அச்சில் வராத சரித்திரம்

தொலைக்காட்சியில் அவர் தொண்டர்களைப் பார்த்தபடி கையை அசைத்து சிரிப்போடு செல்கிறார். கூட்டம் உற்சாகமாகி ஏதோ கத்துகிறது. தெளிவாக கேட்கவில்லை. இன்று காலை மலையாள செய்களின் ஊடே இந்த ஒளி நாடா காட்டப்பட்டது. அவரின் நினைவு நாள் இன்று. நான்கு வருடத்திற்கு முன்பு மதுரைக்கு சென்ற போது அறிந்த விசயம் தான் உடனே ஞாபகம் வந்தது. கண்கள் தொலைக்காட்சியில் நிலை நிற்க மனது குரங்காய் மாறி எங்கெங்கோ சென்றது.இந்திராகாந்தி. அக்டோபர் 31 அவர் மரணம் அடைந்த நாள். கம்பீரத்தின் மறு உருவம். ஏன் இன்றும் ஒட்டுமொத்த இந்திய பிரதமர்களில் தைரியசாலி என எதிர்கட்சி தலைவரால் கூட பாராட்டப்பட்டவர். இந்நேரம் இந்தியாவை வல்லரசாக மாற்றியும் இருக்கலாம் என நப்பாசையும் எழ செய்பவர். இன்னும் என பல இமேஜை உள்ளடக்கியவர். அவர் மரணம் அடைந்த நாளான இன்று மதுரையில் அருகே உள்ள ஒரு கிராமத்தில், அனைத்து மக்களும் சோகமும், அதனடுத்து இரண்டொரு நாளில் சந்தோஷத்திற்காக தயாராகவும் என இரு வேறு மனநிலையில் இருக்கும் விசித்திர ஒரு கிராமம்.

சில தலைவர்கள் இறக்கும் போது ஏற்படும் வலியை விட, அதன் பிறகு காரணமே இல்லாமல் ஏற்படும் கலவரம் மற்றும் சில இத்தியாதிகள் ஏற்படுத்தும் சமபவங்கள் ஏனோ நம் மனதில் இருந்து மறைவது கடினம்.

பலவருடங்களுக்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை செல்லும் போது யதேச்சையாக உறவினரை பார்க்க அக்கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. மதுரையை அடுத்து நகரத்தை ஒட்டி இருக்கும் சிறிய கிராமம் அது. பெரியவர்கள் பலர் இந்திராகாந்தி இறந்த சம்பவத்தையும் அதன் பிறகு நான்கு தினங்கள் பந்த் நடந்தையும், அதனையொட்டி கிராமத்தில் நடந்த சம்பங்களையும் நினைவு கூர்ந்து வருவதோடில்லாமல் தங்கள் குழந்தைகளும் சொல்லி ஒரு திருவிழா போல கொண்டாடி வருவது ஆச்சர்யம் அளிக்கிறது.

அக்கிராமத்தில் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர் ஒரு பட்டறையில் வேலைப் பார்த்து வந்தாராம். கம்யூனிச கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவராயினும் கலைஞரை தீவரமாக நேசித்தவர். மதுரையையொட்டி கலைஞர் எங்கு வந்தாலும் அவரது பேச்சைக் கேட்க ஆவலோடு செல்வாராம். ஜாதீகளில் புரையோடி போன அக்கிராமத்தில் சற்றே வித்தியாசமானவராக இருந்தவர். அதிகம் படிப்பில்லையென்றாலும் அவரது தொழில் நேர்மை, மனித நேயம் என ஊரில் அவருக்கு மிக நல்ல பேரை பெற்றுத் தந்தது. அவரது மனைவி இல்லத்தரசி.

அக்டோபர் 31ல் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்திராகாந்தி கொலை இக்கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. அச்சமயத்தில் நிறைமாத கர்பிணியாக இருந்தாராம் அவரது மனைவி. ரேடியோவில் நிகழ்வுகளை ஊரே கேட்டுக்கொண்டிருந்தது. அதை தொடர்ந்து இந்தியாவில் ‘பந்த்’ நிகழ்ந்ததும் அனைவரும் அறிந்ததே. வெளியே யாரும் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது.

’பந்த்’ இரண்டாவது நாளும் அதாவது நவம்பர் முதல் தேதியும் தொடர்ந்த போது தான் அவரது மனைவிக்கு பிரசவ வேதனை எடுக்க ஆரம்பித்தது. வேதனை அதிகமாக அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊரில் உள்ள பிரசவம் பார்க்கும் வயதான ஒரு பாட்டியை அழைத்து வந்து காண்பித்த போது அவர் மருத்துவமனைக்கு செல்வதே உச்சிதம் என கையை விரித்து விட்டார். வெளியே வண்டியோ, ஆட்டோவோ என வாகனங்கள் எதுவும் ஓட முடியாத சூழ்நிலை.

அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எப்படி அழைத்துச்செல்வது என தெரியாமல் முழிக்க, நள்ளிரவு நேரத்தில், அதுவும் ‘பந்த்’ நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றாலும் மருத்துவர்கள் இருப்பார்களா என்ற பயமும் சேர்ந்து கொள்ளத்தொடங்கியது. ஊரில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க உதவிக்கு யாரையும் கூப்பிட நேரம் இல்லாமல் தன் மனைவியை தன் சைக்கிளில் வைத்து அழைத்து செல்ல தொடங்கியிருக்கிறார்.

மழை வேறு வரத் தயாராக, மாலையில் ரேடியோவில் மதுரையில் எங்கோ நடந்த பயங்கர கலவரம் கேட்ட ஞாபகம் வேறு வந்து அவருக்கு வேதனையை இன்னும் கூட்டியிருக்கிறது. இருந்தாலும் மனம் தளராமல் சைக்கிளை மெதுவாக உருட்டிக் கொண்டு செல்லத்தொடங்கியிருக்கிறார்.

அந்நேரத்தில் அவரது உறவினர் ஒருவர் யேதச்சையாக வெளியில் தலைகாட்ட, யோசிக்காமல் அவரும் துணைக்கு வரத்தொடங்கினார். ஆங்காங்கே நடந்த கலவரம் தன் அடையாளத்தை வீதியெங்கும் விட்டு சென்றிருக்க அதை கண்டதும் பயம் இருட்டை விட வேகமாக அவருக்கு சூழத்தொடங்கியது. எப்படியோ தாக்குபிடித்து மருத்துவமனையில் சேர்த்த போது நினைத்த மாதிரியே மருத்துவர்கள் யாரும் இல்லை. ஆவேசமாகி அவரும், அவரது நண்பரும் கோபப்பட்டு கத்த ஆரம்பிக்க மருத்துவரை அழைத்து வர ஊழியர் ஒருவர் ஓடி இருக்குறார்.

இரவு கழிந்து அடுத்த நாளும்(2ஆம் தேதி) வந்து விட்டது. மூன்றாவது நாளாக ‘பந்த்’ தொடர்ந்தது. மருத்துவரும் ‘பந்த்’யை பொருட்படுத்தாது விடியற்காலை நேரத்தில் வந்திருக்கிறார். இதே நேரம் ஊரில அனைவருக்கும் விசயம் அறிந்து அனைவரும் மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

ஊரே மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்க, அவர் நிலை கொள்ளாமல் ஆப்ரேசன் தியேட்டர் வெளியே இருக்க.... கடைசியில் வெளியே வந்த மருத்துவர் “ஆண் குழந்தை பிறந்திருக்கிறது” என்ற படி கை கொடுத்து சென்றிருக்கிறார்.

உள்ளே சென்ற இவர் தன் கையில் அந்த குழந்தையை எடுத்து கண்ணீருடன் என்ன பெயர் வைக்கலாம் என தன் மனைவிடம் கேட்ட போது...

வெளியே இருந்த ஊர் மக்கள் ஒரே கோஷமாக விண்ணை பிளக்க உற்சாகத்துடன் “இவன் ஆதவன்...இவன் ஆதவன்...” கத்தினர். குழந்தையும் சிரித்தது. சிரிப்பும் அதை ஆமோதித்ததை போல “நான் ஆதவன்” என அவருக்கு உணர்த்தியது.

(இதிலுள்ள ’பந்தை’ கிராபிக்ஸிலோ அல்லது வேறு சாப்ட்வேர் மூலமாகவோ எடுத்துப் பார்க்க கூடாது என்று கடுமையாக உங்கள் காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்)

டிஸ்கி: ”அப்ப சூப்பரா இருக்கயே இப்ப ஏன் கண்றாவியா இருக்க?”ன்ற மாதிரி வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுறுத்தப்படும் என கம்பெனியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2 in 1 (இதுவும் அதே தான்)

ஆமாங்க இதுவும் தொடர் பதிவு தான். அப்படியே கொஞ்சம் விருதையும் கொடுத்துகிறேன். இந்த மாசம் கொசுவத்தி நிறைய சுத்திட்டேன்.

1)
உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

வயது-25, கல்யாணாம் ஆகல.

2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம் ?

கொஞ்ச வருசம் முன்னவரைக்கும் காத்தாடி தான் ஞாபகம் வரும். ஒரு மாசம் முன்னாடியே என்ன நூல் வாங்கலாம்? எத்தனை கட்டை நூல் வாங்கலாம்? மாஞ்சா போடுறதுக்கு என்னென்ன சேர்க்கலாம். இனிஷியல் போட்ட காத்தாடி ஆர்டர் கொடுக்குறதுன்னு ஒரே கொண்டாட்டமா இருக்கும். இரவாச்சுன்னா ராக்கெட்டை படுக்க வச்சு விடுறது கேபிள் வயர்ல சரவெடிய கட்டி தொங்கவிடுறதுன்னு நிறைய சம்பங்கள் ஞாபகம் வரும். ஆனா இப்ப இன்னொரு சம்பவமும் அடிக்கடி ஞாபகம் வரது.....

ஐஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு தீபாவளியில நானும் என் ப்ரெண்ட் சசியும் இன்னொரு நண்பனை பார்க்கப் போகும் போது நாலு பேர் சேர்ந்து பைக்ல வந்த ஒரு ஆளை மடக்கி பெரிய பெரிய அரிவாளோட எங்க கண்ணு முன்னால வெட்டின சம்பவமும் ஞாபகம் வருது :(

3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?

வேறெங்க சார்ஜா தான் :(

4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள் ?

”மச்சி தீபாவளிக்கு லீவு போட்டுட்டு எங்கயாவது போலாமா?”

“எங்கடா போகுறது? சாயங்காலம் படத்துக்கு போகலாம்”

“யாராவது பேமிலியோட ப்ரெண்ட் இங்க இருந்தா நல்லா இருக்கும்ல?” என்றபடி கடந்த மூன்று வருடமும் முடிந்த தீபாவளி இந்த வருடம் ஒரு நாள் முன்பாக பதிவர் “செந்தில்வேலன்” வீட்டில் தீபாவளி விருந்துக்காக கூப்பிட்ட போது போக முடியாத சூழ்நிலையில் அலுவலகத்தில் சிக்கிக் கொண்டது வருத்தமாக இருந்தது :(

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?

பண்டிகைக்கு மட்டும் எனக்காக நான் துணி வாங்கியது கிடையாது. அக்கா, அம்மா என யாராவது எடுத்து தருவார்கள். இந்த முறையும் எனக்காக சட்டை அக்கா எடுத்து வைத்துள்ளதாக தீபாவளியன்று போன் செய்யும் போது சொன்னார்கள் :(

6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?

மெஸ்ல அதே சப்பாத்தி, அதே சாப்பாடு ...எல்லாம் அதே அதே :(


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

போன் தான் :(.

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?

இந்த வருடம் காலையில் ஆபிஸ். மாலையில் திரையரங்கில் ஆதவன் படம் :( (என்னய்யா இது எல்லா பதில்லயும் சோக ஸ்மைலி போட வேண்டியதா இருக்கு)


9) இந்தஇனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள் ? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?

உதவி செய்ய நல்ல நாள் எல்லாம் பாக்கனுமா என்ன?


10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் லைத்தங்கள் ?


இளைய பல்லவன்: நல்ல நண்பர். கண்டிப்பா கொஞ்சம் ஸ்பெஷலா இருந்திருக்கும் இவரோட தீபாவளி. இவரது ஸ்பெஷல் ‘சக்கர வியூகம்’

கோமதி அரசு:
கண்டிப்பா இவங்க இந்த கேள்விகளுக்கு அருமையா பதில் தர முடியும். அந்த பதில்களை எங்களை போல வெளிநாட்டில் வசிக்கும் பேச்சுலர்களுக்கு படிக்க சந்தோஷமாகவும் இருக்கும்.

ஸ்ரீமதி: தலை தீபாவளி ஸ்பெஷசலா இருந்திருக்குமே :)

கிரி: தன் மகனோட கொண்டாடும் முதல் தீபாவளின்னு நினைக்கிறேன். கண்டிப்பா சுவாரஸியமா இருந்திருக்கும் இவரோட தீபாவளி.

இந்த நால்வரும் தங்களுக்கு நேரமிருப்பின் இத்தொடர்பதிவை தொடர அன்போடு கேட்டுகொள்கிறேன். என்னை அழைத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள் :)
------------------------------------------------------------------------------------------------


முதல்ல எனக்கு விருது கொடுத்த, சந்தனமுல்லைக்கு நன்றிகள். பாஸ் உண்மையிலயே நீங்க தான் கலக்குறீங்க. பப்பு பதிவு எல்லாம் நல்லா ரசிக்க முடியுது. keep Rocking பாஸ் :)

இதை வேற யாருக்கு கொடுக்கலாம்னு யோசிச்சா தொடருக்கு கூப்பிட்டவங்களுக்கே கொடுத்துடுலாம்னு தோணுச்சு.

இளைய பல்லவன்
கோமதி அரசு
ஸ்ரீமதி
கிரி

இந்த நால்வரோட இந்த விருதை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் :)
ஆதவன் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009

நேரம். காலை 7.30

மார்கழி குளிர் காலை வெயிலைப் பற்றிய கவலையை அளிக்காததால் கடற்கரையில் காலை நனைத்தபடி, அதிகப்படியான டென்சன் எதுவும் இல்லாமல் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் ஆதவன். பைனாகுலரின் உதவியோடு காந்தி சிலை அருகே நோட்டம் விட்டான்.

"டேய் மகனே இப்ப கொலை பண்ண போறது நாம இது நாள் வரை பண்ணின மாதிரி இல்ல, இவர் விசாரனை குழுத் தலைவர் மட்டுமில்ல, இவர் ரிட்டரையர்ட் ஜட்ஜ். அதுவும் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ். பாதுகாப்பு ரொம்ப பலமா இருக்கும்” ராவுத்தர் ஐந்தாவது முறையாக படப்படப்பாக இதையே கூறினார்.

“இதையே எத்தனை முறை சொல்லுவ? நான் எப்படி அவர் கதையை முடிக்க போறேன்னு பார்க்க தானே போற. இந்த பெரிய ஆர்டரை முடிச்சதும் எப்படியும் அடுத்த ஆர்டர் வெளிநாட்டுல கிடைக்கும். அப்புறம் நாம எங்கேயோ போகப் போறோம்” ஆதவன் கண்களில் ஒளி மிளிர சிரித்தான்.

நேரம் 8.10

“என்னப்பா இன்னமும் காணோம்?. அவர் தனியாக பீச்சுக்கு வராரா? இல்ல கூட வேற யாராவது வராங்களா?” ஆதவன்

” எப்ப சென்னைக்கு வந்தாலும் ஞாயிற்றுகிழமை காலையில பீச்சுக்கு தனியா தான் வருவாரு. நம்ம கணக்குப்படி அவர் இந்நேரம் வந்திருக்கனும் ஆனா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக அவரோட சொந்தகாரங்களெல்லாம் வந்திருக்காங்க. ஒரு பெரிய கும்பலே வந்திருக்காங்க. அதுனால அந்த கும்பலோட இங்க வருவாருன்னு நினைக்கிறேன். அதான் லேட்டாகுது. ” ராவுத்தர்.

“என்னது பெரிய கும்பல் வருதா? ” தன் புருவங்களை உயர்த்தி.. ஆதவன்

”ஆமா. டேய் மகனே எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை இன்னைக்கு காரியத்தை முடிச்சிடுடனும். இதைவிட்டா ஒரு நல்ல சந்தர்பம் கிடைக்காது. நாளைக்கு நாம மலேசியா வேற போகனும். எப்படியாவது காரியத்தை முடிச்சுடு மகனே” தன்னுடைய அசட்டு தனத்துடனும் வெறியுடனும் கூறிய ராவுத்தரை ஒரு வெற்றுப் பார்வையுடன் பார்த்தான் ஆதவன்.

“நான் எவ்வளவு காசு கொடுத்தாலும் குழந்தைகளையும், பெண்களையும் கொல்ல மாட்டேன்னு உனக்கு தெரியும்ல. உனக்கு தேவை அந்த ஜட்ஜோட உயிர் அவ்வளவு தானே? அந்த வேலை இன்னைக்கு முடியும்” ஆத்திரத்துடன் ஆதவன்.

“ஏண்டா மகனே கோவிச்சுகிற? வேலைய எப்படியாவது முடிஞ்சு கொடு. அவ்வளவு தான்.” என்றான் காலைத் தழுவிய அலைகளை ரசித்தபடி ராவுத்தர்.

நேரம் 8.25

”அப்பா, என்னாச்சு இன்னும் ஆள் வரலையே?” என்றபடி கடிகாரத்தைப் பார்த்தான்.

“கொஞ்சம் பொறுடா மகனே. ஜட்ஜோட வீட்டு வேலைக்காரன் பேனர்ஜிய நம்ம பக்கம் கொஞ்சம் கஷ்டப்பட்டு வளைச்சிருக்கேன். ஜட்ஜ் வீட்டுலருந்து கிளம்பியதும் அந்த பயபுள்ள நமக்கு மெசேஜ் விடுறதா சொல்லியிருக்கான்”

“என்னது பேனர்ஜியா? அவன் என்ன பெங்காலியா?”

“இல்லப்பா அவன் பேரு குப்புசாமி தான். ஆனா அவன் ரொம்ப அனீனீனீசியா ஃபீல் பண்ணியதால அவன் பேர பேனர்ஜீன்னு மாத்திகிட்டானாம்”

“இப்ப இவன் பேரு மாத்தின கதை ரொம்ப முக்கியமா? ஆளு நம்பிக்கையானவன் தானே?” ஆதவன்

“அதெல்லாம் நம்பிக்கையானவன் தான். ஏன்னா அவன் மாப்பிள்ளைய கடத்தி வைச்சிருக்கோம். அவன் நம்மளைப் பத்தி ஏதாவது போட்டு கொடுத்தான்னா அவன் மாப்பிள்ளையோட உசுர எடுத்திடுவோம்னு மிரட்டி வச்சிருக்கேன்” என்றான் ராவுத்தர் கடலை நோக்கி சிரித்தபடி.

சிறிது நேரம் கழித்து....

ராவுத்தரின் போன் சிணுங்கியது. ராவுத்தர் எடுத்து நோக்கியவுடன் கத்த ஆரம்பித்தார். “டேய் ஆதவா ஜட்ஜ் வீட்டுல இருந்து கிளம்பிட்டாராம்”

“எங்க காட்டு” என்றபடி மெசேஜை வாங்கி முழுவதுமாய் படித்தான் ஆதவன்.

“ஜட்ஜ் ஐயா குடும்பத்தோட பீச்சுக்கு கிளம்பிட்டாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ் "

Sender
Benerji
+919841492053

Message center:
+919825001002

Sent:
26-Dec-2004
8:38:11


ஒரு வரலாறே தன் வரலாறு கூறுதே... (அடடே ஆச்சர்யகுறி)

ஒரு வரலாறே
தன்
வரலாறு கூறுதே! (ஹி ஹி அதே தான்..... அடடே ஆச்சர்யகுறி)

எதை வேணாலும் தட்டலாம் ஆனா வருசத்துக்கு நாலைஞ்சு பதிவு மட்டும் போடும் அமீரகத்துச் சிங்கம் கோபிநாத் தொடர்பதிவுக்கு கூப்பிட்டதை மட்டும் தட்டவே கூடாது. அப்புறம் அந்த நாலைஞ்சு பதிவும் வராம போக வாய்ப்புள்ளது. பயபுள்ள என்னைய கூப்பிடுறேன்னு என்கிட்ட போன்ல கேட்டுட்டு ஒரு மாசம் கழிச்சு தான் பதிவே போட்டுது.

ரைட்டு கொசுவத்திய சுத்திடுவோம்.... சுமார் ஒரு வருசத்துக்கு முன்னாடி.. டடடடடடடடொய்ங்..... (பேக்ரவுண்ட் மீயூசிக்பா)

ss

துபாய்ல மூச்சு விட கூட நேரம் இல்லாம கட்டட வேலைகள் எல்லாம் நடந்திட்டு இருந்தப்ப ’படார்’னு இருக்குற எல்லா ப்ராஜெக்டையும் நிறுத்த ஆரம்பிச்சாங்க. பெரிய பெரிய கம்பெனிகளோட எல்லா ப்ராஜெக்ட்டும் நிக்க ஆரம்பிச்சது. வேலை இல்லைன்னு தொறத்த ஆரம்பிச்சாங்க. அட கட்டின பில்டங்க கூட இடிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன். (கொஞ்சம் ஓவரா தான் போறமோ????)

ஆபிஸ்ல வேலை எதுவும் இல்லாம, குமுதம், தினமலர்,தினகரன் இதை தவிர எந்த தமிழ் இணையதளமும் தெரியாம நான் பாட்டுக்கு மொட்டு வளையத்தைப் கொட்டாவி விட்டுட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

Photobucket
(ஆதவன்ற பேரு இருக்குறதுனால நான் ரொம்ப டெடரா இருப்பேன்னு எதிர்பார்த்தீங்கன்னா அது உங்க தப்பு. )

போரடிக்கும் போது நெட்ல நோண்டுரதும் அதிகமா போரடிக்கும் போது பக்கத்து சீட்ல இருக்குற சேட்டனை ஏதாவது கலாய்ச்சுட்டு இருப்பேன். பயபுள்ள கதறதை பாக்குறதுக்கு சந்தோசமா இருக்கும். இப்படியே பொழுது போச்சு...


ss1


சென்னையில இருந்து ரெகுலரா ஃபார்வேட் மெயில் அனுப்புற நண்பர் ஒருத்தர் ஆகஸ்ட் மாசம் தமிழ்ல பிடிஎப் கோப்பு அனுப்பினார்.

ss1

ரஜினியோட ”குசேலன்” படத்தை புறக்கணியுங்கள் அப்படின்னு “வெட்டி பய புள்ளைக சங்கம்” எழுதிய பதிவு அது.

அதில் இருந்த லின்ங்கை புடிச்சு அந்த சைட்டைஓபன் செய்த உடனே “ஒத்துகிறோம் நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கன்னு”னு தலைப்புல இருந்தது. அடப்பாவி மக்கா நம்மளைப் பத்தி இவ்ளோ டீடெய்லா தெரிஞ்சு வச்சிருக்கானேன்னு முழுசா படிக்க படிக்க மூச்சு முட்டுச்சு. அதில் இருந்த தமிழ் மண கருவிப்பட்டைய புடிச்சு தமிழ் மணம் வந்து பார்த்தப்ப மயக்கமே வந்திருச்சு. கொக்காமக்கா எத்தனை பேரு......அத்தனை பேருக்கு வேலை வெட்டி இல்லையான்னு ஒரே பிரமிப்பு.

உடனே கை பரபரத்தது. கொஞ்சம் கூட யோசிக்காம உடனே ஆரம்பிச்சுட்டேன்.

ss1
ஆரம்பிச்சுட்டேனே தவிர என்ன எழுதுறதுன்னு தெரியல. ஒன்னுரெண்டு போஸ்ட் எல்லாம் போட்டேன். இன்னும் சொல்லப்போனா பின்னூட்டம் எப்படி போடுறதுன்னு கூட தெரியல. என்ன பண்றதுன்னு தெரியல. பல பேருக்கு மெயில் அனுப்பி ”என்னோட சைட்டு மச்சி டைம் கிடைச்சா பாரு”ன்னேன். எவனும் கண்டுக்கல. கையில போர்டு வச்சு உள்ள வாங்க சார்னு கூப்பிடாத குறை தான்.


அப்புறம் தான் நிறைய பதிவுகள் படிக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் நண்பர்கள் வட்டம் கிடைச்சுது. சூது வாது தெரியாம இருந்தேன். அப்புறம் வலையுலக அரசியல் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சுது. ஜாலியாவும் இருந்தது. பரிசல்,லக்கி இவங்க பதிவெல்லாம் படிச்சப்ப ஆச்சர்யமாவும், நானெல்லாம் எப்படி இது மாதிரி எழுத போறேன்னு பயமாவும் தான் இருந்தது.


அப்புறம் குசும்பனின் பதிவை தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அந்த காலகட்டத்தில் நல்ல டைம் பாஸ் குசும்பனின் பதிவுகள் தான். சரி இவரை மாதிரி கொஞ்சம் காமெடியா எழுதலாம்னு நினைச்சா அது தான் கஷ்டமான விசயம்னு தெரிஞ்சுது.

குசும்பன் உள்பட துபாய்ல அதிக பதிவர்கள் இருந்தும் யாரோடவும் போய் அறிமுகப்படுத்திகிட்டது கிடையாது. முத்துலெட்சுமி அக்கா மூலமாக சென்ஷி, கோபியின் அறிமுகம் கிடைச்சுது. பதிவு எழுதுறதும் அப்படியே தொடர்ந்தது. அதாவது துபாய்ல இன்னும் நிலைமை சரியாகல.......


ss1


அப்புறம் அதிகமான பதிவர்கள் நண்பர்களாக கிடைச்சாங்க. ஆரம்பத்துல ஈகலப்பை உபயோகப்படுத்தினேன். இப்ப NHM உபயோகிக்கிறேன். இது எளிமையா தான் இருக்கு. இதுல ஒரு விசயம் பாருங்க. இந்த பதிவு என்னோட நூறாவது பதிவு

ss1


இதுக்கு மேலயும் நான் எப்படி எழுத வந்தேன்னு மொக்கை போட்டு நீங்க படிச்சீங்கன்னா தங்கம் விலை கண்டிப்பா குறைய போறது கிடையாது மக்கா. அதுனால இங்கேயே முடிச்சுகிறேன். ரிட்டன் டூ கொசுவத்தி... டடடடடடடடொய்ங்.....

ss


நண்பர் இளைய பல்லவன் (இப்படியாவது பதிவெழுதுங்க பல்லவன்), மாப்பி ஏனோ ஓனோ, பப்பு, இயற்கை மகள் ஆகியோர் நேரம் கிடைக்கும் போது எப்படி வேலை வெட்டி இல்லாம ஆனீங்கன்னு அதாவது ப்ளாக் எப்படி ஆரம்பித்தீர்கள் என்று இப்பதிவை தொடரலாம் :)

ஆமா அதுக்கு என்ன இப்ப?-பஞ்சாமிர்தம்

டென்சனால நேரத்தில் யாராவது கொடைச்சல் குடுத்தா என்ன பண்ண முடியும்? கோபப்பட்டு கத்தலாம், திட்டலாம், ஏன் காதை கூட கடிச்சு வைக்கலாம். ஆனா என் ப்ரெண்டு கொஞ்சம் வித்தியாசமா இருக்கான். நானும் இப்பெல்லாம் இத தான் ஃபாலோ செய்யிறேன்.

ரமலான் விடுமுறையில் நண்பர்களோடு ஷாப்பிங் சென்றிருந்தேன்.
ஷாப்பிங் முடித்துவிட்டு பில் போடும் இடத்திற்கு வந்த போது அவனது பர்ஸை காணவில்லை. ரொம்ப டென்ஷனாகிவிட்டான். மற்ற நண்பர்கள் அதே கடையில் தேட ஆரம்பித்தோம். கிடைக்கவில்லை.

அவன் போன் அடித்தது.

இவன் எரிச்சலுடன் “ஹலோ”

“ஹலோ சார். நாங்க சென்னையில இருந்து பேசுறோம். தமிழ் மேட்ரிமோனியில உங்க ப்ரொபைல் பார்த்தோம் சார். எங்க பொண்ணுக்கும் வரன் பார்த்திட்டு இருக்கோம். நாங்களும் ********** ஆளுங்க தான்” பெண் குரல் மறுமுனையில்.

“சரிங்க. என்னோட அட்ரஸ் தரேன் வீட்ல பாருங்க” எரிச்சல் மாறாமல் இவன்.

“நீங்க எங்க வேலை பாக்குறீங்க?”

“சார்ஜால வேலை பாக்குறேன். நீங்க என் அப்பாகிட்ட பேசுங்க”

“அங்கேயே தான் வேலையா? சென்னையில திரும்ப வர மாட்டீங்களா? ”

“இப்போதைக்கு இங்கே தான் வேலை. அங்க வர்ர மாதிரி ஐடியா இல்ல”

“அச்சச்சோ அப்படியா? எங்க பொண்ணை வெளியூருக்கு எல்லாம் கொடுக்குறதா இல்லைங்க. நீங்க சென்னையில செட்டில் ஆகிறா இருந்தா பரவாயில்ல”

“வேணும்னா நான் வேலைய ரிசைன் பண்ணிட்டு அங்க வர்ரேன். வீட்டோட மாப்பிள்ளையா வச்சு காலம்புல்லா சோறு போடுவீங்களா?”ன்னு படார்னு கேட்டான்.

மறுமுனையில் பேச்சே இல்ல. அப்புறம் கட் ஆகிடுச்சு.

“ஏண்டா இப்படி பேசுன? உனக்கே தப்பா தெரியல?” நான்

“ஆமா தப்பு தான் அதுக்கென்ன இப்ப?”

“இல்லடா பேசுனது பெரியவங்களாச்சே, மரியாதையா இருக்காதேன்னு...”

“ஆமா மரியாதை இல்ல தான். அதெக்கென்ன இப்ப?”

அவ்வ்வ்வ்வ்வ்வ் அவனைப் பற்றி தெரியுமாததால் அத்துடன் கப்சிப்.

மறுபடியும் பர்ஸ தேட ஆரம்பிச்சோம்.
----------------------------------------------------------------------------------------------
அதே நண்பன். சில நாட்களுக்கு முன் தொலைபேசியில்

“மச்சி நேத்து ஒரு லின்ங் அனுப்பினேன்னே? உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்(உ.தமிழன் அண்ணன் பதிவு உ.போ.ஓ விமர்சனங்கள்) படிச்சயா?”

“படிச்சேண்டா. எல்லாம் படிக்கல. ஒரு சிலது படிச்சேன். ஏன் அதுக்கென்ன?”

“கமல் எல்லாம் வேணும்னே செஞ்சிருக்க மாதிரி இருக்கேடா? அந்த பச்சை ஒயர் விசயம் கூட தப்பு மாதிரி தோணுதேடா”

“ஆமா தப்பு மாதிரி தான் தோணுது. அதுக்கென்ன இப்ப?”

“இல்லடா கமலே இந்த மாதிரி படம் எடுத்தா நல்லாயிருக்காதுல்ல..”

“ஆமா நல்லாயிருக்காது தான் அதுக்கென்ன இப்ப

“நீயா நானா கோபி பயங்கர ஜால்ரா போடுற மாதிரி இருக்குல்ல?”

“ஆமா இருக்கு. அதுக்கென்ன இப்ப?” அவனுக்கு ஆபிஸில் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் லேசாக புரிய ஆரம்பித்தது. சரி கொஞ்சம் குஜாலா ஏதாவது பேசி அவன் மூட மாத்திலாம் என்ற யோசனையுடன்..

“புவனேஸ்வரி மேட்டர் படிச்சயா? ரொம்ப கொடுமையா இருக்குல்ல?”

“ஆமா கொடுமையா தான் இருக்கு. அதுக்கென்ன இப்ப?”

”டொக்” போனை கட் செய்தேன். யப்பா சாமி ஆளை விடு!

(அதுக்கென்ன இப்ப? என பின்னூட்டமிடுபவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்)
-------------------------------------------------------------------------------------------------
புவனேஸ்வரி விசயத்தில் உ.த அண்ணன் தயவாலும் சில பல சைட்களின் தயவாலும் படித்து பொது அறிவை வளர்ந்துக் கொண்டேன். இதில் அடக்க முடியாமல் சிரித்தது விஜயகுமார், அருண் விஜயகுமார் ஆகியோர் பேசியது. ரெண்டு பேருக்கும் இருக்கும் கஷ்டமான சூழ்நிலைய ஒத்துக்கவேண்டியது தான். அதுக்காக சினிமாவுக்கு எழுதிகொடுத்த டயலாக் எல்லாம் இங்க வந்து ஒப்பிச்சா சிரிப்பு வராதா?

இதுல நம்ம சரத்குமார் பேசும் போது “கேப்”ல கடா வெட்டிட்டார். ”ஏண்டா ராதிகா பேரை சேர்க்கலைன்னு?” கேட்குற மாதிரி இருந்தது. செம காமெடி. நொம்ப சிரிச்சேன் பாஸ்.

போயும் போயும் தினமலருக்கு எல்லாம் அவ்வளவு பெரிய மீட்டிங் போட்டு கண்டனம் பண்ணினதே வேஸ்ட். இதுல ஓவரா திட்டி இன்னும் கொஞ்சம் அதுக்கு பெயரை வாங்கி கொடுத்தது சுத்த வேஸ்ட்.
-------------------------------------------------------------------------------------------------
யவண ராணி படிக்க ஆரம்பித்ததை குறிப்பிட்டுருந்தேன். ஒரு மாதம் ஆகியும் முடிக்கவில்லை. ஆரம்பத்தில் ஒரு வித உற்சாகத்திற்கும், சுவாரஸியத்திற்கும் துணையாக இருந்த வர்ணனைகள், முதல் பகுதியின் பாதியை கடக்கும் முன் அதே வர்ணனைகள் சோர்வையே தருகின்றன.

ஒவ்வொரு அத்தியாத்தில் வரும் வர்ணனைகள் தேவையற்றதாகவே தோன்றுகிறது. நாவலில் சோழர்கள் அதிகம் புழங்கும் “தமிழ்நாடு” என்ற வார்த்தையும் சற்றே எரிச்சலை கிளப்புகிறது. மூவேந்தர்களின் அக்காலத்தில் தமிழ்நாடு என்று யாரும் குறிப்பிட்டதாக படித்த ஞாபகம் இல்லை.

இருந்த போதிலும் இரண்டு பாகத்தையும் முடிக்காமல் விடமாட்டேன் :)

கணினியில் ”நிலமெல்லாம் இரத்தம்” படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட தமிழ் சினிமா பார்த்த ஒரு அனுபவமாக இருந்தது. நிறைய மசாலாக்களை தடவி சுவையாகவும், சுவாரசியமாவும் கொடுத்திருக்கிறார் பா.ராகவன். குமுதம் ரிப்போர்டரில் தொடராக வெளிவந்திருக்கிறது. ஆதலால் அதற்கேற்றாற் போல் எழுதியிருக்கிறார் போல. இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனையைப் பற்றி சில பல சந்தேகங்கள் தீர்ந்தன. சில வரலாற்று நிகழ்வுகளும் அறியமுடிந்தது.
------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் டேமேஜர் ஸ்பெஷல்ஸ்...

பாத்ரூம் போனா லேட்டாகுதுன்னு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....ஆனா நாம வெளிக்கு போறோம்னு செட்டப் செய்துட்டு வெளியவே போவோம்ல (சவுண்ட் செட்டப் கூட இருக்கு பாருங்க)------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த சந்தோஷத்த கொண்டாட எல்லோரும் மறக்காம ஓட்டு போட்டுருங்க :)

வெட்டியா இருந்தா உள்ளாற வாங்க

1.A - available/single? - முதல்ல எதுக்குன்னு சொல்லுங்கய்யா. அப்பாலிக்கா கிடைப்பேன்னா மாட்டேன்னானு சொல்றேன்.

2. B-.Best friend - மொக்க படம் அது!

3.C- Cake or Pie - இதுல ஏன் கமர்கட்டு சேர்க்கல? (கோக்கு மாக்கா கேள்வி கேட்டா இப்படி தான்)

4.D - Drink of Choice - மோர். தெளிவடைய உதவும் பானம்.

5.E- Essential item you Use every day - உள்ளாடை

6.F-favorite color - உள்ளாடை எந்த கலர்ல இருந்தா என்னய்யா.... (ஸாரிப்பா போன கேள்வியோட தொடர்பிருக்குறதா நினைச்சுட்டேன்)

7.G-gummy bears or worms - எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. இந்த மாதிரி கேள்வி எல்லாம் ஏன் கேட்குறீங்க? (கேள்வி புரியலைன்னா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு. அவ்வ்வ்வ்வ்)

8.Home Town - டவுனெல்லாம் கிடையாதுங்க. மதுரை பக்கத்துல ஒரு கிராமம்.

9.I-Indulgence - பொழப்பே அப்படி தானே ஓடிகிட்டுயிருக்கு!

10.J- January/February - ஆமா அதுக்கென்ன இப்போ?

11.K-Kids and their Names - நானே இன்னும் குழந்தை தானப்பா.....

12.L-Life is incomplete with out- சாப்பாடு

13.Marriage Date - தெரிஞ்சா பதிவே போடுறேன்.

14.N - Number of siblings - இந்திய நாடு என் நாடு. இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதரிகள் (யாரங்கே? கல்யாணத்துக்கு ஃபாரீன் பொண்ணா பாருங்கப்பா)

15.O-Orange or Apples - அட போப்பா. தெரிஞ்சு என்ன பண்ண போற?

16.P- Phobias/fears - ”எல்லாம் சிவமயம் என்று சொல்லுவதுண்டு.... எனக்கு எல்லாம் பயமயம்.(எவண்டா அது கொட்டாவி விடுறது? பிச்சு பிடுவேன் பிச்சு) சென்ஷி கவிதை பயமெனக்கு, அய்யனார் புனைவு பயமெனக்கு, சிறுகதை பயம், கும்மி பயம், குசும்பனின் குசும்பு பயம்,ஸ்ரீமதியின் கவிதை கூட பயமெனுக்கு........ “

17.Q-Quote for today - ”கண்டவன்கிட்ட எல்லாம் தத்துவம் கேட்காதீங்க”

18.R-Reason to Smile - டெய்லி ரெண்டு வேளை பல் தேய்கிறேனே!

19.S-Season - தீபாவளிக்கு வரும் “காத்தாடி சீஸன்”

20.T-Tag4 People - ஒரே ஒரு நபர் மட்டுமே அது....... “ஆசிப் அண்ணாச்சி”

21.U-Unknown fact about me - நான் ரொம்ப அழ்ழ்கா இருப்பது.

22.V-Vegetable you won't Like - காய்கறிய எல்லாம் என்னால வெறுக்கவே முடியாது. (N-க்கு மட்டும் நான் வெஜ்ல பிடிக்காததுன்னு ஏன் கேட்கல?)

23.W-worst Habit - தொடர் பதிவுக்கு கூப்பிட்டா உடனே ஒத்துகிறது.

24.X- Xrays you had - X-man படம் தான் மூனு பார்ட்டும் இருக்கு.

25.Y-Your favorite Food - மிளகாய் கிள்ளி சாம்பார்

26.Z-Zodiac sign - ஜாதகமே தரேன். ஒரு நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு கொடுங்க. புண்ணியமா போகும்.


அன்புக்குரியவர்கள் - பின்னூட்டமும் ஓட்டும் போடுபவர்கள்.

ஆசைக்குரியவர் - ஃபாலோவர்களாக சேருபவர்கள்

இலவசமாய் கிடைப்பது - ஓட்டும், பின்னூட்டமும்

ஈதலில் சிறந்தது - எனது site லின்ங்க உங்க siteல ஒரு சைடு போடுறது.

உலகத்தில் பயப்படுவது - தமிழ்மண நெகடிவ் ஓட்டு

ஊமை கண்ட கனவு - நான் தமிழ்மண நட்சத்திரமாவது

எப்போதும் உடன் இருப்பது - தமிழிஷில் ஒரு ஓட்டு (அட என் ஓட்டு தான்பா)

ஏன் இந்த பதிவு - ஆபிஸ்ல வேலை இல்ல

ஐஸ்வர்யத்தில் சிறந்தது - போயி அபிஷேக் பச்சன்கிட்ட கேளுங்கப்பா (ஸாரி அவங்கோன்னு நினைச்சுட்டேன்)

ஒரு ரகசியம் - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

ஓசையில் பிடித்தது - கீ போர்டு சத்தம்

ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது - எங்க டேமேஜர் (அவ்வ்வ்வ்வ்வ்)

என்னை இத்தொடருக்கு அழைத்த மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள் பல.

பயபுள்ளைக்கு விளையாட கத்துக்கொடுங்க.....

உங்கள் குழந்தை சாப்பாட்டை மறந்து வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறானா?

ஏதாவது வெளிய போய் விளையாடு என்றால் உடனே சரி என்று கணினியை ஆன் செய்கிறானா?

தங்கமணியோட வீட்ல பகல்ல கொஞ்ச நேரம் தனியாக இருக்கலாம் என்று நினைச்சா பயபுள்ள வீட்டை விட்டு நகலமாட்டேங்கிறானா?

எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுதா? அப்படி பேசும் போது வாய் மேலயே போடனும் போல இருக்கா?

பையனை கடைதண்ணிக்கு போகச்சொன்னால் மூக்கால அழுகுறானா?

உங்கள் குழந்தைக்கு வயிற்றுபோக்கா? சீதபேதியா? ....... (ஸாரிப்பா ஒரு ப்லோல வந்துடுச்சு....)

ஆக மொத்தத்துல பையன் வெளியார ஓடி ஆடி விளையாடாம இருக்கானா? அவனுக்கு என்ன விளையாட சொல்லி தர்ரதுன்னு குழப்பமா இருக்கா? கவலையை விடுங்க. வாங்கி சாப்பிடுங்க “ஆதவன் அலுப்பு மருந்து”.... (ஸாரிப்பா இதுவும் ஒரு ப்லோல வந்துடுச்சு.... )

சென்னை போன்ற மாநகரங்களிலே இது போன்ற விளையாட்டுக்கு பற்றாக்குறை இருக்க தான் செய்யும். நான் சின்ன வயசுல விளையாடின சில பல வீர விளையாட்டுகளை உங்களுக்காக அறிமுகப்படுத்துறேன். கத்து கொடுங்க. அப்ப தான் என்னைய மாதிரி வீர தீர சாகசங்கள்ல ஈடு பட முடியும்.

குழிப்பந்து:- இந்த விளையாட்டுக்கு ஐஞ்சாறு பசங்க இருந்தாலும் போதும். முதல்ல எத்தனை பசங்க இருக்காங்களோ அத்தனை குழி ஒரு 100mm dia ல 30mm ஆழத்துல தோண்டிக்கனும். அங்கிருந்து 2 மீட்டர் தூரத்துல ஒரு கோடு ஒன்னு போட்டுகனும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குழி வச்சுகனும். ஒரு பையன் வந்து அந்த கோட்டுல நின்னு பந்தை (ப்ளாஸ்டிக் பந்தோ கிரிக்கெட் கட்டை பந்தோ உங்க பாசத்தை பொருத்தது) குழிக்கு நேரா போடனும்.

யார் குழியில விழுதோ அவங்க அந்த பந்தை எடுத்து மத்த பசங்க யாராவது மேல அடிக்கனும். மத்த பசங்க ஓடனும். பந்து யார் மேல படுதோ அவங்க அவுட். அவங்களுக்கு “ஒரு புள்ளை”. பந்து யார்மேலயும் படலைன்னா குழிக்கு சொந்தகாரன் அவுட். அவனுக்கு ”ஒரு புள்ளை”.

பத்து புள்ளை பெத்துகிட்டா (ஸாரிப்பா இதுவும் ஒரு ப்லோல வந்திடுச்சு) பத்து புள்ளை கிடைச்சுதுனா அவங்க விளையாட்ட விட்டு போயிடனும்.

இதன் பலன்: பயபுள்ள வீட்டை விட்டு போறதே பெரிய பலன் தானே. அதுவுமில்லாம “புள்ளை” இருந்ததுனா எம்புட்டு கஷ்டம்னு பக்கிக்கு புரிய ஒரு வாய்ப்பா இருக்கும்.

பங்குத்து:- இது ஒரு பயங்கர விளையாட்டு. பையனுங்களால ரொம்ப டார்ச்சர் அனுபவிச்சவங்க இந்த விளையாட்டை கத்துக் கொடுக்கலாம். ஆனா இது விளையாட ஒரு 8 வயசுக்கு மேல இருப்பது உச்சிதம்.

இதுக்கு ரெண்டு பசங்க போதும். இந்த விளையாட்டுக்கு முடிவே கிடையாது. ரெண்டு பசங்க சேர்ந்துகிட்டு “பங்குத்து ஸ்டார்ட்”னு ஆரம்பிக்கனும். அடுத்த தடவை ரெண்டு பேருக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் யாராவது பார்க்கும் போது நடுமுதுகுல “பங்ங்ங்ங்ங்ங்ங்”ன்னு ஒரு குத்து குத்தனும். கூடவே ”பங்குத்து டவுன் இதோட நாளைக்கு” அப்படின்னு ஒரு காலம் பிக்ஸ் செய்யனும். அது 1 மணி நேரம், 2மணி நேரம், ஒரு மாசம் எப்படி வேணா உங்க இஷ்டத்துக்கு வச்சுகலாம். திருப்பி அந்த நேரத்துல பார்க்கும் போது குத்தலாம்.

குத்து வாங்காம இருக்க ஒரு கைய மடக்கி முதுகுல வச்சுகிட்டா தப்பிச்சுக்கலாம்.

இதன் பலன்: எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டு ஏமாற்றம் அளிக்கும். சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தூர தேச பயணங்களுக்கு வாய்ப்பு உருவாகும். வீண் செலவுகள் ஏற்படும்.
பெண்களுக்கு: பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண காரியங்கள் கூடி வரும். முக்கிய விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். (ஸாரிப்பா இதுவும் ஒரு ப்லோல வந்துடுச்சு.... )

அட்டாக்க்க்க்க்க்:- கிட்டதட்ட யோகநிலைக்கு சமமானது இந்த விளையாட்டு. இதுக்கும் ரெண்டு பேரு போதும். இதுவும் பங்குத்துவுக்கும் அண்ணன் தம்பி உறவு. ஆனா இதுக்கு அந்தளவுக்கு பயப்படவேணாம்.

இதுவும் தொடங்கும் போது “அட்டாக் ஸடார்ட்” அப்படின்னு தான் தொடங்கனும். அப்புறம் அடுத்த தடவைப் பார்க்கும் போது, மறைஞ்சிருக்கனும் அந்த பையன் வரும்போது தீடீர்னு முன்னாடி வந்து ரெண்டு விரலை துப்பாக்கி மாதிரி வச்சுகிட்டு “அட்டாக்க்க்க்க்”ன்னு கத்தனும். அடுத்தவன் அப்படியே நிலையாகி நிற்கனும். நீங்க “அட்டாக் டவுண்”ன்னு சொல்லுற வரைக்கும் மற்றவன் அசைய கூடாது. அப்படி அசைந்தா கையில அதே ரெண்டு விரலால சுளீர்னு “மூனு” தடவை அடிக்கலாம்.

திருப்பி ”இதோட நாளைக்கு, நாளானைக்கு, ஒரு மாசம் கழிச்சு” அப்படின்னு காலம் பிக்ஸ் பண்ணிக்கங்க.

இதன் பலன்: இது விளையாட வயது வித்தியாசம் வேண்டாம். முக்கியமா புருசன் பொண்டாட்டிக்குள்ளவும், ஆபிஸ்ல டேமஜர்கிட்டவும் இந்த விளையாட்டை விளையாடலாம். ரொம்ப உபயோகமா இருக்கும்.

இதுமாதிரி ஏழுகல், பேய் விளையாட்டு, வானத்துக்கு பழம் என்னைய தொட்டா பாவம், ஐஸ் பாய்ன்னு நிறைய விளையாட்டு இருக்கு. அப்பப்ப அவுத்து விடுறேன்......

செண்டிமெண்ட் டிஸ்கி: இந்த பதிவு பத்து வருசத்துக்கு முன்னால, என் கையில மூனு அடி அடிச்சு ”அட்டாக் டவுண், இதோட பத்து வருசம் கழிச்சு”ன்னு சொன்ன முன்னால் நண்பன் மோகனின் நினைவாக எழுதப்பட்டது.

இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனை

”ஆலமரத்தை மூனு தடவை சுத்திட்டு, கீழே கிடக்குற மண்ணள்ளி வாயில போட்டுக்கோ”ன்னு அக்கா சொன்னப்ப “ம். சரி அப்ப சரியாகிடுமா”ன்னு அப்பாவியாக கேட்ட என்னைய அக்கா ரொம்ப பரிதாபமா பார்த்தார்கள்.

இரண்டு நிமிடங்கள் கழித்தே என்னச் சொன்னேன் என்பதை சுதாரிக்க முடிந்தது. கவலை மனிதனை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது. என்றைக்காவது அம்மா விரதம் இருந்தால் எவ்வளவு அறிவுரைகள் என்னால் வழங்கப்படும்?. ஆனால் இப்போது மண்ணள்ளி தின்னச்சொன்னாலும் சரி என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறேனே?

“டேய் தம்பி. என்னடா ஆச்சு? எதச்சொன்னாலும் கேட்குற? இவ்வளவு கவலை படாதடா? அதுவே பிரச்சனைய பெருசாக்கிடும்.”

“உனக்கென்னக்கா தெரியும். காலையில எழுந்திருச்சா இது தான் ஞாபகம் வருது. குளிக்கும் போது, அப்புறம் கண்ணாடிய பாக்கும் போது, சாப்பிடும் போது, ஆபிஸ்ல வேலையில இருக்கும் போது, வேலையே இல்லாம வெட்டியா இருக்கும் போது, சேட்டனை கலாய்க்கும் போது, மழை பெய்யும் போது, வெயில் அடிக்கும் போது, ஏன் ஏதாவது பொண்ணு என்னைய கண்டுக்காம போகும் போது.....” வேகத்தில் உண்மைத்தமிழன் பதிவு போல வார்த்தைகள் விழுந்ததை கேட்டு அக்கா கலக்கம் அடைந்தார்.

”அதெல்லாம் சரி. எதுக்கு இம்புட்டு கவலை படுற? முடி தானே! அது பாட்டுக்கு போகட்டும். நீ உன் வேலைய பாரு. அக்கா ஏதாவது வழி இருக்கான்னு அம்மாச்சிகிட்ட கேட்டு சொல்றேன்” என்றபடி போனை எடுத்தார்.

ச்சே இது வொர்க் அவுட் ஆகாது போலயே. ”தம்பிக்கு முடி கொட்டுது. கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிரலாம்”னு அம்மாகிட்ட சொல்லுவாங்கன்னு பார்த்தா ஒன்னும் வேலைக்காவாது போல.

”டேய் கறிவேப்பிலை பவுடர் செஞ்சு தர சொன்னாங்க. தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவயாம். அப்படியே செம்பருத்தி இலைய அரைஞ்சு எண்ணெயில காச்சி தரவும் சொன்னாங்கடா. ஒன்னும் கவலை படாத. அக்கா இப்ப ரெண்டு மாசத்துக்கு அரைச்சு தரேன். அப்புறம் துபாயிலயிருந்து யாராவது இங்க வந்தாங்கன்னா சொல்லு அரைஞ்சு தரேன். சரியா” என்றபடி ஆறுதலாக தலையை கோதி விட்டு மறுபடியும் சீரியல் பார்க்க தொடங்கினார்.ஆச்சு மூனு மாசம்......

”டேய் இவரு தலைமுடிக்கு ஸ்பஷலா?”

“அதுக்கெல்லாம் டாக்டர் படிப்பு இருக்கான்னு தெரியல. இருந்தாலும் அவெங்கெல்லாம் இந்த மாதிரி சின்ன க்ளினிக் வச்சிருக்க வாய்ப்பில்ல. இவர் General practitioner. ஜஸ்ட் ஒரு ஐடியா இவர்கிட்ட கேட்கலாம்” என்றபடி உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே ஆட்களே இல்லை. இந்த சார்ஜாவுல யாருக்கும் உடம்புக்கு ஒன்னுமே ஆகாம இருக்கே அப்ப இந்த டாக்டருக்கு எப்படி போனியாகும் என்ற ஆச்சர்யத்துடன் உள்ளே நோட்டம் விட்டேன்.

நம்மூரில் இருக்கும் குழந்தை ”உஷ்ஷ்ஷ்” என்ற படமோ, படத்துடன் ஆங்கிலத்தின் வாசகமோ எதுவுமே இல்லை. இங்கே வந்து நான்கு வருடத்தில் முதல் முறையாக மருத்துவரிடம் வந்திருக்கிறேன்.

டாக்டர் அழைத்தார். அவரைப் பார்த்தவுடன் சந்தேகம் வந்து நண்பனைப் பார்த்தேன். அவனும் புரிந்து கொண்டு “கம்முன்னு இரு” என்றபடி கையை அமுக்கினான்.

”இப்பலெல்லாம் சத்தான உணவு வகைகளை யாரும் சாப்பிடுறது கிடையாது. உங்க உணவு பழக்கம் ரொம்ப மாறிடுச்சு. முடி உதிர்வதுக்கு முக்கிய காரணம் இது தான். உங்கள மாதிரி பசங்க காய்கறி எல்லாம் சாப்பிடுறது கிடையாது. KFC,மெக்டோனால்ட், பர்ஜர்ன்னு கண்டத தின்னு வயித்த நிறப்புறீங்க.....”ன்னு இளைய சமுதாயத்தின் கோபங்களை அடுக்கினார். அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும்.

”நான் கேட்கட்டுமா?” என்றேன் இரகசியமாக நண்பனிடம்.

“வாய மூடிகிட்டு கம்முன்னு இரு” என்றான் நண்பன்.

“என்ன சொல்றாரு இவரு? என்றபடி “இதையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. இங்கிருக்க தண்ணியும் ஒரு காரணமா சொல்லலாம். இதுவரைக்கும் உதிர்ந்த முடிய ஒன்னும் செய்ய முடியாது(அதான் தெரியுமேய்யா!) இனிமே உதிராம இருக்க வேணும்னா ஒரு மருந்து தரேன். அதை 2ml மட்டும் தான் அப்ளே பண்ணனும். அதுவும் முடி உதிர்ற இடத்தில மட்டும் தான்(அப்ப முழுத் தலையிலயுமா?). காலையிலயும், இரவுலயும் அப்ளை பண்ணுங்க. தினமும் பேரிச்சம்பழமும் சாப்பிடுங்க.” என்ற படி 200 திரம்ஸ் மருந்துக்கும் 50 திரம்ஸ் பீஸாகவும் தீட்டினார்.

சார்ஜாவில் அனைவரும் நோய்வாய்படாமல், மருத்துவமனை காலியாக இருப்பது ஏன் என்று தெரிந்தது.

“டாக்டர்..” கேட்க துணிந்தேன்.

“டேய் சும்மா இருடா” அடக்கினான் நண்பன்.

“சொல்லுங்க” என்றார் டாக்டர்.

“ஒன்னுமில்ல டாக்டர்” என்றபடி நண்பன் கிளம்பினான்

“இல்ல பரவாயில்லை எந்த சந்தேகம் இருந்தாலும் கேளுங்க” என்றார் என் வாய்கொழுப்பு தெரியாமல்.

“இல்ல உங்க தலை எப்ப சொட்டையாச்சு? சின்ன வயசுல இருந்தே உங்களுக்கும் முடி உதிர்கிற பிரச்சனை இருந்துச்சா? என்றேன். நண்பன் தலையில் அடித்துக் கொண்டான்.

ரூமுற்கு வந்ததும் போன் அடித்தது. அம்மா. “டேய் இந்த வாரம் நம்ம சிவா அண்ணன் துபாய் வராராம். கறிவேப்பிலை பொடிய அவர்கிட்ட கொடுத்து விடுறேன் வாங்கிக்க. இந்த தடவை ஐஞ்சாறு மாசம் வரும்னு நினைக்கிறேன். தீர்ந்தாலும் அப்புறம் அனுப்புறேன். ஒன்னும் கவலைப்படாதே இந்த சின்ன வயசுல......”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Related Posts with Thumbnails