கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்

சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.

அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.

கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார்.

"நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?"

"சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்"

"ம்ம் சொல்லுங்க"

"சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி"

"என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன்

"ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு உள்ள வர்ரா அவ பேரு "வெட்டு கிளி"

"ம்ம்ம்ம் அப்புறம்..." பேப்பர் வெயிட்டை கையில் எடுக்குறார் கேப்டன்.

"ஒரு கட்டத்தில வில்லன் வெட்டுகிளியை கெடுக்க வரும் போது வெட்டுகிளி அருவாமனையால ஒரே வெட்டா வெட்டிடுறா. அப்ப நீங்க வர்ரீங்க. உங்ககிட்ட வில்லன் பொணத்த பார்த்துக்க சொல்லிட்டு போலீஸ்கிட்ட போறேன்னு போறா வெட்டுகிளி. ஆனா போனவ போனவ தான். திரும்பி வரவே இல்ல. இரண்டு நாள் கழிச்சு பொணத்தோட நாத்தம் தாங்க முடியாம போலிஸ் வந்து உங்கபிடிச்சுபோயிடுது. சார் இந்த படத்தோட தலைப்பை கேளுங்களேன்"

கேப்டன் ஒன்றும் சொல்லாமல் நெற்றியில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

"சார் நீங்களாவது கேளுங்களேன்" கேப்டன் மச்சானிடம்....
"சார் நீங்க?" ஆபிஸ் பாயிடம்....

கேப்டன் பொறுமையிழந்து "டேய் சொல்லித்தொலடா..."

"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...

கேப்டன் அவன் மூக்கில் ஒரு குத்து விட, அவன் இரத்தத்துடன் "சார் இந்த கதை பிடிக்கலன்னா "யானை பசிக்கு சோள பொறி"ன்னு இன்னொரு கதை இருக்கு அதுவேணா கேட்குறீங்களா?" என்ற போது..

வாயில் ஒரு குத்து...வாயில் இரத்தத்துடன் "சார் விடுங்க சார் நீங்க இல்லைன்னா வேற யாருமில்லையா என்ன? நான் சரத் சார்கிட்ட போறேன் "ஓட்டுல சோத்த போட்டா ஆயிரம் காக்கா" என்று முடிக்கும் முன் பேப்பர் வெயிட்டை கேப்டன் தூக்கி அடிக்க....அவனும் வெளியே ஓடி போகிறான்.

நெக்ஸ்ட்ட்ட்ட்ட்ட் என்று குரல் கொடுக்க அடுத்தது ஒருத்தர் வரார்.

"நீங்க??" கேப்டன்

"சார் நான் பேரரசு சாரோட அஸிஸ்டெண்ட் சார்"

"அட பரவாயில்லையே சொல்லுங்க என்ன கதை கொண்டு வந்திருக்கீங்க?"

"சார் சொல்றத அப்படியே இமேஜின் பண்ணி பார்த்துங்க சார்......

"பாருங்க சார் முதல்ல சார் சின்ன கவுண்டர் மாதிரி ஒரு ஓபனிங் சார்.... "கண்ணு பட போகுதய்யா"ன்னு எல்லாரும் பாடி ஆரத்தி எடுக்குறாங்க சார்..


ஆரத்தி


அங்கிருந்து அப்படியே கட் பண்ணா சார் நீங்க விமானத்தில போறீங்க சார்

விமானம்

அங்க சார் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு பைட்டு சார். ஆனா வில்லன் Hacksaw ப்ளேடால ப்ளைன்ன அறுத்துடுறான் சார்.. ஆனா சார் நீங்க சார் பைலட் இல்லாம சார் விமானத்தையே ஓட்டுறீங்க சார்.


விமானம்1

நீங்க சார் செத்துட்டதா நினைக்கிறாங்க சார் வில்லன் க்ரூப். ஆனா சார் நீங்க பாராசூட்ல ஆக்ரோஷமா தப்பிச்சு வர்ரீங்க சார்..


பாராசூட்

நீங்க வர்ர ஆக்ரோஷத்தப் பார்த்துட்டு வில்லன் க்ரூப் மட்டும் இல்ல சார் தியேட்டரே பயப்படுது சார். ஆனா சார் விதி வலியது சார். அந்த பாராசூட் நேரா நடு கடல்ல சார் விழுந்திடுது சார்.

அதுல பாருங்க சார் உங்களுக்கு ஒரு லக் சார்... பக்கத்தில டைட்டானிக் கப்பல் சார். நடுகடல்ல நாயர்கடையில சார்.... பேசஞ்சருக்கு "டீ" வாங்கி கொடுக்க நிக்குது சார்.
அதுல ஏறி சார் நீங்க தப்பிச்சிறீங்க சார். அங்க சார் உங்க ஹிரோயின் இருக்காங்க சார். அவுங்களோட அப்படியே ரோமான்ஸ் சார்...


அப்படியே கப்பல பொள்ளாச்சிக்கு விடுறோம் சார். ரோஸோட "தந்தன தந்தன தை மாசம்..."ன்னு ஒரு டூயட் சார். ரொம்ப டீசெண்டான பாட்டு சார்.

ஆனா பாருங்க சார் கப்பல் ஒரு பெரிய பனிகட்டியில இடிக்குது சார். எல்லோரும் தண்ணியில விழுந்திறாங்க சார். நீங்க சார் எல்லாரையும் காப்பாத்திறீங்க சார். ஆனா பாருங்க சார். ஒரு பெரிய பார்க்கவே பயமுறுத்துற இராட்சத திமிங்கலம் உங்க கிட்ட வருது சார்.

சத்தியமா இது திமிங்கலம் தான்

பக்கத்தில சுவரு வேற இல்ல சார். ஆனா நீங்க விடல சார். தண்ணில போட்றீங்க சார் ஒரு பெரிய பைட்டு.........விடுறீங்க சார் சைடுல ஒரு குத்து. அதுக்கு அப்படியே பொறி கலங்கி போகுது சார்.... அது கண்ணுக்கு அப்படியே மூணு மூணா தெரியிறீங்க சார்...அதுவும் போலீஸ் ட்ரெஸ்ல சார்.

அவ்வ்வ்

அப்படியே அத மன்னிச்சு விடுறீங்க சார். கரைக்கு போய் எல்லாரும் ட்ரெயினை புடிக்கிறீங்க சார்.

டிரெயின்1

அங்க ஃபுட்போட்ல வர்ர பசங்ககிட்ட சார் "இந்த மாதிரி தொங்கிட்டு வந்தா டிரைவருக்கு சைடி மிரர் மறைக்கும்"ன்னு அட்வைஸ் பண்றீங்க சார். உடனே அவுங்க திருந்தி உங்களுக்கு உதவியா வராங்க சார்.

ஒரு வயசான அம்மா இரயில்ல சார் கஷ்டப்பட்டு சுண்டல் வித்துட்டு வராங்க சார்.
அத பார்த்துட்டு உங்களுக்கு அப்படியே மனசு இளகி சார் ஐஞ்சு ரூவாய்க்கு சுண்டல் வாங்கி ஒண்டியா திங்கிறீங்க சார்.

அந்த வயசான அம்மா சார் உங்கள கட்டி பிடிச்சு சார் "எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீ தான்ய்யா"ன்றாங்க சார், அங்க வைக்குறோம் சார் ஒரு பாட்டு.
இரெயிலே ஆடுது சார் உங்க பாட்டுக்கு.

ஆனா சார் பாட்டு முடிஞ்சுதுக்கப்பறம் தான் சார் தெரியுது வில்லன் க்ரூப் ஒரு சைடு தண்ட வாளத்தை உடைச்சுடாங்கன்னு.


இரயில் மேல ஏறி தாவுறீங்க சார் ஒரு தாவு...போறீங்க சார் அப்படியே டிரைவர் சீட்டுக்கு.... போய் தூக்குறீங்க சார் உங்க ஒரு கால.. நிக்கிறீங்க சார் ஒரு சைடு முட்டு கொடுத்து.
...உங்க வெயிட்டுக்கு சார் இரயிலே ஒரு சைடு சாயுது சார்.

டிரெயின்2

துண்டான ஒரு சைடு தண்டவாளத்தை இரயில் தாண்டுன உடனே வைக்கிறீங்க சார் இன்னொரு கால கீழ....


டிரெயின் 4

டிரெயின் முன்ன மாதிரி நேரா ஓடிடுது சார். அங்க வைக்குறோம் சார்ர்ர்ர்......

"போதும் தம்பி போதும்...நீங்க இது வரைக்கும் சொன்ன கதையிலேயே எனக்கு பிடிச்சு போச்சு இனிமே நேரா சூட்டிங் சார்...." கேப்டன் அந்தர்பல்டி அடிக்கிறார்.

"இல்ல சார் இப்ப இண்டர்வெல் வரைக்கும் தான் சார் வந்திருக்கோம் இன்னும் பாதி கதை இருக்கு சார்" என்றவுடன்

கேப்டன் "என்னது இன்னும் பாதி கதை இருக்காஆஆஆஆஅ" என்றபடி கேப்டன் மூர்ச்சையாகிறார்.....டிஸ்கி1: இது காமெடிக்காக போட்ட பதிவென்பதால் அனிமேஷனில்(?) குத்தம் குறை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்

டிஸ்கி2: பதிவுக்கான கரு ஜெயா டிவின் "உங்க ஏரியா உள்ள வாங்க" 57 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

:)))))))


மீண்டும் ஒரு முறை டெக்னிகலி கலக்கல் பதிவு :)

நட்புடன் ஜமால் said...

எல்லாம் ஜூப்பரு

பாராசூட் டெரரூ

டைட்டானிக் நெம்ப ஓவரூ ...

pappu said...

பாராசூட் அபாரம்!

கண்ணா.. said...

கலக்கல்...

:)

அதும் அந்த அனிமேஷன் கிளிப் சான்ஸே இல்ல....

முகிலன் said...

நல்ல வேளை விசயகாந்து ப்ளாக் படிக்கிரதில்லை. அப்புறம் அவர் பாட்டுக்கு இந்தப் படத்த எடுத்துடப் போராரு.

இளைய தலைவலியும் ப்ளாக் படிக்கிறதில்லயாம் ஜாலி

Rajalakshmi Pakkirisamy said...

Nice :) :) :)

சாம்ராஜ்ய ப்ரியன் said...

ஆ... ஹா.. ;)

goma said...
This comment has been removed by the author.
goma said...

வெளுத்துக் கட்டீட்டீங்க சார்....

அனிமேஷன் சூப்பர்....

செளந்தர்யா கண்ணிலே காட்டாதீங்க .

...”அப்பவே தெரியாம போச்சே”ன்னு வருத்தப் படப் போறாங்க...

11.1.10

Anonymous said...

படமெல்லாம் க்ளாஸிக். :)
அவருக்கு ஆஸ்கர் வாங்கிக்குடுக்காம விடமாட்டிங்க போலிருக்கு

Jawahar said...

"இழவு காத்த கிளி" ரொம்ப ரசிச்சேன்.

அடுத்த கதை விஜயகாந்த் படம் பாக்கற மாதிரியே இருந்தது. புதுமையான, ரசிக்கக் கூடிய கற்பனை. வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com

ஹுஸைனம்மா said...

//அனிமேஷனில்(?) குத்தம் குறை இருந்தால் //
//டிஸ்கி3: ஆணி அதிகமானதாலும்//

போட்டிருக்கிற அனிமேஷனைப் பாத்தா ஆணியே புடுங்கறதில்லன்னு தெள்ளத்தெளிவாத் தெரியுது!!

ஜெஸிலா said...

அனிமேஷன் நீங்க செய்ததா? கலக்கல்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

யப்பாஆஆஆஆஆஆஆ

அசத்திட்டீங்க

கேப்டன் பார்த்த உங்கள விடமாட்டாரு போல இருக்கே, இந்த் ஸ்கிரிப்ட்டுக்கும் அனிமேஷனுக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதுவும் ரோஸ் கூட

:)))))))))))))))))))

அபாரமான கற்பனை வளம் பாஸ் உங்களுக்கு.

மணிப்பக்கம் said...

அருமை!

சந்தனமுல்லை said...

:-)))))

பாஸ்..செம க்ரியேட்டிவிட்டி பாஸ்! கலக்கலான டெரர் போஸ்ட்!

சந்தனமுல்லை said...

பாராசூட் மற்றும் கேப்டனோ விஸ்வரூபம் அசத்தல்!! கலக்குங்க பாஸ்!

ஸ்ரீமதி said...

நான் மிகவும் ரசித்த பதிவு :))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

பதிவுலகில் இது ஒரு புரட்சி,பாராட்டுக்கள்
வாக்குகள் அளிக்கப்பட்டன

கலையரசன் said...

அனிமேஷன் நீயி.. ரைட்டு!
அந்த மொக்க டயலாக்ஸ் எல்லாம் யாரு???

ஒரு வருஷமா எங்க மூளை வளராம சொங்கி போயி கிடக்கோமா??
பேப்பர் வெயிட்டை எடுக்குறதுக்காட்டியும் ஓடியே போயிரு....

நாஞ்சில் பிரதாப் said...

அதானே பார்த்தேன்... இதை இதுக்கு முன்னாடியே எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்குன்னு நினைச்சேன்..மீள் பதிவுன்னு போட்டுறவேண்டியதுதானே மச்சி... அதலவேற என்ன டீசன்சி பார்க்கிறியே... ரொம்ப ஓவரய்யா இது.

அதுல பாரு நம்ம கேப்டன் பாராசூட்டுல வரும்போது வேட்டி அவுந்துருமோன்னு பயமா இருக்கு... காத்து வேற அடிக்குதா... பார்க்ககூடாததது எதுனாச்சும் தெரிஞசுருமோன்னு வேற பயம்... போடறதுதான் போடுற பேன்டைபோட்டுவுடவேண்டியதுதானே...

UthamaPuthra said...

தம்பி ரொம்ப நள்ளா களக்கிட்டீங்க...

வயிறு வளி தாங்கமுடியள...

அடுத்த டிஸ்கஸன் எப்போண்ணு தமில் குளுவுக்கு தெரிவிச்சிறுங்க. நான் திமுக, அதிமுக வோடள்ளாம் தேமுதிமுக கூட்டணி வெச்சுக்க மாட்டோமுண்ணு ஒரு ஸ்டேட்மெண்டு விட்டுடு சீக்கிரமா வந்துர்ரேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அதானே பாத்த மாதிரியே இருக்கேன்னு பார்த்தேன்..
இருந்தாலும் இப்படி மிரட்டப்படாது..

Sukumar Swaminathan said...

Kalakkal Boss.... Keep Rocking....!!!!

R.Gopi said...

//"என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன்//

அதானே, ஏற்கனவே என்னிய வச்சு “பெரிய எருது” (பெரிய மருது), “கோயில் காளை” இப்படியெல்லாம் தானே எடுத்தாய்ங்க...??

//அந்த வயசான அம்மா சார் உங்கள கட்டி பிடிச்சு சார் "எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீ தான்ய்யா"ன்றாங்க சார்//
என்னிய செகப்பு, பச்சை, நீல, மஞ்சள் எம்.ஜி.யார்!!! இப்படியெல்லாம் சொல்றது சரி... அப்படியே அவரையும் இனிமே “வெள்ளை விஜயகாந்த்”னு சொல்லுங்க....

நீங்க என்னிய வச்சு காமெடி பண்றீங்கன்னு நெனக்கறேன்.... எனக்கு தான் காமெடி பண்ண வராது... என்னிய வச்சு நீங்களாவது பண்ணுங்க... (அகில உலக (!!!???) கேப்டன் சபரி ரசிகர்கள் மன்றம் - குப்பட்டியான்குழப்பட்டியான்பட்டி)

*-*-*-*-*-*-*-

www.jokkiri. blogspot.com

www.edakumadaku.blogspot.com

ஆ! இதழ்கள் said...

parachute காட்சி ஆக்ரோஷமத்தானுங்க இருக்கு..யப்பா...

கலக்கிப்புட்டீங்க போங்க...

அபுஅஃப்ஸர் said...

Excellent

panasai said...

விடிகாலம் 2.15 am க்கு கெக்கே பெக்கேனு நான் சிரிச்சதை கேட்டு தூங்கிட்டு இருந்த நண்பர் முழிச்சு பார்த்துட்டு திரும்பவும் படுத்துட்டார்,
கலக்கீட்டிங்க.. சான்ஸே இல்ல..

- பனசை நடராஜன், சிங்கப்பூர் -

வினோத்கெளதம் said...

அனிமேஷன் தான் டாப்பு..

//ஒரு வருஷமா எங்க மூளை வளராம சொங்கி போயி கிடக்கோமா??
பேப்பர் வெயிட்டை எடுக்குறதுக்காட்டியும் ஓடியே போயிரு....//

இதையும் கருத்தில் கொள்கிறேன்..

//அதுல பாரு நம்ம கேப்டன் பாராசூட்டுல வரும்போது வேட்டி அவுந்துருமோன்னு பயமா இருக்கு... காத்து வேற அடிக்குதா... பார்க்ககூடாததது எதுனாச்சும் தெரிஞசுருமோன்னு வேற பயம்... போடறதுதான் போடுற பேன்டைபோட்டுவுடவேண்டியதுதானே.//

எனக்கும் இந்த பயம் இருந்துச்சு பார்கும்ப்பொழுது..
அதை நாஞ்சிலார் சரியாக சொல்லிவிட்டார்..:)

கலகலப்ரியா said...

//"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...//

=))

superb..

அது ஒரு கனாக் காலம் said...

//போட்டிருக்கிற அனிமேஷனைப் பாத்தா ஆணியே புடுங்கறதில்லன்னு தெள்ளத்தெளிவாத் தெரியுது!!//
:-) ;-) ;-)

ஜெகநாதன் said...

சிரிச்சி தாங்கல ஆதவன்!

ஆபிஸில் பக்கத்தில இருக்கிற பாஷை ​தெரியாதவங்களுக்கெல்லாம் கூட சிரிப்பு வருது.. எல்லாம் நீங்க ​போட்டிருக்கிற படங்கள்தான்.

மற்ற நண்பர்களிடமும் சார் இந்த இடுகையை சார் பகிர்ந்து கொள்கிறேன் சார்.

ஜெகநாதன் said...

இந்த இடுகையை படிச்சத்துக்கு அப்புறம் ஆதவன் எனக்கு ஆதவன்-ஆதவன்-ஆதவனாத் ​தெரியறாரு..
ஐ திமிங்கலம் (மீன்),​பொறி கலங்கிடுச்சுங்க!!

புல்லட் said...

சொலில வேல இல்ல பாஸ்் கலக்கல்.. எப்பிடிப்பா இந்த ஜிஃப் பைலை எல்லாம் உருவாகிகிறீங்க? ப்ளாசா பயன்படுத்திறீங்க? அருமையா இருக்கு.. அதிலும் அந்த விஜயகாந்து பரசூட் படத்துக்கு ரெண்டு படத்தையும் தேடவே எவ்வளவு நெரமாயிருக்கும்னு புரியுது.. கலக்கல் பாஸ்்.. புல்லரிக்குது..

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

☀நான் ஆதவன்☀ said...

கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள். பணிச்சுமை காரணமாக உடனுக்குடன் பதிலிட முடியவில்லை. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :)

@ஜெஸிலா

அவ்வ்வ்வ்வ் நான் தான் செய்தேன் ஜெஸிலா. இதிலென்ன சந்தேகம்? (அட நம்புங்கப்பா)

Anonymous said...

சூப்பர். தலைவர் சிங்கிள் ரோல் தானே?

சிங்கக்குட்டி said...

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.

ஹாலிவுட் பாலா said...

ஆதவன்...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்! :)

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. ஆதவன், கேப்டன் மட்டும் இந்த இடுகையை பார்த்தாரு, ராட்சத பம்பரத்தை உங்க வயித்துல சுத்த விடுவாரு. ஆ..ங்

(ஜெகன் - நன்றி தலைவரே, ஷேர் பண்ணிகிட்டதுக்கு)

gulf-tamilan said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்!!!

கோமதி அரசு said...

ஆதவன்,முதலில் தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

அனிமேஷன் எல்லாம் அருமை.

naaivaal said...

அனிமேஷன் நல்லா பண்றீங்க பாஸ்
நம்ம கேப்டன் சார் வேற டிவி சேனல்
ஆரம்பச்சி இருக்கார்
பேசாம நீங்க ஜாயின் பண்ணிடுங்க

jailani said...

பேசாம இந்த கதையை வைத்து நீங்களே ஏன் படம் தயாரிக்ககூடாது.சன் டீவியில் விளம்பரம் (5 மாசம் ) போட்டே படத்தை ஹிட்டாக்கலாம்.

இய‌ற்கை said...

:-)))))))))))))))))))))))))))))))

விஜயகாந்து இதைப் படிச்சாருன்னா உங்களுக்கு அடுத்த படம் ஸ்கிரிப்ட் ரைட்டர் சான்ஸ் உறுதி...:-))

அமுதா said...

:-))))))))))))))))))))))))))))))))

சூப்பர் அதுவும் அந்த பாராசூட் பார்த்து மிரண்டுட்டேன்

SHANKAR said...

என்னுடைய அடுத்த படத்திற்கு நீகதான் டிரைக்டர்

ஆமினா said...

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

கும்மி said...

தமிழ்மணம் விருது வென்றமைக்கு வாழ்த்துகள்.

சூர்யா ௧ண்ணன் said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துகள் நண்பரே!

Samudra said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

Chadhurya amma said...

U deserve it. What a smart work?

♫சோம்பேறி♫ said...

அருமே.. அருமே.. அட்டகாசமான படைப்புய்யா.. காமெடி, ஆக்ஸனு, லவ்வு, செண்டிமெண்ட்டுனு அசத்தலான கதைய்யா.. பன்ச் டயலாகு தான் மிஸ்ஸிங். இல்லாட்டி நானே நடிச்சுக் குடுத்திருப்பேன்.

பதிவுல கதைய லீக் பண்ணாம இருந்திருந்தா, கேப்டன் நடிப்புல படம் நெசமாவே ஆஸ்கார் வாங்கிருக்குமே.. தமிழ்மண விருதுக்கு ஆசைப் பட்டு ஆஸ்காரை கோட்டை விட்டுட்டியே..

சாமக்கோடங்கி said...

கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் எப்படி பண்ணினீங்க..?? சூப்பரு தல..

எங்களுக்கும் கொஞ்சம் சொல்றது..

பத்ம ப்ரியா said...

சிரிச்சு சிரிச்சு விழுந்தேன் ( எவ்வளவு தடவ தான் விழுந்து விழுந்து சிரிச்சேன்னு சொல்றது..).. ஹன்ஸிகா மோத்வானி தானே ஹீரோயின்? இடைவேளைக்கு பிறகு அனுஷ்காவா?

நிஜமாவே சிரிப்பு வந்தது.. நன்றி
priyaraghu.blogspot.com

ஆர்.சண்முகம் said...

லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும்.
கலக்கிட்டிங்க...

Related Posts with Thumbnails