இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனை

”ஆலமரத்தை மூனு தடவை சுத்திட்டு, கீழே கிடக்குற மண்ணள்ளி வாயில போட்டுக்கோ”ன்னு அக்கா சொன்னப்ப “ம். சரி அப்ப சரியாகிடுமா”ன்னு அப்பாவியாக கேட்ட என்னைய அக்கா ரொம்ப பரிதாபமா பார்த்தார்கள்.

இரண்டு நிமிடங்கள் கழித்தே என்னச் சொன்னேன் என்பதை சுதாரிக்க முடிந்தது. கவலை மனிதனை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது. என்றைக்காவது அம்மா விரதம் இருந்தால் எவ்வளவு அறிவுரைகள் என்னால் வழங்கப்படும்?. ஆனால் இப்போது மண்ணள்ளி தின்னச்சொன்னாலும் சரி என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறேனே?

“டேய் தம்பி. என்னடா ஆச்சு? எதச்சொன்னாலும் கேட்குற? இவ்வளவு கவலை படாதடா? அதுவே பிரச்சனைய பெருசாக்கிடும்.”

“உனக்கென்னக்கா தெரியும். காலையில எழுந்திருச்சா இது தான் ஞாபகம் வருது. குளிக்கும் போது, அப்புறம் கண்ணாடிய பாக்கும் போது, சாப்பிடும் போது, ஆபிஸ்ல வேலையில இருக்கும் போது, வேலையே இல்லாம வெட்டியா இருக்கும் போது, சேட்டனை கலாய்க்கும் போது, மழை பெய்யும் போது, வெயில் அடிக்கும் போது, ஏன் ஏதாவது பொண்ணு என்னைய கண்டுக்காம போகும் போது.....” வேகத்தில் உண்மைத்தமிழன் பதிவு போல வார்த்தைகள் விழுந்ததை கேட்டு அக்கா கலக்கம் அடைந்தார்.

”அதெல்லாம் சரி. எதுக்கு இம்புட்டு கவலை படுற? முடி தானே! அது பாட்டுக்கு போகட்டும். நீ உன் வேலைய பாரு. அக்கா ஏதாவது வழி இருக்கான்னு அம்மாச்சிகிட்ட கேட்டு சொல்றேன்” என்றபடி போனை எடுத்தார்.

ச்சே இது வொர்க் அவுட் ஆகாது போலயே. ”தம்பிக்கு முடி கொட்டுது. கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிரலாம்”னு அம்மாகிட்ட சொல்லுவாங்கன்னு பார்த்தா ஒன்னும் வேலைக்காவாது போல.

”டேய் கறிவேப்பிலை பவுடர் செஞ்சு தர சொன்னாங்க. தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவயாம். அப்படியே செம்பருத்தி இலைய அரைஞ்சு எண்ணெயில காச்சி தரவும் சொன்னாங்கடா. ஒன்னும் கவலை படாத. அக்கா இப்ப ரெண்டு மாசத்துக்கு அரைச்சு தரேன். அப்புறம் துபாயிலயிருந்து யாராவது இங்க வந்தாங்கன்னா சொல்லு அரைஞ்சு தரேன். சரியா” என்றபடி ஆறுதலாக தலையை கோதி விட்டு மறுபடியும் சீரியல் பார்க்க தொடங்கினார்.ஆச்சு மூனு மாசம்......

”டேய் இவரு தலைமுடிக்கு ஸ்பஷலா?”

“அதுக்கெல்லாம் டாக்டர் படிப்பு இருக்கான்னு தெரியல. இருந்தாலும் அவெங்கெல்லாம் இந்த மாதிரி சின்ன க்ளினிக் வச்சிருக்க வாய்ப்பில்ல. இவர் General practitioner. ஜஸ்ட் ஒரு ஐடியா இவர்கிட்ட கேட்கலாம்” என்றபடி உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே ஆட்களே இல்லை. இந்த சார்ஜாவுல யாருக்கும் உடம்புக்கு ஒன்னுமே ஆகாம இருக்கே அப்ப இந்த டாக்டருக்கு எப்படி போனியாகும் என்ற ஆச்சர்யத்துடன் உள்ளே நோட்டம் விட்டேன்.

நம்மூரில் இருக்கும் குழந்தை ”உஷ்ஷ்ஷ்” என்ற படமோ, படத்துடன் ஆங்கிலத்தின் வாசகமோ எதுவுமே இல்லை. இங்கே வந்து நான்கு வருடத்தில் முதல் முறையாக மருத்துவரிடம் வந்திருக்கிறேன்.

டாக்டர் அழைத்தார். அவரைப் பார்த்தவுடன் சந்தேகம் வந்து நண்பனைப் பார்த்தேன். அவனும் புரிந்து கொண்டு “கம்முன்னு இரு” என்றபடி கையை அமுக்கினான்.

”இப்பலெல்லாம் சத்தான உணவு வகைகளை யாரும் சாப்பிடுறது கிடையாது. உங்க உணவு பழக்கம் ரொம்ப மாறிடுச்சு. முடி உதிர்வதுக்கு முக்கிய காரணம் இது தான். உங்கள மாதிரி பசங்க காய்கறி எல்லாம் சாப்பிடுறது கிடையாது. KFC,மெக்டோனால்ட், பர்ஜர்ன்னு கண்டத தின்னு வயித்த நிறப்புறீங்க.....”ன்னு இளைய சமுதாயத்தின் கோபங்களை அடுக்கினார். அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும்.

”நான் கேட்கட்டுமா?” என்றேன் இரகசியமாக நண்பனிடம்.

“வாய மூடிகிட்டு கம்முன்னு இரு” என்றான் நண்பன்.

“என்ன சொல்றாரு இவரு? என்றபடி “இதையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. இங்கிருக்க தண்ணியும் ஒரு காரணமா சொல்லலாம். இதுவரைக்கும் உதிர்ந்த முடிய ஒன்னும் செய்ய முடியாது(அதான் தெரியுமேய்யா!) இனிமே உதிராம இருக்க வேணும்னா ஒரு மருந்து தரேன். அதை 2ml மட்டும் தான் அப்ளே பண்ணனும். அதுவும் முடி உதிர்ற இடத்தில மட்டும் தான்(அப்ப முழுத் தலையிலயுமா?). காலையிலயும், இரவுலயும் அப்ளை பண்ணுங்க. தினமும் பேரிச்சம்பழமும் சாப்பிடுங்க.” என்ற படி 200 திரம்ஸ் மருந்துக்கும் 50 திரம்ஸ் பீஸாகவும் தீட்டினார்.

சார்ஜாவில் அனைவரும் நோய்வாய்படாமல், மருத்துவமனை காலியாக இருப்பது ஏன் என்று தெரிந்தது.

“டாக்டர்..” கேட்க துணிந்தேன்.

“டேய் சும்மா இருடா” அடக்கினான் நண்பன்.

“சொல்லுங்க” என்றார் டாக்டர்.

“ஒன்னுமில்ல டாக்டர்” என்றபடி நண்பன் கிளம்பினான்

“இல்ல பரவாயில்லை எந்த சந்தேகம் இருந்தாலும் கேளுங்க” என்றார் என் வாய்கொழுப்பு தெரியாமல்.

“இல்ல உங்க தலை எப்ப சொட்டையாச்சு? சின்ன வயசுல இருந்தே உங்களுக்கும் முடி உதிர்கிற பிரச்சனை இருந்துச்சா? என்றேன். நண்பன் தலையில் அடித்துக் கொண்டான்.

ரூமுற்கு வந்ததும் போன் அடித்தது. அம்மா. “டேய் இந்த வாரம் நம்ம சிவா அண்ணன் துபாய் வராராம். கறிவேப்பிலை பொடிய அவர்கிட்ட கொடுத்து விடுறேன் வாங்கிக்க. இந்த தடவை ஐஞ்சாறு மாசம் வரும்னு நினைக்கிறேன். தீர்ந்தாலும் அப்புறம் அனுப்புறேன். ஒன்னும் கவலைப்படாதே இந்த சின்ன வயசுல......”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

43 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

நல்லவேளை... வில்லு பட விமர்சனமோன்னு நினைச்சு பயந்துட்டேன் :-)

கலையரசன் said...

எனக்கு ஒரு டவுட்டு சூரிண்ணே...
"மனுசன் கொட்டுனா வலிக்குது,
முடி கொட்டுனா வலிக்குமா?"

(உடம்புக்கு முடியிலனாலும், உன் கடமை என்னை நெஞ்சடைக்க வைக்குது!)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

முடி கொட்டுதேன்னு கவலை படுவதை நிறுத்து குரு,அப்போ தான் கொட்டுறது நிக்கும்.
இப்போவெல்லாம் பெண்கள் மாப்பிள்ளைக்கு தலையில் முடி இருக்க்கா என்று பார்ப்பதில்லை, நல்ல் இண்டெலிஜெண்ட்டா என்று தான் பார்க்கிரார்கள்,
முழுக்க உதிர்ந்த பின் முடி வெட்டவே அவசியம் இல்லை.:))

வினோத்கெளதம் said...

//நல்லவேளை... வில்லு பட விமர்சனமோன்னு நினைச்சு பயந்துட்டேன் :-)//

//"மனுசன் கொட்டுனா வலிக்குது,
முடி கொட்டுனா வலிக்குமா?"//

//முழுக்க உதிர்ந்த பின் முடி வெட்டவே அவசியம் இல்லை.:))//

ஏன்ப்பா அவரே நொந்து போய் எழுத்தி இருக்காரு ஆளு ஆளுக்கு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க..

தொப்பி அணிந்து கொண்டல் முடி கிழே உதிர்வது நின்று விடும் தல..:)

சென்ஷி said...

//“இல்ல உங்க தலை எப்ப சொட்டையாச்சு? சின்ன வயசுல இருந்தே உங்களுக்கும் முடி உதிர்கிற பிரச்சனை இருந்துச்சா? என்றேன். நண்பன் தலையில் அடித்துக் கொண்டான்.//

உங்க தலையிலயா ஆப்பிசர்!

சென்ஷி said...

//தொப்பி அணிந்து கொண்டல் முடி கிழே உதிர்வது நின்று விடும் தல..:)//

ஆமா! ஆனா தொப்பிக்கு முடி முளைச்ச மாதிரி ஆகிடும்

சென்ஷி said...

//முழுக்க உதிர்ந்த பின் முடி வெட்டவே அவசியம் இல்லை.:))//

தத்துவம். அதை நீ சொல்ற.. கொடுமைடா சாமி இது!

சென்ஷி said...

/ கலையரசன் said...

எனக்கு ஒரு டவுட்டு சூரிண்ணே...
"மனுசன் கொட்டுனா வலிக்குது,
முடி கொட்டுனா வலிக்குமா?"//


முடி கொட்டி வலிச்சதாலதானய்யா ஒடம்புக்கு முடியாத நேரத்துல கூட இவன் பதிவே போட்டிருக்கான்

சென்ஷி said...

/இப்போவெல்லாம் பெண்கள் மாப்பிள்ளைக்கு தலையில் முடி இருக்க்கா என்று பார்ப்பதில்லை, நல்ல் இண்டெலிஜெண்ட்டா என்று தான் பார்க்கிரார்கள்,//

ஆமா. அப்படியும் கார்த்திக்கே கல்யாணம் ஆகிடுச்சு. உனக்கு ஆகாதா ராசா!

எவனோ ஒருவன் said...

ஆதவா,
நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. இங்கல்லாம் பொண்ணுக சொட்டையா இருந்தா பாக்கவே மாட்டாங்க ராசா. நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் சொட்டையா இருக்குறதுனால கல்யாணம் தள்ளிக்கிட்டே போகுது. யாருக்குத் தெரியும், கல்யாணம் ஆகாமலேயே போகலாம். நீ உன் முடியக் காப்பாத்துற வழியப் பாரு.
(ஏதோ நம்மால முடிஞ்சது...)

ஷங்கி said...

//இப்பலெல்லாம் சத்தான உணவு வகைகளை யாரும் சாப்பிடுறது கிடையாது. உங்க உணவு பழக்கம் ரொம்ப மாறிடுச்சு. முடி உதிர்வதுக்கு முக்கிய காரணம் இது தான். உங்கள மாதிரி பசங்க காய்கறி எல்லாம் சாப்பிடுறது கிடையாது. KFC,மெக்டோனால்ட், பர்ஜர்ன்னு கண்டத தின்னு வயித்த நிறப்புறீங்க//
டாக்டர் காலத்துல என்ன சொல்லியிருப்பாங்க?!
முடிப் பிரச்சினை முக்கிய பிரச்சினைதான், அதுவும் நம்மூருல!

ஆயில்யன் said...

ம்ம் உங்களுக்கு முடி இல்லியேன்னு வருத்தம் எனக்கு இருக்கேன்னு வருத்தம் - கொஞ்சம் வெள்ளையா :((

ஆயில்யன் said...

//நல்ல் இண்டெலிஜெண்ட்டா என்று தான் பார்க்கிரார்கள்,///

அய்யோ :(((((

ஆயில்யன் said...

//நல்ல் இண்டெலிஜெண்ட்டா என்று தான் பார்க்கிரார்கள்,///

அப்படி இருக்கற மாதிரி தெரிஞ்சா இனிஷியல் டெஸ்ட்லயே பெயிலுன்னு சொல்லிடுவாங்க அப்படின்னு அனுபவஸ்தங்க சொன்னதை வைச்சு நான் 1/2ஐயால்ல திரிஞ்சுக்கிட்டிருக்கேன் :)))))))

ஆயில்யன் said...

//முடி கொட்டி வலிச்சதாலதானய்யா ஒடம்புக்கு முடியாத நேரத்துல கூட இவன் பதிவே போட்டிருக்கான்//

ரியலி :(

எவனோ ஒருவன் said...
This comment has been removed by the author.
எவனோ ஒருவன் said...

ஆதவா, நெனச்சுப்பாரு...
உன் தலைல வழுக்கை விழுந்துச்சுனு வச்சிக்கோ... அதுவும் (நீ சொன்ன) முன் வழுக்கைனு வச்சுக்கோ... அது செம கிலேர் அடிக்கிதுன்னும் வச்சிக்கோ... ஆதவன் தலையில் ஆதவன்ங்கிற ரேஞ்சுக்கு உன்னப்பத்தி எல்லோரும் கவிதை எழுதி புகழ் பாடுவாங்கள்ல?

நெனச்சுப் பாத்தா ரொம்ப நல்லா இருக்குப்பா, எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.

ஆயில்யன் said...

//"இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனை"//

இளைய ”தலை”முறையின் ”தலை”யாய பிரச்சனை டைட்டில் இருந்தா ஹெட் ஆகியிருக்கும் சாரி சூட் ஆகியிருந்திருக்கும் :)))

ஆயில்யன் said...

//எவனோ ஒருவன் said...

ஆதவா, நெனச்சுப்பாரு...
உன் தலைல வழுக்கை விழுந்துச்சுனு வச்சிக்கோ... அதுவும் (நீ சொன்ன) முன் வழுக்கைனு வச்சுக்கோ... அது செம கிலேர் அடிக்கிதுன்னும் வச்சிக்கோ... ஆதவன் தலையில் ஆதவன்ங்கிற ரேஞ்சுக்கு உன்னப்பத்தி எல்லோரும் கவிதை எழுதி புகழ் பாடுவாங்கள்ல?

நெனச்சுப் பாத்தா ரொம்ப நல்லா இருக்குப்பா, எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.//


”நான் மாதவன்”னு சொல்ற அளவுக்கு ஆள் இருப்பாருன்னு நினைச்சா ”நான் ஆதவன் with கிளார்”ன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாரு போல....! :))))

Anonymous said...

அவ்வளாவு மோசமாவா இருக்கு?

நீங்க பார்க்க வேண்டியது டெர்மட்டாலஜிஸ்டத்தான்.

ஆயில்யன் said...

//வடகரை வேலன் said...

அவ்வளாவு மோசமாவா இருக்கு?

நீங்க பார்க்க வேண்டியது ///


அவ்ளோ மோசமாவா இருக்கு????

அப்ப முதல்ல பார்க்க வேண்டியது நாங்க பாஸ் அடுத்த போஸ்ட் வித் போட்டோ ப்ளீஸ் :)))))

pappu said...

சொந்த அனுபவமோ? ரொம்ப அடிபட்டுடீங்க போலயே! ஆமா ஏதாவது வொர்க் அவுட் ஆகுதா? எங்க வீட்டுலயும் இப்படித்தான் ஒரே காமெடி..

☀நான் ஆதவன்☀ said...

// சென்ஷி said...
நல்லவேளை... வில்லு பட விமர்சனமோன்னு நினைச்சு பயந்துட்டேன் :-)//

“சித்திரம் பேசுதடி”க்கு எழுதினாலும் எழுதுவேனே தவிர வில்லுக்கு எழுத மாட்டேன் :)
-------------------------------------
//"மனுசன் கொட்டுனா வலிக்குது,
முடி கொட்டுனா வலிக்குமா?"//

கலை தம்பி முடி கொட்டுனா வலிக்குமான்னு தெரியாது ஆனா நான் கொட்டுனா கண்டிப்பா வலிக்கும் :)

//(உடம்புக்கு முடியிலனாலும், உன் கடமை என்னை நெஞ்சடைக்க வைக்குது!)//

இருந்தாலும் உன் மிளகு ஐடியா வொர்க் அவுட் ஆகலையேப்பா :(
-----------------------------------
//பெண்கள் மாப்பிள்ளைக்கு தலையில் முடி இருக்க்கா என்று பார்ப்பதில்லை, நல்ல் இண்டெலிஜெண்ட்டா என்று தான் பார்க்கிரார்கள்,//

கிழிச்சுது கார்த்திகேயன் :( இதுக்கு முடி இல்லாதவங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னே சொல்லியிருக்கலாம்

//முழுக்க உதிர்ந்த பின் முடி வெட்டவே அவசியம் இல்லை.:))//

கல்யாணம் ஆன தகிரியத்துல தத்துவம் எல்லாம் சொல்லுவீக :)

☀நான் ஆதவன்☀ said...

//ஏன்ப்பா அவரே நொந்து போய் எழுத்தி இருக்காரு ஆளு ஆளுக்கு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க..
//

வாங்க வினோத் உங்களுக்காவது என் கஷ்டம் புரியுதே.

//தொப்பி அணிந்து கொண்டல் முடி கிழே உதிர்வது நின்று விடும் தல..:)//

யோவ் இப்ப தான் உன்னைய பத்தி சொன்னேன். அதுக்குள்ள காலை வாரி வுடுறயே :)
-----------------------------------
சென்ஷி ஆபிசர். அடிச்ச கும்மிக்கு ்ன்றி நன்றி நன்றி :)
---------------------------------
@பிரதாப்

யோவ் என் நிம்மதிய கொடுக்குறதுக்குன்னே வருவ போல. பொண்ணு எதுவும் கிடைக்கல...நீ தான் எனக்காக தேடனும் :)

☀நான் ஆதவன்☀ said...

@ஷங்கி
வாங்க ஷங்கி. அந்த பிரச்ச்னை தான் கொஞ்சம் கவலைய தருது :)
------------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் எல்லாரும் சேர்ந்து எனக்கு முடியே இல்லாத மாதிரி உங்கள நம்ப வச்சுட்டாங்க போல. உங்களுக்காக என்னோட போட்டோவ தனியா மெயில அனுப்புறேன் பாஸ்.

கும்மிக்கு நன்றி பாஸ் :)

//ம்ம் உங்களுக்கு முடி இல்லியேன்னு வருத்தம் எனக்கு இருக்கேன்னு வருத்தம் - கொஞ்சம் வெள்ளையா :((//

பாஸ் இருக்கேன்னு சந்தோஷப்படுங்க. அதுவுமில்லாம கருப்பா ஆகுறதுக்கு நிறைய ஆயுர்வேதிக் மருந்துகள் இருக்கு

☀நான் ஆதவன்☀ said...

//வடகரை வேலன் said...
அவ்வளாவு மோசமாவா இருக்கு?

நீங்க பார்க்க வேண்டியது டெர்மட்டாலஜிஸ்டத்தான்//

வாங்க அண்ணாச்சி. இப்ப தான் கொட்ட ஆரம்பிச்சிருக்கு. நல்ல டெர்மட்டாலஜிஸ்ட தான் தேடிகிட்டுருக்கேன். ஊர்ல வந்து தான் பாக்கனும்.
-----------------------------------
@பப்பு

வாங்க பப்பு. ஒர்க் அவுட் ஆச்சுன்னா கண்டிப்பா சொல்றேன் :)

ஊடகன் said...

அருமை தோழா........!
நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் பணியை.........!

ஊர்சுற்றி said...

ஆ ஆங்க!

ஷாகுல் said...

முடி கொட்டாம இருக்க ஒரு வழி தான் இருக்கு

அது மொட்ட அடிச்சிடுங்க.

முடி இருந்தாதானே கொட்டும்.

எப்பூடி?

U.P.Tharsan said...

:-)) இதை போல எனக்கும் ஒரு அனுபவம் உண்டு.

மங்களூர் சிவா said...

1.ஊருக்கு பணம் அனுப்பறத உடனடியா நிறுத்துங்க உடனே கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க.

2. நல்ல பச்சை காய்கறி பழம் எல்லாம் நிறைய சாப்பிடுங்க.

தீப்பெட்டி said...

:)))

கோபிநாத் said...

என்டா என்னோட எல்லா விஷயத்திலும் வந்துட்டியே..இதுல இன்னும் வரலியோன்னு பார்த்தேன்...வா ராசா வா ;))

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ஊடகன்

நன்றி ஊர்சுற்றி(அதென்ன ஆ ஆங்க?)

நன்றி ஹாகுல். நீங்க ஐடியா பேங்க் தான் போல. இந்த ஐடியாவ மைண்ட்ல வச்சுக்கிறேன் :)

கருத்துகளுக்கு நன்றி தர்ஷன் :)

சிவா பணம் அனுப்புறத நிறுத்துறதெல்லாம் நடக்குற காரியமில்லயே. வேணும்னா இரண்டாவது பாயிண்ட ஃபாலோ பண்றேன் :)

நன்றி தீப்பெட்டி

வாங்க தல. உங்க நிலைமைக்கு வருவேன்னு பகல் கனவு காணாதீங்க. அதுக்குள்ள வேண்டிய தற்காப்புகளை எடுத்திடுவோம்ல :)

கிறுக்கல் கிறுக்கன் said...

வழுக்கை உள்ளவர்கள் ’அந்த’ விஷயத்தில் ரொம்ப கெட்டியாமே அப்படியா ஆதவன்

மணிகண்டன் said...

ஆதவன்,

எவனவோ ஒருவன் சொல்லி இருக்கார் பாருங்க. வழுக்கையா இருந்தா கல்யாணம் தள்ளி போகுமாம் ! பொண்ணு கிடைக்காதாம். இதை விட என்ன வேணும் உங்களுக்கு :)- நிம்மதியா இருந்துடுங்க.

மணிகண்டன் said...

ஆதவன், உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன். இதுமாதிரி தொடர் எல்லாம் எழுதறது இல்லைன்னு எதுவும் பாலிசி இல்லாட்டி எழுதும்படி சொல்லிக்கிறேன் :)-

ஜெகநாதன் said...
This comment has been removed by the author.
ஜெகநாதன் said...

தலைக்கு ஆயில் ​போட்டு ஸ்கால்ப் மஸாஜ் பண்ணுங்க. ​ரொம்ப ​வேகமா ​செய்யப்படாது. முடியை அதன் ​தோல் பகுதியோடு நன்கு அழுத்திவிடவும். இப்படி ​செய்தால் முடி வருமான்னு ​கேக்கறீங்களா? ....
வரும். ஆனா வராது!
புரியலே?
முடி புதுசா வராது ஆனாது இருக்கிறது முடி உதிராது!

கைப்புள்ள said...

ஒரு கல்யாணம் ஆச்சுன்னா எல்லாம் சரியாப் போயிடும். அதுக்கப்புறம் முடி இருந்தா என்ன இல்லைன்னா என்ன?
:)

ஸ்ரீமதி said...

ஹி ஹி ஹி இதுக்கு நேரடியாவே அம்மா கிட்ட சொல்லிருக்கலாமே அண்ணா... நான் வேணா சொல்லட்டா?? ;)))))))

☀நான் ஆதவன்☀ said...

//மணிகண்டன் said...

ஆதவன்,

எவனவோ ஒருவன் சொல்லி இருக்கார் பாருங்க. வழுக்கையா இருந்தா கல்யாணம் தள்ளி போகுமாம் ! பொண்ணு கிடைக்காதாம். இதை விட என்ன வேணும் உங்களுக்கு :)- நிம்மதியா இருந்துடுங்க//

ஒய் மணிகண்டன் ஒய்? உங்க தொடர் பதிவுல நல்ல விதமா தானே சொல்லியிருந்தீங்க?

//ஆதவன், உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன். இதுமாதிரி தொடர் எல்லாம் எழுதறது இல்லைன்னு எதுவும் பாலிசி இல்லாட்டி எழுதும்படி சொல்லிக்கிறேன் :)-//

ரைட்டு எழுதிடுறேன் :)

☀நான் ஆதவன்☀ said...

// ஜெகநாதன் said...

தலைக்கு ஆயில் ​போட்டு ஸ்கால்ப் மஸாஜ் பண்ணுங்க. ​ரொம்ப ​வேகமா ​செய்யப்படாது. முடியை அதன் ​தோல் பகுதியோடு நன்கு அழுத்திவிடவும். இப்படி ​செய்தால் முடி வருமான்னு ​கேக்கறீங்களா? ....
வரும். ஆனா வராது!
புரியலே?
முடி புதுசா வராது ஆனாது இருக்கிறது முடி உதிராது!//

இதுக்கு தான் உங்கள மாதிரி குரு வேணும்னு சொல்றது. நன்றி ஜெகன்நாதன். அடுத்த முயற்சி அது தான் :)
-----------------------------------
//கைப்புள்ள said...

ஒரு கல்யாணம் ஆச்சுன்னா எல்லாம் சரியாப் போயிடும். அதுக்கப்புறம் முடி இருந்தா என்ன இல்லைன்னா என்ன?
:)//

வாங்கண்ணே. அதுக்கு தானே லீவுல இந்த பேச்ச எடுத்தது. வீட்ல கண்டுக்கலயே :)
------------------------------------
//ஸ்ரீமதி said...

ஹி ஹி ஹி இதுக்கு நேரடியாவே அம்மா கிட்ட சொல்லிருக்கலாமே அண்ணா... நான் வேணா சொல்லட்டா?? ;)))))))//

இதுக்கெல்லாம் என்கிட்ட பர்மிசன் கேட்கனுமா ஸ்ரீ :)

Related Posts with Thumbnails