ப்ப்ப்ப்பா.....

’பா’ - படத்தின் பெயர் போடும் விதத்திலேயே அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர். ஜெயாபச்சன் அனைவரின் பெயரையும் சொல்லி, அறிமுகம் ‘அமிதாப் பச்சன்’ என சிரித்துக் கொண்டே கூறுவது ரசிக்கமுடிகிறது. ‘அறிமுகம்’ என்பது முழுக்க முழுக்க உண்மை என்பது படத்தைப் பாத்ததும் உணர முடிகிறது.ஆரம்பகாட்சியில் அபிஷேக் கையில் விருது வாங்க Auroவாக அமிதாப் வரும் போது,  இது அழுகாச்சி படமோ என நினைத்துக் கொண்டிருக்கும் போதே தன் கிங்காங் சேட்டையை ஆரம்பித்து நம்மை கலகலப்பூட்டுகிறார். Auro அபிஷேக் மகனா? வித்யாபாலனும் அபிஷேக்கும் காதலர்களா? ஏன் பிரிந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளையும், திடீர் திருப்பங்களையும் வைக்காமல் முதல் 10 நிமிடத்தின் பாடலில் அனைத்தையும் தெளிவாக்கிவிடுவது புதுமை.

பின்பு Auro தன் அப்பா அபிஷேக் எனத் தெரிவது தான் பெரிய திருப்பமாக இருக்கும் என நினைத்தால் அதுவும் முதல் பாதியிலேயே மிகச் சாதாரண காட்சியிலேயே சொல்லப்படுகிறது. அதுவும் புதுமை. பின்பு கதை எதை நோக்கி தான் செல்கிறது? என கேள்வியை வைத்தால் மிகச்சாதாரணமான அல்லது எதிர்ப்பார்த்த இலக்கை நோக்கியே செல்கிறது.

அமிதாப் சிறுவனாக நடித்துள்ளார் என்பதை தவிர இப்படம் முழுக்க முழுக்க மசாலாப்படமே. கண்டதும் காதல், அரசியல்வாதியாக குடிசைவாசிகளுக்கு நல்லது செய்வது, கேமரா முன் வீரவசனம் பேசுவது, சிறுவன் வயதுக்கு மீறின வசனம் பேசுவது என ஒரு மசாலாப்படத்திற்கான அனைத்து அம்சங்கள் இருந்தும் படத்தை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்வது அமிதாப்.

’அமிதாப்’ அனைவரும் சொல்வது போல திரையில் இவரை பார்க்கமுடியவில்லை. அந்த ஆளுமையென்ற கிண்ணம், பன்னிரெண்டு வயது சிறுவனாக, நடை, பாவனை என நிற்கும் போது  நிரம்பித்தான் போகிறது. அதற்கு மேல் நடிக்கும் போது கிண்ணத்திலிருந்து வழிந்தோடுவது போல மனதில் எதுவும் நிற்கவில்லை. அமிதாப் தான் அந்த சிறுவன் என்ற எண்ணம் திரையில் காணும் போது வர மறுக்கிறது. ஆனால் பன்னிரெண்டு வயது சிறுவனாக அவர் பேசும் வசனங்கள், அதிலுள்ள நக்கல்கள் என எதையும் ஏற்கமுடியவில்லை. அதிகபிரசங்கிதனமாகத்தான் தோன்றுகிறது. அச்சமயத்தில்(மட்டும்) இது அமிதாப் என்கிற எண்ணம் வந்து சமாதானம் செய்கிறது :)

வித்யாபாலன். இவரை முதன் முதலில் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் இட்டு பின்பு நடிக்க தெரியவில்லை என்று மாற்றிவிட்டார்களாம். பின்பு தான் ஹிந்தி திரையுலகிற்கு சென்றிருக்கிறார். இப்படத்தை மட்டும் அவரை நிராகரித்த இயக்குனர் பார்த்தால் நிச்சயம் வருத்தப்பட வாய்ப்புண்டு. பல பக்கங்கள் பேச வேண்டியதை இவரின் முகபாவங்களும், கண்களும் நமக்கு உணர்த்துகின்றன. பக்குவப்பட்ட நடிப்பாக தோன்றுகிறது. தொய்வான பல காட்சிகளில் இவர் தூக்கி நிறுத்துகிறார்.

அபிஷேக் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு இல்லையென்றாலும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவரின் அரசியல் சார்ந்த காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன. இவ்வளவு விரிவாக அக்காட்சிகள் தேவையா என தோன்றுகிறது.

இசை & பின்னணி இசை...... சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்டு  கேட்டு அனுபவியுங்கள் :)

படம் முழுதும் கூர்மையான மற்றும் நகைச்சுவையான வசனங்கள். ஒவ்வொரு காட்சிக்கும் சிரிக்க முடிகிறது. பாரெஷ் ராவல், அருந்ததி ஆகியோரின் நடிப்பும் குறிப்பிடும்படி உள்ளது.

"The very rare Father-son Son-father story..." என்று சொல்லி அதற்குண்டான ஒரு அடர்த்தியான காட்சியமைப்புகள் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம். இரண்டு நாட்கள் தந்தையோடு வெளியே சுற்றுகிற போது வருகிற  ஒரு பாடலின் நடுவே காண்பிக்கப்படும் காட்சிகளை தவிர வேறு எந்த இடத்திலும் ஈர்ப்பு இல்லை.

ஒரு சிறுமியை வைத்து மிக எளிமையாக க்ளைமாக்ஸை முடித்திருப்பது மிக அழகு. புத்திசாலிதனமும் கூட. இயக்குனருக்கு பாராட்டுக்கள்.  க்ளைமாக்ஸ் அனைவரையும் நெகிழச் செய்யும் காட்சி. அதற்கு மிகமுக்கிய காரணம் இளையராஜா. முன்னிருக்கையில் இருந்த பெண்மணி படம் முடிந்தும் எழுந்து வர மனமில்லாமல் அழுதுகொண்டே இருந்தார்.

படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

டிஸ்கி: எவன்யா இது “பெஞ்சமின் பட்டன்” கதைன்னு சொன்னது? போஸ்டர் பார்த்து கதை சொல்ற க்ரூப்பா இருக்குமோ? அதுக்கும் இதுக்கும் அணு அளவு கூட சம்பந்தம் கிடையாது.

31 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஷாகுல் said...

பாத்தாச்சா?

அப்போ டோரண்ட்ல ரிலீசான உடனே பாத்துற வேண்டியதுதான்.

க.பாலாசி said...

ரைட்டு நல்ல விமர்சனம்...

சென்ஷி said...

படத்துல இம்புட்டு ப் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது

ஆயில்யன் said...

நல்லா திருப்தியா படம் பார்த்து பார்க்க சொல்லிட்டீங்க பார்த்துடுவோம்! :)//சென்ஷி said...

படத்துல இம்புட்டு ப் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது//


:)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஒரு படம் விடுவது கிடையாதா?
அதுத்த வாரம் புலி உறுமபோகுது!, எப்படி வசதி?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ரெண்டு நாளா இங்க டிக்கெட் கிடைகல, சரின்னு டோரன்ட் டவுன்லோட் போட்டாச்சு.

வினோத்கெளதம் said...

பார்த்துட வேண்டியது தான்..

கலையரசன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்மா... எப்ப எடுப்பாங்களாம்?

//வினோத்கெளதம் said...
பார்த்துட வேண்டியது தான்..//

ஆமா.. ஆமா.. பார்த்துட்டுதான் மறுவேளை பாப்பாரு!!

சந்தனமுல்லை said...

பாஸ்..நல்ல விமர்சனம்..தங்கள் பார்வையும், கானாவின் விமர்சனமும் படத்தை பார்க்கத் தூண்டுகிறது!!

தேவன் மாயம் said...

நல்ல விமர்சனம்...பாத்துற வேண்டியதுதான்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அருமையான இடுகை மற்றும் விமர்சனம் ஆதவன். மிகவும் ரசித்தேன். படத்தைப் பார்க்க வேண்டும்.

//கலையரசன் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்மா... எப்ப எடுப்பாங்களாம்?

//வினோத்கெளதம் said...
பார்த்துட வேண்டியது தான்..//

ஆமா.. ஆமா.. பார்த்துட்டுதான் மறுவேளை பாப்பாரு!!//

கலையோட குசும்புக்கு அளவே கிடையாது :))

கோபிநாத் said...

ஆதவா உன்னோட பார்வையில் நல்லாயிருக்கு விமர்சனம்.

\\இவரை முதன் முதலில் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் இட்டு பின்பு நடிக்க தெரியவில்லை என்று மாற்றிவிட்டார்களாம்\\

படம் பெயர் மனசெல்லாம்...வித்யாவுக்கு பதில் த்ரிஷா நடிச்சிருப்பாங்க..ஸ்ரீகாந்த் நாயகன்.

\\"The very rare Father-son Son-father story..." என்று சொல்லி அதற்குண்டான ஒரு அடர்த்தியான காட்சியமைப்புகள் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம்\\

;))) செல்லம்...அப்போ என்ன செய்யனுமுன்னு எதிர்பார்க்குற...தன்னோட அப்பா வயசாகுற ஒரு பையன் தனக்கு இருக்குறதே அடர்த்திதான்ய்யா..;)

கோபிநாத் said...

படத்தை பார்க்க போகும் அனைவருக்கும் தயவு செய்து பெயர் போடுவதறக்கு முன்னாலேயே போயிடுங்க...இல்லைன்னா அழகான ஒரு அறிமுகத்தை மிஸ் பண்ணிடுவிங்க ;))

கலகலப்ரியா said...

பார்க்கவே போறதில்லைனாலும்.. பொது அறிவுக்கு இது உதவும்.. நல்லாருக்கு விமர்சனம்.. ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா..

சின்ன அம்மிணி said...

கண்டிப்பா பாத்துருவோம்

அப்பாதுரை said...

போஸ்டர் பாத்து சொன்னாலும், படம் பாத்து சொன்னாலும் - கண்டிப்பா இது பெஞ்சமின் பட்டன் பாதிப்பு தான். பிட்ஸ்ஜெரல் கதை கிட்டத்தட்ட நூறு வருசம் பழைய கதை. பெஞ்சமின் பட்டன் கதையே குட்டிச்சுவர் செஞ்சுட்டாங்க படத்துல. இதுல இன்னும் மோசமா எடுத்திருப்பாங்க; அதான் நீங்களே சொல்லிட்டீங்களே காதல் பாட்டு டூயட்டுனு . போஸ்டரைப் பாத்தாலே பயமா இருக்குங்க.

☀நான் ஆதவன்☀ said...

@ஷாகுல்

நன்றி ஷாகுல். தியேட்டர்லயே பார்க்கலாம் :)
-------------------------------------
@க. பாலாசி

நன்றி பாலாசி :)
-------------------------------------
@சென்ஷி

நம்ம விமர்சனம் கொஞ்சம் அழுத்தமா இருக்கட்டுமேன்னு சேர்த்தது ஹி ஹி
-------------------------------------
@ஆயில்யன்

நன்றி பாஸ் :)
-------------------------------------
@பாலா

நான் பார்த்த தியேட்டர்ல கூட்டம் குறைவு தான் பாலா. அப்புறம்.... சொல்ல முடியாது புலி உறுமுதுவும் பார்த்தாலும் பார்ப்பேன் :)
-------------------------------------
@ வினோத்

எங்க? டிவிடி தானே? பாரு பாரு :)

☀நான் ஆதவன்☀ said...

@கலையரசன்

‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா’ ஜெயாபச்சன் நடிச்சு வருதாம். வரும் போது பார்க்கலாம்
--------------------------------------
@சந்தனமுல்லை

பாருங்க பாஸ் பாருங்க :)
--------------------------------------
@தேவன்மாயம்

வாங்க டாக்டர். நன்றி
--------------------------------------
@செந்தில்வேலன்

ஆமா செந்தில் கலைக்கு குசும்பு அதிகமாகிட்டே போகுது. பயபுள்ளைக்கு கல்யாணத்த சீக்கிரம் பண்ணி வச்சிடனும் :)
--------------------------------------
@கோபிநாத்

நன்றி தல
//;))) செல்லம்...அப்போ என்ன செய்யனுமுன்னு எதிர்பார்க்குற...தன்னோட அப்பா வயசாகுற ஒரு பையன் தனக்கு இருக்குறதே அடர்த்திதான்ய்யா..;)//

நான் சொல்ல வந்தது அபிஷேக்கு அமிதாப் மேல ஈர்ப்பு வருவதற்கான வலிமையான காட்சிகள் இல்லை. வெறும் நோய்யால பாதிக்கபட்டவன்ற அனுதாபத்தால தான் அவன்கூட முதல்ல பழகுறாரு. அதன் பிறகு வந்த காட்சிகள் அந்தளவுக்கு ரெண்டு பேருக்கும் நெருக்கம் வருவதற்கான காட்சிகளா இல்லைன்னேன் :)
---------------------------------------
@கலகலப்பிரியா

அவ்வ்வ்வ் பொதுஅறிவா? இப்படி கலாய்கிறீங்களே... :)

நன்றி ப்ரியா :)
---------------------------------------
@சின்ன அம்மணி

நன்றி சின்ன அம்மணி (எப்படி எழுதினாலும் முதலாளியம்மாவை கூப்பிட மாதிரியே இருக்கு :))
---------------------------------------
@அப்பாதுரை

அப்படியெல்லாம் ஒரே அடியா சொல்ல முடியாதுங்க. அந்த படத்துல பிறக்கும் போதே வயசானவா பிறந்து சாகும் போது இளமையா சாகுறான். ஆனா இதுல கதையே வேற. எதுக்கும் பார்த்துட்டு சொல்லுங்க :)

கருத்துக்கு நன்றி அப்பாதுரை :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நம்ம விமர்சனம் கொஞ்சம் அழுத்தமா இருக்கட்டுமேன்னு சேர்த்தது ஹி ஹி //

ரொம்பவே அழுத்தமா இருக்கு பாஸ் :)

நல்லா எழுதியிருக்கீங்க. ஹிந்தி தெரியாத எனக்கு புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன் ;)

தாரணி பிரியா said...

அமிதாப்போட வசீகர குரல் இல்லாம எப்படி பாஸ் படம் பாக்கறது.

// அமிர்தவர்ஷினி அம்மா said...நல்லா எழுதியிருக்கீங்க. ஹிந்தி தெரியாத எனக்கு புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன் ;)//


எனக்கும் எனக்கும் :)

ஹுஸைனம்மா said...

//அமிதாப் தான் அந்த சிறுவன் என்ற எண்ணம் திரையில் காணும் போது வர மறுக்கிறது.//

ஸ்பெஷல் கேமரா வச்சுல்ல படம் பிடிச்சாங்களாம், அதுனாலயா இருக்கும்.

//அச்சமயத்தில்(மட்டும்) இது அமிதாப் என்கிற எண்ணம் வந்து சமாதானம் செய்கிறது :)//

:-))))

(அநத கேமரா பத்தியோ, நோயைப் பத்தியோ யாருமே விவரம் எழுத மாட்டேங்குறீங்க).

ஆனாலும் விமர்சனம் நல்லாருந்துச்சு.

//உங்கள் "பொக்கிஷ" கருத்து//

படிச்சுட்டு, சேரனைப் போல குலுஙி குலுங்கி அழுவீங்களோ?

கணேஷ் said...

தூர்தர்ஷனோட என்னோட ஹிந்தி முடிஞ்சி போச்சி..

ஏக் காவ் மே, ஏக் ரஹதாத்தா.. :)

அருள்மொழியன் said...

படம் பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்

உடனே பார்ககிறேன்

Vijay said...

AB = Amitabh Bachchan = Amazing Bachchan :)

Vijay said...
This comment has been removed by the author.
ஸ்ரீமதி said...

விமர்சனம் நல்லா இருக்கு அண்ணா. படம் பாக்கனுமா என்ன?

பின்னோக்கி said...

அருமையான விமர்சனம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஆழமான விமர்சனம். படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

Mohan Kumar said...

அழகான விமர்சனம். அசத்துங்க ஆதவன்

சே.குமார் said...

அருமையான இடுகை மிகவும் ரசித்தேன்.

☀நான் ஆதவன்☀ said...

@அமித்து அம்மா

//நல்லா எழுதியிருக்கீங்க. ஹிந்தி தெரியாத எனக்கு புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன் ;)//

பாஸ் இதுக்கு என்னைய திட்டியிருக்கலாம். விமர்சனம் தமிழ்ல தானே எழுதியிருக்கேன் பாஸ் :)
-------------------------------------
@தாரணி பிரியா
//அமிதாப்போட வசீகர குரல் இல்லாம எப்படி பாஸ் படம் பாக்கறது.
//

ஆமா பாஸ். அதென்னவோ சரிதான்

//எனக்கும் எனக்கும் :)//

அவ்வ்வ்வ்வ் நீங்களுமா? :)
------------------------------------
@ஹூஸைனம்மா

நன்றிங்க :)

//படிச்சுட்டு, சேரனைப் போல குலுஙி குலுங்கி அழுவீங்களோ?//

உங்க பின்னூட்டத்தை படிச்சுட்டு இப்படி தான் அழத்தோணுது. ஆளாளுக்கு இப்படி கலாய்கிறீங்களே :)
---------------------------------------
@கணேஷ்

இந்த படம் பார்க்க அந்த ஹிந்தி போதும் கணேஷ் :)
---------------------------------------
@அருள் மொழியன்

நன்றிங்க :)
---------------------------------------
@விஜய்

ஆமாங்க விஜய். நன்றி :)
---------------------------------------
@ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீமதி. என்ன கேள்வி இது. ரங்கமணிகிட்ட கூட்டிட்டு போகச்சொல்ல வேண்டியது தானே! :)
---------------------------------------------
@பின்னோக்கி

நன்றிங்க
---------------------------------------------
@மோகன் குமார்

நன்றி மோகன் :)
---------------------------------------------
@சே. குமார்

நன்றி குமார்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//டிஸ்கி: எவன்யா இது “பெஞ்சமின் பட்டன்” கதைன்னு சொன்னது? போஸ்டர் பார்த்து கதை சொல்ற க்ரூப்பா இருக்குமோ? அதுக்கும் இதுக்கும் அணு அளவு கூட சம்பந்தம் கிடையாது. //

யோவ் தேவுடு அருமையான விமர்சன்மும் டிஸ்கியும்,பால்கி பால்கிதான்

Related Posts with Thumbnails