பிச்சை

பி.ஏ.கே பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி. இராயபுரம். வெளியில் இருந்து பள்ளியின் வாயிலில் வளைவோடு எழுதப்பட்டிருந்ததை வெறுப்போடு படித்துக் கொண்டிருந்தேன். எரிச்சலாக வந்தது.

கட் அடித்துவிடலாமா என்று இருந்தது. இதுவரை பள்ளிக்கு கட் அடித்ததில்லை. அடித்தாலும் எங்கு போவது? ஏரியா முழுக்க பள்ளியின் ஆட்கள். சீருடையுடன் வெளியில் பார்த்தால் அவ்வளவு தான்.

இன்று காலையில் அம்மா சொன்னது வேறு காதில் ஒலித்தது “டேய் இராசா. 2500 ரூபா பீஸ் கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு தெரியும்ல. இதுல டூசன் எல்லாம் எப்படிடா படிக்க வைக்கிறது? அதுவும் 1500 ரூபாயா? அநியாயமா இருக்கேடா? நம்ம கோபால் அண்ணன் சாயங்காலம் டூசன் எடுக்குறாரு. மாசம் 50 ரூபா தான். அங்க வேணா சேர்ந்துக்கோ”

எப்படி புரியவைப்பது அம்மாவிற்கு? நியாயமாகப் பார்த்தால் எனக்கு டியூசனே தேவையில்லை. பத்தாவது வரை அதற்கு அவசியமே வரவில்லை. அதுவும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு சரியாக வராமல் போகும் மாநகராட்சி பள்ளியில்.

இங்கே வகுப்பிற்கு சரியான நேரத்தில் வரும் ஆசிரியர்கள். மாலை பள்ளி முடிந்ததும் கோச்சிங் க்ளாஸ். தினமும் வீட்டு பாடங்கள் செய்ய கொடுக்கும் ஆசிரியர்கள். வாரத்தில் ஒரு நாள் டெஸ்ட் என எல்லாம் புதியதாக இருந்தது.

ஏற்கனவே இப்புதியதில் திக்குமுக்காடி போயிருக்கும் நான் நேற்று வகுப்பாசிரியர் பிச்சை ஜான்சன் உள்ளங்கையை திருப்பி முட்டியில் பத்து பத்து அடிகள் இருகைகளிலும் அடித்த போது பள்ளியை விட்டு நின்றுவிடலாமா என்று தோன்றியது.

”உனக்கெப்படிடா இதுக்கு பதில் தெரியும்? புக்குல பதில் எங்க இருக்கு?” அடிவாங்காமல் தப்பிய இக்பால் ஹூசனைக் கேட்டேன்.

“அட போடா. 500 பக்க புக்குல எங்க போய் ஆன்சர் தேடுவ? நேத்து டியூசன்ல சார் இந்த கேள்வி பதில் எழுதி போட்டாரு. எல்லாரும் நோட் பண்ணிகிட்டோம்.” என்று கூறி திடீரென்று சோகமானான்.

தொடந்து “ஸாரிடா சூரி. ட்யூசன் படிக்காத பசங்களுக்கு நோட்ஸ் எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காருடா. சொன்னா ப்ராக்டிக்கல்ல மார்க் கம்மி பண்ணிடுவாராம்” என்று அடிவாங்கிய என் கையை பார்த்து “பொறம்போக்கு தே....... இப்படி அடிச்சிருக்கான்” என்றான் கவலையோடு.

”பிச்சை ஜான்சன்னு அவுங்க அம்மா சரியா தாண்டா பேரு வச்சிருக்காங்க” பின்னாலிருந்த குமார் விரக்தியில் சிரித்தான்.

சைக்கிள் எடுக்கும் போது இராஜேந்திரனும், குமாரும் வந்தனர். “மச்சி நீ டியூசன் சேரப் போறயா?” என்றான் இராஜேந்திரன்.

உதட்டை பிதுக்கினேன். குமாரை பார்த்தேன். “என் நிலைமை தான் உனக்கு தெரியுமே. நான் எப்படி சேருவேன்” என்றான் சிரித்துக்கொண்டே.

மூவரும் சைக்களை உருட்டினோம்.

று நாள் மாலை பிச்சை சார் தனியே அழைத்தார்.

“நீ எப்ப ட்யூசன் சேரப்போற?”

“சார் பீஸ் ரொம்ப அதிகமா இருக்கு சார்”

“உனக்கு என்ன கேடு? நாளைக்கு உங்கப்பாவை கூட்டிகிட்டு எங்க வீட்ல வந்து பாரு. உங்கப்பா என்ன வேலை பாக்குறாரு?”

சொன்னேன்.

”இப்படியே எல்லா டெஸ்ட்லயும் பெயிலானா இந்த வருசமும் பதினொன்னாம் வகுப்புலேயே நிக்கனும். சரியா? ஒழுங்கா டியூசன் சேரு. போ” என்றார்.

மாலை சைக்களில் நானும், குமார் மட்டும் சென்றோம். இராஜேந்திரனின் தந்தை நேற்று பிச்சை ஜான்சனை பார்த்திருக்கிறார்.

குமாரை தனியாக போகச் சொல்லி முகுந்தன் சார் வீட்டுக்கு சைக்கிளை திருப்பினேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அவரது ஆபிஸில் ஆபிஸ் பாயாக வேலைப் பார்த்தேன். ஸ்கூல் பீஸ் கட்ட உதவியாய் இருந்தவர்.

ரண்டு நாள் கழித்து பிச்சை ஜான்சனின் வீட்டில் அவர் அடுத்து வைக்கப்போகும் டெஸ்ட்க்கு கொடுத்துக் கொண்டிருந்த நோட்ஸ்யை எழுதி கொண்டிருந்தேன்.

உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. அருகிலிருந்த இக்பால் அது அவர் மனைவி என்று மெதுவாக கூறினான்.

“சனியனே...டேய் பொறம்போக்கு உன்னைய கல்யாணம் கட்டிகிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்டா. உனக்கு எல்லாம் எதுக்குடா பொண்டாட்டி. தே....னே....”

பிச்சை உள்ளே சென்றார். “ஏய் எதுக்குடி கத்துற? உங்கம்மா மாதிரி பைத்தியம் பிடிச்சு அலைய போற பாரு. வாய மூடுடி”

“போடா நாயா. உனக்கென்னடா மரியாதை. !@*$& எதுக்குடா அவன்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த. போ சொல்லுடா அவன்கள” என்று கத்த ஆரம்பித்தார்.

மாணவர்களிடையே சிரிப்பு சத்தம் கேட்டது. பிச்சை டென்சனாகி கத்த ஆரம்பித்தார்.

ன்று வீட்டுற்கு ஒரு வித சந்தோசத்துடன் சைக்கிளில் போய் கொண்டிருந்தேன். காரணம் என்னவென்று தெரியாத சந்தோஷம் அது.

அன்றும் கையில் வாங்கிய அடிகளின் வீங்கங்களோடு குமார் சைக்கிளில் தனியாக ஒரு வித சோகத்தோடு வீட்டிற்கு போய் கொண்டிருந்தான்.

அன்று மட்டும் இல்லை. அந்த வருடம் முழுதும்.

பல வருடங்களுக்கு பிறகு அந்த பள்ளியின் படிக்கும் ஒரு மாணவனை கண்ட போது, பிச்சை ஜான்சன் இன்னும் அதே பள்ளிகூடத்தில் இருப்பதாகவும், கட்டாய ட்யூசன் இன்னும் இருப்பதாகவும் கூறினான்.

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

25 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

பிச்சை ஜான்சன் கேரக்டரில் ஆசிரியர்கள் சிலர் இருந்தாலும் கூட பலரின் பயன் கருதா பணியினை பாராட்டி மகிழ்வோம்!

நல்ல நாளில் நல்ல விசயங்களையே நினைத்திருப்போம்! :)

சென்ஷி said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா .. ம்.. சரி சரி..

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

பாஸ் சும்மா அந்தாளு ஞாபகம் வந்தது. மத்தபடி நிறைய நல்ல ஆசியர்கள் ஞாபகம் வந்தது. அவ்வளவு பெயரையும் எழுத முடியாதேன்னு நான் “ஆசிரியர் தின வாழ்த்துகள்”ன்னு போட்டேன் :)
------------------------------------
நன்றி சென்ஷி
-----------------------------------
நன்றிக்கா
----------------------------------
உலவு.காம்.....ரைட்டு

☀நான் ஆதவன்☀ said...

தமிழ்மணம் ஒட்டுமொத்தமா சூன்யம் வச்சிருச்சே...அவ்வ்வ்வ்

பச்சபசேல்னு இருந்த இந்த குப்பைத்தொட்டி இப்ப பொட்டல் காடா மாறிடுச்சே அவ்வ்வ்வ்வ்வ்

அகல் விளக்கு said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

- இரவீ - said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! :)

மங்களூர் சிவா said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

/
ஆயில்யன் said...

நல்ல நாளில் நல்ல விசயங்களையே நினைத்திருப்போம்! :)
/

ரிப்பீட்டு

கதிர் - ஈரோடு said...

அழகிய படைப்பு

சந்தனமுல்லை said...

//கட் அடித்துவிடலாமா என்று இருந்தது. இதுவரை பள்ளிக்கு கட் அடித்ததில்லை. //

ஹிஹி..நம்பிட்டோம்!! :-) எவ்ளோ நல்ல புள்ளை!!

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை..இப்படியும் இருக்காங்கதான்...:-) கண்டிப்பா ஸ்கூல்ல நடத்தறதை மட்டுமே வச்சு நல்ல மார்க் எடுத்துட முடியாதுன்ற மாதிரியான ஸ்கூல்களும் இருக்கு!

வித்தியாசமான பார்வையில் அழகான இடுகை!! கலக்குங்க!!

கலையரசன் said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
பிச்சை போல ஆசிரியரை நினைக்காமல்...
நல்ல ஆசிரியர்களை நினைத்துகொள்வோம்!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

உங்கள் டியூசன் அனுபவம் அருமை.
ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

கோபிநாத் said...

ஒன்னும் சொல்லிக்க முடியல...ஆசிரியர் தின வாழ்த்துக்களை தவிர ;)

இளைய பல்லவன் said...

நச்!

ப்ச்:(

seemangani said...

எனக்கு aasiriyarkal yendral...remba பிடிக்கும்....sila பேர்...????!!!!
anubavam arumaai....

ஸ்ரீமதி said...

வித்தியாசமான வாழ்த்து.. :))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

“பொறம்போக்கு தே....... இப்படி அடிச்சிருக்கான்” என்றான் கவலையோடு.


சேம் ப்ளட்...
நான் ட்யூஷன் சேர்ந்து என் கணக்கு வாத்தி ஓட்டக்காதன் பால்ராஜை வெளுத்தேன்..
ட்யூஷன் போகும்போதெ முனை டீ கடையில் காபியோ பாலோ எச்சை துப்பி கொண்டு போய் கொடுப்பேன்.
அப்படி நிறைய எச்சை காபி குடித்தே அவனுக்கு சர்க்கரை நோய் வந்து கிட்னி பழுதாய் போய்ட்டான்.
எக்ஸாம் கேள்வித்தாள் எல்லாம் முதல் நாளே ட்யூஷன் பசங்களுக்கு கொடுக்கும் இது போல கேடுகெட்ட வாத்தியார்கள் இருக்கும் வரை மாணவர்பாடு திண்டாட்டம் தான்

மிக நல்ல பதிவு போட்டீர்கள் தேவுடுகாரு..
நான் டீச்சர் ஸ்பெஷல் பதிவு போடலை
அது தான் சற்றே நீண்ட பின்னூட்டம்

ஒரு டவுட்டு?
இப்போ கூட யாராவது இளம் பெற்றோர்
அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்களா?

கைப்புள்ள said...

பிச்சை, யானை கதை, ஓமனை, கொக்கரக்கோ, குவிக் கன் - எல்லாததையும் படிச்சிட்டேன். உணமையாவே.

அது எல்லாத்துக்கும் சேர்த்து தான் இந்த கமெண்ட்.
:)

எல்லாமே வழக்கம் போல சூப்பர்.

அந்த யானை கையில வச்சிருக்கற பாப் கார்னை யாராச்சும் புடுங்கித் தின்னா என்னாகும்னு யோசிச்சுப் பாக்கறேன். யானையோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
:)

" உழவன் " " Uzhavan " said...

வியாபாரமாகிவிட்டது வருந்தத்தக்கதே

சங்கர் said...

அருமையான பதிவு.. பள்ளி நாட்களை கண்முன் கொண்டுவந்தது..

- பிச்சை ஜான்சனிடம் 11ஆம் வகுப்பு படித்த மாணவன்.

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htmஅல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htmஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

Several tips said...

நல்ல பதிவு

nanrasitha said...

nan kuda PAK student than. i have also joined tution to பிச்சை ஜான்சன். As u said same thing happens in my batch also.

Related Posts with Thumbnails