கற்றதது கடலளவு-பஞ்சாமிர்தம்

ரொம்ப நாளா மாத்தனும்னு நினைச்சுட்டு இருந்தேன். மாப்பி எவனோ ஒருவன் என்கிற அதி பிரதாபன் புண்ணியத்தால் தளத்தின் டெம்ப்ளேட் எந்தவித பிரச்சனையுமின்றி மாற்றப்பட்டுள்ளது. எப்படியிருக்குன்னு கருத்துல சொல்லுங்க மக்கா. அதுவுமில்லாம அவர் ப்ளாக்கர் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக தனியா ஒரு தளம் நடத்துகிறார். அந்த பக்கமும் போய் உங்க சந்தேகங்களை தீர்த்துகிட்டு அவருக்கு ஆதரவு கொடுங்க மக்காஸ்.
---------------------------------------------------------------------------------------------------
போன வீக் எண்ட் மெஸ்ல தனியா சாப்பிட போனேன். அங்க விஜய் இரசிகர்கள் மலையாளீஸ் மூனு பேர் சாப்பிட்டுருந்தாங்க. நான் போனா ஏதாவது விஜயைப் பத்தி கேட்டுகிட்டே இருப்பாங்க. எனக்கும் சாப்பிடும் போது கொஞ்சம் டைம் பாஸா இருக்கட்டுமேன்னு அவங்க பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சேன்.

’வேட்டைகாரன் எப்ப ரீலீசு’னு ஒரு பக்கி கேட்க நான் தெரியாதுன்னேன். ஆலப்புலால விஜயையோட அடுத்த ஷூட்டிங்க நடக்குது, ஊர்லயிருந்து ப்ரெண்டு சொன்னான் அது என்ன படம்?னு கேட்டானுவ. நான் தெரியல ஒருவேளை ‘சுறா’வா இருக்கலாம்னு சொன்னேன்.

பயபுள்ளைக அன்னைக்கு தண்ணியடிச்சுட்டு இருந்துங்க. இது தெரியாம நான் வழக்கம் போல விஜயை ஓட்ட ஆரம்பிச்சேன். வேட்டைகாரன் எஸ் எம் எஸ் ல இருந்து ரெண்டு பிட்டை போட்டு ‘கக்க பொக்கே கக்க பொக்கே.....’ன்னு சிரிச்சேன். பயபுள்ளைங்க அமைதியா பார்த்துட்டே இருந்துங்க. ஏன் குறு குறுன்னு பார்க்குறானுங்க தெரியாம சிரிப்பை நிறுத்தினேன். “நீ இப்ப சொன்னது ஜோக்கா?”ன்னு கேட்டுட்டு பக்கத்துல இருந்தவன்கிட்ட “டேய் சூரியா இப்ப ஜோக்கு சொல்லப்போறான். சீக்கிரம் சாப்பிடு. கேட்டுட்டு சிரிக்கலாம்”னு சிரிக்காம சொன்னான். அவனும் வேகமா சாப்பிட ஆரம்பிச்சான். நான் கொஞ்சம் உசாராகி அதோட நிறுத்திட்டு வெளிய வந்தேன்.

ஆனா விடலயே அந்த மூனு பேரும். அரை மணி நேரம் பக்கிங்க மூனு பேரும் “ஜோக் இப்ப சொல்லு சிரிக்கிறேன். இப்ப சொல்லு”ன்னு ஒரே டார்ச்சர். டேய் விடுங்கடா நான் போறேன்னா, விடாம “இப்ப சொல்லு கண்டிப்பா சிரிக்கிறேன்”னு சிரிக்காம டார்ச்சர் பண்ணிட்டானுங்க. இனி விஜயை கிண்டல் பண்ணுவேன்???? ம்ஹூம்
------------------------------------------------------------------------------------------------
இப்பெல்லாம் வெட்டியா விட்டத்தப் பார்த்துட்டு இருக்கும் போதெல்லாம் ஒரு “ச்சே என்ன மனுசன் டா நீ? இப்படி சும்மா இருக்குற நேரத்துக்கு நாலு பேருக்கு உதவி பண்ணலாம்ல?” அப்படிங்கிற எண்ணம் வந்து, உடனே கம்யூட்டரை ஆன் செய்து facebookல் லாக ஆன் செய்து “farm ville" சென்று நண்பர்களின் வாய்க்கா வரப்பில் காக்கா, நரியை ஓட்டுகிறேன்.அவ்வ்வ்வ்வ்வ்
------------------------------------------------------------------------------------------------
“குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கரையில் வசிக்காமல், கடலிலேயே வாழ்க்கையைக் கழித்துவிட்டு வரும் கப்பல்வாசிகளின் சாட்சியத்தை “சராசரி மனிதன்” சொல்லும் சாட்சியாக, சில நாடுகளின் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் கப்பலில் ஒருவர் ஆறுமாசத்துக்கு மேல் வேலையில் இருந்தால், அவரது மனநிலை, சராசரி மனிதனின் மனநிலையில் இருக்காது.”

“கப்பலின் உள்ளே இன்ஜின் அறையில் தேங்கும் நீரை நேரடியாக வெளியேற்றக்கூடாது. “OILY WATER SEPARATOR" எனப்படும் கருவி வழியாக எண்ணெயைப் பிரித்து கிட்டத்தட்ட வெறும் தண்ணீரை மட்டும் கடலுக்குள் பம்ப் செய்ய வேண்டும். இல்லையேல் கப்பலைச் சிறைப்படுத்தி விடுவார்கள். உலக அளவில் கடல் நீர் மாசுபடாமல் இருக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன்”

இவ்வாறு நம்மில் பலர் அறியப்படாத தகவல்களை தந்து ஆசிரியரின் கடல் பயணத்தையும் மிக எளிமையான தமிழில், சுவாரஸியமாக தந்திருக்கிறது “கற்றதது கடலளவு” புத்தகம். ஆசிரியர் து.கணேசன். 1987-88 ஆண்டு விகடன் மிகச்சிறந்த மாணவ நிருபராக தகுதி பெற்றவர்.

ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர், புத்தகமாக வந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ சில இடங்களில் சினிமாத்தனங்களையும் மிஞ்சும் இடங்களும் இருக்கின்றன :) இதன் சிறப்பே மாணவர்களும் படித்து புரிந்து கொள்ளும் எளிய முறையில் தன் அனுபவங்களை கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கணேசன். கப்பலில் பணி செய்ய விரும்பவர்கள் முதலில் இதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. முக்கியமாக கிரேக்க கப்பல் கம்பெனிகளைப் பற்றி :)

நடுக்கடலில் கேப்டன், இன்ஜினியர்களுடன் இந்தியக் கப்பல் மூழ்குவதை விவரிக்கும் காட்சி ஆங்கில படத்தை நினைவூட்டுகிறது :) தொடர்ந்து மூன்று மணி நேரம் கிடைத்தால் இந்த புத்தகத்தை படித்து முடித்து விடலாம்.

சென்ஷியின் பின்னூட்டத்திற்கு பிறகே கணேசனும் ஒரு பதிவர் என தெரிந்தது. கூகுளாண்டவரின் உதவியோடு அவரின் வலைத்தளத்தையும் அறிந்து கொண்டேன். இங்கே சென்று “கற்றது கடலளவு” முழுதையும் வாசிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் படித்த (அட சத்தியமா போன வாரம் தாங்க) ஜெயமோகனின் “ஓர் அக்னிப்பிரவேசம்” கட்டுரை சுப்புலட்சுமி பற்றி சில அறிய தகவல்களை அறிய முடிந்தது.

வெளிப்புற தோற்றத்தில் பிராணமப்பெண்ணாக எதற்காக தன்னை மாற்றிக்கொண்டார் அல்லது மாற்றப்பட்டார், அதற்கான நோக்கம் நிறைவேறியதா? அவரின் கடந்த கால வாழ்க்கை, காதல் என்ன? என மிக சுவாரஸியமான கட்டுரை அது. ஆனால் அந்த கட்டுரையே டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ [MS - 'A Life in Music' ,T.J.S George ] என்ற நூலை அடிப்படையாக கொண்டது தான். அவர் பிராமணர் என்று எண்ணி அவரின் இசையைப் போற்றிய அவர் நண்பர் பின்பு அவரைப் பற்றி முழுதும் அறிந்து மாறியதைப் படித்து சிரிப்பை அடக்க முடியவில்லை.

சென்ற விடுமுறையில் “எம்.எஸ் சுப்புலெட்சுமி. வாழ்க்கை வரலாறு” (ஆசிரியர் நினைவில்லை) என்ற புத்தகத்தை வாங்கி வெயிட் அதிகம் இருந்ததால் நான்கைந்து புத்தகத்தோடு அதையும் அங்கேயே வைத்து வந்து விட்டேன். அடுத்த முறை படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.
------------------------------------------------------------------------------------------------
நண்பனின் அலுவலகத்தில்

“சார் இன்னைக்கு வெக்கேசன்ல போறேன்.”

“ஓக்கே. பை. ஹேவ் எ நைஸ் வெக்கேசன்?”

“இந்த தடவை எனக்கு தீடீர்னு கல்யாணம் நடநதாலும் நடக்கலாம் சார்”

“ஏன்யா என்னாச்சு பொண்ணு யாரையாவது லவ் பண்றயா?’

”ஹி ஹி ஹி”

“அப்ப ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறயா?”

“இல்ல சார். எங்க ரெண்டு பேரோட அம்மா அப்பா என எல்லார் முன்னாடியும் தான்”

“ஓ அப்ப குடும்பத்தோட ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?”

இவன் எரிச்சலுடன் “அதெல்லாம் இல்ல சார் சொந்த காரங்களெல்லாம் வருவாங்க”

“அப்புறம் எதுக்குய்யா ஓடிப்போய் கல்யாணம் பண்ணுற?”

இவன் தலையில் அடித்துக் கொள்ள, அவர் சிரித்துக்கொண்டே வாழ்த்து கூறியிருக்கிறார்.

33 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

நாந்தான் முன்னாடி வந்திருக்கேன் !

Cable Sankar said...

டெம்ப்ளேட் நல்லாருக்கு, பதிவும் தான்

ஆயில்யன் said...

//ஜோக் இப்ப சொல்லு சிரிக்கிறேன். இப்ப சொல்லு”ன்னு ஒரே டார்ச்சர். டேய் விடுங்கடா நான் போறேன்னா, விடாம “இப்ப சொல்லு கண்டிப்பா சிரிக்கிறேன்”னு சிரிக்காம டார்ச்சர் பண்ணிட்டானுங்க///

:))))))

சந்தனமுல்லை said...

டெம்ப்ளேட் நல்லாருக்கு..கண்ணை உறுத்தாம!!

/“நீ இப்ப சொன்னது ஜோக்கா?”ன்னு கேட்டுட்டு பக்கத்துல இருந்தவன்கிட்ட /

அவ்வ்வ்வ்!! :))))

சந்தனமுல்லை said...

பஞ்சாமிர்தம் - செம கலக்கல் பாஸ்...ஜாலியா இருக்கு..இன்ஃபர்மேட்டிவாவும்!! நச் நமச்சிவாயம்ன்னு ஒரு விருது இருந்தா உங்களுக்குக் கொடுக்கலாம்!! :))


/உடனே கம்யூட்டரை ஆன் செய்து facebookல் லாக ஆன் செய்து “farm ville" சென்று நண்பர்களின் வாய்க்கா வரப்பில் காக்கா, நரியை ஓட்டுகிறேன்./

ஆகா...அங்கே உங்க அப்பா காண்கிற கனவு என்ன ஆகிறது?!! ஹிஹி

சந்தனமுல்லை said...

/
இவன் தலையில் அடித்துக் கொள்ள, அவர் சிரித்துக்கொண்டே வாழ்த்து கூறியிருக்கிறார்./

வாழ்த்துகள் பாஸ்!! (இப்படி ஏதாவது கொளுத்தி போட்டாத்தானே!!) :)))))

ஆயில்யன் said...

//இப்பெல்லாம் வெட்டியா விட்டத்தப் பார்த்துட்டு இருக்கும் போதெல்லாம் ஒரு “ச்சே என்ன மனுசன் டா நீ? இப்படி சும்மா இருக்குற நேரத்துக்கு நாலு பேருக்கு உதவி பண்ணலாம்ல?” அப்படிங்கிற எண்ணம் வந்து, உடனே கம்யூட்டரை ஆன் செய்து facebookல் லாக ஆன் செய்து “farm ville" சென்று நண்பர்களின் வாய்க்கா வரப்பில் காக்கா, நரியை ஓட்டுகிறேன்.அவ்வ்வ்வ்வ்வ்//

அடப்பாவி மக்கா ஆனா எப்பவுமே பிசி ஸ்டேட்டசுல இருக்குறதுக்கு இதான் காரணமா?

சென்ஷி said...

நண்பர் எவனோ ஒருவனுக்கு வாழ்த்துக்கள். டெம்ப்ளேட் ரொம்ப அழகா இருக்குது...

கடல் கணேசன் ஒரு முன்னாள் பதிவர் .. விகடனில் வந்த தொடரை அவர் பதிவிலும் ஏற்றியிருக்கிறார். தொடர்புடைய சுட்டியை இணைத்து விடவும். பலருக்கும் பயன்படும்.

ஹுஸைனம்மா said...

//“இந்த தடவை எனக்கு தீடீர்னு கல்யாணம் நடநதாலும் நடக்கலாம் சார்”
//

நண்பனுக்கெல்லாம் நடக்குது...பாவம்..

Anonymous said...

டெம்ப்ளேட் நல்லாத்தான் இருக்குது. சுப்புலட்சுமி பத்தினது இண்ட்ரெஸ்டிங்.

ஸ்ரீமதி said...

வாழ்த்துகள் அண்ணா.. ;)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த சூரியன் படம் ஏன் அவ்வளவு டல்லாத் தெரியுது..

ஊருக்குப் போறீங்களா? சொல்ல்ல்ல்லவே இல்லை.

PARTHIPAN said...

MS பற்றி அறிய இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.
நல்ல தகவல்கள்.
பார்த்திபன்

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

வாங்க பாஸ்.
//அடப்பாவி மக்கா ஆனா எப்பவுமே பிசி ஸ்டேட்டசுல இருக்குறதுக்கு இதான் காரணமா?//

இதுவும் ஒரு காரணம் பாஸ் :)
-------------------------------------
@கேபிள் சங்கர்

நன்றி கேபிள் சங்கர் :)
-------------------------------------
@சந்தனமுல்லை

நன்றி பாஸ்.

//ஆகா...அங்கே உங்க அப்பா காண்கிற கனவு என்ன ஆகிறது?!! ஹிஹி//

ஹி ஹி அது கண்டிப்பா ஒரு நாள் நிறைவேத்துவேன் பாஸ்.

//நச் நமச்சிவாயம்ன்னு ஒரு விருது இருந்தா உங்களுக்குக் கொடுக்கலாம்!! :))
//

பாஸ் இதுவும் நல்லா தான் இருக்கு. இன்னும் ’அதிரடி ஆதவன்’ “சூப்பர் சூர்யா”ன்னு நிறைய யோசிங்க பாஸ். அப்பப்ப கொடுத்து விடுங்க பாஸ். பொட்டி வூட்டுக்கு தானா வரும்
-------------------------------------
@சென்ஷி

அவரும் பதிவரா?? தகவலுக்கு நன்றி தல. அவரோட பதிவை தேடி கண்டுபிடிச்சுட்டேன். நன்றி தல

☀நான் ஆதவன்☀ said...

@ஹூஸைனம்மா

அவ்வ்வ்வ்வ்...’பாவம்’னு அவனை தானே சொன்னீங்க :)
-------------------------------------
@சின்ன அம்மணி

நன்றி சின்ன அம்மணி
-------------------------------------
@ஸ்ரீமதி

எதுக்கும்மா வாழ்த்து? அதான் பொறந்தநாள் முடிஞ்சுபோச்சே! எதுக்கா இருந்தாலும் நன்றி :)
-------------------------------------
@முத்துலெட்சுமி

நன்றிக்கா. ஊருக்கா? நானா? அவ்வ்வ்வ்வ் எப்படியெல்லாம் கோர்த்து விடுறீங்கக்கா :)
-------------------------------------
@பார்த்திபன்

வருகைக்கு நன்றி பார்த்திபன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹுஸைனம்மா said...
//“இந்த தடவை எனக்கு தீடீர்னு கல்யாணம் நடநதாலும் நடக்கலாம் சார்”
//

நண்பனுக்கெல்லாம் நடக்குது...பாவம்

:)))))))

இப்பத்தானே ஹுசைனம்மா புள்ள மொத பொறந்தநாளே கொண்டாடி முடிச்சிருக்கு, பாவம் விட்டுருங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

கற்றது கடலளவு லின்க்கிற்கு உங்களுக்கும் சென்ஷிக்கும் மிகவும் நன்றி.

pappu said...

வெட்டியா விட்டத்தப் பார்த்துட்டு/////

அட, நீங்களுமா?

செமயா இருந்துச்சு இன்னைக்கு பஞ்சாமிர்தம். டெம்ப்ளேட் நல்லா கவர்ச்சியா இருக்கு!

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

ஆஹா ஆதவா,
இவ்ளோ நாளா உனக்கு மட்டுமே விளம்பரம் பண்ணிட்டு இருந்த, இப்போ எனக்குமா. டேங்ஸ்பா.

என்னதான் வீரனா இருந்தாலும், இப்படி விஜய் ரசிகர்களுக்கு மத்தியில தனியா போயா கோதாவுல குதிக்கிறது? ரொம்பத்தான் திரியம் உனக்கு.

Facebook பத்தி சொன்னியே Twitterல விளையாடுறத பத்தி சொல்லவே இல்ல? உன்னப் பாத்துத்தான்யா நானே விளையாட ஆரம்பிச்சேன்.

கற்றது கடலளவு அறிமுகத்திற்கு நன்றி.

இப்பல்லாம் அதிகமா படிக்க ஆரம்பிச்சிட்டியோ? திருந்திருவியோன்னு....

நினைச்சுட்டு இருக்கும்போதே வந்துட்டே ஒரு மொக்கை.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சென்ஷி.

எவனோ ஒருவன் இனி அதி பிரதாபன்.

கலையரசன் said...

உன் பஞ்சாமிர்தம் சாப்பிடறதுக்காகவே மொட்ட போடலாம்ணே... அம்புட்டு ருசி!

☀நான் ஆதவன்☀ said...

@அமித்து அம்மா

அவ்வ்வ்வ்...நீங்களுமா பாஸ்?

எனிவே நன்றி பாஸ் :)
-------------------------------------
@பப்பு

நன்றி பப்பு. வேலை வெட்டி இல்லைன்னா விட்டத்த பார்க்குறத தவிர வேற என்ன வேலை பப்பு :)
-------------------------------------
@அதி பிரதாபன்

மாப்பி என்ன தான் படிச்சாலும் மொக்கைய விடமுடியுமா? ஹி ஹி

நன்றி அதி பிரதாபா :)
--------------------------------------
@கலை

மிக்க நன்றி கலையண்ணே :)

மணிகண்டன் said...

பஞ்சாமிர்தம் கலக்கல். டெம்ப்ளேட் நல்லா இருக்கு.

கோபிநாத் said...

:))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//இப்பெல்லாம் வெட்டியா விட்டத்தப் பார்த்துட்டு இருக்கும் போதெல்லாம் ஒரு “ச்சே என்ன மனுசன் டா நீ? இப்படி சும்மா இருக்குற நேரத்துக்கு நாலு பேருக்கு உதவி பண்ணலாம்ல?” அப்படிங்கிற எண்ணம் வந்து, உடனே கம்யூட்டரை ஆன் செய்து facebookல் லாக ஆன் செய்து “farm ville" சென்று நண்பர்களின் வாய்க்கா வரப்பில் காக்கா, நரியை ஓட்டுகிறேன்.அவ்வ்வ்வ்வ்வ்//

:))))))
அருமை தேவுடு,செமயா இருந்துச்சு இன்னைக்கு பஞ்சாமிர்தம். டெம்ப்ளேட் நல்லா சூப்பரா கவர்ச்சியா இருக்கு! புதுப்பொலிவாக
ஓட்டுக்கள் போட்டாச்சு

மங்களூர் சிவா said...

ஒரு விஜய் ஜோக்கு சொல்லுய்யா பின்னூட்டத்துல சிரிப்பான் போட நாங்கல்லாம் ரெடிய்யா இருக்கோம்
:)

மங்களூர் சிவா said...

/உடனே கம்யூட்டரை ஆன் செய்து facebookல் லாக ஆன் செய்து “farm ville" சென்று நண்பர்களின் வாய்க்கா வரப்பில் காக்கா, நரியை ஓட்டுகிறேன்./

ஹா ஹா
:))

கிறுக்கல் கிறுக்கன் said...

டெம்ப்ளேட் நல்லாருக்கு

பஞ்சாமிர்தம் - நல்லாருக்கு திகட்டலை

☀நான் ஆதவன்☀ said...

@மணிகண்டன்

நன்றி மணிகண்டன் :)
------------------------------------
@கோபிநாத்

நன்றி தல :)
------------------------------------
@மங்களூர் சிவா

அவ்வ்வ்வ்..நீங்களுமா ம.சி? இனி விஜய் ஜோக்க நான் எங்கேயும் சொல்லமாடடேன் ஆமா :)
------------------------------------
@கிறுக்கல் கிறுக்கன்

நன்றி கி.கி அண்ணே. டெம்ப்ளேட் பாராட்டை நம்ம பெஸ்கிக்கு சொல்லிடுங்க :)

கதிரவன் said...

பதிவும் Templateம் நல்லா இருக்குது ஆதவன்

ஊர்சுற்றி said...

:)

yaaro said...

அய்யா, ஆதவா, எங்கே போனாலும் இங்கெ இதெ நிலமையா?? பாவம். இர்ண்டுதடவை கேட்டுட்டீங்க. ஒருத்தரிடமும் சொல்லெந்திங்க. ஒவ்வொருத்த்ரிடமும் உள்ள் பழத்தை மூன்றாக பங்கு போட்டுபாருங்க. இப்பத்தெரியும். யார் எவ்வள்வு கொடுத்த்ருப்பாங்க்ன்னு.

அன்புடன்-மணிகண்டன் said...

கடைசி ஜோக் அப்படியே கிரேசி மோகன் டைப்... :)

Related Posts with Thumbnails