பயபுள்ளைக்கு விளையாட கத்துக்கொடுங்க.....

உங்கள் குழந்தை சாப்பாட்டை மறந்து வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறானா?

ஏதாவது வெளிய போய் விளையாடு என்றால் உடனே சரி என்று கணினியை ஆன் செய்கிறானா?

தங்கமணியோட வீட்ல பகல்ல கொஞ்ச நேரம் தனியாக இருக்கலாம் என்று நினைச்சா பயபுள்ள வீட்டை விட்டு நகலமாட்டேங்கிறானா?

எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுதா? அப்படி பேசும் போது வாய் மேலயே போடனும் போல இருக்கா?

பையனை கடைதண்ணிக்கு போகச்சொன்னால் மூக்கால அழுகுறானா?

உங்கள் குழந்தைக்கு வயிற்றுபோக்கா? சீதபேதியா? ....... (ஸாரிப்பா ஒரு ப்லோல வந்துடுச்சு....)

ஆக மொத்தத்துல பையன் வெளியார ஓடி ஆடி விளையாடாம இருக்கானா? அவனுக்கு என்ன விளையாட சொல்லி தர்ரதுன்னு குழப்பமா இருக்கா? கவலையை விடுங்க. வாங்கி சாப்பிடுங்க “ஆதவன் அலுப்பு மருந்து”.... (ஸாரிப்பா இதுவும் ஒரு ப்லோல வந்துடுச்சு.... )

சென்னை போன்ற மாநகரங்களிலே இது போன்ற விளையாட்டுக்கு பற்றாக்குறை இருக்க தான் செய்யும். நான் சின்ன வயசுல விளையாடின சில பல வீர விளையாட்டுகளை உங்களுக்காக அறிமுகப்படுத்துறேன். கத்து கொடுங்க. அப்ப தான் என்னைய மாதிரி வீர தீர சாகசங்கள்ல ஈடு பட முடியும்.

குழிப்பந்து:- இந்த விளையாட்டுக்கு ஐஞ்சாறு பசங்க இருந்தாலும் போதும். முதல்ல எத்தனை பசங்க இருக்காங்களோ அத்தனை குழி ஒரு 100mm dia ல 30mm ஆழத்துல தோண்டிக்கனும். அங்கிருந்து 2 மீட்டர் தூரத்துல ஒரு கோடு ஒன்னு போட்டுகனும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குழி வச்சுகனும். ஒரு பையன் வந்து அந்த கோட்டுல நின்னு பந்தை (ப்ளாஸ்டிக் பந்தோ கிரிக்கெட் கட்டை பந்தோ உங்க பாசத்தை பொருத்தது) குழிக்கு நேரா போடனும்.

யார் குழியில விழுதோ அவங்க அந்த பந்தை எடுத்து மத்த பசங்க யாராவது மேல அடிக்கனும். மத்த பசங்க ஓடனும். பந்து யார் மேல படுதோ அவங்க அவுட். அவங்களுக்கு “ஒரு புள்ளை”. பந்து யார்மேலயும் படலைன்னா குழிக்கு சொந்தகாரன் அவுட். அவனுக்கு ”ஒரு புள்ளை”.

பத்து புள்ளை பெத்துகிட்டா (ஸாரிப்பா இதுவும் ஒரு ப்லோல வந்திடுச்சு) பத்து புள்ளை கிடைச்சுதுனா அவங்க விளையாட்ட விட்டு போயிடனும்.

இதன் பலன்: பயபுள்ள வீட்டை விட்டு போறதே பெரிய பலன் தானே. அதுவுமில்லாம “புள்ளை” இருந்ததுனா எம்புட்டு கஷ்டம்னு பக்கிக்கு புரிய ஒரு வாய்ப்பா இருக்கும்.

பங்குத்து:- இது ஒரு பயங்கர விளையாட்டு. பையனுங்களால ரொம்ப டார்ச்சர் அனுபவிச்சவங்க இந்த விளையாட்டை கத்துக் கொடுக்கலாம். ஆனா இது விளையாட ஒரு 8 வயசுக்கு மேல இருப்பது உச்சிதம்.

இதுக்கு ரெண்டு பசங்க போதும். இந்த விளையாட்டுக்கு முடிவே கிடையாது. ரெண்டு பசங்க சேர்ந்துகிட்டு “பங்குத்து ஸ்டார்ட்”னு ஆரம்பிக்கனும். அடுத்த தடவை ரெண்டு பேருக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் யாராவது பார்க்கும் போது நடுமுதுகுல “பங்ங்ங்ங்ங்ங்ங்”ன்னு ஒரு குத்து குத்தனும். கூடவே ”பங்குத்து டவுன் இதோட நாளைக்கு” அப்படின்னு ஒரு காலம் பிக்ஸ் செய்யனும். அது 1 மணி நேரம், 2மணி நேரம், ஒரு மாசம் எப்படி வேணா உங்க இஷ்டத்துக்கு வச்சுகலாம். திருப்பி அந்த நேரத்துல பார்க்கும் போது குத்தலாம்.

குத்து வாங்காம இருக்க ஒரு கைய மடக்கி முதுகுல வச்சுகிட்டா தப்பிச்சுக்கலாம்.

இதன் பலன்: எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டு ஏமாற்றம் அளிக்கும். சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தூர தேச பயணங்களுக்கு வாய்ப்பு உருவாகும். வீண் செலவுகள் ஏற்படும்.
பெண்களுக்கு: பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண காரியங்கள் கூடி வரும். முக்கிய விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். (ஸாரிப்பா இதுவும் ஒரு ப்லோல வந்துடுச்சு.... )

அட்டாக்க்க்க்க்க்:- கிட்டதட்ட யோகநிலைக்கு சமமானது இந்த விளையாட்டு. இதுக்கும் ரெண்டு பேரு போதும். இதுவும் பங்குத்துவுக்கும் அண்ணன் தம்பி உறவு. ஆனா இதுக்கு அந்தளவுக்கு பயப்படவேணாம்.

இதுவும் தொடங்கும் போது “அட்டாக் ஸடார்ட்” அப்படின்னு தான் தொடங்கனும். அப்புறம் அடுத்த தடவைப் பார்க்கும் போது, மறைஞ்சிருக்கனும் அந்த பையன் வரும்போது தீடீர்னு முன்னாடி வந்து ரெண்டு விரலை துப்பாக்கி மாதிரி வச்சுகிட்டு “அட்டாக்க்க்க்க்”ன்னு கத்தனும். அடுத்தவன் அப்படியே நிலையாகி நிற்கனும். நீங்க “அட்டாக் டவுண்”ன்னு சொல்லுற வரைக்கும் மற்றவன் அசைய கூடாது. அப்படி அசைந்தா கையில அதே ரெண்டு விரலால சுளீர்னு “மூனு” தடவை அடிக்கலாம்.

திருப்பி ”இதோட நாளைக்கு, நாளானைக்கு, ஒரு மாசம் கழிச்சு” அப்படின்னு காலம் பிக்ஸ் பண்ணிக்கங்க.

இதன் பலன்: இது விளையாட வயது வித்தியாசம் வேண்டாம். முக்கியமா புருசன் பொண்டாட்டிக்குள்ளவும், ஆபிஸ்ல டேமஜர்கிட்டவும் இந்த விளையாட்டை விளையாடலாம். ரொம்ப உபயோகமா இருக்கும்.

இதுமாதிரி ஏழுகல், பேய் விளையாட்டு, வானத்துக்கு பழம் என்னைய தொட்டா பாவம், ஐஸ் பாய்ன்னு நிறைய விளையாட்டு இருக்கு. அப்பப்ப அவுத்து விடுறேன்......

செண்டிமெண்ட் டிஸ்கி: இந்த பதிவு பத்து வருசத்துக்கு முன்னால, என் கையில மூனு அடி அடிச்சு ”அட்டாக் டவுண், இதோட பத்து வருசம் கழிச்சு”ன்னு சொன்ன முன்னால் நண்பன் மோகனின் நினைவாக எழுதப்பட்டது.

43 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

shabi said...

பய புள்ள என்னமா யோசிக்குது

shabi said...

me the first ஆஆஆஆஆஆஆஆஅ

சந்தனமுல்லை said...

/கவலையை விடுங்க. வாங்கி சாப்பிடுங்க “ஆதவன் அலுப்பு மருந்து”.... (ஸாரிப்பா இதுவும் ஒரு ப்லோல வந்துடுச்சு.... )/

avvvv...விளம்பரம் நிறைய பார்க்கறீங்க போல இருக்கே! :)))

சந்தனமுல்லை said...

:)))ROTFL...ப்லோ-லல்லாம் வரலை..நிஜமாவே தான்!! :)))

ஆயில்யன் said...

பய புள்ள என்னமா யோசிக்குது - யோசிக்குது - யோசிச்சுக்கிட்டே இருக்கு!

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

:)))ROTFL...ப்லோ-லல்லாம் வரலை..நிஜமாவே தான்!! :)))//


ஆமாம் !

ஆசிப் மீரான் said...

மவனே உனக்கு ஆங்குத்துதான்.

சந்தனமுல்லை said...

//என் கையில மூனு அடி அடிச்சு ”அட்டாக் டவுண், இதோட பத்து வருசம் கழிச்சு”ன்னு சொன்ன முன்னால் நண்பன் மோகனின் நினைவாக எழுதப்பட்டது.//

!!!!

என்ன மெமரி பாஸ்!! நீங்க சிலிக்கான் சிப்ஸ்தான் சாப்பிடுவீங்களா பாஸ்! :)

ஆயில்யன் said...

//செண்டிமெண்ட் டிஸ்கி: இந்த பதிவு பத்து வருசத்துக்கு முன்னால, என் கையில மூனு அடி அடிச்சு ”அட்டாக் டவுண், இதோட பத்து வருசம் கழிச்சு”ன்னு சொன்ன முன்னால் நண்பன் மோகனின் நினைவாக எழுதப்பட்டது///

கையில அடிக்கிறதுக்கு பதிலா மூஞ்சியில விட்டிருக்கணும் ப்ச் ச்சே மிஸ்ஸாகிடுச்சே! - இப்ப அதே மோகன் நினைச்சது! :)

ஷாகுல் said...

பக்கத்து வீட்டு பொன்னோட அப்பா அம்மா விளையாட்டு விளையாட சொல்லலாமா?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சூப்பர் ஆதவன்,
ஒரு நிமிஷம்,டேமஜர்கிட்ட
“அட்டாக்க்க்க்க்” ன்னு சொல்லி அவர் நம்மள டேமேஜ் பண்ணிட்டார்னா? என்ன செய்வது...

இன்னும் நிறைய விளையாட்ட விட்டுடீங்க ஆதவன் " பேந்தான், மரம் தட்டி குரங்கு, etc "

ஸ்ரீமதி said...

ஹ்ம்ம்ம் :)))

☀நான் ஆதவன்☀ said...

@ ஷாபி

ஹிஹிஹி லேபிள பார்த்தா உங்களுக்கே தெரியும் :)
------------------------------------
@சந்தனமுல்லை

//
avvvv...விளம்பரம் நிறைய பார்க்கறீங்க போல இருக்கே! :)))//

ஆமாங்க :)

//:)))ROTFL...ப்லோ-லல்லாம் வரலை..நிஜமாவே தான்!! :)))//

எனக்கு இரு ப்லோல வந்தத நீங்க நம்பும் போது இத நம்ப மாட்டேனா பாஸ் :)

//என்ன மெமரி பாஸ்!! நீங்க சிலிக்கான் சிப்ஸ்தான் சாப்பிடுவீங்களா பாஸ்! :)//

இல்ல பாஸ் ஞான் எப்போலும் நேந்திரங்கா சிப்ஸ் தான் சாப்பிடுவேன் :)
----------------------------------
@ஆயில்ஸ்

ஆமா பாஸ் ரொம்ப யோசிச்சு யோசிச்சு முடி கொட்டவே ஆரம்பிச்சிருச்சு பாஸ் :)

//கையில அடிக்கிறதுக்கு பதிலா மூஞ்சியில விட்டிருக்கணும் ப்ச் ச்சே மிஸ்ஸாகிடுச்சே! - இப்ப அதே மோகன் நினைச்சது! :)//

பாஸ் ரூல்ஸ மீறக்கூடாது பாஸ். வேணும்னா நீங்களும் நானும் “பங்குத்து” போட்டுக்கலாம். “பங்குத்து ஸ்டார்ட்ட்ட்ட்” இதோட மீட் பண்ணும் போது குத்திக்கலாம் :)

☀நான் ஆதவன்☀ said...

@ஆசிப் அண்ணாச்சி

அண்ணாச்சி ஒய் திஸ் கொல வெறி? வேணும்னா நாம ரெண்டு பேரும் “பேய் விளையாட்டு” விளையாடுவோமா?
-----------------------------------
@ஷாகுல்

//பக்கத்து வீட்டு பொன்னோட அப்பா அம்மா விளையாட்டு விளையாட சொல்லலாமா?//

பாஸ் சொல்லிக்கொடுங்க. ஆனா என்ன பயபுள்ள வெளிய போறதுக்கு ஐடியா சொன்னேன். அப்பாலிக்கா நீங்க வெளிய தலை காட்ட முடியாது :)
----------------------------------
@பாலா

வாங்க பாலா. டேமேஜர் கிட்ட “அட்டாக்க்க்” சொல்லிட்டு டவுண் சொல்லாம அவரை அப்படியே சிலையாக்கி ஓரமா நிக்க வச்சிருங்க :)

//இன்னும் நிறைய விளையாட்ட விட்டுடீங்க ஆதவன் " பேந்தான், மரம் தட்டி குரங்கு, etc //

புதுசா இருக்கே? அடுத்து முயற்சி பண்ணுவோம்
----------------------------------
@ஸ்ரீமதி

வா ஸ்ரீமதி. என்ன ”ஹம்மிங்” மட்டும் கொடுத்துட்டு போற?

கலையரசன் said...

குழிப்பந்து, பங்குத்து, அட்டாக்க்க்க் இந்த பேரை எல்லாம் பார்த்தா... எனக்கு வேற விளையாட்டுதான் ஞாபகம் வருது!
(எக்சாம்பிள்: கப்லிங், டிக்கிலோனா, etc..)

கலையரசன் said...

கார்த்திகேயன் பதிவு போடாம இருக்க "அட்டாக்க்க்க்" போட முடியுமா?
ஒரு 25 வருஷம் கழிச்சு "அட்டாக் டவுண்" சொல்லிக்கலாம்...

(அய்யோ..பேரை சொல்லிட்டனா? ஸாரிப்பா ஒரு ப்லோல வந்துடுச்சு....)

மின்னுது மின்னல் said...

இல்ல பாஸ் ஞான் எப்போலும் நேந்திரங்கா சிப்ஸ் தான் சாப்பிடுவேன் :)
//


ம் ரைட்டு :)

மின்னுது மின்னல் said...

பாஸ் சொல்லிக்கொடுங்க. ஆனா என்ன பயபுள்ள வெளிய போறதுக்கு ஐடியா சொன்னேன். அப்பாலிக்கா நீங்க வெளிய தலை காட்ட முடியாது :)
//

சூப்பர் பதில் :)

மின்னுது மின்னல் said...

ஆதவன் அலுப்பு மருந்து”....
//


இது ஓவர் ’அலும்பு’ தல

pappu said...

உங்க விளையாட்டு எல்லாம் ரொம்ப வயலண்ட இருக்கே!

rapp said...

இதெல்லாத்தையும் தூக்கி சாப்டத்தான் சேம் பின்ச் இருக்கே. நாளைக்கு ஏன்னா கலர் டிரெஸ் போடப்போறேன்னு பாசமா கேக்குராப்டி கேட்டு, விஷயத்த வாங்கி, அதே கலர்ல ஒரு கர்சீப்பைத் தூக்கிட்டு வந்து, நறுக்குன்னு கிள்ளனும். டோன்ட் டெல் வாபஸ் மாதிரியான ஸ்டேட்மென்ட்களையும் சேர்த்து கொடுக்கணும்(இது யாரையும் குறிப்பிட்டு எழுதலைன்னு சொல்றாப்டி).

☀நான் ஆதவன்☀ said...

@கலையரசன்

//(எக்சாம்பிள்: கப்லிங், டிக்கிலோனா, etc..)//

கலை நான் சொல்றது சின்ன பசங்களுக்காக. இதெல்லாம் ஏதோ ஏடாகூடமான விளையாட்டு மாதிரி தெரியுதே? நான் நல்ல பையன்றது உனக்கு தெரியாது ராஸ்கல்.

//கார்த்திகேயன் பதிவு போடாம இருக்க "அட்டாக்க்க்க்" போட முடியுமா?
ஒரு 25 வருஷம் கழிச்சு "அட்டாக் டவுண்" சொல்லிக்கலாம்...

(அய்யோ..பேரை சொல்லிட்டனா? ஸாரிப்பா ஒரு ப்லோல வந்துடுச்சு....)//

அது சரி அது சரி. கரக்ட்டு தான் நீங்க சொல்றது...(கார்த்திகேயன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.)

☀நான் ஆதவன்☀ said...

@மின்னல்

வாங்க மின்னல்.

//இது ஓவர் ’அலும்பு’ தல//

ஆகா வார்த்தை விளையாடுதே மின்னல் :)
------------------------------------
@பப்பு

இதெல்லாம் வயலண்டா பப்பு? இதெல்லாம் வீர தீர விளையாட்டு. அப்ப தான் என்னைய மாதிரி தைரியசாலியா வரமுடியும். (பதிவுல இருக்குற லின்ங்க பாக்கலையா பப்பு?)
----------------------------------
@ராப்

ஆகா ராப் வெல்கம் பேக். எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்?. நீங்க சொன்ன விளையாட்டுல அம்புட்டு டெரர் இல்லைனாலும் கிள்ளுறது இருக்குறதுனால எடுத்துகிறேன்.

கிறுக்கல் கிறுக்கன் said...

அப்பா அம்மா விளையாட்டைப்பத்தி எதுவும் சொல்லவேயில்ல

கோபிநாத் said...

ஸாரிப்பா நானும் ஒரு ப்லோல வந்துட்டேன். ;)

வினோத்கெளதம் said...

என்னை மாதிரி ரொம்ப சின்ன பசங்க விளையாடுற விளையாட்டு எதுவும் இல்லையா..:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

எப்புடி?
உக்காந்து யோசிப்பிங்களோ?
அலுப்பு தீர சிரித்தேன்.ஓட்டுக்கள் போட்டாச்சு,

கலை பயபுள்ள,
டேய் கீதப்ப்ரியன் ப்ளாக்ல இந்த மாசம் மூனே பதிவு தான் போட்டிருக்கு,
எழுத டைம் இல்லை.

ஒழுங்கா ஓட்டு போட்டுடு,அட்டாக் எல்லாம் போட்டாலும் நமக்கு கட்டாது.

எங்க அமீரக நாகேஷ் அவன் பங்குக்கு எதுவும் சொல்லலையா?

@கோபி நீயேல்லாம் ஒரு தம்பி?
என்னை ப்ரபல பதிவர் பதிவுல வச்சி கலாய்கிறான் ,பாத்துக்கிட்டு...
;)

சின்ன அம்மிணி said...

//கோபிநாத் said...

ஸாரிப்பா நானும் ஒரு ப்லோல வந்துட்டேன். ;)
//

ரிப்பீட்டிக்கறேன். :)

☀நான் ஆதவன்☀ said...

@கி.கி

அண்ணே அதுக்கு மேல ஒருத்தருக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க :)
----------------------------------
@கோபிநாத்

ரைட்டு
-----------------------------------
@வினோத்

வினோத் உங்களுக்கு விளையாட்டெல்லாம் கிடையாது. நேரா கல்யாணம் பண்ணி தெரிஞ்சுக்கங்க :)
------------------------------------
@கார்த்திகேயன்

கலையை விடாதீங்க தேவுடு. நாளைக்கு பார்க்கும் போது நொங்கெடுத்திருங்க :)(இதுவும் ஒரு விளையாட்டான்னெல்லாம் கேக்கப்படாது)
----------------------------------
@சின்ன அம்மணி

உங்களுக்கு டபுள் ரைட்ட்ட்ட்டு :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ப்லோல வருது, ப்ஃலோல வருதுன்னு போட்டு தாக்கியிருக்கீங்க :))))))))))

மங்களூர் சிவா said...

/
இந்த பதிவு பத்து வருசத்துக்கு முன்னால, என் கையில மூனு அடி அடிச்சு ”அட்டாக் டவுண், இதோட பத்து வருசம் கழிச்சு”ன்னு சொன்ன முன்னால் நண்பன் மோகனின் நினைவாக
/

அதுக்குள்ள பத்து வருஷம் முடிஞ்சிருச்சா ஏம்பா மோகன் வந்து கொஞ்சம் இந்த ஆளை கவனிப்பா
:))))

pappu said...

இந்த ஃப்லோல சொல்லிட்டேன் ரவுசு தாங்கலப்பா! அவ்ர் பதிவுக்கு போனாலும் என்னமாவது ப்லோவில சொல்லி வைக்கிறார்!

pappu said...

யாராவது என்னமாவது செய்யுங்க! வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர்ல பணம் அனுப்புறேண்.. ஆபிஸ் ல சோலிய முடிச்சிருங்க... இல்ல வீட்டுக்கு டாக்ஸி(வெளிநாட்டு ஆட்டோ) அனுப்புங்க

☀நான் ஆதவன்☀ said...

@அமித்து அம்மா

வாங்க அமித்து அம்மா. அதெல்லாம் அப்படியே ஒரு ப்லோல வந்தது தான் :)
-------------------------------------
@மங்களூர் சிவா

வாங்க ம.சி. ஏன் இந்த கொல வெறி?. அந்த பயபுள்ள இப்ப எங்க இருக்குதோ என்ன பண்ணுதோ. அவனை ஏன் கூப்பிடுறீங்க?

☀நான் ஆதவன்☀ said...

// pappu said...

யாராவது என்னமாவது செய்யுங்க! வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர்ல பணம் அனுப்புறேண்.. ஆபிஸ் ல சோலிய முடிச்சிருங்க... இல்ல வீட்டுக்கு டாக்ஸி(வெளிநாட்டு ஆட்டோ) அனுப்புங்க//

நீ அனுப்புற காசு டாக்ஸிக்கே சரியாபூடுமே பப்பு. அப்புறம் அடியாளுக்கு தனியா பணம் அனுப்பனும். ஏன்னா டாக்ஸி இங்க ரொம்ப காஸ்ட்லி.

வேணும்னா ஒன்னு செய்யலாம். பணத்தை எனக்கு அனுப்பிடு. நானே என்னைய அடிச்சுக்கிறேன். ஓக்கேவா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல சிந்தனை நண்பா..இதே மாதிரி இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்க..:-)))

எவனோ ஒருவன் said...

நம்ம ரேஞ்சுக்கு ஏதும் இல்லையே மச்சி...

thenammailakshmanan said...

ஆதவன்
இன்னும் கிளியாந்தட்டு
கிட்டிபுள் டையர் ஓட்டி விளையடுறது
கோலிக் குண்டு பத்தியெல்லாம் எப்ப எழுதப் போறீங்க

☀நான் ஆதவன்☀ said...

@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா :)
----------------------------------
@ஏனோ ஓனோ

மாப்பி உன் ரேஞ்சே வேறன்னு தெரியாதா எனக்கு? சுவர் தாண்டுதல், கையை பிடித்து இழுத்தல், உம்மா கொடுத்தல்னு உன் ரேஞ்சுக்கு நிறைய இருக்கு. தனியா மெயில் அனுப்புறேன் :)
----------------------------------
@தேனம்மை லட்சுமணன் (சரியா)

வாங்க மேடம். முதல் வருகைக்கு நன்றி.
அதெல்லாம் கிராமத்துல இருக்குற குழந்தைகள் விளையாடுவாங்க. நான் சொன்னது நரகத்துல ஸாரி நகரத்துல இருக்குற குழந்தைகளுக்காக :)

r.selvakkumar said...

நகர வாழ்க்கையில் மட்டுமல்ல, கிராம குழந்தைகளும் இந்த விளையாட்டுகளை மறந்துகொண்டிருக்கிறார்கள்.

kanagu said...

oru periya velaiyatu surangama irupeenga pola irukke... :)

kuzhipandhu unmaiyilaye sema game.. enakku romba pidikkum..

athe maari ezhukal sema interesting ah irukkum :))

pazhaya ninavugal... :)

nalla padhivu anna :)

பின்னோக்கி said...

என்னங்க இது விளையாட்டு எல்லாம் கொஞ்சம் வயலண்ட்டா இருக்கு :)

சந்தனமுல்லை said...

உங்களுக்கு விருது இங்கே!

http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html

Related Posts with Thumbnails