கலக்கும் பதிவர்கள் - பஞ்சாமிர்தம்

தொடர்ச்சியாக பல பதிவர்கள் அச்சு ஊடகங்களில் தங்கள் பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அடுத்ததாக அய்யனாரும் இதில் தன் பங்களிப்பை கொடுத்துள்ளார். அவருடைய மூன்று புத்தங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவர இருக்கின்றன. அவருக்கு என் வாழ்த்துகள். விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.

பழைய கிசுகிசு: பதிவர் மாதவராஜ் பல பதிவர்களின் சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து “கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)” மற்றும் “மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)” என இரண்டு புத்தகங்களாக வம்சி புக்ஸ் மூலமாக வெளியிடுகிறார். இதில் பல பதிவர்களின் கவிதைகளும், கதைகளும் வருகிறதாம். இடம்பெறும் அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுக்களும் :)
--------------------------------------------------------------------------------------------------------------
மனோனரமா நியூஸ் சேனலில் இந்த வருடத்தின் அரசியல் காமெடிகள் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி வந்தது. சேட்டன் பரிந்துரைசெய்து பார்க்கச் சொன்னார். கேரள சுதாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீமதி ஒரு மருத்துவகல்லூரி விழாவிற்கு சென்ற போது பேசிய ஆங்கில உரையின் தொகுப்பை வெளியிட்டுருந்தார்கள்.பார்க்க வெடிச்சிரிப்பாக இருந்தது அந்த உரை. அவருக்கு ஆங்கிலம் வரவில்லை. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருந்தார். சேட்டன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். எனக்கு பாவமாக போய்விட்டது.“சிரிக்க வேண்டாம் சேட்டா” என்ற போது, அந்த நிகழ்ச்சி கேரளத்தில் ஒரு மருத்துவ கல்லூரியில் நடப்பதாகவும், மலையாளத்திலேயே பேசலாம் என்றாலும் அமைச்சர் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசினார் என்றும் கூறினார். “இருந்தாலும்...” இழுத்த போது அந்த அமைச்சரைப் பற்றி ஒரு விசயம் கூறினார் சேட்டன்.


அமைச்சர் ஸ்ரீமதி 2006ல தான் மந்திரி பதவி ஏற்றதும் தன் மருமகளை தனக்கு சமையல்காரியாக அரசாங்க உத்தியோகத்தில் அமர்த்தினாராம். என்னது தன் மருமகளையா? என அதிர்ச்சியடைய வேண்டாம். பின்பு ஒரு வருடம் கழித்து 2007ல ஒரேடியாக கெஜட்டட் ஆபிஸராக( gazetted officer-தமிழ்ல என்ன?) பதவி உயர்வு கொடுத்திருக்காங்க இந்த அம்மா. ஏற்கனவே அந்த பதவியில இருந்தது இந்த அம்மாவோட உறவினர் தானாம். விசயம் பெரிசாகி எதிர்கட்சியில் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம். ஆனா இப்ப அந்த மருமகளை வேலைய விட்டு தூக்கினாலும், ரெண்டு வருசம் வேலை பார்த்ததால பென்சன் பணம் கண்டிப்பா வருமாம். என்ன கொடுமை சார் இது? 


அப்புறம் இன்னொன்னு காமெடியும் சொன்னாங்க கேரளத்தின் உள்துறை அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான கொடியூர் பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போலீஸ் துறையில் தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட புதியதுறையை தொடஙகி வைக்கவந்தபோது எழுதினது :)


 யாரையும் எங்கேயும் ஆங்கிலத்தில பேசச்சொல்லி கட்டாயப்படுத்தல. நாடாளுமன்றத்திலேயே நம்ம எம்பிக்கள் ஆங்கிலம் தெரியலைன்னா தமிழ்ல தான் பேசுறாங்க. இல்லைன்னா மொழி பெயர்ப்பாளர் வச்சுகிறாங்க.
--------------------------------------------------------------------------------------------------------------
”என் பெயர் ராமேஷேசன்” படிச்சதிலிருந்து ஆதவன் மேல கொஞ்சம் பித்து பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு. அவரோட சிறுகதைகளோட(அநேகமா மொத்த சிறுகதைகளும்) தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுயிருக்கு.  ஆர். வெங்கடேஷ் என்பவர் தொகுத்திருக்கார்.தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளாக பல கதைகளை உள்ளடக்கியது இந்த தொகுப்பு.

மொத்தம் 800 பக்கங்கள். இதுவரை பகுதிக்கும் மேல் முடித்தாயிற்று. ஒவ்வொரு மத்திய தர , அல்லது அதற்கும் மேலே உள்ள மனிதனின் பிரச்சனைகளையும், உள்ளக்குமுறல்களையும், விருப்பு வெறுப்புகளையும், அவரின் வாழ்க்கைக்கான உண்மையான சுயதேடல்களையும், தன் இரத்த பந்தங்களிடையே  கூட இடும் மூகமூடித்தனத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது ஒவ்வொரு சிறுகதையும். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தளத்தில் பின்னப்பட்டிருந்தாலும் ஒரேவிதமான பாதிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்த தவறவில்லை.முழுதும் படித்து முடித்த பின் சற்றே விரிவாக காணலாம்
---------------------------------------------------------------------------------------------------------------
”அவதார்-3டி” ஒருவழியா போன வாரம் பார்த்துட்டேன். நிறைய விமர்சனம் படிச்சிருப்பீங்க.  சின்ன சின்ன விசயங்களை பார்த்து பார்த்து பண்ணினவங்க கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தாம விட்டுட்டாங்க. 2.45 மணி நேரம். கொட்டாவி வந்திடுச்சு. இருந்தாலும் சில விசயங்கள் பாராட்டாம இருக்க முடியல. குழந்தைங்களோட 3டியில் கண்டிப்பா பார்க்கலாம். உலக சினிமா தொழில்நுட்பத்துல ஒரு மைல் கல் இந்த படம்.

நைட்டு பார்த்துட்டு வந்து மொட்டு வளையத்தைப் பார்த்து யோசிச்சுட்டு இருந்தப்ப ஒரு விசயம் தோணிச்சு. இதில் சொல்ல வந்த விசயத்தை கவனிக்கனும். “நாவி” என்ற வேற்று கிரக வாசிகளோட உருவ அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பார்க்கும் போது இந்தியத்தாக்கம் அதிகமா தெரியுது. கடவுள் பக்தி மற்றும் இயற்கையான விசயங்களான மரம் செடிய கூட வழிபடுறதுன்னு நிறைய விசயம் ஒத்து போச்சு. அதாவது நாம தான் உலகத்துல முதலில் தோன்றிய மனித இனம், அப்படி இன்னொரு கிரகம் இருந்ததுன்னா அதுவும் இந்தியர்கள் போலத்தான் இருக்கும்னு சொல்ல வர்ர மாதிரி இல்ல? (ஹிஹி நைட் ஷோ பார்த்துட்டு தூக்கம் வரலைன்னா எப்படி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு)
--------------------------------------------------------------------------------------------------------------
“இன்னொரு முறை ரூம்ல கால் வச்ச காலை ஒடுச்சு போட்டுருவேன்” நண்பனின் அறைக்கு சென்றபோது இதை கேட்டு ஜர்க்கானேன்.

நண்பன் ஒருவன் வேறொரு நண்பனை திட்டிகொண்டிருந்தான். “என்ன மச்சி ஆச்சு?”என்றேன்

திட்டு வாங்கியவன் “டாய்லெட்டிலிருந்து வர்ரதுக்கு ஒரு அரைமணி நேரம் ஆச்சுடா. அதுக்கு போய் திட்டுறான்” என்றான்

திட்டியவன் “எதுக்கு லேட்டாச்சுன்னு கேளுடா”

திட்டு வாங்கியவன் “காலையில பேப்பர் படிச்சாதான் எனக்கு கக்கா வரும். அதுனால லேட்டாச்சுடா”என்றான். நான் அவன் பக்கம் திரும்பினேன்

“பேப்பர் படிச்சது குத்தமாய்யா” என்றேன்

திட்டியவன் “அதெல்லாம் குத்தமில்ல... “ஈ-பேப்பர்” படிச்சா குத்தமா இல்லையா? அதுவும் என் லேப்டாப்ல” என்றான் கோவம் மாறாமல்.

ங்கொய்யால.....
--------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

29 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆனா இப்ப அந்த மருமகளை வேலைய விட்டு தூக்கினாலும், ரெண்டு வருசம் வேலை பார்த்ததால பென்சன் பணம் கண்டிப்பா வருமாம். என்ன கொடுமை சார் இது? //

இந்த‌ டீல் நல்லாருக்கே

க‌ரிச‌ல்கார‌ன் said...

//திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போலீஸ் துறையில் தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட புதியதுறையை தொடஙகி வைக்கவந்தபோது எழுதினது :)//

எங்க‌ போனாலும் ஓட்டு (POLL ice) ஞாப‌க‌மாவே இருப்பாரு போலிருக்கு

க‌ரிச‌ல்கார‌ன் said...

//“அதெல்லாம் குத்தமில்ல... “ஈ-பேப்பர்” படிச்சா குத்தமா இல்லையா? அதுவும் என் லேப்டாப்ல” என்றான் கோவம் மாறாமல்.//

டெக்னால‌ஜி வ‌ள‌ருதுல்ல‌ ப‌ய‌ன்ப‌டுத்த வேண்டாமா? கொஞ்ச‌ம் அறிவாளியா இருந்தா உங்க‌ளுக்கு பொறுக்காதே

சென்ஷி said...

//“அதெல்லாம் குத்தமில்ல... “ஈ-பேப்பர்” படிச்சா குத்தமா இல்லையா? அதுவும் என் லேப்டாப்ல” என்றான் கோவம் மாறாமல்.//

ஹா ஹா ஹா.. சிரிச்சு முடியலையடா.. தம்பி முடியலை :)

சே.குமார் said...

//“பேப்பர் படிச்சது குத்தமாய்யா” என்றேன்

திட்டியவன் “அதெல்லாம் குத்தமில்ல... “ஈ-பேப்பர்” படிச்சா குத்தமா இல்லையா? அதுவும் என் லேப்டாப்ல” என்றான் கோவம் மாறாமல்.

ங்கொய்யால.....//

நல்லாருக்கு

சென்ஷி said...

gazetted officer-தமிழ்ல என்ன?

........ பச்சை இங்க் பார்ட்டின்னு நாங்க சொல்லுவோம்

குசும்பன் said...

//அய்யனாரும் இதில் தன் பங்களிப்பை கொடுத்துள்ளார். //

தலைப்பில் ஒரு வார்த்தை மிஸ்ஸிங்

வயிற்றை கலக்கும் பதிவர்கள் என்று இருந்திருக்கனும்:)

கார்த்திகைப் பாண்டியன் said...

தோழர் மாதவராஜ் தொகுப்பில் என்னுடைய பதிவும் வருகிறத நண்பா..:-)))

***********

எனக்கு விடீயோ தெரியலப்பா..

***********

எஸ்ராவுக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஆதவன் நண்பா..

***********

நாவிக்கு அடிப்படை சிவபெருமானின் உருவ அமைப்புதானாம்..

:-))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கலக்கல் பஞ்சாமிர்தம்..! நன்று..!

கண்ணா.. said...

//ஆனா இப்ப அந்த மருமகளை வேலைய விட்டு தூக்கினாலும், ரெண்டு வருசம் வேலை பார்த்ததால பென்சன் பணம் கண்டிப்பா வருமாம். என்ன கொடுமை சார் இது? //

என்ன இருந்தாலும் மல்லுன்னா மல்லுதான்....

எப்பூடில்லாம் யோசிக்குறாய்ங்க...........

பின்னோக்கி said...

சிரிப்பு. லேப்டாப். கேரளா அமைச்சர். அனைத்தும் அருமை. அவதார்ல ஹீரோ நாமம் போட்டுருக்காருன்னு விமர்சனத்தில படிச்சேன்

pappu said...

மோளே, நமக்கு மலையாளம் மதி.
மதியோ?
ஞான் போய் வெண்டக்காய் கறி....
////
ஹி.. ஹி... ஊர்வசி பிச்சிருக்காங்க!

ஈ பேப்பரெல்லா கொல கொழுப்புங்க!

ஆயில்யன் said...

//“ஈ-பேப்பர்” படிச்சா குத்தமா இல்லையா? அதுவும் என் லேப்டாப்ல” என்றான் கோவம் மாறாமல்//

நொம்ப்ப்ப தப்பு :))))))))))))))

கலையரசன் said...

நம்ம ஜி.கே. வுக்கு தகுந்த மேட்டர் ஒன்னும் பதிவுல இல்லையே! கலக்குமுன்னு தலைப்புல போட்டது.. எனக்கு வவுத்த கலக்குது...

கடைசியா எழுதியிருக்குறது.. நானும் சென்ஷியும் பேசிகிட்ட மாதிரி இருக்கு??? ஆனா லேப் டாப்புக்கு பதில் இ71 மொபைல் போன்!!

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹ ஆதவா பின்னிட்ட போ... சேச்சியோட ஆங்கிலம் ரொம்ப டாப்பு...
ஈ பேப்பரும் படிச்சாலும் தப்பில்லப்பா. ஆனா ஈ உக்கார்ற இடத்துலப்போய் படிச்சதுதான் தப்பு... :-)

வினோத்கெளதம் said...

எல்லாமே கலக்கல்..ஆதவன் புத்தகத்தை நான் தள்ளிட்டு போகலாம்னு பார்த்தேன் ..நீ முந்திக்கிட்ட..;)

butterfly Surya said...

பஞ்சாமிர்தம்..அருமை.

அய்யனாருக்கு வாழ்த்துகள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

யோவ் தேவுடு செம காமெடி போ.
ஆமாம் அந்த ஆதவன் புத்தகம் நீ தான் வச்சிருக்கியா?ரைட்டு
அதை முடிச்சதும் என்கிட்ட தரணும்.கலை நாதாரி நிமிஷமா லவட்டிகிட்டு போச்சு எதோ உடனே படிக்கிரா மாதிரி,அப்புறம் இன்னும் சில சிறுகதை தொகுப்பு உள்ளது அதை வாங்கிக்கோ.
வாக்குகளித்துவிட்டேன்

கலகலப்ரியா said...

:))))

சின்ன அம்மிணி said...

சேட்டன்மார்களும் சேச்சிமார்களும் நல்லாவே சிரிக்க வைக்கறாங்க :)
ஆங்கிலம் தெரியாட்டி பேசாம மலையாளத்திலையே எழுதலாம் . சம்சாரிக்கலாமே :)

☀நான் ஆதவன்☀ said...

@கரிசல்காரன்

வாங்க கரிசல்காரன்.
//கொஞ்ச‌ம் அறிவாளியா இருந்தா உங்க‌ளுக்கு பொறுக்காதே// அவ்வ்வ்வ்வ்வ் :))
--------------------------------------
@சென்ஷி

பச்சை இங்க் பார்ட்டி? ஹி ஹி இதுவும் நல்லா தான் இருக்கு
--------------------------------------
நன்றி சே குமார் :)
--------------------------------------
@குசும்பன்

அய்யனார்கிட்ட சொல்லி உங்களுக்கு மூனு புக்கையும் இலவசமா தரச்சொல்றேன். அப்ப தெரியும் உங்களுக்கு :)
--------------------------------------
@கார்த்திகைப் பாண்டியன்

வாழ்த்துகள் நண்பா. தொடர்ந்து கலக்குங்கள் :)
--------------------------------------
@உண்மைதமிழன்

வாங்கண்ணே. பாராட்டுக்கு நன்றி :)
--------------------------------------
@கண்ணா

வாங்க கண்ணா. அவங்க அளவுக்கெல்லாம் நாம யோசிக்க முடியுமா?
--------------------------------------
@பின்னோக்கி

வாங்க பின்னோக்கி. நன்றி :)
--------------------------------------
@பப்பு

பப்பு அந்த படம் “அச்சுவிண்டே அம்மா”. கலக்கல் படம். ஊர்வசி நடிப்புக்காகவே பார்க்கலாம் :)

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்யன்

வாங்க பாஸ். நன்றி :)
-------------------------------------
@ கலையரசன்

//கடைசியா எழுதியிருக்குறது.. நானும் சென்ஷியும் பேசிகிட்ட மாதிரி இருக்கு??? ஆனா லேப் டாப்புக்கு பதில் இ71 மொபைல் போன்!//

ங்கொய்யால......இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல?
-------------------------------------
@நாஞ்சில் பிரதாப்

வா மச்சி. ”ஈ” :))) நன்றி :)
-------------------------------------
@ வினோத்

நாங்கெல்லாம் ஆரு... :) படிச்சுட்டு கொடுக்கிறேன் மச்சி
-------------------------------------
@சூர்யா

வாங்க சூர்யா. மிக்க நன்றி :)
-------------------------------------
@கார்த்திகேயன்

இந்த புத்தகத்தை முடிச்சுட்டு வந்து வாங்கிக்கிறேன் தேவுடு. ரொம்ப நன்றி :)
-------------------------------------
@கலகலப்ரியா

நன்றி ப்ரியா :)
-------------------------------------
@சின்ன அம்மணி

அவங்கிட்ட சிரிக்க நிறைய விசயம் இருக்கு சின்ன அம்மணி. அதையெல்லாம் போடலாம்னு பார்த்தா நம்மகிட்டயும் நிறைய இருக்குறதால கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியதா இருக்கே :)

ஸ்ரீமதி said...

பதிவு அருமை. :)) வீடியோ தெரியல.. :(((((((((((((((((

கிரி said...

சேட்டிக்கு (சேட்டன் எதிர் பதம்) இது தேவையா!

☀நான் ஆதவன்☀ said...

@ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீமதி. வீட்டுக்கு போய் பாரு நல்ல காமெடியா இருக்கும் :)
------------------------------------
@கிரி

அவ்வ்வ்வ் அது சேச்சி இல்ல கிரி? :) நன்றி

ஹாலிவுட் பாலா said...

ங்கொக்கமக்கா.. நான் கூட நல்லா இங்கிலிபீஜு பேசுவேன் போலக்கீதே..!

சேச்சி.. பட்டைய கிளப்புது!!! :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))) நிறைய கேரளா நியூஸாவே இருக்கு பாஸ்

ஏதாச்சும் நல்ல விஷயமுண்டா இந்த புத்தாண்டுல ;)

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஈபேப்பர் :))))))))))

ஜெகநாதன் said...

//ரெண்டு வருசம் வேலை பார்த்ததால பென்சன் பணம் கண்டிப்பா வருமாம். என்ன கொடுமை சார் இது? //
ஹிஹி.. தகவலுக்கு நன்றி!!!!
* * *
”என் பெயர் ராமேஷேசன்” - நான் உயிர்​மை பதிப்பத்தில வாங்கி​னேன்???
* * *
பதிவர் மாதவராஜ் பத்தி நம்ம அண்ணாத்​தே ​வேற அடிக்கடி உறுமிக்கிட்​டே இருக்காரு..! பதிவர் மாதவராஜ் பிளாக் அட்ரஸ் ​கொடுக்கவும். நன்றி.

அய்யனார் said...

நன்றி ஆதவன்.

Related Posts with Thumbnails