மாட்டு கொட்டா வீடு!

ள்ளி மாணவிகள் முதற்கொண்டு கல்லூரி மாணவிகள் வரை அந்த வீட்டை கடக்கும் போது துப்பட்டாவின் உதவியோடு மூக்கைப் பொத்திச் செல்லவதை காணலாம். ஆனால் பதினைந்து வருடங்களாக அதே தெருவில் வசித்தும், ஒரு தடவை கூட எனக்கு அந்த ”வாசனை” முகம் சுளிக்க வைத்தது இல்லை.

இரண்டுபக்கமும் மூன்று மாடி கட்டிடங்கள், நடுவே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் இட்ட கொட்டகையாக இருந்தது அந்த “மாட்டு கொட்டகை”. அதனுள்ளேயே அவர்களின் வீடு. மலையாளி. எனது வீட்டுற்கு எதிரே சரியாக மூன்று வீடுகள் தள்ளி இருக்கிறது அந்த வீடு. பரப்பரப்பான சென்னையில், அதுவும் அடுத்தடுத்து குடியிருப்பு இருக்கும் ஒரு தெருவில் எப்படி இவ்வளவு பெரிய கொட்டகை இருந்தது என்பது இப்போது ஆச்சர்யம் அளிக்கிறது.தெருவில் சில நேரங்களில் சில மாடுகள் உலவும். இங்கு கிடைக்கும் வைக்கோலுக்காக சில நேரம் வெளியே  காத்திருக்கும்.

சிறு வயதில் தெருவினில் பந்தை வைத்து விளையாடும் ஆட்டத்தில் எப்படியும் அந்த கூரையின் மேல் பந்து விழும். பந்தை அடித்தவர்கள் கூரை மேல் ஏறி எடுக்க வேண்டும் என்ற கட்டுபாடு எங்களுக்குள் இருந்தது. அப்படி அதன் மேல் ஏறி எடுக்கும் போது மிகச்சரியாக மாட்டை அடிக்கும் பிரம்புடன் வெளியே வருவார் அந்த மலையாளி. ஆனால் இதுவரை யாரையும் அடித்ததில்லை. பார்க்க மலையாள நடிகர் திலகன் போலவே இருப்பார். எப்பொழுதும் ஆறாவது விரலோடு இருப்பார்.

“ஓய்ய்ய்ய்ய் மாட்டு கொட்டா காரன் வந்துட்டான் ஓடுங்கடா...” என்றபடி ஓடுவோம். கோரஸாக “மாட்டு கொட்டா வீடு...ஓய்ய் மாட்டு கொட்டா வீடு” என கத்துவோம். அப்படி கத்துவது அவருக்கு பிடிக்காது என்பது மட்டும் எங்களுக்கு தெரியும். மலையாளத்தில் ஏதோ திட்டுவார்.

”ஏம்பா மாட்டு கொட்டா வீட்டுல காசு வாங்கிட்டயா?” “மாட்டு கொட்டா வீடு பக்கத்துல ஒரு பொண்ணு குடி வந்திருக்காடா” “நேரா போனீங்கன்னா ஒரு மாட்டு கொட்டா இருக்கும். அங்கிருந்து நாலாவது வீடு” ”எது அந்த மாட்டு கொட்டா தெருவா? அது அடுத்த தெருல்ல..” இப்படி எங்கள் தெருவிற்கு ஒரு அடையாள சின்னமாக மாறி போனது.

ல்லூரி செல்லும் நாட்களில் சிநேகப் புன்னகையை உதிர்ப்பார். ஒப்புதல் புன்னகையும் செலுத்துவேன். ஒருநாள், பெட்டி கடையில் என் சிகரெட்டை வாங்கி நெருப்பை பற்ற வைத்த அவர், தன் மகன் அஜித்தும் கல்லூரி படிப்பை கேரளாவில் எங்கோ படித்துவிட்டு வந்திருப்பதாக கூறினார். விசாரித்ததில் “மெரைன் இன்ஜினியரிங்” சம்மந்தமாக ஏதோ படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பதாக தகவல் வந்தது.

“ஏன்யா அந்த மாட்டு கொட்டா வீட்டு பையன் ஏதோ கப்பல்ல வேலைக்கு சேர்ந்திருக்கானாம். ஒரு லட்சம் சம்பளமாமே? நீயும் அதெல்லாம் படிக்கலாமாய்யா” அப்பா வீட்டில் இருக்கும் போது, அவர் காதில் விழுமாறு அம்மா கேட்ட போது தான் எனக்கு அவனுக்கு வேலை கிடைத்தது தெரிந்தது.
”அம்புட்டு பணத்துக்கு எங்க போகுறது? அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமாம். அவன் எருமை மாட்டை வச்சே பணம் பண்ணிட்டான்” அப்பாவின் இயலாமை கோபம் செறிந்த வார்த்தையாக விழும்.

பெட்டி கடையின் முன் நண்பர்கள் வழக்கம் போல் பேசிக்கொண்டிருந்த அன்று, மாட்டுகாரர் சிகரெட் வாங்க வந்திருந்தார். சிரித்த அவரை தினேஷ் “என்ன சேட்டா வீடெல்லாம் இடிக்கிறீங்க? மாடுகள வேற கொஞ்ச நாளா காணோம்? என்னாச்சு?” பேசி வைத்தபடி கேட்டான்.

“ஆங்.... வீடு கட்ட போறோம். இனி மாட்டு கொட்டா வீடு இல்ல அது” என்று சிரித்தபடி சிகரெட்டை வலித்துக் கொண்டு சென்றார் மாட்டுகாரர்.

“பார்றா மாட்டுகாரனுக்கு வந்த வாழ்வ. மகனுக்கு கப்பல்ல வேல கிடைச்சவுடனே ரொம்ப தான் பிகு பண்ணிகிறான்” தினேஷ் வெம்மினான்.
“உனக்கேன் காண்டு? விடுடா மச்சி”
“இல்ல மச்சி, நேத்து அவன்கிட்டயே வந்து ஒருத்தன் மாட்டுகொட்டா வீடு எங்க இருக்குனு கேட்டிருக்கான். அதுக்கு இந்தாளு சண்டை போட்டிருக்கான். அதான் இப்ப மாடெல்லாம் இல்லையே இப்ப எதுக்கு அப்படி கூப்பிடுறீங்கனெல்லாம் கேட்டிருக்கானாம்” சிரித்துக் கொண்டே கூறினான்.
“நாலு மாடி வீடு கட்ட போறானாம். எல்லாம் கப்பல்ல இருந்து மகன் அனுப்புற காசுடா மச்சி” எல்லாருக்கும் பெருமூச்சு தான் வந்தது. வேலை கிடைக்காமல் கம்யூனிசம் பேசி அரசாங்கத்தை திட்டி கொண்டிருந்த நாட்கள் அவை.

”இங்க கண்ணையன் வீடு எங்க இருக்கு?” கரை வேஷ்டியுடன் அம்பாஸிடர் காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்தவுடன் எந்த கட்சி என்று தெரிந்தது. சிகரெட்டை தூரப் போட்டுவிட்டு தினேஷ் பொட்டி கடை திண்ணையிலிருந்து எழுந்தான்.  “நேர போனீங்கன்னா ரைட் சைடுல ஒரு மாட்டுகொட்டா வீடு வரும். புதுசா கட்டியிருக்குற நாலு மாடி வீடு. முன்னாடி ”அஜித்”னு போர்டு இருக்கும். யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. அதுக்கு எதித்தாப்புல தான் கண்ணையன் வீடு இருக்கு”.
கார் சென்றவுடன் ”டேய் கண்ணயன் எப்படா இந்த கட்சியில சேர்ந்தாரு” என்றபடி தூரப்போட்ட சிகரெட்டை தேடினான். சிகரெட் விழுந்த இடத்தில் மாட்டுகாரர் நின்று கொண்டிருந்தார். இவனை வெறித்துப் பார்த்தபடி.

மூன்று வருடங்களுக்கு பிறகு விடுமுறையில் சென்னை சென்றிருந்த போது, பெட்டிக்கடை திண்ணையில் உட்கார்ந்து சசியுடன் பேசிகொண்டிருந்தேன். பெட்டிக் கடைக்காரர் வாசலில் நின்று கடையை வெறித்துப் பார்த்து கொண்டிருந்த ஒரு மாட்டை விரட்டிக்கொண்டிருந்தார்.

“ஒரு பாக்கெட் சிகரெட்” சத்தம் கேட்டு திரும்பினேன். மலையாள மாட்டுகாரர். “அப்படியே இரண்டு வாழைப்பழம்...........”

அதற்குள் என்னை அடையாளம் கண்டுகொண்டார். வழக்கமாக உதிர்கும் அதே சிரிப்பு. சிநேகமா, கடமையா என அடையாளம் காண முடியாத சிரிப்பு அது. கண்ணாடி அணிந்திருந்தார். கைகளில் தங்கத்தில் வளையல் போல ஏதோ அணிந்திருந்தார்.

“என்ன சேட்டா. எப்படி இருக்கீங்க?. வீடை விக்க போறதா சொன்னாங்க?” என்றேன்

“ஆமாப்பா. 25 லட்சம் தான். வாங்கிறயா? நீதான் துபாய்ல வேலை பாக்குறேயே. சம்பளம் என்ன ஒரு 50ஆயிரம் இருக்குமா மாசம்” என்றபடி சிகரெட்டை பற்ற வைத்தார்.

சிரித்தேன். “எதுக்காக விக்குறீங்க?”

“ம்ம்ம்ம்ம் அடையாறுல வீடு வாங்கிட்டான் என் பையன். அங்க போகப்போறோம்.” என்றபடி உத்துப்பார்த்தவர் “இனி மாட்டு கொட்டா வீடு கிடையாது அது” என்று சிரித்தார். விரக்தியா சந்தோசமா என தெரியாமல் இருந்த அந்த சிரிப்புக்கும் ஒரு புன்னகையே பதிலளித்தேன்.

வாங்கிய இரண்டு வாழைப்பழைத்தை கடையின் வாசலில் நின்றிருந்த அந்த மாட்டுக்கு கொடுத்து அதன் நெற்றியை தடவிக் கொண்டிருந்தார்.

37 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கதை நல்லா இருக்கு ஆதவன்..

சென்ஷி said...

ஆதவா.. நீ எழுதினதுலேயே இந்தப் புனைவு ரொம்ப உருப்படியா மனசுக்கு நெருக்கமா இருக்குது. இதே மாதிரி நெறய்ய டிரை செய்.

வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு...பாஸ்.நேர்ல இருந்து யாரோ சொல்ற எஃபெக்ட் !

அகல்விளக்கு said...

சான்சே இல்ல தல...

கடைசி வரைக்கும் நீங்க பக்கத்துல உக்காந்து கதை சொல்ற மாதிரியே இருந்துச்சு...

//வாங்கிய இரண்டு வாழைப்பழைத்தை கடையின் வாசலில் நின்றிருந்த அந்த மாட்டுக்கு கொடுத்து அதன் நெற்றியை தடவிக் கொண்டிருந்தார்.//

இந்த இரண்டு வரிக்கு பின்னாடி ஒரு பெருமூச்சு சத்தம் வந்துச்சு...
(நான் விடலன்னாலும் யாரே எங்கயோ விட்டது கேட்டது)

நல்ல கதை...

கணேஷ் said...

இந்த கதையை நீங்கள் முடித்திருந்த விதம், அழகு!

ஆயில்யன் said...

பாஸ் எக்ஸலண்ட் ! கதை சென்ஷி சொல்றமாதிரி மனசுக்கு நெருக்கமா!

எதோ விட்டுபோன ஃபீலிங்க ரொம்ப விவரிக்காம சட்டுன்னு மனசுல ஏத்திவிட்டுட்டீங்க

தமிழ் பிரியன் said...

நல்லா எழுதி இருக்கீங்க ஆதவன்.

சின்ன அம்மிணி said...

அருமையா இருக்கு பாஸ்

cheena (சீனா) said...

அன்பின் ஆதவன்

அருமையான கதை - மாட்டுக் கொட்டா வீடு - என்பது மாடி வீடாகியும் பெயர் மாறவில்லை. இறுதி வாழைப்பழம் மாட்டுக்குக் கொடுத்தது நெஞ்சை நெகிழ்வித்தது.

கதை மிக சுவாரசியமாகச் சென்றது

நல்வாழ்த்துகள்

வினோத்கெளதம் said...

சரி நானும் அதயே சொல்லிடுறேன்..பக்கத்துல உக்கர்ந்து கதை சொன்ன மாதிரியே இருக்கு ..நல்லவே இருக்கு..

" உழவன் " " Uzhavan " said...

 கடைசியில் சேட்டா கலக்கிட்டாரு

venkat said...

நல்லா இருக்கு

இளைய பல்லவன் said...

///
சென்ஷி said...

ஆதவா.. நீ எழுதினதுலேயே இந்தப் புனைவு ரொம்ப உருப்படியா மனசுக்கு நெருக்கமா இருக்குது. இதே மாதிரி நெறய்ய டிரை செய்.

வாழ்த்துகள்.
//

RREEPPEEAATTEEYY !!

pappu said...

ச்சே.... (ஃபீலிங்ஸ்ண்ணே).
செமயா இருந்தது!

நாஞ்சில் பிரதாப் said...

//ஏம்பா மாட்டு கொட்டா வீட்டுல காசு வாங்கிட்டயா?” “மாட்டு கொட்டா வீடு பக்கத்துல ஒரு பொண்ணு குடி வந்திருக்காடா” “நேரா போனீங்கன்னா ஒரு மாட்டு கொட்டா இருக்கும். அங்கிருந்து நாலாவது வீடு” ”எது அந்த மாட்டு கொட்டா தெருவா? அது அடுத்த தெருல்ல..” இப்படி எங்கள் தெருவிற்கு ஒரு அடையாள சின்னமாக மாறி போனது //

மிக யதார்த்தம் தெரிந்தது.

கதை சூப்பரப்பு... நல்லாவே யோசிக்கிற தல...

கலையரசன் said...

இந்த கதையிலையும் சேட்டனை புகுத்துன பாரு.... அங்கதான்டா நிக்குற நீயி!!

அடுத்த கட்டமா "ச்சவருதொட்டி"ன்னு ஃப்ளாக்கு பேரை மாத்தாம இருந்தா சரி ராசா....

கோமதி அரசு said...

”மாட்டு கொட்டா வீடூ!”

நல்ல கதை,சொல்லிய விதம் நெஞ்சை நெகிழ வைத்தது.

மாடுகளை நேசித்தவர்வாழைப்பழத்தை
மாட்டுக்கு கொடுத்து, அதன் நெற்றியை தடவி கொடுத்தது மனதை நெகிழ வைக்கும் காட்சி, கண்களை விட்டு அகலாது.

வாழ்த்துக்கள் ஆதவன்.

தாரணி பிரியா said...

எப்படி பாஸ் இப்படி எல்லாம் :). நேர்ல பார்க்கறது போலவே இருந்தது பாஸ்

☀நான் ஆதவன்☀ said...

@முத்தக்கா

நன்றிக்க :)
-------------------------------------
@சென்ஷி

நன்றி தல
-------------------------------------
@சந்தனமுல்லை

நன்றி பாஸ் :)
-------------------------------------
@அகல்விளக்கு

//(நான் விடலன்னாலும் யாரே எங்கயோ விட்டது கேட்டது)//
அவ்வ்வ்வ்வ்.... எனிவே நன்றி :)
-------------------------------------
@கணேஷ்

நன்றி கணேஷ்
-------------------------------------
@ஆயில்ஸ்

நன்றி பாஸ். இனி அடிக்கடி டெரர் காமிக்கலாம் :)
-------------------------------------
@தமிழ்பிரியன்

நன்றி தமிழ்பிரியன்

☀நான் ஆதவன்☀ said...

@சின்ன அம்மணி

நன்றி பாஸ் :)
------------------------------------
@சீனா

தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா :)
------------------------------------
@வினோத்

நன்றி. (ங்கொய்யால..... சொந்தமா எதுனா சொல்லுய்யா :)
------------------------------------
@உழவன்

நன்றி உழவன்
------------------------------------
நன்றி வெங்கட் :)
------------------------------------
@இளைய பல்லவன்

ரிப்பீட்டு போட்டு இன்னும் ஃபீல்டில் இருப்பதாக காட்டிக்கொண்ட பல்லவனுக்கு ரொம்ப நன்றி :)
-----------------------------------
@பப்பு

பப்பு... நோ நோ பீலீங்ஸ் :)
-----------------------------------
@பிரதாப்

நன்றி பிரதாப் :)
------------------------------------
@கலையரசன்

நன்றி நன்றி நன்றி
//"ச்சவருதொட்டி"//

ஆமா அதென்ன ச்சவருதொட்டி?
-------------------------------------
@கோமதி அரசு

வாங்கம்மா. நலமா? பாராட்டுக்கு மிக்க நன்றி :)
-------------------------------------
@தாரணி பிரியா

வாங்க பாஸ். அதுவா உள்ளருந்து வருது பாஸ் :)

ஒருநாள் நேர்ல வந்து கதை சொல்றேன். அப்ப எப்படி இருக்குன்னு சொல்லனும் :)

நட்புடன் ஜமால் said...

ரொம்ப ஜாலியா படிச்சிகிட்டே போனேன் கடைசியா ஏதோ ஒரு விதமான கனம்

நல்லாயிருந்திச்சி ஆதவா!

ஷாகுல் said...

கதை நல்லா இருக்கு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

யோவ் தேவுடு,
நல்லா இருக்குய்யா இந்த கதை,
ஆமா அந்த வீடு வெறும் 25லட்சமா?
நம்பவே முடியலையே?இப்போ இடமே சிட்டிக்குள் 50வருதுய்யா, நல்ல கதை.

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ஜமால் அன்ணாத்தே :)
------------------------------------
நன்றி ஷாகுல்
------------------------------------
நன்றி கார்த்திகேயன்.
தேவுடு வட சென்னையில அடுத்தடுத்து குடியிருப்பு இருக்குற தெருவுல அந்த ரேட் தான் போகும் தான் நினைக்கிறேன். ஒரு குத்துமதிப்பா தான் போட்டது :) . அதுவுமில்லாம இது புனைவு தானே! :)

கலையரசன் said...

//ஆமா அதென்ன ச்சவருதொட்டி?//

என்னது...? உனக்கே தெரியலையா?
சேட்டன்கிட்ட கேளுடா!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள் ஆதவன்.

ஆ! இதழ்கள் said...

ஹையோ... அருமையா இருந்துச்சுங்க வாசிக்க... ரொம்ப நன்றி, மேலும் எழுதுங்க.

இளைய பல்லவன் said...

//
@இளைய பல்லவன்

ரிப்பீட்டு போட்டு இன்னும் ஃபீல்டில் இருப்பதாக காட்டிக்கொண்ட பல்லவனுக்கு ரொம்ப நன்றி :)//

நான் இங்கதான் இருக்கேன். ஆனா எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது :)) & :((

☀நான் ஆதவன்☀ said...

@கலையரசன்

ரைட்டு... தெரிஞ்சுடுச்சு :)
------------------------------------
@பாலா

நன்றி பாலா
------------------------------------
@ஆ!இதழ்கள்

நன்றி ஆனந்த். உங்க மெயில் ஐடி என்ன? எனக்கு மெயில் பண்ணுங்க.
-------------------------------------
@பல்லவன்

ஓக்கே சூப்பர் ஸ்டார் :)

ஸ்ரீமதி said...

கதை(?!) அருமை அண்ணா. :))

கலகலப்ரியா said...

நல்லாருக்கு.. :)

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

சில மாடுகள் உங்க ஏரியாவிலருந்து போயிடுச்சேன்னு ரொம்ப கவலை போல!! (கதைன்னு நம்புறேன்).

:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்லா இருக்கு பாஸ். நீங்க சொன்ன விதம் நேர்ல பார்த்துக்கிட்டே வரா மாதிரி இருக்கு எல்லாத்தையும்.

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ஸ்ரீமதி :)
------------------------------------
நன்றி கலகலப்பிரியா
------------------------------------
நன்றி தியா
------------------------------------
நன்றி ஹூஸைனம்மா. இது பாதி கதை...பாதி உண்மை :)
------------------------------------
நன்றி அமித்து அம்மா

மகா said...

really superb ........

vijaya_baskaran said...

ரொம்ப touching- ஆ இருந்துச்சி ஆதவன்.

Really... superb

Related Posts with Thumbnails