2 in 1 (இதுவும் அதே தான்)

ஆமாங்க இதுவும் தொடர் பதிவு தான். அப்படியே கொஞ்சம் விருதையும் கொடுத்துகிறேன். இந்த மாசம் கொசுவத்தி நிறைய சுத்திட்டேன்.

1)
உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

வயது-25, கல்யாணாம் ஆகல.

2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம் ?

கொஞ்ச வருசம் முன்னவரைக்கும் காத்தாடி தான் ஞாபகம் வரும். ஒரு மாசம் முன்னாடியே என்ன நூல் வாங்கலாம்? எத்தனை கட்டை நூல் வாங்கலாம்? மாஞ்சா போடுறதுக்கு என்னென்ன சேர்க்கலாம். இனிஷியல் போட்ட காத்தாடி ஆர்டர் கொடுக்குறதுன்னு ஒரே கொண்டாட்டமா இருக்கும். இரவாச்சுன்னா ராக்கெட்டை படுக்க வச்சு விடுறது கேபிள் வயர்ல சரவெடிய கட்டி தொங்கவிடுறதுன்னு நிறைய சம்பங்கள் ஞாபகம் வரும். ஆனா இப்ப இன்னொரு சம்பவமும் அடிக்கடி ஞாபகம் வரது.....

ஐஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு தீபாவளியில நானும் என் ப்ரெண்ட் சசியும் இன்னொரு நண்பனை பார்க்கப் போகும் போது நாலு பேர் சேர்ந்து பைக்ல வந்த ஒரு ஆளை மடக்கி பெரிய பெரிய அரிவாளோட எங்க கண்ணு முன்னால வெட்டின சம்பவமும் ஞாபகம் வருது :(

3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?

வேறெங்க சார்ஜா தான் :(

4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள் ?

”மச்சி தீபாவளிக்கு லீவு போட்டுட்டு எங்கயாவது போலாமா?”

“எங்கடா போகுறது? சாயங்காலம் படத்துக்கு போகலாம்”

“யாராவது பேமிலியோட ப்ரெண்ட் இங்க இருந்தா நல்லா இருக்கும்ல?” என்றபடி கடந்த மூன்று வருடமும் முடிந்த தீபாவளி இந்த வருடம் ஒரு நாள் முன்பாக பதிவர் “செந்தில்வேலன்” வீட்டில் தீபாவளி விருந்துக்காக கூப்பிட்ட போது போக முடியாத சூழ்நிலையில் அலுவலகத்தில் சிக்கிக் கொண்டது வருத்தமாக இருந்தது :(

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?

பண்டிகைக்கு மட்டும் எனக்காக நான் துணி வாங்கியது கிடையாது. அக்கா, அம்மா என யாராவது எடுத்து தருவார்கள். இந்த முறையும் எனக்காக சட்டை அக்கா எடுத்து வைத்துள்ளதாக தீபாவளியன்று போன் செய்யும் போது சொன்னார்கள் :(

6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?

மெஸ்ல அதே சப்பாத்தி, அதே சாப்பாடு ...எல்லாம் அதே அதே :(


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

போன் தான் :(.

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?

இந்த வருடம் காலையில் ஆபிஸ். மாலையில் திரையரங்கில் ஆதவன் படம் :( (என்னய்யா இது எல்லா பதில்லயும் சோக ஸ்மைலி போட வேண்டியதா இருக்கு)


9) இந்தஇனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள் ? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?

உதவி செய்ய நல்ல நாள் எல்லாம் பாக்கனுமா என்ன?


10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் லைத்தங்கள் ?


இளைய பல்லவன்: நல்ல நண்பர். கண்டிப்பா கொஞ்சம் ஸ்பெஷலா இருந்திருக்கும் இவரோட தீபாவளி. இவரது ஸ்பெஷல் ‘சக்கர வியூகம்’

கோமதி அரசு:
கண்டிப்பா இவங்க இந்த கேள்விகளுக்கு அருமையா பதில் தர முடியும். அந்த பதில்களை எங்களை போல வெளிநாட்டில் வசிக்கும் பேச்சுலர்களுக்கு படிக்க சந்தோஷமாகவும் இருக்கும்.

ஸ்ரீமதி: தலை தீபாவளி ஸ்பெஷசலா இருந்திருக்குமே :)

கிரி: தன் மகனோட கொண்டாடும் முதல் தீபாவளின்னு நினைக்கிறேன். கண்டிப்பா சுவாரஸியமா இருந்திருக்கும் இவரோட தீபாவளி.

இந்த நால்வரும் தங்களுக்கு நேரமிருப்பின் இத்தொடர்பதிவை தொடர அன்போடு கேட்டுகொள்கிறேன். என்னை அழைத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள் :)
------------------------------------------------------------------------------------------------


முதல்ல எனக்கு விருது கொடுத்த, சந்தனமுல்லைக்கு நன்றிகள். பாஸ் உண்மையிலயே நீங்க தான் கலக்குறீங்க. பப்பு பதிவு எல்லாம் நல்லா ரசிக்க முடியுது. keep Rocking பாஸ் :)

இதை வேற யாருக்கு கொடுக்கலாம்னு யோசிச்சா தொடருக்கு கூப்பிட்டவங்களுக்கே கொடுத்துடுலாம்னு தோணுச்சு.

இளைய பல்லவன்
கோமதி அரசு
ஸ்ரீமதி
கிரி

இந்த நால்வரோட இந்த விருதை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் :)
33 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஸ்ரீமதி said...

கொஞ்சம் சோகமா ஸ்மைலி போடாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.. :))

ஸ்ரீமதி said...

விருதுக்கு நன்றிகளையும் நாந்தான் முதல்ங்கறதையும் தெரிவிச்சிட்டு விடைபெறுகிறேன் நன்றி. ;)))

சென்ஷி said...
This comment has been removed by the author.
சென்ஷி said...

வாழ்த்துக்கள்.. பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும்..!

//இந்த வருடம் ஒரு நாள் முன்பாக பதிவர் “செந்தில்வேலன்” வீட்டில் தீபாவளி விருந்துக்காக கூப்பிட்ட போது போக முடியாத சூழ்நிலையில் அலுவலகத்தில் சிக்கிக் கொண்டது வருத்தமாக இருந்தது :(//

எனக்கும் :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் தீபாவளிக்கு இதே மாதிரி யாரோ எங்க கண் முன்னால வெட்டுப்பட்ட கதை இருக்கே.. :(

ஆயில்யன் said...

//வயது-25, கல்யாணாம் ஆகல.//

யாருக்குய்யா மெசேஜ் கொடுக்கற? :)))

ஆயில்யன் said...

//யாராவது பேமிலியோட ப்ரெண்ட் இங்க இருந்தா நல்லா இருக்கும்ல?” என்றபடி கடந்த மூன்று வருடமும் முடிந்த தீபாவளி ///

ஸேம் !

ஆயில்யன் said...

//keep Rocking பாஸ் :)//

பாஸ் எம்புட்டு நாளைக்கு கல்லு வுடைப்பாங்க???

சந்தனமுல்லை said...

/இரவாச்சுன்னா ராக்கெட்டை படுக்க வச்சு விடுறது கேபிள் வயர்ல சரவெடிய கட்டி தொங்கவிடுறதுன்னு நிறைய சம்பங்கள் ஞாபகம் வரும். /

டெரரா இருக்கு பாஸ்...கேக்கவே!! அவ்வ்வ்! :))

சந்தனமுல்லை said...

/நாலு பேர் சேர்ந்து பைக்ல வந்த ஒரு ஆளை மடக்கி பெரிய பெரிய அரிவாளோட எங்க கண்ணு முன்னால வெட்டின சம்பவமும் ஞாபகம் வருது/

oops!!

சந்தனமுல்லை said...

பாஸ்..ரொம்ப சோகமாயிடுச்சி...ஒரே சோக ஸ்மைலி போட்டு! இதுக்கெல்லாம் சேர்த்து இனிமே வர்ற தீபாவளியெல்லாம் செமையா கொளுத்த போறீங்க பாருங்க பாஸ்!! :-)

சந்தனமுல்லை said...

/உதவி செய்ய நல்ல நாள் எல்லாம் பாக்கனுமா என்ன?/

சூப்பர்!

சந்தனமுல்லை said...

/உண்மையிலயே நீங்க தான் கலக்குறீங்க. பப்பு பதிவு எல்லாம் நல்லா ரசிக்க முடியுது. keep Rocking பாஸ் :)/

;-) நன்றி பாஸ்..


/ஆயில்யன் said...

//keep Rocking பாஸ் :)//

பாஸ் எம்புட்டு நாளைக்கு கல்லு வுடைப்பாங்க???/


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சென்னைக்கு வாங்க...:-))

வினோத்கெளதம் said...

Innum ethanai todarppathivu irukkunu sonna naanga oru list pottu vachippom..
Pinnadi varum talaimuraiku vasathiyaa irukkum..;)

வினோத்கெளதம் said...

Votu roomla poi poduren.,

விக்னேஷ்வரி said...

விருதிற்கு வாழ்த்துக்கள்.

கேள்விக்கான பதில்கள் எல்லாமே சோகமா இருக்கு. தீபாவளி கொண்டாடவே இல்லை போல தெரியுது. :(

கிரி said...

ஆதவன் பொங்கலே வந்துடும் போல இருக்கே! இப்ப போய் சொல்றீங்களே! இப்ப இது பற்றி கூறினா ஆறிப்போன தீபாவளி ஆகிடும்! வேணா அடுத்த தீபாவளிக்கு இதை பயன்படுத்திகலாமா! ;-)

//தன் மகனோட கொண்டாடும் முதல் தீபாவளின்னு நினைக்கிறேன். கண்டிப்பா சுவாரஸியமா இருந்திருக்கும் இவரோட தீபாவளி//

முதல் இல்ல இரண்டாவது தீபாவளி.. பெரிய சோகம் இரண்டு தீபாவளிக்கும் அவனுடன் இல்லை..

அதனால எனக்கு தீபாவளி கொண்டாட்டம் எதுவும் இல்லை :-((

உங்கள் விருதிற்கு நன்றி ஆதவன் .

கோமதி அரசு said...

ஆதவன்,
என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

சந்தன முல்லை தான் அன்பின் மிகுதியால் தத்தி தளிர் நடை இடும் எனக்கு விருது கொடுத்தார்கள் என்றால் நீங்களுமா ஆதவன்?

உங்கள் விருதுக்கு நன்றி.

உங்களிடம் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கூடிய விரைவில் நீங்கள் அழைத்த தொடர் பதிவுக்கு எழுதுகிறேன்.
நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள்.. பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும்..:-))))

க.பாலாசி said...

//6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

மெஸ்ல அதே சப்பாத்தி, அதே சாப்பாடு ...எல்லாம் அதே அதே :(//

அவ்வ்வ்வ்....அழாதிங்க....எல்லாத்திலயும் ஒரே :) சோகமா இருக்கே நண்பா. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.....

க.பாலாசி said...

விருதுகளை பெற்றமைக்கும், பகிர்ந்து பெறப்பபோகிறவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும்...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஆகா, ஆகாகா,

தேவுடு
விருதா?
வாழ்த்துக்கள் பெற்றமைக்கும், கொடுத்தமைக்கும்
வாழ்த்துக்கள்.. பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும்..!

//இந்த வருடம் ஒரு நாள் முன்பாக பதிவர் “செந்தில்வேலன்” வீட்டில் தீபாவளி விருந்துக்காக கூப்பிட்ட போது போக முடியாத சூழ்நிலையில் அலுவலகத்தில் சிக்கிக் கொண்டது வருத்தமாக இருந்தது :(//
நான் தான் வழி தெரியும் கூட்டிட்டு போரேன்னு சொன்னேன்
இப்போ வடை போச்சுல்ல?

நான் சர்க்கரை பொங்கல், லட்டு.
பூரி கிழங்கு என வீட்டு சாப்பாடு சாப்பிட்டென்பா.உனக்கும் சேர்த்து

ஒட்டு போட்டாச்சு.

கோபிநாத் said...

\\1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

வயது-25, கல்யாணாம் ஆகல.\\\

விளம்பரம்...நல்லாயிருக்கு ;)


வாழ்த்துக்கள்.. பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும்..!

மங்களூர் சிவா said...

/
கோபிநாத் said...

\\1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

வயது-25, கல்யாணாம் ஆகல.\\\

விளம்பரம்...நல்லாயிருக்கு ;)
/

ரிப்பீட்டு
:))))

Priya said...

அடுத்த ஒரு வருசத்துக்கு உங்களுக்கு சோக ஸ்மைலீ போடுவதற்கு தடை.

☀நான் ஆதவன்☀ said...

@ஸ்ரீமதி

இனி அடுத்த தீபாவளியாவது எனக்கு ஸ்மைலியோட இருக்கும்னு நம்புவோமாக :)
-------------------------------------
நன்றி சென்ஷி
-------------------------------------
@முத்தக்கா

அவ்வ்வ் நீங்களுமா? என்ன கொடுமைக்கா இது :(
-------------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் மெசேஜ் போறவங்களுக்கு போனா போதும் பாஸ் :)

//பாஸ் எம்புட்டு நாளைக்கு கல்லு வுடைப்பாங்க???//

:)))
--------------------------------------
@சந்தனமுல்லை

ஆமா பாஸ் அடுத்த தீபாவளியாவது வீட்ல கொண்டாட முடியுமான்னு பாக்கலாம் பாஸ்

☀நான் ஆதவன்☀ said...

@வினோத்

இதோட ஒரு மாசத்துக்கு எந்த தொடர்பதிவும் இல்லப்பா. ஸோ டோண்ட் ஒர்ரி :)
------------------------------------
@விக்னேஸ்வரி

ஆமாங்க விக்னேஸ்வரி. 4 வருசமா தீபாவளி இப்படி தான் போகுது :(
------------------------------------
@கிரி

கிரி உங்களால முடிஞ்சா போடுங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை :) எனக்கே இந்த பதிவு எழுதுன ஒரு நாள் முன்ன தான் அழைப்பே வந்தது.
------------------------------------
@கோமதி அரசு

விருதிற்கு முழு தகுதியும் உங்களுக்கு இருக்கும்மா. உங்க தீபாவளி பற்றிய தொடர் பதிவை எதிர்பார்க்கிறேன் :)
------------------------------------
@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா :)

☀நான் ஆதவன்☀ said...

@க. பாலாசி

நன்றி நண்பா. கருத்திற்கும் ஆறுதலுக்கும் :)
-------------------------------------
@கார்த்திகேயன்

தங்கள் அன்புக்கு நன்றி தேவுடு :)
-------------------------------------
@கோபிநாத்

நன்றி தல
-------------------------------------
@ம.சி

நன்றி சிவா
--------------------------------------
@ப்ரியா

நன்றி ப்ரியா. இனி வரும் தீபாவளி இப்படி சோக ஸ்மைலி இருக்காமல் பார்த்துக்கிறேன் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

முத முறையா உங்க பதிவுல நெறைய சோக ஸ்மைலி பாஸ்.

உங்களுக்குள்ள இப்படி ஒரு கரடி தூங்கிட்டு இருந்துதா இவ்வளவுநாளா :(

r.selvakkumar said...

விருதுகளை விட்டுத் தள்ளுங்கள்.

சமீபகாலமாக பலபேரின் Follow Listல் உங்கள் பெயர்தான் தட்டுப் படுகிறது.(நான் பார்த்தவரையில்)

இதுதான் பெரிய விருது.

இளைய பல்லவன் said...

தலைவா தொடர் பதிவு போட்டாச்சு தலைவா...

என்னாது இன்னும் ஒரு மாசத்துக்கு நோ தொடர் பதிவாஆஆஆஆ??

அப்படின்னா என்னோட அடுத்த பதிவு ஒரு மாசம் கழிச்சி தானா :(((

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ஆதவன், நல்ல பதிவு. நம்ம பேரு அடிபட்டிருப்பதை இப்பொழுது தான் பார்த்தேன்.

விடுங்க... பொங்கல் தினம் வெள்ளியன்று தான் வருகிறது. விருந்து தயார் பண்ணிடுவோம் :)

ஷாகுல் said...

//வயது-25, கல்யாணாம் ஆகல.//

இத இங்க எழுதுறதுக்கு பதிலா மேட்ரிமோனி சைட்ல எழுதுனா ஒரு புன்னியம் உண்டு. சரி ஒ.கே.

வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails