சட்டை சூப்பரப்பு - பஞ்சாமிர்தம்

கடந்த மே மாதம் அண்ணனின் கல்யாணம் மதுரையில் நடந்தது. கல்யாணம் நடந்த அன்று காலை.......

"அடடே வாங்க வாங்க சின்ன மாப்ள, காபி சாப்பிட்டீங்களா? “

“சாப்பிட்டேன் மச்சான்” சிரித்தேன். அண்ணியின் பெரிய அண்ணன்.

இது தான் கல்யாண டிரஸா? சூப்பரா இருக்கு மாப்ள” என்றபடி அங்கிருந்து நகர்ந்து கல்யாண வேலையில் மூழ்கி போனார்.

“சின்ன மாப்ள......” சத்தம் கேட்டு திரும்பினேன்.

“வாங்க மாமா. வணக்கம்” பெரிய மாமா. அண்ணியின் பெரியப்பா.

“டிபன் சாப்பிட்டீங்களா மாப்ள?”

“இல்ல மாமா. நமெக்கென்ன அவசரம். வந்தவங்க மொதல்ல சாப்பிடட்டும். ஆமா காலையில டிபன் என்ன மெனு ”

“எல்லாம் இருக்கு மாப்ள. போய் மேல ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருங்க ரெடியாகிருச்சான்னு. அப்புறம் இது தான் கல்யாண சட்டையா?”

தலையை ஆட்டினேன். “சட்டை சூப்பரா இருக்கு மாப்ள” என்றபடி அவசரமாக சென்றார். சட்டை மேல் கொஞ்சம் கர்வம் வந்தது.

5 நிமிடம் கழித்து......

“அடடே வாங்க மாப்ள. குளிச்சு ரெடியாகிட்டீங்க போல?” சத்தம் கேட்டு திரும்பினேன். அண்ணியின் அப்பா

“ஆமாம் மாமா. காபி சாப்பிட்டீங்களா மாமா” இந்த தடவை நான் முந்தினேன்.

“அதெல்லாம் ஆச்சு மாப்ள. ஆமா இது தான் கல்யாண டிரஸா? “

”ஆமா மாமா”

செலக்‌ஷன் சூப்பர் மாப்ள. அருமையா இருக்கு” என்றபடி தலைக்கு மேல் இருக்கும் ஆயிரத்தில் ஒரு வேலையைப் பார்க்க சென்றார்.

மைல்டா டவுட் வர ஆரம்பிச்சது. இருந்தாலும் போய் வாசலில் நின்று வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தேன்.

“மாப்ளே......” அட சின்ன மச்சான். அண்ணியின் கடைசி அண்ணன்

“குட் மார்னிங் மாப்ள. என்ன இம்புட்டு லேட்டா எழுந்திருச்சிருக்கீக?”

“இல்ல மச்சான். நேத்து நைட்டு ப்ரெண்ட்ஸ ஹோட்டல்ல விட்டுட்டு வரலாம்னு போனேன். அவங்களோட ஓட்டல் ரூம்லயே தங்க வேண்டியதா போச்சு. காலையில நேரா எழுந்திருச்சு வாரேன்”

“சட்டை எங்க வாங்கினீக? துபாய்லயா?”

“இல்ல சென்னையில தான்.....” கொஞ்சம் டவுட்டோடு

இல்ல சூப்பரா இருக்கு. அதான் கேட்டேன்” அவ்வ்வ்வ்வ்வ்வ் கன்பார்ம்டு.......

ங்கு வந்து அந்த சட்டையை போடுவதே இல்லை. போன மாசம் ஒரு நாள் அதை எடுத்து அயர்ன் செய்யும் போது சேட்டன் வந்தார்.

“தம்பி ஷர்ட் புதுசா? எப்ப எடுத்த?”

“சென்னையில சேட்டா”

சூப்பரா இருக்கே..................

அவ்வ்வ்வ்வ்வ்வ்..... அப்படியே அயர்ன் செய்த சட்டையை மடித்து உள்ளே வைத்து விட்டேன்.
-------------------------------------------------------------------------------------------------
உலகத்தில் என்னென்ன படம் ரிலீசாகி இருக்கிறதோ அத்தனையும் பார்த்திருப்பார்கள் போல நம் பதிவுலகத்தில் சில மக்கள். சீனா, கொரியா, ஸ்பெயின், பிரஞ்ச் என பல மொழி படங்களின் மீதான இவர்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது. சென்ஷி, அய்யனார், கார்த்திகேயன், கலையரசன், ஹாலிவுட் பாலா போன்ற சிலர் சில நல்ல எடுத்துகாட்டு.

“old boy" என்கிற வித்தியாசமான கொரிய படத்தை கலையரசன் பரிந்துரைக்க இந்த வாரம் கண்டேன்.காரணமே தெரியாமல் நமது ஹீரோவை 15 வருடம் தனிமை சிறையில் அடைத்து வைக்கப்படுகிறான். தன்னுடைய மனைவியையும் மூன்று வயது குழந்தையையும் பிரிந்து வாடுகிறான். அவனுடைய மனைவி கொல்லப்படுகிறாள். அதன் பழி இவன் மேல் விழுவதுமில்லாமல் தலை மறைவாகிவிட்டான் என்ற பழியும் கிடைக்கிறது.

15 வருடம் கழித்து 5 நாட்களுக்கு மட்டும் விடுவிக்கப்படும் அவன் தன்னை அடைத்து வைத்தது யார்? ஏன்? என்ற கேள்விக்காக அலைகிறான். அவனுக்கு உதவியாக தன் பழைய நண்பனும், ஒரு 18 வயது பெண்ணும் இருக்கிறார்கள். அந்த பெண்ணும், ஹீரோவும் காதலில் விழுகின்றனர். அடைத்து வைத்தவனை கண்டுபிடிக்கிறான். ஆனால் காரணம் கண்டுபிடிக்க முயல்கிறான். காரணமும் கண்டுபிடிக்கிறான்.

உதவியாக இருந்ததற்காக நண்பனை இழக்கிறான். காதலியையும் கொலை செய்து விடுவேன் என வில்லன் மிரட்டுகிறான். ஆனால் முடிவு????? யாருமே எதிர்பார்க்காத முடிவு. disaster ending :( பழிவாங்குதலின் உச்சக்கட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

அந்த வித்தியாசமான முடிவை மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் நாம் அதை ஏற்போமா? என்னால் ஜீரணிக்க கூட முடியவில்லை. மதில் மேல் பூனையாக நிற்க வைக்கப்படுகிறோம். உங்களால் முடிகிறதா என பார்த்துவிட்டு சொல்லுங்கள். சப்-டைட்டிலோடு பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------
நீண்ட நாள் ஆசையாக ஹிட்லரின் வாழ்க்கை வரலாரைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹிட்லர் சிறையில் இருக்கும் போது எழுதிய “மெயின் காம்ப்”யை தமிழில் மொழி பெயர்த்து “எனது போராட்டம்” என ஸூப்பரமண்யம் எழுதியி்ருக்கும் புத்தகம் ஒரு மாதம் முன்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக செல்ல ஆரம்பத்த புத்தகம், 19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியலை மிக விரிவாக விவரிக்க விவரிக்க...... கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஐம்பது பக்கங்களை கூட தாண்டாமல் அப்படியே மூடி வைத்து விட்டேன். அதுவும் ஒரு வார காலமாக ஐம்பது பக்கங்கள் தான் படிக்க முடிந்தது. கொஞ்சம் சுருக்கியாவது எழுதியிருக்கலாம். அவர் எழுதியதை அப்படியே அச்சு பிசகாமல் மொழி பெயர்த்திருக்கிறார் போல. போதும்டா சாமி என்றாகிவிட்டது.

அதிலும் அதிகமான சமஸ்கிருத சொற்கள் வேறு. ஆசிரியர் பெயர் ஸ.ஸூப்பரமண்யம் என்றிருக்கும் போதே கொஞ்சம் உசாராகி இருக்க வேண்டும். மலேசியத்தமிழராம். நேர விரயம் தான் மிச்சம். ஹிட்லர் பற்றிய ஏதேனும் வேறு நல்ல புத்தங்கள் தமிழில் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
------------------------------------------------------------------------------------------------
இந்தியர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்திருக்கும் அடுத்த படம் ‘Paa’ என்ற ஹிந்தி படம். ஏற்கனவே இளையராஜாவின் பாடல்களும், தீம் மீயூஸிக்கும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க, பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் அனைவராலும் பாராட்டைப் பெற்றுள்ளது. தீம் பாடலாக அது ஒரு கனா காலம் படத்தில் வரும் “காட்டு வழி” என்ற பாடல்.

இன்னும் மூன்று தமிழ்பாடல்களையும் உபயோகித்துள்ளார். அமிதாப் இளையராஜாவை போகும் இடமெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறாராம். இயக்குனரும் தமிழர் தான். ஆக தமிழிலும் மொழிபெயர்க்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த ஜோடி கொடுத்த “சீனி கம்” ஹிட். இதுவும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

வழக்கம் போல சில சர்ச்சைவாதிகள் இது பிராட் பிட்’டின் “பெஞ்சமின் பட்டன்” படத்தின் அப்பட்டமான காப்பி என புலம்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கலாம். சும்மா அடிச்சு விடக்கூடாது. அப்புறம் படத்தின் பட்ஜெட் 15 கோடி தானாம். மேக்கபிற்கு மட்டும் 4 கோடியாம். (கமல்ஹாசனைப் பார்த்தால் ஏனோ பாவமாகத்தான் இருக்கிறது)-------------------------------------------------------------------------------------------------
இது பல பேருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக இந்த செய்தி.
”நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம்” என்ற தலைப்பில் ஒரு வலைப்பூவை ஒருவர் நடத்தி வருகிறார். பல இலக்கிய எழுத்தாளர்களின் அறிய எழுத்துகள் இங்கு கிடைக்கப்பெறுகின்றன. நகுலன், புதுமைப்பித்தன், மௌனி, சுரா, பா சிங்காரம் என பலரது கதைகள் இங்கு கிடைக்கின்றன.

மிகவும் சிரத்தையோடு பதிந்து வரும் அந்த அன்பருக்கு பாராட்டுகள். நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ ஸ்ரீ மங்கள தினத்தில் ...................... இன்னாருடைய மகனுக்கும், இன்னாருடைய மகளுக்கும் என ஆரம்பிக்கும் கலயாணபத்திரிக்கையும், டஸ்ஸூ, புஸ்ஸூன்னு ஆங்கிலத்தில கவிதை பாடி அழைக்கும் பத்திரிக்கைகளையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு அழகான தமிழ் பத்திரிக்கை மின்னஞ்சல்ல வந்தது. ரொம்ப ரசிக்கத்தக்கதா இருந்தது இந்த பத்திரிக்கை.இதே மாதிரி தமிழ்ல இனி முயற்சி செய்யலாம் போலயே :)

62 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கலையரசன் said...

ஏன்டி.. சட்டை கதையை ஏற்கனவே எழுதிட்டியே! என்ன துாக்கமா?

ஸ.ஸூப்பரமண்யம் புக் எல்லாம் எங்கிருந்துடா புடிக்கிற? எனக்கு குடுத்தா நானும் தலைக்கு வச்சி துாங்குவாமுல்ல..

பத்திரிக்கை சூப்பரப்பு! உன் கல்யாணத்துக்கு இதுமாதிரி புதுமையா எதாவது செய்யி...

அதி பிரதாபன் said...

சட்டை மேட்டர் எதிர்பார்த்த மாதிரி இல்ல. ஆனா முடிவு நல்லா இருக்கு.

அந்த ஓல்டுபாய் படம் பார்த்திருக்கிறேன். சப்டைட்டில் கிடைக்காமல் ஒரு மாதம் காத்திருந்து பார்த்த படம். அட்டகாசமான முடிவு. முடியும்போது பேச்சு வராது, நமக்கும்.

அந்த பத்திரிக்கை அருமை. வெளிநாட்டுல இருக்குற யாரும் முயற்சி பண்ணினதா?

ஷாகுல் said...

சட்டை சூப்பருங்க!

//பத்திரிக்கை சூப்பரப்பு! உன் கல்யாணத்துக்கு இதுமாதிரி புதுமையா எதாவது செய்யி...//

நடந்தா!? செய்யலாம்.

சென்ஷி said...

கல்யாணப் பத்திரிக்கை நல்லா இருக்குது. ஏன்யா வெண்ண டேட் போட்டா என்ன? போய் சாப்பிட்டுட்டா வரப்போறோம்..

நல்லா யோசிச்ச மனசுக்கும் தம்பதியினருக்கும் இங்க வாழ்த்துகள் சொல்லிக்கறேன்!

அப்பாலிக்கா சட்டை ஜோக் - செம்ம மொக்கை. சிரிப்பே வரலை..

ஓல்டு பாய் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

நாகா said...

ஆமா சட்டை கதய மொதல்லயே படிச்ச மாதிரி இருக்கே.. பத்திரிக்கை அட்டகாசம்

ஆயில்யன் said...

சட்டை மேட்டரு சூப்பரே ஏன்னா எனக்கும் அப்படி ஒரு அனுபவம் அக்கா கல்யாணத்துல நடந்துச்சு (ஏகப்பட்ட பேரு கண்ணு வைச்சுப்புட்டாய்ங்க)

ஆனா கடைசிவரைக்கும் எதனால புடிச்சிருக்குன்னு சொல்லாம வடிவேலு ரேஞ்சுக்கு பொலம்பவுட்டாங்கப்பு :)))

கிரி said...

சட்டை நல்ல இருக்கு

நானும் ஓல்ட் பாய் பார்த்தேன் ..நீங்க சொன்ன சப் டைட்டிலோட ..என்ன என்ன கொடுமை சப் டைட்டில் இருந்தது ஆனால் அது ஆங்கிலம் இல்லை.. :-) அவ்வ்வ்வ்

மௌனி said...

//”நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம்” என்ற தலைப்பில் ஒரு வலைப்பூவை ஒருவர் நடத்தி வருகிறார். //

அடியேன்தான்.
நன்றி ஆதவன், உங்கள் சிபாரிசுக்கும் ஆதரவுக்கும்.

வினோத்கெளதம் said...

யோவ் அது என்னையா சட்டை படம் புடிச்சு போடா வேண்டியது தானே..

//ஆனால் முடிவு????? யாருமே எதிர்பார்க்காத முடிவு. disaster ending :( பழிவாங்குதலின் உச்சக்கட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்.//

இதை நான் படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே யூகித்து விட்டேன்..இதை சொன்ன காமெடி பண்ணுறாங்க..கடவுளே..

//வழக்கம் போல சில சர்ச்சைவாதிகள் இது பிராட் பிட்’டின் “பெஞ்சமின் பட்டன்” படத்தின் அப்பட்டமான காப்பி என புலம்பி வருகின்றனர்.//

உடனே தூக்கிட்டு கிளம்பிடுவாங்களே சொம்பை..பஞ்சாயத்துக்கு..:)

பத்திரிக்கை அருமை...

சந்தனமுல்லை said...

பாஸ்..ஒரே இன்ஃப்ர்மேட்டிவ்வா இருக்கு..மொக்கை இல்லைன்ற குறைய சட்டை தீர்த்து வைச்சுடுச்சு...:-))))

பத்திரிக்கை ரொம்ப நல்லாருக்கு..ஸ்ரீஹரி உங்க இன்னொரு பேரா பாஸ்?!! :-)))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சட்டை சூப்பருங்க!

//பத்திரிக்கை சூப்பரப்பு! உன் கல்யாணத்துக்கு இதுமாதிரி புதுமையா எதாவது செய்யி...//

நடந்தா!? செய்யலாம்.//

haa haa haa...
Repeateeeeee

கணேஷ் said...

சட்டை சூப்பர் மேட்டர் :) எங்க வாங்குனீங்க :)

இன்விடேஷன் சூப்பராம் :) சியாமளா கேட்டாங்க :)

pappu said...

பெஞ்சமின் பட்டனோட ரிவர்ஸ்னு வேணா சொல்லலாம். பட், இது மாதிரி ஆயிரம் படம் வருது, கேள்வி இல்லை. நமக்கு படம் நல்லாருந்தா சரி.

ஓல்டு பாய் செம கதையில்ல? கர்பத்துக்கு காரணம் 'அது' இல்ல. உன் வாய்தான்னு சொல்லும் போது.... அடங்கொக்கமக்கா?

கோபிநாத் said...

ஏலேய் என்ன சரக்கா!!???

எதுக்கு இப்படி போட்ட மொக்கையே மீண்டும் போட்டுக்கிட்டு இருக்க. ;)))

PAAவும் பத்திரிக்கையும் உன்னை காப்பாதிடுச்சி...நல்லாயிருக்கு ;)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
கல்யாணப் பத்திரிக்கை நல்லா இருக்குது. ஏன்யா வெண்ண டேட் போட்டா என்ன? போய் சாப்பிட்டுட்டா வரப்போறோம்..
\\

அப்படி நாக்கை பிடுங்கற மாதிரி கேளு மாப்பி.

உன்னை போயி எப்படி எல்லாம் தப்பாக நினைச்சியிருக்கான் பாரு..பாவிபய ;)

கோபிநாத் said...

\\கலையரசன் said...
ஏன்டி.. சட்டை கதையை ஏற்கனவே எழுதிட்டியே! என்ன துாக்கமா?
\\\

அது இன்னும் யாகத்தில் இருந்து தெளிவுக்கு வரவில்லை மச்சி அவன் ;))

கோபிநாத் said...

\\அதி பிரதாபன் said...
சட்டை மேட்டர் எதிர்பார்த்த மாதிரி இல்ல. ஆனா முடிவு நல்லா இருக்கு.
\\

எப்படிங்க இப்படி எல்லாம்...!?? ;)

கோபிநாத் said...

\\ஷாகுல் said...
சட்டை சூப்பருங்க!
\\

ஷாகுல் இவனை பத்தி தெரியமால் சூப்பருன்னு சொல்றிங்க...நீங்க சூப்பரு சொன்னதுக்கே இன்னொரு முறை எழுதுவான் இவன் ;))

கோபிநாத் said...

\\அப்பாலிக்கா சட்டை ஜோக் - செம்ம மொக்கை. சிரிப்பே வரலை..\\\

அப்போ என்ன தாண்ட வந்துச்சி உனக்கு !!!???

கோபிநாத் said...

\\நாகா said...
ஆமா சட்டை கதய மொதல்லயே படிச்ச மாதிரி இருக்கே.. பத்திரிக்கை அட்டகாசம்
\\

அய்யோ...இப்படி ஊரே து துன்னு துப்புதே ;))

கோபிநாத் said...

\\ ஆயில்யன் said...
சட்டை மேட்டரு சூப்பரே ஏன்னா எனக்கும் அப்படி ஒரு அனுபவம் அக்கா கல்யாணத்துல நடந்துச்சு (ஏகப்பட்ட பேரு கண்ணு வைச்சுப்புட்டாய்ங்க)

ஆனா கடைசிவரைக்கும் எதனால புடிச்சிருக்குன்னு சொல்லாம வடிவேலு ரேஞ்சுக்கு பொலம்பவுட்டாங்கப்பு :)))
\\

இதுல ஜோடி வேறயா!!..ரைட்டு ;)))

கோபிநாத் said...

\\கிரி said...
சட்டை நல்ல இருக்கு
\\

கிரி அப்போ நீங்க அந்த சட்டையை பார்த்துட்டிங்களா!!!??

எப்படிங்க தாங்கிட்டிங்க அதை!?? ;)

கோபிநாத் said...

\\மௌனி said...
//”நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம்” என்ற தலைப்பில் ஒரு வலைப்பூவை ஒருவர் நடத்தி வருகிறார். //

அடியேன்தான்.
நன்றி ஆதவன், உங்கள் சிபாரிசுக்கும் ஆதரவுக்கும்.
\\

வாழ்த்துக்கள் மெளனி ;)

கோபிநாத் said...

\\\வினோத்கெளதம் said...
யோவ் அது என்னையா சட்டை படம் புடிச்சு போடா வேண்டியது தானே..\\

மச்சி என்டா உனக்கு இம்புட்டு கொலைவெறி எங்க மேல!!..உனக்கு என்ன நீ சொல்லிட்டு போயிடுவா..இந்த பையபுள்ளையும் உடனே ரசிகர்களின் அன்புக்கு இணங்கன்னனு ஒரு பதிவாகவே போடுவான். ;)))

//ஆனால் முடிவு????? யாருமே எதிர்பார்க்காத முடிவு. disaster ending :( பழிவாங்குதலின் உச்சக்கட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்.//

இதை நான் படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே யூகித்து விட்டேன்..இதை சொன்ன காமெடி பண்ணுறாங்க..கடவுளே..
\\

போன வார யாகத்தில் நீ தான் மச்சி முக்கியமான எண்ணெய்யாக இருந்தாய் ;)))

கோபிநாத் said...

\\சந்தனமுல்லை said...
பாஸ்..ஒரே இன்ஃப்ர்மேட்டிவ்வா இருக்கு..மொக்கை இல்லைன்ற குறைய சட்டை தீர்த்து வைச்சுடுச்சு...:-))))\\

ரைட்டு இப்படி தான் இருக்கனும் ;))

\\பத்திரிக்கை ரொம்ப நல்லாருக்கு..ஸ்ரீஹரி உங்க இன்னொரு பேரா பாஸ்?!! :-)))
\\\

அந்த ஸ்ரீஹரிக்கு மேல எழுதியாதை படிக்கிவில்லையா நீங்க!!??

கோபிநாத் said...

\\குறை ஒன்றும் இல்லை !!! said...
//சட்டை சூப்பருங்க!

//பத்திரிக்கை சூப்பரப்பு! உன் கல்யாணத்துக்கு இதுமாதிரி புதுமையா எதாவது செய்யி...//

நடந்தா!? செய்யலாம்.//

haa haa haa...
Repeateeeeee
\\

ரொம்ப ஈசியாக முடிச்சிட்டிங்க ;))

கோபிநாத் said...

\\கணேஷ் said...
சட்டை சூப்பர் மேட்டர் :) எங்க வாங்குனீங்க :)
\\

கணேஷ் என்ன கதையை முதல்ல இருந்து சொல்ல சொல்லுவிங்க போல!! ;))

கோபிநாத் said...

\\pappu said...
பெஞ்சமின் பட்டனோட ரிவர்ஸ்னு வேணா சொல்லலாம். பட், இது மாதிரி ஆயிரம் படம் வருது, கேள்வி இல்லை. நமக்கு படம் நல்லாருந்தா சரி.

ஓல்டு பாய் செம கதையில்ல? கர்பத்துக்கு காரணம் 'அது' இல்ல. உன் வாய்தான்னு சொல்லும் போது.... அடங்கொக்கமக்கா?
\\

ஆகா...உடனே பார்த்துடுறேன்..அவ்வவ்வ்வ்வ்..எப்படி எல்லாம் யோசிக்கிறானுங்க !!!

கோபிநாத் said...

29...

கோபிநாத் said...

30...போதும்மய்யா..

☀நான் ஆதவன்☀ said...

@கலை
யோவ் நான் எப்பய்யா இத முதல்ல எழுதினேன்? கல்யாணம் முடிஞ்ச கையோட இதை கோபிக்கும், சென்ஷிக்கும் சொன்னேன். போன வாரம் உனக்கும் சொன்னேன். ங்கொய்யால ஆளாளுக்கு இப்படி வாருறீங்களே? கடந்த பதிவுல ஏதாவது எழுதியிருக்கேன்னான்னு காட்டு பாக்கலாம்.

இவ்வளவு சொல்லியும் ஸூப்ரமண்யம் புக்கை கேட்குறயா நீயீ :)
-----------------------------------
@அதி பிரதாபன்

சட்டை மேட்டரை தெரியாம எழுதிட்டேன் மாப்பி. ஆளாளுக்கு கலாய்கிறாங்க :)

//முடியும்போது பேச்சு வராது, நமக்கும்.//

கரெக்ட் :)

பத்திரிக்கை மெயில்ல வந்தது மாப்பி.
------------------------------------
@ஷாகுல்

//சட்டை சூப்பருங்க!//

ரொம்ம்ம்ம்ப நன்றிங்க

//நடந்தா!? செய்யலாம்.//

யோவ் மருவாதையா நன்றிய திருப்பி கொடுத்திரு!

☀நான் ஆதவன்☀ said...

@நாகா

வாங்க தல. சத்தியமா இப்ப தான் அந்த சட்டை கதைய எழுதுறேன். ஆனா நிறைய பேர்கிட்ட சொல்லியிருக்கேன் தல.
நன்றி தல
--------------------------------------
@ஆயில்ஸ்

வாங்க பாஸ். உங்களுக்குமா? அவ்வ்வ்வ்வ் :)
--------------------------------------
@கிரி
நன்றி கிரி
சப்டைட்டில் ஆங்கிலத்துல இல்லைன்னா ரொம்ப கஷ்டம். படத்தோட சில வசனங்கள் ரொம்ப முக்கியம் கிரி.
--------------------------------------
@மௌனி

உங்களுக்கு தான் நாங்க நன்றி சொல்லனும் மௌனி :)
--------------------------------------
@வினோத்

நீ இங்க வந்தேன்னா அந்த சட்டைய போட்டு வந்தே காமிக்கிறேன். போதுமா :)

//இதை நான் படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே யூகித்து விட்டேன்..இதை சொன்ன காமெடி பண்ணுறாங்க..கடவுளே..//

உன்னைய தான் தேடிட்டு இருக்கோம்.... சீக்கிரம் இங்க வந்து சேரு :)

☀நான் ஆதவன்☀ said...

@சந்தனமுல்லை

வாங்க பாஸ். மொக்கையில்லையேல் யாம் இல்லை பாஸ் :)

பாஸ் பேரை மாத்தினா தான் சீக்கிரம் கண்ணாலம் நடக்கும்னா அதுக்கும் ரெடி பாஸ் :)
--------------------------------------
@குறை ஒன்றும் இல்லை

வாங்க ராஜ். ரொம்ப நன்றி

அவ்வ்வ்வ்வ் ஒய் திஸ் மர்டர் வெறி :)
--------------------------------------
@கணேஷ்

வாங்க கணேஷ். சட்டை சென்னையில தான் வாங்கினேன்.

அவ்வ்வ்வ்வ் சியாமளாவா?? அப்ப நாயகன் ஆதவன் தானா? க்ரேட் :)
--------------------------------------
@பப்பு

வா பப்பு. ஆமா படம் நல்லாயிருந்தா போதும் நமக்கு

//ஓல்டு பாய் செம கதையில்ல? கர்பத்துக்கு காரணம் 'அது' இல்ல. உன் வாய்தான்னு சொல்லும் போது.... அடங்கொக்கமக்கா?//

உண்மையிலயே நல்ல இடம் அது. அதுவும் கடைசியில அவன் நாய் மாதிரி நடிக்கிறது கண்ணு கலங்கிடுச்சு :)
--------------------------------------
@கோபிநாத்

உங்க கும்மிக்கெல்லாம் போன்ல வச்சுக்கிறேன் சாமீ!

seemangani said...

கல்யாணப் பத்திரிக்கை... சட்டை... ”நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம்” நல்ல விஷயம்...
மொத்தத்தில்
பஞ்சாமிர்தம் சூப்பரப்பு அண்ணே......

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

ஸாரி தல முதல்ல பதில்கள் போடும் போது கவனிக்கல

//கல்யாணப் பத்திரிக்கை நல்லா இருக்குது. ஏன்யா வெண்ண டேட் போட்டா என்ன? போய் சாப்பிட்டுட்டா வரப்போறோம்.. //

சரியா நான் யோசிச்சதே நீங்களும் யோசிச்சுருக்கீங்க :) சரியா சொல்லனும்னா இந்த கல்யாணம் போன வாரம் முடிஞ்சுருச்சு. ரெண்டு வாரத்துக்கு முன்னவே நான் கருப்படுச்சு டிராப்ட்ல போட்டுட்டேன்.

//அப்பாலிக்கா சட்டை ஜோக் - செம்ம மொக்கை. சிரிப்பே வரலை..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்
------------------------------------
@சீமான் கனி

ரொம்ப நன்றி கனி :)

ஸ்ரீமதி said...

//கலையரசன் said...
ஏன்டி.. சட்டை கதையை ஏற்கனவே எழுதிட்டியே! என்ன துாக்கமா?

ஸ.ஸூப்பரமண்யம் புக் எல்லாம் எங்கிருந்துடா புடிக்கிற? எனக்கு குடுத்தா நானும் தலைக்கு வச்சி துாங்குவாமுல்ல..//

ஹா ஹா ஹா கமெண்ட் சூப்பர்.. :)))

ஹுஸைனம்மா said...

சட்டையே போடாதவன் திடீர்னு போட்டா அப்படித்தான் எல்லாரும் கேப்பாங்க.

இல்லன்னா இதுவரை நீங்க போட்டது சட்டை மாதிரி இருந்திருக்காது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கல்யாண பத்திரிக்கை பார்மேட் சூப்பர்.

இதே கல்யாணம் சென்னைல இருந்தா எப்படி அழைச்சிருப்பாங்கன்னு யோசிச்சுப் பார்த்து ஒரு நல்ல பதிவா போடுங்க பாஸ் :)

ஊர்சுற்றி said...

ஏகப்பட்ட தகவல்கள். நன்று.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

யோவ் தேவுடு
கலக்கிட்டைய்யா காப்பி,என்ன சாட்ல வந்த போயிட்ட? நல்ல சட்டை காமெடி, ஹிட்லர் புத்தகம் படிக்க நினைப்பதைவிட படம் பார்ப்பது நலம், என்னிடம் கிழக்கு பதிப்பகம் போட்ட சிறிய வாழ்க்கை வரலாறு புத்தகம் உண்டு, அதை படி.
ஓல்டு பாய் பாத்தியா?
நல்ல கலவை
ஓட்டு போட்டாச்சு

கிறுக்கல் கிறுக்கன் said...

//அதி பிரதாபன்
அந்த ஓல்டுபாய் படம் பார்த்திருக்கிறேன். சப்டைட்டில் கிடைக்காமல் ஒரு மாதம் காத்திருந்து பார்த்த படம். அட்டகாசமான முடிவு. முடியும்போது பேச்சு வராது, நமக்கும்.\\

இப்படி ஆளாளுக்கு கிளப்பி விட்டா நான் என்ன பண்றது நானும் டவுன்லோட கிளம்பிட்டேன்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்லா கின்டி இருக்கீங்க, ச்சி கின்டுனா அது அல்வா இல்லையா, பிசன்ஜாதான பஞ்சாமிர்தம்??!!!

///சப்-டைட்டிலோடு பார்க்கவும்.///
ஒரு சின்ன டவுட், சப்-டைட்டில படிக்கவா, இல்ல படத்த பாக்கவா?
எனக்கு ஹே ராமே பிரியல இதுல எங்க கொரியா பிகர பாக்க?
ச்சி கொரியா படத்த பாக்க.!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சந்தனமுல்லை said...//பாஸ்..பத்திரிக்கை ரொம்ப நல்லாருக்கு..ஸ்ரீஹரி உங்க இன்னொரு பேரா பாஸ்?!! :-)))//
ஹி... ஹி... பாஸு ஏன் இந்த கொலைவெறி????

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆதவன் said...// பாஸ் பேரை மாத்தினா தான் சீக்கிரம் கண்ணாலம் நடக்கும்னா அதுக்கும் ரெடி பாஸ் :)
ஒரு ஐடியா, பேர சின்ன தம்பூரான் என்று மாத்தினா, ஒரு டீனாவோ, சுமோல் தமசோ, இல்லாட்டி பிசின் தொட்டும்கல்லோ, ச்சே அசின் தொட்டும்கல்லோ கிடைக்க வழி இருக்காம். நம்பூத்ரி சொன்னார்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

45

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

46

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

47

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

48

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

49

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

50

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

50

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஒன்னும் இல்ல, "ஹே ராம்" பார்த்த எஃபக்ட்.
இதுக்காக நீங்க பிரம்மஹத்தின்னு திட்ட வேண்டாம்

கமலேஷ் said...

ரொம்பவே நல்லா இருக்கு....

ஜெகநாதன் said...

சட்​டை எங்க எடுத்த, எங்க எடுத்தன்னு எல்லாரும் ​கேக்கறாங்கல்ல... ​ஜெகன் வீட்டு ​கொடியில எடுத்​தேன்னு ​சொல்லலாமில்ல???

2 படவிமர்சனமும் நல்ல அலசல்.. இந்த மாதிரி பகிர்வுக​ளை தனியாக ​​டேட்டா​பேஸ் மாதிரி பதிந்து ​கொண்டிருக்கி​றேன். நிச்சயம் பாத்தும் விடுகி​றேன்!

வாழ்த்துக்கள்!

நாஞ்சில் பிரதாப் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்..... அப்படியே அயர்ன் செய்த சட்டையை மடித்து உள்ளே வைத்து விட்டேன்.//

எங்க அந்த சட்டைஒருதடவை பார்க்கட்டும்... இத்தனை பேருக்கு புடிக்சிருக்குன்னா அது கண்டிப்பா மொக்கை செலக்ஷனாத்தான் இருக்கனும்..நல்ல சட்டை போட்டா எவனும் நல்லாருக்குன்னு சொல்ல மாட்டான்...தல

நாஞ்சில் பிரதாப் said...

ஓல்டு பாய்...கலையசரன் ஹாலிவுட் பாலாகிட்ட சொன்னபோதே நானும் ட்ரை பண்ணுனேன். சப் டைட்டிலோட கிடைக்ககமாட்டுது தல..

நாஞ்சில் பிரதாப் said...

//ஸூப்பரமண்யம் என்றிருக்கும் போதே கொஞ்சம் உசாராகி இருக்க வேண்டும். //

அதான் நான் ஒரு மொக்கைசாமின்னு பேருலயே புரியவைக்கிறாரோ... அதுக்கப்புறமும் ஏன்டி படிக்கிறே...

நாஞ்சில் பிரதாப் said...

திருமண அழைப்பிதழ் டாப்பு... ரொம்ப கிரியேட்டிவா இருக்கு...

Nawabjan said...

// தலைக்கு மேல் இருக்கும் ஆயிரத்தில் ஒரு வேலையைப் பார்க்க சென்றார். // - Kalakkal

கலகலப்ரியா said...

"சட்டை சூப்பரப்பு"... super..!

//ஆசையாக ஹிட்லரின்//

நல்ல ஆசை சாமியோ..! விசாரிக்கிறேன்..!

//ஸ.ஸூப்பரமண்யம்//

=))

அழைப்பிதழ் அருமை..

ஸ்ரீமதி said...

இந்த ஒரு பதிவ வெச்சே காலத்த ஓட்டலாம்ன்னு இருக்கீங்களா அண்ணா? ;))

ஸ்ரீமதி said...

//உங்கள் "பொக்கிஷ" கருத்து//

ம்க்கும் இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல.. பதிவு மட்டும் போட்டுடாதீங்க.. ;))))))))))

Related Posts with Thumbnails