2012-இந்த கொசுங்க தொல்லை தாங்கமுடியல நாராயணனா!

உலகத்திற்கு ஏற்படும் ஆபத்தை முதலில் அறிவது அமெரிக்கர்கள் தான் என்ற முதல் விதியை மட்டும் தகர்த்து, இந்தியனுக்கு கொடுத்துவிட்டு மற்ற ஹாலிவுட் விதிகளை அப்படியே கடைபிடித்து வந்திருக்கிறது 2012.பயம்...கொசுகடித்தாலும் பயம், காகம் கரைத்தாலும் பயம், கழுதை உதைத்தாலும் பயம் என எதைக் கண்டாலும் பயம் என்பது இந்த அமெரிக்கர்களுக்கு. ஏற்கனவே உலகை அழிக்க (மிருகங்களும், இயற்கை சீற்றங்களும்) வந்த சுமார் 12058 படங்களும் சொல்லியதை, கூட கொஞ்சம் எக்ஸ்டாராவா பிட்ட போட்டு தந்திருக்கிற படம் தான் இது. பூமிக்கு ஆபத்து வருகிறது என்பதை முதலில் கண்டறிந்த இந்திய விஞ்ஞானி, இந்திய அரசாங்கத்திற்கு கூட சொல்லாமல் தனது அமெரிக்க நண்பரை அழைத்துச் சொல்கிறார். கண்ணு கரண்டி மாதிரி(அதாங்க பூந்தி கரண்டி) எக்கசக்க லாஜிக் ஓட்டைகளில் மிகப்பெரிய ஓட்டை இது.

அவர் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்ல, வழக்கம் போல நல்லவரான அமெரிக்க ஜனாதிபதி உலக பணக்கார நாடுகளின் உதவியோடு (இந்தியா இல்லை) மிக முக்கிய, அதுவும் பைசா உள்ள ஆட்களை மட்டும் காப்பாற்றிச் செல்ல ஒரு கப்பலை உருவாக்குகிறார் அதுவும் சீனாவில். இந்த விசயம் தெரிந்து வெளியே சொல்பவர்கள் கொல்லப்படுகிறார்கள். அடப்பாவி மக்கா இந்தியாவுல வேற விஞ்ஞானிகளே இல்லையா?

இது ஒரு ஆளுக்கு தெரிந்து அவன் ஒரு ரேடியோ அலைவரிசையை உருவாக்கி இதையெல்லாம் புலம்ப அவனை பைத்தியகாரனை போல் பார்கிறது அமெரிக்கா. ஆனால் அவன் நம்மூரு சாமியார் கெட்டப்பில் இருக்கிறான். அவனுக்கு அந்த கப்பல் எங்கு செய்கிறார்கள் என்ற மேப் கூட கிடைத்துவிடுகிறது என்பதெல்லாம் ஜல்லி கரண்டியில் பெரிய ஓட்டை. (டைரக்டரு தமிழ்படம் நிறைய பார்க்கிறாரோ?)

இதிலும் வழக்கம் போல ஹீரோ, விவாகரத்து, குழந்தைகள், பாசம் ஆகிய இத்யாகிகளுடன் சீனா செல்கிறார். அந்த பைத்தியகாரன் பேச்சை இவர் மட்டும் நம்புகிறார். அவனிடம் இருந்து மேப்பை வாங்கி சீன செல்ல தயாராகிறார். அதுவும் இன்ஸ்டெண்ட் பைலட்டோட்டு. அதாவது பகவதி படத்துல வடிவேலு டிரையின் ஓட்டுவாரே.... அந்த மாதிரி. கப்பலைத் தேடி சீனா வரை வந்து விடுகின்றனர்.

அந்த கப்பலில் திருட்டுதனமாக(!) நம் ஹீரோ குடும்பத்தினர் எல்லாரும் உள்ளே செல்கிறார்கள். பற்சக்கரத்தில் ஹீரோ ஒரு மெஷினை போட, கதவு அடைபடாமல் மொத்த கப்பலும் ஸ்டார்ட் ஆகாமல் நிற்கிறது. சுனாமி வேறு கன்னியாகுமரியில் இருந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் அழித்துவிட்டு நேரா இமயமலையை கடந்து சீனாவிற்கு வருகிறது. கதவு வேறு மூடாமல் நிற்கிறது. கடைசியில் ஹீரோ மட்டும் தண்ணீரிக்குள் சென்று பிரச்சனையை சரி செய்கிறார். இந்த காட்சி மட்டும் 10 நிமிடத்திற்கும் மேல் வருகிறது. தியேட்டரில் எல்லாரும் நெளிகிறார்கள். கடைசியில் கப்பல் எவரெஸ்ட் சிகரத்தில் மோதாமல் தப்பிகிறது. ஹீரோவைப் பார்த்து எல்லாரும் சந்தோசத்தில் ஆர்பரிக்கிறார்கள்(ங்கொய்யால இவனால தான் அந்த கதவே மூடாம போச்சு. அதுக்கு அவனை கொன்னே போட்டுருக்கனும்)

உலகத்தலைவர்களெல்லாம் உயிருக்கு பயந்து கப்பலில் சென்றுவிட, ரொம்ப நல்லவரான அமெரிக்க ஜனாதிபதி மட்டும் வர மறுத்து மக்களோடு மக்களாக சாகிறார் :) சிரிப்பு தான் வருகிறது.

உலகமே அழிந்து விட அந்த கப்பலில் உள்ளவர்கள் மட்டு ம் பிழைத்துக் கொள்கிறார்கள். மீண்டும் புதிய உலகம் பிறக்கிறது. இமயமலை ஆப்ரிக்காவுக்கு செல்கிறது. பாவம் ஆப்பிரிக்கா. பின்னே பிரச்சனையோட காஷ்மீரும் கூட போயிருச்சே!

ஆரம்பக்காட்சிகளில் கலிபோர்னியாவை நாசமாக்கும் காட்சிகளில் இமைக்க கூட மறக்கிறார்கள் ரசிகர்கள். அதையும் அதைத்தொடந்து வந்த சில நிமிடங்களிலும் ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரம்மிப்போடு பார்த்தக் காட்சிகள் அவை. ஆனால் அதில் ஹீரோவின் குடும்பம் தப்பிப்பது கார்டூன் சீனைப் போல் உள்ளது. செம மொக்கை. கடைசியில் சுனாமியும் வருகிறது. தசாவதாரத்தின் சுனாமியை விட பரவாயில்லை. ஆனால் ஏனோ இதில் செயற்கைதனமும் தெரிகிறது.

ஏன் இத்தனை கேரக்டர்கள் என்று தெரியவில்லை. இதில் செண்டிமெண்ட் காட்சிகள் வேறு. அமெரிக்கர்கள் இம்புட்டு செண்டிமெண்டாக ஆகிவிட்டார்களா என்ன? அப்பா, அம்மா, பேத்தி, மகள், மகன், மனைவி என நிறைய அழுகாச்சி காவியங்கள். சில நிமிசத்துல சுனாமி வரப்போகுது, ஹீரோ பற்சக்கரத்துல என்ன பிரச்சனைன்னு போகுறப்போ மனைவிக்கு முத்தம் கொடுத்துட்டுகிட்டு...ஸ்ப்ப்பா... முடியல.

லாஜிக் எதுவும் பார்க்காம, டைம் நிறைய இருக்குது போரடிக்குதேன்னு நினைக்குறவங்க மட்டும் போய் பார்க்கலாம். வெறும் 30 நிமிடகாட்சிகளுக்காக 2.15 கால் மணி நேரம் எல்லாம் இந்த கொடுமைய பார்க்குறது கொஞ்சம் கஷ்டம் தான்.

30 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

அட... நீயும் இந்த மொக்கைப் படத்த பாத்துட்டியா :)

நான் இனி டவுன்லோடு செஞ்சு மாத்திரம்தான் பார்க்கனும்

அகல் விளக்கு said...

அடங்கொக்க மக்கா......

2012க்கப்புறம் ஒரு இந்தியாக்காரனும் இருக்கப்படாது.

அதுதானே அவனுங்களுக்கு வேணும்.

Meenthulliyaan said...

இப்படி பொய் மாட்டிகிட்டின்களே ..
அடுத்து சூதனமா இருங்க படத்துக்கு போறதுன

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

நாஞ்சில் பிரதாப் said...

ஆதவா...அதான் ஊருபுல்லா முரசடிச்சா சொல்றாய்ஙகள்ள அது மொக்கைப்படம் பார்க்காதீங்கன்னு அப்படின்னு... அப்புறம் ஏன்டி பார்க்கபோற... கொழுப்புத்தானே...

சாம்ராஜ்ய ப்ரியன் said...

:D

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

ஆமாம் சென்ஷி. இந்த படத்தை டவுண்லோட் செஞ்சு பார்த்தா போதும்.
-------------------------------------
@அகல்விளக்கு

ஹிஹி அப்படியும் சொல்லலாம். இந்தியாவுலருந்து யாரும் பொழச்ச மாதிரி காட்டவே இல்லை
-------------------------------------
@மீன்துள்ளி செந்தில்

ஆமாங்க செந்தில். போகும் முன்ன தெரியாதே.
-------------------------------------
@நாஞ்சில் பிரதாப்

பிரதாப்பு படம் ரிலீசானது நேத்து தான். நான் பார்த்ததும் நேத்து தான். பதிவு எதுவும் ரெண்டு நாளா படிக்கல. காலையில வந்து பதிவு போட்டததுக்கு அப்புறம் தான் தெரியுது நிறைய பேர் விமர்சணம் பண்ணிட்டாங்கன்னு.
------------------------------------
@சாம்ராஜ்ய பிரியன்

வாங்க பிரியன். வாய்விட்டு சிரித்ததற்கு நன்றி :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார் படித்துவிட்டீர்களா தல..,

சந்தனமுல்லை said...

பாஸ்....மொக்கை பார்க்க கடவதுன்னு சாபம் கொடுத்தாங்களா யாராவது?!! :)))

மங்களூர் சிவா said...

மரணகடியோ??
:))))))))))))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ரொம்ப நல்ல விமர்சனம்
ஓட்டுக்கள் போட்டாச்சு

nvnkmr said...

இதுக்கு நான் ஆதவன் படத்தையோ இல்ல ஜகன் மோகினி படத்தையே பார்பேன்
இதுக்க இத்தன buil up கொடுத்தாங்க !!!!!!!!!!!

சங்கர் said...

//டைரக்டரு தமிழ்படம் நிறைய பார்க்கிறாரோ?//

தமிழ் சினிமா உலக தரத்துக்கு வந்திருச்சுன்னு இப்போவாவது ஒத்துக்குங்க

வினோத்கெளதம் said...

அந்த அளவுக்கு மொக்கையா இருந்தாலும் நான் பார்ப்பேன் தான்..

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கலக்கல் விமர்சனம் ஆதவன் :)

கணேஷ் said...

Same BLOOD :)

Toto said...

பிர‌ம்மாண்ட‌மான‌ கொசுவாயிருக்கும் போலிருக்கே ! ந‌ல்ல‌ வேளை.. நிறைய‌ பேரை நீங்க‌ காப்ப‌த்திட்டீங்க‌.

☀நான் ஆதவன்☀ said...

@சுரேஷ்

தல கலக்கல் கதை :)
-------------------------------------
@சந்தனமுல்லை

ப்ச் ஆமா பாஸ். எனக்கென்னவோ சாபம் கொடுத்தது நீங்க தானோன்னு டவுட்டா இருக்கு :)
-------------------------------------
@மங்களூர் சிவா

ஆமா ம.சி. :( ஆனா ஒரு தடவை பார்க்கலாம்
------------------------------------
@கார்த்திகேயன்

நன்றி தல
------------------------------------
@ nvnkmr

ஹி ஹி. நன்றிங்க
------------------------------------
@சங்கர்

அவ்வ்வ்வ் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க :)
------------------------------------

☀நான் ஆதவன்☀ said...

@வினோத்

உன் தலைவிதி பார்த்து தொலை. (டவுண்லோட் பண்ணி பார்க்குறதுக்கே இம்புட்டு பில்டப்பா)
-------------------------------------
@செந்தில்வேலன்

நன்றி செந்தில்
-------------------------------------
@கணேஷ்

ஹி ஹி
-------------------------------------
@toto

நன்றிங்க :)

கோபிநாத் said...

டேய் நம்ம படம் பாருடா...பழசிராஜா ;))

கார்த்திகைப் பாண்டியன் said...

அப்போ இதுவும் மொக்கைதானா? ஏற்கனவே "the day the world stood still" பார்த்து நொந்துட்டேன் நண்பா.. போதும்.. தப்பிச்சுட்டேன்.. உங்களுக்கு நன்றி

VIKNESHWARAN said...

கும்மியடிச்சு குதறிட்டிங்க....

படத்துக்கு மெனக் கெட்டிருக்கிறார்கள். விறுவிறுப்பிக்கு குறைச்சல் இல்லை எனலாம்.

கானா பிரபா said...

ஆழ்ந்த அனுதாபங்கள் பாஸ், துக்கம் தொண்டையை அடைக்குது உங்களைப் பார்த்து

கலையரசன் said...

2012ல அழியிலனா... வேற எப்ப அழியுமாம் உலகம்? அத பத்தி எதாவது சொல்றானுங்களா? ஏன்னா... அதுகுள்ள கல்யாணம் பண்ணிடனும் நானு!!

கலையரசன் said...

//டேய் நம்ம படம் பாருடா...பழசிராஜா ;))//

ஆமான்டா! போயி பாருடா!! இவரு புரொடியூஸ் பண்ண படம்டா...

டம்பி மேவீ said...

why blood????

same blood....

அன்புடன் அருணா said...

நல்லவேளை சொல்லிட்டீங்க!

☀நான் ஆதவன்☀ said...

@கோபிநாத்

தல, மலையாள படமெல்லாம் தியேட்டர்ல பார்க்குற பழக்கமே இல்லை :)
-------------------------------------
@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா
-------------------------------------
@விக்கி

இல்ல விக்கி. ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் விறுவிறுப்பா இருந்ததுன்னு சொல்லலாம். ஆனா கடைசியில கொஞ்சம் இழுவையாகிடுச்சு
-------------------------------------
@கானாபிரபா

அனுதாபங்களுக்கு நன்னி பாஸ்.
-------------------------------------
@கலையரசன்

பாவம்ய்யா நீ! பல் இருந்தும் உன்னால பக்கோட சாப்பிட முடியாததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :)
-----------------------------------
@டம்பி மேவீ

ஹி ஹி நீங்களுமா?
-----------------------------------
@அன்புடன் அருணா

நன்றி அருணா

Mohan Kumar said...

நீங்க கஷ்டப்பட்டாலும், இதை நல்லா எழுதி இருக்கீங்க. குறிப்பா தலைப்பே கலக்கல். எங்க அக்கா பையன் அடாத மழையிலும் நேத்து விடாம போனான். அழுதிருப்பான்னு நினைக்கிறேன்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

படத்தை விட‌ புரளி தான் வேகமா பரவுதுல்ல

நடிக்கலாம் வாங்க! said...

(டைரக்டரு தமிழ்படம் நிறைய பார்க்கிறாரோ?)ரொம்ப நன்றிங்கோ

Related Posts with Thumbnails