வெட்டியா இருந்தா உள்ளாற வாங்க

1.A - available/single? - முதல்ல எதுக்குன்னு சொல்லுங்கய்யா. அப்பாலிக்கா கிடைப்பேன்னா மாட்டேன்னானு சொல்றேன்.

2. B-.Best friend - மொக்க படம் அது!

3.C- Cake or Pie - இதுல ஏன் கமர்கட்டு சேர்க்கல? (கோக்கு மாக்கா கேள்வி கேட்டா இப்படி தான்)

4.D - Drink of Choice - மோர். தெளிவடைய உதவும் பானம்.

5.E- Essential item you Use every day - உள்ளாடை

6.F-favorite color - உள்ளாடை எந்த கலர்ல இருந்தா என்னய்யா.... (ஸாரிப்பா போன கேள்வியோட தொடர்பிருக்குறதா நினைச்சுட்டேன்)

7.G-gummy bears or worms - எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. இந்த மாதிரி கேள்வி எல்லாம் ஏன் கேட்குறீங்க? (கேள்வி புரியலைன்னா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு. அவ்வ்வ்வ்வ்)

8.Home Town - டவுனெல்லாம் கிடையாதுங்க. மதுரை பக்கத்துல ஒரு கிராமம்.

9.I-Indulgence - பொழப்பே அப்படி தானே ஓடிகிட்டுயிருக்கு!

10.J- January/February - ஆமா அதுக்கென்ன இப்போ?

11.K-Kids and their Names - நானே இன்னும் குழந்தை தானப்பா.....

12.L-Life is incomplete with out- சாப்பாடு

13.Marriage Date - தெரிஞ்சா பதிவே போடுறேன்.

14.N - Number of siblings - இந்திய நாடு என் நாடு. இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதரிகள் (யாரங்கே? கல்யாணத்துக்கு ஃபாரீன் பொண்ணா பாருங்கப்பா)

15.O-Orange or Apples - அட போப்பா. தெரிஞ்சு என்ன பண்ண போற?

16.P- Phobias/fears - ”எல்லாம் சிவமயம் என்று சொல்லுவதுண்டு.... எனக்கு எல்லாம் பயமயம்.(எவண்டா அது கொட்டாவி விடுறது? பிச்சு பிடுவேன் பிச்சு) சென்ஷி கவிதை பயமெனக்கு, அய்யனார் புனைவு பயமெனக்கு, சிறுகதை பயம், கும்மி பயம், குசும்பனின் குசும்பு பயம்,ஸ்ரீமதியின் கவிதை கூட பயமெனுக்கு........ “

17.Q-Quote for today - ”கண்டவன்கிட்ட எல்லாம் தத்துவம் கேட்காதீங்க”

18.R-Reason to Smile - டெய்லி ரெண்டு வேளை பல் தேய்கிறேனே!

19.S-Season - தீபாவளிக்கு வரும் “காத்தாடி சீஸன்”

20.T-Tag4 People - ஒரே ஒரு நபர் மட்டுமே அது....... “ஆசிப் அண்ணாச்சி”

21.U-Unknown fact about me - நான் ரொம்ப அழ்ழ்கா இருப்பது.

22.V-Vegetable you won't Like - காய்கறிய எல்லாம் என்னால வெறுக்கவே முடியாது. (N-க்கு மட்டும் நான் வெஜ்ல பிடிக்காததுன்னு ஏன் கேட்கல?)

23.W-worst Habit - தொடர் பதிவுக்கு கூப்பிட்டா உடனே ஒத்துகிறது.

24.X- Xrays you had - X-man படம் தான் மூனு பார்ட்டும் இருக்கு.

25.Y-Your favorite Food - மிளகாய் கிள்ளி சாம்பார்

26.Z-Zodiac sign - ஜாதகமே தரேன். ஒரு நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு கொடுங்க. புண்ணியமா போகும்.


அன்புக்குரியவர்கள் - பின்னூட்டமும் ஓட்டும் போடுபவர்கள்.

ஆசைக்குரியவர் - ஃபாலோவர்களாக சேருபவர்கள்

இலவசமாய் கிடைப்பது - ஓட்டும், பின்னூட்டமும்

ஈதலில் சிறந்தது - எனது site லின்ங்க உங்க siteல ஒரு சைடு போடுறது.

உலகத்தில் பயப்படுவது - தமிழ்மண நெகடிவ் ஓட்டு

ஊமை கண்ட கனவு - நான் தமிழ்மண நட்சத்திரமாவது

எப்போதும் உடன் இருப்பது - தமிழிஷில் ஒரு ஓட்டு (அட என் ஓட்டு தான்பா)

ஏன் இந்த பதிவு - ஆபிஸ்ல வேலை இல்ல

ஐஸ்வர்யத்தில் சிறந்தது - போயி அபிஷேக் பச்சன்கிட்ட கேளுங்கப்பா (ஸாரி அவங்கோன்னு நினைச்சுட்டேன்)

ஒரு ரகசியம் - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

ஓசையில் பிடித்தது - கீ போர்டு சத்தம்

ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது - எங்க டேமேஜர் (அவ்வ்வ்வ்வ்வ்)

என்னை இத்தொடருக்கு அழைத்த மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள் பல.

47 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கலையரசன் said...

வெட்டியாதான் இருந்தேன்...
:-)

மணிகண்டன் said...

***
(அ)ஃறிணையில் பிடித்தது - எங்க டேமேஜர் (அவ்வ்வ்வ்வ்வ்)
***

:)-

ஆயில்யன் said...

மீ த வெட்டியாய் உள்ளேன் ஐயா :)

ஆயில்யன் said...

//6.Z-Zodiac sign - ஜாதகமே தரேன். ஒரு நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு கொடுங்க. புண்ணியமா போகும்.//

யாருக்கு....?

ஆயில்யன் said...

//அன்புக்குரியவர்கள் - பின்னூட்டமும் ஓட்டும் போடுபவர்கள்.//

இதுல நான் அரைகுறை பாஸ் ஒன்லி பின்னூட்டம் தான் :)))))))))

ஆயில்யன் said...

//ஒரு ரகசியம் - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல/

இம்புட்டுநாளும் ரகசியமாவே வைச்சிருக்கறதாலத்தான்!!!! :))))

கோபிநாத் said...

;)))

மின்னுது மின்னல் said...

உலகத்தில் பயப்படுவது - தமிழ்மண நெகடிவ் ஓட்டு
//

அவ்வ்வ்வ்

இத படிக்காமல் + குத்திட்டேனே

இளைய பல்லவன் said...

எனை மறந்ததேன் ? !

தலைவா! தொடருக்கு என்னைக் கூப்பிடுவீங்க, அப்படியாவது மறுபடியும் பதிவிட ஸ்டார்ட் பண்ணலாம்னு பாத்தா உட்டுட்டீங்களே!!

சென்ஷி said...

:)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

கலாசிருக்கீங்க நண்பா..:-))))
(By the way, me too vetti.. hi hi hi)

ஷாகுல் said...

பாஸ் உங்கள மாதிரி நானும் சும்மாதான் இருக்கேன்.

//Z-Zodiac sign - ஜாதகமே தரேன். ஒரு நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு கொடுங்க. புண்ணியமா போகும்.//

ஐயோ, ஒரு பொன்னு வாழ்க்கைய கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம்பா!

:)-

☀நான் ஆதவன்☀ said...

@கலையரசன்

ஒத்துக்கிறேன். நீ வெட்டியா தான் இருக்க :)
-----------------------------------
@மணிகண்டன்

நன்றி மணிகண்டன் (அஃறிணைய நீங்க மிஸ் பண்ணிட்டீங்க)
-----------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் நீங்களும் நம்மாளு தான் :)

//யாருக்கு....?//

ஓவரு பாஸ் இதெல்லாம்

//இம்புட்டுநாளும் ரகசியமாவே வைச்சிருக்கறதாலத்தான்!!!! :))))//

ரைட்டு. இனி எப்படின்னு பார்ப்போம்

☀நான் ஆதவன்☀ said...

@கோபிநாத்

நன்றி தல
------------------------------------
@மின்னல்

அவ்வ்வ்வ் சும்மா ஒரு ப்லோல அதை எழுதிட்டேன். அதைப் பார்த்துட்டு பயபுள்ளைக நெகடிவ் ஓட்டு குத்ததுங்க. உங்க + ஓட்டுக்கு நன்றி மின்னல்
-----------------------------------
@பல்லவன்

டோண்ட் ஒர்ரி பல்லவன். இதையே தொடர் பதிவா எழுதுங்க. இல்லைன்னா இன்னொரு தொடர் பதிவும் இருக்கு. அப்ப உங்கள கூப்பிடலாம்னு நினைச்சேன். இப்ப கன்பார்மா ஆகிடுச்சு :)

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

வாங்க தல
-----------------------------------
@செந்தில் வேலன்

வாங்க செந்தில். நன்றி
-----------------------------------
@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா. பேசாம வெட்டி ஆபிசர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும் போல. நிறைய பேரு இருக்கீங்களே :)
-----------------------------------
@ஷாகுல்

வாங்க ஷாகுல். எங்க வெட்டி ஆபிசர் சங்கத்துல சேர்ந்துக்கங்க.

//ஐயோ, ஒரு பொன்னு வாழ்க்கைய கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம்பா!
//

ஜெலஸ் பீப்புள்ஸ்... வாட் டூ டூ? :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஒரு நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு கொடுங்க. புண்ணியமா போகும்.//

ஆமா அப்பறமா ... எல்லாம் உங்களால் தான் ந்னு புலம்பரதுக்கா..நாங்க மாட்டோம்ப்பா.. :)

4 பேரைக் கண்டு பயம்ன்னு போட்டிருக்கீங்க நாலு நெகட்டிவ் கமெண்ட் நிச்சயம்.. ஹிஹி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நெகட்டிவ் கமெண்ட் இல்ல நெகட்டிவ் ஓட்டு..

ஜெட்லி said...

மோர்... நிறைய குடிப்பிங்க போல..மோரை தான் சொல்றேன்

நாஞ்சில் பிரதாப் said...

செம நக்கல்...

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

:) :) :)

ஜீவன் said...

///இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

:) :) :)///


repeettu....!

Bhuvanesh said...

ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணே.. நான் வெட்டியா தான் இருந்தேன்!! :)

நல்லா சிரிச்சேன் !!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தேவுடு
அப்போ நான் அன்புக்கும் ஆசைக்கும் உரியவனா?மகிழ்ச்சி
ஒவ்வோன்னும் பட்டைய கிளப்பும் வாசகம்.

இதுக்கு போய் யாரோ 2 நெகெடிவ் வோட்டு போடு வயித்தெறிச்சலை காட்டியிருக்காரே?

ஓட்டுக்கள் போட்டாச்சு

pappu said...

(அ)ஃறிணையில் பிடித்தது - எங்க டேமேஜர் (அவ்வ்வ்வ்வ்வ்)////

டச்சுங்க!

ஷங்கி said...

நல்லாருக்கு!

kanagu said...

:)))))

☀நான் ஆதவன்☀ said...

@முத்துலட்சுமி

இப்படியே எல்லாரும் சொன்னா நான் எங்க போறது :(

//4 பேரைக் கண்டு பயம்ன்னு போட்டிருக்கீங்க நாலு நெகட்டிவ் கமெண்ட் நிச்சயம்.. ஹிஹி//

பரவாயில்லைக்கா. எனக்கெல்லாம் ஓட்டே விழாது. அட்லீஸ் நெகடிவ்வாவாது விழுதேன்னு சந்தோஷப்படுறேன் :)
----------------------------------
@ஜெட்லி

இல்ல ஜெட்லி குடிக்கவே மாட்டேன். நானும் மோரைத்தான் சொன்னேன் :)
----------------------------------
@பிரதாப்பு

வாங்க பிரதாப். நன்றி
----------------------------------
@ராஜலெட்சுமி

நன்றி ராஜலெட்சுமி. (உங்க ப்ரொபைல் போட்டால இருக்குற குழந்தைங்க உங்க குழந்தைங்களா? ரொம்ப க்யூட்டா இருக்குங்க :)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ஜீவன்
-----------------------------------
நன்றி புவனேஷ்
----------------------------------
@கார்த்திகேயன்

//தேவுடு
அப்போ நான் அன்புக்கும் ஆசைக்கும் உரியவனா?மகிழ்ச்சி
ஒவ்வோன்னும் பட்டைய கிளப்பும் வாசகம்.//

ஆமா இதிலென்ன சந்தேகம் :)
-----------------------------------
@பப்பு

அவரை மறக்கமுடியுமா பப்பு :)
-----------------------------------
நன்றி ஷங்கி
-----------------------------------
நன்றி கனகு :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

பயபுள்ளைக்கு காலாகாலத்துல கல்யாணத்த பண்ணிவையுங்க.
திக்கு தெரியாம திறியுது...

வினோத்கெளதம் said...

Ungalukku Treat Kodukkanumnu aasai paduren konjam Alain varaikum varamudiyumaa( todarpathivaa eluthuraa vaa vaa )..:))

மங்களூர் சிவா said...

/
அன்புக்குரியவர்கள் - பின்னூட்டமும் ஓட்டும் போடுபவர்கள்.

ஆசைக்குரியவர் - ஃபாலோவர்களாக சேருபவர்கள்

இலவசமாய் கிடைப்பது - ஓட்டும், பின்னூட்டமும்

ஈதலில் சிறந்தது - எனது site லின்ங்க உங்க siteல ஒரு சைடு போடுறது.

உலகத்தில் பயப்படுவது - தமிழ்மண நெகடிவ் ஓட்டு

ஊமை கண்ட கனவு - நான் தமிழ்மண நட்சத்திரமாவது

எப்போதும் உடன் இருப்பது - தமிழிஷில் ஒரு ஓட்டு (அட என் ஓட்டு தான்பா)

ஏன் இந்த பதிவு - ஆபிஸ்ல வேலை இல்ல

ஐஸ்வர்யத்தில் சிறந்தது - போயி அபிஷேக் பச்சன்கிட்ட கேளுங்கப்பா (ஸாரி அவங்கோன்னு நினைச்சுட்டேன்)

ஒரு ரகசியம் - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

ஓசையில் பிடித்தது - கீ போர்டு சத்தம்

ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது - எங்க டேமேஜர் (அவ்வ்வ்வ்வ்வ்)
/

ஹா ஹா
:))))))))))

cheena (சீனா) said...

நலலாத்தான் இருக்கு பதில் எல்லாம்

வெட்டி ஆபீஸர் இத்தனை பேரா

நல்வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

ஹி..ஹி.நான் வெட்டியாயில்லை!

☀நான் ஆதவன்☀ said...

//பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

பயபுள்ளைக்கு காலாகாலத்துல கல்யாணத்த பண்ணிவையுங்க.
திக்கு தெரியாம திறியுது...//

உங்க ஆதங்கம் புரியுது பாலா. கண்டிப்பா உங்க வீட்லேயும் நான் சொல்றேன் :)
----------------------------------
@வினோத்

நீங்க போன வாரம் வந்ததே இதுக்கு தான்னு இன்பர்மேசன் கிடைச்சதனால தான் நான் வரவே இல்லை. இதுல அல் ஐன் வரனுமா? மீ த எஸ்கேப்பு
----------------------------------
@மங்களூர் சிவா

நன்றி சிவா :)

☀நான் ஆதவன்☀ said...

@சீனா

நன்றி சீனா ஐயா :)
------------------------------------
@அருணா

பதிவ படிக்காம சொன்னாதான் நாங்க நம்புவோம். நீங்க படிச்சிருக்கீங்க. ஸோ நீங்களும் வெட்டி ஆபிசர் தான் :)

raja said...

ஏதாவது மோகினி அடிச்சுடுத்தா?

வெட்டியா இருந்தா உள்ளாற வாங்க
படிக்க சுவையாதான் இருக்கு.

ஆனா, ரொம்ப அறுக்காதிங்க!

ஜிஆர்ஜி
பாண்டி

கிரி said...

இனி யாரும் உங்களை தொடர்பதிவுக்கு கூப்பிடுவாங்களா! ;-)

☀நான் ஆதவன்☀ said...

@ராஜா

ரைட்டு ராஜா
----------------------------

@கிரி

நீங்க கூட கூப்பிட மாட்டீங்களா கிரி? ஸோ சேட் :(

வாத்துக்கோழி said...

தங்கள் வருகைக்கு நன்றி. சிரிப்புத்தொட்டி உங்கள் குப்பைதொட்டி. நிறைந்துகொண்டே இருக்கட்டும். தமிழில் எழுத, எப்படி உங்கள் பக்கத்தில் இணைப்பு கொடுத்தீர்கள் என்று தெரியப்படுத்துங்களேன். தெரியாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஸ்ரீமதி said...

//ஸ்ரீமதியின் கவிதை கூட பயமெனுக்கு........ //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))

ஸ்ரீமதி said...

//21.U-Unknown fact about me - நான் ரொம்ப அழ்ழ்கா இருப்பது.//

ஹ்ம்ம்ம்???? :))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

.Home Town - டவுனெல்லாம் கிடையாதுங்க. மதுரை பக்கத்துல ஒரு கிராமம்

:)))))))

மிளகாய் கிள்ளி சாம்பார் - ஹா ஹா என்னைப் போல் ஒருவர் :)

எவனோ ஒருவன் said...

//4.D - Drink of Choice - மோர். தெளிவடைய உதவும் பானம்.//
லெமன் ஜூஸை விட்டுட்டியே மாப்பி.

//5.E- Essential item you Use every day - உள்ளாடை//
நீ ஜட்டி போடுறன்னு நம்புறேன், அதுக்காக இப்படியா?

//6.F-favorite color - உள்ளாடை எந்த கலர்ல இருந்தா என்னய்யா.... (ஸாரிப்பா போன கேள்வியோட தொடர்பிருக்குறதா நினைச்சுட்டேன்)//
இப்போ கொஞ்சம் டவுட்டு வருது...

//9.I-Indulgence - //
எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. இந்த மாதிரி கேள்வி எல்லாம் ஏன் கேட்குறீங்க?

//12.L-Life is incomplete with out- சாப்பாடு//
நெனச்சேன். என் பாடு கஷ்டம்தான் போல இருக்கு!

//13.Marriage Date - தெரிஞ்சா பதிவே போடுறேன்//
சீக்கிரம் சொட்டையாகுறதுக்குள்ள போடு.

//18.R-Reason to Smile - டெய்லி ரெண்டு வேளை பல் தேய்கிறேனே!//
இங்கயும் டவுட்டு...

//21.U-Unknown fact about me - நான் ரொம்ப அழ்ழ்கா இருப்பது.//
இது அன்னோன் ஃபாக்ட் இல்ல, அநியாய ஃபாக்ட்.

//ஒரு ரகசியம் - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல//
கடைசி வர ரகசியமாவே இருக்கப் போகுது... போன பதிவுல அண்ணன்மார் குடுத்த ஐடியாவெல்லாம் நல்லா யூஸ் பண்ணு.

தீபாவளிக்கு வருவியா மாப்பி?

☀நான் ஆதவன்☀ said...

@வாத்துகோழி

வாங்க வாத்துகோழி வணக்கம். தங்கள் முதல் வருகைக்கு நன்றி. கீழுள்ள லின்ங்கிற்கு சென்றால் இது போன்ற பலவலை வித்ஜெட் இலவசமாக பெறலாம். http://www.widgetbox.com/

அதென்ன வாத்துகோழி? ரொம்ப வித்தியாசமா இருக்குங்க :)
----------------------------------
@ஸ்ரீமதி

ஹிஹி சும்மா சொன்னேன் ஸ்ரீ. உன் கவிதையை கண்டு பயப்படுவேனா! :)
----------------------------------
@அமித்து அம்மா

வாங்க பாஸ். ஆமா உங்களை போல் ஒருவன் தான். உங்களுக்கு அந்த ஐயிட்டம் பிடிக்கும்ங்கிறது போன மாசம் உங்க பதிவ பார்க்கும் போதே தெரிஞ்சுகிட்டேனே :)

☀நான் ஆதவன்☀ said...

@ஏனோ ஓனோ

//நீ ஜட்டி போடுறன்னு நம்புறேன், அதுக்காக இப்படியா?
//

ஹிஹி

//இப்போ கொஞ்சம் டவுட்டு வருது...//

போயாங்ங்ங்ங்ங்ங்....

//எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. இந்த மாதிரி கேள்வி எல்லாம் ஏன் கேட்குறீங்க?
//

வெரிகுட். இப்படி தான் இருக்கனும் :)

//நெனச்சேன். என் பாடு கஷ்டம்தான் போல இருக்கு!
//

ரெடியா இருந்துக்க ராசா

//சீக்கிரம் சொட்டையாகுறதுக்குள்ள போடு.//

அவ்வ்வ்வ்வ்வ்

//இங்கயும் டவுட்டு...//

அங்க வந்தா அதையும் க்ளியர் பண்றேன் :)

//
தீபாவளிக்கு வருவியா மாப்பி?//

நோ சான்ஸ். பொங்கலுக்கு சான்ஸ் இருக்கு

இய‌ற்கை said...

எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு:-)

Related Posts with Thumbnails