பூரியும், ரவா தோசையும் பின்னே ஆயிரத்தில் ஒருவனும்

இடம்: சரவணபவன்

”என்ன சார் படம் பிடிக்கலையா?”

“படமா எடுத்திருக்கானுங்க ஆதவன். சுத்த வேஸ்ட்.” புரொபஸர் ரவி.

“சார் இது ஒரு பேண்டஸி பிலிம். புனைவு வேற. இதுல லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க. எடுத்த வரைக்கும் எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கு கோபி?”

சிரித்தபடியே தலையாட்டினார் கோபி (ங்கொய்யால நேர்ல கூடவாய்யா ஸ்மைலி போடுவ? நல்ல வேளை ரிப்பீட்டு சொல்லல...)“ஆதவன் நீங்க சொன்ன மாதிரி புனைவுங்கிறதுல லாஜிக் பார்க்கவேண்டாம் தான். ஆனா புனைவுக்குள்ள இருக்குற கதைக்குள்ளவே லாஜிக் இல்லாம இருந்தா எப்படி? பார்க்கிற எல்லாரையும் முட்டாளாக்கி எடுக்குறதுக்கு பேரு பேண்டஸி இல்ல ஆதவன். அதை புரிஞ்சுக்கங்க”

“புரியலையே சார். நீங்க வரலாற்று புரொபஸர்ன்றதால நிறைய லாஜிக் பார்க்குறீங்களோ என்னமோ?” நான்.

 ”இப்ப “லார்ட் ஆப் தி ரிங்ஸ்” படம் ஒரு புனைவு தான். அதை ஒத்துகிறீங்க இல்ல? (தலையாட்டினேன்). அதுல அந்த கதைக்கு அந்த மோதிரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சொல்லப்போனா அந்த கதையே அதை சுத்தி தான் நடக்குது. அதை வைத்திருக்கிறதனால எவ்வளவு நன்மை, பிரச்சனைன்னு தெளிவா காண்பிச்சு இருப்பாங்க இல்லையா?. அதே போல தான் இந்த கதைக்கும் அந்த சாமி சிலை முக்கியமானது. அதை நோக்கி தான் கதையே ஆரம்பமாகுது இல்லையா? அப்ப அதோட முக்கியத்துவத்தை சொல்லனும். வெறுமனே ஆயிரம் வருஷசமா அந்த சாமி சிலையை தேடி அலையறாங்கன்னு பொதுவா சொல்லும் போதே அந்த கதை வலு இழந்திடுது. இந்த ரகசியம் தெரிஞ்ச வெறும் எட்டு பேர் மட்டும் இப்ப இருக்காங்க, மேலும் சோழர்கள் உயிரோட இல்லை பின்ன அந்த சிலையை எடுக்க ஏன் இவ்வளவு பிராயத்தனபடனும்?” பூரியை முழுங்கியவாறே ஆங்கிலம் கலந்த தமிழில் விளக்கி கொண்டிருந்தார்.

“இப்பெல்லாம் வீட்டு சொத்து ஏதாவது ஒரு பத்து வருசம் கோர்ட்ல இருந்தாலே அடபோங்கடான்னு போயிட்டு இருங்காங்க இல்லையா... அப்ப அத்தனை வருசம் காத்திருக்கிற அதோட முக்கியத்துவத்தை சொல்லனும் இல்லையா? அதுவுமில்லாம கதையாசிரியன் நமக்கு எல்லா கதாபாத்திரத்தையும் விளக்க வேண்டாம். ஆனா அவன் மனசுகுள்ள ஒரு சின்ன கதாபாத்திரம் உருவாகும் போதே அந்த கதாபாத்திரத்தோட உருவம், குடும்பம், ஏன்.......குலம் கோத்திரம்னு எல்லாமே உருவகப்படுத்தி வச்சிருக்கனும். இதையெல்லாம் சொல்லனும்ற அவசியம் இல்ல.... ஆனா அப்ப தான் அந்த பாத்திரத்தை எழுத்தாவோ அல்லது காட்சியாவோ எடுக்கும் போது பார்வையாளனுக்கு தெளிவா காண்பிக்க முடியும். இதுல கதாசிரியனுக்கே பல கதாபாத்திரத்தோட குழப்பம் இருப்பது தெளிவா தெரியுது” பூரி முடிந்து ரவா தோசை வந்தது.

“சோழர்கள் குடியிருக்குற கிராமத்துல குஜராத் கோவில் எப்படி வந்தது?”

“என்ன குஜராத் கோவிலா? நான் பார்க்கலையே சார்” என்றேன்

“அது தான் டைரக்டர் செஞ்ச முட்டாள் தனம். அந்த செட் போட்டது குஜராத்ல லோத்தல்னு ஒரு இடம்னு நினைக்கிறேன். சரி செட் போட்டாங்களே அட்லீஸ் அந்த கோவிலை மறைக்க கூடவா தெரியல? இந்த மாதிரி டைரக்டர் சரியா உழைக்காம பார்வையாளனை முட்டாளாக்குற வேலை தான் இதுன்னேன். நடராஜர் நிழல் காட்சி நல்லாயிருக்கு. ஆனா அதுகூட வேற ஏதோ ஆங்கில படம். தூண் நிழல் மாதிரி வரும் சரியா ஞாபகம் இல்ல. இதைப்பார்த்து தான் பண்ணியிருப்பாருன்னு சொல்லல.... அவருக்கே கூட தோணியிருக்கலாம். இதையெல்லாம் விடு விட்டாசாலாச்சார்யா படத்துல கூட லாஜிக் கச்சிதமா இருக்கும். சாண்டில்யன் கதைகளை படிச்சாலே போதும். கொஞ்சமாவது உருப்படியா வந்திருக்கும்”

ஆஹா இவ்ளோ உன்னிப்பா கவனிச்சுருக்காரே! ரைட்டு........

“என்னப்பா யோசிக்கிற?”

“இல்ல சார் நாளைக்கு திரும்பவும் பார்க்கலாம்னு இருக்கேன். என் நண்பர்கள் சில பேர் கூட பார்க்கல. அவங்களோட போகலாம்னு இருக்கேன்”

பில்லை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.


மறுநாள் அதே சரவணபவன்...


”என்னடா மச்சி படம் புடிக்கலையா?”

“படமாடா எடுத்திருக்காங்க சுத்த வேஸ்ட் மச்சி.”  பேரர் வந்தான்.

“எனக்கு ஒரு செட்டு பூரி. அது முடியும் போது ஒரு ரவா தோசை எடுத்துட்டு வாங்க” என்றபடி ஐந்து பேரையும் பார்த்தேன்.

“எங்களுக்கு படம் பிடிச்சிருக்குடா மச்சி. மனுசன் எப்படி தான் இப்படி யோசிக்கிறான்னு தெரியல. சான்ஸே இல்லை” என்றான். அனைவரும் ஆமோதித்தனர்.

“மச்சி இது ஒரு புனைவு தான். ஆனாலும் புனைவுக்குள்ள இருக்குற கதையில லாஜிக் பார்க்கனும்ல?”

“என்னது பூனையா? அப்படின்னா?”

“ஓ உனக்கு புனைவுன்னா என்னென்னு தெரியாதோ?(சலித்து கொண்டேன்) அதாவது படத்தோட ஆரம்பத்துலேயே இந்த கதையில் வரும் அனைத்து சம்பங்களும் கற்பனையேன்னு சொன்னான்ல....அந்த கற்பனை தான் புனைவு”

“சரி அதுக்கென்ன இப்போ?”

“இல்லடா இப்ப “லார்ட் ஆப் தி ரிங்ஸ்” படம் பார்த்தயா...... நிறுத்தினேன்.(இன்னும் பூரி வரவில்லை)

“ஆமா...  அதுக்கென்ன சொல்லுடா?”

“இருடா பூரி வரட்டும்...(வந்தது)...அதுல அந்த கதைக்கு அந்த மோதிரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சொல்லப்போனா அந்த கதையே அதை சுத்தி தான் நடக்குது. அதை வைத்திருக்கிறதனால ....................................
.....................................................................................................................................................கதாபாத்திரத்தோட  குழப்பம் இருப்பது தெளிவா தெரியுது” பூரி முடிந்து ரவா தோசை வந்தது.

பெருமூச்சு விட்டனர் அனைவரும்

“சோழர்கள் குடியிருக்குற கிராமத்துல குஜராத் கோவில் எப்படி வந்தது?”.....................................................................................................
 ........................................................................................................................................................
விட்டாசாலாச்சார்யா படத்துல கூட லாஜிக் கச்சிதமா இருக்கும்” முடித்தேன்

”எப்படிடா இதெல்லாம் கவனிச்ச? எங்களுக்கு எதுவுமே தோணல...... அதுவும் குஜராத் கோவில், இங்கிலீஷ் படத்துல சீன்ஸ்னு எல்லாம் தெரிஞ்சிருக்கே”

சிரித்தேன். “ஆமா நீ என்ன யோசிக்கிற? படத்தை பத்தி என்ன டவுட்டு இருந்தாலும் என்கிட்ட கேளு. நான் சொல்றேன்.” என்றேன்

”இல்லடா மச்சி நாளைக்கு திரும்பவும் பார்க்கலாம்னு இருக்கேன். என் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் சில பேர் கூட பார்க்கல. அவங்களோட போகலாம்னு இருக்கேன்” என்றான்.

பில்லை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

நாளையும் பூரியும் ரவாதோசையும் யாராவது சாப்பிடலாம்.

47 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

குசும்பன் said...

கலக்கல் ஆதவன்!

ஒரு ஸ்மைலியோடு படிச்சி முடிச்சேன்!

கார்க்கி said...

ஹாஹாஹா

T.V.Radhakrishnan.. said...

:-)))

அகல்விளக்கு said...

:-D

கைப்புள்ள said...

மிகவும் ரசித்து சிரித்து படித்தேன். நேத்து தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். தியேட்டரில் எங்க பக்கத்து சீட்டில் உக்கார்ந்திருந்த சற்று வயதான பெண்மணி சொன்னது - "எம்ஜிஆர் நடிச்ச ஆயிரத்தில் ஒருவன் மாதிரி இருக்கும்னு பாத்தா என்னாதிது இப்படி இருக்குது?" இரண்டாம் பாதி துவங்கிய சற்று நேரத்தில் குடும்பத்தோடு படம் பார்க்காமல் எழுந்து சென்று விட்டார்கள். மத்த படி குஜராத் கோவிலை நானும் கவனித்தேன். பேராசிரியரின் கருத்து பல இடங்களில் ஆமாம் போட வைத்தது.
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆக மொத்தத்துல சரவணபவனுக்கு நல்ல வேட்டை.. பூரி ரவா தோசைன்னு.. ம்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல வேளை திரும்ப அடிச்ச லெக்சரில் ...... வச்சிட்டீங்க..

வாழ்க்கை ஒரு சக்கரம்ன்னு இதைத்தான் சொல்லி இருக்காங்களோ..

சந்தனமுல்லை said...

ஆகா!!

Mohan said...

கலக்கலா இருந்துச்சுங்க!

முகிலன் said...

வழக்கமான ஆதவன் பதிவு... சிரித்துக்கொண்டே படித்தேன்..

:))

இளைய பல்லவன் said...

கலக்கல் ஆதவன்! ஹாஹாஹா

:-))):-D

அமிர்தவர்ஷினி அம்மா said...

தெய்வமே!!

முப்பத்து ரெண்டு கோடியை இப்படி ஒரு செட் பூரி, ரவாதோசையோடவும் பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்களே

ரியலி க்ரேட் பாஸ் :)

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹ எங்கிட்டகூட ஒருத்தன் வேறமாதிரி லாஜீக் பத்தி பேசுனான், அப்ப ஒருகூட்டமாத்தேன் கிளம்பியிருக்கீக... இதோட மாஸ்டர் மைன்ட் யாரா இருக்கும்...

கோபிநாத் said...

;-)))

முன்னாடி இந்த மாதிரி பார்க்குறவுங்க கூட பேசியது...எல்லாத்தையும் பதிவு போட ஒருதன் இருந்தான் இங்க(அமீரகத்துல) இப்போ அவன் வேலையை நீ ஆரம்பிச்சிருக்க...

நல்லாயிருக்கு..நல்லாயிரு ;)))

கணேஷ் said...

நல்ல பகடி..

சிரித்தேன் :)

Rajalakshmi Pakkirisamy said...

ha ha ha.. very nice

ஜீவன்பென்னி said...

(:-))))

பூரி, ரவா தோசையும் எப்புடிய்யிருந்துச்சு.

இய‌ற்கை said...

ஹாஹாஹா:-))

Thekkikattan|தெகா said...

enjoyed... :-))) daangu!

rajatheking said...

விஜய் , விஜயகாந்த் படத்துடன் ஒப்பிடும் பொது இது ஒன்னும் பெரிய LOGIC மீறல் இல்ல ..

☀நான் ஆதவன்☀ said...

@குசும்பன்

வாங்க குசும்பன். நன்றி :)
------------------------------------
@கார்க்கி

நன்றி கார்க்கி :)
------------------------------------
@ராதாகிருஷ்ணன்

நன்றி ஐயா :)
------------------------------------
@அகல்விளக்கு

நன்றிங்க :)
-----------------------------------
@கைப்புள்ள

வாங்கண்ணே. ரொம்ப நாளா ஆளையே காணோம்? என்னாச்சு? பாரீஸ் டிரிப் எல்லாம் எப்படி இருந்தது? உங்க மெயில் ஐடி சொல்லுங்களேன்.
-----------------------------------
@முத்தக்கா

அவ்வ்வ்வ். அநேகமா இந்த வாரம் முழுக்க பூரியும் ரவா தோசையும் நல்ல சேல்ஸ் இருக்கும்க்கா :))

அதை முழுசா அடிச்சா படிக்கிறவங்க டென்சன் ஆகிருவாங்களே :)
-----------------------------------
@சந்தனமுல்லை

வாங்க பாஸ். என்ன ஆகா பாஸ்? ஓஹோ அந்த ஆகா’வா :)
-----------------------------------
@மோகன்

நன்றி மோகன்

☀நான் ஆதவன்☀ said...

@முகிலன்

நன்றி முகிலன் :)
-------------------------------------
@இளையபல்லவன்

நன்றி தலைவரே :)
-------------------------------------
@அமித்து அம்மா

நன்றி பாஸ் :)
-----------------------------------
@பிரதாப்பு

சார்ஜாவுல ஒரு கும்பலே இருக்கு மச்சி. அதெல்லாம் இங்க வந்தா தானே தெரியும்.
-----------------------------------
@கோபிநாத்

ஹி ஹி ஹி தல இதெல்லாம் ஜகஜம் :)
-----------------------------------
@கணேஷ்

அதே அதே :))
-----------------------------------
@ராஜலட்சுமி

நன்றிங்க :)
-----------------------------------
@ஜீவன் பென்னி

ரொம்ப நல்லாயிருந்துச்சு பென்னி :)
-----------------------------------
@இயற்கை

வாங்க டீச்சர். நன்றி :)
-----------------------------------
@ தெகா

நன்றி தெகா
-----------------------------------
@ராஜா தி கிங்

உண்மை தான் ராஜா. இந்த பதிவை கொஞ்சம் கூர்ந்து படிச்சா உங்களுக்கே தெரியும் :)

அமுதா said...

:-)

ச.செந்தில்வேலன் said...

:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தேவுடு
செம ரகளை,
பின்றப்பா.

வினோத்கெளதம் said...

இதப்பத்தி நாளைக்கு நாம டிஸ்கஸ் பண்ணுவோம் ..:)

Karikal@ன் - கரிகாலன் said...

ஹா ஹா ஹா.......ரசிக்க தந்தமைக்கு நன்றி !

சைவகொத்துப்பரோட்டா said...

//என்னது பூனையா? அப்படின்னா?”//

"நல்ல" நக்கல், ஹா..ஹா...

தாரணி பிரியா said...

அட ரவா தோசை போச்சே :). கலக்கல் ஆதவன்.

Anonymous said...

நீங்க லாஜிக்னு சொன்ன எடத்துல ஸ்க்ரிப்டுன்னு வச்சுப் படிச்சேன். பிரச்சினை என்னன்னு புரிஞ்சிருச்சு.

||| Romeo ||| said...

அடுத்த ரிலீஸ் படங்கள் வருகிற வரை ஆயிரத்தில் ஒருவன் வச்சு நல்லா கலாய்க்கலாம்..

ஹுஸைனம்மா said...

சரவணபவன்ல கைமா இட்லியும், சில்லி பரோட்டாவும் நல்லாருக்குமே? சாப்பிட்டதில்லியா?

இன்னொரு முறை படம் பாத்துட்டு சாப்பிட்டுப் பாருங்க!! புதிய விஷயங்கள் புரியலாம்!!

(அதாவது பூரிக்கு பரோட்டா நல்லாருக்கா இல்லையா என்பதுபோன்ற ...)

;-)

☀நான் ஆதவன்☀ said...

வாங்க அமுதா. நன்றி
------------------------------------
வாங்க செந்தில். நன்றி
------------------------------------
நன்றி தேவுடு :)
------------------------------------
@வினோத்

ரைட்டு :)
-------------------------------------
@கரிகாலன்

ரசித்தமைக்கு நன்றிங்க :)
-------------------------------------
நன்றி சைவகொத்துபரோட்டா
--------------------------------------
@தாரணி பிரியா

அவ்வ்வ்வ் அது எங்க போகப்போகுது.. அதான் அடுத்தடுத்த நாள்ல யாராவது சாப்பிடபோறாங்களே :)
-------------------------------------
@வடகரை வேலன்

அண்ணாச்சி புரிஞ்சுடுச்சுன்னா? என்னோட பிரச்சனையா? இல்ல உங்க சந்தேகமா? புரியலையே அண்ணாச்சி...
-----------------------------------
@ரோமியோ

கூல் டவுன் ரோமியோ பாய் :)
-----------------------------------
@ஹீஸைனம்மா

எப்படிங்க இப்படி? அந்த புரொபஸர் பூரியும்,ரவா தோசையும் சாப்பிடும் போது நான் சில்லி பரோட்டோ தான் சாப்பிட்டேன் :) வாட் எ கொயின்ஸிடண்ட் :))

பின்னோக்கி said...

அட ! இது தான் கத்துக்கறதுன்னு சொல்லுவாங்க. :). நல்லாயிருக்கு.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

பூரியும் ரவாதோசையும் பார்சல்....
இன்னும் பார்கவில்லை. தியேட்டரில் பார்கலாமென்று முடிவு.
ஆனா பூரியும் ரவாதோசையும் ஊசிபோகுமே! என்ன செய்ய? DHLல பார்சல் அனுப்பவா?

ரோஸ்விக் said...

ம்ம்ம்... நாளைக்கு பூரியும், ரவா தோசையும் சாப்பிட நான் ரெடி. வாங்கித்தர நீங்க ரெடியா??

சாப்பிடும்போது கண்டிப்பா படத்தப் பத்தி பேசுவோம். :-))

Matangi Mawley said...

nice blog u've here.. n nice take on movie review! liked the presentation!

கோமதி அரசு said...

//நாளையும், பூரியும் ரவா தோசையும் யாராவது சாப்பிடலாம்//

செல்வராகவனுக்கு வெற்றி.முதல் தடவையில் கதை புரிய கூடாது,மறுதடவை வரும் போது தான் புரிய வேண்டும் என்று விஜய் டீ.வி பேட்டியில் கூறினார்.

ரசித்து சிரித்தேன்.

அருள்மொழியன் said...

தலைவரே

கலக்கிட்டிங்க‌

ஆன கடைசில் பில்லு கட்டுனது யாருனு மட்டும் கரெக்டா சொல்லாம பொதுவா பில்லு கட்டினோம் சொல்லி முடிச்சிடிங்களே???

Eagles Place said...

ஷார்ஜாவுல King faisal road branch ah illa clock tower branch ah ?

logapriya said...

very nice... i like this comedy.... keep it up...

BULLET மணி said...

ஆதவன் ரீமாவின் கதாப்பாத்திரத்தை பத்தின comedy எதையும் சொல்லாம விட்டுட்டிங்களே...

ஆ! இதழ்கள் said...

அடப்பாவிகளா என்டையும் ஒருத்தன் இப்படித்தான் Lord of rings, பூன கீனன்னான், பூரியும் ர.தோ வும் சாப்டுகிட்டே. இது தெரியாம இன்னொரு தடவை பார்க்க தெரிஞ்சேனே?

பாவம்யா செ.ரா இப்டியா தொடர் சாப்பாடு சாப்டறது?

Jayakanthan R. said...

ஒரு செட் பூரிக்கும் ரவா தோசைக்கும் "ஆ.ஒ" வ side dish ah வச்சுடீங்களே boss :)

ஸ்ரீமதி said...

கலக்கல் அண்ணா :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா....


கலக்கல் ஆதவன்!

SanjaiGandhi™ said...

ஹஹஹஹ.. எப்டி ஆதவன் இப்டி எல்லாம்.. கலக்கிட்டிங்க போங்க.. :)))

Related Posts with Thumbnails