுடான்னு எச்சரிக்கை மணி அடிச்சாலும் வேற வழி இல்லை. போனை வச்சுட்டு பாட்டு பாடி கொண்டே கொஞ்சம் வேகமாக எஸ்ஸானேன்.

“டேய் தம்பி நில்லுய்யா”

”என்னப்பா”

“யார்கூட பேசிகிட்டுயிருந்த இவ்வளவு நேரமா?”

“ப்ரெண்டு கூட”

“பொம்மள புள்ளையா?”

“... ம்...ஆமாப்பா. ஏன் கேட்குறீங்க”

”டேய் ராசா பேசுறது தப்பில்லடா இப்படி ஒன்றமணி நேரமா பேசுறயே இது உனக்கு ஓவரா தெரியல?  அதுவும் அப்பா அம்மா பக்கத்துல இருக்கும் போதே” ஆஹா அப்பா ஆரம்பிச்சுட்டாரே.... இன்னைக்கு பயந்த மாதிரியே அட்வைஸ் பண்ண போறாரோ?

”இல்லப்பா ஒரு முக்கியமான விசயம். பேசுனது நேரம் போனதே தெரியல...அதான்”

“நீ லவ் கூட பண்ணு தப்பில்லை....ஆனா உனக்குன்னு ஒரு நல்ல..........” டண்டணக்கா டணக்குடக்கான் டண்டணக்கான் டணக்குடக்கான் ஏய்ய்ய் டண்டனக்கான் டணக்குடக்கான் (அட்வைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) தலையாட்டிக்கொண்டேஏஏஏஏஏஏயிருந்தேன். முடிந்தது. “சொன்னதை காதுல வாங்கினயா ராசா?” ம் என்றேன். அடுத்த அறைக்கு வந்தேன்.

திரும்ப உள்ளே சென்றபோது அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டது கேட்டது. “யாரடி அது? இவ்ளோ நேரம் இவன்கிட்ட பேசிகிட்டு இருக்கு? யாரந்த பொண்ணு” “யாருன்னு தெரியலைங்க. போன்ல தான் பேசிக்கிட்டுருக்கான். நேர்ல இன்னும் பார்க்கலைன்னான்” அம்மா.

அப்பா “ஓ....அதானே பார்த்தேன்....”


ஙே! 
இப்படி தான் என் டீன் ஏஜ் சோகமா முடிஞ்சது.... சரி தொடங்கினதாவது நல்லபடியா தொடங்குச்சா... ம்ஹூம்ம் வாங்க அதையும் பார்ப்போம்.

வயசு பதினாலு.... (அடுத்த தடவை சைக்கிள் பெடல் சுத்துறமாதிரி அனிமேசன் பணணிடுறேன். இந்த தடவை கொசுவத்திய அட்ஜஸ் பண்ணிக்கங்க)

புது கொசுவத்தி

+1 படிக்கிறேன். ரெண்டு கைய விட்டு சைக்கிளை ஓட்டுவேன். ட்ரிப்ள்ஸ் அடிப்பேன். சைக்கிள்ல ஸ்கிட்  அடிப்பேன். இது எல்லாத்துக்கும் மேல மொக்க சோக்கு நல்லா சொல்லுவேன். இது போதாது லவ் பண்ண?

மாலையில் பள்ளிகூடம் முடிஞ்சு சைக்கிளை அந்த மகளிர் பள்ளிகூடம் முன்ன நிறுத்திட்டு, சிரிச்சுகிட்டு தலைய ஆட்டிகிட்டேஏஏஏஏஏஏஏ(வண்ணாரப்பேட்டை புரம்) இருக்குறது கொஞ்ச நாள் வேலையா இருந்தது. கொஞ்சமே கொஞ்ச நாள் தான்.

இரண்டு பொண்ணுங்க. ரெண்டும் சோடியா தான் எப்பவும் போகும். அதிகமா ஆசை படாததால ஒரு பொண்ணை தான் சைட் அடிச்சேன். நல்லா தான் பேசுவாங்க ரெண்டு பேரும்.

ஒரு நாளு மணப்பெண்ணோட தோழி மணவாளனான என்கிட்ட கால்ல கோலம் போட்டுகிட்டே ”மணப்பெண் உன்கிட்ட ஏதோ சொல்லனும்னா”ன்னு சொல்ல..... பிபி எகிறி ”எதுவா இருந்தாலும் அவளையே சொல்லச்சொல்லு ” அப்படின்னு திரும்பவும் சிரிச்சுகிட்டே தலையாட்டிகிட்டுருந்தேன்.(வ.புரம்)

பக்கி மணப்பெண்ணை கூட்டி வந்துச்சு, மணப்பெண்ணும் ரொம்ப வெக்கபட்டுகிட்டே “இல்ல வந்து வந்து.......”ன்னு இழுக்க...

“பரவாயில்லை மணப்பெண்ணே சொல்லு வெட்கபடாத” மணாளன்.

“நம்ம ***** இல்ல.... அவனை லவ் பண்றேன்...எனக்கு ஹெல்ப் பண்ணுவயா ?” மணப்பெண்


ஙே! 
எங்கிருந்தாலும் வாழ்க....... (இளம் விதவன்!)

”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்  *&^$*^$#% ஒழுங்கா ஓட்டுட்டு போடா பைக்க” இதுல என்ன தப்பிருக்குன்னு நீங்களே சொல்லுங்க? என்ன கொஞ்சம் அசிங்கமா ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான். காலேஜ் பைனல் ஹியர் முதல் நாள். இனி நாங்க தான் சீனியர்....காலரை தூக்கி விட்டுட்டு பத்து பேரு ஒன்னா போனப்ப ஒரு மூனு பேர் ஸ்பீடா போன பைக்கை பார்த்து கத்தினோம். அம்புட்டு தான்.

வந்தானுவ.... ”எவண்டா கத்தினது?” நமக்கு தான் வாய்கொழுப்பு அதிகமாச்சே.. “நீ ஏண்டா பைக்கை அப்படி ஓட்டிட்டு போன?”

“உன் மேல மோதினேனா? அப்புறம் உனக்கென்ன? எந்த ஹியர் நீங்கெல்லாம்?”

“ஐதோடா யார்கிட்ட கேக்குற? நீ யார்டா?” அமைதியா முறைத்துக்கொண்டே சென்றான்.

சாயங்காலம் நண்பர்கள் ஐந்து பேர் பஸ் ஸடாண்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது எங்கிருந்து தான் பத்து பதினைந்து பேர் வந்தானுங்களோ.....டமால் டூமீல் டமால் டூமீல்

“சீனியர் கிட்டவே உங்க வேலைய காட்டுறீங்களா?”

ஙே!
இன்னும் ஆறு மாசம் கோர்ஸ் இருக்காம் அந்த பயலுவலுக்கு.....அவ்வ்


”இந்த தியேட்டருக்கு தான் நான் வாராவாரம் வருவேனே” பெண்கள் நாம சொல்ற பொய்ய உடனே நம்புவாங்க. ஆனா பொய் சொல்றோம்னு தெரிஞ்சா அப்புறம் உண்மைய சொன்னாலும் நம்ம மாட்டாங்க. தேவி தியேட்டர்ல படம் பார்க்குறதுன்னா கொஞ்சம் பெரிய விசயமா இருந்த காலம் அது. தோழிகளோடு படம் போன போது விட்ட டயலாக் தான் அது.

தேவிபாலாவுல படம். எல்லோரும் உள்ள போகும் போதே ’லிப்ட்லயே போலாமே?” என்றேன். கும்பலில் ஒருமாதிரி பார்த்த ஒருத்தி ’எதுக்கு? தியேட்டர் கீழ இருக்குன்னு நினைக்கிறேன்?”ன்னு சொல்ல அப்பயே மாட்டிகிட்டேன். இருந்தாலும் மேனேஜ் பண்ணி ’எனக்கு தெரியும்’ சிரித்துகொண்டே அங்கிருந்து நைஸாக நழுவி அவர்கள் பார்க்காத போது ஒரு ஆளிடம் “தேவிபாலாவுக்கு எப்படி போகனும்?”ன்னு மட்டும் தான் கேட்டேன்.

பயபுள்ள ஊருக்கே கேட்குறமாதிரியும், ஒன்றமணி செய்தி போலவும் கையையும் காலையும் ஆட்டி சொல்லுச்சு. பெரிய கும்புடு போட்டு நன்றி சொல்லிட்டு திரும்பினா.......... எல்லாரும் நிக்குறாங்க

ஙே!

புது கொசுவத்தி


இதை எழுதும் போதே பல நினைவுகள் வருகிறது. போன வருடம் வ.வா சங்கத்துல எழுதின இந்த பதிவும் கிட்டதட்ட இதே மாதிரியான பதிவு தான்.

நிறைய கோல் வாங்கின கதை இருந்தாலும் டீன் ஏஜ் ஒரு ரசிக்கதக்க ஒரு காலமா, எளிதில் மறக்க முடியாத நிகழ்வுகளா, நண்பர்களின் பேருந்து காதல், சண்டை, சச்சரவு, பார்ட்டி, படிக்க போட்டி போட்டது, கேம்பஸ்ல பெரிய கம்பெனியில செலக்ட் ஆனது, அது பிடிக்காம வேலைய விட்டு வேற வேலை கிடைக்காம நாயா அலைஞ்சதுன்னு காக்டெயிலா இருந்தது. இதை ஞாபகப்படுத்துற ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்த சின்ன அம்மணிக்கு நன்றி.

இதை தொடர நண்பர்கள் இளையபல்லவன்,ஆயில்யன், வினோத்கௌதம், நாஞ்சில் பிரதாப், கார்த்திகேயன்  அழைக்கிறேன். நேரமிருப்பின் பதிவிடலாம். விருப்பமுள்ள நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிஞ்சா அவங்க பேரையும் சேர்த்து விடுவேன்.  அருமையான, சுவாரசியமான நிகழ்வுகள், நினைவுகள் பகிரலாம்.


46 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

அன்புடன் அருணா said...

100% சுத்தமான ஙே!

முகிலன் said...

நல்லா சுத்துறய்யா கொசுவத்திய..

நாஞ்சில் பிரதாப் said...

மச்சி அது அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்... டாவடிக்கிறது ஒண்ணும் காலேஜ்ல அரியர் வைக்கிறது மாதிரி ஈஸி மேட்டர் கிடையாதப்பு...

யோவ் என்னை எதுக்குய்யா மாட்டிவிட்ட...
ஏற்கனவே மார்க்கெட்டுல விலைபோகாதப்கபயன்னு நினைச்சு ஊரே சிரிக்குது. இதுல இது வேறயா... வௌங்கிரும்...ஊர்ல எனக்கு தெரிஞச பயபுள்ளைக நம்ம பிளாக்கை படிக்குதுக...வாழ்க்கை புல்லா பிரம்மச்சாரியா இருக்க என்னால முடியாதுலே... இப்பத்தான் லைன் கிளியர் ஆயிருக்கு... ஆளை விடு மச்சி...

கார்த்திகைப் பாண்டியன் said...

செமத்தியான ஞே .. தேவிபாலா மேட்டர் நெனச்சு நெனச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கேன்..:-))))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//“யாருன்னு தெரியலைங்க. போன்ல தான் பேசிக்கிட்டுருக்கான். நேர்ல இன்னும் பார்க்கலைன்னான்” //

அப்பவே அப்படியா?

goma said...

ஒரு கொசு பக்கத்திலே வரணுமே...எல்ல கொசுக்களும் ஙே..ஙே..

புல்லட் said...

HaHaha! That DeviPala incident was superb.. Hahaha! Nge! Hahah!

கலகலப்ரியா said...

superb.. =))))...

கலகலப்ரியா said...

antha kosu varthi paarthu naan gneh aaitten.. yabbaa ennamaa suththuthu.. thalai.. =))

கணேஷ் said...

ஹா ஹா ஹா...

பாஸ்.. பின்னிட்டீங்க :)

ஆயில்யன் said...

ஆக்சுவலா யூத் ரேஞ்சுல இருக்கிறவங்களோட பல நேர “ஙே” லவ்ஸ்லதான் இருக்கும்போல - ம் எது எப்படியோ பிப் 14 அலையடிக்கிது :)

YUVARAJ S said...

sema comedy ma. kalukunga.

Find my scribbling at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

keep blogging.

vaanga sirippu jothiyila aikkiyam aavom.

Matangi Mawley said...

good one!!

சின்ன அம்மிணி said...

//போன்ல தான் பேசிக்கிட்டுருக்கான். நேர்ல இன்னும் பார்க்கலைன்னான்” அம்மா.//

நலம் நலமறிய ஆவல்னு அஜித், தேவயானி மாதிரி பேசிட்டு இருந்தீங்களா :)

//ஒரு நாளு மணப்பெண்ணோட தோழி மணவாளனான என்கிட்ட கால்ல கோலம் போட்டுகிட்டே ”//

டீனேஜ்லயே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.

டீனேஜ் பூராம் ஙே ன்னு முழிச்சிருக்கீங்க போல :)

நல்லா இருந்துது.

சின்ன அம்மிணி said...

அந்த கொசுவத்து ஏற்கெனவே உங்க பழைய பதிவுல பாத்திருந்தாலும் மறுபடியும் சுத்தவைச்சதுக்கு நன்றி!!!

சேட்டைக்காரன் said...

நீங்க கொசுவத்தியை எந்த நோக்கத்தோட வச்சீங்களோ என்னமோ, ஆனா படிக்கும்போது சத்தியமா கடிவாங்காம இருந்தேன் அண்ணே! கலக்கல்!!

☀நான் ஆதவன்☀ said...

@அன்புடன் அருணா

நன்றி அருணா
------------------------------------
@முகிலன்

ஹி ஹி நன்றிங்க முகிலன்
------------------------------------
@பிரதாப்பு

ஆமாம்மா பிஎச்டி முடிச்ச உன்கிட்ட தான் டிரைனிங் எடுக்கனும்.
இந்த ரவுசுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. அதான் மலையாள பிகரா பார்த்து கரெக்ட் பண்ணிட்டேள? அப்புறம் என்ன? அதுக்கு தான் தமிழ் படிக்க தெரியாதே!
----------------------------------
@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா :)
----------------------------------
@சுரேஷ்

ஹி ஹி எப்பவுமே இப்படி தான்
----------------------------------
@கோமா

ஹி ஹி உண்மையான கொசுவத்தின்னா அப்படி தான் :)
----------------------------------
@புல்லட்

நன்றி புல்லட் :)

☀நான் ஆதவன்☀ said...

@கலகலப்ரியா

நன்றி ப்ரியா :)
------------------------------------
@கணேஷ்

வாங்க கணேஷ். நன்றி :)
------------------------------------
@ யுவராஜ்

நன்றிங்க யுவராஜ்
-----------------------------------
@ Matangi Mawley

நன்றிங்க
-----------------------------------
@ சின்ன அம்மணி
//நலம் நலமறிய ஆவல்னு அஜித், தேவயானி மாதிரி பேசிட்டு இருந்தீங்களா :)//

நல்லா படிச்சு பாருங்க சின்ன அம்மணி. அதிலிருக்குற உள்குத்து புரியும் :)

இது புது கொசுவத்தி அம்மணி. பழைசு வரைஞ்சது.. இது நிஜக்கொசுவத்தி :)
----------------------------------
@சேட்டைகாரன்

நன்றி சேட்டைகாரன். கொசுவத்தி வேலை செய்யுது போல :)

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

பாஸ் அப்ப நீங்க யூத் இல்லையா? :))

ச.செந்தில்வேலன் said...

நல்ல கொசுவத்தி.. அப்பா திட்டறபோது "ஙே" வாங்கினது:))

//மச்சி அது அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்... டாவடிக்கிறது ஒண்ணும் காலேஜ்ல அரியர் வைக்கிறது மாதிரி ஈஸி மேட்டர் கிடையாதப்பு...//

நம்ம ஆளு பின்னூட்டத்துலயே கலக்கறாருப்பா :)

Chitra said...

நிஜமாகவே கொசுவத்தி சுத்துதே! அதை பாத்துட்டு, படிச்சிட்டு - ஞே முழி எங்களுக்கு.
நல்லா இருங்க, மக்கா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

எங்கிருந்து தான் பத்து பதினைந்து பேர் வந்தானுங்களோ.....டமால் டூமீல் டமால் டூமீல்

துப்பாக்கியாலவா பாஸ் சுட்டாங்க ;)

எப்ப பாஸ் சைக்கிள் பெடல் மாடல் போடுவீங்க. அவெய்ட்டிங்க பாஸ்.

இப்படிக்கு உங்கள் கொசுவத்தியின் தீவிர ரசிகை.

சந்தனமுல்லை said...

/டண்டணக்கா டணக்குடக்கான் டண்டணக்கான் டணக்குடக்கான் ஏய்ய்ய் டண்டனக்கான் டணக்குடக்கான்/

ஆகா...இங்கே இருக்காரு..நான் ஆதவன் பாஸு!! ;-))

ஹுஸைனம்மா said...

அப்ப ஆரம்பிச்ச ஙே இன்னும் அப்படியே மெயிண்டெயின் பண்றீங்க பாருங்க, வெரி குட்!!

சென்ஷி said...

சூப்பரப்பு :)

சந்தனமுல்லை said...

/
ஙே!
எங்கிருந்தாலும் வாழ்க....... (இளம் விதவன்!)/

அவ்வ்வ்!

சின்ன வயசுலே உங்களுக்குத்தான் எவ்வளவு சோகம்! :-))

கண்ணகி said...

பெண்கள் சைக்காலஜி நல்லாத்தெரியுதுப்பா. பொய் சொன்னதச் சொன்னேன்..

henry J said...

unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

henry J said...

unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

சைவகொத்துப்பரோட்டா said...

ஙே, "யாஹூ" ஆனது எப்போது.

பேநா மூடி said...

ஹ்ம்ம்..., விடுங்க இதெல்லாம் பாடபுஸ்தகத்துல வைப்பாங்க..,

||| Romeo ||| said...

\\வண்ணாரப்பேட்டை புரம் //


யு மீன் Washermanpet அல்லது தண்டையார்பேட் ??

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அதிகமா ஆசை படாததால ஒரு பொண்ணை தான் சைட் அடிச்சேன்.//
யாரு அதிகமா ஆசைபடாததால்?
நீயா அந்த புள்ளையா? தேவுடு.
செம மாஞ்சாய்யா.
ஃபார்மாலிட்டி டன்.

ராஜன் said...

தும் ததா !

☀நான் ஆதவன்☀ said...

@செந்தில்வேலன்

நன்றி செந்தில் :)
------------------------------------
@ சித்ரா

நன்றிங்க :)
------------------------------------
@அமித்து அம்மா

பாஸ் உங்களுக்காக ரெடி பண்ணிட்டே இருக்கேன்ன்ன்ன்ன்ன்.
-----------------------------------
@சந்தனமுல்லை

//சின்ன வயசுலே உங்களுக்குத்தான் எவ்வளவு சோகம்! :-))//

பாஸ் இதை கவனிச்ச ஒரே ஆளு நீங்க தான். நன்றி பாஸ் :))
----------------------------------
@ஹூஸைனம்மா

அவ்வ்வ் வ.வா சங்கத்துல எழுதின படிச்சீங்கன்னா நல்லா தெரியும் :)
----------------------------------
@சென்ஷி

நன்றி தல
----------------------------------
@கண்ணகி

வாங்க வாங்க.. ஹி ஹி எல்லாம் அனுபவம் தான் :)
----------------------------------
@ ஹென்றி

நன்றி ஹென்றி

☀நான் ஆதவன்☀ said...

@சைவகொத்துபரோட்டா

அதானே தெரியல :)
------------------------------------
@பேநாமூடி

அதானே :) வரலாறு முக்கியம் அமைச்சரே :)
------------------------------------
@ரோமியோ

அதே அதே New washermenpet :)
-----------------------------------
@கார்த்திகேயன்

நன்றி தேவுடு :)
-----------------------------------
@ராஜன்

தினுக்குதக்கா!

வினோத்கெளதம் said...

கொசுவத்தி கன்னாபின்னான்னு சுத்துது போ..:)

ஏற்கனவே நம்ம பேரு ரொம்ப நல்ல பேரு..இத வேற எழுதுனன்னு வை...:)
எழுதி விடுகிறேன்..

கோபிநாத் said...

\\மாலையில் பள்ளிகூடம் முடிஞ்சு சைக்கிளை அந்த மகளிர் பள்ளிகூடம் முன்ன நிறுத்திட்டு, சிரிச்சுகிட்டு தலைய\\

குட்...குட்...வழையாடி வாழையாக இப்படி தான் இருந்திருக்கோம் ;))

ஆமா எந்த ஸ்கூல் டா...!?? பச்சையா இல்ல ஒரு மாதிரி பின்னாடி ஒன்னு இருக்குமே ச்ச..பெயர் எல்லாம் மறந்துடுச்சி..

கோமதி அரசு said...

அப்பா,அம்மா இருக்கும் போது வீட்டு போனில் 1.1/2 மணி நேரம் .
ஆதவன் நல்ல ரீல் விடுகிறீகள்.

கொசுவத்தி நன்றாக உள்ளது.

rajatheking said...

நாங்கல்லாம் mobile புகைர அளவு பேசுவோம்ல

கண்ணா.. said...

40 கமெண்ட்டோட தமிழ்மணம் முதல் பக்கத்துல இருக்கறதால ஓரு கமெண்ட் போட்டு 41 ஆ ஆக்கிறேன்...

கண்ணா.. said...

+1 லயெ கல்லாணமா..? பெரிய ஆளுதான் பாஸு....

ஆனா காதல் கொசுவத்தின்னா...ரொம்ப பேருக்கு அடிஷனல் ஸீட்டு தேவைப்படும் போல...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஃபார்மாலிட்டி டன்.//

ஓ..அவரு அப்பிடி சொல்லீட்டாரா....

டன் ஃபார்மாலிட்டி.

:)

SanjaiGandhi™ said...

//திரும்ப உள்ளே சென்றபோது அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டது கேட்டது. “யாரடி அது? இவ்ளோ நேரம் இவன்கிட்ட பேசிகிட்டு இருக்கு? யாரந்த பொண்ணு” “யாருன்னு தெரியலைங்க. போன்ல தான் பேசிக்கிட்டுருக்கான். நேர்ல இன்னும் பார்க்கலைன்னான்” அம்மா.

அப்பா “ஓ....அதானே பார்த்தேன்....”//

ஹிஹிஹி.. சான்சே இல்லை போங்க :))))

இய‌ற்கை said...

ஙே...count koraiyuthe...innum neraiya neraiya irukke..athellam eppo varum ?

ஜெகநாதன் said...

டாய்டார்ஸுக்கு ​கொசுக்கள் பயப்படுவதில்லை
டயர் தேய்ந்தாலும் பிகர்கள் மடங்குவதில்லை
டாடி உதைத்தாலும் நாமும் அடங்குவதில்லை!

நல்லாயிருக்கு ஆதவன்!

நினைவுகளுடன் -நிகே- said...

அசத்தல்

Related Posts with Thumbnails