எண்டே ஓமனக்குட்டி..........

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தக்திமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே.....

ஆத்தாடி இதுக்கே மூச்சு வாங்குது....

கேரளாவுல இப்ப இருக்குற நிலைமையில ஓணம்னா நினைவுக்கு வருவது ஒன்னுதான். என்னதான் கடவுளின் பூமி, தலைக்கு 5000ஆயிரத்துக்கு மேலே பேங்க்ல பணம் இருக்குறது, கல்வியில் முதலிடம்னு இருந்தாலும் எல்லாத்துக்கும் மேலே ஒரு விசயத்துல மூனு வருசமா முதலிடத்தில இருக்குது கேரளா. வேறன்ன சரக்கு தான்.

இந்த வருஷம் மட்டும் 200 கோடிக்கு சரக்கு விற்பனை செய்ய கேரள அரசு முடிவு பண்ணியிருக்குறதா கொஞ்ச நாளுக்கு முன்ன செய்தி வெளியாச்சு. அது முக்கியமா ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை மட்டும் கணக்குல வச்சுகிட்டு இந்த திட்டம் செயல்படுத்தபடுவதா நம்ம சேட்டன்மார்கள் தெரிவித்தார்கள்.

கேரளாவில ஒன்னாம் தேதி ஒயின்ஷாப் எல்லாம் லீவு. அதுனால 31ஆம் தேதியே கடைக்கு படையெடுத்த சேட்டன் மார்கள் அரசின் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 34 கோடிக்கு மது விற்பனை புரிய உதவி பண்ணியிருக்காங்க. ஒரே நாள்ல மட்டும் இந்த விற்பனை.


இதெல்லாம் டூப்பு


சரக்கு தான் டாப்பு

அப்படியிருந்தும் நிறைய இடங்கள்ல சரக்கு கிடைக்காம நீளமான வரிசையில் நின்னு வெற்றிகரமா வாங்கியது இன்று மலையாள செய்திகளில் பார்க்கமுடியுது.

என்ன கலைஞரே இதை இந்த தீபாவளிக்கு முறியடிக்க வேணாமா? ஏதாவது சலுகை கொடுத்து இரண்டாவது இடத்துல இருக்குற தமிழகத்தை முதல் இடத்துக்கு முன்னேத்துங்க. கமான் க்விக்

ஓக்கே மேட்டருக்கு வருவோம். நமக்கு என்னதான் தண்ணிமேட்டர், இலங்கை தமிழர் மேட்டர், ஆபிஸ்ல பிரச்சனை இன்னும் சிலபல இத்யாதிகள் பிரச்சனையா இருந்தாலும் அங்கே இருக்கும் அதாவது வருங்கால தமிழ் சினிமாவை அலங்கரிக்க போகும் நம் இதய ராணிகளுக்காவும், கொஞ்சநஞ்ச நல்ல சேட்டனகளுக்காவும் என் ஓணம் வாழ்த்தை தெரிவிச்சுக்கிறேன்.
ரைட்டு..... மீ த பாட்டு கண்டினியூவு....

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

24 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கோபிநாத் said...

\\உங்கள் "பொக்கிஷ" கருத்து\\

அந்த படத்தை நான் இன்னும் பார்க்கல....அதனால கருத்து சொல்ல முடியாது.

அந்த 2வது படம் எங்க இருந்து எடுத்த?

Vijay said...

பாடல் வரிகள் : அடிபொளி சேட்டா! ;)

நட்புடன் ஜமால் said...

ஒன்னாங்கிளாஸானும் சேட்டோ

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹி ஹி ஹி.....

துளசி கோபால் said...

புதுவிதப் பூக்களம் ப்ரமாதம் போங்க:-)))))

உங்களுக்கும் ஓணம் விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஒன்னே ஒன்னு சொல்லாமப் போகமுடியலை. டீச்சரா இருப்பதில் உள்ள சிரமம் இது(-:

ஓமணக்குட்டி = ஓமனக் குட்டி

இப்போதைக்கு அந்த 'ண'வைக் குப்பைத்தொட்டியில் போட்டுடலாமே.

துளசி கோபால் said...

நம்ம வீட்டுப்பக்கம் வந்துட்டுப்போங்க.

தமிழ்மணத்துக்கு என்ன கோபமோ.....

என்னை ஒ(ழி)ளிச்சு வச்சுருக்கு(-:

ஆயில்யன் said...

அட பாஸ் பிச்சு உதறிட்டீங்க போங்க !

ஒரு நாள் லீவு வேற பூக்கோலம் கண்ணுறவேண்டியதுதான்:)

/
இப்போதைக்கு அந்த 'ண'வைக் குப்பைத்தொட்டியில் போட்டுடலாமே.//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :))

ஆயில்யன் said...

//தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே//


பயபுள்ள என்னா குஷியால்ல பாடுது !!!! :)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நடத்துங்க.. கேரள நண்பர்களுக்கு ஓணம் வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

// ஆயில்யன் said...

//தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே//


பயபுள்ள என்னா குஷியால்ல பாடுது !!!! :)//

ரிப்பீட்டு!

சந்தனமுல்லை said...

//வருங்கால தமிழ் சினிமாவை அலங்கரிக்க போகும் நம் இதய ராணிகளுக்காவும், கொஞ்சநஞ்ச நல்ல சேட்டனகளுக்காவும் என் ஓணம் வாழ்த்தை தெரிவிச்சுக்கிறேன்.//

என்னா ஒரு வில்லத்தனம்!! :-)

ஆயில்ஸோட ஆர்வம் மலைக்க வைக்குது!! :-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் said...
\\உங்கள் "பொக்கிஷ" கருத்து\\

அந்த படத்தை நான் இன்னும் பார்க்கல....அதனால கருத்து சொல்ல முடியாது. ///

hahahaa superu

அந்த புதுக்கோலம் நல்லா இருக்கே.. உங்க ஆபிஸ் ல யா இந்த கோலம்.. :)

கலையரசன் said...

மலையாளம் பேசும் மக்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் தங்களது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறக்காமல் ஓணம் பண்டிகையை கொண்டாட வாழ்த்துக்கள்..

அப்டியே.. அசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு எல்லாருக்கும் ஓணம் வாழ்த்துகளை ஜொள்ளிகிறேன்! தமிழுக்கு அவங்க ஆட்டி..சீ.. ஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா?

கலையரசன் said...

கடைசியா அந்த 4 போட்டோஸை எந்த சைட்டுலேர்ந்து சுட்டன்னு சொன்னா தெரிஞ்சிகுவேன்.. ஹி.. ஹி.. ஒரு ஜென்ரல் நாலேஜ்ஜூகாகதான்!!

வித்யா said...

:)

கார்த்திக் said...

கேரள பாரம்பரிய உடையில் பெண்கள் அதனை அழகு..

இளைய பல்லவன் said...

சேட்டன்கள் படம் ஒண்ணக்கூடக் காணமே!

வல்லிய ஓணம் சம்ஷகள் (கரெக்டா?)

ம், சேட்டன் கம்பெனில சேந்து நீங்க சேட்டன் ஆயிடாதீங்க.

சென்ஷி said...

:)

எவனோ ஒருவன் said...

போட்டோ எல்லாம் நல்லாயிருக்கே... எங்க எடுத்தது ராசா?

seemangani said...

அடி பொழி ....ஓமனக் குட்டி
க்கு...வாழ்த்துகள்...

☀நான் ஆதவன்☀ said...

@கோபிநாத்
அந்த படத்தை பார்த்தாலும் இங்க வந்து கருத்து சொல்ற வேலை வேணாம் தல :)

2வது படம் நம்ம சேட்டன் கொடுத்தது. ஆனா எங்க கம்பெனியில கிட்டதட்ட இந்த நிலைமை தான் :)
------------------------------------
நன்றி விஜய்
-----------------------------------
நன்றி ஜமால்
-----------------------------------
நன்றி ராஜ்
-----------------------------------
நன்றி டீச்சர் :)

“ண”வை குப்பைத்தொட்டியில போட்டுட்டேன் :) அதென்ன கரெக்டா எல்லா வருச ஓணம் வாழ்த்திலேயும் தவறை கண்டுபிடிக்கிறீங்க? :)
-----------------------------------
நன்றி ஆயில்ஸ் :)
-----------------------------------
நன்றி செந்தில்

☀நான் ஆதவன்☀ said...

நன்றி சந்தனமுல்லை
------------------------------------
@முத்துலெட்சுமி
இல்லக்கா அந்த போட்டோ சேட்டன் கொடுத்தது :)
------------------------------------
@கலையரசன்
கலை அது கேரளத்துல ஒரு லேடீஸ் காலேஜ்ல பொண்ணுங்க ஓணத்தை கொண்டாடியப்போ எடுத்தது :) எனக்கு சேட்டன் அனுப்பிய மெயில்ல வந்தது.
------------------------------------
நன்றி கார்த்திக்
-----------------------------------
நன்றி வித்யா
-----------------------------------
@இளைய பல்லவன்
அது ’ஆஷிம்சகள்’ பல்லவன் :) நான் எப்பவும் ‘தம்பி’ தான். சேட்டனெல்லாம் ஆகமாட்டேன் :)
-----------------------------------
நன்றி சென்ஷி
-----------------------------------
நன்றி ஏனோஓனோ. எல்லாம் மெயில்ல வந்தது.
-----------------------------------
நன்றி சீமான்கனி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

தேவுடு
பதிவு சால பாகு உந்தி
அற்புதம்
அதுல அந்த மதுபுட்டியால் போட்ட கோலம் ஒன்னு போதும்.
கேர்ள பெருமை சொல்ல.
தமிழ் நாட்டு பொம்பள புருஷன் தண்ணி அடிச்சா திட்டுவா..
அங்கே சைட் டிஷ் சமைப்பாள்.
அது தான் வித்தியாசம்.
ஓனம் வாழ்த்துக்கள்
ஒட்டு போட்டாச்சு

Ravee (இரவீ ) said...

எண்ட கோமனே !!!

Related Posts with Thumbnails