எவனைப் போலவும் எவனும் இல்லை-பஞ்சாமிர்தம்

கடந்த வெள்ளிக்கிழமை உன்னைப்போல் ஒருவன் டிரைலர் ஒரு மலையாள டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. கமல் பேசும் வசனம் “சிட்டியில அஞ்சு இடத்துல பாம் வச்சிருக்கேன்...” என்ற காட்சி வரும் போது என் கூட வேலை செய்யும் என்வயதையொத்த மலையாள நண்பர் “நீ பத்து இடத்துல வேணா வச்சுக்கோ, அதை எங்க லாலேட்டன் எப்படியும் எடுத்துருவார்” என்று என்னை நோக்கி சீரியஸாக வசனம் பேசினார். முதலில் ஒன்றும் புரியாமல் முழிக்க, பின்பு அதிலிருந்த உள்குத்து புரிந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தமிழ்நாட்டை பிடித்திருக்கிற கிரகம் உங்களுக்கும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு :)
-------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் நாளே “உன்னைப் போல் ஒருவன்” படத்தைப் பார்த்துவிட்டாலும் மூன்று நாட்கள் விடுமுறையில் பதிவேதும் எழுதவில்லை. நேற்று தமிழ்மணத்தை திறந்ததும் கண்ணில் படுவதெல்லாம் விமர்சனப்பதிவுகளே. இனி எனது பாணியில் எழுதினாலும் கும்பலில் போடும் கோவிந்தாவாக மாற வாய்ப்புண்டு.

ரம்ஜான் மாதத்தின் மதிய வேளையில் படம் பார்த்ததால் இடைவேளையே வரவில்லை. இடைவேளை பற்றிய எண்ணம் வராமல் ஒரு தமிழ் படத்தைப் பார்த்த மக்களை காண்பது இதுவே முதல்முறை. அதே போல் படத்தை முடித்து வெளிவரும் போது அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதியை பார்க்கமுடிந்தது. அவசரம் அவசரமாக எடுக்கப்பட்ட படத்தில் எக்கசக்க லாஜீக் உதைகள், தில்லாலங்கடித்தனங்கள் இருந்தாலும் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆயிரம் பேருக்கும் குறைவாக படிக்கும் வலைப்பதிவில் தனது கருத்தை வெளியிடுவது தவறில்லை அதுவும் படத்தைப் பார்த்துவிட்டு...... ஆனால் படத்திற்கு இதுவும் ஒருவகையில் வெற்றியே!

அது சரி கேரளாவுல கோழிகோட்டில் இந்த படத்தை ரீலீசாகவே விடலையாமே? இந்த பிரச்சனையைப் பற்றி யாரும் பேசவே மாட்டேங்கிறாங்களே. ஏன்?
------------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருவர் ”இந்த படத்தில் கமலை ஒரு முஸ்லீமாக காட்டியிருக்கலாம். இது போன்ற பிரச்சனையே வராது இருந்திருக்கும்” என்றார்.

எனக்கென்னவோ விஜயகாந்தின் “கள்ளழகர்” படம் ஞாபகம் தான் வந்தது. (ஹலோ பாஸ் சிரிக்காதீங்க!)
------------------------------------------------------------------------------------------------
”எவ்வளவு நாள் தான்பா அங்கேயே வேலை பார்ப்ப, இங்க வந்திரு இராசா” என்று போன வாரம் அப்பா தொலைபேசியில் பேசும் போது கூறினார். இதுவரை இப்படி கூறியதில்லை.

கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. “கண்டிப்பா அடுத்த வருசம் வந்திடுறேன்ப்பா” என்றேன்.

“ஏன் இங்க வந்தா நல்ல வேலை கிடைக்காதா தம்பி?” என்றார்

“கிடைக்கும்ம்ம்ம்ம்..” இழுத்தேன்

“இல்ல சொந்தமா ஏதாவ்து செய்யுப்பா. நாலைஞ்சு கம்யூட்டர வாங்கி போட்டு எதுவும் செய்ய முடியாதா? குடிசைத்தொழில் மாதிரி?”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் நெஞ்சை உருக்கிய வாழ்க்கை வரலாறு “கோபி கிருஷ்ணனு”டையது. தூயோன் படிக்க ஆரம்பித்து ஒருவகை கிறக்கத்தில் கோபி கிருஷ்ணனை தேடி அலைந்த போது கிடைத்தது தான் ஜ்யோராம் சுந்தர் இட்டுள்ள தொடர் பதிவான கோபி கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு.

இது எப்படி படிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. இலக்கியவாதி என்பதின் முழு அர்த்தம் ஓரளவு புரிபட தொடங்கியது :) ஒரு நேர்மையை அவரின் எழுத்துக்களில் காணமுடிகிறது. தனக்கு ஏற்பட்ட மனரீதியான பிரச்சனையை கூட நேர்மையாக கூறிய விதமும் அவர்மேல் மரியாதையையே கூட்டுகிறது.

தூயோனில் பல இடங்களில் இயல்பான புன்னகையை வரவழைக்கிறது கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கள். ஆனால் அவரின் முரணான நிஜ வாழ்க்கை இலக்கிய உலகிற்கு கிடைத்த சாபமாக தான் எண்ணத்தோன்றுகிறது.
------------------------------------------------------------------------------------------------
ஒரு மதிய உணவு இடைவேளையின் போது டேமேஜர், சுமாரான அறிவாளி, சூப்பரான அறிவாளி மூனு பேரும் வெளிய வாக்கிங் போறாங்க. தீடீரென்று அங்கிருந்த கல் இடறி மூன்று பேரும் கீழே விழுந்த போது கடவுள் தோன்றினாராம்.

மூன்று பேருக்கும் தனித்தனியே வரம் கொடுப்பதாக கடவுள் கூறினாராம். சுமாரான அறிவாளி “ஒரு நல்ல கம்பெனியில நல்ல வேலை கிடைக்கனும், வேலையே செய்யலனாலும் சம்பளம் வரனும். யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது”ன்னு கேட்டானாம்

சூப்பரான அறிவாளி“கேரளாவுல மலை மேலே ஒரு பெரிய வீடும், பணத்தை பற்றிய கவலையும் இல்லாம, என்னை சுத்தி நிறைய அழகான பெண்களும் இருக்கனும்”ன்னு கேட்டானாம்.

டேமேஜர் “ லஞ்ச் முடிய நேரமாச்சு அந்த ரெண்டு பேரையும் மறுபடியும் ஆபிஸூக்கு கொண்டு வாங்க”ன்னு கேட்டானாம்.

இப்படிக்கு
ரம்ஜானின் நாலு நாள் லீவு முடிந்து இன்று வேலைக்கு சேர்ந்திருக்கும் சூப்பரான அறிவாளி

நான் ஆதவன்

41 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

//
இப்படிக்கு
ரம்ஜானின் நாலு நாள் லீவு முடிந்து இன்று வேலைக்கு சேர்ந்திருக்கும் சூப்பரான அறிவாளி //

கலக்கல் பாஸ் :))))))))))))

ஆயில்யன் said...

//“இல்ல சொந்தமா ஏதாவ்து செய்யுப்பா. நாலைஞ்சு கம்யூட்டர வாங்கி போட்டு எதுவும் செய்ய முடியாதா?//

செய்யலாம் !

☀நான் ஆதவன்☀ said...

நன்றி பாஸ். கூடிய சீக்கிரம் ஏதாவது செய்ய முடியுதான்னு பாக்கலாம் பாஸ் :)

நிஜமா நல்லவன் said...

கலக்கல் பாஸ் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குடிசைத்தொழிலை எந்த க்ராமத்தில் ஆரம்பிக்கிறதா இருக்கீங்க ஆதவன்.. ? :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சூப்பர்.

கெல்ப் ( மலையாளி ஸ்டைல்ல படிக்கவும் ) வந்து எத்தனை வருஷம் ஆச்சு

இப்படிக்கு
ரம்ஜானின் ஒன்பது நாள் லீவில் இருக்கும் சூப்பரான அறிவாளி.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//குடிசைத்தொழிலை எந்த க்ராமத்தில் ஆரம்பிக்கிறதா இருக்கீங்க ஆதவன்.. ? :)//

வேறு எங்க? சிங்கத்தோட குகைல தான்.

வினோத்கெளதம் said...

ஏங்க நான் எல்லாம் எப்ப வீட்டுல கூப்பிடுவாங்க போலாம்னு காத்து இருக்கேன்..நீங்க என்னனா இப்படி இழுக்குறிங்க..ஊரு ரொம்ப புச்சு போச்சோ...:))

மின்னுது மின்னல் said...

:)

கோபிநாத் said...

பஞ்சாமிர்தம் நல்லாயிருக்கு ராசா ;)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

என்னமோ தெரியல நைனா, கேரளா மேல ஒரு கண்ணாவே இருக்க. இது தெரிஞ்சு தான் உங்க அப்பா கூப்பிடறாரோ? ;)

பஞ்சாமிர்தம் ரொம்ப இனிப்பு :)

kanagu said...

nalla padhivunga... :)

/*“நீ பத்து இடத்துல வேணா வச்சுக்கோ, அதை எங்க லாலேட்டன் எப்படியும் எடுத்துருவார்”*/

he he he... sema comedy :))

ellathyum sethu nalla pottu irukkeenga :)

☀நான் ஆதவன்☀ said...

@நிஜமா நல்லவன்
நன்றி பாஸ் :)
------------------------------------
@முத்தக்கா
நீங்க “உம்” மட்டும் சொல்லுங்க டெல்லியிலேயே ஆரம்பிச்சுரலாம் :)
------------------------------------
@பாலா
வந்து நாலு வருசம் ஆச்சு பாலா

இப்படிக்கு
பொறாமையில் பொங்கும் அறிவாளி
ஆதவன்
----------------------------------
நன்றி மின்னல் :)

☀நான் ஆதவன்☀ said...

@வினோத்

அப்படியெல்லாம் இல்ல வினோத். இங்க ஒருதடவை வந்துட்டா அப்புறம் பிடிக்கலைனாலும் போக முடியல. கொஞ்ச நாள் போனா உங்களுக்கே தெரியும் :)
-----------------------------------
@கோபி
நன்றி தல
-----------------------------------
@செந்தில்
நன்றி செந்தில்
-----------------------------------
நன்றி கனகு

எவனோ ஒருவன் said...

அய்யா அறிவாளி,
நீயும் தொட்டுட்டியா?
அறிவாளிதான்.
அந்தக் கேரளா மேட்டர் புதுசா இருக்கே!

டேமேஜர இழுக்காம இருக்க மாட்டியே.

pappu said...

டேமேஜர் கதைகள் எல்லாம் ஜோர்!
புத்தகமே போடலாம் போல!

சின்ன அம்மிணி said...

கேரளா மேட்டர் தெரிஞ்சுதான் உங்கள அப்பா ஊருக்கு வரச்சொல்லிட்டார் போலிருக்கு :)

ஜெகநாதன் said...

பிரம்ம்மாதம் ஆதவன்! எளிமையான பட விமர்சனத்தில் நகைத்தேன்.. அப்பாவின் பாச அழைப்பில் உருகினேன்.. ​கோபி.கிருஷ்ணனைக் குறிப்பிடும்​போது உங்கள் கலைதாகம் ​தெரிந்து விக்கித்தேன் (!??).. ​டேமேஜர் ஜோக்கில் சுருண்டுவிட்டேன்! கலக்கல்!

☀நான் ஆதவன்☀ said...

@ஏனோ ஓனோ

நீயாவது ஒத்துக்கிட்டயே நான் அறிவாளின்னு :) டேமேஜருக்கும் நமக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போலிருக்கு
-----------------------------------
நன்றி பப்பு :)
-----------------------------------
@சின்ன அம்மணி

உங்களை மாதிரி பதிவர்கள் யாராவது போட்டு கொடுத்திருப்பாங்களோ?
-----------------------------------
@ஜெகநாதன்

அவ்வ்வ்வ்வ் நிசமாவா சொல்றீரு? ரொம்ப நன்றி ஜெகன் :)

தாரணி பிரியா said...

நாலு நாள் லீவுல எப்படி பாஸ் அறிவாளி ஆனிங்க‌

ஸ்ரீமதி said...

பின்னூட்டம் போட்டா பதில் போடறதில்ல... அதனால நான் பின்னூட்டல இப்போ இங்க... ;)))))))))

☀நான் ஆதவன்☀ said...

//ஸ்ரீமதி said...
பின்னூட்டம் போட்டா பதில் போடறதில்ல... அதனால நான் பின்னூட்டல இப்போ இங்க... ;)))))))))//

அவ்வ்வ்வ் ஏதோ ஒரு தடவை நேரம் கிடைக்காம போடல...அதுக்காக கோவிச்சுக்கலாமா :)
------------------------------------
// தாரணி பிரியா said...
நாலு நாள் லீவுல எப்படி பாஸ் அறிவாளி ஆனிங்க‌//

ஹலோ பாஸ் நாங்க பொறக்கும் போது 3 கிலோ தான் அதுல 2.5கிலோ மூளை மட்டும் இருந்ததா வரலாறு. தெரியுமா

சந்தனமுல்லை said...

/இல்ல சொந்தமா ஏதாவ்து செய்யுப்பா. நாலைஞ்சு கம்யூட்டர வாங்கி போட்டு எதுவும் செய்ய முடியாதா? குடிசைத்தொழில் மாதிரி?”/

பாஸ்...ஆமா...சூப்பர் ஐடியா..அப்புறம் ஒரே சாங்லே நீங்க தொழிலதிபர்...அப்புறம் பில்கேட்ஸ் கூட உங்க கம்பெனிலே வேலை கேக்கறார்...அப்புறம்...நாஸா...செவ்வாய்..ஹிஹி!! :))

சந்தனமுல்லை said...

/தமிழ்நாட்டை பிடித்திருக்கிற கிரகம் உங்களுக்கும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு :)/

அவ்வ்வ்வ்வ்!

சந்தனமுல்லை said...

25

☀நான் ஆதவன்☀ said...

//பாஸ்...ஆமா...சூப்பர் ஐடியா..அப்புறம் ஒரே சாங்லே நீங்க தொழிலதிபர்...அப்புறம் பில்கேட்ஸ் கூட உங்க கம்பெனிலே வேலை கேக்கறார்...அப்புறம்...நாஸா...செவ்வாய்..ஹிஹி!! :))//

பாஸ் அப்பாவுக்கும் மகனுக்குமான ஒரு செண்டிமெண்ட் சீனை இப்படி காமெடி சீன் ஆக்கிட்டீங்களே பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ். சரி இருந்தாலும் அப்படியே வச்சுகிட்டாலும் “லாலாலா” பாட்டு மட்டும் நீங்க பாடவே கூடாது ஆமா :)

//25//

க்ரேட் பாஸ் நீங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

எவனைப் போலவும் எவனும் இல்லை- //

:))))))))))))))))))))

கலையரசன் said...

ஓடிப்போயிடு....!!

மணிகண்டன் said...

பஞ்சாமிர்தம் சூப்பர். டாபிக்களான தலைப்பு. முல்லையோட கமெண்ட்டும் சூப்பர்.

☀நான் ஆதவன்☀ said...

நன்றி அமித்து அம்மா :)
-----------------------------------
@கலையரசன்

ஏன் இவ்ளோ கொலைவெறி கலை???
-----------------------------------
வாங்க மணிகண்டன். ரொம்ப நன்றி :)

இளைய பல்லவன் said...

//
தமிழ்நாட்டை பிடித்திருக்கிற கிரகம் உங்களுக்கும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு :)
//

இதுல புதுமை என்ன இருக்கு?!. எப்ப இளைய தளபதி படங்கள் அங்க ஹிட்டாச்சோ அப்பவே அவங்க ரசனை மாறிப்போச்சே!!!

கைப்புள்ள said...

//எனக்கென்னவோ விஜயகாந்தின் “கள்ளழகர்” படம் ஞாபகம் தான் வந்தது. (ஹலோ பாஸ் சிரிக்காதீங்க!)//

கமல் எடுத்துருக்கற படம்ம் கள்ளழகரைப் போல் ஒருவன்னு சொல்ல வர்றீங்க :)

கைப்புள்ள said...

வழக்கம் போல சூப்பர் காக்டெயில்:)

☀நான் ஆதவன்☀ said...

வாங்க பல்லவன்

நீங்க சொல்வதும் சரி தான். அதெல்லாம் இருக்கட்டும் எங்க “சக்கர வியூகம்” வர்ரதே கிடையாது? என்னாச்சு?
------------------------------------
வாங்க கைப்புள்ள அண்ணே

//வழக்கம் போல சூப்பர் காக்டெயில்:)//

ரொம்ப நன்றிண்ணே :)

இளைய பல்லவன் said...

///
வாங்க பல்லவன்

நீங்க சொல்வதும் சரி தான். அதெல்லாம் இருக்கட்டும் எங்க “சக்கர வியூகம்” வர்ரதே கிடையாது? என்னாச்சு?

//

YEAR END ACCOUNTS CLOSING , TAXATION, ETC....

சென்ஷி said...

:-)

டெம்ப்ளேட் மாத்தியாச்சு போல!!

இய‌ற்கை said...

// நாலைஞ்சு கம்யூட்டர வாங்கி போட்டு எதுவும் செய்ய முடியாதா? குடிசைத்தொழில் மாதிரி?” //

:-((

ஜெட்லி said...

என் பார்வையில் கள்ளழகர் படம்
ஒரு நல்ல படம் சில மைனஸ் தவிர....
சிரிக்காதிங்க பாஸ்....

கிறுக்கல் கிறுக்கன் said...

பஞ்சாமிர்தம் நன்னாருக்கு போங்கோ

ஜொள்ளுப்பாண்டி said...

பஞ்சாமிர்தம் நல்லாருக்குவோய்...:)))

Ashwinji said...

''அவ்வ்வ்வ்வ்'' வளவு நல்லா ரசிச்சேன்.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

Related Posts with Thumbnails