குடிகாரன் பேச்சு அப்பவே போச்சு!

குடிப்பதும் நல்ல நாட்களின் சம்பிரதாயமாய் ஆகிவிட்ட காலத்தில் என் பிறந்தநாளை குடியோடு முடிக்கலாம் என சேட்டன்(கேரளா) விடுத்த கோரிக்கையை என்னால்(தமிழ்நாடு) நிராகரிக்க முடியவில்லை. மோகன்ரெட்டியும்(ஆந்திரா) அதை ஆமோதிக்க KFCயோடு ஒரு முழு பாட்டிலும், இரண்டு டின் பியரும் வாங்க ஆயுத்தமானோம். வாங்கினோம்.

முழு பாட்டிலை வாங்கி, அதை தொடங்கும் முன் மேசையின் நடுவே வைத்து விட்டு விதவிதமாக புகைப்படம் எடுப்பது அறையின் ஒரு வருட வழக்கமாகி விட்டது. எதற்காக படம் எடுக்கிறோம் என்று யாருக்கும் தெரியவில்லை. எடுத்த படத்தை என்ன செய்தோமென்றும் ஞாபகம் இல்லை. காரணமே இல்லாமல் அதுவும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகிவிட்டுருந்தது.புகைப்படம் எடுத்துகொண்டிருக்கும் போதே ரெட்டியின் கைப்பேசி அழைக்க, அவன் நண்பன் அறைக்கு வருவதாக தெரிவித்துள்ளான். ’விருந்தோம்பலுக்கு’ மூன்று மாநிலமும் ஒன்றுக்கொன்று சலித்ததல்ல என்பதனால் அவனையும் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ள தீர்மானித்தோம். அதுமட்டும் காரணமா என்று சரியாக சொல்ல முடியவில்லை. தமிழர்கள் மட்டும், அல்லது மலையாளிகள் மட்டும் குடித்தாலும் குடிக்கும் நேரத்தில் யார் வந்தாலும் வற்புறுத்தி குடிக்க வைப்பதை கண்டிருக்கிறேன்.

ரெட்டியின் நண்பனுக்காக காத்திருந்தோம். வந்தான்.

நான்கு வருட அமீரக இயந்திரவாழ்க்கையில் என் அங்கமாகிவிட்ட மலையாள மொழியால், நானும் சேட்டனும் சரளமாக உரையாடியதை வைத்து அந்த ரெட்டியின் நண்பன் நாங்கள் இருவரும் மலையாளிகள் என்ற எண்ணத்திற்கு வந்திருக்க வேண்டும். இருந்த போதிலும் முடிந்த வரை அனைவருக்கும் பொதுவான ஹிந்தியில் உரையாடினோம். (உடனே ஹிந்தியின் மகத்துவத்தைப் பார்த்தாயா? என்றபடி யாரும் ஓடி வந்துவிட வேண்டாம்).

உடம்பில் கொழுப்புகள் எங்கிருந்தாலும் பிரச்சனை தான். முக்கியமாக வாய்கொழுப்பு. அது தமிழனுக்கு எவ்வளவு இருக்கிறதோ அதைவிட அதிகமாக மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும் இருக்கிறது என்பது கடந்த சில வருடங்களாக உணர முடிந்தது. இங்கே பிரிவினையை கொண்டு வராமல் தென்னிந்தியர்களுக்கு ‘வாய்கொழுப்பு அதிகம்’ என முடிக்கலாம் அனைவருக்கும் பொதுவாக.

”வாங்க ஆரம்பிக்கலாம்” என சேட்டன் அனைவரையும் அழைக்க, சற்றே தயங்கிய ரெட்டியின் நண்பன் “இல்லை எனக்கு வேண்டாம்” என்ற எதிர்பார்த்த பதிலை கொடுத்தான். “ஏன்” என்ற அடுத்த கேள்விக்கு “பழக்கமில்லை” என்ற பதில் வரலாம் என்று நினைத்த போது “அதிகம் பழக்கமில்லை” என்ற பதில் சற்றே அனைவருக்கும் ஒரு புன்னகையைத் தந்தது.

சேட்டன் அவன் குடிப்பதை உறுதி செய்தவராக நாலு கண்ணாடி க்ளாஸ்களில், அனைவருக்கும் ஒரே அளவாக ஊற்றினார். முதல் சுற்று முடிவடைந்தது.

வாய்கொழுப்பு ஆரம்பமானது இங்கு தான். “எனக்கு தெரிந்து தெலுங்கர்கள் அதிகம் குடிப்பார்கள். இதுவரை குடிக்காத தெலுங்கனை கண்டதில்லை. நீ வேண்டாம் என்ற போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது” சேட்டன் முந்திரியை எடுத்து வாயில் போட்டவாறு அவனைப் பார்த்தார். சேட்டன் ரெட்டியின் நண்பனுக்கு வைத்த ’ஆப்பு’ மிகச்சிறியதாக இருந்தாலும் கூராக இருந்ததது.

பொதுவாக எதுவும் குடித்திறாத போதே, நான் நாலு மலையாளிகளுடனோ, வட இந்தியர்களுடனோ பேசும் போது மாநிலம் சார்ந்த அரசியல் பேச்சுகளை தவிர்ப்பேன். முல்லை பெரியார், கருணாநிதி, ஹிந்தி திணிப்பு, ராஜ்&பால் தாக்கரே என பல விசயங்களில் ஒதுங்கி இருந்திருக்கிறேன். இப்போது அனைவரும் குடித்திருக்கிறோம்.

சேட்டனின் கேள்வியில் சற்றே நெளிந்த அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரெட்டியைப் பார்க்க, ரெட்டியும் ஒரு வித சங்கோஜ நிலைக்கு போக கடைசியில் ரெட்டியின் நண்பன் ஒரு முடிவுக்கு வந்தவனாக “அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. எனது ஊரில் யாரும் அதிகமாக குடிப்பது கிடையாது.” என்று கூறி முடித்திருந்தால் அங்கேயே வேறு தலைப்புக்கு சென்றிருக்கலாம்.

ஆனால் யாரை திருப்தி படுத்துவதற்காக மேலும் இதைச் சொன்னானோ தெரியவில்லை “எனக்கு தெரிந்து தமிழர்கள் தான் அதிகம் குடிப்பவர்கள். அவர்களைப் போல் குடிக்கவே முடியாது” என்றான் . அதுவரை நான் தமிழன் என்று அவனுக்கு தெரியாது.

’ஆப்பு’ மிக அழகாக எனக்கும் அவனிடமிருந்து எடுத்து வைக்கப்பட்டது. கொஞ்சம் நானும் நெளிய தொடங்கினேன். என்னடா இவன் கேட்டததே கேனத்தனமான கேள்வி. அதற்கு பதில் சொல்லியே இருக்க கூடாது. சரி அப்படியே சொன்னாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் என்ன? என்று எரிச்சலடைந்தேன்.

சேட்டனிடம் ஒரு உதட்டோர புன்னகையும், ரெட்டியின் நண்பன் பாரம் இறக்கி வைத்த நிம்மதியுடன் அடுத்த ‘ஸிப்’ பருகுவதையும் கண்டேன். ரெட்டி “யரா அத்தனு தமிழ்றா” என்னை நோக்கி கை காண்பித்து சிரித்தான். அவன் நண்பன் இதை எதிர்பார்க்கவில்லை.

அவசரமாக வாயறருகே கொண்டு சென்ற க்ளாஸை அப்படியே கீழே வைத்து “பாஸூ நான் பொதுவா தான் சொன்னேன். நான் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் தான் படித்தேன் அங்க நிறைய....” என நிறைய புலம்பினான்.

சில வினாடிகள் அறையே அமைதியாக இருந்தது. நான் “பரவாயில்லை பாஸூ. ” என்று ஆரம்பித்த நான் பின்பு “எனக்கு தெரிந்து மலையாளிகள் தான் நல்ல குடிப்பார்க்கள். இந்த ஓணத்திற்கு கூட விற்பனையில் கூட சாதனை படைத்ததாக டிவியில் சொன்னார்கள்” என்று ஆப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே வைத்தேன். சில ஆதாரத்தோடு.......

சபையில் சில நிமிட மவுனங்கள். பின்பு ஆப்பு இடம் மாறி பல இடங்களுக்கு சென்று மறுபடி என்னிடம் வந்து, நான் அதை திருப்பி விட்டு............ இப்படியே பல மணி நேரம் சென்றபோது தான் தெரிந்தது.......................... பாட்டில் காலி.

“தம்பி அடுத்த பாட்டில் வாங்காமோ” என சேட்டன் சோதிக்க வேகமாக அதை ஆமோதித்து நானும், ரெட்டியும் அவன் நண்பனும் தலையாட்டினோம்.

விவாதம் தொடர்ந்தது........

37 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சந்தனமுல்லை said...

நீங்க ஒரு தூர்தர்ஷன் பாஸ்! இப்படி பன்மொழி வித்தகரா இருக்கீங்க!! :))))

சந்தனமுல்லை said...

/இங்கே பிரிவினையை கொண்டு வராமல் தென்னிந்தியர்களுக்கு ‘வாய்கொழுப்பு அதிகம்’ என முடிக்கலாம் அனைவருக்கும் பொதுவாக.
/

இங்கேதா பாஸ் நீங்க நிக்கறீங்க!! :))))

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் பாஸ் நான் ஒரு வெத்துவெட்டுன்னு சொல்லாம சொல்லிட்டீங்க பாஸ் :)

☀நான் ஆதவன்☀ said...

//
இங்கேதா பாஸ் நீங்க நிக்கறீங்க!! :))))//

டாங்ஸ் பாஸ் :)

ஈ ஓட்டிகிட்டு இருந்த கடையில கமெண்ட் போட்டு பாலை வார்த்திட்டீங்க பாஸ். நன்றி

குசும்பன் said...

குடிக்கிறது டூப்ளிக்கேட் சரக்கு, சைனா பீர் இதுக்கு இம்புட்டு பேச்சே ஓவர்!

என்னை மாதிரி அக்குவாபீனா,கின்லே என்று இன்டர்நேசனல் சரக்கு அடிக்கிற ஆளா இருந்தா என்னா பேச்சு பேசி இருப்பீங்க:)

ஆயில்யன் said...

நீங்க ஒரு தூர்தர்ஷன் பாஸ்! இப்படி பன்மொழி வித்தகரா இருக்கீங்க!! :))))

ஆயில்யன் said...

//ஈ ஓட்டிகிட்டு இருந்த கடையில கமெண்ட் போட்டு பாலை வார்த்திட்டீங்க பாஸ். நன்றி//

அப்பிடி சொல்லபிடாது பாஸ் ஐயம் பிசி :)))))

ஆயில்யன் said...

//என்னை மாதிரி அக்குவாபீனா,கின்லே என்று இன்டர்நேசனல் சரக்கு அடிக்கிற ஆளா இருந்தா என்னா பேச்சு பேசி இருப்பீங்க:)//
ஆமாம் பாஸ் ஆமாம்! நம்ம குரூப்ல இந்த பயபுள்ளைய சேக்காதீங்க!!!

குசும்பன் said...

எப்பொழுதும் குடிகார பசங்களுக்கு மற்றவர்களை விட அதிகம் குடிச்சோம் என்று காட்டிப்பதில் தானே ஆர்வம் காட்டுவார்கள்! இங்க என்ன உல்டாவா இருக்கு?

குசும்பன் said...

//இங்கே தான் பாஸ் நீங்க நிக்கறீங்க!! :))))//

ம்கும் அடிச்ச ஒரு கிளாசுக்கே மட்டையாகி நிக்கமுடியாம தவழ்ந்துக்கிட்டு இருக்கேன்.

இப்படிக்கு
ஆதவன் மனசாட்சி

ஸ்ரீமதி said...

தெலுங்கு தெரியாதா?? ;)))

அகல்விளக்கு said...

//“தம்பி அடுத்த பாட்டில் வாங்காமோ” என சேட்டன் சோதிக்க வேகமாக அதை ஆமோதித்து நானும், ரெட்டியும் அவன் நண்பனும் தலையாட்டினோம்.//

எதில ஒன்னு சேரணுமோ அதில சேர்ந்துடுவோம்ல

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ காரணமே இல்லாமல் அதுவும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகிவிட்டுருந்தது//
:)

கோபிநாத் said...

அடப்பாவி இதை தானே இம்புட்டு நாளா தேடிக்கிட்டு இருந்தேன்...என்னோட செல்லம் அம்முக்குட்டி...எத்தனை நாள் ஆச்சு உன்னை பார்த்து..!!!!!

ஆதவா எங்கடா கிடைக்குது 5000 பீர்..!!??

உடனே முழுவிபரத்தையும் அனுப்புடா.

கலையரசன் said...

இதுக்குதான் என்னைய மாதிரி தனியா டிக்கனுமுன்னு சொல்றது...

ஏன்னா, நம்மல நாமே எப்டி எதிர்த்து பேச முடியும்? கரைக்டா செல்லோம்....?

Mohan Kumar said...

கலக்கலா இருக்கு இந்த பதிவு. சில நண்பர்கள் comments-ம் அருமை. ஓட்டும் போட்டாச்சு.Continue பண்ணுவீங்களா இந்த article-ஐ ?

http://veeduthirumbal.blogspot.com

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஏங்க படத்த போட்டு உசுப்பேத்துறீங்க?
நாங்கெல்லாம் என்ன செய்றது?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

கோபிநாத் said...//ஆதவா எங்கடா கிடைக்குது 5000 பீர்..!!??//
ம்.ம்..ம்...ம்.... இங்க நான் ஆல்ககாலிக் பீருக்கே வழி இல்ல,
என்ன கொடுமை ஆதவன் இது !!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

கோபிநாத் said // உடனே முழுவிபரத்தையும் அனுப்புடா.//
ஃ பாஸ் அஜ்மான் ப்ரீ ஜோன். கேட் நம்பர் 5, சகலவித சரக்கும், ஏன் "ஓல்ட் மங்க்" கூட கிடைக்கிறது

ஷாகுல் said...

கடைசியில யாருக்கு அடி விழுந்துது.

☀நான் ஆதவன்☀ said...

@குசும்பன்

//என்னை மாதிரி அக்குவாபீனா,கின்லே என்று இன்டர்நேசனல் சரக்கு அடிக்கிற ஆளா இருந்தா என்னா பேச்சு பேசி இருப்பீங்க:)//

சரக்கு சரி மிக்ஸிக்கு என்னென்னு சொல்லவே இல்லை?

//எப்பொழுதும் குடிகார பசங்களுக்கு மற்றவர்களை விட அதிகம் குடிச்சோம் என்று காட்டிப்பதில் தானே ஆர்வம் காட்டுவார்கள்! இங்க என்ன உல்டாவா இருக்கு?//

அவ்வ்வ்வ் அன்னைக்கு அது மானப்பிரச்சனையாகிடுச்சுல்ல :) இதே ரூம்ல ”எங்காளு தான் நிறைய தண்ணியடிப்பேன்”னு எவனாவது சொல்லியிருந்தா ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி விவாதம் நடந்திருக்கலாமோ? :)
------------------------------------
@ஆயில்யன்

//ஆமாம் பாஸ் ஆமாம்! நம்ம குரூப்ல இந்த பயபுள்ளைய சேக்காதீங்க!!!//

அவ்வ்வ் பாஸ் உங்களுக்கெல்லாம் சொர்க்கத்துல நிச்சயம் இடம் உண்டு :)
-------------------------------------
@ஸ்ரீமதி

நாக்கு தள்ளுது ஸ்ரீமதி :))
-------------------------------------
@அகல்விளக்கு

ஹி ஹி சரிதான். ஆனா அந்த பதிவோட முக்கியமான முடிவு அது. அது இன்னும் புரியலைன்னு நினைக்கிறேன் :)
-------------------------------------
@அமித்து அம்மா

:(

☀நான் ஆதவன்☀ said...

@முத்தக்கா

ம்ம்ம்ம்ம்ம் நன்றிக்கா :)
-------------------------------------
@கோபிநாத்

எல்லாம் அவன் செயல் தல :) அவன்கிட்ட பீர்ல மட்டும் என்னைக்கு எந்த பிராண்ட் இருக்கும்னு தெரியவே தெரியாது.
-----------------------------------
@கலையரசன்

நீ யாரு எப்பேர்பட்ட ஆளு. உன் அளவுக்கு மூளையெல்லாம் எனக்கு வருமா :)
------------------------------------
@மோகன்

வாங்க மோகன். ரொம்ப நன்றி. இது மாதிரி அப்பப்ப வரலாம். ஆனா இதை தொடருவேனான்னு தெரியல :)
------------------------------------
@பாலா

அதான் அப்பப்ப துபாய் வர்ரீங்க இல்ல. அப்புறம் என்ன :)

அதுவும் அஜ்மான் அட்ரஸ் எல்லாம் தெரிஞ்சிருக்கே :)
--------------------------------------
@ஷாகுல்

ஒரு லெவலுக்கு மேல போன பிறகு அடியாவது முத்தமாவது... ஞாபகம் யாருக்கு இருக்கு:)

வினோத்கெளதம் said...

அங்க தான் கன்னடக்காரன் இல்லயில உங்க குருப்புல அதனால பொத்தம் பொதுவா பழியை அவன் மேல தூக்கி போட்டு இருக்கலாம்..

அது எல்லாம் சரி நம்ம எல்லாம் சேர்ந்து தண்ணி அடிச்சா எப்படி மாவட்டம் வாரிய அடிச்சுபோமா..:)

pappu said...

நாசமாப் போச்சு!
மூணு பேரும் குடிச்சிட்டு ஊரெல்லாம் குடிகாரனுங்கன்னு ஏசிருக்கீங்க. இதுக்கு ஒரு பதிவு. அது சரி, என்னைய மாதரி என்னவாயிருந்தாலும் கமெண்ட் போடு ஃபாலோயர் இருக்கிறவரை உங்களுக்கு கவலை என்ன?

அந்த சைட் டிஷ்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கிறேன்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

என்னதான் "ஜானி வாக்கர் ரெட் லேபிலா" இருந்தாலும், கொய்யால ஊர்காய விட மாட்றீங்களே,
அநேகமாக இது உங்க ஐடியா வா தான் இருக்கும்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அடப்பாவி இதை தானே இம்புட்டு நாளா தேடிக்கிட்டு இருந்தேன்...என்னோட செல்லம் அம்முக்குட்டி...எத்தனை நாள் ஆச்சு உன்னை பார்த்து..!!!!!

ஆதவா எங்கடா கிடைக்குது 5000 பீர்..!!??

உடனே முழுவிபரத்தையும் அனுப்புடா.//

ரிபீட்டு போட்டுக்கறேன் தேவுடு.
ஓட்டுக்கள் போட்டாச்சு
ஊருக்கு போவதால் கொஞ்சம் லேட்:))

சின்ன அம்மிணி said...

//நீங்க ஒரு தூர்தர்ஷன் பாஸ்! இப்படி பன்மொழி வித்தகரா இருக்கீங்க!! :))))//

ஆச்சிக்கு ஒரு ரிப்பீட்டு :)

☀நான் ஆதவன்☀ said...

@வினோத்

கன்னடகாரன் - ஆமால்ல :))

//அது எல்லாம் சரி நம்ம எல்லாம் சேர்ந்து தண்ணி அடிச்சா எப்படி மாவட்டம் வாரிய அடிச்சுபோமா..:)//

நேர்ல வருவேல்ல....அப்ப வச்சுக்கிறேன் :)
------------------------------------
@பப்பு

//நாசமாப் போச்சு!
மூணு பேரும் குடிச்சிட்டு ஊரெல்லாம் குடிகாரனுங்கன்னு ஏசிருக்கீங்க//

இதுவரைக்கும் வந்த பின்னூட்டத்திலேயே நீ ஒருத்தன் தான் பதிவை சரியா புரிஞ்சிருக்க பப்பு :))) நன்றி

//என்னைய மாதரி என்னவாயிருந்தாலும் கமெண்ட் போடு ஃபாலோயர் இருக்கிறவரை உங்களுக்கு கவலை என்ன?//

இன்னொரு தடவை மூட்டை பூச்சி வந்தது கரப்பான் பூச்சி வந்ததுன்னு பதிவு போடு.......அப்புறம் இருக்கு உனக்கு.
-----------------------------------
@பாலா

அவ்வ்வ்வ் திரும்ப திரும்ப போட்டோவைப் பார்க்கவே வரீங்க போல :) டோண்ட் வொர்ரி பாலா

//கொய்யால ஊர்காய விட மாட்றீங்களே,
அநேகமாக இது உங்க ஐடியா வா தான் இருக்கும்?//

ஹி ஹி ஹி
------------------------------------
@கார்த்திகேயன்

தேவுடு ஊருக்கு போறதுக்கு நீங்க தான் ட்ரீட் கொடுக்கனும். ஊருக்கு போய் என்சாய் பண்ணிட்டு வாங்க. பலாக்கெல்லாம் மறந்திடுங்க :)
------------------------------------
@சின்ன அம்மணி

நன்றிங்க :)

சென்ஷி said...

//குசும்பன் said...

எப்பொழுதும் குடிகார பசங்களுக்கு மற்றவர்களை விட அதிகம் குடிச்சோம் என்று காட்டிப்பதில் தானே ஆர்வம் காட்டுவார்கள்! இங்க என்ன உல்டாவா இருக்கு?//

நல்லவனுங்களாமாம் :)))

சென்ஷி said...

//வினோத்கெளதம் said...

அங்க தான் கன்னடக்காரன் இல்லயில உங்க குருப்புல அதனால பொத்தம் பொதுவா பழியை அவன் மேல தூக்கி போட்டு இருக்கலாம்..

அது எல்லாம் சரி நம்ம எல்லாம் சேர்ந்து தண்ணி அடிச்சா எப்படி மாவட்டம் வாரிய அடிச்சுபோமா..:)//

ஏன் மச்சி.. அன்னிக்கு தண்ணி அடிச்சப்ப யாரை ஓட்டினோம்ன்னு மறந்துடுச்சா :)

ஆ! இதழ்கள் said...

பதிவ படிச்சாலே ஜிவ்வுனு ஏறுது, பதிவு எழுதுறவரையிலும் தெளியலையா?

சாம்ராஜ்ய ப்ரியன் said...

அடுத்த நாள் காலையில யார் யாரு எத்தன மணிக்கு எழுந்தீங்க?

நாஞ்சில் பிரதாப் said...

எந்த விசயத்ல அடிபோட்டாலும்,, இந்த சரக்கு மேட்டருல மட்டும் எல்லாவனும் மாமா, மச்சான் ஆயிடுரானுங்க... வாழ்க குடிமக்கள்...

Rajkumar said...

BOSSS.....

From the photos, I got below informations.

You talked about KFC, but there is no KFC items

You guys are having SAMSUNG tv in your room.

Think the Pringles chip also had liquor on that day...see it is upside down.

One pack Haldirams used as side dish

Two pack of snacks from AJMAN made also used as side dish

Think out of four, one guy have habit of mixing soda with liquor. Two club soda is not enough to mix that full bottle

You guys are storing water in SPRITE bottle.

The salt bottle is not NEZO...NEZO brand will have good flow.

The next bottle to the salt seems to be imported item from India.

The corner white carry bag must have food items from Chetan Cafe.

The new paper next to the White carry bag must be used to wrap the liquor.

On the table...there are two cafe's menu books.

I guess...Chetan is the one pouring the soda. The ring seems to be marriage ring.

Think you guys must bought the pickles just before the party(?) form near by grocery.

eppudiiiiiiii....nangalum கருத்து poduvomilla....chumavaaaaa 3 days EID holidays. Color coloraaa comment adipom

அது சரி said...

//
நான் “பரவாயில்லை பாஸூ. ” என்று ஆரம்பித்த நான் பின்பு “எனக்கு தெரிந்து மலையாளிகள் தான் நல்ல குடிப்பார்க்கள். இந்த ஓணத்திற்கு கூட விற்பனையில் கூட சாதனை படைத்ததாக டிவியில் சொன்னார்கள்” என்று ஆப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே வைத்தேன். சில ஆதாரத்தோடு.......
//

அது..!!!

எங்க போனாலும் நாம புள்ளிவிவரத்தோட பேசுவோமில்ல...:0))) கேப்டன் நம்ம ஊர்க்காரர்னு அவய்ங்களுக்கு தெரியாது போல...:0)))))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Rajkumar said...
BOSSS.....

From the photos, I got below informations.

You talked about KFC, but there is no KFC items

You guys are having SAMSUNG tv in your room.

Think the Pringles chip also had liquor on that day...see it is upside down.

One pack Haldirams used as side dish

Two pack of snacks from AJMAN made also used as side dish

Think out of four, one guy have habit of mixing soda with liquor. Two club soda is not enough to mix that full bottle

You guys are storing water in SPRITE bottle.

The salt bottle is not NEZO...NEZO brand will have good flow.

The next bottle to the salt seems to be imported item from India.

The corner white carry bag must have food items from Chetan Cafe.

The new paper next to the White carry bag must be used to wrap the liquor.

On the table...there are two cafe's menu books.

I guess...Chetan is the one pouring the soda. The ring seems to be marriage ring.

Think you guys must bought the pickles just before the party(?) form near by grocery.

eppudiiiiiiii....nangalum கருத்து poduvomilla....chumavaaaaa 3 days EID holidays. Color coloraaa comment adipom
//
அது ஆருப்பா.....பின்னூட்டம் போடச் சொன்னா, Ph.D. ரிப்போர்ட் போடறாரு.

Related Posts with Thumbnails