அச்சில் வராத சரித்திரம்

தொலைக்காட்சியில் அவர் தொண்டர்களைப் பார்த்தபடி கையை அசைத்து சிரிப்போடு செல்கிறார். கூட்டம் உற்சாகமாகி ஏதோ கத்துகிறது. தெளிவாக கேட்கவில்லை. இன்று காலை மலையாள செய்களின் ஊடே இந்த ஒளி நாடா காட்டப்பட்டது. அவரின் நினைவு நாள் இன்று. நான்கு வருடத்திற்கு முன்பு மதுரைக்கு சென்ற போது அறிந்த விசயம் தான் உடனே ஞாபகம் வந்தது. கண்கள் தொலைக்காட்சியில் நிலை நிற்க மனது குரங்காய் மாறி எங்கெங்கோ சென்றது.இந்திராகாந்தி. அக்டோபர் 31 அவர் மரணம் அடைந்த நாள். கம்பீரத்தின் மறு உருவம். ஏன் இன்றும் ஒட்டுமொத்த இந்திய பிரதமர்களில் தைரியசாலி என எதிர்கட்சி தலைவரால் கூட பாராட்டப்பட்டவர். இந்நேரம் இந்தியாவை வல்லரசாக மாற்றியும் இருக்கலாம் என நப்பாசையும் எழ செய்பவர். இன்னும் என பல இமேஜை உள்ளடக்கியவர். அவர் மரணம் அடைந்த நாளான இன்று மதுரையில் அருகே உள்ள ஒரு கிராமத்தில், அனைத்து மக்களும் சோகமும், அதனடுத்து இரண்டொரு நாளில் சந்தோஷத்திற்காக தயாராகவும் என இரு வேறு மனநிலையில் இருக்கும் விசித்திர ஒரு கிராமம்.

சில தலைவர்கள் இறக்கும் போது ஏற்படும் வலியை விட, அதன் பிறகு காரணமே இல்லாமல் ஏற்படும் கலவரம் மற்றும் சில இத்தியாதிகள் ஏற்படுத்தும் சமபவங்கள் ஏனோ நம் மனதில் இருந்து மறைவது கடினம்.

பலவருடங்களுக்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை செல்லும் போது யதேச்சையாக உறவினரை பார்க்க அக்கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. மதுரையை அடுத்து நகரத்தை ஒட்டி இருக்கும் சிறிய கிராமம் அது. பெரியவர்கள் பலர் இந்திராகாந்தி இறந்த சம்பவத்தையும் அதன் பிறகு நான்கு தினங்கள் பந்த் நடந்தையும், அதனையொட்டி கிராமத்தில் நடந்த சம்பங்களையும் நினைவு கூர்ந்து வருவதோடில்லாமல் தங்கள் குழந்தைகளும் சொல்லி ஒரு திருவிழா போல கொண்டாடி வருவது ஆச்சர்யம் அளிக்கிறது.

அக்கிராமத்தில் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர் ஒரு பட்டறையில் வேலைப் பார்த்து வந்தாராம். கம்யூனிச கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவராயினும் கலைஞரை தீவரமாக நேசித்தவர். மதுரையையொட்டி கலைஞர் எங்கு வந்தாலும் அவரது பேச்சைக் கேட்க ஆவலோடு செல்வாராம். ஜாதீகளில் புரையோடி போன அக்கிராமத்தில் சற்றே வித்தியாசமானவராக இருந்தவர். அதிகம் படிப்பில்லையென்றாலும் அவரது தொழில் நேர்மை, மனித நேயம் என ஊரில் அவருக்கு மிக நல்ல பேரை பெற்றுத் தந்தது. அவரது மனைவி இல்லத்தரசி.

அக்டோபர் 31ல் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்திராகாந்தி கொலை இக்கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. அச்சமயத்தில் நிறைமாத கர்பிணியாக இருந்தாராம் அவரது மனைவி. ரேடியோவில் நிகழ்வுகளை ஊரே கேட்டுக்கொண்டிருந்தது. அதை தொடர்ந்து இந்தியாவில் ‘பந்த்’ நிகழ்ந்ததும் அனைவரும் அறிந்ததே. வெளியே யாரும் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது.

’பந்த்’ இரண்டாவது நாளும் அதாவது நவம்பர் முதல் தேதியும் தொடர்ந்த போது தான் அவரது மனைவிக்கு பிரசவ வேதனை எடுக்க ஆரம்பித்தது. வேதனை அதிகமாக அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊரில் உள்ள பிரசவம் பார்க்கும் வயதான ஒரு பாட்டியை அழைத்து வந்து காண்பித்த போது அவர் மருத்துவமனைக்கு செல்வதே உச்சிதம் என கையை விரித்து விட்டார். வெளியே வண்டியோ, ஆட்டோவோ என வாகனங்கள் எதுவும் ஓட முடியாத சூழ்நிலை.

அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எப்படி அழைத்துச்செல்வது என தெரியாமல் முழிக்க, நள்ளிரவு நேரத்தில், அதுவும் ‘பந்த்’ நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றாலும் மருத்துவர்கள் இருப்பார்களா என்ற பயமும் சேர்ந்து கொள்ளத்தொடங்கியது. ஊரில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க உதவிக்கு யாரையும் கூப்பிட நேரம் இல்லாமல் தன் மனைவியை தன் சைக்கிளில் வைத்து அழைத்து செல்ல தொடங்கியிருக்கிறார்.

மழை வேறு வரத் தயாராக, மாலையில் ரேடியோவில் மதுரையில் எங்கோ நடந்த பயங்கர கலவரம் கேட்ட ஞாபகம் வேறு வந்து அவருக்கு வேதனையை இன்னும் கூட்டியிருக்கிறது. இருந்தாலும் மனம் தளராமல் சைக்கிளை மெதுவாக உருட்டிக் கொண்டு செல்லத்தொடங்கியிருக்கிறார்.

அந்நேரத்தில் அவரது உறவினர் ஒருவர் யேதச்சையாக வெளியில் தலைகாட்ட, யோசிக்காமல் அவரும் துணைக்கு வரத்தொடங்கினார். ஆங்காங்கே நடந்த கலவரம் தன் அடையாளத்தை வீதியெங்கும் விட்டு சென்றிருக்க அதை கண்டதும் பயம் இருட்டை விட வேகமாக அவருக்கு சூழத்தொடங்கியது. எப்படியோ தாக்குபிடித்து மருத்துவமனையில் சேர்த்த போது நினைத்த மாதிரியே மருத்துவர்கள் யாரும் இல்லை. ஆவேசமாகி அவரும், அவரது நண்பரும் கோபப்பட்டு கத்த ஆரம்பிக்க மருத்துவரை அழைத்து வர ஊழியர் ஒருவர் ஓடி இருக்குறார்.

இரவு கழிந்து அடுத்த நாளும்(2ஆம் தேதி) வந்து விட்டது. மூன்றாவது நாளாக ‘பந்த்’ தொடர்ந்தது. மருத்துவரும் ‘பந்த்’யை பொருட்படுத்தாது விடியற்காலை நேரத்தில் வந்திருக்கிறார். இதே நேரம் ஊரில அனைவருக்கும் விசயம் அறிந்து அனைவரும் மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

ஊரே மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்க, அவர் நிலை கொள்ளாமல் ஆப்ரேசன் தியேட்டர் வெளியே இருக்க.... கடைசியில் வெளியே வந்த மருத்துவர் “ஆண் குழந்தை பிறந்திருக்கிறது” என்ற படி கை கொடுத்து சென்றிருக்கிறார்.

உள்ளே சென்ற இவர் தன் கையில் அந்த குழந்தையை எடுத்து கண்ணீருடன் என்ன பெயர் வைக்கலாம் என தன் மனைவிடம் கேட்ட போது...

வெளியே இருந்த ஊர் மக்கள் ஒரே கோஷமாக விண்ணை பிளக்க உற்சாகத்துடன் “இவன் ஆதவன்...இவன் ஆதவன்...” கத்தினர். குழந்தையும் சிரித்தது. சிரிப்பும் அதை ஆமோதித்ததை போல “நான் ஆதவன்” என அவருக்கு உணர்த்தியது.

(இதிலுள்ள ’பந்தை’ கிராபிக்ஸிலோ அல்லது வேறு சாப்ட்வேர் மூலமாகவோ எடுத்துப் பார்க்க கூடாது என்று கடுமையாக உங்கள் காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்)

டிஸ்கி: ”அப்ப சூப்பரா இருக்கயே இப்ப ஏன் கண்றாவியா இருக்க?”ன்ற மாதிரி வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும் என கம்பெனியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

50 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

கருமம் புடிச்சவனே.. பந்து வைக்கிற இடமாடா அது...........!

அகல் விளக்கு said...

//பந்து வைக்கிற இடமா அது...........!//

அதானே...

ஆனா டைடில் ஜீப்பருப்பா.......

அகல் விளக்கு said...

birthdayva...........

Sollave illa!!!!!!!!

Happy Birthday......

ஆயில்யன் said...

பந்து வைக்கிற இடமாய்யா அது...........!

ஆயில்யன் said...

நேத்து டிவிட்டர்ல எண்டிடிவி நியூஸ் ரிப்போர்ட்டர் பர்காதத் - இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டப்போது தான் இருந்த சூழ்நிலையை பத்தி சொன்னதுதான் ஞாபகம் வந்துச்சு

பதிவு நல்லா இருக்கு!

சென்ஷி said...

// ஆயில்யன் said...

நேத்து டிவிட்டர்ல எண்டிடிவி நியூஸ் ரிப்போர்ட்டர் பர்காதத் - இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டப்போது தான் இருந்த சூழ்நிலையை பத்தி சொன்னதுதான் ஞாபகம் வந்துச்சு //

இதனால் அறியப்படும் செய்தி ஆயில்ஸ், கேரள ஃபிகர்களை மாத்திரமில்லாது பர்கா தத்தையும் டிவிட்டுகிறார்

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

கருமம் புடிச்சவனே.. பந்து வைக்கிற இடமாடா அது...........!
/

:)))))))))

ஆயில்யன் said...

//சென்ஷி said...

// ஆயில்யன் said...

நேத்து டிவிட்டர்ல எண்டிடிவி நியூஸ் ரிப்போர்ட்டர் பர்காதத் - இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டப்போது தான் இருந்த சூழ்நிலையை பத்தி சொன்னதுதான் ஞாபகம் வந்துச்சு //

இதனால் அறியப்படும் செய்தி ஆயில்ஸ், கேரள ஃபிகர்களை மாத்திரமில்லாது பர்கா தத்தையும் டிவிட்டுகிறார்///


பின்னே பிரபலமாகணும்ன்னு முடிவு செஞ்சாச்சு அதெல்லாம் காலத்தின் கட்டாயம் :)))))))))))))))))

ஆயில்யன் said...

பாஸ் அந்த போட்டோவை நல்லா உத்து பாக்கும்போது உங்க கண்ணுல ஒரு பீதி தெரியுதே அது ஏன்ன்ன்?????

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அச்சில் வரலன்னா என்ன ? அழியமுடியாத இணையத்தில் வரலாறு பதிஞ்சு விட்டாச்சே..:) 2ம் தேதி பிறந்த்நாளுங்களா.முன்கூட்டியே வாழ்த்துக்கள்..

கிரி said...

//இதிலுள்ள ’பந்தை’ கிராபிக்ஸிலோ அல்லது வேறு சாப்ட்வேர் மூலமாகவோ எடுத்துப் பார்க்க கூடாது என்று கடுமையாக உங்கள் காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்//

:-))))))))

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

யோவ் ஒரு பச்சப்புள்ளைக்கு என்னய்யா தெரியும்? சூது வாது தெரியாம அங்க வச்சிருக்கு. அதுக்காக முத கமெண்டே இப்படியா? ஏதோ “உனக்கு திருஷ்டி சுத்தி போடு” “அழ்ழ்ழ்ழ்கா இருக்க” இந்த மாதிரி ஏன் போடல்....
-------------------------------------
@அகல் விளக்கு

அவ்வ்வ்வ் நீங்களுமா. எனிவே வாழ்த்துகளுக்கு நன்றிங்க :)
------------------------------------
@ஆயில்ஸ்

என்னய்யா இது எல்லாரும் இதையே கேட்குறீங்க?
------------------------------------
@ ம.சி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்களுமா ம.சி?

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

//பாஸ் அந்த போட்டோவை நல்லா உத்து பாக்கும்போது உங்க கண்ணுல ஒரு பீதி தெரியுதே அது ஏன்ன்ன்?????//

தெரியலயே பாஸ். எதிர்தாப்புல இருந்தவன் எதை காட்டி பயமுறுத்தினானோ......
------------------------------------
@செந்தில் வேலன்

சிரிப்பானுக்கு நன்றி செந்தில்வேலன் :)
------------------------------------
@முத்துலெட்சுமி

நீங்க தான்க்கா மேட்டரை சரியா புரிஞ்சுகிட்டீங்க. ரொம்ப நன்றி :)
-----------------------------------
@கிரி

அவ்வ்வ்வ்வ் வாங்க கிரி. க்ரெக்டா அதை நோட் பண்ணியிருக்கீங்க :)

pappu said...

பந்து வைக்கிற இடமாடா அது...........!//

இப்படி ஒரு சரித்தர புருஷனா(யாருக்கோ)?

கார்த்திகைப் பாண்டியன் said...

Advance birthday wishes boss..:-)))

- இரவீ - said...

/
சென்ஷி said...

கருமம் புடிச்சவனே.. பந்து வைக்கிற இடமாடா அது...........!
/

:)


Advance Birthday Wishes.

ராமலக்ஷ்மி said...

84-வது வருடத்தைய நினைவுகளுக்கு எங்களையும் இட்டுச் சென்று விட்டீர்கள். இந்த நாளும் தொடர்ந்து வந்த கலவர நாட்களும் மறக்க முடியாதவை.

உங்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

மணிகண்டன் said...

போட்டோல இருக்கற குழந்தைக்கு சுத்தி போடசொல்லுங்க. கண்ணு பட்டுட போகுது :)-

ஷாகுல் said...

//அப்ப சூப்பரா இருக்கயே இப்ப ஏன் கண்றாவியா இருக்க?”ன்ற மாதிரி வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும் என கம்பெனியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.//

அப்பிடிலாம் சொல்ல மாட்டேன் பாஸ்.
இப்போ இருக்கிற மாதிரிதான் அப்பவும் இருக்கீங்க.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தேவுடு...........
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
முன்னமே சொன்னா ட்ரீட் கேப்போமுன்னு இப்புடியா?
சரி அடுத்தவாரம் இங்க சபை இதுக்குன்னே கூடுது.
கோபியும் சென்ஷியும் எல்லா ஏற்பாட்டையும் ஆதவன்கிட்ட காசு வாங்கி செஞ்சிடுங்க.

நான் அங்க ஆஜராய்டுரேன்.
வோட்டு போட்டாச்சுப்பா.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

போட்டோல இருக்கற குழந்தைக்கு சுத்தி போடசொல்லுங்க. கண்ணு பட்டுட போகுது :)-

பின்னோக்கி said...

கொயந்தயா அயகாதான் இருக்கீங்க..25 வயசுதான் ஆகுதா என்ன ?.

☀நான் ஆதவன்☀ said...

@பப்பு

ஆமா பப்பு. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோன்னு தெரியல :-)
-------------------------------------
@கார்த்திகைபாண்டியன்

நன்றி நண்பா :)
-------------------------------------
நன்றி இரவீ :)
-----------------------------------
@ராமலஷ்மி

மிக்க நன்றிங்க :)
-----------------------------------
@மணிகண்டன்

ஆகா நீங்க ஒருத்தர் தான் உண்மைய பயப்படாம சொல்லியிருக்கீங்க :) ரொம்ப நன்றி :)

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

என்னய்யா இது, போட்டோல அப்படி முழிக்கிற? அப்பவும் இந்த பந்த யாரும் தூக்கிட்டு போய்றக்கூடாதுன்னு கவலையா?

சைடுல திருவிழான்னெல்லாம் சொருகிருக்க... யாரும் கவனிக்கல போல இருக்கு...

☀நான் ஆதவன்☀ said...

@ஷாகுல்

ரொம்ப நன்றிங்க. நான் அப்ப மாதிரியே இப்பவும் அழகா இருக்குற ஒத்துகிட்டதுக்கு :)

வாழ்த்துகளுக்கும் நன்றிகள்
------------------------------------
@கார்த்திகேயன்

தேவுடு டோண்ட் ஒர்ரி ட்ரீட் தானே வேணும்? ஜமாய்ச்சரலாம் :)

வாழ்த்துகளுக்கும் சுத்தி போடச் சொன்னதுக்கும் நன்றி தேவுடு :)

☀நான் ஆதவன்☀ said...

// எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

என்னய்யா இது, போட்டோல அப்படி முழிக்கிற? அப்பவும் இந்த பந்த யாரும் தூக்கிட்டு போய்றக்கூடாதுன்னு கவலையா?

சைடுல திருவிழான்னெல்லாம் சொருகிருக்க... யாரும் கவனிக்கல போல இருக்கு..//

யோவ் நீ ஒருத்தன் தான்யா உள்குத்து எல்லாத்தையும் கவனமா பார்த்திருக்க :) அப்படி முழிக்கிறதுக்கு காரணம் ஒன்னும் ஞாபகம் இல்ல :)

கோபிநாத் said...

கருமம் புடிச்சவனே பிறந்த நாளுக்கு யாராச்சும் பதிவு போட்டு வாழ்த்து சொல்லுவாங்க..அதுக்கு எதுக்குடா இப்படி ஒரு விளம்பரம்!??

திருட்டு முழி....

கலையரசன் said...

வாழ்த்துக்கள் தம்ப்ரீரீரீரீ...
அப்ப பெருசா இருக்கு! இப்ப சின்னதாயிடுச்சு?
அந்த முழியதான் சொன்னேன்..

☀நான் ஆதவன்☀ said...

@பின்னோக்கி

தாங்ஸ் பின்னோக்கி. நான் இன்னும் சின்னப்பையன் தானுங்க :-)
-------------------------------------
@கோபிநாத்

அவ்வ்வ்வ்வ்வ் ஒரு சரித்திரத்தை மக்கள் தெரியாமலே போயிடக்கூடாதேன்னு தான் இந்த பதிவு. மற்றபடி சுயதம்பட்டம் எதுவுமே இல்லைன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. எனக்கு அது பிடிக்காது உங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ப நல்லாவே தெரியும் :-)

முழி நமக்கு எப்பவுமே அப்படி தானே!
-----------------------------------
@கலையரசன்

வாய்யா ஊர்ல இருந்து வந்தாச்சு போல :-)

முழி இப்ப சின்னதா இருந்தாலும் ரொம்ப ஷார்ப்பு அண்ணே! :-)

முகிலன் said...

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நீங்க தனியாள் இல்ல, சரித்திரம்னு காட்டிட்டிங்க..

நாகா said...

இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள் நண்பா..

ஹுஸைனம்மா said...

//வெளியே இருந்த ஊர் மக்கள் ஒரே கோஷமாக விண்ணை பிளக்க உற்சாகத்துடன் “இவன் ஆதவன்...இவன் ஆதவன்...” கத்தினர். //


நாளைக்கு பிறந்தநாள் கொண்டாட பேரணி, பொதுக்கூட்டமெல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சா?//குழந்தையும் சிரித்தது. சிரிப்பும் அதை ஆமோதித்ததை போல “நான் ஆதவன்” என அவருக்கு உணர்த்தியது.//

இப்படியெல்லாம் ஓவர் பில்டப் வுடுறதாலத்தான் அம்மா இப்பவே கறிவேப்பிலை பொடியெல்லாம் அனுப்ப வேண்டி இருக்குது!!

ஆ! இதழ்கள் said...

பதிவு நல்லா இருக்கு...

ஐயோ மறந்துட்டேனே

போட்டோல இருக்கற குழந்தைக்கு சுத்தி போடசொல்லுங்க. கண்ணு பட்டுட போகுது :)-

சொல்லலைனா கோவிச்சுகிறுவீங்க...

☀நான் ஆதவன்☀ said...

@முகிலன்

நன்றி முகிலன். சரித்திரம்னு வேற ஒத்துகிட்டதுக்கு இன்னொரு நன்றி :)
------------------------------------
@நாகா

நன்றி நாகா :-)
------------------------------------
@ஹூஸைனம்மா

பேரணி, அன்னதானம்னு இந்நேரம் மதுரையே களைகட்டியிருக்கும் ஹூஸைனம்மா :-)

//இப்படியெல்லாம் ஓவர் பில்டப் வுடுறதாலத்தான் அம்மா இப்பவே கறிவேப்பிலை பொடியெல்லாம் அனுப்ப வேண்டி இருக்குது!!//

அவ்வ்வ்வ்வ் அப்படிங்கிறீங்க.... இனி கொஞ்சம் பில்டப்ப கொஞ்சம் கம்மி பண்றேன். அப்பயாவது முடி கொட்டுறது நிக்கிதான்னு பாப்போம் :-)
-----------------------------------
@ஆ! இதழ்கள்

வாங்க ஆனந்த். என்ன ஆளையே காணோம்? ரொம்ப பிஸியோ?

வாழ்த்துகளுக்கும், சுத்தி போட சொன்னதுக்கும் நன்றி ஆனந்த் :-)

வினோத்கெளதம் said...

Belated wishes Maapi..;)

ஜெகநாதன் said...

அட்டகாசம் ஆதவன்!
பந்தினால் (not ball) நடக்கிற கலவரங்க​ளை நன்றாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்!
ம​ழையில் ந​னைந்து மருத்துவம​னைக்கு ம​​னைவி​யைக் கூட்டிக்​கொண்டு ​போன ​கம்யூனிசத் தோழர் கண்ணுக்குள் வருகிறார்.
ஊ​ரே ​கொண்டாடும் பிறந்தநாள் ​சொந்தகாரருக்கு என் வாழ்த்துகள்!

ஜெகநாதன் said...

மாப்ள ஏனாஓனாவும் (அதி பிரதாபன்) நீங்களும் இங் கூட்டுக் களவாணிகளா? ​​டெம்பி​ளேட் ​பேசுதுங்க தம்பி!

தாரணி பிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ். பொறக்கும்போதே ஒரு சரித்திரத்தோடதான் பொறந்து இருக்கிங்க

கலையரசன் said...

இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் ஆதவன் (எ) சூர்யாவுக்கு ,
எந்த தம்பியின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
இன்று போல் என்றும்,
எல்லா வளமும் பெற்று,
ஒற்றுமை என்னும் இல்லறத்தில்,
இனிதே வாழ...
வாழ்த்த வயதில்லை என்பதால்... இரு கரம் கூப்பி வணங்குகிறேன்!

தன்னடக்க தம்பி,
கலையரசன்.

ஸ்ரீமதி said...

:))))

இளைய பல்லவன் said...

தலீவா, பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

போட்டோவப் பாக்கும் போது உங்க "இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனை" பதிவு ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ;-))

இளைய பல்லவன் said...

'டெர்ரர்ர்ர்ராஆஆஆஆன" உங்க பார்வையை மக்கள்ஸ் யாரும் புரிஞ்சிக்கலையேஏஏ!

கோமதி அரசு said...

சினிமாக்களில் பிரசவம் என்றால் மழை,
வண்டி எதுவும் கிடைக்காது,கலவரம்
அப்படி,இப்படி என்று பெண்களை அழவைக்க கதை விடுவார்கள் .

84 லில் நடந்தஇந்திராகாந்திமரணத்தை
அதில் நடந்த கலவரத்தை ,இடையில் உங்கள் பிறப்பை என்று எல்லாம் தொகுத்து எழுதிய விதம் அருமை.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வள்முடன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ்

ஹைய்யோ உங்க புண்ணியத்துல இன்னிக்கு நான் ரொம்பவே சிரிச்சுட்டேன் பாஸ்

தேங்க்யூ & பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கணேஷ் said...

அந்த ஃபோட்டோ... ரொம்ப வெட்கமா இருக்கு

ஷோபிகண்ணு said...

//பந்து வைக்கிற இடமாய்யா அது...........!//

அது பந்து இருக்கிற இடம்தானே... அங்க இன்னொன்ன வச்சா என்ன தப்புங்கிறேன்.

கிறுக்கல் கிறுக்கன் said...

//இதிலுள்ள ’பந்தை’ கிராபிக்ஸிலோ அல்லது வேறு சாப்ட்வேர் மூலமாகவோ எடுத்துப் பார்க்க கூடாது என்று கடுமையாக உங்கள் காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்)\\

ஒரு பந்தை எடுத்தா 2 பந்து தெரியுது, அதையும் எடுத்திடவா

☀நான் ஆதவன்☀ said...

@வினோத்

நன்றி வினோத் :)
-------------------------------------
@ஜெகன்நாதன்

நன்றிண்ணே :) மாப்பி தான் டெம்ப்ளேட் மாத்தி கொடுத்தான் :)
-------------------------------------
@தாரணிபிரியா

நன்றி பாஸ். நம்ம சரித்திரம் இனி அடுத்த தலைமுறைக்கு தெரியும்ல :)
-------------------------------------
@கலையரசன்

நன்றி தம்பிண்ணே :)
-------------------------------------
@ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீமதி :)
--------------------------------------
@இளைய பல்லவன்

நன்றி தலைவா :)

எனக்கும் அந்த நாள் ஞாபகம் வருது தலைவா :)
--------------------------------------
@கோமதி அரசு

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிம்மா :)
---------------------------------------
@அமித்து அம்மா

நன்றி பாஸ் :)
----------------------------------------
@ கணேஷ்

நன்றி கணேஷ் :)
----------------------------------------
@ஷோபிக்கண்ணு

அவ்வ்வ்வ்வ் :)
----------------------------------------
@கிறுக்கல் கிறுக்கன்

அவ்வ்வ்வ்வ்..... ஏண்ணே இப்படி? இன்னும் உலகத்துல பார்க்க வேண்டியது நிறைய இருக்குண்ணே :)

சதீஷ் குமார் said...

My Birthday date is 30-10-1984.

Related Posts with Thumbnails