பேசாத பேச்செல்லாம்........

வள் இதுவரை என்னிடம் பேசவில்லை.

மிருதுவான அவள் கைப்பிடித்து அக்னியை மூன்று முறை சுற்றியபோது  கைகளில் அகப்பட்ட நாய்குட்டிப் போல,  கதகதப்பு பிடித்திருந்தாலும், திமிறுவது போல் இருந்தது. மனது குறுகுறுக்க, என்னைப் பார்க்கிறாளோ! என திரும்பினால் தலை தாழ்த்தி புன்னைகை செய்கிறாள். அவள் அழகானவள். தண்ணீரில் மிதக்க செய்து திசைகளை மறக்கச் செய்யும் அவள் கண்கள், காதோரம் வரை விழும் சுருள் முடி. குறும்புகளால் நிறைந்தவள். முதல்முறை பார்த்ததும் என்னவள் இவளே என்றேன் அம்மாவிடம்.

துவரை அவள் என்னிடம் பேசிய வார்த்தைகளைக் கோர்த்து அவளுக்கே மாலையாக போடலாம்.

முதலிரவில் எதிர்பார்த்தது போல் காலில் விழுந்தவளை கைப்பிடித்து எழுப்பும் போதே அவள் உடல் நடுங்குவதை உணர முடிந்தது. இரவின் குளிரும் காரணமாக இருந்திருக்கலாம் உள்ளிருந்து சமாதானமாக காமுகன் எடுத்துரைக்க, “என்னைப் பிடித்திருக்கிறதா?” என வினவிய போது, ”ம்” என்ற ஒற்றை பதில் சற்றே ஆறுதல் அளித்தது. கையை பிடித்தேன். அந்த கணம் குறும்புகளால் நிறைந்திருந்த கண்கள் (அல்லது எனக்கு அவ்வாறு தோன்றிய அவள் கண்கள்) குறும்புகள் மறைய  அவள் முகம் வியர்க்க, தண்ணீரிலிருந்து வெளியேறிய மீனை போல் தவித்தாள். காமுகனுக்கு சிகரெட்டின் புகையோடு ஆறுதல் கூற முயன்றேன்.  காமுகன் அன்றிரவு செத்துப் போனான்.

துவரை அவள் என்னிடம் பேசியது முழுதாக ஒரு பக்கம் கூட இருக்காது.

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் காமுகனோடு காமுகியும் சேர்ந்ததால் அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறது ஒரு விசயமே ஆறுதலாக அவள் பேச மறந்த வார்த்தைகளை மன்னித்தது. என் உடல் அலுவலகத்தில் இருக்கும் நேரம் அடுத்த வீடுகளில் இவள் பேசத் தொடங்கிளான் என்று, பக்கத்து வீட்டு ரமணியம்மா என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னபோது தான் தெரிந்தது.

துவரை அவள் என்னிடம் பேசியதை மனப்பாடமாக என்னால் ஐந்து நிமிடங்களுக்குள் ஒப்புவிக்க முடியும்.

ஒருமுறை மதியம் சாய்ந்து இரவை அழைத்த வேளை, பத்தையும் தாண்டாத வயதொத்த குழந்தைகளை தன் வசம் ஈர்த்து வட்டமடித்து அமர்த்தி வைத்திருந்தாள். கைகளை விரித்து பிரபஞ்சத்தை அளந்து, கைகளை கொண்டு பூமியை சுருக்கி பின்பு நீட்டி நிலவை இழுத்து, மிருகங்களை தன் சொல்படி ஆட்டுவித்து, மந்திரத்தால் ஆன ஒரு கதையை சொல்லிகொண்டிருந்தாள். வாலை சுருட்டி நானும் அமர்ந்த போது வெக்கட்த்தால் ஆன ஒரு அம்பை செலுத்திவிட்டு அகத்தே ஓடினாள். 

அன்றிரவு நாங்கள் தன்னை மறந்து, காமுகனும் காமுகியும் தன்னையுணர்ந்த நேரம் அவள்  என் பெயரை ”டா”வுடன் உச்சத்தில் உச்சரித்த போது, நான் விழித்து கொண்டு அதை கேட்டது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. காலையில் காபியுடன் வந்தவளை என்னைச் செல்லமாக “போடா” என சொல்லுமாறு கேட்டவன்.... இன்று வரை கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். அவளும் கொஞ்சல் சிரிப்போடு உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டியவாறு செல்கிறாள்.

ந்த ஒரு மாதத்தில் அவள் பேசியவைகளை உள்ளங்கையில் மழைநீரைப் போல் சேர்த்துக் கொண்டிருந்தேன். அதுவும் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.

”ஏ என்ன சொன்ன? என்ன சொன்ன? திரும்ப சொல்லேன்.. ப்ளீஸ்.... திரும்ப சொல்லேன்” முகத்திலடிக்கும் எதிர் காற்றையும் மீறி அவள் பேசியது கேட்டபோது சந்தோஷத்தில் துள்ளித்தான் போனேன். அவள் சில நொடி மௌனத்திற்கு பிறகு திரும்பவும் “மெதுவா போயேன்டா” என்று காதை கடித்து அவள் கூறிய போது குழந்தையாக மாறிப் போனேன். ஆம் மாறித்தான் போனேன். பைக்கிலிருந்த கைப்பிடி தளர்ந்து தான் போனது. நிலைமை கைமீறி போவது எதிரே லாரி வருவதை கண்ட போது தான் உணர முடிந்தது....

அவள் பேசாமலேயே இருந்திருக்கலாம்.


 --------------------------------------------------------------------------------------------------------------
 மெசேஜ்: சாலை பாதுகாப்பு வாரத்தை (சனவரி1-7) முன்னிட்டு விழிப்புணர்வு பதிவிடுமாறு தோழி இயற்கை தொடர் பதிவுக்கு அழைத்ததிருந்தார். அவருக்கு  நன்றிகள்.

சாலைப் பாதுகாப்பு வாரத்தை(ஜனவரி 1-7) டிரைவிங்கில் நீங்கள் செய்யும் தவறுகளை மீள்பார்வை செய்யும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்‌.
சாலைப் பாதுகாப்புத் தெடர்பான இடுகைகளை எழுத கீழ்வரும் நண்பர்களை அழைக்கிறேன்.

காட்பாதர் இளையபல்லவன் (ஹி ஹி வரலாறு ஆசிரியராச்சே)
மாப்பி அதி பிரதாபன் (நோ எஸ்கேப்பு ஆமா....)
கழுகு கலையரன் (ஹி..ஹி)
தேவுடு கார்த்திகேயன் 
முதலாளியம்மா....ஐ மீன் சின்ன அம்மணி ஹி ஹி

எழுதிவிட்டு, நீங்களும் குறைந்தபட்சம் 5 பேரை அழைக்கலாம் .

ப‌ய‌ண‌த்தில் க‌வ‌ன‌மாயிருங்க‌ள்.விதிக‌ளை ம‌தியுங்க‌ள்.ம‌கிழ்வாய் வாழுங்க‌ள். -----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழ்மண விருதிற்காக நகைச்சுவை & கார்டூன் பிரிவுலும், கதை & கவிதை பிரிவிலும் ஓட்டு போட்டு இரண்டாம் சுற்றுக்கு முன்னேற காரணமாய் இருந்த நண்பர்களுக்கு நன்றிகள். இனி இங்கே சென்று ஓட்டு போடுபவர்களுக்கும் என் நன்றிகள்.

38 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

goma said...

கருத்தை மிதமான அமைப்பில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்
பாராட்டுகிறேன்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

வாக்குகள் சேர்க்கப்பட்டன

ஜெஸ்வந்தி said...

அழகான கதை. உணர்ச்சி ததும்ப கொண்டு சென்ற விதம் அழகு. சொல்ல வந்த கருத்து நன்றாகவே வெளிப்படுகிறது.

கலகலப்ரியா said...

:)... ரொம்ப நல்லாருக்கு..

Anonymous said...

மாட்டிவிட்டுட்டீங்களா.... சரி சரி யோசிக்கறேன். :)

பூங்குன்றன்.வே said...

இடுகை அருமை !!!

கோபிநாத் said...

நல்லாயிருக்கு..;)

Romeoboy said...

அட போபா நான் ஏதோ அஜால் குஜால் கதைன்னு படிச்சிட்டு வந்தேன் கடைசில இது தான .. வித்தியாசமான கதை நண்பா. நல்லா இருக்கு .

pappu said...

கொடுமையய்யா! வர வர எந்தக் கதை எப்படி எழுதுவது என விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது..

ஏ ராமு, சோமுவுக்கு ஆனதைப் பாத்தியா? சாலைவிதிய பின்பற்றாததால அவன் இறந்து போயிட்டான்.

ஆமா கோபு, அவன் சாவு என்ன பதற வைக்குது. இனிமே நான் சாலைவிதிய கண்டிப்பா பின்பற்றுவேன்!

இப்படி இருக்கனும். பொதிகை பார்த்ததில்லை?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நானுமா?
ஓகெ ஓகே வில் டரை

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாக்குகள் அளிக்கப்பட்டன!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

2000,செல்போன்,பிரியாணி எப்போ கிடைக்கும்?

☀நான் ஆதவன்☀ said...

@கோமா

ரொம்ப நன்றிங்க :)
-------------------------------------
@கார்த்திகேயன்

அவ்வ்வ் பயபுள்ள பதிவை படிக்காம கமெண்டை போடுது பாரு :))
-------------------------------------
@ஜெஸ்வந்தி

நன்றி ஜெஸ்வந்தி :)
-------------------------------------
@கலகலப்ரியா

நன்றி ப்ரியா :)
-------------------------------------
@சின்ன அம்மணி

விடமாட்டோம்ல. சீக்கிரம் பதிவு போடுங்க :)
-------------------------------------
நன்றி பூங்குன்றன் :)
-------------------------------------
@கோபிநாத்
நன்றி தல

☀நான் ஆதவன்☀ said...

@ரோமியோ பாய்

அவ்வ்வ்வ் அஜால் குஜால் கதையா? வர்ர கஸ்டமரை கூட விரட்டுர ஐடியாவா இருக்கே? :) நன்றி ரோமியோ பாய் :)
-------------------------------------
@பப்பு

ஹி ஹி உன் கமெண்டை படிச்சுட்டு சிரிச்சுட்டே இருந்தேன்
டப்பிங் (அரசாங்க)விளம்பரம் பார்க்கிற மாதிரி இருந்தது :)
-------------------------------------
@ராஜ்

வாங்க ராஜ் :) ஓட்டுக்கு மிக்க நன்றி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) குட்

சந்தனமுல்லை said...

பாஸ்...எங்கியோ போய்ட்டீங்க!! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ் !!!!!!!!!!!!!

ரொம்பவும் மென்மையாக அழகா கொண்டு போய் மெசேஜோடு முடித்த விதம் பிடித்திருந்தது.

மிகவும் ரசித்த பதிவு பாஸ் இது

நாகா said...

மெசேஜ் இருக்கட்டும் பாஸூ, கல்யாணம் எப்போ? பீலிங்ஸ் பயங்கரமா இருக்கு :)

மகா said...

கதை நன்றாகவே உள்ளது .... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....

கலையரசன் said...

லேபிள்ல கருத்து கந்தசாமி, நாட்டாமை வித் சொம்பு, அறிவுரை சொல்றாராம்.. அப்டின்னு எழுத மறந்துட்ட போல...??

(முதல்ல என் பேரை, தப்பு இல்லாம எழுத பழகு.. அப்புறம் கூவலாம்!!)

கலையரசன் said...

இருந்தாலும்.. ஆண்டின் முதல் பதிவு என்பதாலும், என்னை மிதிச்சு கூப்பிட்டதாலும், உன் பதிவில் உள்ள மூலதன பற்றாக்குறைகளை சுட்டிகாட்டாமல் செல்கிறேன்! வர்டா.. ஆங்..!

☀நான் ஆதவன்☀ said...

@முத்தக்கா

நன்றிக்கா :)
------------------------------------
@சந்தனமுல்லை

பாஸ் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாகி கிடக்குது பாஸ் :)
------------------------------------
@அமித்து அம்மா

ரொம நன்றி பாஸ் :)
------------------------------------
@நாகா

தல அதுக்கென்ன அவசரம். செஞ்சிடலாம். முதல்ல நீங்க ஓட்டு போட்டீங்களான்னு சொல்லுங்க? :)
------------------------------------
@மகா

நன்றி மகா :)
------------------------------------
@கலையரசன்

டூர் போன எல்லாம் பதிவா போட தெரியுது... இதுக்கு மட்டும் போடல அவ்வளவு தான் நீ.

நாஞ்சில் பிரதாப் said...

//என் உடல் அலுவலகத்தில் இருக்கும் //

சே. பின்னிட்டப்பு

மச்சி கதைக்கரு நல்லாத்தான் இருக்கு...
இப்ப என்ன சொல்லவர்ற?
அதிகம் பேசாத பொண்ணுங்களை கண்ணாலம் பண்ணிக்ககூடாதுங்கறியா...?.
அதிகமா புதுப்பொண்டாட்டிகிட்ட வழியக்கூடாதுங்கிறியா?
ஆபிஸ்க்கு போகும்போது புதுக்பொண்டாட்டிகிட்ட எதுவும் பேசக்கூடாதுங்கிறியா?
இல்ல பைக்கே ஒட்டக்கூடாதுங்கிறியா?

விடைச்சொல்லு மச்சி இல்லன்னா எனக்கு பைத்தியமே புடிச்சிரும்...

வினோத்கெளதம் said...

மெசேஜ் சொல்லுற மாதிரி உன் ஆசையையும் சொல்லிட்ட நல்லா இருடே..

கணேஷ் said...

நீ வருவாய் என‍ படத்தில் அஜீத் மிலிட்டரிக்கு திரும்பும்போது தேவயானி சொல்லும் 'ஐ லவ் யூ'. அதை தொடர்ந்து வரும் ஆக்சிடென்ட்.

ஸாரி.. சும்மா தோணுச்சி. ஆனா படிக்கும்போது தோணல.. :)
கமெண்ட் போடும்போது தான் தோணுச்சி :)

- இரவீ - said...

அருமை ...அருமை !!!

அதி பிரதாபன் said...

நன்றி ஆதவா,
ஒரு வாரம் டைம் குடு, கொஞ்சம் வேலை அதிகம்.

நல்லாயிருக்குய்யா...

☀நான் ஆதவன்☀ said...

@பிரதாப்பு

அவ்வ்வ்வ் விட்டா கதையின் நீதின்னு கடைசியில போடச்சொல்லுவ போல.. இருந்தாலும் நீ கேட்டேன்னு சொல்றேன்

எது எது எங்க பேசனுமோ அங்க பேசியே ஆகனும்
எது எது எங்க பேசகூடாதோ அதை அங்க பேசவே கூடாது :)

போதுமா மச்சி? :)
-----------------------------------
@வினோத்

ஹி ஹி :)
-----------------------------------
@கணேஷ்

அவ்வ்வ் எப்படி யோசிச்சாலும் ஏதாவதோடையாவது ஒத்து போயிடுது கணேஷ் :) (இதுக்கு எதுக்கு ஸார்? ஆக்சுவலா மனசுல பட்டதை சொன்னதுக்கு ரொம்ப நன்றி)
-----------------------------------
@ரவீ

நன்றி ரவீ
-----------------------------------
@அதி பிரதாபன்

மாப்பி டேக் யுவர் ஓன் டைம் :)

இளைய பல்லவன் said...

1. அழைப்பிற்கு நன்றி
2. கதை அருமை
3. அதில் வெளிப்படும் உங்கள் ஏக்கம் மிக அருமை.
4. அதில் சொல்ல வந்த கருத்து மிக மிக அருமை.
5. விரைவில் உங்கள் ஏக்கம் தீர வாழ்த்துக்கள்
6. தொடர் பதிவு போட்டுவிட்டேன்.
7. வந்து பார்த்துவிட்டு கருத்துக்களைச் சொல்லுங்கள்.
8. நன்றி (கதைக்கு)

ஆ! இதழ்கள் said...

நன்றாக இருந்தது.

அடுத்த அடுத்த தரத்திற்கு முன்னேற வாழ்த்துக்கள்.

கிறுக்கல் கிறுக்கன் said...

நல்லாருக்கு

Krishan said...

அருமை !!!
வாழ்த்துக்கள் ...

இய‌ற்கை said...

எங்கியோ போய்ட்டீங்க!! :-)?:-)_

மாதேவி said...

"ப‌ய‌ண‌த்தில் க‌வ‌ன‌மாயிருங்க‌ள்.விதிக‌ளை ம‌தியுங்க‌ள்.ம‌கிழ்வாய் வாழுங்க‌ள்."

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

கோமதி அரசு said...

கவிதை மாதிரி கதை சொல்லி ,சோகத்தில் முடித்து விட்டீர்களே!

சாலை பாதுகாப்பை நல்ல அழுத்தமாய்
சொல்லி விட்டீர்கள்.

நானும் இந்த தொடர் பதிவில் கலந்து கொண்டு இருக்கிறேன்.

அன்புடன் அருணா said...

கதையும் கருத்தும் நன்று!

terrastonne said...

"NEE VARUVAYENA" PADAM MATHIRIYE IRUKKU!

terrastonne said...

"NEE VARUVAYENA" PADAM MATHIRIYE IRUKKU!

Related Posts with Thumbnails