ஊருவிட்டு ஊரு வந்து....

ஒரே வயதொத்த(?) பதிவர்களுடனும், அனைத்து பதிவர்களுடனும் என இரு தினங்களாக  நடைபெற்ற பதிவர் சந்திப்பை முடித்துவிட்டு நேற்று என் அறைக்கு திரும்பாமல் நண்பனை காணச் சென்றிருந்தேன். பதிவுலகம் அறியாத என் சென்னை நண்பர்களின் அறை அது. அலுப்பும் உடல் வலியோடு அந்த அறைக்கு சென்றால் அங்கே நடக்கும் பேச்சுக்களும், அரட்டைகளும் அனைத்தையும் மறக்கச் செய்யும்.  ஆனால் நேற்று நடந்ததோ வேறு!

படுக்கை அறையில் தலையை தலையணையில் புதைத்து கூனிக்கொண்டு படுத்திருந்தான் தணிகைவேலன்.நெற்றியில் விபூதி பட்டையை இட்டுருந்தான். அவனை அந்த கோலத்தில் பார்க்க சற்று சிரிப்பாக இருந்தாலும் சூழ்நிலை அவனுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக காட்டவே படுக்கை அறையை விட்டு வெளியே வந்தேன்.

விஷயம் ஏதுமறியாமல் சாதாரணமாக நினைத்து வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்றுமில்லாமல் அன்று நண்பனின் அறை சூன்யம் பிடித்தது போல் இருந்தது. அருகில் அமர்ந்து தொலைக்காட்சியில் கண்களை மட்டும் செலுத்தியிருந்த பிரபு கூட ஏதும் சொல்லாமல் இருந்தான்.

“என்னடா ஆச்சு. ஏன் எல்லாம் உம்முன்னு இருக்கீங்க? அவன் என்னடான்னா அப்படி சுருண்டு படுத்திருக்கான்? என்னாச்சு எல்லாருக்கும்?” என்றேன்.

பிரபு பாலாஜியைப் பார்க்க, பாலாஜி ஒன்றும் சொல்லாமல் தலையை கவிழ்ந்து கொண்டான். ஏற்கனவே அசதியில் இருந்த எனக்கு இவர்களின் செயல் கோபத்தையே வரவழைத்தது. என் கோபத்தின் விளைவு அனைவருக்கும் தெரியுமாததால் பிரபு தான் மெல்ல ஆரம்பித்தான்.

“இல்ல...வந்து. இன்னைக்கு....” பிரபு

“டேய் சும்மா இரு. ஒன்னுமில்ல சூர்யா. அப்புறமா சொல்றேன்” என்றான் பாலாஜி.

“இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?” நான்

“இல்லைடா இன்னைக்கு தணிகை ரொம்ப நச்சரிச்சான் அதான் நாங்க மூனு பேரும் அங்க போனோம்டா”  பிரபு

“அங்கன்னா....... எங்க?” சந்தேகம் வர ஆரம்பித்தது.

“அங்க தான். நாங்க மூனு பேரு தான். உன்கிட்ட சொல்ல வேணாம்னு நினைச்சோம். ஆனா.....”

நாற்காலியை பின்னால் தள்ளி விருட்டென எழுந்தேன். சந்தேகம் சரி தான்.

“!@#$%.. அப்புறம் எதுனா சொல்ல போறேன். அசிங்கமா இல்லைடா உங்களுக்கு?”

“இல்லடா தணிகை ரொம்ப வற்புறுத்தினான். ஆசைய அடக்கமுடியலைன்னு ஏதேதோ சொல்லி எங்க மனசையும் கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டான். யோசிக்காம போயிட்டோம்டா. ஏதேதோ நடந்து போச்சு மச்சி. இப்ப தணிகை போன தடவை போல பயந்து படுத்திருக்கான். ” தலையில் அடித்துக்கொண்டான் பிரபு.

” ம*று அன்னைக்கு தான் அங்க எல்லாம் போக மாட்டோம்னு சாமி படம் முன்ன சத்யம் பண்ணீங்க?  போன தடவை போயிட்டு வந்தப்பவே ரொம்ப பயந்து போய் ஒரு மாசம் வரை எப்படி இருந்தீங்கன்னு ஞாபகம் இல்லையா? அதுக்குள்ள என்னடா அவசரம் உங்களுக்கு? நம்பள நம்பி தானே நம்ப வீட்ல இங்க அனுப்பியிருக்காங்க. நமக்கு ஏதாவது ஏடாகூடமா ஆகிப்போச்சுன்னா அவங்க நிலைமைய நினைச்சுப் பார்த்தயா?”

“ஸாரிடா.. சத்தியமா இனிமே இந்த தப்பு பண்ண மாட்டோம்டா. அந்த போன் நம்பரை கூட டெலிட் பண்ணிட்டோம். வேணும்னா செக் பண்ணி பாரு. ஆனா தணிகைக்கு மட்டும் கொஞ்சம் தைரியம் சொல்லு. அவனுக்கு.......”

“அவனுக்கு....? அவனுக்கு என்ன?”

“அவனுக்கு ஸேப்ட்டிக்காக கொடுத்ததை அவன் யூஸ் பண்ணல. போயிட்டு வந்து இப்ப  பயப்பட்டுகிட்டு இருக்கான். பாவம் கண்டதை நினைச்சு கற்பனை பண்ணிட்டு இருக்கான் மச்சி. இப்ப ஆறுதலா எது சொன்னாலும் காதுல விழாத மாதிரியே இருக்கான். பயமா இருக்குடா” பாலாஜி.

“அடப்பாவிகளா! அதான் டிவியில பத்திரிக்கையில, நெட்லன்னு எத்தனை விழிப்புணர்வை படிக்கிறீங்க? அப்படி இருந்துமாடா? எத்தனை முறைடா உங்களுக்கு சொல்றது? நாடு விட்டு நாடு பொழைக்க வந்த இடத்துல கையையும் காலையும் வச்சுட்டு சும்மா இருக்க முடியலல்ல உங்களுக்கு? ஒழுங்கா ஊரு போய் சேருற ஐடியா எல்லாம் இல்ல போல. உங்க அம்மா அப்பாவுக்கெல்லாம் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டபடுவாங்க” என்றேன்.

“யோக்கியன் மாதிரி பேசாதடா. நீ தானே அந்த நம்பர கொடுத்ததே. இப்ப நடக்க வேண்டியதைப் பத்தி மட்டும் பேசு. தணிகை ரொம்ப பயந்து போயிருக்கான். எப்ப என்ன பண்றதுன்னு மட்டும் சொல்லு” பாலாஜி

“ஓ நம்பர் கொடுத்தா எல்லாத்துக்கும் காரணம் நான் ஆகிடுவேன்னா? நீங்கெல்லாம் கேட்டதால தானே நான் என் இன்னொரு நண்பன் கிட்ட இருந்து வாங்கி கொடுத்தேன். உங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சா தான் சரிப்பட்டு வரும்” என்மீதே பழி வந்த போது கொஞ்சம் அதிர்ச்சியடைந்து தான் போனேன். இருந்தாலும் அந்த சூழ்நிலையின் கைதியாகி அவர்களின் குற்ற உணர்ச்சிக்கு ஆறுதலாக இருந்திருக்கலாம் தான். ஆனால் அது முடிவாகாது. தீயை அணைக்காமல் கங்காக இருக்க விடுவது அடுத்து தீயை மூட்ட வசதியாகவும் இருக்கலாம்.

”சரி இப்ப என்ன செய்யனும்னு சொல்லு மச்சி? அவனை கூட்டுட்டு ஆஸ்பிட்டல் போகலாமா?”

“டாக்டர்கிட்ட  என்னென்னு சொல்லுவ?” கேலிப்புன்னகையை உதிர்த்தேன்.

“உண்மைய தான். அவர்கிட்ட பொய் சொல்லி என்னாகப்போகுது?” பிரபு கூறியதும் உண்மை தான்.

ணிகை படுத்திருக்கும் கட்டிலில் அமர்ந்து அவன் மெதுவாக எழுப்பினேன். மெதுவாக திரும்பினான். அழுதிருப்பான் போல. அவனை அந்த கோலத்தில் பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது. அடக்கிக்கொண்டேன்.

“அப்படி என்னடா ஆசை. கொஞ்சம் பொறுத்திருக்க கூடாதா? இல்ல ஸேப்டியா இருந்திருக்கலாம்ல”

“ஸாரி மச்சி. உன்னையயும் கூட்டுட்டு போயிருந்தா இப்படி நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.” தணிகை

“அடிங்க.... இதுல நான் வேறயா?”

“ஏன் மச்சி. அனுஷ்க்காவுக்காக ஒரு தடவை பார்க்கலாம்டா.”

“அப்படிங்கிற.........” இழுத்தேன்

” ஆமாடா. செமயா இருக்காடா. ஸேப்டிக்கு காதுல வைக்கிறதுக்கு பஞ்சை எடுத்திட்டு போக மறந்திராத?”

ம்ம் என்றபடி தலையை ஆட்டினேன்.

”ஓடு ஓடு ஓடு...................... வரான் பாரு வேட்டைகாரன்” பாலாஜியின் ரிங் டோன் அடித்தது.

54 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

ஹாஹாஹா.. இதே மாவை இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா அரைச்சுட்டு இருப்பே.. புதுசா யோசிங்க தலைவரே ;)

☀நான் ஆதவன்☀ said...

//சென்ஷி said...

ஹாஹாஹா.. இதே மாவை இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா அரைச்சுட்டு இருப்பே.. புதுசா யோசிங்க தலைவரே ;)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)

ஹுஸைனம்மா said...

அடப்பாவமே, நானும் பயந்துட்டேன், பதிவர் சந்திப்பில அழகா கும்பிட்டு வணக்கம் சொன்ன ஆதவன் அப்படித் தப்பாத் தெரியலையேன்னு கொஞ்சம் குழம்பிட்டேன். நல்லவேளை. :-)

☀நான் ஆதவன்☀ said...

//பதிவர் சந்திப்பில அழகா கும்பிட்டு வணக்கம் சொன்ன ஆதவன் அப்படித் தப்பாத் தெரியலையேன்னு//

ஹி ஹி ரொம்ப நன்றிங்க. உங்ககிட்ட சரியா பேச முடியல. நீங்க வந்ததே கடைசியில தான் தெரியும். உங்களை அறிமுகப்படுத்தியப்ப நான் வெளிய போயிருந்தேன். சந்தித்ததில ரொம்ப மகிழ்ச்சி :)

//அடப்பாவமே, நானும் பயந்துட்டேன்,//

ஹிஹி சும்மா லுலூலாயிக்கு :)

பூங்குன்றன்.வே said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)//

உங்க லாஜிக் பிடிச்சிருக்கு :)

ஷங்கி said...

இன்னொரு போட்டுத் தாக்கேய்ய்ய்ய்?!

கண்ணா.. said...

பாஸ் செத்த பாம்பையே எவ்ளோ தடவைதான் அடிக்கறது....

ஆ! இதழ்கள் said...

அந்த நம்பரு தியேட்டர் நம்பரா? ஒரு சந்தேகந்தான்.

நாஞ்சில் பிரதாப் said...

அப்படிப்போடு அருவாளை... மச்சி சேப்டி அது இதுன்னு சொன்னியே நானும் பயந்துட்டேன்...
கடைசில வாயில சீனி அள்ளி போட்டுட்ட மச்சி... விஜய் டோட்டல் டேமேஜ்...

துளசி கோபால் said...

ஹைய்யோ...:-)))))))))))))

க‌ரிச‌ல்கார‌ன் said...

//“ஓ நம்பர் கொடுத்தா எல்லாத்துக்கும் காரணம் நான் ஆகிடுவேன்னா? நீங்கெல்லாம் கேட்டதால தானே நான் என் இன்னொரு நண்பன் கிட்ட இருந்து வாங்கி கொடுத்தேன்//

ஒரு ப‌க்க‌ம் ந‌ம்ப‌ரும் கொடுத்துட்டு இன்னொரு நண்பன் கிட்ட இருந்து வாங்கி கொடுத்தேன் ச‌ப்ப‌க் க‌ட்டு வேற‌ நேர்மையா இருங்க‌ப்பா

முத‌ல் நாளே பாத்துட்டு "யாம் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்"னு பெருந்த‌ன்மையாதானே ந‌ம்ப‌ர் குடுத்தீங்க‌

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நாஞ்சில் பிரதாப் said...
அப்படிப்போடு அருவாளை... மச்சி சேப்டி அது இதுன்னு சொன்னியே நானும் பயந்துட்டேன்...//

அங்க‌ தான் ட்விஸ்ட் வ‌ச்சிருக்காரு

கணேஷ் said...

:(

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

” ஆமாடா. செமயா இருக்காடா. ஸேப்டிக்கு காதுல வைக்கிறதுக்கு பஞ்சை எடுத்திட்டு போக மறந்திராத?”

ம்ம் நான் எப்போவுமே அதுகளை ம்யூட் வச்சித்தான் பாத்து சிரிப்பேன் தம்பி.
ஃபார்மாலிட்ட்டியாச்சுப்பா

KVR said...

//அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)
//

பதிவை விட இது சூப்பர் :-)

கானா பிரபா said...

ஸ்ஸ்ஸ்சப்பப்பப்பாஆஆஆ(கவுண்டர் பாணியில்)

கலகலப்ரியா said...

=))))))).. அச்சோ அச்சோ... படுபாவிங்களா இப்டி எல்லாமா யோசிக்கிறாய்ங்க... பாவம் விசய் அண்ணாச்சி... =))

கலையரசன் said...

“!@#$%.. அப்புறம் எதுனா சொல்ல போறேன். அசிங்கமா இல்லைடா உனக்கு?”

- நன்றி "நான் ஆதவன்"

மின்னுது மின்னல் said...

:)))
:))))))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ரைட்டு...
சீக்ரம் போட்டு வாங்க.
வந்துடுவீங்களா?????

ஜீவன்பென்னி said...

கொலகாரப்பயலுக!

படத்துக்கு போறவங்க பொழைக்குறது ரொம்ப கஷ்டம் போல.

☀நான் ஆதவன்☀ said...

@பூங்குன்றன்.வே

நன்றி பூங்குன்றன் :)
-------------------------------------
@ஷங்கி

நன்றி ஷங்கி
-------------------------------------
@கண்ணா

திரும்ப திரும்ப கொத்த வருதே கண்ணா :)
-------------------------------------
@ஆ!இதழ்கள்

அவ்வ்வ்வ்வ் தியேட்டர் நம்பர் தானுங்க அது. :)
-------------------------------------
@பிரதாப்

வா பிரதாப்பு :) நன்றி
-------------------------------------
@துளசி டீச்சர்

வாங்க டீச்சர். சிரிப்பானுக்கு நன்றி :)

ஆயில்யன் said...

:))))))))))))))


////அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)//

ஆஹா சூப்பரூ!

☀நான் ஆதவன்☀ said...

@கரிசல்காரன்

கரிசல்காரன் அது போன தடவை கந்தசாமி பார்க்குறதுக்காக நான் கொடுத்த நம்பர் :) நான் இன்னும் படம் பார்க்கல. நன்றி :)
--------------------------------------
@கணேஷ்

டோண்ட் ஒர்ரி கணேஷ் பீ ஹேப்பி :) உங்க விமர்சனம் நேர்மையா இருந்துச்சு
--------------------------------------
@கார்த்திகேயன்

நன்றிண்ணே :)
--------------------------------------
@KVR

நன்றி கேவிஆர் :)
--------------------------------------
@கானாபிரபா

நன்றி பாஸ். படத்தை பாருங்க இதை விட பெரிசா மூச்சு விடுவீங்க :)
--------------------------------------
@கலகலப்பிரியா

வாங்க ப்ரியா. இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியாத இடத்துல நீங்க இருக்கீங்க போல :)
--------------------------------------
@கலையரசன்

“!@#$%.. அப்புறம் எதுனா சொல்ல போறேன். அசிங்கமா இல்லைடா உனக்கு?”
--------------------------------------
@மின்னல்

நன்றி மின்னல்
---------------------------------------
@பாலா

இன்னும் பார்க்கல பாலா. இனியும் தியேட்டர்ல பார்ப்பேன்னான்னு தெரியல :)
---------------------------------------
@சமீர்

ஆமா சமீர். உசார் :)

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

வாங்க பாஸ். நீங்க இன்னும் படம் பார்க்கலையா?

ஜெஸிலா said...

எல்லாரும் உம்முன்னு இருக்காங்கன்னு சொன்ன மாத்திரத்திலேயே புரிஞ்சிப் போச்சே, இந்த கண்றாவியாத்தான் இருக்கும்னு. ;-). தூள்

pappu said...

அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)///

சென்ஷி கருத்தே சொல்ல வந்தாலும் இந்த பதில பார்த்து இம்ப்ரஸ் ஆயிட்டேன்..

சந்தனமுல்லை said...

:-))))

/
அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)/

சூப்பர்..பாஸ்!! :-))

நாடோடி இலக்கியன் said...

//அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)//

ஹா ஹா ஹா.

ஷாகுல் said...

யோவ்! தனியா சிரிக்க வ்வச்சிட்டீங்களே பாஸ்!

கோபிநாத் said...

டேய் அதான் முதல் நாளே பார்த்தாச்சில்ல...அப்புறம் எதுக்கு இந்த சீன் எல்லாம் ஓவரு டா..;)))

இளைய பல்லவன் said...

// pappu said...

அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)///

சென்ஷி கருத்தே சொல்ல வந்தாலும் இந்த பதில பார்த்து இம்ப்ரஸ் ஆயிட்டேன்..
//

ரிப்பீட்டு..

இரண்டாவது பாராவிலேயே முடிவைக் கண்டுபிடிச்சிட்டேன் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)// அப்ப அவங்க படத்தைக்கண்டா தியேட்டருக்கு எதிர்பக்கம் ஓடறமாதிரி உங்கபதிவுக்கும் வராம ஓடிறபோறாங்க.. பீ கேர்ஃபுல்.. ( என்னைச்சொல்லல)

வினோத்கெளதம் said...

ஹா ஹா ஹா நான் கூட வேற என்னமோ சொல்ல வரியோனு நினைத்தேன்..

ஜெஸ்வந்தி said...

சூப்பர் ஆதவன். சப்பைக் கட்டு.

Romeoboy said...

ஹா ஹா ஹா ... கலக்கல் பதிவு தலைவரே, இப்படி எல்லாம் கூட வேட்டைக்காரன் படத்தை ஓட்டலாமா ?? சிரிப்ப அடக்கமுடியவில்லை ..

seemangani said...

எல்லா பதிவுலும் வேட்டைக்காரன் தலைப்பை பார்த்ததும் ஓடி போய்டுவேன் இங்கவந்து மாட்டிகிட்டேன்...இதுதான் சொந்த காசுல சூனியம் வச்சுகுறதோ???
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்..........

Anonymous said...

yeppa mudiyala... pavamappa antha vijay... yetho theriyathanama cinemala nadika vanthutan .. viturunga.. pullai pollachu pogatum....

Anonymous said...

//அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)//

இது நல்லாருக்கு. ஆனா விஜய் படம் இப்படித்தான் இருக்கும். புதுசா எதுவும் எதிர்பாக்கக்கூடாது. அவர் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் படங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

@ஜெஸிலா

நன்றி ஜெஸிலா. முன்னாடி புரிஞ்சிடுச்சுன்னா நீங்களும் என்னைய மாதிரி புத்திசாலி தான் :)
--------------------------------------
@பப்பு

அவ்வ்வ் என்னையா இது எல்லாரும் பதிவை விட கமெண்டுக்கே கமெண்ட் பண்றீங்க :)
--------------------------------------
@சந்தமுல்லை

வாங்க பாஸ். நன்றி
--------------------------------------
@நாடோடி இலக்கியன்

நன்றி இலக்கியன் :)(என்னங்க இது வர்ரவங்க எல்லாம் கமெண்டை மட்டும் படிக்கிறீங்களா என்ன?)
--------------------------------------
@ஷாகுல்

நன்றி ஷாகுல்
--------------------------------------
@கோபிநாத்

தல நான் படத்தை இன்னும் பார்க்கல. :)
--------------------------------------
@இளைய பல்லவன்

குட். என் எல்லா பதிவையும் சிரத்தையா படிக்கிறீங்கன்னு இதுல இருந்து எனக்கு தெரியுது. ஏன்னா தொடந்து வாசிக்கிறவங்களால தான் இதை கண்டுபிடிக்க முடியும் :)
--------------------------------------
@முத்தக்கா

யூ டூ முத்தக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்
--------------------------------------
@வினோத்

நீ என்ன எதிர்பார்த்திருப்பன்னு தெரியும் ராசா :)
---------------------------------------
@ஜெஸ்வந்தி

நன்றிங்க :)
---------------------------------------
@ரோமியோ பாய்

டிசைன் டிசைனா கலாய்ப்போம்ல :)
---------------------------------------
@சீமான்கனி

ஹிஹிஹி :)
---------------------------------------
@சாத்தூர் மாக்கான்

அவரை நடிக்கிறதை நிறுத்தச் சொல்லுங்க நாங்களும் நிறுத்துறோம் :)
---------------------------------------
@சின்ன அம்மணி

வாங்க சின்ன அம்மணி. அதுவும் சரிதான். ஆனா ஓவர் பில்டப் ஏன் கொடுக்கனும்? :)

chidambararajan said...

aiiii....thanga mudiyala...vanam...aluthuruvan

தாரணி பிரியா said...

கமெண்ட் மட்டும்தான் பாஸ் படிச்சேன். எல்லாமே சூப்பர் பாஸ் :)

அதி பிரதாபன் said...

//அவங்க மட்டும் அரைச்ச மாவையே அரைச்சு படம் எடுக்கலாம். நாங்க பதிவு போடகூடாதா? :)//

அப்போ அந்த ரேஞ்சுக்குதான் உன்னையும் நினைப்பேன்... ஒழுங்கா மாத்தி எழுதுற வழியப்பாரு.

அபுஅஃப்ஸர் said...

குட் ட்விஸ்ட் தல‌

ஏதேதோ நினைக்க வெச்சிட்டீங்க, பட் இந்த டீல் எனக்கு புடிச்சிருந்தது

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ்
கலக்கிட்டீங்க
வேட்டைக்காரன்
ச்சான்ஸே இல்ல
ஆனா ஏதோ ஒரு பஞ்ச் இருக்குன்னு நெனச்சேன்
அது இதுதான்னு யூகிக்க முடியாத அளவுக்கு செஞ்சிட்டீங்க
நீங்களும் ரவுடியாகிட்டீங்க பாஸ் :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண்ணா.. said...
பாஸ் செத்த பாம்பையே எவ்ளோ தடவைதான் அடிக்கறது....


:)))))))))))))

ஜெகநாதன் said...

துரத்தித் துரத்தி வேட்டையாடப்படும் ​வேட்டைக்காரன்.

ஸ்ரீமதி said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

sree said...

mmmmmm nanum nala irukenu padichen kadaisila ipdi panitingale

angel said...

enga ippdi??????????/

Anonymous said...

i read your blog last 2 month.your blog is super. this story is very good.

Zero to Infinity said...

Bossssssssss....I think...there are two news in your latest article "ஊருவிட்டு ஊரு வந்து....

Except last 7 lines rest all are one news....

Last 7 lines is another news...

I don't know which one is true news

நட்புடன் ஜமால் said...

வேட்டைக்காரன வச்சி எம்பூட்டு பேரு தான் வேட்டையாடுரது


அடுத்து என்ன/எப்போ படமோ

பேமாக்கீதுபா

hayyram said...

நல்ல பதிவு

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

Related Posts with Thumbnails