ஆதவன் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009

நேரம். காலை 7.30

மார்கழி குளிர் காலை வெயிலைப் பற்றிய கவலையை அளிக்காததால் கடற்கரையில் காலை நனைத்தபடி, அதிகப்படியான டென்சன் எதுவும் இல்லாமல் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் ஆதவன். பைனாகுலரின் உதவியோடு காந்தி சிலை அருகே நோட்டம் விட்டான்.

"டேய் மகனே இப்ப கொலை பண்ண போறது நாம இது நாள் வரை பண்ணின மாதிரி இல்ல, இவர் விசாரனை குழுத் தலைவர் மட்டுமில்ல, இவர் ரிட்டரையர்ட் ஜட்ஜ். அதுவும் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ். பாதுகாப்பு ரொம்ப பலமா இருக்கும்” ராவுத்தர் ஐந்தாவது முறையாக படப்படப்பாக இதையே கூறினார்.

“இதையே எத்தனை முறை சொல்லுவ? நான் எப்படி அவர் கதையை முடிக்க போறேன்னு பார்க்க தானே போற. இந்த பெரிய ஆர்டரை முடிச்சதும் எப்படியும் அடுத்த ஆர்டர் வெளிநாட்டுல கிடைக்கும். அப்புறம் நாம எங்கேயோ போகப் போறோம்” ஆதவன் கண்களில் ஒளி மிளிர சிரித்தான்.

நேரம் 8.10

“என்னப்பா இன்னமும் காணோம்?. அவர் தனியாக பீச்சுக்கு வராரா? இல்ல கூட வேற யாராவது வராங்களா?” ஆதவன்

” எப்ப சென்னைக்கு வந்தாலும் ஞாயிற்றுகிழமை காலையில பீச்சுக்கு தனியா தான் வருவாரு. நம்ம கணக்குப்படி அவர் இந்நேரம் வந்திருக்கனும் ஆனா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக அவரோட சொந்தகாரங்களெல்லாம் வந்திருக்காங்க. ஒரு பெரிய கும்பலே வந்திருக்காங்க. அதுனால அந்த கும்பலோட இங்க வருவாருன்னு நினைக்கிறேன். அதான் லேட்டாகுது. ” ராவுத்தர்.

“என்னது பெரிய கும்பல் வருதா? ” தன் புருவங்களை உயர்த்தி.. ஆதவன்

”ஆமா. டேய் மகனே எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை இன்னைக்கு காரியத்தை முடிச்சிடுடனும். இதைவிட்டா ஒரு நல்ல சந்தர்பம் கிடைக்காது. நாளைக்கு நாம மலேசியா வேற போகனும். எப்படியாவது காரியத்தை முடிச்சுடு மகனே” தன்னுடைய அசட்டு தனத்துடனும் வெறியுடனும் கூறிய ராவுத்தரை ஒரு வெற்றுப் பார்வையுடன் பார்த்தான் ஆதவன்.

“நான் எவ்வளவு காசு கொடுத்தாலும் குழந்தைகளையும், பெண்களையும் கொல்ல மாட்டேன்னு உனக்கு தெரியும்ல. உனக்கு தேவை அந்த ஜட்ஜோட உயிர் அவ்வளவு தானே? அந்த வேலை இன்னைக்கு முடியும்” ஆத்திரத்துடன் ஆதவன்.

“ஏண்டா மகனே கோவிச்சுகிற? வேலைய எப்படியாவது முடிஞ்சு கொடு. அவ்வளவு தான்.” என்றான் காலைத் தழுவிய அலைகளை ரசித்தபடி ராவுத்தர்.

நேரம் 8.25

”அப்பா, என்னாச்சு இன்னும் ஆள் வரலையே?” என்றபடி கடிகாரத்தைப் பார்த்தான்.

“கொஞ்சம் பொறுடா மகனே. ஜட்ஜோட வீட்டு வேலைக்காரன் பேனர்ஜிய நம்ம பக்கம் கொஞ்சம் கஷ்டப்பட்டு வளைச்சிருக்கேன். ஜட்ஜ் வீட்டுலருந்து கிளம்பியதும் அந்த பயபுள்ள நமக்கு மெசேஜ் விடுறதா சொல்லியிருக்கான்”

“என்னது பேனர்ஜியா? அவன் என்ன பெங்காலியா?”

“இல்லப்பா அவன் பேரு குப்புசாமி தான். ஆனா அவன் ரொம்ப அனீனீனீசியா ஃபீல் பண்ணியதால அவன் பேர பேனர்ஜீன்னு மாத்திகிட்டானாம்”

“இப்ப இவன் பேரு மாத்தின கதை ரொம்ப முக்கியமா? ஆளு நம்பிக்கையானவன் தானே?” ஆதவன்

“அதெல்லாம் நம்பிக்கையானவன் தான். ஏன்னா அவன் மாப்பிள்ளைய கடத்தி வைச்சிருக்கோம். அவன் நம்மளைப் பத்தி ஏதாவது போட்டு கொடுத்தான்னா அவன் மாப்பிள்ளையோட உசுர எடுத்திடுவோம்னு மிரட்டி வச்சிருக்கேன்” என்றான் ராவுத்தர் கடலை நோக்கி சிரித்தபடி.

சிறிது நேரம் கழித்து....

ராவுத்தரின் போன் சிணுங்கியது. ராவுத்தர் எடுத்து நோக்கியவுடன் கத்த ஆரம்பித்தார். “டேய் ஆதவா ஜட்ஜ் வீட்டுல இருந்து கிளம்பிட்டாராம்”

“எங்க காட்டு” என்றபடி மெசேஜை வாங்கி முழுவதுமாய் படித்தான் ஆதவன்.

“ஜட்ஜ் ஐயா குடும்பத்தோட பீச்சுக்கு கிளம்பிட்டாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ் "

Sender
Benerji
+919841492053

Message center:
+919825001002

Sent:
26-Dec-2004
8:38:11


34 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

காலை நேரத்தில்
இதுபோல படித்தால் தான் அன்றைய பொழுதே அருமையாக போகிரது
நல்ல ஹாஸ்யம்

Anonymous said...

2004ஆ , ஆதவனுக்கு ஏன் இந்த கொலைவெறி

சென்ஷி said...

:)

☀நான் ஆதவன்☀ said...

மக்களே புரியலைன்னா... டிசம்பர் 26, 2004 காலை 8.40க்கு சென்னைய மட்டுமில்லாம உலகத்தையே உலுக்கிய சம்பவம் என்னென்னு யோசிங்க...

இய‌ற்கை said...

ஆஹா..ஆஹா.. எப்பிடிங்க இப்பிடில்லாம்..

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்! ஒய் திஸ் கொலவெறி பாஸ்!??!!

சந்தனமுல்லை said...

/“இல்லப்பா அவன் பேரு குப்புசாமி தான். ஆனா அவன் ரொம்ப அனீனீனீசியா ஃபீல் பண்ணியதால அவன் பேர குப்புசாமின்னு மாத்திகிட்டானாம்”/

இதில் பொருட்குற்றம்/சொற்குற்றம் உள்ளது கதாசிரியரே?!! ஹிஹி

சந்தனமுல்லை said...

:-))
உங்களுக்குள்ளே இபப்டி ஒரு நச்சு நமச்சிவாயம் இருப்பாருன்னு நினைக்கவேயில்லை!!
வாழ்த்துகள்...:-)

துளசி கோபால் said...

ஆதவன் & ராவுத்தர் சுநாமியிலே போயிட்டாங்களா?

ஆமாம். நச் எங்கே ?????

ஜெஸ்வந்தி said...

//துளசி கோபால் said...

ஆதவன் & ராவுத்தர் சுநாமியிலே போயிட்டாங்களா?

ஆமாம். நச் எங்கே ?????//

அதுதானே ? ஒரே குழப்பம் !

pappu said...

நான் உங்களுக்கு தசாவதாரத்துக்கு எல்லாம் சீனியர். இந்தப் ப்ளாட்ட வச்சு உண்மை நண்பன்னு ஒரு கதை எழுதிட்டேன், எந்த காலட்திலயோ, பதிவுல கூட போட்டிருக்கேன். :)

அதவிடுங்க கதை நல்லாருக்கு. நான் பின்னூட்டம் படிச்சுதான் ,முடிவப் புரிஞ்சிகிட்டேன். படத்த சுட்ட செம கதை ஒண்ணு எழுதிட்டீங்க!

☀நான் ஆதவன்☀ said...

@கார்த்திகேயன்

அவ்வ்வ்வ்வ். நீ சீரியஸா சொல்றயா இல்ல கிண்டலுக்கு சொல்றயான்னே தெரியல :) எனிவே தாங்ஸ்..
-------------------------------------
@சின்ன அம்மணி

அப்பாட நான் சொல்லாமலே உங்களுக்காவது புரிஞ்சிருக்கே. ரொம்ப நன்றிங்க :)
-----------------------------------
@சென்ஷி

கதை எப்படியிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லாம சிரிப்பு மட்டும் போட்டுட்டு போனா என்ன அர்த்தம்?
----------------------------------
@இயற்கை

குருவே எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)

☀நான் ஆதவன்☀ said...

@சந்தனமுல்லை

பாஸ் எம்புட்டு நாள் தான் வெறுமனே மொக்கை போடுறது. அது தான் கதையில கொஞ்சம் மொக்கை போடலாம்னு.....

பாஸ் தாங்ஸ்...குத்தத்தை சரி பண்ணியாச்சு :)

//:-))
உங்களுக்குள்ளே இபப்டி ஒரு நச்சு நமச்சிவாயம் இருப்பாருன்னு நினைக்கவேயில்லை!!//

அவ்வ்வ்வ் உங்களுக்கு இதுக்கு தண்டனையா அடுத்த பதிவு இருக்கும் பாருங்க :)
----------------------------------
@துளசி டீச்சர்

வாங்க டீச்சர். ‘நச்’ இல்லையா??? ஓக்கே அடுத்து ஒரு கதை எழுதுட்டு எது பெட்டரா இருக்கோ அதை அனுப்பிட வேண்டியது தான் :)
----------------------------------
@ஜெஸ்வந்தி

இன்னுமா குழப்பம்? ரெண்டு பேரும் செத்து போயிடுவாங்க ஜெஸ்வந்தி. இதுல என்ன குழப்பம்?
-----------------------------------
@பப்பு

அப்பாட கதை நல்லாயிருக்குன்னு வெளிப்படையா நீயாவது சொல்லியிருக்கையே.... என்னது இது மாதிரி நீயும் எழுதியிருக்கையா? பரிசுல பாதி கேட்டுடாதப்பா. பரிசு ஒரு நல்ல காரியத்துக்கு போகுது :)

ஸ்ரீமதி said...

:)))

ஸ்ரீமதி said...

(ரொம்பல்லாம் யோசிக்க வெச்சா இப்படி தான் ஸ்மைலி போட்டு எஸ் ஆவோம்... வர்ட்டா?? ;))) )

வினோத்கெளதம் said...

நல்ல முயற்சிப்பா..பப்புவும் இதே மாதிரி ஒரு கதை எழுதி இருந்தது டக்கென்று என் நியாபகத்திலும் வந்தது.

காகிதப் பூக்கள் said...

oru nallla inthiyana yosikkereenga keep it up.

ஆயில்யன் said...

அருமை!

அருமை! இன்னும் நிறைய டிரை பண்ணுங்க பாஸ் உங்களோட முயற்சிகள் ஒரு வட்டத்துக்குள்ளவே சுத்திக்கிட்டிருக்க கூடாது ஒ.கேவா?

ஆயில்யன் said...

/(ரொம்பல்லாம் யோசிக்க வெச்சா இப்படி தான் ஸ்மைலி போட்டு எஸ் ஆவோம்... வர்ட்டா?? ;))) )//

அ(டி)ப்பாவி தங்கச்சி!

ஊரு புல்லா போயி ஸ்மைலி போட்டதுக்கு உள்குத்து காரணம் இதுதானா? அவ்வ்வ்வ்வ்

நல்லது ராசாத்தி :))

ஆயில்யன் said...

//oru nallla inthiyana yosikkereenga keep it up.//

LOL :)))))

ஆயில்யன் said...

//☀நான் ஆதவன்☀ said...

மக்களே புரியலைன்னா... டிசம்பர் 26, 2004 காலை 8.40க்கு சென்னைய மட்டுமில்லாம உலகத்தையே உலுக்கிய சம்பவம் என்னென்னு யோசிங்க.../

அதை சொல்லிட்டும் யோசிக்க சொல்றீங்களே பாஸ் நான் இப்ப எதை யோசிக்க? சொல்லுங்க!

எவனோ ஒருவன் said...

//யோசிங்க... யோசிங்க...//
நீ ரொம்பத்தான் யோசிக்கிற...

கோபிநாத் said...

தேவையா உனக்கு...;))

☀நான் ஆதவன்☀ said...

@ஸ்ரீமதி

அவ்வ்வ்வ் இத்தனை நாளா ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போனயே ஸ்ரீமதி அதுக்கு அர்த்தம் இதுதானா? உன் கவிதை பதிவுல ஸ்மைலி மட்டும் போடுற கோபி, சென்ஷிய பத்தி என்ன நினைக்கிற? :)
-------------------------------------
@வினோத்

நன்றி வினோத். பப்பு எழுதினது தெரியாது. லின்ங் தேடி படிச்சு பாக்குறேன்
------------------------------------
@காகிதப்பூக்கள்

அவ்வ்வ்வ்வ் சீரியஸா தான் சொல்றீங்களா?

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

//அருமை! இன்னும் நிறைய டிரை பண்ணுங்க பாஸ் உங்களோட முயற்சிகள் ஒரு வட்டத்துக்குள்ளவே சுத்திக்கிட்டிருக்க கூடாது ஒ.கேவா?//

பாஸ் சீரியஸா சொல்றீங்களா இல்ல கலாய்கிறீங்களான்னே தெரியல பாஸ். இருந்தாலும் நன்னி பாஸ் :)

//அதை சொல்லிட்டும் யோசிக்க சொல்றீங்களே பாஸ் நான் இப்ப எதை யோசிக்க? சொல்லுங்க!//

ஒன்னியும் யோசிக்க வேண்டாம்.....
-----------------------------------
@ஏனோ ஓனோ

வாய்யா.... டெம்ப்ளேட் மாத்தி தரேன்னு சொல்லிட்டு ஓடு போயிட்ட. ஆன் லைன்லயும் ஆளை காணோம். எங்கய்யா இருக்க?
-----------------------------------
@கோபிநாத்

வாங்க தல... ஆதவன் படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதி கோபத்தை தீர்க்க முடியல... அதான் இந்த மாதிரி ஒரு முடிவு ஹி ஹி

எவனோ ஒருவன் said...

//வாய்யா.... டெம்ப்ளேட் மாத்தி தரேன்னு சொல்லிட்டு ஓடு போயிட்ட. ஆன் லைன்லயும் ஆளை காணோம். எங்கய்யா இருக்க?//

அத ஏன் கேக்குற? நேரமில்லாம நாயா அலையிறேன்... சர்வேசனுக்கு கதையெல்லாம் ரெடி... டைப் பண்ணி ஏத்த முடியல...

ஆன்லைன் வா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தசாவதாரத்தோட க்ளைமாக்ஸ கப்புன்னு புடிச்சிட்டீங்க பாஸ் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா.. வெற்றி பெற வாழ்த்துகள்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

இங்கே (www.amirdhavarshini.blogspot.com) உங்களுக்கு ஒரு அழைப்பு.

☀நான் ஆதவன்☀ said...

@அமித்து அம்மா

பாஸ் நீங்க மட்டும் கலந்துகிட்டீங்கன்னா நான் இப்பவே ஜகா வாங்கிருவேன். உங்களை மாதிரி நல்லா அருமையா எழுதுறவங்க நிறைய பேரு கலந்துக்கல. அதுனால பரிசு கிடைக்குமான்னு பாக்கலாம்.
தொடர்பதிவு அழைப்புக்கு நன்றி. கண்டிப்பா போடுறேன்
----------------------------------
@கார்த்திகைப் பாண்டியன்

எங்க நண்பா, இது மாதிரி ஏற்கனவே ரெண்டு மூனு பேரு எழுதிட்டாங்களாமே. பார்க்கலாம் கிடைக்குதான்னு. வாழ்த்துக்கு நன்றி நண்பா

Anonymous said...

ஆதவனுக்கு தசாவதாரம் climax -ஆ .என் கதையையே எனக்கு பிட்டா போடுறீங்களே நியாயமா - KS Rav....

Kamal said...

ஆதவன்...அப்படியே ஆதவன் கதைய சுட்டு ஒரு கத தேத்திடீங்க...
முடிவு கொஞ்ச நேரம் கழிச்சு தான் புரிஞ்சுது.... :)
நல்ல கதை :)

Mohan Kumar said...

சுவாரஸ்யமான நடை.
அந்த Dec 26 மேட்டர் நீங்க சொன்ன பிறகு தான் யோசிக்க முடிந்தது
வெற்றி பெற வாழ்த்துக்கள்
*******
கதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

சுவாசிகா said...

நல்ல முயற்சி..ஆதவன் படம் பாதிப்பு இல்லாமல் எழுதியிருந்தால் இன்னும் நச் சென்று இருந்திருக்கும்

நிறைய பேருக்கு குழப்பம் ஏற்பட்டதும் அதனால்தான் என்று எண்ணுகிறேன்

வெற்றி பெற வாழத்துகள்

அன்புடன்,
சுவாசிகா
ஐ லவ் யூ - சர்வேசன் – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை

Related Posts with Thumbnails