பெசிர பப்பு

"பெசிர பப்பு? பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே பிரபு”

“ஆமாம். ஆனா ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்ப வித்தியாசமான டிஷ் இது”

ஆகா இதை கத்துகிட்டு சுடு தண்ணி கூட வைக்கத் தெரியலைன்னு கிண்டல் பண்ணின அம்மாவுக்கு செய்து கொடுத்து அசத்தலாம். அக்காவுக்கும் கொஞ்சம் பிகு பண்ணி அப்புறம் எப்படின்னு சொல்லி கொடுக்கலாம். எல்லாத்துக்கும் மேலே இத ஒரு பதிவா போட்டு “ரொம்ப நன்றி ஆதவன். சூப்பர் சமையல் குறிப்பு இது”ன்னு தூயாவையே பின்னூட்டமிடவைக்கலாம். பெண் பதிவர்கள் பல பேர் வீட்டுல இத செய்துட்டு கணவர்மார்கள் பாராட்டும் போது இதுக்கெல்லாம் காரணம் நான் ஆதவன் தான்னு சொல்ல வைக்கலாம்... கட்.. கட் ...கட்.. கட்..

“என்ன யோசனைடா” பிரபு

“ஒன்னுமில்லை இது எப்படி செய்யுறதுன்னு சொல்லிகிட்டே செய்றீங்களா? நானும் கத்துக்கனும்” நான்

“ஓக்கே”

படம் பிடிப்பதற்காக செல்போனை எடுத்துக் கொண்டேன்.

“இந்த பாசி பருப்பு உள்ளங்கையில எட்டு தடவை எடுத்துப் போட்டுக்கங்க. நல்லா கழுவிகங்க” பிரபு

“இருங்க போட்டோ எடுத்துக்கிறேன்”

“யோவ் இத எதுக்குய்யா போட்டோ எடுக்குற?” பிரபு

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நீங்க சொல்லிகிட்டே செய்யுங்க. நான் என் வேலைய பார்க்குறேன்”
“பெரிய வெங்காயம் மூனு, தக்காளி அஞ்சு, பூண்டு ரெண்டு, பச்சை மிளகாய் அஞ்சு, கொஞ்சம் கொத்தமல்லி இதெல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்கனும்”

“பிரபு இவ்வளவு தான் தேவைப்படுமா? ஆச்சர்யமா இருக்கே? இதுக்குள்ள எப்படி வித்தியாசமா பண்ணுவீங்க?”

“யோவ் சும்மா நொய், நொய்ன்னு கேள்வி கேட்காம பேசாம நோட் பண்ணு.
பாசி பருப்பை நல்லா கழுவிட்டு தக்காளி கட் பண்ணி போட்டு குக்கர்ல வச்சு அஞ்சு விசில் வருகிற வரைக்கும் அடுப்புல வைக்கனும்.”

“ஓக்கே” என்றேன். ஒரு 15 நிமிடம் ஆனது. அதற்குள் என்னை கொண்டே வெங்காயத்தை வெட்ட வைத்தார், பூண்டையும் உரிக்க வைத்தார்.


விசில் வந்ததும் இறக்கி வைத்தார். “இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு ஆதவா. இப்ப இதுல நிறைய தண்ணி இருக்குல்ல இதை சூப்பா கூட நாம குடிக்கலாம். மிளகை கொஞ்சம் போட்டோம்னா சூப்பு சூப்பரா இருக்கும்” என்றார்.”அட பரவாயில்லையே” என்றேன் ஆச்சர்யத்துடன். சூப் சுமாராக இருந்தது.

“இப்ப கடாயை அடுப்புல வச்சு கொஞ்சமா எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, கடுகு எல்லாம் போட்டு தாளிக்கனும். அதே நேரத்துல பருப்பையும் தக்காளியையும் கடையனும்”

“ஓ”

“இப்ப தாளிச்சதை எடுத்து இந்த பருப்புல போட்டுட்டு 10 நிமிசம் அடுப்புல கொதிக்க விட்டோம்னா “பெசிர பப்பு” ரெடி” என்றார்.


“அவ்வளவு தானா? இது வேற மாதிரி இருக்கே பிரபு”

“வேற மாதிரின்னா?”

“யோவ் இத தான்யா எங்க வீட்டுல பருப்பு கடைஞ்சதுன்னு வைப்பாங்க. அதுல துவரம் பருப்பு இருக்கும். இதுல பாசி பருப்பு இருக்கு.” என்றேன்

“ஆமா. அதுக்கென்ன இப்ப” பிரபு

“அப்புறம் அது என்னைய்யா “பெசிர பப்பு””?

“தெலுங்குல அதுக்கு பாசி பருப்புன்னு பேரு. நான் ஹதைராபாத்ல இருக்கும் போது செய்ய கத்துக்கிட்டேன்.”

“அடப்பாவி இத வேற கத்துகனுமா? இதுல என்னய்யா வித்தியாசம்? என்னவோ வித்தியாசமான டிஷ்ன்னு சொன்ன? இதுக்கு போட்டோவெல்லாம் எடுத்தேனே”

”நானா போட்டோ எடுக்க சொன்னேன்? வேணும்னா நாளைக்கு இன்னொரு வித்தியாசமான டிஷ் பண்றேன். அதையும் ட்ரை பண்ணி பாரு” பிரபு

அடிங்ங்ங்ங்ங்ங்...

எடுத்த போட்டோவெல்லாம் வீணா போயிடுமேன்னு தான் இந்த பதிவு.

நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

35 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

யோவ் இத தான்யா எங்க வீட்டுல பருப்பு கடைஞ்சதுன்னு வைப்பாங்க. அதுல துவரம் பருப்பு இருக்கும். இதுல பாசி பருப்பு இருக்கு

ஆயில்யன் said...

படிச்ச மேட்டரெல்லாம் வீணா போய்டகூடாதுன்னு லேப்ல ஒரு வாட்டி செஞ்சு பாக்குறேன் ராசா!

இளைய பல்லவன் said...

நான் தான் பதிவு போட முடியாம, சமையல் குறிப்பை போட்டேன். நீங்களுமா?

ஒரே சமையல் குறிப்பா இருக்கே

goma said...

இதுக்குப் பேர்தான் தால் மக்கானி
பெசிர பப்பு

செய்முறை விளக்கம் அருமை

goma said...

நான் என்னமோ பெசிர பப்பு செஞ்சு காட்டிட்டு பெங்குயின் வாயிலே டபக் என்று வீசி விட்டு சிப்ஸ் சாப்பிடுவீர்க:ள் என்று நினைத்தேன்

துளசி கோபால் said...

:-)))))))))))))))

கலையரசன் said...

பெசிர பப்பு? செஞ்சிடுவோம் அப்பு!!

Jaleela said...

பெசிர பப்பு ம்ம் சூப்பர் விளக்கமா சொல்லிகொடுத்துட்டீங்க....

கோபிநாத் said...

அட போடங்க..!!

சென்ஷி said...

//கோபிநாத் said...

அட போடங்க..!!//

ஆமோதிக்கிறேன்!

pappu said...

இதுக்குதான் இந்த பில்டப்பா?

போங்கப்பு, போய் கைராலி டிவி பாருங்க!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்.. நல்ல முயற்சி.. அடுத்து ஆம்லெட் போடுரத பத்தி எழுதுங்க!!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//கோபிநாத் said...

அட போடங்க..!!//

ரொம்போ ஆமோதிக்கிறேன்!

Anonymous said...

:)

JACK and JILLU said...

பெசிர பப்பு... பதிவு நல்லாருக்கோ இல்லையோ இந்த பேர் நல்லா இருக்கு ஆதவன்...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

முடியல ஆதவன். உங்க வீட்டுல சொல்லி பொன்னு பாக்க சொல்லுவோம் :)

Geetha Achal said...

சூப்பராக இருக்கு...உங்கள் செய்முறை படமும் சூப்பர்...அதனை வர்ணித்தவிதமும் சூப்பர்...

சண்முகம் said...

//எடுத்த போட்டோவெல்லாம் வீணா போயிடுமேன்னு தான் இந்த பதிவு.//
#
அதானப் பார்த்தேன்.
இந்த பதிவ காமெடியா எடுத்துகட்டுமா? இல்ல அடுப்ப பத்த வச்சி பெசிர பப்பு செஞ்சிடட்டுமா?
#
ஆமா வெரும் அடுப்ப மட்டும் பத்த வச்சா பப்பு வேகாதே என்ன பண்ணட்டும்?

எவனோ ஒருவன் said...

நான் கூட எங்க சீரியசான பதிவுன்னு நெனச்சு பயந்துட்டேன்...

என்னது! மொக்கை லேபிலைக் காணோம்?

மங்களூர் சிவா said...

பாசி பருப்புன்னு சொன்னீங்க முதல் படத்துல உடைக்காத பயறு இருக்கு??

Kumar said...

Kaalangaalamaa, enakku nenavu therinja kaalama itha enga veetula seivaanga. i like it u know. But buildup is over....

Anyway good narration...

ஊர்சுற்றி said...

ஆஹா... அடுத்த ஐட்டம் கிடைச்சாச்சு.
போட்டுத் தாக்கிற வேண்டியதுதான். நாளைக்கு வேற அலுவலக வேலை இல்லை. :)

☀நான் ஆதவன்☀ said...

எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி :)

மக்களே மூனு நாள் லீவுல உடனே பதில் போட முடியல அதுவும் தனித்தனியாகவும் போட முடியல. அதுனால தப்பா எடுத்துகாதீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தம்ம்ம்பி .. கவலை வேணாம்.. பழிக்கு பழி வாங்க ஒரு நல்ல ஐடியா இருக்கு.. சொல்லவா..

அதே மாதிரி ஒரு நாள் பெசிரமம்மு செய்துதரேன்னு சொல்லி அதே டெக்னிக்கில் குக்கரில் பருப்புக்கூட ஒரு அரைடம்ளர் அரிசியை களைந்து போட்டு நல்ல கூட தண்னிய ஊத்தி வச்சு இறக்கினா பருப்பு சாதமாகிடும் மம்முன்னா சாதம் தானே. :) எப்பூடி.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஆச்சர்யமா இருக்கே? இதுக்குள்ள எப்படி வித்தியாசமா பண்ணுவீங்க?”//
சமையல் ப்ரோர்கிராம் டிவி க்காரப்பொண்ணுங்களை விட சாஸ்தி கேட்டிருப்பீங்க போலயே பாவம் அவரு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெசிரமம்முவை யாராச்சும் தலியா என்று சொன்னால் நம்பாதீங்க.. :)

ஹிந்தி ஒழிக!

எவனோ ஒருவன் said...

பெசிரஅப்புக்காக வெய்ட்டிங்...

☀நான் ஆதவன்☀ said...

//அதே மாதிரி ஒரு நாள் பெசிரமம்மு செய்துதரேன்னு சொல்லி அதே டெக்னிக்கில் குக்கரில் பருப்புக்கூட ஒரு அரைடம்ளர் அரிசியை களைந்து போட்டு நல்ல கூட தண்னிய ஊத்தி வச்சு இறக்கினா பருப்பு சாதமாகிடும் மம்முன்னா சாதம் தானே. :) எப்பூடி.. :)//

அக்கா ‘பெசிர மம்மு’ பேரை நினைச்சாலே சிரிப்பை அடக்க முடியல :)))
---------------------------------
//எவனோ ஒருவன் said...

பெசிரஅப்புக்காக வெய்ட்டிங்...//

வொய் திஸ் மர்டர் வெறி?

சந்தனமுல்லை said...

/“ஒன்னுமில்லை இது எப்படி செய்யுறதுன்னு சொல்லிகிட்டே செய்றீங்களா? நானும் கத்துக்கனும்” நான்/

பயபுள்ள வருங்காலத்துக்கு என்னமா அடிபோடுது!!! :))

சந்தனமுல்லை said...

/“யோவ் இத தான்யா எங்க வீட்டுல பருப்பு கடைஞ்சதுன்னு வைப்பாங்க. அதுல துவரம் பருப்பு இருக்கும். இதுல பாசி பருப்பு இருக்கு.” என்றேன்/

:)))))))

சந்தனமுல்லை said...

/விசில் வந்ததும் இறக்கி வைத்தார். “இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு ஆதவா. இப்ப இதுல நிறைய தண்ணி இருக்குல்ல இதை சூப்பா கூட நாம குடிக்கலாம். மிளகை கொஞ்சம் போட்டோம்னா சூப்பு சூப்பரா இருக்கும்” என்றார்./

பருப்புத்தண்ணிக்கு இவ்ளோ பில்டப்பா!! அவ்வ்வ்வ்!!

சந்தனமுல்லை said...

/நாளைக்கு இன்னொரு வித்தியாசமான டிஷ் பண்றேன். அதையும் ட்ரை பண்ணி பாரு” பிரபு/

பாஸ்...அந்தக்கதையை எப்போ சொல்ல போறீங்க பாஸ்!!! :))

☀நான் ஆதவன்☀ said...

//பயபுள்ள வருங்காலத்துக்கு என்னமா அடிபோடுது!!! :))//

ஹி ஹிஹி

//பாஸ்...அந்தக்கதையை எப்போ சொல்ல போறீங்க பாஸ்!!! :))//

போட்டுறேன் பாஸ் :)

Chef Ramu said...

ஹலோ, அதெல்லாம்(பெசிர பப்பு) ஈசியான விஷயம் கிடையாது... எங்களுக்கெல்லாம் இதான் பொழப்பு! ;)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)


ஆயில்யன் said...
யோவ் இத தான்யா எங்க வீட்டுல பருப்பு கடைஞ்சதுன்னு வைப்பாங்க. அதுல துவரம் பருப்பு இருக்கும். இதுல பாசி பருப்பு இருக்கு //

என்ன ஒரு கண்டுபுடிப்பு :)))))))))

Related Posts with Thumbnails