ஆமா அதுக்கு என்ன இப்ப?-பஞ்சாமிர்தம்

டென்சனால நேரத்தில் யாராவது கொடைச்சல் குடுத்தா என்ன பண்ண முடியும்? கோபப்பட்டு கத்தலாம், திட்டலாம், ஏன் காதை கூட கடிச்சு வைக்கலாம். ஆனா என் ப்ரெண்டு கொஞ்சம் வித்தியாசமா இருக்கான். நானும் இப்பெல்லாம் இத தான் ஃபாலோ செய்யிறேன்.

ரமலான் விடுமுறையில் நண்பர்களோடு ஷாப்பிங் சென்றிருந்தேன்.
ஷாப்பிங் முடித்துவிட்டு பில் போடும் இடத்திற்கு வந்த போது அவனது பர்ஸை காணவில்லை. ரொம்ப டென்ஷனாகிவிட்டான். மற்ற நண்பர்கள் அதே கடையில் தேட ஆரம்பித்தோம். கிடைக்கவில்லை.

அவன் போன் அடித்தது.

இவன் எரிச்சலுடன் “ஹலோ”

“ஹலோ சார். நாங்க சென்னையில இருந்து பேசுறோம். தமிழ் மேட்ரிமோனியில உங்க ப்ரொபைல் பார்த்தோம் சார். எங்க பொண்ணுக்கும் வரன் பார்த்திட்டு இருக்கோம். நாங்களும் ********** ஆளுங்க தான்” பெண் குரல் மறுமுனையில்.

“சரிங்க. என்னோட அட்ரஸ் தரேன் வீட்ல பாருங்க” எரிச்சல் மாறாமல் இவன்.

“நீங்க எங்க வேலை பாக்குறீங்க?”

“சார்ஜால வேலை பாக்குறேன். நீங்க என் அப்பாகிட்ட பேசுங்க”

“அங்கேயே தான் வேலையா? சென்னையில திரும்ப வர மாட்டீங்களா? ”

“இப்போதைக்கு இங்கே தான் வேலை. அங்க வர்ர மாதிரி ஐடியா இல்ல”

“அச்சச்சோ அப்படியா? எங்க பொண்ணை வெளியூருக்கு எல்லாம் கொடுக்குறதா இல்லைங்க. நீங்க சென்னையில செட்டில் ஆகிறா இருந்தா பரவாயில்ல”

“வேணும்னா நான் வேலைய ரிசைன் பண்ணிட்டு அங்க வர்ரேன். வீட்டோட மாப்பிள்ளையா வச்சு காலம்புல்லா சோறு போடுவீங்களா?”ன்னு படார்னு கேட்டான்.

மறுமுனையில் பேச்சே இல்ல. அப்புறம் கட் ஆகிடுச்சு.

“ஏண்டா இப்படி பேசுன? உனக்கே தப்பா தெரியல?” நான்

“ஆமா தப்பு தான் அதுக்கென்ன இப்ப?”

“இல்லடா பேசுனது பெரியவங்களாச்சே, மரியாதையா இருக்காதேன்னு...”

“ஆமா மரியாதை இல்ல தான். அதெக்கென்ன இப்ப?”

அவ்வ்வ்வ்வ்வ்வ் அவனைப் பற்றி தெரியுமாததால் அத்துடன் கப்சிப்.

மறுபடியும் பர்ஸ தேட ஆரம்பிச்சோம்.
----------------------------------------------------------------------------------------------
அதே நண்பன். சில நாட்களுக்கு முன் தொலைபேசியில்

“மச்சி நேத்து ஒரு லின்ங் அனுப்பினேன்னே? உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்(உ.தமிழன் அண்ணன் பதிவு உ.போ.ஓ விமர்சனங்கள்) படிச்சயா?”

“படிச்சேண்டா. எல்லாம் படிக்கல. ஒரு சிலது படிச்சேன். ஏன் அதுக்கென்ன?”

“கமல் எல்லாம் வேணும்னே செஞ்சிருக்க மாதிரி இருக்கேடா? அந்த பச்சை ஒயர் விசயம் கூட தப்பு மாதிரி தோணுதேடா”

“ஆமா தப்பு மாதிரி தான் தோணுது. அதுக்கென்ன இப்ப?”

“இல்லடா கமலே இந்த மாதிரி படம் எடுத்தா நல்லாயிருக்காதுல்ல..”

“ஆமா நல்லாயிருக்காது தான் அதுக்கென்ன இப்ப

“நீயா நானா கோபி பயங்கர ஜால்ரா போடுற மாதிரி இருக்குல்ல?”

“ஆமா இருக்கு. அதுக்கென்ன இப்ப?” அவனுக்கு ஆபிஸில் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் லேசாக புரிய ஆரம்பித்தது. சரி கொஞ்சம் குஜாலா ஏதாவது பேசி அவன் மூட மாத்திலாம் என்ற யோசனையுடன்..

“புவனேஸ்வரி மேட்டர் படிச்சயா? ரொம்ப கொடுமையா இருக்குல்ல?”

“ஆமா கொடுமையா தான் இருக்கு. அதுக்கென்ன இப்ப?”

”டொக்” போனை கட் செய்தேன். யப்பா சாமி ஆளை விடு!

(அதுக்கென்ன இப்ப? என பின்னூட்டமிடுபவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்)
-------------------------------------------------------------------------------------------------
புவனேஸ்வரி விசயத்தில் உ.த அண்ணன் தயவாலும் சில பல சைட்களின் தயவாலும் படித்து பொது அறிவை வளர்ந்துக் கொண்டேன். இதில் அடக்க முடியாமல் சிரித்தது விஜயகுமார், அருண் விஜயகுமார் ஆகியோர் பேசியது. ரெண்டு பேருக்கும் இருக்கும் கஷ்டமான சூழ்நிலைய ஒத்துக்கவேண்டியது தான். அதுக்காக சினிமாவுக்கு எழுதிகொடுத்த டயலாக் எல்லாம் இங்க வந்து ஒப்பிச்சா சிரிப்பு வராதா?

இதுல நம்ம சரத்குமார் பேசும் போது “கேப்”ல கடா வெட்டிட்டார். ”ஏண்டா ராதிகா பேரை சேர்க்கலைன்னு?” கேட்குற மாதிரி இருந்தது. செம காமெடி. நொம்ப சிரிச்சேன் பாஸ்.

போயும் போயும் தினமலருக்கு எல்லாம் அவ்வளவு பெரிய மீட்டிங் போட்டு கண்டனம் பண்ணினதே வேஸ்ட். இதுல ஓவரா திட்டி இன்னும் கொஞ்சம் அதுக்கு பெயரை வாங்கி கொடுத்தது சுத்த வேஸ்ட்.
-------------------------------------------------------------------------------------------------
யவண ராணி படிக்க ஆரம்பித்ததை குறிப்பிட்டுருந்தேன். ஒரு மாதம் ஆகியும் முடிக்கவில்லை. ஆரம்பத்தில் ஒரு வித உற்சாகத்திற்கும், சுவாரஸியத்திற்கும் துணையாக இருந்த வர்ணனைகள், முதல் பகுதியின் பாதியை கடக்கும் முன் அதே வர்ணனைகள் சோர்வையே தருகின்றன.

ஒவ்வொரு அத்தியாத்தில் வரும் வர்ணனைகள் தேவையற்றதாகவே தோன்றுகிறது. நாவலில் சோழர்கள் அதிகம் புழங்கும் “தமிழ்நாடு” என்ற வார்த்தையும் சற்றே எரிச்சலை கிளப்புகிறது. மூவேந்தர்களின் அக்காலத்தில் தமிழ்நாடு என்று யாரும் குறிப்பிட்டதாக படித்த ஞாபகம் இல்லை.

இருந்த போதிலும் இரண்டு பாகத்தையும் முடிக்காமல் விடமாட்டேன் :)

கணினியில் ”நிலமெல்லாம் இரத்தம்” படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட தமிழ் சினிமா பார்த்த ஒரு அனுபவமாக இருந்தது. நிறைய மசாலாக்களை தடவி சுவையாகவும், சுவாரசியமாவும் கொடுத்திருக்கிறார் பா.ராகவன். குமுதம் ரிப்போர்டரில் தொடராக வெளிவந்திருக்கிறது. ஆதலால் அதற்கேற்றாற் போல் எழுதியிருக்கிறார் போல. இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனையைப் பற்றி சில பல சந்தேகங்கள் தீர்ந்தன. சில வரலாற்று நிகழ்வுகளும் அறியமுடிந்தது.
------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் டேமேஜர் ஸ்பெஷல்ஸ்...

பாத்ரூம் போனா லேட்டாகுதுன்னு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....ஆனா நாம வெளிக்கு போறோம்னு செட்டப் செய்துட்டு வெளியவே போவோம்ல (சவுண்ட் செட்டப் கூட இருக்கு பாருங்க)------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த சந்தோஷத்த கொண்டாட எல்லோரும் மறக்காம ஓட்டு போட்டுருங்க :)

29 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சின்ன அம்மிணி said...

தீபாவளி வாழ்த்துக்கள். முல்லை குடுத்து இருக்கும் விருதுக்கும் வாழ்த்துக்கள்!!!

goma said...

எதுக்கும் பத்திரமா பார்த்துக்கோங்க.”அதுக்கென்ன இப்ப..” ...காமெடியை யாராவது சுட்டுடப் போறாங்க...

சந்தனமுல்லை said...

"ஆமா அதுக்கு என்ன இப்ப?" !!! :))

சென்ஷி said...

//சின்ன அம்மிணி said...

தீபாவளி வாழ்த்துக்கள். முல்லை குடுத்து இருக்கும் விருதுக்கும் வாழ்த்துக்கள்!!!//

ரிப்பீட்டே!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

☀நான் ஆதவன்☀
பஞ்சாமிர்தம் நல்லா இருக்கு,
டேமேஜர பத்தி தனி பதிவா போடலாமே!

எவனோ ஒருவன் said...

//ஆமா அதுக்கு என்ன இப்ப?//

சூப்பர் மாப்பி...
தலைப்பு கிடைச்சிருச்சு....

சந்தனமுல்லை said...

/“வேணும்னா நான் வேலைய ரிசைன் பண்ணிட்டு அங்க வர்ரேன். வீட்டோட மாப்பிள்ளையா வச்சு காலம்புல்லா சோறு போடுவீங்களா?”ன்னு படார்னு கேட்டான்./

avvvv!! :)))

சந்தனமுல்லை said...

/இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனையைப் பற்றி சில பல சந்தேகங்கள் தீர்ந்தன. சில வரலாற்று நிகழ்வுகளும் அறியமுடிந்தது./

படிப்பிஸ்ட்ப்பா!! :))

ஷாகுல் said...

(அதுக்கென்ன இப்ப? என பின்னூட்டமிடுபவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்)

அதுக்கென்ன இப்ப

தீபாவளி வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

@சின்ன அம்மணி
நன்றி சின்ன அம்மணி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் :)
------------------------------------
@goma
ஹி ஹி நீங்க சொல்லி முடியல அதுக்குள்ள கீழ ஏனோஒனோ சுட்டுட்டான் பாருங்க :) இனி காப்பிரைட்ஸ் எடுத்து வச்சுகிறேன்.
------------------------------------
@சந்தனமுல்லை
வாங்க முல்லை. நாங்கெல்லாம் பள்ளிகூடத்திலேயே பயங்கர படிப்ஸ் தெரியுமா? அதைப் பத்தி தனியா பதிவு போட்டா தான் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன் :)

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி
நன்றி தல :)
-----------------------------------
@பாலா
டேமேஜர் பத்தி தானே... பதிவென்ன புக்கே போடலாம் பாலா :). ஊருக்கு போய் தீபாவளிய கொண்டாடிட்டு வாங்க.
------------------------------------
@ஏனோ ஓனோ

மாப்பி ராயல்டி எதுவும் கொடுக்காம இப்படி சுட்டுட்டு போறயே இது நியாயமா? இதுக்கு பரிகாரமா ஊருக்கு வந்தா ஒரு வாரம் உன் செலவுல தான் லஞ்ச். ஓக்கேவா?
----------------------------------
@ஷாகுல்
அவ்வ்வ்வ்வ்வ் எத செய்ய கூடாதுன்னு சொல்றமோ அதை தான் க்ரெட்டா செய்றீங்க :) ஆனாலும் வாழ்த்து சொன்ன உங்களுக்காக எங்க ஆபிஸ்ல எனக்கு டேமேஜர் பதவியே தரலாம் ஷாகுல் :)

கோபிநாத் said...

சூப்பரு டா ;)

ஆயில்யன் said...

//சென்ஷி said...

//சின்ன அம்மிணி said...

தீபாவளி வாழ்த்துக்கள். முல்லை குடுத்து இருக்கும் விருதுக்கும் வாழ்த்துக்கள்!!!//

ரிப்பீட்டே!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)

ஆயில்யன் said...

//இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனையைப் பற்றி சில பல சந்தேகங்கள் தீர்ந்தன. சில வரலாற்று நிகழ்வுகளும் அறியமுடிந்தது.///


அதுக்கென்ன இப்ப...?

ஊடகன் said...

கோபமான அல்லது பதட்டமான நேரத்தில் ஒருவன் எடுக்கும் எந்த முடிவும் கோணலே........

பின்னோக்கி said...

உங்க நண்பர் இன்னொரு வடிவேலு மாதிரி இருக்காரு..அதுக்கு என்னன்னு கேட்காதீங்க

கலையரசன் said...

டேய்.. அந்த கேள்வி கேட்ட நண்பன் நான்தான்னும்,

"அதுக்கு என்ன இப்ப"ன்னு பதில் சொன்ன டோமரு நீதான்னும்

கடைசி வரைக்கும் சொல்லாம போயிட்டீயேப்பா!!

கலையரசன் said...

தீபாவளி வாழத்துகள்!!

தீபாவளிக்கு நான் ஊருக்கு போறேனேனனன!! நீ வர்லையா?
(வயிரு எறியாம எனக்கு வாழ்த்து சொல்லி அனுப்பு..)

pappu said...

உங்கள் "பொக்கிஷ" கருத்து////

ஆமா, அதுக்கென்ன இப்ப?

டேமேஜர டேமேஜ் பண்னாத பதிவே இருக்காது போலயே?

கிரி said...

ஆதவன் "அதுக்கென்ன இப்ப" மேட்டர் செம சூப்பரா இருக்கு..ரொம்ப ரசிச்சேன்.. என் நண்பர்கள் ஒரு சிலரும் இது மாதிரி விவகாரமான ஆளுங்களா இருக்காங்க..

இனி இதை நான் அவங்க கிட்ட பயன்படுத்தப்போகிறேன் ...நன்றி நன்றி :-)

வினோத்கெளதம் said...

//“அச்சச்சோ அப்படியா? எங்க பொண்ணை வெளியூருக்கு எல்லாம் கொடுக்குறதா இல்லைங்க. நீங்க சென்னையில செட்டில் ஆகிறா இருந்தா பரவாயில்ல”//

இந்த விஷயம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு..அடுத்த தடவை அப்படி எதாச்சும் கால் வந்தா எனக்கு Call divert பண்ண சொல்லுங்க உங்க நண்பரை..

☀நான் ஆதவன்☀ said...

நன்றி கோபிநாத்
----------------------------------
நன்றி ஆயில்ஸ் சேட்டா :)
----------------------------------
@ஊடகன்
உண்மை தான் ஊடகன். ஆனால் யார் புரிய வைப்பது? அவர்களே உணர்ந்தால் தான் உண்டு
----------------------------------
@பின்னோக்கி
அவ்வ்வ்வ்வ் இத மட்டும் அவன் கேட்டான்.......... “ஆமாடா நான் வடிவேலு மாதிரி தான் அதுக்கென்ன இப்ப?”ன்பான் :)

☀நான் ஆதவன்☀ said...

@கலை
அவ்வ்வ்வ் நீ சொல்லி தான் இந்த பதிவே போட்டேன்னு சொன்னாலும் சொல்லுவ. ஊருக்கு போகும் போது என்கிட்ட வாங்கிகட்டிக்காத ஆமா...
------------------------------------
@பப்பு

நீயுமா பப்பு? டேமேஜர் டேமேஜ் ஆக்குறது தானே நம்ம வேலையே :)
-----------------------------------
@கிரி

கிரி பார்த்து உபயோங்கிங்க. அப்புறம் அதுக்கும் எதுனா ரிப்ளே வச்சிருப்பாங்க. கோக்குமாக்கா யோசிக்கிறதுல தமிழன் கில்லாடியாச்சே :)
------------------------------------
@வினோத்
ஹிஹி இதெல்லாம் இப்ப சொல்லுவ. ஒரு ரெண்டு வருசம் போனா தெரியும்பா உனக்கு :)

எவனோ ஒருவன் said...

சீக்கிரம் ஆன்லைன் வாய்யா.
தலைப்பு பத்தி கும்மி அடிக்கனும்....

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ஆதவன், கலக்கலான பதிவு. அதுக்கென்னக்கு ஒரு புது வடிவமே கொடுத்திட்டீங்க :)

Tamil astrology said...

உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றி

ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்

Tamil astrology said...

உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றி

ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்

கார்த்திகைப் பாண்டியன் said...

தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பா..:-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Related Posts with Thumbnails