
இந்திராகாந்தி. அக்டோபர் 31 அவர் மரணம் அடைந்த நாள். கம்பீரத்தின் மறு உருவம். ஏன் இன்றும் ஒட்டுமொத்த இந்திய பிரதமர்களில் தைரியசாலி என எதிர்கட்சி தலைவரால் கூட பாராட்டப்பட்டவர். இந்நேரம் இந்தியாவை வல்லரசாக மாற்றியும் இருக்கலாம் என நப்பாசையும் எழ செய்பவர். இன்னும் என பல இமேஜை உள்ளடக்கியவர். அவர் மரணம் அடைந்த நாளான இன்று மதுரையில் அருகே உள்ள ஒரு கிராமத்தில், அனைத்து மக்களும் சோகமும், அதனடுத்து இரண்டொரு நாளில் சந்தோஷத்திற்காக தயாராகவும் என இரு வேறு மனநிலையில் இருக்கும் விசித்திர ஒரு கிராமம்.
சில தலைவர்கள் இறக்கும் போது ஏற்படும் வலியை விட, அதன் பிறகு காரணமே இல்லாமல் ஏற்படும் கலவரம் மற்றும் சில இத்தியாதிகள் ஏற்படுத்தும் சமபவங்கள் ஏனோ நம் மனதில் இருந்து மறைவது கடினம்.
பலவருடங்களுக்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை செல்லும் போது யதேச்சையாக உறவினரை பார்க்க அக்கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. மதுரையை அடுத்து நகரத்தை ஒட்டி இருக்கும் சிறிய கிராமம் அது. பெரியவர்கள் பலர் இந்திராகாந்தி இறந்த சம்பவத்தையும் அதன் பிறகு நான்கு தினங்கள் பந்த் நடந்தையும், அதனையொட்டி கிராமத்தில் நடந்த சம்பங்களையும் நினைவு கூர்ந்து வருவதோடில்லாமல் தங்கள் குழந்தைகளும் சொல்லி ஒரு திருவிழா போல கொண்டாடி வருவது ஆச்சர்யம் அளிக்கிறது.
அக்கிராமத்தில் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர் ஒரு பட்டறையில் வேலைப் பார்த்து வந்தாராம். கம்யூனிச கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவராயினும் கலைஞரை தீவரமாக நேசித்தவர். மதுரையையொட்டி கலைஞர் எங்கு வந்தாலும் அவரது பேச்சைக் கேட்க ஆவலோடு செல்வாராம். ஜாதீகளில் புரையோடி போன அக்கிராமத்தில் சற்றே வித்தியாசமானவராக இருந்தவர். அதிகம் படிப்பில்லையென்றாலும் அவரது தொழில் நேர்மை, மனித நேயம் என ஊரில் அவருக்கு மிக நல்ல பேரை பெற்றுத் தந்தது. அவரது மனைவி இல்லத்தரசி.
அக்டோபர் 31ல் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்திராகாந்தி கொலை இக்கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. அச்சமயத்தில் நிறைமாத கர்பிணியாக இருந்தாராம் அவரது மனைவி. ரேடியோவில் நிகழ்வுகளை ஊரே கேட்டுக்கொண்டிருந்தது. அதை தொடர்ந்து இந்தியாவில் ‘பந்த்’ நிகழ்ந்ததும் அனைவரும் அறிந்ததே. வெளியே யாரும் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது.
’பந்த்’ இரண்டாவது நாளும் அதாவது நவம்பர் முதல் தேதியும் தொடர்ந்த போது தான் அவரது மனைவிக்கு பிரசவ வேதனை எடுக்க ஆரம்பித்தது. வேதனை அதிகமாக அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊரில் உள்ள பிரசவம் பார்க்கும் வயதான ஒரு பாட்டியை அழைத்து வந்து காண்பித்த போது அவர் மருத்துவமனைக்கு செல்வதே உச்சிதம் என கையை விரித்து விட்டார். வெளியே வண்டியோ, ஆட்டோவோ என வாகனங்கள் எதுவும் ஓட முடியாத சூழ்நிலை.
அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எப்படி அழைத்துச்செல்வது என தெரியாமல் முழிக்க, நள்ளிரவு நேரத்தில், அதுவும் ‘பந்த்’ நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றாலும் மருத்துவர்கள் இருப்பார்களா என்ற பயமும் சேர்ந்து கொள்ளத்தொடங்கியது. ஊரில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க உதவிக்கு யாரையும் கூப்பிட நேரம் இல்லாமல் தன் மனைவியை தன் சைக்கிளில் வைத்து அழைத்து செல்ல தொடங்கியிருக்கிறார்.
மழை வேறு வரத் தயாராக, மாலையில் ரேடியோவில் மதுரையில் எங்கோ நடந்த பயங்கர கலவரம் கேட்ட ஞாபகம் வேறு வந்து அவருக்கு வேதனையை இன்னும் கூட்டியிருக்கிறது. இருந்தாலும் மனம் தளராமல் சைக்கிளை மெதுவாக உருட்டிக் கொண்டு செல்லத்தொடங்கியிருக்கிறார்.
அந்நேரத்தில் அவரது உறவினர் ஒருவர் யேதச்சையாக வெளியில் தலைகாட்ட, யோசிக்காமல் அவரும் துணைக்கு வரத்தொடங்கினார். ஆங்காங்கே நடந்த கலவரம் தன் அடையாளத்தை வீதியெங்கும் விட்டு சென்றிருக்க அதை கண்டதும் பயம் இருட்டை விட வேகமாக அவருக்கு சூழத்தொடங்கியது. எப்படியோ தாக்குபிடித்து மருத்துவமனையில் சேர்த்த போது நினைத்த மாதிரியே மருத்துவர்கள் யாரும் இல்லை. ஆவேசமாகி அவரும், அவரது நண்பரும் கோபப்பட்டு கத்த ஆரம்பிக்க மருத்துவரை அழைத்து வர ஊழியர் ஒருவர் ஓடி இருக்குறார்.
இரவு கழிந்து அடுத்த நாளும்(2ஆம் தேதி) வந்து விட்டது. மூன்றாவது நாளாக ‘பந்த்’ தொடர்ந்தது. மருத்துவரும் ‘பந்த்’யை பொருட்படுத்தாது விடியற்காலை நேரத்தில் வந்திருக்கிறார். இதே நேரம் ஊரில அனைவருக்கும் விசயம் அறிந்து அனைவரும் மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
ஊரே மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்க, அவர் நிலை கொள்ளாமல் ஆப்ரேசன் தியேட்டர் வெளியே இருக்க.... கடைசியில் வெளியே வந்த மருத்துவர் “ஆண் குழந்தை பிறந்திருக்கிறது” என்ற படி கை கொடுத்து சென்றிருக்கிறார்.
உள்ளே சென்ற இவர் தன் கையில் அந்த குழந்தையை எடுத்து கண்ணீருடன் என்ன பெயர் வைக்கலாம் என தன் மனைவிடம் கேட்ட போது...
வெளியே இருந்த ஊர் மக்கள் ஒரே கோஷமாக விண்ணை பிளக்க உற்சாகத்துடன் “இவன் ஆதவன்...இவன் ஆதவன்...” கத்தினர். குழந்தையும் சிரித்தது. சிரிப்பும் அதை ஆமோதித்ததை போல “நான் ஆதவன்” என அவருக்கு உணர்த்தியது.
(இதிலுள்ள ’பந்தை’ கிராபிக்ஸிலோ அல்லது வேறு சாப்ட்வேர் மூலமாகவோ எடுத்துப் பார்க்க கூடாது என்று கடுமையாக உங்கள் காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்)
டிஸ்கி: ”அப்ப சூப்பரா இருக்கயே இப்ப ஏன் கண்றாவியா இருக்க?”ன்ற மாதிரி வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும் என கம்பெனியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஊரே மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்க, அவர் நிலை கொள்ளாமல் ஆப்ரேசன் தியேட்டர் வெளியே இருக்க.... கடைசியில் வெளியே வந்த மருத்துவர் “ஆண் குழந்தை பிறந்திருக்கிறது” என்ற படி கை கொடுத்து சென்றிருக்கிறார்.
உள்ளே சென்ற இவர் தன் கையில் அந்த குழந்தையை எடுத்து கண்ணீருடன் என்ன பெயர் வைக்கலாம் என தன் மனைவிடம் கேட்ட போது...
வெளியே இருந்த ஊர் மக்கள் ஒரே கோஷமாக விண்ணை பிளக்க உற்சாகத்துடன் “இவன் ஆதவன்...இவன் ஆதவன்...” கத்தினர். குழந்தையும் சிரித்தது. சிரிப்பும் அதை ஆமோதித்ததை போல “நான் ஆதவன்” என அவருக்கு உணர்த்தியது.
(இதிலுள்ள ’பந்தை’ கிராபிக்ஸிலோ அல்லது வேறு சாப்ட்வேர் மூலமாகவோ எடுத்துப் பார்க்க கூடாது என்று கடுமையாக உங்கள் காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்)















