ஒரு வரலாறே தன் வரலாறு கூறுதே... (அடடே ஆச்சர்யகுறி)

ஒரு வரலாறே
தன்
வரலாறு கூறுதே! (ஹி ஹி அதே தான்..... அடடே ஆச்சர்யகுறி)

எதை வேணாலும் தட்டலாம் ஆனா வருசத்துக்கு நாலைஞ்சு பதிவு மட்டும் போடும் அமீரகத்துச் சிங்கம் கோபிநாத் தொடர்பதிவுக்கு கூப்பிட்டதை மட்டும் தட்டவே கூடாது. அப்புறம் அந்த நாலைஞ்சு பதிவும் வராம போக வாய்ப்புள்ளது. பயபுள்ள என்னைய கூப்பிடுறேன்னு என்கிட்ட போன்ல கேட்டுட்டு ஒரு மாசம் கழிச்சு தான் பதிவே போட்டுது.

ரைட்டு கொசுவத்திய சுத்திடுவோம்.... சுமார் ஒரு வருசத்துக்கு முன்னாடி.. டடடடடடடடொய்ங்..... (பேக்ரவுண்ட் மீயூசிக்பா)

ss

துபாய்ல மூச்சு விட கூட நேரம் இல்லாம கட்டட வேலைகள் எல்லாம் நடந்திட்டு இருந்தப்ப ’படார்’னு இருக்குற எல்லா ப்ராஜெக்டையும் நிறுத்த ஆரம்பிச்சாங்க. பெரிய பெரிய கம்பெனிகளோட எல்லா ப்ராஜெக்ட்டும் நிக்க ஆரம்பிச்சது. வேலை இல்லைன்னு தொறத்த ஆரம்பிச்சாங்க. அட கட்டின பில்டங்க கூட இடிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன். (கொஞ்சம் ஓவரா தான் போறமோ????)

ஆபிஸ்ல வேலை எதுவும் இல்லாம, குமுதம், தினமலர்,தினகரன் இதை தவிர எந்த தமிழ் இணையதளமும் தெரியாம நான் பாட்டுக்கு மொட்டு வளையத்தைப் கொட்டாவி விட்டுட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

Photobucket
(ஆதவன்ற பேரு இருக்குறதுனால நான் ரொம்ப டெடரா இருப்பேன்னு எதிர்பார்த்தீங்கன்னா அது உங்க தப்பு. )

போரடிக்கும் போது நெட்ல நோண்டுரதும் அதிகமா போரடிக்கும் போது பக்கத்து சீட்ல இருக்குற சேட்டனை ஏதாவது கலாய்ச்சுட்டு இருப்பேன். பயபுள்ள கதறதை பாக்குறதுக்கு சந்தோசமா இருக்கும். இப்படியே பொழுது போச்சு...


ss1


சென்னையில இருந்து ரெகுலரா ஃபார்வேட் மெயில் அனுப்புற நண்பர் ஒருத்தர் ஆகஸ்ட் மாசம் தமிழ்ல பிடிஎப் கோப்பு அனுப்பினார்.

ss1

ரஜினியோட ”குசேலன்” படத்தை புறக்கணியுங்கள் அப்படின்னு “வெட்டி பய புள்ளைக சங்கம்” எழுதிய பதிவு அது.

அதில் இருந்த லின்ங்கை புடிச்சு அந்த சைட்டைஓபன் செய்த உடனே “ஒத்துகிறோம் நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கன்னு”னு தலைப்புல இருந்தது. அடப்பாவி மக்கா நம்மளைப் பத்தி இவ்ளோ டீடெய்லா தெரிஞ்சு வச்சிருக்கானேன்னு முழுசா படிக்க படிக்க மூச்சு முட்டுச்சு. அதில் இருந்த தமிழ் மண கருவிப்பட்டைய புடிச்சு தமிழ் மணம் வந்து பார்த்தப்ப மயக்கமே வந்திருச்சு. கொக்காமக்கா எத்தனை பேரு......அத்தனை பேருக்கு வேலை வெட்டி இல்லையான்னு ஒரே பிரமிப்பு.

உடனே கை பரபரத்தது. கொஞ்சம் கூட யோசிக்காம உடனே ஆரம்பிச்சுட்டேன்.

ss1
ஆரம்பிச்சுட்டேனே தவிர என்ன எழுதுறதுன்னு தெரியல. ஒன்னுரெண்டு போஸ்ட் எல்லாம் போட்டேன். இன்னும் சொல்லப்போனா பின்னூட்டம் எப்படி போடுறதுன்னு கூட தெரியல. என்ன பண்றதுன்னு தெரியல. பல பேருக்கு மெயில் அனுப்பி ”என்னோட சைட்டு மச்சி டைம் கிடைச்சா பாரு”ன்னேன். எவனும் கண்டுக்கல. கையில போர்டு வச்சு உள்ள வாங்க சார்னு கூப்பிடாத குறை தான்.


அப்புறம் தான் நிறைய பதிவுகள் படிக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் நண்பர்கள் வட்டம் கிடைச்சுது. சூது வாது தெரியாம இருந்தேன். அப்புறம் வலையுலக அரசியல் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சுது. ஜாலியாவும் இருந்தது. பரிசல்,லக்கி இவங்க பதிவெல்லாம் படிச்சப்ப ஆச்சர்யமாவும், நானெல்லாம் எப்படி இது மாதிரி எழுத போறேன்னு பயமாவும் தான் இருந்தது.


அப்புறம் குசும்பனின் பதிவை தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அந்த காலகட்டத்தில் நல்ல டைம் பாஸ் குசும்பனின் பதிவுகள் தான். சரி இவரை மாதிரி கொஞ்சம் காமெடியா எழுதலாம்னு நினைச்சா அது தான் கஷ்டமான விசயம்னு தெரிஞ்சுது.

குசும்பன் உள்பட துபாய்ல அதிக பதிவர்கள் இருந்தும் யாரோடவும் போய் அறிமுகப்படுத்திகிட்டது கிடையாது. முத்துலெட்சுமி அக்கா மூலமாக சென்ஷி, கோபியின் அறிமுகம் கிடைச்சுது. பதிவு எழுதுறதும் அப்படியே தொடர்ந்தது. அதாவது துபாய்ல இன்னும் நிலைமை சரியாகல.......


ss1


அப்புறம் அதிகமான பதிவர்கள் நண்பர்களாக கிடைச்சாங்க. ஆரம்பத்துல ஈகலப்பை உபயோகப்படுத்தினேன். இப்ப NHM உபயோகிக்கிறேன். இது எளிமையா தான் இருக்கு. இதுல ஒரு விசயம் பாருங்க. இந்த பதிவு என்னோட நூறாவது பதிவு

ss1


இதுக்கு மேலயும் நான் எப்படி எழுத வந்தேன்னு மொக்கை போட்டு நீங்க படிச்சீங்கன்னா தங்கம் விலை கண்டிப்பா குறைய போறது கிடையாது மக்கா. அதுனால இங்கேயே முடிச்சுகிறேன். ரிட்டன் டூ கொசுவத்தி... டடடடடடடடொய்ங்.....

ss


நண்பர் இளைய பல்லவன் (இப்படியாவது பதிவெழுதுங்க பல்லவன்), மாப்பி ஏனோ ஓனோ, பப்பு, இயற்கை மகள் ஆகியோர் நேரம் கிடைக்கும் போது எப்படி வேலை வெட்டி இல்லாம ஆனீங்கன்னு அதாவது ப்ளாக் எப்படி ஆரம்பித்தீர்கள் என்று இப்பதிவை தொடரலாம் :)

60 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

எங்கேருந்து புடிச்சீங்க அந்த கொசுவத்தி படம். நல்லா சுத்துது :)

புதுகைத் தென்றல் said...

கொசுவத்தி மட்டுமல்ல கார்ட்டூனும் சூப்பர்.

100க்கு வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//எதை வேணாலும் தட்டலாம் ஆனா வருசத்துக்கு நாலைஞ்சு பதிவு மட்டும் போடும் அமீரகத்துச் சிங்கம் கோபிநாத் தொடர்பதிவுக்கு கூப்பிட்டதை மட்டும் தட்டவே கூடாது. ///

ஆமாம் பாஸ் ஆமாம் !

நானும் டிரையிங்க் எப்படியும் இந்த மாசத்துக்குள்ள தட்டிடணும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்ன அம்மிணி said...
எங்கேருந்து புடிச்சீங்க அந்த கொசுவத்தி படம். நல்லா சுத்துது :)

:)))))))))

repeat

ஆயில்யன் said...

அந்த ஆதவன் ?வைச்சு அட்டகாசம் செஞ்சுட்டீங்க பாஸ் !

ஆதவன் ஸ்பெஷல் சூப்பரேய்ய்ய்ய்!

(நானும் ஒரு போட்டோ கொடுத்தேன் அப்படிங்கறதை மட்டும் ஞாபகப்படுத்திகிடறேன்)

ஆயில்யன் said...

மிகவும் ரசித்த விசயம் கார்ட்டூன்ஸ் தான் பாஸ்


கலக்கல் 100 மார்க் :))

இளைய பல்லவன் said...

வரலாறே வரலாற்றைக் கூப்பிடுதே ! (அடடே ஆச்சர்யகுறி)

அழைப்பிற்கு நன்றி தலைவா . . . கண்டிப்பா 'என் சோகக் கதை'ய எழுதிடுவேன்...

கோபிநாத் said...

கலக்கிட்ட ராசா ;)

நல்லா வந்திருக்கு ;)

rajan RADHAMANALAN said...

நாங்களும் வெட்டியாதான் இருக்கோம்...!

goma said...

அசந்து போனேன்

எவனோ ஒருவன் said...

இதெல்லாம் உனக்குத் தேவையா ஏனாஓனா?

எவனோ ஒருவன் said...

படம்லாம் நல்லா போடுறய்யா... அது எப்படி தொத்துச்சுன்னு ஒரு வரலாறு போடலாம்ல...

எவனோ ஒருவன் said...

பாதியிலயே முடிச்ச மாதிரி இருக்கே, இரண்டாம் பாகம் வருமா?

எவனோ ஒருவன் said...

பேக்ரவுண்டு மீசிக் சூப்பர்.

எவனோ ஒருவன் said...

நானும் ரொம்ப வெட்டியாத்தான் இருக்கேன் இப்போ... (என்னது? அதான் தெரியுதேன்னு சொல்றியா? ரைட்டு...)

எவனோ ஒருவன் said...

கூப்டதுக்கு நன்றி.
சீக்கிரம் எழுதுறேன்.

ஷாகுல் said...

துபாய்ல இன்னும் நிலமை சரியகலயா அதாவது இப்பவும் வேலை வெட்டி இல்லாம தான் இருக்கிங்களா?

100 வது பதிவுக்கு வாழ்த்துகள்!

ஸ்ரீமதி said...

ஹ்ம்ம்ம் அருமையான கொசுவர்த்தி.. ;)))))

ஸ்ரீமதி said...

100-க்கு வாழ்த்துகள் அண்ணா :))

ஸ்ரீமதி said...

நாந்தான் 20 :)))

ஸ்ரீமதி said...

படமெல்லாம் தெரியலன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனும்ன்னு இல்ல... பாத்து செய்யுங்க அண்ணா ;)))))

எவனோ ஒருவன் said...

மறந்துட்டேன் மாப்பி.
100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.

என்னுடன் 90 அடிக்கப்போவதற்கும் வாழ்த்துக்கள்.

இளைய பல்லவன் said...

நூறுக்கு வாழ்த்துக்கள் !

பின்னோக்கி said...

சென்சுரி அடிச்சதுக்கு பாராட்டுக்கள்.

ஜோக்கா எழுதத்தெரியாதுன்றதையே ஜோக்கா எழுதியிருக்கிற விதம் அருமை.

வினோத்கெளதம் said...

அப்பயே உன்னையும் மூட்டை முடிச்சு எல்லாம் கட்ட சொல்லி வீட்டுக்கு அனுபிச்சு இருந்த இந்த அளவுக்கு பதிவு எழுதி இம்சை பண்ணி இருக்க மாட்டியோ..
என்ன பண்ணுறது விதி வலியது..:))

வினோத்கெளதம் said...

அப்புறம் சென்சுரி அடிச்சதுக்கு பாராட்டுக்கள்..

☀நான் ஆதவன்☀ said...

@சின்ன அம்மணி

வாங்க சின்ன அம்மணி. எல்லாம் சொந்த தயாரிப்பு தான் :)
-------------------------------------
@புதுகை தென்றல்

நன்றி நன்றி நன்றி :)
-------------------------------------
@ஆயில்ஸ்

சீக்கிரம் போடுங்க பாஸ். மீ த வெயிட்டிங். உங்க போட்டோ ஞாபகம் இருக்கு ஆயில்ஸ். ஆனா எப்படி வரும்னு தெரியல. முயற்சி பண்றேன் பாஸ் :)
-----------------------------------
@அமித்து அம்மா

நன்றி அமித்து அம்மா :)

☀நான் ஆதவன்☀ said...

@இளைய பல்லவன்

உங்க கதையை முதல்ல சொல்லுங்க. அது சோகமா இல்லையான்னு நாங்க சொல்றோம். “சக்கர வியூகம்”ன்னு ஒரு தொடர். ஞாபகம் இருக்கா பல்லவன்?
------------------------------------
@கோபிநாத்

உண்மையாவா தல? எனக்கென்னவோ சரியா வரலைன்னு தோணுச்சு
----------------------------------
@ராஜன் மணாளன்

வாங்க ராஜன். என் சைட்டுக்கு வந்தப்பவே எனக்கு தெரியும் நீங்களும் என்னைப் போல வெட்டியா தான் இருப்பீங்கன்னு :)
----------------------------------
@கோமா

ரொம்ப நன்றிங்க

☀நான் ஆதவன்☀ said...

@ஏனோ ஓனோ

//படம்லாம் நல்லா போடுறய்யா... அது எப்படி தொத்துச்சுன்னு ஒரு வரலாறு போடலாம்ல...//

ஹி ஹி ஒரு பதிவுக்கு மேட்டர் கிடைச்சாச்சு :)

//பாதியிலயே முடிச்ச மாதிரி இருக்கே, இரண்டாம் பாகம் வருமா?//

லேபிள பாரு மாப்பி

//கூப்டதுக்கு நன்றி.
சீக்கிரம் எழுதுறேன்.//

சட்டு புட்டுன்னு எழுது ராசா
-----------------------------------
@ஷாகுல்

கிட்டதட்ட அப்படி தான் ஓடுது ஷாகுல். வேலை இருக்கு. ஆனா முன்ன மாதிரி இல்லைன்னு சொன்னேன். பாராட்டுக்கு நன்றிகள் :)
-----------------------------------
@ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீமதி. படம் மெயில் அனுப்புவேன்னு நான் சொல்லி தான் தெரியனுமா? ஆனா சாயங்காலம் அனுப்புறேன். ஓக்கே :)

☀நான் ஆதவன்☀ said...

@ஏனோ ஓனோ

//என்னுடன் 90 அடிக்கப்போவதற்கும் வாழ்த்துக்கள்//

ஹி..ஹி உன் ஆசைய நிறைவேத்திருவோம் :)
------------------------------------
@பின்னோக்கி

நன்றி பின்னோக்கி
-----------------------------------
@வினோத்

நீ மறுபடியும் சார்ஜா வருவேல்ல அப்ப இருக்குது உனக்கு. அப்புறம் பாராட்டுக்கு நன்றி :)

ஜெஸ்வந்தி said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். வலையுலகுக்கு வந்த கதை வந்து 100 வது பதிவுடன் பொருந்தியது அபாரம். கார்ட்டூன் கலக்கல்.

pappu said...

kadaisila enayum arasiyal vadhi aakitingale!

na idhe 50 vathu pathivuku vachirunden :)

கார்த்திகைப் பாண்டியன் said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பா..:-))))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

congrats for century.

நாகா said...

100க்கு வாழ்த்துக்கள் தல :) உங்க அனிமேஷன் எல்லாம் வழக்கம் போல் அருமை

☀நான் ஆதவன்☀ said...

@ஜெஸ்வந்தி

நன்றி ஜெஸ்வந்தி :)
-------------------------------------
@பப்பு

ஓக்கே பப்பு :)
-------------------------------------
@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா
-----------------------------------
@பாலா

நன்றி பாலா. ஊர்லேருந்து வந்துட்டீங்களா?
-----------------------------------
@நாகா

நன்றி நாகா. எங்க இருக்கீங்க? துபாய் வந்துட்டீங்களா?

- இரவீ - said...

அட இங்க தான் கட போட்டு இருக்கியளா ???

நல்லா சுத்தி(எழுதி)யிருக்கீங்க ...

100-க்கு வாழ்த்துக்கள்.

தாரணி பிரியா said...

100 வாழ்த்துகள் பாஸ். நீங்க வெட்டியா இருந்தா (இருக்கிற) கதை சூப்பர்.

அப்புறம் லேபிள்ல எல்லாம் ஏன் பொய் சொல்லி இருக்கிங்க. நீங்க வேலை இருக்குன்னு சொன்னா மட்டும் நீங்க வெட்டியா இல்லைன்னு நாங்க நம்பிடுவோமா என்ன

☀நான் ஆதவன்☀ said...

@ரவீ

வாங்க ரவி. ரொம்ப நன்றி. நீங்களும் துபாய் தானா?
-----------------------------------
@தாரணிபிரியா

நன்றி பாஸ். லேபிள்ல போட்ட மாதிரி வேலை இருந்ததால தான் சீக்கிரமே முடிச்சுட்டேன் பாஸ் இல்லைன்னா இன்னும் நிறைய கார்டூன் வந்திருக்கும் பாஸ். நம்புங்க பாஸ்

ஹுஸைனம்மா said...

அப்ப நீங்களும் நானும் சேம் ப்ளட்!! நானும் வேலைவெட்டி இல்லாமத்தான் ப்ளாக் ஆரம்பிச்சேன். (ப்ளாக் வச்சிருந்தாலே வேலை எதுவும் இல்லைன்னுதானே அர்த்தம்?)

Rajkumar said...

NIZZZZE POST, CONGRATS FOR 100TH POST....SURE 100 IS THE BIG MILE STONE.....ANIMATIONS ARE VERY GOOD.

இளைய பல்லவன் said...

//☀நான் ஆதவன்☀ said...

“சக்கர வியூகம்”ன்னு ஒரு தொடர். ஞாபகம் இருக்கா பல்லவன்?
//

இதுதான் சோகம் :((

ஜெகநாதன் said...

வாவ்வ்வ்! ஆதவா!!
அட்டகாசமான ந​டை!! அதுக்கு உயிரோட்டமான படங்கள்!
//இன்னும் சொல்லப்போனா பின்னூட்டம் எப்படி போடுறதுன்னு கூட தெரியல//
ச்​சோ..​சோ.. அந்த மாதிரி புள்​ளையா நீங்க!!!???

//இந்த பதிவு என்னோட நூறாவது பதிவு
//

அன்பு ஆதவனுக்கு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்! ​இது ஆயிரமாக, பல்லாயிரமாக, பல லட்சங்களாக ​பெருக வாழ்த்துகி​றேன்!

//முத்துலெட்சுமி அக்கா மூலமாக சென்ஷி, கோபியின் அறிமுகம் கிடைச்சுது//
ஓ..! அப்ப நீங்க நம்ம குடும்ப நண்பரா??? சீக்கிரம் நம்ம ​பேமிலி-ட்ரீல உங்க​ளை இ​ணைச்சுர ​வேண்டியதுதான்! எப்படி அண்ணணா இருக்கீங்களா, இல்ல தம்பி​யே ​போதுமா??

..

சின்ன அம்மிணிது ரிப்பீட்டு!!
நல்லாத்தான் சுத்துது சி.அ-​யோட பின்னூட்டம்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

யோவ் தேவுடு
கலக்கிட்டய்யா வழக்கம் போல

கொசுவத்தி ஒன்னு குடேன், நானும் ஒரு மீள் பதிவு போடனும்.

ஓட்டுக்கள் போட்டாச்சு.

ஆமாம், நீயெல்லாம் வந்து போட்டாத்தன் எனக்கெல்லாம் கமெண்டு கல்லாக்கட்டும்,ஏன் ஆளையே காங்கலை?

கிரி said...

ஆதவன் 100 க்கு வாழ்த்துக்கள் ..பதிவும் ஜாலியா இருக்கு :-)

கோமதி அரசு said...

ஆதவன்,
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

துபாயில் நிலமை சரியாக வாழ்த்துக்கள்.

ஆதவன் படங்கள் அருமை.

இளையவர்களிடம் திறமை நிறைய உள்ளது,பாராட்ட வேண்டிய விஷயம்.
பாராட்டுக்கள்,ஆதவன்.

☀நான் ஆதவன்☀ said...

@ஹூசைனம்மா

சரியா புரிஞ்சிருக்கீங்க ப்ளாக் வைச்சிருக்குறதைப் பத்தி :) வருகைக்கு நன்றி
-----------------------------------
@ராஜ்குமார்

நன்றி ராஜ்குமார்
-----------------------------------
பல்லவன், ஞாபகம் இருந்தா சரி :)
-----------------------------------
@ஜெகன்நாதன்
ஜெகன் அண்ணாத்த(இதையே பிக்ஸ் பண்ணிடுவோம்) பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி. கொசுவத்தியோட சின்ன அம்மணி பின்னூட்டமும் நல்லா தான் சுத்தது :)
-----------------------------------
@கார்த்திகேயன்

தேவுடு ரொம்ப நன்றி. கொசுவத்தி வேணும்னா எடுத்துகங்க. காப்பிரைட்ஸ் எதுவும் கிடையாது :)
-----------------------------------
@கிரி

நன்றி கிரி :)
-----------------------------------
@கோமதிஅரசு

வாங்கம்மா. உங்க பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மற்றும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி :)

இளைய பல்லவன் said...

பதிவு போட்டாச்சு தல..

ஷங்கி said...

நூறாவதுக்கு வாழ்த்துகள்.
படங்களும், வரலாறும் அருமை. எல்லாம் ஒரே குரூப்புதானோ?!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

50!!!!!!!!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனிமேசன்லாம் கலக்குதே குருவே..

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ஷங்கி :)
-----------------------------------
@முத்தக்கா

ஐம்பதாவது பின்னூட்டம் நான் போடுறதான்னு யோசிச்சுகிட்டுருக்கும் போதே நீங்க போட்டுட்டீங்க. நன்றிக்கா

//அனிமேசன்லாம் கலக்குதே குருவே..//

அவ்வ்வ்வ்வ் குருவா??? ரைட்டு.. காணிக்கைய வாங்கிட்டு அனிமேசனை நல்லா கத்துகொடுத்துடவேண்டியது தான்.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

எழுதியாச்சுப்பா...
http://www.yetho.com/2009/11/blog-post_06.html

ஊர்சுற்றி said...

ஹிஹிஹி....:)

ஆ! இதழ்கள் said...

woww..கலக்கிட்டீங்க போங்க... இத்த எப்படி படிக்காம உட்டேன்.

திகழ் said...

வெற்றிக்கு வாழ்த்துகள்

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள்.!!!!

வெண்பூ said...

தமிழ்மண விருது வெற்றிக்கு வாழ்த்துகள் ஆதவன்..

ஜெகநாதன் said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் ஆதவன்! ​​கொசுவர்த்தி நல்லாத்தாம்வே சுத்தியிருக்கு!

ராமலக்ஷ்மி said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்!

நல்ல இடுகை:)!

Related Posts with Thumbnails