மலையாளக் கரையோரம்

இப்பெல்லாம் நான் கூட “ஸ்ருதி விட்டு போயி” “சங்கதி இல்லா” “பிட்ச் லோ ஆயி” இப்படியெல்லாம் ஒரு பாட்டைக் கேட்டுட்டு உளறுறேன்னா அதுக்கு காரணம் ஏசியாநெட்ல வெளிவந்த, வெளிவரும் “ஐடியா ஸ்டார் சிங்கர்”.

ஏசியாநெட்டை மலையாளத்தில் பொழைக்க தெரிந்த டிவி சேனல்னு சொல்லலாம். நான்கு வருடத்துக்கு முன்னால ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தென்னிந்திய சேனல்களில் முதலில் பெரிய பரிசோட (ஒரு கோடி) ஆரம்பிக்கப்பட்டதுன்னு சொல்லலாம். அந்த நிகழ்ச்சியில போட்டியிட்ட அந்த வருடத்தின் போட்டியாளர்களை கொண்டே இன்னமும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது (காசெல்லாம் கொடுக்குதான்னு தெரியல). அந்த நிகழ்ச்சி தொகுப்பாளராட இருந்த “மீரா நந்தன்” வால்மீகி படத்தோட கதாநாயகி.

இப்ப மேட்டர் என்னான்னா நம்ம தமிழ்ல பாலான்னு ஒரு நடிகர் இருந்தாரு ஞாபகம் இருக்கா?. அன்பு, காதல்கிசுகிசு படத்திலயெல்லாம் நடிச்சிருப்பாரு. இங்க படம் ஒன்னும் ஹிட்டாகலைன்னு கேரளா பக்கம் ஒதுங்கினாரு. அதிசயமா பாரபட்சம் பார்க்காம நம்ம கேரளா ரெண்டு மூனு ஹிட் படம் அவருக்கு கொடுத்தது. இப்ப அங்க பாலா ஓரளவு சொல்லிக்கிற மாதிரி கதாநாயகன் ஆகிட்டாரு.

ஒரு தடவை இந்த நிகழ்ச்சியில கெஸ்டா பங்கெடுக்குறதுக்காக போனாரு பாலா. அங்க போட்டியாளர் அமிருதாவோட பாட்டுல மட்டும் இல்லாம அழகிலயும் மயங்கி காதலிக்க தொடங்கிட்டாரு. அம்மணியும் பச்சை சிக்னல் கொடுத்துட்டாங்க.


இப்ப இந்த ரெண்டு பேரும் தான் போன ஓணத்தில ”ஹாட் டாக்”. ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிடுச்சு.
-------------------------------------------------------------------------------------------------
அந்த வருடத்தின் இதே நிகழ்ச்சியில என் மனசை கொள்ளைக் கொண்டவள் வாணி ஜெயராம். வாணி அப்போ டாக்டருக்கு படிச்சுட்டு இருந்தாங்க. இப்ப டாக்டரா ஆகிட்டாங்க.

கேரளாவுல வாணிக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு. நெட்லயே நிறைய ஃபாரம் வாணிக்காக இருக்கு. இவங்க பாடின ஒரு பாடலை கூட நான் பார்க்காம விட்டதே கிடையாது.

டிவெண்டி-டிவெண்டி முதல் உலக கோப்பையின் இந்தியா-பாக் ஃபைனல் மேட்ச்ல ஒரு டிவி முன்னால கம்பெனியில எல்லாரும் க்ளைமாக்ஸ வெறியோட பார்க்க நான் மட்டும் எஸ்ஸாகி வாணியோட பாட்டை பார்த்துகிட்டுருந்தேன். பாட்டு முடிஞ்சு வந்தா மேட்ச் முடிஞ்சிருச்சு :)

அவளுக்காக எத்தனை SMS அனுப்பியிருப்பேன்னு கணக்கே இல்லை. நான் ஒருதலை பட்சமா வாணிய காதலிச்சு தோத்து போனாலும் நம்ம பாலா அமிருதாவை கல்யாணம் பண்ணுறத பாக்கும் போது ”அட இவருக்காவது வொர்கவுட் ஆச்சே”ன்னு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

வாணி எங்கிருந்தாலும் வாழ்க ♫....... :( கதாநாயகியா நடிக்க வந்த நிறைய வாய்ப்புகளை கூட வேணாம்னு சொல்லிட்டாங்க டாக்டர் வாணி :(

இல்லைன்னா தமிழ்நாட்டுல குஷ்பு, பெப்சி உமா, நமீதா(?) ஆகியோருக்கு அடுத்தபடியா நடிகை வாணிக்கு கோவில் கட்டுன அடுத்த முட்டா பய ஆகியிருப்பேன் :)மோளே கரையண்டா... அவ்வ்வ்வ்வ்வ்வ்
------------------------------------------------------------------------------------------------
தமிழ் சினிமாவுல இருக்குற & கலக்குற நிறைய மலையாள நடிகைகள் தெரியும். ஆனா மலையாளத்திலேயும் கொஞ்ச தமிழ் நடிகைகள் கலக்கிட்டு தான் இருக்காங்க.

பத்மப்ரியா, விமலாராமன், லஷ்மி ராய் (ஹி..ஹி குஷ்பு, ரம்பா, மும்தாஜ் ,நமீதா வரிசையில் இவங்களையும் தமிழச்சியா சேர்த்தாச்சு) போன்றவர்களோட ரோமான்னு ஒரு குட்டி தேவதை கலக்கிட்டு இருக்கு."நோட் புக்”ன்னு ஒரு படம் மூனு வருசத்துக்கு முன்னால வந்தது. ஊட்டி கான்வெண்ட்ல படிக்கிற பொண்ணா நடிச்சிருந்தாங்க ரோமா. படத்துல கதாநாயகனே இல்லைங்கிறது ஒரு ஸ்பெஷல் நியூஸ்.

அந்த படத்துலயும் சரி மற்ற படங்களிலும் சரி ரொம்ப துறுதுறுன்னு இருக்கும் இவங்க கதாப்பாத்திரம். இவங்க படத்தைப் பார்க்கும் போது நம்ம ஜோதிகாவை பாக்குற மாதிரி இருக்கும்.

மலையாளத்தில் இளம் கதாநாயகர்களுடைய இப்போதைய சாய்ஸ் ரோமா தான். மலையாளத்திலயிருந்து பல கதாநாயகிகளை இறக்கி வரும் தமிழ் இயக்குனர்கள் இவங்கள கண்டுக்காதது வருத்தம் தான்.


-----------------------------------------------------------------------------------------------
இந்த ஓணத்துக்கு ஏசியாநெட்ல நயந்தாராவோட பேட்டி ஒன்னு வந்தது. பேட்டியெடுத்தவன் நயந்தாராவை “தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார்” எப்படி ஆகினீர்கள்னு கேட்டான்(அடங்கொன்னியா இது நீ சொல்லி தான்டா எல்லாருக்கும் தெரியும்). அதுக்கு அம்மணி கொடுத்த பதில் தாங்க முடியல. 5 வருட கடும் உழைப்பு தான் இதுக்கு காரணமாம். அவ்வ்வ்வ்வ்

பேட்டியில அம்மணி அளப்பரை தாங்க முடியல. கொடுக்குற ஒவ்வொரு முகபாவத்திலேயும் ஒரு அகம்பாவத்தை எளிதா காணலாம். ரஜினியோட ராசியான நடிகை நயந்தாராதானாம். இதுவும் இவங்களே சொல்லிகிறாங்க (ரஜினி இரசிகர்களே இன்னுமா சும்மா இருக்கீங்க?).

யூ டியூப்ல இருக்கு ஸோ தயவு செய்து பார்த்திராதீங்கன்னு சொல்ல தான் இதை எழுதியிருக்கேன்.

31 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கிறுக்கல் கிறுக்கன் said...

உங்க ஜொள் வாழ்க!

ஆனால் நண்பா நீங்கள் வடிக்கும் ஒரு சொட்டு ஜொள்ளுக்கு பதிலாக ஒரு லாரி குப்பையை தமிழ் நாட்டில் கொட்டுவார்கள் பரவாயில்லையா?!

ஆயில்யன் said...

//அந்த நிகழ்ச்சி தொகுப்பாளராட இருந்த “மீரா நந்தன்” வால்மீகி படத்தோட கதாநாயகி//

அட! அப்படியா!!!

ஆயில்யன் said...

//அன்பு, காதல்கிசுகிசு படத்திலயெல்லாம் நடிச்சிருப்பாரு. இங்க படம் ஒன்னும் ஹிட்டாகலைன்னு கேரளா பக்கம் ஒதுங்கினாரு//

ஒரேயொரு பாட்டு மட்டும் எனக்கு தெரிஞ்சு நல்ல ஹிட் ஆச்சுன்னு நினைக்கிறேன்!
”தவமின்றி கிடைத்த வரமே” கல்யாண வீட்ல எல்லாம் பாடிக்கிட்டிருக்கும்

ஆயில்யன் said...

//ஒரு தடவை இந்த நிகழ்ச்சியில கெஸ்டா பங்கெடுக்குறதுக்காக போனாரு பாலா. அங்க போட்டியாளர் அமிருதாவோட பாட்டுல மட்டும் இல்லாம அழகிலயும் மயங்கி காதலிக்க தொடங்கிட்டாரு. அம்மணியும் பச்சை சிக்னல் கொடுத்துட்டாங்க//

ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆயில்யன் said...

//வாணி ♫ எங்கிருந்தாலும் வாழ்க ♫....... :( கதாநாயகியா நடிக்க வந்த நிறைய வாய்ப்புகளை கூட வேணாம்னு சொல்லிட்டாங்க டாக்டர் வாணி :( //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாஸ் நான் ஓ’வென்று பெருங்குரலெடுத்து அழுதுக்கொண்டிருக்கிறேன் பாஸ் யாருமே இதுவரைக்கும் வாணியை பத்தி என்கிட்ட ஒரு சின்ன இண்ட்ரோ கூட கொடுக்கலயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
கிரி said...

//அவளுக்காக எத்தனை SMS அனுப்பியிருப்பேன்னு கணக்கே இல்லை.//

உங்களை மாதிரி இருக்கிறவங்களை நம்ம்ம்பி தான் இப்படி SMS போட்டி வைக்கறாங்க போல இருக்கு..

அப்புறம் நயன்தாரா சேச்சி படம் நன்னா இருக்கு ;-)

சுந்தர் said...

கேரளா அழகிகளின் புகழ் வளர்க !

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

மலையாளம் நிறைய பாக்கறது எதனாலன்னு தெரிஞ்சுக்கலாமா.. ? ;)

ஜோள்ளான பதிவு :))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

டவுட்டு தீந்துடிச்சி,
நீ மலையாள மாப்பிள்ளை ஆகப்போற,ரைட்டு.
குலுவாலிலே..


தமிழ்மணத்தில் அட்மிட் பண்ணி சோறும் வச்சிட்டேன் தேவுடு.

செம ஜொள்ளான பதிவு..
:))))))))))

கலையரசன் said...

வர.. வர சேச்சி பத்திய உன் "நீர்ஊற்று" ஜாஸ்த்தி ஆகிடுச்சு! ஒன்னு நீ ரூம் மாறு.. இல்ல கம்பெனியே மாறு!!

என்னது? பல்கிளிப் அமிருதாவ, பாலா கரைக்ட் பண்ணிட்டானா? ஏன்டா காலங்காத்தால.. கல்ஃப் அடிக்க வைக்கிறீங்க!

கன்னட பைங்கிளி லட்சுமிராயை, நம்ம தமிழ் லிஸ்ட்டுல சேர்த்த உன் தமிழ் பற்று என்னை சொரிய வைக்குது மச்சி!!

☀நான் ஆதவன்☀ said...

@கிறுக்கல் கிறுக்கன்

அதென்னவோ சரிதான் கி.கி ஆனா இப்படி ஜொள்ளு விடாம இருக்க முடியலையே..ஹிஹி
-------------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் வாணிய பத்தி தெரியாம இருக்கீங்களே பாஸ். யூ டியூப்ல வாணி ஜெயராம்னு அடிங்க. வீடியோ கொட்டி கிடக்குது :)
-----------------------------------
@கிரி

அவ்வ்வ்வ் என்ன பண்றது கிரி அப்ப அனுப்புன SMS எல்லாம் வேஸ்டா போச்சே

☀நான் ஆதவன்☀ said...

நன்றி சுந்தர் :)
-------------------------------------
@ செந்தில்வேலன்

மலையாளம் நிறைய பாக்குறதுக்கான காரணம்..... வேற வழி இல்ல செந்தில் :) ரூம் டிவியில மலையாள சேனல் மட்டும் தான் வரும்
-----------------------------------
@கார்த்திகேயன்

நன்றி கார்த்திகேயன். இனி எண்டே மொழி மலையாளம்..தகிடதகஜூமி தகடதகஜூமி :)
------------------------------------
@கலையரசன்

அப்ப நீயும் அந்த நிகழ்ச்சிய பார்த்திருக்கையா? அந்த பொண்ணு க்ளிப்ப அப்பவே கழட்டிருச்சு.

//கன்னட பைங்கிளி லட்சுமிராயை, நம்ம தமிழ் லிஸ்ட்டுல சேர்த்த உன் தமிழ் பற்று என்னை சொரிய வைக்குது மச்சி!!//

ஹி..ஹி எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா :)

கோபிநாத் said...

;))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஜொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு.
அது சரி என்னகாவது நம்ம தமிழ் பிகர பத்தி எழுத, இல்ல யோசிச்சாவது பாத்திங்களா?
ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. "எண்ட பீடி மலபார் பீடி, எண்ட சரக்கு கள்ளு" இப்படி தான் சொல்லபோறிங்க.
வாழ்த்துக்கள்.
அப்படியே நம்ம மிடில் ஈஸ்ட் பிகர் குறிப்பா " லெபனானிஸ்" பத்தியும் ஒன்ன தட்டி விடுங்க

சந்தனமுல்லை said...

இன்னும் ஓணம் எஃபெக்ட்லேர்ந்து வெளிலே வரலை போலிருக்கே!! :))

//நான் ஒருதலை பட்சமா வாணிய காதலிச்சு தோத்து போனாலும் நம்ம பாலா அமிருதாவை கல்யாணம் பண்ணுறத பாக்கும் போது ”அட இவருக்காவது வொர்கவுட் ஆச்சே”ன்னு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.//

:)) உங்க மனசு யாருக்குங்க வரும்!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

யாரனு, நயன்தாராவா? எந்தா இது புள்ளி வல்லிய ஆள்காரயோ?

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...

//அன்பு, காதல்கிசுகிசு படத்திலயெல்லாம் நடிச்சிருப்பாரு. இங்க படம் ஒன்னும் ஹிட்டாகலைன்னு கேரளா பக்கம் ஒதுங்கினாரு//

ஒரேயொரு பாட்டு மட்டும் எனக்கு தெரிஞ்சு நல்ல ஹிட் ஆச்சுன்னு நினைக்கிறேன்!
”தவமின்றி கிடைத்த வரமே” கல்யாண வீட்ல எல்லாம் பாடிக்கிட்டிருக்கும்/

அட...பாஸ் என்ன ஆச்சு பாஸ்...பையன்களை பத்திக்கூட பேசறீங்களே! :))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சந்தனமுல்லை // :)) உங்க மனசு யாருக்குங்க வரும்!! // அவ்வ்வ்வ்வ்வ்... என்ன
ஒரு வில்லத்தனம்

சந்தனமுல்லை said...

//"நோட் புக்”ன்னு ஒரு படம் மூனு வருசத்துக்கு முன்னால வந்தது.//

அவ்வ்வ்வ்!! என்னா டீடெய்லு, என்னா ஞாபக சக்தி..பாஸ்...இதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லையே...:))) வாழ்க உங்க தொண்டு...

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

pappu said...

என்ன அண்ணி8 அழுகுறாங்க, வேடிக்கை பாத்துருக்கீங்க! போய் துடைச்சிருக்க வேணாமா! (அண்ணின்னு சொல்லிருக்கேன்! அந்த ஊரில எம்பி3 பிளேயர் சீப்பாமே.. தம்பிக்கு.. ஹி.. ஹி..

வர.. வர சேச்சி பத்திய உன் "நீர்ஊற்று" ஜாஸ்த்தி ஆகிடுச்சு! ஒன்னு நீ ரூம் மாறு.. இல்ல கம்பெனியே மாறு!! ////

இது வரவேற்க படவேண்டிய கருத்து!

இளைய பல்லவன் said...

டவுட்டே இல்ல கன்ஃபர்ம் ஆகிப்போச்சு.

மக்களே இன்னும் கொஞ்ச நாள்ல இந்த பிளாக் எழுதறவரோட பேரு

"ஞாண் ஞாயிறாணு"ந்னு மாறிப்போச்சுன்னா டென்சனாயிராதீங்க சொல்லிப்போட்டேன்.

====

வாணி ஜெயராம் மேட்டர் புதுசா இருக்கு.

==

பாத்து, மலையாளக் கரையோரம் சுறாக்கள் அதிகமாம். அதுவும் கொச்சியில ஸ்பெசலா வல போட்டு புடிக்கிறாங்க.

===

என்னதான் இருந்தாலும், மலையாள மேட்டர போடறதுல ஒரு ஸ்பெசலிஸ்ட் ஆகிக்கிட்டு வர்றீங்க. வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

@கோபிநாத்

நன்றி தல
-------------------------------------
@பாலா

ஆகா அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்திட்டீங்களே பாலா. லெபனான் பொண்ணுங்களை பத்தியும் எழுதிடுறேன் :)

//என்ன
ஒரு வில்லத்தனம்//

என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு
-----------------------------------
@சந்தனமுல்லை

//:)) உங்க மனசு யாருக்குங்க வரும்!!/

உங்களுக்காவது தெரியுதே.

//அவ்வ்வ்வ்!! என்னா டீடெய்லு, என்னா ஞாபக சக்தி..பாஸ்...இதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லையே...:))) வாழ்க உங்க தொண்டு...//

இதென்னங்க பிரமாதம் அவங்க முழு டீடெய்லும் தெரியும். எங்க படிச்சாங்க, எங்க படிக்கிறாங்க, வீட்டு அட்ரஸ், பிறந்தநாள்ன்னு எல்லாம் தெரியும் :)

☀நான் ஆதவன்☀ said...

@பப்பு

பப்பு உனக்கு வரும் போது எம்பி3 ப்ளேயர் கன்பார்முடு :)

//இது வரவேற்க படவேண்டிய கருத்து!//

எம்பி3 ப்ளேயர் கேன்சல்ல்ல்ல்ல்
-------------------------------------
@ இளைய பல்லவன்

//"ஞாண் ஞாயிறாணு"ந்னு மாறிப்போச்சுன்னா டென்சனாயிராதீங்க சொல்லிப்போட்டேன்.//

அவ்வ்வ்வ்வ்வ்..(நல்ல ஐடியாவா இருக்கே)

//பாத்து, மலையாளக் கரையோரம் சுறாக்கள் அதிகமாம். அதுவும் கொச்சியில ஸ்பெசலா வல போட்டு புடிக்கிறாங்க.//

எனக்கு சுறா புட்டு ரொம்ப புடிக்கும். அதுனால இந்த எச்சரிக்கைய அந்த சுறாவுக்கு சொல்லுங்க பல்லவன் :) (ஆகா டயலாக் எல்லாம் அருமையா வருதே)

//என்னதான் இருந்தாலும், மலையாள மேட்டர போடறதுல ஒரு ஸ்பெசலிஸ்ட் ஆகிக்கிட்டு வர்றீங்க. வாழ்த்துக்கள்.//

இந்த வாழ்த்துக்காவே அடிக்கடி எழுதுறேன் :)

எவனோ ஒருவன் said...

ஹி ஹி.... ஹீ.....

அகல் விளக்கு said...

ஜொள்ளுங்க..
ஜொள்ளுங்க...

நாங்க கேட்டுகிட்டு இருக்கோம்..

☀நான் ஆதவன்☀ said...

// எவனோ ஒருவன் said...
ஹி ஹி.... ஹீ....//

என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளத்தனமா?

------------------------------------
வாங்க அகல்விளக்கு,

தொடர்ந்திருவோம் :)

கைப்புள்ள said...

//யூ டியூப்ல இருக்கு ஸோ தயவு செய்து பார்த்திராதீங்கன்னு சொல்ல தான் இதை எழுதியிருக்கேன்.//

லிங்க் குடுங்க பாஸ்
:)

மங்களூர் சிவா said...

ஜொள்ளான பதிவு :))

☀நான் ஆதவன்☀ said...

//கைப்புள்ள said...
//யூ டியூப்ல இருக்கு ஸோ தயவு செய்து பார்த்திராதீங்கன்னு சொல்ல தான் இதை எழுதியிருக்கேன்.//

லிங்க் குடுங்க பாஸ்
:)//

அவ்வ்வ் வேண்டாமுண்ணே. சொன்னா கேளுங்க. அப்புறம் பார்த்துட்டு ஃபீல் பண்ணுவீங்க
--------------------------------
@மங்களூர் சிவா

நன்றி சிவா :)

Related Posts with Thumbnails